• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஆனந்தம் அள்ளித்தரும் ஆஞ்சநேயன்

ஆனந்தம் அள்ளித்தரும் ஆஞ்சநேயன்

ஆனந்தம் அள்ளித்தரும் ஆஞ்சநேயன்


சோளிங்கர் பெரிய மலையில் யோக நரசிம்மரை தரிசித்த பின் அந்தக் கோயிலிலிருந்தே பார்த்தால், சற்று உயரம் குறையான இன்னொரு மலையும் அதன் உச்சியில் ஒரு கோபுரமும் தெரியும். இந்த மலையில் அனுமன் கோயில் கொண்டுள்ளார். ராமர் அவதார காலத்து அனுமனுக்கு அதற்கு முந்தையதான நரசிம்மருக்காக உருவான மலைக் கோயிலுக்கு நேர் எதிரே கோயில்! இது எப்படி சாத்தியம்? புராணம் விளக்குகிறது. தன் அவதார நோக்கம் நிறைவேறிய பின் வைகுண்டத்துக்கு எழுந்தருள ஆயத்தமானார் ராமர். அனுமன், தானும் அவருடன் வருவதாகக் கோரினார்.


அவனுக்கு ராமர் ஒரு விஷயத்தை நினைவூட்டினார். அதாவது, அசோக வனத்தில் ராமதூதனாக வந்து தனக்கு ராவணனிடமிருந்து மீளக்கூடிய நம்பிக்கையை அளித்த சந்தோஷத்தில் அனுமனுக்கு ‘சிரஞ்சீவி’ பட்டமளித்து மகிழ்ந்தாள் சீதை. இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் அனுமன் மட்டும் நித்தியவாசியாக நிலைத்திருப்பான். அந்த ஆசியால், தனக்கு என்றென்றும் ராமநாமம் சொல்லிக் கொண்டிருக்கும் பாக்கியமும் யார் ராமநாமத்தை ஜபித்தாலும் அதைக் கேட்டுக் கொண்டேயிருக்கும் பாக்கியமும் கிடைத்திருப்பதாக எண்ணி சந்தோஷப்பட்டான் அனுமன்.


‘‘அவ்வாறு நீ சிரஞ்சீவியாக வாழ்ந்து ஒவ்வொரு யுகத்திலும் உலக மக்களுடைய துயர்களைத் துடைக்க வேண்டும் என்பது உனக்கேற்பட்ட விதி. அது மட்டுமல்ல; உனக்கு நான் இடும் இன்னொரு பணியும் இருக்கிறது. அதாவது, கடிகாசலம் எனப்படும் அரியவகை மூலிகைகள் நிறைந்த மலைமீது ஏழு ரிஷிகள் தவமிருக்கிறார்கள். அவர்களுக்கு அசுரர்களால் பெருந்தொல்லை உண்டாகிறது. அந்த இடரைக் களைந்து, அவர்கள் நோக்கம் நிறைவேற நீ உதவ வேண்டும்.


இந்த ஒரு பணியைத் தவிர அடுத்தடுத்து உனக்குப் பல பணிகள், உன்னால் நிறைவேற்றப்பட காத்திருக்கும். ஆகவே நீ என்னுடன் வருவதை விட, என் மக்களுடைய சேவைக்காக நீ பூவுலகிலேயே நீடித்திருப்பதுதான் என் விருப்பம்,’’ என்று ராமன் சொன்னவுடன் அப்படியே அவர் பாதங்களைத் தொழுது அவர் இட்ட ஆணையை சிரமேற்கொண்டான், அனுமன். அதன்படி, கடிகாசலம் வந்தான். அங்கே மனங்கசிந்து நாராயணனை நோக்கி தவம் இயற்றும் சப்த முனிகளைக் கண்டான். பகவான் மஹாவிஷ்ணுவை நரசிம்ம கோலத்திலேயே தரிசிக்க வேண்டும் என்ற அவர்களுடைய நோக்கத்தைப் புரிந்து கொண்டான்.


நரசிம்மர் அவதாரம் எப்படியிருக்கும்? அந்தத் திருக்கோலத்தைத் தன்னாலும் காண இயலுமா என்று சிந்திக்கத் தொடங்கினான் அனுமன். அதே சமயம், காலன், கேயன் எனும் இரு அரக்கர்கள் அங்கே தோன்றி ரிஷிகளின் தவத்தைக் கலைக்க முயற்சித்தார்கள். அவர்களை சீண்டி, வேதனைப்பட வைத்து சந்தோஷப்பட்டார்கள். உடனே அனுமன் அவர்களைத் தாக்க முற்பட்டான். ஆனால், சற்று நேரத்திலேயே அவன் சோர்ந்து விட்டான். தன் பலமெல்லாம் எங்கே போயிற்று என்று அவனுக்கே திகைப்பான சந்தேகம். உடனே ராமனை தியானித்தான். ராமன், நாராயணனாக அவன்முன் தோன்றினார்.


தன்னுடைய சங்கு, சக்கர ஆயுதங்களை அவனுக்குக் கொடுத்தார். உடனே அவற்றால், வெகு எளிதாக அரக்கர்களின் தலைகளைக் கொய்து ரிஷிகளுக்கு நிம்மதி அளித்தார், அனுமன். பூரண சுதந்திரத்துடன் தொடர்ந்து தவத்தில் ஈடுபட்ட முனிவர்களுக்கு, பகவான் நரசிம்மராகக் காட்சியளித்தார். அதை அனுமனும் காண நேர்ந்தது. ராமனுடைய சாந்தமான முகத்தையே கண்டு களிப்பெய்திருந்த அனுமன், நரசிம்மரின் கோபாவேச தோற்றம் கண்டு பிரமித்தான். ராவணனைவிடக் கொடியவனாக இரண்யன் இருந்திருப்பான் போலிருக்கிறது, அதனால்தான் இப்படி ஒரு கோலத்தை அண்ணல் மேற்கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டான்.


ரிஷிகளுக்கு ஆசியளித்த நரசிம்மர், அனுமனை நோக்கி, ‘‘அனுமனே, நானே, நரசிம்மன்; நானே, ராமன். என்னைக் குறித்து தவமிருந்த மாமுனிவர்களைக் காத்ததுபோல, இந்த உலகவாழ் மக்களையும் நீ காக்க வேண்டும். அதற்கு, எனக்கு முன்னால் யோக ஆஞ்சநேயராக அமர்ந்து அவர்களுடைய தீராப் பிணிகளையும் தீர்த்து அவர்கள் வாழ்வில் ஆனந்தமளிக்க வேண்டும். என்னை தரிசிக்க வரும் பக்தர்கள் உன்னையும் தரிசிப்பார்கள். என்னோடு அவர்கள் வேதனை தீர ஒத்துழைப்பாயாக,’’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.


நரசிம்மர் திருப்பாதங்களில் தன் சிரம்படிய வணங்கிய அனுமன், ராமனாகிய அந்த நரசிம்மர் ஆணைப்படி அவருக்கு எதிரேயே ஒரு மலை மீது கோயில் கொண்டான். அதுதான் சோளிங்கர் சின்னமலை. இந்த மலை 350 படிகளைக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறது. இங்கு உச்சியில் 50 படிகள் செங்குத்தாக ஏறுகின்றன. இந்த மலையில் சஞ்சீவி செடிகள் இருப்பதாகவும் அதன் இலைகளை உட்கொண்டால் எல்லாவகையான உடல் நோய்களும் தீரும் என்றும் சொல்கிறார்கள்.


ஆனால், அதை சரியாக அடையாளம் காட்ட யாரும் இல்லாததால் அந்த சோதனையில் இறங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கையும் விடுக்கிறார்கள். அதைவிட, மூச்சிறைக்க மலையேறும்போது, சுற்றுப் பகுதியிலிருந்து வரக்கூடிய அந்த மூலிகையின் வாசத்தை உள்ளிழுத்துக் கொண்டாலே போதும், அதுவே உடல் நோய்களை விரட்டிவிடும் என்றும் யோசனை சொல்கிறார்கள். இந்த மலையில் ‘டோலி’ சேவை உண்டு.


உச்சியில் அனுமன், யோக ஆஞ்சநேயராக வீற்றிருக்கிறார். நான்கு கரங்களுடன் திவ்ய தரிசனம். சங்கு, சக்கரம் ஏந்தி, அரக்கர்களை மட்டுமல்ல, அரக்க குணங்களையும் அறவே அழித்தொழிக்கும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார். தம் பக்தர்களின் எந்தச் சிறு குறையையும் விட்டுவைக்காமல் முற்றிலுமாக தீர்த்து வைக்கும் கருணை அந்த முகத்தில் தெரிகிறது. அந்த முக தரிசனமே மனதில் தன்னம்பிக்கையையும் உறுதியையும் வளர்த்து விடுகின்றன.


மஹாவிஷ்ணுவைப் போலவே தன்னையும் சங்கு, சக்கரம் தரிக்க வைத்த பெருமைக்கு உள்ளாக்கிய ஸ்ரீராமபிரானுக்கு நன்றி சொல்லும் கனிவும் அதேசமயம், அந்தப் பெருமையை மிகுந்த தன்னடக்கத்துடன் ஏற்கும் பாவமும் தெரிகின்றன. ஒரு கரம் சங்கு, இன்னொரு கரம் சக்கரத்தைத் தாங்கி நிற்க, கீழ் வலது கரம் ஜபமாலையை ஏந்தியிருக்கிறது. கீழ் இடக்கை ஜபசங்க்யை எனப்படும் ஜப எண்ணிக்கையை அளவிடும் பாணியில் அமைந்துள்ளது.


இங்கே ராமர் தனிச் சந்நதியில் அழகுற கொலுவிருக்கிறார். சீதை, லட்சுமணனுடன் அவர், அனுமனுக்காகவே இங்கே அர்ச்சாவதாரமாகக் காட்சியளிக்கிறார். அதோடு, ரங்கநாதருக்கும் தனிச் சந்நதி உள்ளது. இந்த அமைப்பு, குல தெய்வ அல்லது குல குரு வழிபாட்டுக்கு ஓர் உதாரணமாகத் திகழ்கிறது என்றே சொல்லலாம். ஆமாம், அனுமனின் தெய்வம் ராமன்; ராமனின் குல தெய்வம் ரங்கநாதர்! குலதெய்வ வழிபாட்டு மரபு இங்கே அனுஷ்டிக்கப்படுவதைக் காணும்போது மெய் சிலிர்க்கிறது.


யோக ஆஞ்சநேயர் உற்சவர் விக்ரகம் நின்ற கோலத்தில் எழில் தரிசனம் தருகிறது. இவருக்கும் சதுர்புஜம் - சங்கு, சக்கரம், ஜபமாலை, ஜபசங்க்யை. இந்த யோக #ஆஞ்சநேயரின்பார்வை #நேராக_எதிரே
#பெரிய மலையில் உள்ள #யோகநரசிம்மரின்பாதத்தை #நோக்கியபடிஇருப்பது #அற்புதம். #நிரந்தரமாய், #நரசிம்மரின் #பாத_தரிசனம்!


#ஆஞ்சநேயரை வழிபட்டுப் #படியிறங்கும்போது #நம்_மன #பாரங்களும் #துயர்களும் ஏன், #நோய்களும்கூட #நம்மைவிட்டு #இறங்கியிருப்பதை
#உணர_முடிகிறது. பொதுவாகவே,
#சோளிங்கர் #அமானுஷ்ய #பாதிப்புகளைத்தீர்க்கும் #தலமாகத்திகழ்கிறது. இந்த ஊருக்கு வந்து, தினமும் தக்கான் குளத்தில் நீராடி, பெரிய மலையேறி நரசிம்மப் பெருமாளையும் சிறிய மலையேறி ஆஞ்சநேயரையும் தரிசித்தால் எல்லா #பிரச்னைகளும்
#ஆவியாகிமறையும்என்பது #கண்கூடு. தினமும் அந்த அற்புதம் நிகழ்வதைக் காண முடிகிறது.


ஏகசிலா பர்வதம் என்று இந்த இரு மலைகளையும் தனித்தனியே குறிப்பிடுகிறார்கள். அதாவது, பாறைகளை அடுக்கினாற்போலவோ, பிளவுபட்டோ, மலைப்பாறைகளை சேர்த்தார்போலவோ இல்லாமல், ஒரே கல்லில் அமைந்த சிலைபோல இவை அமைந்திருக்கின்றன. அகோபில மலைதான் பரந்தாமன் நரசிம்மராக அவதாரம் எடுத்த தலம். ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள அந்த திவ்ய தேசத்துக்கு அடுத்தபடியாக, ரிஷிகளின் விருப்பத்திற்கிணங்கி, மலைமீது நரசிம்மர் கோயில் கொண்டிருப்பது தமிழ்நாட்டிலுள்ள இந்த சோளிங்கரில்தான்.


1781ம் ஆண்டில் ஆங்கிலேயருக்கும் ஹைதர் அலிக்கும் இரண்டாவது கர்நாடகப் போர் நடைபெற்றது. அப்போது தரையளவில் இருந்த பல கோயில்கள் பாதிக்கப்பட்டன; ஆனால் இந்த மலைக் கோயில்கள் மட்டும் எந்தத் தாக்குதலுக்கும் உட்படவில்லை என்பதும் மலைமீதான கோயில் பொக்கிஷங்களைக் சூறையாட எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கவை.


பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், மணவாள மாமுனிகள், ராமானுஜர் ஆகியோர் இந்தத் திருத்தலத்தைப் பாடிக் கொண்டாடியிருக்கிறார்கள்.
 

Latest ads

Back
Top