Tamil Brahmins
Page 3 of 3 FirstFirst 123
Results 21 to 22 of 22
 1. #21
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,171
  Downloads
  35
  Uploads
  38

  0 Not allowed!
  பகுதி-21


  யாரடா அங்கே! உடனே செல்லுங்கள், அந்த வானரனைக் கொல்லுங்கள், என்று கட்டளை பிறந்தது ராவணனுடைய வாயில் இருந்து!பலத்தில் ராவணனுக்கு இணையான எண்பதாயிரம் அசுர வீரர்கள் பெரிய ஆயுதங்களுடன் புறப்பட்டார்கள். மாருதி அமர்ந்த இடத்தைக் கண்டுபிடித்து அவரைச் சுற்றி வளைத்தார்கள். அவரை அடித்தார்கள். கத்திகளை வீசினார்கள். இதுவரை ஆஞ்சநேயர் என்றசொல் இந்த தொடரில் பயன்படுத்தப்பட்டது. இப்போது மாருதி என்று மாறக் காரணம் ஏதும் உண்டா? என நீங்கள் யோசிக்கலாம்.மாருதி என்ற சொல்,மாருதம் என்ற சொல்லில் இருந்து உருவானது. மாருதம் என்றால் காற்று. காற்றின் மைந்தனல்லவா ஆஞ்சநேயர். அதனால் அவரை மாருதி என்பர். காற்றடைக்கப்பட்ட பந்தை நீருக்குள் அமிழ்த்தினால் என்னாகும்? அதுமேலே மேலே தான் வரும். அதுபோல்,இங்கே மாருதிக்கு அசுரர்கள் கோபத்தை ஊட்ட ஊட்ட சிறு குரங்காக இருந்த அவர் உயர்ந்தார்...உயர்ந்தார்...உயர்ந்து கொண்டே இருந்தார். விஸ்வரூபம் தரித்தார்.எவ்வளவோ பூஜை, புனஸ்காரங்களைச் செய்யும் நாம் மாருதியின் தரிசனம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். பார்த்தீர்களா!குடிகெடுக்கும் ராட்சஷர்கள் கண்களுக்கு அவர் தெரிகிறார். அதிலும் விஸ்வரூப தரிசனம் காட்டுகிறார். ஏன் தெரியுமா? அவர்களுடைய தலைவன் கெட்டவனே ஆயினும் சிவபக்தன். அந்த சிவனே ராமனுக்கு சேவைசெய்ய வானரமாய்அவதரித்துள்ளார். ஒருவன் செய்த பிரார்த்தனையால், அவனது நாட்டிலுள்ள எல்லோருக்கும் இறை தரிசனம் கிடைக்கிறது. ஒருவேளை கலியுகத்தில் இருப்பதால், நம் பிரார்த்தனைக்கு அவர் செவி கொடுக்க மறுக்கிறாரோ என்னவோ?அவர்கள் வீசிய ஆயுதங்களை நொறுக்கித் தள்ளினார். இலங்கையே நடுங்கும்படி சிங்கம் போல் கர்ஜித்தார். அந்த ஓசை கேட்டு பறவைகள்எல்லாம் மயங்கிதரையில் விழுந்து விட்டன.அடேய் ராட்சஷப் பதர்களே! ராமன், அவர் தம்பி லட்சுமணன், என் மகாராஜா சுக்ரீவன் ஆகியோருக்கு நிகரான பலசாலிகள் இவ்வுலகில் இல்லை. நான் ராமதூதன். அவரது பக்தன். வாயுவின் புத்திரன். எதிரிகளுக்கு எமன். நீங்கள் என் காலுக்கு தூசு. உங்கள் அரசன் ராவணனைப் போல் ஆயிரம் அசுரர்கள்வந்தாலும் அவர்களைப் பந்தாடி விடுவேன். சீதையைக் கண்டேன். அவளிடம் பேச வேண்டியதைப் பேசி விட்டேன். இனி, உங்களையெல்லாம் கொன்று இலங்கையை சர்வநாசமாக்கி விட்டு, சுகமாக என் இருப்பிடம் திரும்புவேன், என சவால் விட்டார். நம் ஊரில் ஜெயிப்பது முக்கியமல்ல. பக்கத்து ஊரில் போய் ஜெயிக்க வேண்டும். அப்படி செய்யாமல், நம்மை நம்பர் ஒன்று என சொல்லிக் கொள்வது எப்படி முட்டாள்தனமோ, அது போல் இல்லாமல், மாருதி பக்கத்து நாட்டில் போய் சவால் விட்டார்.ராட்சஷர்கள் அந்தக் குரல் கேட்டே நடுங்கி விட்டார்கள். மாருதியின் பார்வையில் ஒரு இரும்பு உலக்கை பட்டது. அதை உருவி எடுத்தார். களத்தின் நடுவில் அவர் நிற்க சுற்றிலும் ராட்சஷர்கள் நின்றார்கள். அவர்களை எல்லாம் அந்த உலக்கையை சுழற்றி நாசம் செய்தார். சிலருக்கு பயம் வந்து விட்டது. அவர்கள் ராவணனிடம் ஓடினார்கள்.நாங்கள் மட்டும் தான் மிச்சம். மற்றவர்களை அந்தக் குரங்கு நாசம் செய்து விட்டது. விண்முட்ட உயர்ந்து நின்ற குரங்கிடம் இருந்து தப்பிவந்ததே பெரிய காரியம் என்றார்கள்.ராவணன், தன் முதலமைச்சர் பிரஹஸ்தனுடைய புத்திரன் ஜம்புமாலியை அழைத்து,நீ போய் அந்த குரங்கைக் கொன்று வா, என்றான். இதற்குள் மாருதி, அசுரர்களைக் கொன்றால் போதுமா? அசோகவனம் அழிந்தால் போதுமா? அதோ! அங்கே தெரியும் ராவணனின் அரண்மனை மாடத்தை இடித்து தள்ள வேண்டும், என முடிவு செய்தார். அந்த உப்பரிகை நவரத்தினங்களால் ஜொலித்தது.மாருதி அதன் எதிரே ஒளி பொங்க நின்றார். அதைக் காவல் காத்த அசுரர்களை நோக்கி, அடேய்! இந்த அரண்மனையை அழிக்க வந்திருக்கிறேன். முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள், என சவால்விட்டார். அசுர காவலர்கள் மாருதியை நோக்கி ஆவேசத்துடன் ஓடி வந்தார்கள்.அந்த பலவான்களில் பலர் ஓகம் எனப்படும் பலமுடையவர்கள். நூறு யானை பலம், ஆயிரம் யானை பலம் என்பது போல ஓகம் என்பது இதையெல்லாம் விட அதிக எண்ணிக்கையுள்ள யானைகளின் பலமுடையவர்கள். அவர்களை எதிர்கொள்ள மாருதி தயாரான போது, ஜம்புமாலி கோவேறு கழுதைகள் பூட்டிய தனது ரதத்தில் வந்து சேர்ந்தான். அவனது கோரைப் பற்களைப் பார்த்தாலே மயக்கம் வந்து விடும். அவ்வளவு பெரியது. அந்த பற்களைக் காட்டியபடி கடும்கோபத்துடன் இருந்தான்.வீரர்கள் உடனே யாரையும் கொல்லமாட்டார்கள். தன் சக வீரனோடு சண்டை போடுவதில் அவர்களுக்கு அலாதி இன்பம். பலவானான ஜம்புமாலியுடன் யுத்தம் செய்ய மாருதிக்கு ஆசை வந்து விட்டது. அதற்கேற்றாற் போல், ஜம்புமாலி தன் பாணங்களை மாருதி மேல் தொடுத்தான். மாருதி ஒரு பெரிய பாறையைப் பிடுங்கி அவன் மேல் எறிந்தார். அவன் அதை தன் அம்புகளால் தகர்த்து விட்டான். பார்த்தார் மாருதி. ஒரு பெரிய ஆச்சா மரத்தைப் பிடுங்கி வீசினார். அதையும் அவன் தடுத்து விட்டான். பின்னர் ஒரு மிகப்பெரிய இரும்பு உலக்கையை எடுத்து அவன் மீது வீசினார். அவ்வளவு தான்! ஜம்புமாலியைக் காணவில்லை. அவன் தலை ஓரிடத்தில் சிதைந்து கிடக்க, கை, கால்கள் கழன்று கிடக்க மண்ணோடு மண்ணாகி விட்டான்.இதைக் கேள்விப்பட்ட ராவணன், கோபத்தில் மீசை துடிக்க,தன் மந்திரி பிரதானிகளின் குமாரர்கள் அனைவரையும் அனுப்பி,அந்தக் குரங்கைப் பிடித்து வாருங்கள், என ஆணை பிறப்பித்தான். மின்னலென வந்த அவர்களும் மாருதியின் ஆவேசத்துக்கு பலியானார்கள்.ராவணனுக்கு பயம் வந்து விட்டது.
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 2. #22
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,171
  Downloads
  35
  Uploads
  38

  0 Not allowed!
  பகுதி-22
  விரூபாக்ஷன், யூபாக்ஷன், துர்த்தரன், பிரகஸன், பாஸகர்ணன் என்றதனது ஐந்து சேனாதிபதிகளை அவன் அழைத்தான். அவர்கள் போர் செய்வதில் மிகுந்த திறமைசாலிகள்.அவர்களிடம்,சேனாதிபதிகளே! அந்தக் குரங்குசாதாரணமானதாகத் தெரியவில்லை. அது குரங்கின் வேடத்தில் வந்துள்ள ஏதோ ஒரு சக்தி. இல்லாவிட்டால்,நம் வீரர்கள் 80 ஆயிரம் பேரை அது சாய்த்திருக்குமா? இந்திரன் முதலான தேவர்கள் கடும்தவம் செய்து அனுப்பிய மாயசக்தி என்றேஅந்தக்குரங்கை நினைக்கிறேன். நீங்கள் மிக கவனமாக அதனருகில் சென்று அதைப் பிடியுங்கள். எனக்கு ஏற்கனவேவாலி, சுக்ரீவன், நீலன், த்விவிதன் ஆகியபராக்கிரமம் மிக்க வானர வீரர்களைப் பார்த்த அனுபவமுண்டு. ஆனால், அவர்களையெல்லாம் விட இந்தக் குரங்கு அதிக வலிமையுடையதாக இருக்கிறது. நீங்கள் போரில்வல்லவர்கள். அதை பிடித்து விடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும், போரில் #வெற்றி-பெற #நினைப்பவர்கள் #சிறுவிஷயத்தில் கூட #கவனக்குறைவாக #இருக்கக்கூடாது. போர் வீரர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும், என்று புத்திமதி சொல்லி அனுப்பிவைத்தான்.ஆனால், அந்த சேனாதிபதிகளை மட்டுமல்ல, அவரது தேர்கள், உடன் சென்ற கணக்கற்ற வீரர்களை தூள்தூளாக்கி விட்டார் மாருதி.ராவணன் இதை எதிர்பார்த்தவன் போல, அடுத்துயாரை அனுப்பலாம் என ஆலோசிக்கையில் ராவணனின் மகன், அட்சயகுமாரன் தன் தந்தையை ஒரு பார்வை பார்த்தான். அவனது எண்ணத்தைப் புரிந்து கொண்டராவணன் அவனையே அனுப்ப முடிவெடுத்து ஜாடையாலேயே புறப்படும்படி உத்தரவிட்டான்.அவன் வானில் பறந்து சண்டையிடும் திறமையுள்ளவன்.மாருதியும் வாயு புதல்வரல்லவா! தனக்கு சரியான ஜோடி சண்டையிட கிடைத்ததென்று மகிழ்ந்து அட்சயகுமாரனை எதிர்கொண்டார்.அட்சயனின் தேரைஅடித்து நொறுக்கினார்.அவன் வானில் பறந்து அவருடன் சண்டையிட்டான். ஆனால், வாயுமைந்தன் அவனது கால்களை இறுகப்பிடித்தார். அவன் கிறங்கும் வகையில் சுழற்றினார்.சுழற்றியே கொன்று விட்டார்.பெற்ற மகனை இழந்த துக்கம் ராவணனை வருத்தியது. அவன், வேறு வழியின்றி தன் மகன் இந்திரஜித்தை அழைத்தார். தேவர், அசுரர் போரில் #இந்திரனையே #வென்றவன் என்பதால் இவன் #இந்திரஜித் என்று பெயர் பெற்றவன். கடும் தவமிருந்து பிரம்மாவிடம் இருந்து அஸ்திரம் பெற்றவன். அந்த பிரம்மாஸ்திரம் உலகிலுள்ள எப்பேர்ப்பட்ட சக்தியையும் கட்டும் சக்தி பெற்றது. அவனிடம், அன்பு மகனே! நான் ஏற்கனவே அனுப்பிய வீரர்களிடம் எனக்கு அவ்வளவாக நம்பிக்கையில்லை. ஆனால், நீ மகாவீரன். தேவர்களையே வென்றவன். ஆனாலும், அந்தக் குரங்கை குறைத்து மதிப்பிடாதே. அந்த வானரனின் திறமை பற்றி சொல்கிறேன், கேள், என்று ஆரம்பித்தான்.நீ பல வீரர்களை அழைத்துச் சென்று பலனில்லை. ஏனெனில், அது கணநேரத்தில் அவர்களை ஒழித்துக் கட்டி விடுகிறது. ஆயுதங்களாலும் அவனைக் கொல்ல முடியாது. ஏனெனில்,அவன் காற்றை விட வேகமாக இருப்பவன். எந்தத்திசையில் இருந்து தாக்குவான் என்றே தெரியாது. அப்படிப்பட்டவனிடம் ஆயுதம் எடுத்து பலனில்லை. எனவே, உன்னிடமுள்ள முக்கிய அஸ்திரங்களுடன், அவற்றிற்குரிய மந்திரங்களை ஜபித்துக்கொண்டே செல். இவ்வளவு சக்தி வாய்ந்த குரங்கை அழிக்க நானே போயிருப்பேன். ஆனால், நாளைய உலகம், ஒரு சாதாரணக் குரங்கை அழிக்க ராவணனே நேரில் சென்றான் என்று இந்த ராவணனைக் கேலி செய்யும். மேலும், வீரர்கள் இருக்கும் நிலையில் மன்னனே முதலில் நேரில் செல்வதென்பது அரசியல் தர்மமல்ல, என்றான்.இந்திரஜித்துக்கு இப்படிப்பட்ட வீரனை எதிர்கொள்ளப் போவதில் பெரிய மகிழ்ச்சி.தனக்கு இப்படி ஒரு வாய்ப்பளித்தமைக்காகவும், பெற்றவருக்கு மரியாதை செய்து வெற்றி வாய்ப்பைப் பெற வேண்டும்என்பதற்காகவும் தன் தந்தையை வலம் வந்து நமஸ்கரித்தான். உற்சாகமாக மாருதி இருக்குமிடம் சென்றான். மாருதிக்கோ இன்னும் சந்தோஷம். மாருதிக்கு மட்டுமா! இலங்கையில் வசித்த பறவைகளுக்கு கூட சந்தோஷமாம். யார் இறந்தாலும் வலிய உடல் ஒன்று கீழே சாயும். அவர்களின் பிணம் தங்களுக்கு பலநாள் இரையாகும் என்பது அவற்றின் கணிப்பு. இந்தக் காட்சியைக் காண வானலோகத்தில் இருந்தவர்களெல்லாம் கூடி விட்டார்கள். பிரம்மாஸ்திரம் மாருதியைக் கட்டிப்போடும் என்பது உறுதி. அதில் இருந்து அவர் எப்படி விடுபடப்போகிறார் என்பதைப் பார்த்தாக வேண்டுமே! அது மட்டுமல்ல! அழியப்போவது இந்திரஜித்தா, மாருதியா? ஒருவேளை மாருதியின் கதை முடியுமானால் சீதாராமரின் நிலை என்னாகும்? நெஞ்சம் படபடக்க அவர்கள் உயரத்தில் நின்றார்கள்.இந்திரஜித் களத்திற்குள் புகுந்தான். மாருதி தன் உருவத்தைப் பெரிதாக்கினார். இந்திரஜித் தன்வில் நாணை இழுத்து விட்ட போது எழுந்த ஒலி பேரிடியையும் மிஞ்சியது. பல பாணங்களை அவன் மாருதியின் மேல் பிரயோகித்தான்.மாருதி பறந்தபடியே அவற்றை விலக்கித் தள்ளினார். இதுகண்டு இந்திரஜித்தே ஆச்சரியப்பட்டான்.தன் தந்தை சொன்னது போல, இவன் #பராக்கிரமசாலி தான் என்பதைப் புரிந்துகொண்ட #புத்திமானான_இந்திரஜித், #பிரம்மாஸ்திரத்தை ஏவி இவனைப் பிடித்து கட்டி இழுத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தான்.#பிரம்மாஸ்திரம் பறந்து வந்தது. மாருதி அந்த #அஸ்திரத்துக்கு தானாகவே #கட்டுப்பட்டு விட்டார். சகல அஸ்திரங்களுக்கும் கட்டுப்படாதஅந்த மாவீரன் இதற்கு மட்டும் ஏன் கட்டுப்பட வேண்டும்? அது ஒரு #ரகசியம்!
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
Page 3 of 3 FirstFirst 123

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •