Tamil Brahmins
Page 2 of 3 FirstFirst 123 LastLast
Results 11 to 20 of 22
 1. #11
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,171
  Downloads
  35
  Uploads
  38

  0 Not allowed!
  பகுதி-9


  சுந்தரகாண்டத்தை பாராயணம் செய் என்று சொல்பவர்கள், அயோத்தியா காண்டத்தையோ, யுத்த காண்டத்தையோ இன்னும் பிற காண்டங்களையோ படி என்று சொல்லவில்லை. காரணம் என்ன? அத்தனை காண்டங்களின் சாறும் சுந்தரகாண்டத்திலே விரவிக்கிடக்கிறது.ஆஞ்சநேயர், தான் சந்திக்கும் நபர்களிடம் எல்லாம், ராமனைப் பற்றியும், சீதையைப் பற்றியும், தசரதரைப் பற்றியும் விலாவாரியாகச் சொல்கிறார். இதிலேயே பிற காண்டங்களின் சரக்கெல்லாம் அடங்கி விடுகிறது. சுந்தரகாண்டம் படித்தால் மொத்த ராமாயணத்தையும் படித்த திருப்தி ஏற்படுகிறது. மேலும், பல படிப்பினைகளை அது தருகிறது.ஆஞ்சநேயர், இலங்கையில் புகுந்து அங்குலம் அங்குலமாக அளந்து பார்க்கிறார். எப்படி அந்த நகருக்குள் கால் வைத்தாராம் தெரியுமா? இடதுகாலை முதலில் தூக்கி வைத்தாராம். ஒரு சுபநிகழ்ச்சியாக இருந்தால் வலதுகாலை தூக்கி வைத்து வரச்சொல்வார்கள். வலதுபாதத்தை ஊன்றி நடக்கும்போது, நரம்புகளின் உணர்வுகள் தூண்டப்பட்டு மனவலிமை அதிகரிக்கும் என்பதும், பூமி வலமாகச் சுற்றுவதால் இயற்கையை மதித்து வலது பாதத்தை முதலில் தரையில் ஊன்ற வேண்டும் என்ற அறிவியல் காரணங்களே, ஆன்மிகத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், ஆஞ்சநேயர் இடது பாதத்தை தூக்கி வைத்து இலங்கைக்குள் நுழைந்தார். வலது என்பது நமக்கு நன்மை கிடைக்க...இடது என்பது எதிரிக்கு தோல்வியை உண்டாக்க. நீதிசாஸ்திரத்தில் சொல்லியுள்ளபடி, எதிரி ஒருவனைஜெயிக்க வேண்டுமானால், அவனது ஊர் அல்லது நாட்டுக்குள் நேரடி வழியில் செல்லாமல், ஏதோ ஒரு குறுக்கு வழியில் நுழைய வேண்டுமாம். அவனது எல்லைக்குள் கால் வைக்கும் போது, இடதுகாலை ஊன்றி செல்ல வேண்டுமாம்! இதன்படி, லங்காதேவதையை வெற்றி கொண்ட ஆஞ்சநேயர், கோட்டை வாசல் வழியே நுழையாமல், மதில் சுவர் ஏறிக் குதித்து, இடது பாதத்தை தரையில் ஊன்றிச் சென்றார்.அந்த நகரை முழுமையாக சுற்றி வந்தார். எங்கும் வாத்திய இசை, மக்கள் மகிழ்ச்சியுடன் சிரித்து மகிழ்ந்திருந்தனர். காரணம் ராவண ராஜ்யத்தில் பஞ்சத்திற்கு இடமேது. எல்லா தேவர்களுமே அவன் கைக்குள்...பிறகென்ன செழிப்புக்கு பஞ்சம்...இதில் இன்னொரு சூட்சுமம் வேறு...லட்சுமியின் மறுஅவதாரமான சீதாவும் அந்த தேசத்துக்குள் இருக்கிறாளே! விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவள் அங்கே இருப்பதால் வந்த களை வேறு அந்த நாட்டை பிரகாசிக்கச் செய்தது. பூக்களின் நறுமணம் அனைவரையும் கவர்ந்தது. பெண்கள் பாடும் அற்புதமான பாடல்கள், விண்ணுலகில் அப்சரஸ்கள் பாடுவது போல் தேனாய் இனித்தது. ராட்சஷர்களாக இருந்தாலும் பல வீடுகளில் வேத அத்யயனம் நடந்து கொண்டிருந்தது விசேஷத்திலும் விசேஷம். சிலர் தங்கள் மன்னன் ராவணனின் கீர்த்தியைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஒரு சில இடங்களில் அல்ப ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு பசுத்தோலை உடுத்திக் கொண்டு சிலர் யாகம் செய்து கொண்டிருந்தனர். சில வீரர்கள், ஆயுதமில்லாமல் தங்கள் பலத்தை நம்பி சக வீரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர். இப்படியே பல்வேறு தரப்பு மக்களையும், இடங்களையும் பார்த்த ஆஞ்சநேயரின் கண்களில் ராவணனின் பொன்கூரை வேயப்பட்ட அரண்மனை தெரிந்தது. தாமரை மலர் நிறைந்த அகழிகளால் அது சூழப்பட்டிருந்தது. அரண்மனை மதில் சுவர்கள் விண்ணை முட்டுமளவு எழுந்திருந்தது. அழகிய குதிரைகள், நான்கு தந்தங்களைக் கொண்ட அதிசய யானைகள்...இப்படி செல்வக்களஞ்சியமாகத் திகழ்ந்த ராவணனின் அரண்மனைக்குள் ஆஞ்சநேயர் நுழைந்தார்.அவர் வந்தவேலை சீதையைத் தேட மட்டும் தான்!அவள் எங்கிருக்கிறாள் என கண்களில் விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு, இவர் தேட வேண்டியது தானே! இவர் என்னவோ இலங்கைக்கு சுற்றுலா வந்தது போல, வீடு வீடாக, தெருத்தெருவாக நோட்டம் விடுவானேன்!இவர் தூதர் பணியை மட்டும் செய்யவில்லை. இந்த இடங்களை நோட்டம் விட்டு வைத்துக் கொண்டால், ராமன் போருக்கு வரும் சமயத்தில் அவரை அழைத்துக் கொண்டு வருவதற்கு சவுகரியமாக இருக்கும் என்பதால் இவ்வாறு செய்தார்.ஒரு ஊருக்குப் போனால், அந்த ஊரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏதோ மதுரைக்கு போனோம், மீனாட்சி கோயிலை மட்டும் பார்த்தோம், சென்னைக்குப் போனோம், கடற்கரையோடு திரும்பி விட்டோம்... என்று இருக்கக்கூடாது. அவ்வூர் சரித்திரம் முழுவதையும் தெரிந்து வர வேண்டும். அப்படியானால் தான் பயணம் போன திருப்தியும் கிடைக்கும், எதிர்காலத்தில் நாம் யாரையேனும் அங்கே அழைத்துப் போகும் போது அவர்களுக்கும் சொல்ல வசதியாக இருக்கும்.சிறு விஷயமாக நமக்குப் படுவதில் கூட, எவ்வளவு பெரிய நன்மை அடங்கியுள்ளது என்பதை சுந்தரகாண்டம் சுட்டிக்காட்டுவதைக் கவனியுங்கள்.ஆஞ்சநேயர் ராவணனின் இல்லத்தை அடையும் போது, மாலைநேரம் வந்து விட்டது. வானத்தில் சந்திரன் உலா வரத் துவங்கி விட்டான். இந்த மாலை நேரம் இருக்கிறதே...இது தான் மக்களின் மனதை மயக்கும் நேரம். நம் வீடுகளில் குத்துவிளக்கேற்றி, இறை சிந்தனையுடன் பூஜை செய்கிறோமே...ஏன் தெரியுமா? மாலைநேரத்தின் தகாத சிந்தனைகளை மறக்கத்தான்!ராட்சஷர்கள் தங்கள் அன்றாடத் தொழிலை நிறுத்தி விட்டார்கள். எல்லோரும் மதுபானங்களை குடம் குடமாய் குடித்தார்கள். தங்கள் ஆசை நாயகியருடன் கூடிக்களித்தார்கள். சில வீடுகளில் உத்தம ஸ்திரீகளும் இருந்தார்கள். அவர்கள் தங்கள் நாயகர்களுக்குரிய பணிவிடையை இனிதே செய்தார்கள். பல ரகப் பெண்களை ஆஞ்சநேயர் பார்த்தார். ஆனால், தர்மத்தை விட்டு சற்றும் வழுவாத ராஜரிஷி ஜனகரின் புத்திரியான சீதாதேவியை மட்டும் அவரால் எங்கும் காண முடியவில்லை. அவளை அவர் பார்த்ததில்லை எனினும், அங்க அடையாளத்தைக் கொண்டே அவள் இன்னாரென கணித்து விடும் நிபுணரல்லவா அந்த மகாபுத்திமான்! அவர் சற்றே சோர்வடைந்தார்.
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 2. #12
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,171
  Downloads
  35
  Uploads
  38

  0 Not allowed!
  பகுதி-8


  தன்னை மறித்த லங்காதேவியை ஒரே அடியில் அவர் வீழ்த்தினார். எப்படி அடித்தாராம் தெரியுமா?பெண்களிடம் ஆண்கள் வீரத்தைக் காட்டக்கூடாது.லட்சுமணன் கூட அவசரப்பட்டிருக்கிறான், சூர்ப்பனகை விஷயத்திலே. அதனால் தான், இன்று இவ்வளவு விபரீதங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அவளை சமாதானம் செய்து பார்த்தார்கள் ராம, லட்சுமணர்கள். அவள் கேட்பதாக இல்லை. அதற்காக,அவசரப்பட்டு நோஸ்கட் பண்ணியிருக்க வேண்டுமா! தப்புத்தானே!ஒரு ஆண், ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்என்பதை ஆஞ்சநேயர் இந்தஉலகத்துக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார். லங்காதேவியை அவரும் அடித்தார். ஏனெனில், அவள் அடிபட வேண்டும்என்பது விதி. அதுவும் எப்படிஅடித்தார் தெரியுமா? அவள்பெண் என்பதால், வலது கையால் அடித்தால் தாங்கமாட்டாள் என்று, இடது கையால் அடித்தாராம். இடது கைக்கு சக்தி குறைவு தானே! அதனால் வலியோடு போயிற்று. அவளது உயிருக்கு ஆபத்து வரவில்லை. மேலும், அவளுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கவே அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டார்.சுரஸையையும் அவர் கொல்லவில்லை. அவள் சொன்ன நிபந்தனையை நிறைவேற்றி, அவளது ஆசியையும் பெற்றார். பெண்களிடம் ஆண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் சுந்தரகாண்டம் மூலம் நமக்குச்சொல்லித் தருகிறார். லங்காதேவி ஆஞ்சநேயரிடம் அடிபட்டாள். உடனே, தன் ராட்சஷ ரூபம் மறந்து, ரூப லாவண்யம் மிக்கபேரழகியாக அவர்முன் நின்றாள். வானர வீரரே! பிரம்மா எனக்கிட்ட சாபத்தால் இங்கு நான் தங்கியிருந்தேன். என்று ஒரு வானரன் உன்னை வெல்கிறானோ, அப்போது நீ விமோசனம் பெறுவாய். அப்போது, இலங்கையில் ஆளும் ராட்சஷர்கள் அழிக்கப்படுவார்கள் என்று சொல்லியிருக்கிறார். அதன்படியே இன்று நடந்தது. பிரம்மாவின் வாக்குப்படி, நீ ராட்சஷர்களைஅழிப்பாய், என்று சொல்லி இலங்கையை விட்டுப் புறப்பட்டு சென்று விட்டாள்.இதன்பிறகும், ஆஞ்சநேயருக்கு பெண்களைக் குறித்த அனுபவம் ஏற்படப்போகிறது.காவல் தெய்வமே அனுமதி தந்து விட்டதால், இலங்கைக்குள் புகுந்த அவர் சீதாதேவியை தேடி வீடு வீடாக அலைகிறார். எங்கும் அவள் இல்லாமல் போனதால், ராவணனின் அரண்மனைக்கே வந்து விடுகிறார். அப்போது, அங்கே அவனது ஆசைநாயகியர் அலங்கோலமாக கிடக்கிறார்கள். அதைப் பார்த்துஅவர் கண்களை மூட வேண்டிய நிலைமை வந்துவிட்டது. பெண்கள் தூங்கும்போது அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும். வீட்டிற்குள் அடக்க ஒடுக்கமாக தூங்கிப் பழகினால் தான், வெளியிடங்களில் தங்கும் போதும் அதே பழக்கம் வரும். நாம் ரயில்வே ஸ்டேஷன்களிலும், பஸ் ஸ்டாண்ட்களிலும் இரவு நேரத்தில் சென்றால், பல பெண்கள் தாறுமாறாக படுத்திருப்பதைப் பார்க்கலாம். இதற்கு காரணம் பெரியவர்கள் சிறியவர்களுக்கு கற்றுக் கொடுக்காமையே ஆகும்.ராவணனின் அரண்மனையில் படுத்திருந்த பெண்களின் நிலையைக் கண்ட ஆஞ்சநேயர், கண்களை மூடிக் கொண்டு, ராமா! நான் என்ன பாவம் செய்தேனோ! உன் திருஉருவத்தை மட்டுமே எந்நேரமும் தரிசித்துக் கொண்டிருந்த என் கண்கள், இந்த அலங்கோலக் காட்சிகளையெல்லாம் பார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதே! என்று சொன்னாராம்.இது மட்டுமா! சீதாதேவியை ஒரு வழியாக அவர் அசோகவனத்திலே பார்த்த போது, அவளை ராட்சஷிகள் ராவணனோடு இணையும்படி துன்பப்படுத்திக் கொண்டிருந்தனர். மிரட்டினர். அதையெல்லாம் மரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் ஆஞ்சநேயர். அவர்கள் தூங்கிய பிறகு, சீதையை சந்தித்த அவர், அம்மா! இந்த ராட்சஷிகளை நான் அடிக்கட்டுமா? என்றார்.அப்போது கருணைக்கடலான சீதா சொன்னாள்.#அடேய் #ஆஞ்சநேயா! உனக்கு பெண்களை #அடிக்க #வேண்டுமென்ற #எண்ணம் #எப்படிதோன்றியது? அவர்கள் என்னபாவம் செய்தார்கள்? தங்கள் தலைவன் இட்ட #கட்டளையைச் சரிவர செய்கிறார்கள். அவ்வளவுதானே! #பாவம் செய்தாலும் சரி..#நன்மையே செய்தாலும் சரி..ஒருவரை #தயையுடன் ஆட்கொள்வது தான் #சிறந்ததர்மம். இதைப் #புரிந்து கொள். மேலும், #உலகத்தில் #தப்பே #செய்யாதவர்கள் #கிடையாது, என்றாள். ஆஞ்சநேயருக்கு இன்னும்வருத்தம் வந்து விட்டது.இவ்வளவுகஷ்டப்பட்டு கடலைத் தாண்டி குதித்து வந்திருக்கிறேன். இந்தஅம்மா தப்பு செய்யாதவனே கிடையாது என்கிறார்களே. நான் என்ன தப்பு செய்தேன்? என்று அவளிடமே கேட்டுவிட்டார். இவர்களை அடிக்க நினைத்தது நீ செய்த தப்பு, என்றாள் பிராட்டி.சரி...என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போங்கள். என் தலைவன் ராமன் என்ன
  #தப்பு_பண்ணினான்? என்று அடுத்த கேள்வியை கேட்டார்..மனைவியை ஒருவன் கடத்திப் போய் விட்டானே! அவளை மீட்க அவரே நேரில் வராமல், உன்னை
  #அனுப்பி வைத்தாரே! அது அவர் செய்த தப்பு, என்கிறாள்.ஏன்... #அவளே கூட #தவறு செய்திருக்கிறாளே! #பொன்மானைக் கேட்டது பெரிய தப்பு. #கொழுந்தனை #சந்தேகப்பட்டது மன்னிக்க முடியாத தப்பு. அதனால் தான் இப்படி சொல்கிறாள்.ஆக, #தவறு செய்தவர்களாகவே இருந்தாலும் கூட பெண்களை #கைநீட்டக்கூடாது என்று சுந்தரகாண்டம் நமக்கு #உணர்த்துகிறது. இதனால் தான் கணவனும், மனைவியும் #பிரிந்திருந்தால், #சுந்தரகாண்டத்தில் தினமும் #ஒருஸர்க்கம்படி என்று பெரியவர்கள்சொல்கிறார்கள். #மனைவியோ, #கணவனோ...யார் தப்பு #செய்திருந்தாலும் சரி...
  #தப்பு செய்யாதவர் #யாருமில்லை என்ற #உண்மையை உணரவும், பிற #பெண்களை ஏறெடுத்தும் #பார்க்கக்கூடாது என்பதை உணர்ந்து கொள்ளவும் #சுந்தரகாண்டம் நமக்கு #வழிகாட்டுகிறது
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #13
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,171
  Downloads
  35
  Uploads
  38

  0 Not allowed!
  பகுதி-13


  அவர்கள் சீதையிடம், சீதா! நீ #இவனைக்கண்டு
  #கலங்க வேண்டாம். இவன் ஒரு #அற்பன், என்றனர். இதனால், தைரியமடைந்த சீதா, ராவணனிடம் வீரத்துடன் பேசினாள். பெண்கள் கஷ்ட காலத்தில் மிகுந்த தைரியத்துடன் இருக்க வேண்டும் என்பதை சுந்தரகாண்டத்தின் இந்த வரிகள் எடுத்துச் சொல்லப் போகின்றன.ராவணா! என் கணவர் #மதயானைக்கு #சமமானவர், நீயோ சாதாரண #முயல். இந்த இரண்டும் சண்டை போட்டால்#முயலின் கதி என்னவாகும் என்பதை யோசி. நீஒரு கணம் அவர் கண்ணில் பட்டால் போதும். #உன்விதிமுடிந்து போகும். உன் பார்வை என் மீது கொடிய நோக்கத்துடன் படும்போதே #குருடாகியிருக்க வேண்டுமே! என்னை உன் இஷ்டத்துக்கு அழைக்கும் போதேஉன் நாக்கு அறுந்து விழுந்திருக்க வேண்டுமே! இந்திராணிக்கு சமமான என்னுடன்பேசுவதற்கு கூடஉனக்கு தகுதி கிடையாதே. கொடியவனே! நான் நினைத்தால் உன்னை ஒரு நொடியில் சாம்பலாக்கி விடுவேன். அத்தகைய சக்தி எனக்கு இருக்கிறது. ஆனால், உன்னைக் கொல்ல வேண்டும்என்ற ஆணை இதுவரை என் கணவரால் எனக்குபிறப்பிக்கப்படவில்லை. #நான்_கணவனுக்கு #கட்டுப்பட்டவள்.
  #பதியையே_தெய்வமெனக் #கருதுபவள். அவரது உத்தரவை என்றும் மீறாதவள். பாவம்! நீ என்ன செய்வாய்! உன் விதி என்னால் தான் முடிய வேண்டுமென்று எழுதப்பட்டிருக்கும் போது, அதை மாற்ற யாரால் இயலும்?நீயெல்லாம் ஒருவீரனா? #கேவலமானவனே! நீ குபேரனுக்கு சகோதரன், அளவற்ற படைபலம்உடையவன். பல யுத்தங்கள் புரிந்து தேவலோகத்தையே கைப்பற்றியவன்.அப்படிப்பட்ட சூராதி சூரனான நீ, என் கணவருக்கும், என் மைத்துனன் லட்சுமணனுக்கும்
  #பயந்து தானே என்னை அவர்கள் #அறியாமல்_தூக்கி #வந்தாய்?இப்போது சொல்...
  #நீசுத்தமானவீரனா? என்றாள்.பார்த்தீர்களா! ஒரு பெண்மணிக்கு இருக்கும் தைரியத்தை! உயிருக்கு பாதுகாப்பில்லை என்ற நிலையிலும்,
  #தன் கற்பைப் பாதுகாக்கவும், #கணவன் மீது கொண்ட #பக்தியின் மீது கொண்ட நம்பிக்கையும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. தன்னை #ஆண்மகனா என்று கேட்டுவிட்டாளே இந்தப் பெண் என்று #வெட்கிப் போன ராவணன் அதிபயங்கர கோபத்துடன் பாம்பைப் போல் சீறினான். ராமனாம் ராமன்...நீதிநெறி என்பதுஅவனிடம் உண்டா? எல்லாவற்றையும் இழந்து திரியும் அவன் எனக்கு ஈடா? அவன் மீது உனக்கு இன்னுமா பிரியம்? அவனைக் கொன்று விட்டு தான் எனக்கு மறுவேலை, என்று கர்ஜித்தான்.பின்னர் சீதையைச் சுற்றியிருந்த காதில்லாத, மூக்கில்லாத, ஒற்றைக் கண்ணுடைய குரூர ரூபம் கொண்ட அரக்கிகளிடம், இவள் மனதை மாற்றப் பாருங்கள். அப்படியும் மாறாவிட்டால் சித்ரவதை செய்யுங்கள், என்று ஆணையிட்டான். அப்போது, ராவணனின் இஷ்ட நாயகியான தான்யமாலினி என்பவள், பேரரசரே! இந்த மானிட ஜென்மத்திடம் தங்களுடைய தாபத்தை தீர்த்துக் கொள்ள இயலுமோ? மேலும், இவளுக்கு உங்களது செல்வத்தை அனுபவிக்க வேண்டும் என்று பிரம்மா எழுதி வைக்கவில்லை. வாருங்கள்! தங்களை நான் மகிழ்விக்கிறேன், என்று சொல்லி, அவனது கரம் பற்றி இழுத்தாள். ராவணனும் அங்கிருந்து சென்று விட்டான். பின்னர் ராட்சஷிகள் சீதையிடம் பலவாறாக ராவணனின் பெருமையை உரைத்தனர். ஒரு அரக்கி சீதையிடம், ஏ சீதா! எங்கள் ராவணன் சாமான்யமானவனா? புலஸ்திய முனிவரின் பேரனல்லவா அவன், அவருக்கு மனைவியாவது உனக்கு கிடைக்கும் பெரும் பேறல்லவா? என்றாள். ஏகஜடை என்ற அரக்கி கோபத்துடன், மரீசி, அத்திரி, ஆங்கிரசர், புலஸ்தியர்,புலஹர், கிரது ஆகிய ஆறு பிரஜாபதிகளை நீ அறிவாய். அவர்களில் நான்காவதான புலஸ்தியர் பிரம்மாவின் புத்திரர்.அவரது புத்திரர் விச்வரஸ். அந்த விச்வரஸ் ரிஷியின் மகனே எங்கள் ராவணேஸ்வரன். இப்படிப்பட்ட புகழுடையவனுக்கு வாழ்க்கைப்பட என்ன தயக்கம்? என்றாள்.பிரகஸை என்ற அரக்கி, உன் மீது கொண்ட காதலால், எங்கள் குல திலகம் மண்டோதரியை விட்டே விலகிவிட்டான் ராவணன். பிற பெண்களாலும் அவன் மனதைக் கவர முடியவில்லை. எனவே, நீ அவனுக்கு மனைவியாகி விட்டால், உனக்கு சக்களத்திகளே இருக்கமாட்டார்கள். சகல போகத்துடனும் நீ வாழலாம், என ஆசைகாட்டினாள். இப்படியாக ஹரிஜடை, விகடை போன்ற அரக்கிகளெல்லாம் அவளுக்கு பல வழிகளிலும் ராவணனின் பெருமையைச் சொன்னார்கள். உன் புருஷன் ராஜ்யத்தை இழந்து பஞ்சப்பராரியாய் காட்டில் திரிந்து கொண்டிருக்கிறான். மனைவியைக் காப்பாற்ற தெரியாத அவனுடன் வாழ்ந்து என்ன செய்யப் போகிறாய்? என்றார்கள். எதற்கும்மசியாத சீதையைத் தின்று விடுவோம் என பயமுறுத்தவும் செய்தார்கள்.இல்லானை இல்லாளும் வேண்டாள் என்று பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். கணவனிடம் செல்வம் இல்லாத பட்சத்தில், அவனுக்கு கிடைக்கும் மரியாதையை இந்த கலியுகத்தில் காணத்தான் செய்கிறோம்! ஏன் பெற்றவள் கூட வேலை இல்லாத பிள்ளையை வெறுக்கத்தான் செய்கிறாள். சீதையும் இவ்வாறே நினைத்திருந்தால், அவளும் ராவணனின் அரண்மனையில் சுகவாழ்வை அனுபவித்திருக்கலாம். ஆனால், அவள் என்ன சொன்னாள் தெரியுமா?என் கணவர் தரித்திரராக இருக்கலாம்; ராஜ்யம் இல்லாதவராக இருக்கலாம்.ஆனால், அவர் எனக்கு மாங்கல்யம் தந்தவர். அவரே எனக்கு தலைவர். #கஷ்டப்படும் அவர் #பின்னாலேயே நான் #செல்வேன். அதிலேயே #ஆனந்தத்தைக் #காண்கிறேன். சூரியனை சுவர்ச்சலாதேவியும், #இந்திரனைஇந்திராணியும், #வசிஷ்டரைஅருந்ததியும், #சந்திரனை_ரோகிணியும், #அகத்தியரை
  #லோபாமுத்திரையும், #ச்யவனரை-சுகன்யாவும், #சத்யவானை-சாவித்திரியும், #சவுதாசனை-மதயந்தியும், #கபிலரை-ஸ்ரீமதியும், #சகரனை-கேசினியும்,
  #நளனை-தமயந்தியும், #அஜனை-இந்துமதியும் பின்தொடர்வது போலவும், மனமொத்த தம்பதிகளுக்குஉதாரணமாக வாழ்ந்து காட்டுவது போலவும், நானும் என் கணவனுடன் #வாழ்ந்து காட்டுவேன், என்றாள்.எவ்வளவு பெரிய உத்தம ஆத்மாக்களின் பெயர்களையெல்லாம்படிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது பாருங்கள்! இவர்களது பெயரைச் சொன்னாலே மகா புண்ணியம்! குடும்ப ஒற்றுமைக்குசுந்தரகாண்டத்தை தவிர மாமருந்து வேறு ஏதுமில்லை. ஆஞ்சநேயர் இதையெல்லாம் மரத்தில் #ஒளிந்து கொண்டு பார்த்துக் #கொண்டிருந்தார்.
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #14
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,171
  Downloads
  35
  Uploads
  38

  0 Not allowed!
  பகுதி-14
  அப்போது, சில அரக்கிகள் கோடலிகளை தூக்கினர். சீதையை வெட்டுவதற்காகப் பாய்ந்தனர்.நாங்கள் உனக்கு ராவணனைப் பர்த்தாவாக அடையும் நன்மையைப் போதித்தால், நீ என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறாயே, என்று அதட்டினர். சில அரக்கிகளின் உதடுகள் சிவந்து தொங்கியதைப் பார்க்க கோர மாக இருந்தது. சீதாதேவி பயந்து போய் ஓடினாள். ஆஞ்சநேயர் ஒளிந்திருந்த சிம்சுபா மரத்தின் கீழ் வந்து நின்றாள். அப்போது சண்டோதரி என்பவள் ஒரு சூலத்தை அவள் முன் நீட்டி குத்திவிடுவது பாவனை செய்து, ஏசீதா! இவளது கண்களையும், பயத்தால் நடுங்கும் மார்பையும் பார்க்கும்போது எனக்கு ஆசை மிக அதிகமாகிறது. அவற்றை இந்த சூலத்தால் தோண்டி தின்றால் என்ன?என்றாள். பிரகஸை என்பவள், இவள் என்ன சொன்னாலும் மசியமாட்டேன் என்கிறாள். எனவே, நாம் இவளைஅடித்துக் கொன்று விடுவோம், பின்னர் ராவணனிடம் போய், நீ கொண்டுவந்த பெண் துக்கத்தால் இறந்துவிட்டாள் என சொல்லி விடுவோம். அவர் வேறு வழியின்றிஇவளைத் தின்னச்சொல்லி விடுவார், என்று படுபயங்கரமான யோசனை ஒன்றைச் சொன்னாள். அஜாமுகி என்பவள், அதை ஆமோதித்து, சரி..சரி...நேரமாகிறது. இவளைச் சும்மா தின்ன முடியுமா? குடிக்க மதுபானங்கள், தொட்டுக்கொள்ள ஊறுகாய் முதலியவற்றைக் கொண்டு வாருங்கள். மதுவைக் குடித்து சகல துக்கங்களையும் மறப்போம். இவளைத் தின்னும் முன்பு, நம் நகரதேவதையான நிகும்பிலை (பத்ரகாளி) முன்னால் நடனமாடுவோம், என்றாள். சீதாதேவி கண்ணீர் விட்டாள். பெண்களே! மனுஷ்ய ஸ்தீரி ஒருத்தி, ராட்சஷனுக்கு மனைவியாவது என்பது எப்படி முடியும்? உங்கள் இஷ்டம் என்னைக் கொன்றுதின்பது தானே! அதையே செய்யுங்கள்.என் உயிருக்குப் பயந்து எக்காரணம் கொண்டும் ராவணனின் ஆசைக்கு இணங்க மாட்டேன், என்று தெளிவுபடச் சொன்னாள். பின்னர் ஸ்ரீராமனை மனதில் நினைத்து, தங்களை இனி நான் பார்ப்பது நடக்கிற காரியமல்ல, என்று சொல்லி அழுதாள். உயிர் பிரியப் போகும் நிலையில், ஸ்ரீராமா, ஹா லட்சுமணா! என் மாமியான கவுசல்யா தேவியே! சுமித்திராவே! என்று உறவையெல்லாம் நினைத்து கதறினாள். என் கணவனைப் பிரிந்த பிறகும், இந்த ராட்சஷிகள் இவ்வளவு தூரம் என்னை உபத்திரவம்செய்தும், தகாத வார்த்தைகள் பேசியும் கூட என் உயிர் பிரியமாட்டேன் என்கிறது. ஒரு பெண்ணோ, ஆணோ அவரவர் செய்த செயல்களுக்கேற்ற பாவத்தை அனுபவிக்காமல் அதற்கு முந்தியோ,பிந்தியோ இறப்பது என்பது நடக்காத காரியம் என்று பண்டிதர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். அது நிஜம் என்பது இப்போது தெளிவாகிறது. அதுமட்டுமல்ல! பூர்வஜன்மத்தில் நான் புண்ணியமே செய்யவில்லை என்பது தெளிவாகிறது. அதனால் தான், காற்றில் சிக்கிய கப்பல் பாரம் தாங்காமல் கடலுக்குள் மூழ்குவது போல நான் துன்பத்தால்அலைக்கழிக்கப்பட்டு உயிரை விடப்போகிறேன். #ஒரு பெண் #தன்உயிரை #விடும்போது, அவள் #அருகில் அவளது #கணவன் இருந்தால் #மிகுந்தமகிழ்ச்சியடைவாள். அந்த இன்பத்தைக் கூட பெறாத நான் எவ்வளவு பெரிய #துர்பாக்கியசாலி!என்று புலம்பினாள். பார்த்தீர்களா! அந்த #நாராயணனின்அவதாரமான #ராமனின்_பத்தினியாகும் #அளவுக்கு #புண்ணியம் #செய்தசீதாதேவி
  #தனக்கு_ஏற்பட்ட #கஷ்டத்திற்கே,
  #பூர்வஜென்மவினையைக் #காரணம் காட்டுகிறாள் என்றால், இந்த உலகத்தில் இப்போது நடக்கும் அட்டூழியங்களுக்கு அடுத்த பிறவியில் நாம் என்னவெல்லாம்
  #அனுபவிக்கப் #போகிறோமோ, நினைத்தாலே குலை நடுங்குகிறது. சுந்தரகாண்டம் இந்த இடத்தில் நமக்குச் #சொல்லும்பாடம், #கொஞ்சமாவது நாம் #புண்ணியகாரியங்கள் #செய்ய வேண்டும் என்பதைத்தான்! நெஞ்சமே உடைந்து போகும் வகையில் சீதாதேவி, தன் துக்கத்தை மனம் உருக்கும் வார்த்தைகளால் மேலும் வெளிப்படுத்தினாள்.ராமா! தாங்கள் #என்னை_மறந்து #விட்டீர்களா? இவள் காணாமல் போய்வெகுகால மாயிற்றே! இவள் எங்கே உயிருடன் இருக்கப்போகிறாள் என்று நினைத்தீர்களா? உங்கள் பாணம் சகல லோகங்களையும் கடந்து செல்லக்கூடியதாயிற்றே! அப்படியிருக்க, இருந்த இடத்திலிருந்தே ஒரு பாணத்தைத் தொடுத்தாலே இந்த ராவணன் அழிந்திருப்பானே! ஒருவேளை மாரீசன் என்னை மாயைக்கு உட்படுத்தி, ராவணனிடம் சிக்க வைத்தது போல, ராமனையும் கொன்றிருப்பானோ? நீங்கள் உயிருடன் இல்லையோ? அப்படியானால், இந்த ராவணனின் கையில் சிக்கி மாள்வதை விட, நானேஎனக்கு மரணத்தை வருவித்துக் கொள்கிறேன், என்றாள். உடனே அரக்கிகள் அவளை, அடியே சீதா! தற்கொலை செய்து கொள்ளப் பார்க்கிறாயா? அதற்குள், உன்னை நாங்களே தின்று விடுகிறோம், என சொல்லியவாறே அருகில் வந்தனர். சில அரக்கிகள் சீதா தற்கொலை செய்துவிட்டால் ராவணன் தங்களைக் கொன்று விடுவானே என்ற பயத்தில் அவனிடம் தகவல் சொல்ல ஓடினர். அப்போது ராவணனின் சகோதரன் விபீஷணனின் புத்திரியாகிய #திரிஜடை என்ற அரக்கி அங்கே வந்தாள். அவளும் சீதையை மிரட்ட அனுப்பப்பட்டவள் தான்! ஆனால்,
  #சேற்றிலும்செந்தாமரை #முளைப்பதுண்டு. எங்காவது ஓரிடத்தில் கலவரம் நடக்கிறதென்றால், நாம் ஓடி ஒளிய இடம் தேடி அலையும் போது, பல வீட்டுக்கதவுகளும் திறக்காது. ஆனால், எங்கோ ஒரு மூலையில், அந்த #கலவரத்தில்-பங்கேற்கும் #ஒருவரது குடும்பத்தைச் #சார்ந்தவர்களே நமக்கு #அடைக்கலம் தருவர். இப்படிப்பட்டவள் தான் #திரிஜடை. அவள் அவ்வளவு நேரமும் உறங்கிக் கொண்டிருந்தாள். அரக்கிகளின் கொடூர சத்தம் கேட்டு விழித்தவள், சீதையை அவர்கள் துன்புறுத்திக் கொண்டிருந்ததைக் கண்டாள்.#நிறுத்துங்கள்! இந்தப் பெண்ணை #துன்புறுத்தாதீர்கள் #இவளைத் துன்புறுத்தினால் வீணாக #அழிந்துபோவீர்கள்! என்று அரக்கிகளை #எச்சரித்தாள்.
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 8. #15
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,171
  Downloads
  35
  Uploads
  38

  0 Not allowed!
  பகுதி-15


  திரிஜடை! என்ன சொல்கிறாய்? இவள் மானிடப்பிறவி. இவளுக்கு துன்பமிழைப்பதால் நமக்கு என்ன கேடு நேர்ந்து விடும்? என ராட்சஷிகள் கேட்டனர். நீங்கள் நினைப்பது போல்இவள் சாதாரணமானவள் இல்லை. நான் அதிகாலை வேளையில் கண்ட கனவு இதை உறுதிப்படுத்துகிறது. அந்தக் கனவின்படி, ராட்சஷர்களுக்கு அழிவும், இவளது கணவனுக்கு வெற்றியும் கிடைக்கப்போகிறது, என்றாள் திரிஜடை. இதையடுத்து, அரக்கிகள் தீயில் பட்ட கையை பட்டென எடுப்பது போல் சட்டென விலகி நின்றனர். ஏனெனில், அதிகாலை கனவு என்றால் அரக்கிகளுக்கு கடும் பயம். அந்தக்கனவு பலித்து விடும்என்பது அவர்களது நம்பிக்கை.திரிஜடை! எங்களுக்கு பயமாக இருக்கிறது. நீ கண்ட கனவை எங்களுக்கு விபரமாகச் சொல், என்று கேட்டு திகிலுடன் நின்றனர். திரிஜடை அவர்களிடம்,இந்த பெண்ணின் பர்த்தாவான ராமன், தன் தம்பியுடன் வெள்ளை ஆடை அணிந்து, வெள்ளை மலர்மாலை சூடி ஆகாயவழியில் இங்கு வந்தார். இந்த சீதையும் வெண்ணிற ஆடை அணிந்து க்ஷீர சமுத்திரத்தின் (தயிர்க்கடல்)மத்தியில் இருந்த வெள்ளை மலை ஒன்றில் அமர்ந்திருந்தாள். அப்போது நான்கு தந்தங்களை உடையஒரு பெரிய யானையின் மேல் ராமலட்சுமணர் இவளருகே வந்தனர் (யானை மீது வருவது போல கனவு கண்டால் கனவு காண்பவருக்கு சகல மங்களமும் உண்டாகும் என்கிறது ஸ்வப்னாத்தியாயம் என்னும் நூல்).ராமன் சீதையை தூக்கி அந்த யானையில் அமர வைத்தார். அவள் அங்கிருந்தபடியே சூரிய சந்திரரைத் தொட்டாள் (சூரிய சந்திரரை தொடுவது போல் கனவு காண்பவர் நாடாள்வார் என்பது நம்பிக்கை). பின்னர் ராமன் எட்டுக்காளைகள் பூட்டிய ரதத்தில் ஏறினார். பின்னர் சீதை மற்றும் லட்சுமணருடன் புஷ்பக விமானம்ஒன்றில் ஏறிச்சென்றார்.நான் ராமனையும், அழகே வடிவான சீதையையும், லட்சுமணனையும் கனவில் கண்டது என் பாக்கியம். ஏனெனில், அவர் நாராயணனின் வடிவம். முட்டாள் அரக்கிகளே! நாராயணனை வெல்லயாரால் முடியும்? நீங்கள் இவளை விட்டுவிடுங்கள், என்றாள்.அரக்கிகள் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நின்றனர்.திரிஜடை தொடர்ந்தாள். இன்னும் கேளுங்கள்! ராவணன் சிவப்பு ஆடை அணிந்து ஒரு புஷ்பக விமானத்தில் இருந்து கீழே விழுந்தான். பின்னர், ஒரு தைலத்தை குடித்து சித்தப்பிரமை பிடித்து திரிந்தான். பின்னர் மொட்டைத்தலையுடன் கருப்பு ஆடை அணிந்து கழுதைகள் பூட்டிய தேரில் தானாக சிரித்தபடியே சென்றான். பின்னர் வஸ்திரமே இல்லாமல் சேற்றில் விழுந்து மூழ்கி விட்டான். கும்பகர்ணன், ராவணனின் பிள்ளை இந்திரஜித் முதலை மீதும், கும்பகர்ணன் ஒட்டகத்தின் மீதும் தெற்கு நோக்கி பயணம் செய்தனர். (தெற்கு எமதிசை). ராவணன் ஒரு பன்றியின் மேல் திடீரென வந்தான். ஆனால், விபீஷணன் (திரிஜடையின் தந்தை) யானையின் மீதேறி ஆகாயமார்க்கத்தில் சென்றான்.இந்த அறிகுறிகளால் நிச்சயமாக ராமன் இங்கு வந்துவிடுவார். நீங்கள் இவளை விட்டுவிட்டு ஓடி விடுங்கள். அல்லது இவளிடம் சமாதானமாகப் பேசி மன்னிப்பு கேட்டு பிரார்த்தியுங்கள், என்றாள். அப்போது ஒரு பறவை இடமிருந்து வலமாக பறந்து வந்து இறக்கைகளை விரித்து ஒரு மரக்கிளையில் அமர்ந்தது. அதை சுட்டிக்காட்டியதிரிஜடை, இதோ! பாருங்கள். இந்த பறவை காட்டிய அறிகுறியால் இவளுக்கு நன்மை நடக்கப்போகிறது.ராட்சஷ இனத்துக்கு ஏற்படப்போகும் அழிவை தடுத்து நிறுத்த நீங்களும் உங்களால் ஆனதைச் செய்யுங்கள், என்றாள். பின்னர் சீதையின் அருகில் வந்து, சீதா! வருத்தம் வேண்டாம். நான் கண்ட கனவு பிரகாரம், உன் நாயகன் உன்னை மீட்பது உறுதி. நீ அலங்காரம் செய்து கொண்டு, உன் நாயகனின் வரவிற்காக காத்திரு, என்றாள். ஆனாலும், சீதை உயிரை விடவே முயற்சித்தாள். அந்த சமயத்தில் பல சுப சகுனங்கள் தோன்றின. மகாலட்சுமியான சீதை உயிர் விடுவதா என்று எண்ணிய சகுனங்கள், அந்த இக்கட்டான சமயத்தில் தங்களால் ஆன உபகாரத்தை அவளுக்குச் செய்து பெரும் பேறு பெற்றன. அவற்றால் அவளுக்குள் நம்பிக்கை பிறந்தது.கிரகண நேரத்தில், ராகுவிடம் இருந்து விடுபட்ட சந்திரனைப் போல் அவளது முகம் பிரகாசித்தது.மரத்தில் மறைந்திருந்த ஆஞ்சநேயர் அவளை சந்திரமுகி என மனதுக்குள் வர்ணித்தார். சந்திரனைப் போன்ற பிரகாசமான முகமுடையவளே சந்திரமுகி. அவளுடன் பேசி, அவளைச் சமாதானம் செய்து, ராமனின் நிலையை எடுத்துச்சொல்ல எத்தனித்தார். ராட்சஷிகள் விலகட்டுமே எனக் காத்திருந்தார்.அப்போது அவரது மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது.இவளுடன் நாம் சாதாரண மனிதனைப் போல் வார்த்தைகள் பேசுவதா? அல்லது சமஸ்கிருதத்தில் உரையாற்றுவதா?குரங்கு ரூபத்தில் சமஸ்கிருதம் பேசினால், ராவணன் தான் மாறுவேடத்தில் வந்துள்ளானோ என இவள் நம்மைச் சந்தேகிப்பாள். எனவே நம் உருவத்தைச் சுருக்கி, மானிடர் போல் பேசுவதே சிறந்ததெனதீர்மானித்தார். வார்த்தைகள் மனிதனின் வாழ்வில் முக்கிய இடம்பிடிப்பவை. அதனால் திருவள்ளுவர், தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்டவடு என்றார். நாக்கு பேசும் வார்த்தை ஒருவனைக் காப்பாற்றவும் செய்யும், அவனைக் கொன்றும் விடும். தெய்வத்தின் வாயில் இருந்து நல்ல வார்த்தைகளே வரும். மனிதனின் வாயில் இருந்து இரண்டும் கலந்து வரும். நல்லதை மட்டும் பேசினால் உயிர்கள் பிழைக்கும். அதனால் தான் குரங்காகப் பிறந்தாலும், ஆஞ்சநேயர் மனிதனைப் போல் பேச நினைத்தார். மானிடப்பிறவி மிகவும் உயர்ந்தது. இந்தப் பிறவியில் இருந்தே தெய்வநிலைக்கு உயர முடியும். ஆஞ்சநேயர் குரங்காய் பிறந்தாலும் சொல்லின் செல்வராக நன்மையையே பேசினார். அதிலும் மானிடனைப் போல் பேசினார். அதனால் இன்று தெய்வமாய் நம் முன்னால் நிற்கிறார். இதற்குள் ராட்சஷிகள் விலகி விட, சீதையின் காதில் மட்டும் கேட்பது போல், ராமனின் சரிதத்தை சொல்ல ஆரம்பித்தார். ராமனின் பெயரைக் கேட்டதும் சீதாதேவியின் உடல் பரவசத்தால் ஆடியது.
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 10. #16
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,171
  Downloads
  35
  Uploads
  38

  0 Not allowed!
  பகுதி-16


  தசரதர் என்ற மாமன்னரின் புத்திரனாய் அவதரித்தவர் ஸ்ரீராமன். அவர் பவுர்ணமி நிலா முகம் போன்ற முகமுடையவர். வில்வித்தையில் உலகிலேயே உயர்ந்தவர். பல ராட்சஷர்களை அழித்து வெற்றிவாகை சூடியவர். தந்தையின் ஒரு சொல்லுக்காக, தன் அன்பு மனைவி மற்றும் சகோதரனுடன் கானகம் சென்றவர். அவரது மனைவியை ராவணன் வஞ்சகமாக அபகரித்துச் சென்றான். ராமபிரான் அவளைக் காட்டில் தேடியலைந்த போது, சுக்ரீவன் என்றவானர மன்னரின் நட்பைப் பெற்றார். நினைத்த ரூபத்தை எடுக்கக்கூடிய தனது வீரர்களிடம் சீதாதேவி இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து வர அவர் ஆணையிட்டார். அவள் இங்கே இருக்கிறாள் என்ற செய்தியை ஸம்பாதி என்ற கழுகு அரசனின் மூலமாக அறிந்துநூறு யோஜனை தூரமுள்ள இந்தக் கடலைத் தாண்டி இங்கே வந்தான். நான் செய்த பாக்கியத்தால் அவளைப் பார்த்தும் விட்டேன், என்றார் ஆஞ்சநேயர்.தன்னைப் பற்றியும், தன் பர்த்தா பற்றியும் யாரோஒருவர் மங்களகரமான வார்த்தைகளால் பேசுகிறாரே என்று சீதாதேவிக்கு ஆச்சரியம். அவள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தாள் தெரியுமா? திரிஜடையின் கனவு பயமுறுத்தலால் பயந்து போன அரக்கிகள் உறங்கிக் கொண்டிருந்ததைப் பயன்படுத்திதற்கொலைக்கு முயன்று கொண்டிருந்தாள். தற்கொலை செய்ய அவள் எடுத்துக் கொண்ட ஆயுதம் என்ன தெரியுமா?தன்னுடைய நீண்டஜடையை! ஜானகிதேவியான சீதைக்கு கருத்து சுருண்ட நீண்ட கூந்தல் இருந்தது. நீண்டநாளாக எண்ணெய் கூட தேய்க்காவிட்டாலும் கூட அதன் தேஜஸ் மட்டும் குறையவில்லை. அந்தக் கூந்தலைகழுத்தைச் சுற்றி இறுக்கி, தன்னை பலி கொடுக்க #முடிவு செய்திருந்த #நேரத்தில் இப்படி #மதுரமானவார்த்தைகள் கேட்டு, #யார் பேசுவது? எங்கிருந்து சத்தம் வருகிறது? என சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒன்றும் தெரியவில்லை. மீண்டும் குரல்வந்த திசை நோக்கி பார்த்தபோது, ஏதோ ஒரு உருவம் தெரிந்தது. அது மிகுந்த #பிரகாசமுடையதாகக் #காணப்பட்டது. இப்போது பேசியவர் #என் நாதனின் பெயரை #உச்சரித்ததால்,
  #என் பிராணன் #தப்பியது. தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருந்து அவரது குரலே என்னை #மீட்டது என்று எண்ணிக்கொண்டாள் சீதா.ஆஞ்சநேயர், வாயுவின் மைந்தனாக ஏன் பிறந்தார் தெரியுமா?#காற்றிலுள்ள
  #ஒருவாயு தான் உலக #உயிர்கள்பிராணனுடன்
  #திகழ காரணமாக இருக்கிறது. அதனால் தான் அதை #பிராணவாயு என்கிறார்கள். சீதாதேவி பிராணனைவிட இருந்தாள். அந்த சமயத்தில் வாயுமைந்தன் அருகில் வந்தார். #பிராணவாயு #கிடைத்தால் எப்படி உயிர்கள் #வாழுமோ, அதுபோல் வாயுவின் மைந்தன் #மரணத்துக்கு தயாரான #அவளை #வாழவைத்தான். #சீதாவை #வாழவைத்ததால் #ராமனை அவர் #வாழ #வைத்திருக்கிறார். ராமன் இல்லாவிட்டால் இந்த #உலகமேஇல்லை. ஆக, சகல #ஜீவராசிகளையும் அவர் #பாதுகாத்திருக்கிறார். தெய்வம் உலக உயிர்களை வாழ வைக்கும். அந்த #தெய்வத்தையே #வாழ #வைத்தவர் ஆஞ்சநேயர். அதனால் தான் அவர் வாயுமைந்தனாகப் பிறந்தார். உயிரே போகுமளவுக்கு இடைஞ்சல் வந்தாலும், அதைப்போக்கி நம்மை வாழ வைப்பார்அந்த சிரஞ்சீவி!என் பர்த்தா இங்கே வரப்போகிறார் என நினைக்கிறேன். அதற்கு முன்னதாக நானிருக்கும் இடத்தை அறிய இவர் தூதுவனாக வந்திருக்கிறார் என மகிழ்ச்சி பொங்கப் பார்த்தாள். அதே நேரம் சந்தேகமும் அவளைப் பிடித்துக் கொண்டது.நிஜத்திலேயே இவன் ராமதூதன் தானா? ஒருவேளை மாயக்காரனோ? ஒருவேளை நான் கனவு காண்கிறேனோ? கனவில் குரங்கைக் கண்டால் நம் சொந்தங்களுக்கு தீங்கு வருமென்று சாஸ்திரம் சொல்கிறதே! என் தந்தைக்கோ, ராமலட்சுமணர்களுக்கோ கேடு வந்துவிடக் கூடாதே! ஆனால், நிச்சயமாக இது கனவல்ல. நிம்மதியில்லாதவர்களுக்கு எப்படி உறக்கம் வரும்? நான் தூங்கி தான் பலநாளாகிறதே. எனவே, நிச்சயம் இது கனவல்ல. ஒருவேளை நாமாகவே கற்பனை செய்து கொள்கிறோமோ! கற்பனைக்கு உருவம் கிடையாது. ஆனால், இங்கே குரங்கு முகத்துடன் ஒருவன் அமர்ந்திருக்கிறானே! இவனது உருவஅமைப்பு, பேச்சு இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால், நிச்சயமாக இவன் நமக்கு சகாயம் செய்யவே வந்திருக்கிறான். பிரகஸ்பதி, இந்திரன், பிரம்மா, அக்னி ஆகிய தெய்வங்கள் நான் நினைப்பதை உறுதியாக்கட்டும் என்று அவர்களைப் பிரார்த்தனை செய்தாள்.இன்று குரு பெயர்ச்சி. ஆனானப்பட்ட சீதாதேவியே, பிரகஸ்பதியான குருவிடம் தனது கஷ்டங்கள் நீங்க பிரார்த்தனை செய்திருக்கிறாள். சாதாரண ஜென்மங் களான நாம் எம்மாத்திரம்? இந்த இனியநாளில்,இந்த அத்தியா யத்தைப் படிக்கும்பாக்கியம் நமக்கு கிடைத்தது பெரும் பாக்கியம். நாம் ராசிபலன்களைப் படித்து மனம் குழம்பிப் போயிருப்போம். சீதாதேவி குருவிடம் வேண்டிக்கொண்டது போல, நாமும் நம் கஷ்டம் நீங்க அவரிடம் மனதார வேண்டிக்கொண்டால், கெடுபலன்களெல்லாம் தீர்ந்து போகும். ஆஞ்சநேயர் இப்போது மரத்தில் இருந்து கீழே இறங்கினார். சீதாவின் முன்னால் வந்து நின்றார். தலைமேல் கை கூப்பி, சாஷ்டாங்கமாய் விழுந்துவணங்கினார். தாயே! தாமரைக் கண்களும் பிரகாசமான முகமும் கொண்ட தாங்கள் யார்? தாங்கள் சோகமே உருவாக கண்ணீர் வடிக்க காரணம் என்ன? நீங்கள் கிழிந்த ஆடையுடன் இருப்பது சற்றும் பொருத்தமாக இல்லையே! வசிஷ்டரைப்பிரிந்து சென்ற அருந்ததி போலவும், கணவரையோ, குழந்தைகளையோ,உடன்பிறந்தவர்களையோ இழந்து வருந்துபவர்களைப் போலவும் தெரிகிறதே! தங்கள் கதையை நான் தெரிந்து கொள்ளலாமா? என்றார். அவரது பணிவான வார்த்தைகள் கேட்டு மகிழ்ந்த சீதா, ராமருக்கு வாழ்க்கைப்பட்டது முதல் அன்று வரை நடந்த சகலத்தையும் அவரிடம் விளக்கமாக எடுத்துரைத்தாள்.பொதுவாக பெண்கள் தங்கள் கணவரின் பெருமை பற்றி தம்பட்டம் அடிக்க வேண்டுமென்றால், சாப்பாடு, தூக்கம், துக்கம் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். தன் பர்த்தாவைப் பற்றி பேசுவார்கள்...பேசுவார்கள்.....பேசிக் கொண்டே இருப்பார்கள். இப்போது, நம் சீதாவுக்கு ஒரு ஆஞ்சநேயர் கிடைத்துவிட்டார். விடுவாளா அவள்...தன் நாயகனின் பெருமையை ஒரு இடத்தில் மிகமிக உச்சமாக வர்ணித்தாள். அது என்ன?
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 11. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 12. #17
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,171
  Downloads
  35
  Uploads
  38

  0 Not allowed!
  பகுதி-17


  வானரனே! மக்களுக்கு ஏதாவது கஷ்டமும், பிரச்னையும் ஏற்படும் சமயத்தில் ராமனுக்கு உற்சாகமும், சந்தோஷமும் அதிகரிக்கும், என்பதே அந்த வார்த்தை.இதைப்படித்தவுடன் சற்று அதிரத்தோன்றும். ஏனெனில், இன்றைய உலகத்தின் மனநிலை அப்படிப்பட்டது. பக்கத்து வீட்டில் நன்றாக இருந்த ஒருவருக்கு கஷ்டம் வந்துவிட்டால் அடுத்த வீட்டுக்காரனுக்கு சந்தோஷம் வந்துவிடுகிறது. மாட்டிக்கிட்டானா, இவ்வளவுநாளும் என்ன கர்வமா இருந்தான்! இப்போ என்ன செய்யப்போறான் என்று கைகொட்டிசிரிப்பவர்களே ஏராளம். பிறர் துன்பத்தில் இவர்கள் சந்தோஷம் காண்கிறார்கள்.ஆனால், ராமபிரான் பிறருக்கு துன்பம் வந்து விட்டால், அவர்களுக்கு #உதவி செய்ய சரியான #சந்தர்ப்பம் வந்துவிட்டதே என்று சந்தோஷப்படுவாராம். தன் தந்தைக்கு கைகேயியால் கஷ்டம் வந்தபோது, இவர் #ராஜ்யமேவேண் டாம் என்று தம்பியிடம் அரசாங்கத்தைக் கொடுத்து விட்டு காட்டிற்கும் போய்விட்டார். எவ்வளவு பெரிய மனம் இதற்கு வேண்டும்! #தந்தையின் #கஷ்டத்தைப் போக்க தன் #சுகவாழ்வையே #இழந்தவர் அவர். இந்த நிகழ்ச்சியை ஆஞ்சநேயரிடம் வெளிப்படுத்தி தன் கணவரைப் பற்றி உயர்த்திச் சொன்னாள் அன்னைசீதா.#பெண்கள் எக்காரணம் கொண்டும் தன் #கணவரை #உதாசீனப்படுத்தக்கூடாது. அதுபெரிய #பாவம். ராமன் சீதாவுக்கு சுகமான வாழ்வைத் தந்தார். ஒரு கட்டத்தில் அதுபறிபோனது. ஆனால், சீதா தன்கணவனே பெரிதெனக் கருதி அவருடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். ராமன் இருக்கும் இடமேசீதைக்கு அயோத்தி என்று காட்டையே தன் வீடாகக் கொண்டாள் அந்த மகாதேவி.
  #கணவனும்மனைவியும் #ஒற்றுமை பேண வேண்டும். இருவரும் #ஈருடல்ஓருயிர்என #வாழ வேண்டும். #சுந்தரகாண்டம் உணர்த்தும் #மிகப்பெரியதத்துவம் இது. #பிரிந்திருக்கும்தம்பதியர் #இதைப்படித்த பிறகாவது தங்கள் #பிணக்குகளை
  #கைவிட வேண்டும். இருதரப்புக்கும் #விட்டுக்கொடுக்கும் #மனப்பான்மை_நிறையவே #வேண்டும்.சீதாதேவி தங்கள் வரலாற்றைச் சொல்லச் சொல்ல ஆஞ்சநேயரும் அவள் அருகில் நெருங்கி வந்துகொண்டே இருந்தார். சீதாவுக்கு இப்போது சந்தேகம்.இவன் அருகில் நெருங்கி வருவதைப்பார்த்தால் ஒருவேளை ராவணன் அனுப்பிய ஆளாக இருப்பானோ என்று. சற்று விலகி நின்று, இவனிடம் போய் நம்முடைய கதையைச் சொல்லிவிட்டோமே!
  #முன்பின்தெரியாதவர்களிடம் #வீட்டுப்பிரச்னையை #சொல்லியிருக்கக் கூடாதே என்ற #மனோபாவம் வேறு அவளை #வருத்தியது. அவளது முகக்குறிப்பை உணர்ந்து கொண்ட ஆஞ்சநேயர், #அன்னையே! கலக்கம் வேண்டாம், என்றவர் ஸ்ரீராமனின் நற்குணங்களையெல்லாம் பட்டியலிட்டார். அதைக் கேட்டு உருகிப்போனாள் சீதா. பின்னர் தான் யார் என்பதை அறிமுகப்படுத்திக் கொண்டார்.தாயே! என் பெயர் அனுமான். நீங்கள் சந்தேகப்படுவது போல் ராவணன் அல்ல. நான் #ராமதூதன் என்பதை #நம்புங்கள், என்று பணிவாகவும், கனிவாகவும் சொன்னார்.பின்னர் சீதா அனுமானிடம், அனுமானே! உனக்கும் என் கணவருக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என்று கேட்க அவர் அந்த வரலாற்றைச் சொன்னார். பின்னர் சீதையைப் பிரிந்த ராமனின் நிலை பற்றி உருக்கமாக எடுத்துச் சொன்னார்.அம்மா! ராவணன் தங்களை அபகரித்த பிறகு, #ஸ்ரீராமன்துக்கத்தால் #வாடுகிறார். தாங்கள் ராவணனால் கடத்தப்பட்ட போது கழற்றி எறிந்த ஆபரணங்களைக்கண்டெடுத்து சுக்ரீவ னிடம் #ஒப்படைத்தேன். அவர் அவற்றை
  #ராமனிடம்கொடுத்தார். அதைப் பார்த்து அவர் #புலம்பியதை நினைத்தால் சோகம் நெஞ்சை அடைக்கிறது. தங்களை பார்க்காமல்வேதனை யால் தவிக்கிறார். நித்திரையின்றி புலம்புகிறார். மரங்களையும், செடிகளையும் பார்த்து நீங்கள் அவளைக் கண்டீர்களா என்று கேட்கும்போது ஏற்படும் துக்கத்தை என்ன #வார்த்தைகளால் வடிப்பேன்! ஆயினும், இனி உங்களுக்கு கவலை வேண்டாம். இந்த ராவணனை அழித்து உங்களை அவர் மீட்டுச்செல்வார், என்றார்.இத்தனையும் கேட்டபிறகு அனுமான் ராமனின் தூதர் என்பதை உறுதியாக நம்பினாள் சீதா.இந்த நம்பிக்கையை அதிகப்படுத்தும் வகையில், தாயே! ஸ்ரீராமபிரான் தங்களுக்கு #அடையாளம் காட்டும் வகையில் ஒரு #மோதிரத்தை என்னிடம் #தந்தார். #இதோஅந்தக் #கணையாழி, என்று அவளிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் கிரகணத்தில் இருந்து விடுபட்ட சந்திரன் போல்அவளது முகம் பிரகாசித்தது. இவன் உயிர்களை வாழ வைப்பவன் என்று முன்னர் கருதினோமோ அது நூற்றுக்கு நூறு உண்மை என்று #வாய்விட்டுச் #சொன்னாள். அந்த சந்தோஷத்துடன், வானரனே! இந்த இலங்கைக்குள் நுழைவது என்பது நடக்காத காரியம். ஆனால், மகாபுத்திமானான நீ இங்கே நுழைந்ததில் இருந்தே உன் புத்தியும், சக்தியும், பலமும் அளவிடற்கரியது என்று சொல்வேன். அது மட்டுமா? நூறு யோஜனை தூரமுள்ள கடலை பசுவின் குளம்படியைப் போல மிகச்சாதாரணமாக தாண்டி வந்தாயே!அந்த பராக்கிரமத்தை என்ன சொல்வது? என்று ஆஞ்சநேயரைப் புகழ்ந்தவள், ராம லட்சுமணர்#நலம் பற்றி விசாரித்தாள்.என் ராமன் எப்படியிருக்கிறார்? என் கொழுந்தன் லட்சுமணன் எப்படியிருக்கிறான்? ராகவன் நலமாயிருந்தால் என்னைக் கடத்திய குற்றத்திற்காக இதற்குள் இந்த பூமியை எரித்திருப்பாரே? அவருக்கு ஒருவேளை ஏதாவது ஆகி விட்டதா? என்னைப் பிரிந்த வருத்தத்தில் இளைத்து விட்டாரா? சக்தியிழந்து போனாரா? இப்போதும்
  #நல்ல_நண்பர்களைத் தான் தேர்ந்தெடுக்கிறாரா? என்று நிறுத்தினாள். மனைவி போய்விட்டாள். அதிலும் இன்னொருவன் தூக்கிக்கொண்டு போய்விட்டான். அவள் சுத்தமாக இருப்பாள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? நீ இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளப்பா என்று தானே #சாதாரண உலகம் தன் நண்பர்களுக்கு #கற்றுத்தரும்!அப்படிப்பட்ட கெட்ட போதனை தரும் நண்பர்களாக இல்லாமல், ராமனுக்கு #உத்தம நண்பர்கள் கிடைத்துள்ளார்களா என்பதே சீதாவின் கவலை.
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 13. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 14. #18
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,171
  Downloads
  35
  Uploads
  38

  0 Not allowed!
  பகுதி-18
  நட்பு என்பது வாழ்வில் மிக முக்கியமான ஒன்று. மகளை ஒருவனுக்கு திருமணம் முடித்துக் கொடுப்பவர், வேலை, குடும்பப் பின்னணி இவையெல்லாம் நன்றாக இருந் தாலும் கூட, மிகமுக்கியமாக விசாரிப்பது அவனது நண்பர்களைப் பற்றித்தான். யாருடன் சேர்கிறானோ, அவனைப் பொறுத்தே ஒருவனது குணநலன் அமைகிறது. அதனால், ராமனின் நட்பைப் பற்றி அக்கறையுடன் விசாரித்தாள் சீதா.அடுத்து, அவளே சொன்னாள்.என் ராமனைப் பற்றி எனக்குத் தெரியும். அவரிடம் அவரது அன்னை கவுசல்யாமிகுந்த பற்று வைத்திருந்தார். தந்தை தசரதர்அவரைப் பிரிந்ததுக்கத்தில் உயிரையே விட்டார். மற்ற உறவினர்களும் அவர் மீது கொண்ட அன்பிற்கு குறைவில்லை. ஆனாலும், இவர்களையெல்லாம் விட அவர் என்மீதே அதிக பாசம் வைத்திருந்தார், என்கிறாள்.மகனுக்கு திருமணம் முடித்ததும், மருமகளும், மகனும் சந்தோஷமாக இருக்கப் பொறுக்காத மாமியார்கள் இந்த வரிகளை அவசியம் படிக்கவேண்டும். ஒரு பெண் தன் பெற்றவர்களை விட்டுவிட்டு புதிய இடத்துக்கு வருகிறாள். கணவனையே நண்பனாக, உறவினனாக, தாயாக, தந்தையாக ஏற்றுக் கொள்கிறாள். அவனைச் சார்ந்தவர்களை தன் பந்துக்களாக உரிமை கொண்டாடுகிறாள். இப்படி எல்லார் மீதும்பிரியமாக இருக்கும்
  #மருமகள், தன் மகனோடு #ஐக்கியமாகி தங்களை குடும்பத்தை விட்டு #விரட்டிவிடுவாளோ என பயந்தே #பல_மாமியார்கள் #கொடுமைகளை
  #அரங்கேற்றி #விடுகிறார்கள்.சீதாதேவியே தன்மாமியார், மாமனார், புகுந்த வீட்டுஉறவை விட தன் மீது தன் கணவன் பாசம் வைக்க வேண்டும் என்றுதானே எதிர்பார்க்கிறாள்! சுந்தரகாண்டத்தை மேலோட்டமாக படிக்காமல் #ஆழ்ந்த!-உள்ளர்த்தத்தோடு படிக்க வேண்டும். அதிலுள்ள கருத்துக்களை சிந்திக்க வேண்டும். அவ்வாறு செய்தால் #குடும்பஒற்றுமைபலப்படும். என்றும் #சிரிப்பும் #கும்மாளமுமாக வாழ்க்கை கழியும்.ஆஞ்சநேயர், இப்போது சீதாதேவியின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.அம்மா! தங்கள் கணவர் தாங்கள் #இருக்குமிடத்தை #அறியவில்லை. இனி, நான் போய் சொன்னதும், அவர் வானரப்படைகளுடன் வந்து தங்களை #மீட்டுச்-செல்வார். அவரால் இந்தக் கடலைத் தாண்டி வர முடியுமா என்ற சந்தேகமே தங்களுக்கு வேண்டாம். அவர் பராக்கிரமசாலி. அவர் நல்ல உணவு வகைகளை சாப்பிடுவதில்லை. பழம், கிழங்கு முதலானவையே அவரது உணவு. காட்டிலே வசிக்கும் பூச்சிகள் அவரைக் கடிக்கும் உணர்வு கூட இல்லாமல் சோகமே வடிவாக இருக்கிறார். தூக்கம் மிகவும் குறைந்து விட்டது. தூங்கினாலும்வாய் சீதா என்றே கூறுகிறது. இதுகேட்ட சீதா மிகவும் வருத்தப்பட்டாள்.ஆஞ்சநேயா! விதிமிகவும் சக்தி வாய்ந்தது. அயோத்திக்கு மன்னனாக வேண்டிய சகல ஐஸ்வர்யங்களும் பொருந்திய ராமனாக இருந்தால் என்ன! அவரது மனைவியான நானாக இருந்தால் என்ன! சாதாரண பிரஜையாக இருந்தால் என்ன! #விதிக்கு_தப்புபவர்
  #யாரும்_கிடையாது. அதையே நாங்கள் இப்போது #அனுபவிக்கிறோம், என்றாள்.பாருங்களேன்! #ராமனாக -பூமிக்கு -வந்தவர் சாட்சாத் #மகாவிஷ்ணு. அவரைச் சுமந்த
  #ஆதிசேஷன் -லட்சுமணன். #லட்சுமி -தாயாரே- -சீதா. #தெய்வங்களாக #இருந்தாலும் கூட,
  #மானிடப் பிறப்பெடுத்து #அவஸ்தைப்பட வேண்டும் என்ற #விதியிருந்தால் அதை #மாற்ற யாராலும் #முடியாது என்பது இதன் உட்பொருள். அதனால், நமக்கு கஷ்டம் வரும்போது கலங்கக்கூடாது. அது என்ன செய்து விடும் என்று மோதிப்பார்க்க வேண்டும். கலியுகம் என்றாலும் கூட, இங்கும் கூட ஒரு சில #நல்லவர்கள் உண்டு. அவர்கள் #ஆஞ்சநேயரைப் போல் நமக்கு #துணை வருவார்கள். என்ன நடந்தால் என்ன!ஆண்டவனிடம் பாரத்தைப் போட்டு விட்டு நம் வழியில் போய்க்கொண்டிருக்க வேண்டும்.சீதா தொடர்ந்தாள்.ஆஞ்சநேயா! நீ ராமனிடம் செல். ராவணன் என்னை அவனது மனைவியாக்கிக் கொள்ள ஒரு வருடம் அவகாசம் தந்திருக்கிறான்.பத்து மாதங்கள் முடிந்து விட்டன. இன்னும் இரண்டு மாதத்திற்குள் என் கணவர் இங்கு வந்து என்னை அழைத்துச் செல்லா விட்டால், #நான்உயிரைவிடுவேன் என அவரிடம் சொல்லிவிடு. ராவணனின் சகோதரன் விபீஷணன், என்னை விடுவிக்கும்படி அண்ணனுக்கு புத்திமதி சொல்லியிருக்கிறான். அதையும் அவன் லட்சியம் செய்யவில்லை. விபீஷணனின் மனைவி சுரஸை, இந்தத் தகவலை தன் மூத்தமகள் அனலை மூலமாக எனக்கு சொல்லியனுப்பினாள். எனவே, நான் ராவணனால் சிரமப்படப் போவது நிச்சயம். அதற்குள் அவர் வந்து என்னை மீட்டுவிடுவார் என்றே கருதுகிறேன், எனச்சொல்லி கண்ணீர் வடித்தாள். ஆஞ்சநேயரும்மனம் கலங்கி, தாயே! கவலையை விடுங்கள். தங்களை மீட்டுச் செல்ல ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தான் வரவேண்டும் என்றுஏன் நினைக்கிறீர்கள்? என் முதுகில் அமர்ந்து கொண்டால் கணநேரத்தில், நான் தங்களை அவரிடம் கொண்டு சேர்த்து விட மாட்டேனா? என்றார்.இதைக் கேட்டுசீதைக்கு கோபம் வந்துவிட்டது. நீ குரங்கு என்பதையும், உன் குரங்கு புத்தியையும் காட்டிவிட்டாய் அல்லவா? என்னை நீ கிஷ்கிந்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறுவது நகைப்பையே வரவழைக்கிறது. மிகச்சிறியவனான நீ என்னை எப்படி அங்கே கொண்டு சேர்க்க முடியும், என்று கேட்டாள். ஆஞ்சநேயருக்கு அவமானமாகப் போய்விட்டது.என்னை ஒருவர் கூட இப்படி அவமானமாகப் பேசியதும் இல்லை, என் சக்தியை சந்தேகப்பட்டவரும் இல்லை என்று மனதில் நினைத்தபடியே, பொறுமையுடன், தாயே! என்னை நீங்கள் சாதாரண குள்ளக்குரங்கு என்று நினைக்கிறீர்கள். இதோ பாருங்கள்! என்றார். அப்போது அவரது #உருவம் #வானத்தையும், #பூமியையும் #அடைத்த வகையில் மிக உயரமானது. ஆஞ்சநேயரின் அந்த விஸ்வரூபம் கண்டு சீதா ஆச்சரியப்பட்ட போது, அன்னையே! உங்களை இந்த இலங்கை மண்ணோடு பெயர்த்துக் கொண்டு செல்லும் ஆற்றல் கூட என்னிடம் உண்டு. என்னை சந்தேகிக்காதீர்கள், என்றார். சீதா உண்மையிலேயே ஆச்சரியப்பட்டு போனாள். அவசரப்பட்டு ஆஞ்சநேயனை திட்டிவிட்டோமே என்று மனதுக்குள் சலித்தாள்.
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 15. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 16. #19
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,171
  Downloads
  35
  Uploads
  38

  0 Not allowed!
  பகுதி-19


  பின்னர் அவனுக்கு ஆறுதல் வரும் வகையில் பேசினாள்.ஆஞ்சநேயா! உன் தேஜஸ், பராக்கிரமம் பற்றி நான் அறிவேன். உன்னோடு நான் வந்தேன் என்றால், நீ வேகமாக பறந்து செல்லும் போது, காற்றின் வேகத்தால் நான்கடலுக்குள் விழுந்து விடுவேன். அது மட்டுமல்ல! நீ என்னைக் கொண்டுசென்றதும், ராவணன் நிச்சயமாக ராட்சஷர்களை ஏவி விடுவான். அப்போது, நீ அவர்களுடன் போரிடுவாயா? உன்னைக் காப்பாற்ற முயற்சிப்பாயா? என்னைக் காப்பாற்ற முயற்சிப்பாயா? அந்த முயற்சியில் உன் உயிருக்கு ஆபத்து நேர்ந்து விடும். இந்த ராட்சஷர்களையெல்லாம் கூட ஒருவேளை நீ ஜெயித்தும் விடலாம். என்னையும் காப்பாற்றி விடலாம். ஆனால்,ராவணனை எதிர்க்க தைரியமில்லாத ராமன், ஒரு குரங்கை அனுப்பி அவளை மீட்டு வரச் செய்தார் என்ற #பழிச்சொல் என் #பர்த்தாவுக்கு #ஏற்படுமே! அது மட்டுமல்ல! என் கணவரைத் தவிர பிற #யாரையும் தொடுவது #சரியல்ல. ராவணன் உன்னைத்தொட்டு தூக்கி வரவில்லையா என நீ கேட்கலாம். பலமற்ற பெண்களைபலமுள்ள ஆண்கள்தூக்கிச் செல்லும், பெண்கள் தங்கள்பலம் கொண்ட மட்டும் தடுத்துப் பார்க்கலாம். முடியாத பட்சத்தில் என்ன செய்வது? அவர்களின் பிடிக்குள் மாட்டத்தான் வேண்டியிருக்கிறது. எனவே, அவனால் கடத்தப்பட்ட என்னை #என் கணவர் வந்து #மீட்டுச்செல்வதே_சிறந்தது. அதற்கு ஏற்பாடுசெய். அவர் லட்சுமணனுடன் இங்கு வந்துவிட்டால் அரக்க குலத்தை நிச்சயம் வேரறுத்து விடுவார். #ராவணன்-.மாள்வான். இதில் சந்தேகமென்ன! என்று பெருமிதம் பொங்கச் சொன்னாள். ஆனாலும், அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது.தொடர்ந்து,மாருதி! இந்த உலகத்தில்தாய்மார்கள் தங்களைக் காப்பதற்காக ஆண் மக்களைப் பெறுகிறார்கள்.ஆனால், என் மாமியார் அப்படிப்பட்டவள் அல்ல. அவள் ஸ்ரீராமனை உலகக்ஷமம் கருதி பெற்றாள். அதனால் தான் அவர் ராஜ்யம் கிடைத்தும் ஆள மறுத்து வெளியேறினார். அவரை நான் எப்போதும் நினைத்துக் கொண்டுள்ளதாகவும், அவரை #சாஷ்டாங்கமாக #வணங்கியதாகவும்-சொல். உலகத்தில் சிரமங்களை அனுபவிப்போர் அவரை சாஷ்டாங்கமாக பணிந்து சரணடைந்து விட்டால், அவர்களை அவர் காப்பாற்றியே தீருவார், என்றாள். அடுத்து தன் கொழுந்தன் லட்சுமணன் பற்றி பேச ஆரம்பித்தாள்.அவன் #வல்லவன், #நல்லவன். என் கணவர் இட்ட #கட்டளையை சற்றும் மறுக்காமல் #செய்யக்கூடியவன். என் #ஆசிர்வாதம்-அவனுக்கு #என்றும்-உண்டு. ஆஞ்சநேயா! நான் குறிப்பிட்ட காலத்துக்குள் ராம லட்சுமணர் இங்கு வராவிட்டால், நான் #பிழைத்திருக்க மாட்டேன் என்பதை உறுதியாகச் சொல்லி விடு, என்று சொல்லி, தனது புடவையில் முடிந்து வைத்திருந்த #சூடாமணியை #எடுத்துக் கொடுத்தாள்.அதைப் பெற்றுக் கொண்ட ஆஞ்சநேயர் அவளுக்கு மேலும் ஆறுதல் வார்த்தைகள் கூறி, ரகுநாதன் ராமனுடன் விரைவில் வருவேன் என்று #உறுதியளித்தார். கிஷ்கிந்தைக்கு திரும்பிச் செல்ல அனுமதி கேட்டார். அவளுக்கோ அவருக்கு அனுமதியளிக்க மனம் வரவில்லை.ஆஞ்சநேயா! உனக்கு களைப்பாக இருந்தால் ஒன்றிரண்டு நாள் இங்கேயே தங்கிப் போயேன். நீஇங்கிருந்தால் எனக்கும் ஆறுதலாக இருக்கும். நீ வரும் முன்பு மிகுந்த சோகத்தில் இருந்தேன். உன்னைப் பார்த்ததும்என் துக்கத்தை மறந்து விட்டேன். நீ போய் விட்டால், முன்பை விட என்னைத் துக்கம் வாட்டுமே! சரி போகட்டும்! ஒரு சந்தேகம்! இந்தக்கடலைத் தாண்ட வாயுவும், நீயும், கருடனும் மட்டுமே தகுதியுள்ளவர்கள். என் நாதனும், லட்சுமணனும் எப்படி இங்கு வருவார்கள்? ஆனால், உன் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உன்னால் எதையும் சாதிக்க முடியும். அவர்களை இங்கே கூட்டி வர வேண்டியது உன் பொறுப்பு, என்றாள். உடனே தன்னடக்கத்துடன் ஆஞ்சநேயர் என்ன சொன்னார் தெரியுமா? அதைப் படிப்பதற்கு முன் உங்களுடைய அலுவலகம், வீடு ஆகியவற்றை மனக்கண் முன் கொண்டு வாருங்கள். சிலர் அலுவலகங்களில், தங்களால் மட்டுமே எல்லாம் நடக்கிறது என பெருமையடித்துக் கொள்வார்கள். அனைத்தும் அறிந்த மேதாவி களாகக் காட்டிக் கொள்வார்கள். மற்றவர்களை மட்டம் தட்டுவதில் சிலருக்கு அலாதி இன்பம்.வீட்டை எடுத்துக் கொண்டால் ஒரு குடும்பத்தலைவர், தன் சம்பாத்தியம் இல்லாவிட்டால் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிடும் என பெருமையடித்துக் கொள்வார். ஆனால், எந்த சாதனையையும் படைக்கத் தகுதியுள்ள ஆஞ்சநேயர் என்ன சொன்னார் தெரியுமா? அம்மா!
  #எங்கள் தலைவர் #சுக்ரீவன் #அளவற்றபராக்கிரமம் கொண்டவர். அவரைச் சார்ந்துள்ள வீரர்கள் #எல்லோருமே-என்னை #மிஞ்சிய-பலசாலிகள். எனக்கு #குறைந்தவர்கள் அங்கு #யாருமில்லை. அதனால், அங்கிருந்து இங்கே வந்து சேர்வதில் எந்த #தடையும் #இராது. இதில் சந்தேகமே தங்களுக்கு வேண்டாம். நிச்சயம் #ராமன்_எங்களுடன் #வருவார். ராவணனைக் கொல்வார். நாங்கள் இலங்கை சமுத்திரத்தை தாண்டுவோம். நீங்கள் துக்க சமுத்திரத்தை தாண்டுவீர்கள், என்றார்.சீதா மிகவும் சந்தோஷப்பட்டாள்.ஆஞ்சநேயனே! பயிர் பாதி விளைந்து பலனைக் கொடுக்கும் சமயத்தில், மழையில்லாமல் போனால் பயிர் வாடும். அப்போது தெய்வ அனுக்கிரஹத்தால் மழை பெய்தால் பயிர் எப்படி தழைக்குமோ அந்த நிலைமையில் நான் இருக்கிறேன். நான் ராமபிரானுடன் சுகவாழ்வு நடத்தினேன். பின்னர் அவரைப்பிரிந்து உயிரை விட இருந்த சமயத்தில் நீ வந்து காப்பாற்றினாய். இப்போது என்னிடம் இருப்பது என் நாதன் எனக்களித்த சூடாமணி மட்டும் தான். அதைப் பார்க்கும் போதெல்லாம் அவர் முகம் அதில் தெரியும். இப்போது, அதையும், என்னை நீ பார்த்த அடையாளத்திற்காக கொடுத்து விட்டேன். இப்போது என்னிடம் எதுவுமே இல்லை. என் ராமன் இங்கு வரும் நாள் மட்டுமே எனக்கு நம்பிக்கையூட்டும் நாள், என்று சொல்லி அழுதாள்.மாருதி அவளை மீண்டும் தேற்றி புறப்படத் தயாரானார். அவரது முகத்தில் வெற்றியைக் குறிக்கும் விதத்தில் ஜெயலட்சுமி குடி கொண்டாள்.
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 17. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 18. #20
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,171
  Downloads
  35
  Uploads
  38

  0 Not allowed!
  பகுதி-20


  ஆஞ்சநேயர் கிஷ்கிந்தையில் இருந்து கிளம்பி, இலங்கை சென்று, சீதையைச் சந்தித்து, அசோகவனத்தை அழித்து, ராவணன் முன்னால் கால் மேல் கால் போட்டு அமர்ந்து பேசி, இலங்கையின் பெரும்பகுதியை எரித்து, ராமனிடம் சீதை உயிருடன் இருக்கிறாள் என்ற நல்ல செய்தி சொல்லி அவருக்கு #உயிரூட்டினார் என்ற அளவிலான பகுதி என்பதை மட்டும் நாம் அறிந்து கொண்டால் போதாது. இந்த #காண்டத்தைப் படித்தால், #இறக்கும் நிலையில் #உள்ளவர்களே
  #பிழைத்துக் #கொள்வார்களாமே,
  #பிரிந்த தம்பதியர்
  ஒன்று #சேர்வார்களாமே,
  என்னவெல்லாமோ #அதிசயங்கள் நிகழுமாமே என்று பிறர் சொல்லக் #கேட்கிறோம். மேலோட்டமாக #கடமைக்கு-படித்தால்,
  #அந்தப் பயன்கள்
  #நமக்குகிடைக்குமா என்பது சந்தேகமே. #சுந்தரகாண்டத்தை #ஆழ்ந்துபடிக்க_வேண்டும். ஒவ்வொரு வரிக்கும் நமக்கு நாமே வியாக்கியானம் செய்து கொள்ள வேண்டும். சுந்தரகாண்டத்தை முழுமையாகப்படித்து, அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்ன என்று சிந்தனையைப் படரவிட்டால், குறைந்தபட்சம் #ஒருஆண்டைத்தாண்டினாலும் #ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு அதில் வாழ்க்கைக்கு ஒளியூட்டும், நம்பிக்கையூட்டும் சம்பவங்கள் அடங்கிக் கிடக்கின்றன.
  #ஆஞ்சநேயர்கிளம்பிவிட்டார். அப்போது, அவரது மனதில் ஒரு எண்ணம்.சுக்ரீவன் கொடுத்த வேலையைச் செய்தாயிற்று. சீதையைக் #கண்டுபிடித்தாயிற்று. அடையாளத்துக்கு #சூடாமணியை #வாங்கியாயிற்று. இலங்கையைச் சுற்றிப்பார்த்து நகர அமைப்பைத் தெரிந்தாயிற்று. ஆனால், இந்த ராட்சஷப் பதர்கள் மிகுந்த சக்தி வாய்ந்தவர்கள் என்கிறார்களே. இவர்களது பலத்தை சோதித்து பார்க்க வேண்டுமே. எல்லாவற்றிற்கும் மேலாக ராவணனின் இருப்பிடத்தை பார்த்த நான், அவனது #பராக்கிரமத்தை அறிந்து #போகவேண்டுமே. சரி..அவனுடைய பராக்கிரமத்தை அறிய வேண்டுமானால், அவனுடன் இப்போதே #போரிட்டாக #வேண்டும். அவன் ஒன்றும் சாதாரணமாக வெளியே வருபவனல்ல. தன் #கைத்தடிகளைத் தான் என் மீது #ஏவுவான்.அவர்கள் என்னுடன் போர் செய்வார்கள். போர் என்று வந்துவிட்டால் #வெற்றி #தோல்வி யாருக்கு என்பது #உறுதியில்லை என்று பெரியவர்களெல்லாம் சொல்கிறார்கள். அது நிஜமும் கூட.ஒருவேளை அவர்கள் என்னை விட வீரமுள்ளவர்களாக இருந்தால் நான் தோற்றுப்போவேன். பின்னர், இங்கே சீதை இருக்கும் விஷயம் ராமனுக்கு தெரியாமலே போய்விடும். என்ன செய்யலாம்? என்று தீவிரமாக யோசித்தார்.முடிவில், போரில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான். ஆனால், பலசாலிக்கு எப்போதுமே வெற்றி உறுதி என்பதும் போர் சாஸ்திரம் சொல்வது தானே! நான் ஒப்பற்ற வீரமுள்ளவன் என்று நம்புகிறேன்.அதனால் எனக்கு தோல்வி என்பதே கிடையாது. எனவே, இந்த ராட்சஷர்களுடன் போரிடுவதில் தப்பே இல்லை என்று முடிவெடுத்தார். ஆஞ்சநேயர் இப்படி எண்ணியதை, ஆணவம் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. அது நம்பிக்கை. ஒரே பாடத்தை பல மாணவர்கள் படிக்கிறார்கள். சிலர் அதைக் கடினமாகக் கருதி திண்டாடி குறைந்த மதிப்பெண் வாங்குகிறார்கள். வேறு சிலர் அதை எளிதாக எடுத்துக் கொண்டு நூற்றுக்கு நூறு வாங்கி பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்கிறார்கள். ஆஞ்சநேயர் இதில் இரண்டாவது ரகமாக இருந்தார். நான் நிச்சயம் ஜெயிப்பேன், மகாராஜா சுக்ரீவனுக்கு பெருமை சேர்ப்பேன் என்று நம்பினார். இப்போது புரிந்ததா? ஒருவன் முதலில் தன்னை நம்ப வேண்டும். தன்னை நம்புபவன் எதிலும் வெற்றிவாகை சூடுவான். எவ்வளவு பெரிய தத்துவத்தை சுந்தரகாண்டம் நமக்குச் சொல்கிறது பாருங்களேன்! இப்படி அணுஅணுவாக ஆய்வு செய்து சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களே வெற்றி வாகை சூட முடியும். சரி.. வம்புக்குத்தான்போகக்கூடாது. ஆனால், வந்த சண்டையை எப்படி விடுவது? ராவணன்தான் இந்த சண்டைக்கு மூலகர்த்தா. அவன் இப்போது மாளிகையில் இருக்கிறான். அவனது கவனத்தை ஈர்ப்பது எப்படி? என்றுசிந்தித்தார்.தன் கண்முன்னால் பரந்து விரிந்து கிடந்த அசோகவனத்தைப் பார்த்தார். இதை அழித்து விட வேண்டும். இதை அழித்தால் சீதை இருக்குமிடத்தை யாரோ அழிப்பதாக ராவணனின் கவனத்துக்குச் செல்லும். அவனுடைய ஆட்களை அனுப்புவான். அவர்களைக் கொன்று குவிக்க வேண்டும். பின்னர் ராவணனே வருவான், என்று சிந்தித்தார். தன் எண்ணத்தை உடனடியாக செயல்படுத்தி விட்டார். குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல என்பார்களே...அதுபோல், அந்த அழகிய அசோகவனம் களையிழந்து போய்விட்டது. மரங்களைச் சாய்த்து, அங்கிருந்த தடாகக்கரைகளை நொறுக்கி அடையாளமே தெரியாமல் செய்துவிட்டார். சீதாதேவி அமர்ந்திருந்த சிம்சுபா மரத்தின் பக்கம் மட்டும் அவர் செல்லவில்லை. ராட்சஷிகள் இந்த சப்தம் கேட்டு எழுந்தனர். தாங்கள் இருப்பது அசோகவனத்தில் தானா அல்லது வேறு ஊரிலா என்ற சந்தேகம் வந்துவிட்டது. சீதை அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து, யார் இவன்? உனக்குத் தெரிந்தவனா? என்று கேட்டார்கள்.எனக்கு அவனை யாரென்றே தெரியாதே. இது ராட்சஷர்கள் வாழும் நாடு. யாரோ ஒரு சக்திவாய்ந்த ராட்சஷன் தான்இப்படி செய்திருக்கிறான் என்று நினைக்கிறேன். உங்களுக்கு தெரியாத விஷயமா? பாம்பின் பால் பாம்பறியுமே, என்று சொல்லிவிட்டாள்.ஒருவருக்கு நன்மை விளைகிறதென்றால் அப்போது பொய் பேசுவதில் தவறில்லை. சாட்சாத் மகாலட்சுமியே பூமிக்கு வந்து விட்டாலும், சில நன்மைகள் கருதி பொய் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஒரு நல்லவனைக்காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இப்படி அவள் சொல்லிவிட்டாள்.ராட்சஷிகள் ராவணனிடம் ஓடினார்கள்.மகாராஜா! நம் அசோகவனத்திற்குள் புகுந்த ஒரு குரங்கு வனத்தை பாழ்படுத்திவிட்டது. அது நீர் விரும்பும் சீதையிடம் பேசியதாக நாங்கள் அறிகிறோம். உமக்கு சொந்தமாக உள்ள ஒருத்தியிடம் பிறர் பேச நீர் அனுமதிக்கலாமா? அதை உடனே பிடித்து விசாரிக்க வேண்டும். அது ராமனால் அனுப்பப்பட்டதாக இருக்கும் என நம்புகிறோம், என்றனர். ராவணனின் கண்கள் சிவந்தன.
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 19. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
Page 2 of 3 FirstFirst 123 LastLast

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •