• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

உய்த்துணர் உணர்வை

A

agopal

Guest
உய்த்துணர் உணர்வை

பகிர்.

எவன் சிவன்?
நீ வைத்த பேர் அல்லவோ சிவன்?
பெருஞ்சோதிக்கு பெயர் ஒன்று தேவையா?
சோதியே பெயர் அல்லவா?
உணர் உணற்றுபவனை,
உணர் உண்மையான உமை எனும் பொருளை,
உணர் உணர்வை,
உணர் உணருபவனை,
உணர் அனைத்தும் உணர்வு என்பதை,
உண்மையும் உணர்வு, பொய்யும் உணர்வு,
உணர்வே ஒளியும், காரிருளும்,
சப்தமும்,
உணர்வே நிசப்தமும், பரவெளியும், பரவெளின் தோற்றமும்.
பாற்கடலில் உறையும் பரன்தாமனும், கைலாயத்தின் உச்சத்தில் உள்ள சிவமும்,
மறைகளேந்திய நான்முகனும், நீலமேக தேவகி மைந்தனும் உணர்வே!
வண்ணங்களும்,
அதற்க்கேற்ப இயங்கும் மனிதர்களும், கோள்களும், முப்பது முக்கோடி தேவர்களும், ஆதித்தியனும்,
நிலவும்,அனைத்து விண்மீன்களும், இயற்கையும், செயற்கையும், இப்பூமியும்,
அனைத்து உலகங்களும்,
நீயும், நானும், உணர்வே என்று உணர்.

உணர்வின் இச்சைக்கேற்ப இயங்குகின்றன அனைத்தும் என்று உணர்.
இச்சை குன்றினால் ஒடுங்கும் அனைத்தும் குறைக்கேறப்ப!
இச்சை குன்ற, உரக்க நகைப்பான் மகாகாலபைரவன்,
ஒடுங்கும் நீரும், நெருப்பும்
குறைக்கேற்ப்ப, எரிமலையும் கொந்தளிக்கும், நிலமும் நடுங்கும், ஓடும் சிவ பயத்தினால் காற்று,
ஆகாயம் நிறம் மாறும்,
சிவ மயம் சிவ பயமாகும்.
ஓடுவாய் வாழ்க்கையின் ஓரத்திர்க்கு.

அத்தனை அரிதா மெய் பொருள் காண்பது?
மறைகளுக்கு ஏற்ப அனுதினமும் மெய் உறைத்தாயா?
தர்மமும் தானமும் தான் செய்தாயா?
அகவலின் படி மலமது மூன்றின் மயக்கம் தான் அறுத்தாயா?
பொருள் உணராமல் ஓதினாய் மறைகளை,
ஈடுபாடில்லாமல் செய்தாய் உன் சடங்குகளை,
மறந்தாய் உன் பிறவிக்கடனை,
பாடினாய் அனைத்துலகும் இன்பமுற என்று, மறந்தாய் உன் உலகை.
உன்னுள் இருக்கும் பரம்பொருளை மறைத்தாய் பற்பல மலத்தை கொண்டு,
கபட வேடதாரியானாய்,
உண்மையை மறைத்தாய்,
நடத்தினாய் நாடகங்கள் பல,
நடித்தாய் அதில் பற்பட வேடங்களில்,
போராடினாய் சிலவற்றில்,
வெற்றி பெற்றாய் சிலவற்றில்,
நானே நடத்தி, நானே நடித்தேன் என்றாய்
நானே வெற்றி பெற்றேன் என்றாய்!
மமதையில் மெய் மறந்தாய்.

ஓடுவது நீயன்று, ஓட்டுனர்கள் பல
ஆடுவது நீ அன்று, ஆடுவர் பல,
பாடுவது நீயன்று, பாடுவர் பல,
உய்த்துணர் உயிறே,
உய்த்துணர்,
உய்த்துணர் அது உணர்வே!

உணர்வை காதலித்தது முதல் உயிர்.
காலம் கழிந்தது அவ்வுயிர்க்கு,
பின் தொடர்ந்தது உணர்வை அது,
உணர்வு புருசனாய் ஓர் உடம்பெடுக்க,
அவ்வுயிர் எடுத்த உருவங்களோ பற்பல - உணர்வை நெருங்க,
யுகங்கள் பல ஓடின, காலங்கள் பல கூடின, காதல் கழியவில்லை
ஆட்டங்கள் முடியவில்லை,
இதோ ஓர் ஆட்டம்,
நடக்கின்றது இன்று,
அனைவருக்கும் பங்குண்டு,
ஆடுங்கள் தெளிவாய்!
நாடகங்கள் நடக்கட்டும்,
வாழ்க்கை தொடரட்டும்.

அறிவாய் உன் பங்கை,
உன்னை அறிந்தால்,
உணர்வை அறிந்தால்.
அன்போ சிவமாகும்,
சிவமோ உணர்வாகும்.

அறிந்தாயா நில்லா உலகை,
அறிந்தாயா காதலை நீ,
அறிந்தாயா அன்பை நீ
உணர்ந்தாயா உணர்வை?
உணர் உணருபவனை.





















.
 
பகிர் ??? :decision: பகீர் ???


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.


(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:423)


வாய் கேட்கும் பொருட்களில் மெய்ப்பொருள் காண்பதரிது எனில்
வையகம் படைத்த மெய்ப்பொருளைக் காண்பது மட்டும் எளிதாமோ ???

 
கண் முன்னே காணும் மனிதர்களையே நேசிக்க இயலாதவர்கள்

கண்ணால் காண இயலாத இறைவனை நேசிக்கவும் இயலுமோ???


 
அக கண் திறப்பின், புற்க்கண்ணும் அதை நேசிக்குமே!
புறத்தின் பிற கண்களை புறக்கணிக்குமே!

உணர்வை உணர்நத உயிருக்கு, நேசம் அனைத்தும் ஒன்றாகுமே!

அக்கண்ணை திறக்க முற்பட்ட உயிர்ருக்கு,
உணர்வே உதவும், தேடல் எளிதாகும்.

உணர்வக்கும் உண்டு நேசம் உயிர்களிடம் என்று அறிவாயாக!
 
உயிர் : உணர்ச்சிகளை உணரவல்ல உணர்வே உயிர்!

உயிர் பிரிந்தால் உணர்ச்சியும் இராது! உணர்வும் இராது!!


புறக் கண்கள் மூடினால் மட்டுமே அகக் கண்கள் திறக்கும்.


அக் கண்கள் திறந்தவருக்கு உடலில் உயிர் இருந்தாலும்


எந்த உணர்வும் இராது! எந்த உணர்ச்சியும் இராது!

Once SadAsiva Brahmendrar, a naked sannyasi was seen walking right through a Muslim harem of a Nawab.

As a brahma-jnani who sees nothing but brahman everywhere, he would not distinguish between the different human figures which cross his path nor would he be distracted by the sights or noises that his environment may present to him.

It was in this state of trance that he was walking along. He, the naked sannyasi, walked straight into the harem, entering it at one end and walking out at the other all the while walking through a maze of inmates of the Nawab’s harem.

The news reached the nawab, he had his men chase him, they cut off both his hands as he was walking along, the hands fell off and still he was walking along silently as if nothing had happened.

The Nawab got scared, picked up the hands that had been severed, ran to the Sage and offered them in total remorse. The sage stopped his walking, the severed hands were restored to their place, the hands became normal and the sage walked away! There was no conversation.

https://www.columbuslost.com/temples/Nerur-Sadasiva-Brahmendra-Swami-Biography-Miracles-and-Samadhi/info
 
பொறுப்பு 1.

'பகிர்' என்றபடிப் பகிரும் போது அதை எழுதியவர் யார் என்பதையும் தெரிவிப்பது.


பொறுப்பு 2.


சுயமாகப் 'போஸ்ட்' தயார் செய்யும் போது தவறுகள் வராமல் பார்த்துக் கொள்வது


பொறுப்பு 3.


முதலிலேயே குழம்பி உள்ளவர்களை மேலும் குழப்பாமல் இருப்பது


பொறுப்பு 4.


பலரிடம் ஒரே சமயத்தில் பேசும் போதும் / பலருக்கு ஒரே சமயத்தில் எழுதும் போதும், அவர்களை உரிய மரியாதையுடன் அணுகுவது,
 
வீடியோ கேம் thumb, texting thumb என்பது போல இங்கு யாருக்கோ
thumbs up thumb என்ற புது வியாதி வந்துள்ளது / வர உள்ளது! :tsk:

thumbs up கொடுங்கள் ஆனால் உண்மையில் அது சிறந்த அல்லது

குறைந்த பட்சம் தவறுகள் இல்லாத போஸ்ட் ஆக இருந்தால்! :thumb:

 
தவறனைத்தயும் மன்னிக்க வேண்டுகிறோம் யாம்!
நெற்றிக்கண்ணை திறன்தவனே தவறு செய்தான் அன்று!
சுட்டரித்த நக்கீர்ரை உயிர்பித்தான்!
நான் எம்மாத்திரம்!

ஆனால்,
உயிரோ ஒன்று,
உணர்வோ அனைத்து உயிர்களும், உயிரற்ற அனைத்தும் ஆகும்.
உணர்ச்சி உயிரிழக்கும், உணர்வோ இருப்பாகும்.
உணர்வில்லையேல் ஒன்றுமில்லை என்றுறைப்பர்,
அனால் ஒன்றுமில்லாமல் இருக்கும் சூன்யமும் ஓர் இருப்பாகும். இருப்போ உணர்வாகும்.

நின்றார் பரம்மேந்திர ஜீவன்முக்தர் என்றீர்கள்,
கேட்டார் கூக்குறலை, உணர்ச்சி இருப்பதால் தான் சாத்தியம் இவ்விரண்டும்.
உணர்ச்சி அறவே இல்லை என்றால் அசைவும் இல்லை என்றாகும். அசைவற்ற முனிவர் பலர் புற்றிலிருந்து வெளிவந்தனர் அக்காலத்தில்.
தேடினவரை பின்பற்றாதீர்கள், அவர்கள் தேடியதை என்னவென்று அறிந்து அதை பின்பற்றுங்கள்.

தேடினார்கள் தேடியவர்கள்,
தேடியவர்களை தேடினார்கள் பலர்,
தேடுங்கள் தேடியவர் தேடியதை
பல தேடுதல்களில் தேடப்படுவது ஒன்றே!
 
பகிர்ந்த ஒர் நவீன தருமி...
 
Last edited by a moderator:

Latest ads

Back
Top