• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ந்ருஸிம்ஹாவதாரம்

ந்ருஸிம்ஹாவதாரம்

ந்ருஸிம்ஹாவதாரம். ரொம்ப ஒசத்தியான அவதாரம். பக்தனுக்காக, அவனோட த்ருடமான பக்திக்காக அந்தப் பரமன் என்ன வேணும்னாலும் பண்ணுவான் அப்டிங்கறதுக்கு ஒசந்த ஒரு உதாரணமா இருக்கற குறைவில்லாத அவதாரம் தான் ந்ருஸிம்ஹாவதாரம். ரொம்பவே சின்னதான அவதாரமா இருந்தாலும், எவ்ளோ மனசை உருக்கற விஷயங்கள் இதுலே இருக்கு. ஒரு பக்தன்னா எப்படி இருக்கணும், பக்தின்னா எப்படி இருக்கணும், பரிபூர்ண சரணாகதின்னா என்னன்னு நிஷ்கர்க்ஷைப் (ascertaining emphatically) பண்ற அவதாரம்.


அந்த பாலகனண்ட 'எங்கே அந்த மாயாவி?' (ஹரி அப்படிங்கற பேரை கூட தன்னோட வாயால சொல்லிடக் கூடாதுன்ற பிடிவாதத்தோட) அப்படின்னு கேக்கறான் ரஜோ குணம் கொண்ட ஹிரண்யன். தகப்பனாவே இருந்தாலும் தன்னோட பக்தில இருந்த த்ருடம் கொஞ்சமும் குறையாமல், எது சாஸ்வதம்னு தெளிவா இருந்துது அந்தக் கொழந்தை. 'என்னோட ஹரி தூணிலும் துரும்பிலும் இருக்கான்' அப்படின்னு அந்த கொழந்தை கணீர்னு சொன்னக் க்ஷணம் 'இதோ இந்தத் தூணுல இருக்கானா நீ சொல்றவன்' அப்படின்னு எல்லையில்லா ஷாத்ரத்தோட (வெறுப்போடு) கேக்கறான் ஹிரண்யகசிபு. துளி கூட சிந்தனை பண்ணாமல் "இருக்கானே. அதோ என் கண்ணுக்குத் தெரியரானே" அப்படிங்கறது கொழந்தை. எனக்கு யாரும் தெரியலையே அப்டிங்கறான் தகப்பன். இந்தத் தகப்பனுக்கும் தனயனுக்கும் இப்படி சம்பாஷணை (conversation) நடந்துண்டிருக்கும் போதே ந்ருஸிம்ஹன் இந்த அண்டம் முழுசும் நிறைஞ்சு தயாராயிட்டான் - காட்டப்படற இடத்துலேர்ந்து வெளியே பாய்ஞ்சு வர்றதுக்கு.


பாய்ஞ்சு வர்றதுக்கு தயாரா இருந்தாலும் ந்ருஸிம்ஹன் அதுக்காக எவ்ளோ பிரயத்தனப்பட்டு வேண்டியிருந்துதாம் தெரியுமா? ஹிரண்யகசிபு எங்கேன்னு சொல்லுவானோ? தன்னோட பக்தனோட நம்பிக்கை போய்ச்சுடக் கூடாதேன்னு கொஞ்ச நேரத்துக்கு பதட்டம்.


அடுத்தது இந்தத் தூணுல இருக்கானா நீ சொல்றவன்னு ஹிரண்யகசிபு அந்தக் கொழந்தையிடத்தே கேட்டப்பறம், அந்தத் தூணுக்குள்லேர்ந்து மட்டும் தான் வெளியே வாந்தாகணும்னு கட்டாயம். இருக்கானே. என் கண்ணுக்கு தெரியரானே என் ஹரி என்ற தன்னோட பக்தனோட வாக்கு பொய்ச்சுடக் கூடாதேன்னு பதட்டம் இன்னொரு பக்கம்.


அடுத்தது ஹிரண்யனே அந்தத் தூணைத் தட்ட வேண்டுமேயென்று க்லேசப்பட்டானாம் ந்ருஸிம்ஹன். அவனுக்கா கிலேசம் (கவலை)?. அவனே அந்தத் தூணைத் தட்டலேன்னா, வேறாராவது தட்டினா, அவா மாயம் பண்ணித் தன் கைக்குள்ளே வெச்சுண்டிருந்த உருவத்தை அந்தத் தூணுக்குள்ளே செலுத்திட்டான்னு சந்தேகம் வந்துடுமேங்கற குழப்பம் இந்தக் க்லேசத்துக்குக் காரணம்.


அடுத்ததாக, ஹிரண்யகசிபு ஒரு இடத்தில் தட்டி, வேறொரு இடத்துலேர்ந்து வந்தா 'எங்குமுளன்' அப்படிங்கற அந்தக் கொழந்தையோட ப்ரதிஜ்ஞை (உறுதி) தவறி, "இங்கேயில்லையே உன்னோட ஹரி" அப்படின்னு சொல்றதுக்கு இடமாயிடுமேன்னு கட்டாயமாம்.


அடுத்ததாக, ஹிரண்யகசிபு தட்டற எடத்துலேர்ந்து உடனே வந்தாக வேண்டிய கட்டாயம். தட்டின உடனே வரலேன்னா "நான் தட்டினப்போ நீ சொன்னவன் உள்ளே இல்லே. அப்பறம் தான் வேறெங்கேர்ந்தோ மெதுவா வந்தான்" அப்படின்னு கேலிக்கூத்தா ஆயிடக் கூடாதேன்ற கவலையாம். தன்னோட பக்தன் பதில் சொல்ல நேர்ரா மாதிரி ஆயிடக்கூடாதேன்ற வாத்சல்யமாம்.


அடுத்ததாக, வெளில வர்றது ஒரு பங்குன்னா, வெளில வந்தப்பறம் என்ன பண்ணனும்னு யோசிச்சு நடந்துக்கறதுக்கு அவகாசமில்லாத கட்டாயம். அந்தக் கொழந்தையோ ஸ்ரீமன் நாராயணன் தான் பரதேவதை. சக்திமான். எல்லாரையும் விட ஒசத்தி அப்படின்னு சொல்றது. அந்த சொல்லுக்கும் நம்பிக்கைக்கும் பங்கம் வராம, அதுக்கு எதிரா பேசினவா எல்லாரையும் சம்ஹாரம் பண்ண வேண்டிய கட்டாயம். அதையும் பண்ணினான் தன்னோட பக்தனோட வாக்கினை மெய்ப்பிக்க.


அவன் பரமன். சக்திமான். எல்லாத்தயும் படைச்சு காத்தருள்ரவன். சங்கல்ப மாத்திரம் (just by wishing) எதையும் நடத்தக் கூடியவன். எதுக்கு இவ்ளோ பிரயாசைப்பட்டான். தான் படைச்ச பக்தன் தன் மேல காட்டின பக்திக்காக. அந்த பக்தில, நம்பிக்கைல அவன் உருகினான். மனசு நெகிழ்ந்தான். அதுக்கு மேல ஸ்ரீவைகுண்டத்துல பள்ளி கொண்டிருக்க முடியாம ஓடி வந்தான். தன்னோட உண்மையான சொரூபத்தை விட்டுட்டு வந்தான். தன்னோட பிராணனான மகிஷிய விட்டுட்டு வந்தான். அவனோட பக்தனுக்கு பிடிச்ச ரூபத்துல வந்தான். கட்டுக்கடங்காத சக்தியை கொண்ட அவன் பலப்பல கட்டாயங்களுக்குக் கட்டுண்டான். எல்லாம் பக்திக்காக. அந்த பக்தில அவன் பார்த்த த்ருடத்துக்காக. த்ருடமான பக்திக்கு முன்னால வேறொண்ணுமே அவனுக்கு ஒசத்தியானது கிடையாதுன்னு அவன் காமிச்ச அவதாரம் ந்ருஸிம்ஹாவதாரம்.


ந்ருஸிம்ஹா... ந்ருஸிம்ஹா... “பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி, மெய்யே பெற்றொழிந்தேன்”... இதுலேர்ந்து என்னை மீள பண்ணு. உன் தாள் கண்டு கொண்டு என் சிரம் மேல் சூடிக் கொண்டேன். சரணாகதோஸ்மி... காப்பாத்து.


Courtesy - 'Nrusimham' group in Facebook
 

Latest ads

Back
Top