• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

saama vedam avani avittam--upakarma.

kgopalan

Active member
சாம வேதம் சமிதாதானம்


ஆசமனம். அச்யுதாய நம: அநந்தாய நம: கோவிந்தாய நம: கேசவ, நாராயனா வலது கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும் மாதவா, கோவிந்தா என்று பவித்ர விரலால் வலது இடது கண்களையும்


விஷ்ணோ மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது இடது மூக்குகளையும்,த்ரிவிக்ரம வாமன என்று சுண்டு விரலால் வலது இடது காதுகளையும் ஶ்ரீதர ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது இடது


தோள்களையும் எல்லா விரல்களாலும் பத்மநாப என்று கூறி மார்பிலும், தாமோதர என்று கூறி எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொடவேண்டும்.


ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸசி வர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உப ஷாந்தயே.


ப்ராணாயாமம். ௐபூ: ௐ புவ: ஓகும் ஸுவ: ௐ மஹ: ௐஜன: ௐதப: ஓகும் ஸத்யம்; ௐ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.;


மமோபாத்த ஸமஸ்த துரிதயக்*ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராத: சமிதாதானம் கரிஷ்யே. (ஸாய்ங்காத்தில்ல்) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே.


தீர்த்தம் தொடவும்.


ஸ்தண்டிலம் அமைத்தல், படம் வரையவும். அக்னி வைக்கும் இடத்தில், தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காக ஒரு கோடும், தெற்கு கோட்டில் ஆரம்பித்து தெற்கிலிருந்து வடக்காக மேற்கில் ஒரு கோடும். மேற்கு கோட்டில் இருந்து மேற்கிலிருந்து கிழக்காக ஒரு கோடும் ஸமித்தால் இழுக்கவும்.


இந்த மூண்று கோடுகளுக்கு மத்தியில் மேற்கு கோட்டில் ஆரம்பித்து கிழக்காக மூன்று கோடுகள் , முதலில் தெற்கிலும் அதற்கு வடக்கில் ஒன்றும்
இழுக்கவும். அந்த சமித்தை தென்மேற்கில் போட்டு விடவும்.


கோடு கிழித்த இடத்தில் தீர்தத்தால் ப்ரோக்ஷித்து விட்டு வரட்டியில் அக்னியை வைத்து கொள்ளவும். . சமித்தை கையில் வைத்து கொண்டு அக்னியை ஊதி ஜ்வாலை செய்து கொள்ளவும்.. அந்த சமித்தை அக்னியில் வைத்து விடவும்.


பரிஷேசனம்: அக்னிக்கு கிழக்கில் ஆரம்பித்து , ஆரம்பித்த இடத்தில் முடியும் படி ஸமித்துகளையும் உள்ளடக்கி அக்னியை சுற்றி தீர்த்தம் விடவும்.


மந்த்ரம்: தேவ ஸவிதஹ ப்ரஸுவ யஜ்ஞம், ப்ரஸுவ யஜ்ஞபதிம் , பகாய, திவ்யோ கந்தர்வ: கேதபூ: கேதன்ன: புநாது வாசஸ்பதி :வாசன்ன:ஸ்வதது: என்று சொல்லி தீர்தத்தை அக்னியை சுற்றி விடவும்.


ஐந்து ஸமித்துகளை வைத்து கொண்டு ஒவ்வொரு ஸ்வாஹா சொல்லும் போதும் ஒவ்வொரு ஸமித்தை அக்னியில் வைக்கவும்.


1. அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே யதாத்வம் அக்னே ஸமிதா சமித்யஸே ஏவம் அஹம் ஆயுஷா மேதயா வர்சஸா ப்ரஜயா பஸுபி: ப்ருஹ்மவர்ச்சஸேன தனேன அன்னாத்யேன ஸமேதிஷீய ஸ்வாஹா அக்னயே இதம் ந மம


2. பூ: ஸ்வாஹா—அக்னயே இதம் ந மம.
3. புவ:ஸ்வாஹா-வாயவே இதம் ந மம


4. ஸ்வ: ஸ்வாஹா—ஸூர்யாயைதம் ந மம
5. ௐ பூர் புவ: ஸ்வ: ஸ்வஹா ப்ரஜாபதயே இதம் ந மம.


மறு பரிஷேசனம்.


கீழ் கண்ட மந்த்திரத்தை சொல்லி முன்பு போல் பரிஷேசனம் செய்யவும்.
தேவ ஸவித:ப்ராஸாவீ:யஜ்ஞம் ப்ராஸாவீ:யஜ்ஞபதிம் பகாய திவ்யோ கந்தர்வ: கேதபூ: கேதன்ன: அபாவீத் வாசஸ்பதி:வாசம் ந் அஸ்வாதீத்/ ஸாமம் தெரிந்தவர்கள் வாமதேவ்ய ஸாமம் சொல்லவும்.


பிறகு ஸ்வாஹா என்று சொல்லி ஒரு ஸமித்தை அக்னியில் வைக்கவும்.அக்னயே நமஹ என்று சொல்லவும்.


எழுந்து நின்று மந்த்ர ஹீனம், க்ரியா ஹீனம் பக்திஹீனம் ஹூதாஸன யத்துதம் து மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே. என்று ப்ரார்திக்கவும்.


ப்ராயஸ்சித்தானி அஷேஷானி தபஹ் கர்ம ஆத்ம கானி வை யானி தேஷாமஷேஷாநாம் க்ருஷ்ணானுஸ்மரணம் பரம். என்று சொல்லி விட்டு நமஸ்காரம் செய்யவும். (அபிவாதயே கிடையாது)


இடது உள்ளங்கையில் எரிந்த ஸமித்தின் பஸ்மத்தை எடுத்து வைத்து கொண்டு கொஞ்சம் தீர்த்தம் விட்டு வலது கையின் மோதிர விரலா.ல் கீழ் கண்ட மந்திரம் சொல்லி குழைக்கவும்.


த்ரயாயுஷம் ஜமதக்னே: கஷ்யபஸ்ய த்ரயாயுஷம் அகஸ்த்யஸ்ய த்ரயாயுஷம் யத்தேவானாம் த்ரயாயுஷம் தன்மே அஸ்து த்ர்யாயுஷம்
கீழ் கண்ட மந்திரம் சொல்லி குறிப்பிட்டுள்ள இடத்தில் குழைத்த பஸ்மத்தை இட்டு கொள்ளவும்


1. ப்ரம்ஹபிந்துரஸி (நெற்றியில்). 2. அம்ருதபிந்துரஸி (தொப்புளில்)


3 ஆயுர் பிந்துரஸி (மார்பில்) 4. ஆரோக்ய பிந்துரஸி (கழுத்தில்) 5. ஶ்ரீபிந்துரஸி (வலது தோளில்)


6. தநா பிந்துரஸி (இடது தோளில்)7. ஸர்வான்காமான் பிந்துரஸி (பின் இடுப்பில்) 8. செளபாக்கிய பிந்துரஸி ( பின் கழுத்தில்) 9. ஸ்வஸ்தி (தலையில்).


ப்ரார்தனை மந்த்ரம்..


ஸ்வஸ்தி ஸ்ரத்தாம் யசஹ ப்ரக்ஞா வித்யாம் புத்திம் ஷ்ரியம் பலம் ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹி மே ஹவ்யவாஹன.


கையை அலம்பவும். ஆசமனம் செய்யவும்.
 
sankalpam:-- விளம்பி நாம ஸம்வத்ஸரே தட்சிணாயணே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே சுக்ல பட்சே த்வீதீயாயாம் சுப திதெள பெளம வாஸர ஹஸ்த நட்சத்திர யுக்தாயாம் சுப யோக சுப கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் த்விதீயாயாம் சுப திதெள என்று இ ந்த வருடத்திற்கு சொல்லி கொள்ளவும்.
 
மஹா சங்க்கல்பம்.
கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை
பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கி கொண்டுசுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே .நெற்றியில் குட்டிக்கொள்ளவும்




.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.




மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ‌ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ததேவ லக்னம் ஸுதினம் ததேவா தாரா பலம் சந்த்ர பலம் ததேவா வித்யா பலம் தைவ பலம் ததேவா லக்‌ஷ்மீபதே அங்க்ரியுகம் ஸ்மராமி;




அபவித்ர: பவித்ரோவா: ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய:ஸ் மரேத் புண்டரீகாக்‌ஷம் ஸபாஹ்ய அப்யந்த்திர ஸுசி: மாநஸம் வாசிகம் பாபம், கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணேநைவ வ்யபோஹதி; ந ஸம்சய:




ஶ்ரீ ராமா, ராம, ராம, திதிர் விஷ்ணு; ததா வார: நக்‌ஷத்ரம் விஷ்ணுரேவச. யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு
மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த, கோவிந்த, கோவிந்த அத்ய ஶ்ரீ பகவத: ஆதி விஷ்ணோ ஆதி நாராயணஸ்ய




அசிந்த்யயா அபரிமிதயா சக்த்யா ப்ரியமானஸ்ய மஹா ஜலெளகஸ்ய மத்யே பரிப்ரமதாம் அநேக கோடி ப்ரஹ்மாண்டானாம் ஏகதமே அவ்யக்த மஹத் அஹங்கார ப்ருத்வீ அப்பு தேஜ: வாயு; ஆகாஷாத்யை: ஆவரணை;




ஆவ்ருதே அஸ்மிந் மஹதி. ப்ருஹ்மாண்ட கரண்ட மத்யே பூ மண்டலே ஆதார சக்தி ஆதி கூர்மாதி அநந்தாதி அஷ்ட திக் கஜோபரி ப்ரதிஷ்டிதஸ்ய உபரிதலே ஸத்யாதி லோகஷட்கஸ்ய அதோ பாகே மஹாநாளாய மான




பணிராஜ சேஷஸ்ய ஸஹஸ்ர பணாபணி மண்டல மண்டிதே: லோகா லோகாசலேன பரிவ்ருதே திக்தந்தி ஸுண்ட தண்டாத் உத்தம்பிதே லவண இக்‌ஷு ஸுரா ஸர்பி ததி துக்த ஸுத்தார்ணவை: பரிவ்ருதே ஜம்பூ ப்லக்‌ஷ




சால்மலி குஷ க்ரெளஞ்ச ஷாக புஷ்கராக்ய ஸப்த த்வீப விராஜிதே இந்த்ர கஸேரு தாம்ர கபஸ்தி நாக ஸெளம்ய கந்தர்வ சாரண பாரதாதி நவகண்டாத்மகே மஹாமேரு கிரிகர்ணிகோ பேத மஹா ஸரோரு




ஹாயமான பஞ்சாஷத்கோடி யோஜந விஸ்தீர்ண பூ மண்டலே ஸு மேரு நிஷத ஹேமகூட ஹிமாசல மால்யவதி பாரியாத்ரக கந்தமாதந கைலாஸ விந்த்யாசலாதி மஹாஷைல அதிஷ்டிதே லவண ஸமுத்ர முத்ரிதே பாரத




கிம்புருஷ ஹரி இலாவ்ருத ரம்யக ஹிரண்மய குரு பத்ராஷ்வ ஸேது மாலாக்ய நவ வர்ஷோப ஷோபிதே ஜம்புத்வீபே பாரத வர்ஷே பரத:கண்டே மேரோ: தக்‌ஷிணே பார்ஷ்வே கர்மபூமெள ஸாம்யவந்தி குருக்ஷேத்ராதி




ஸம பூமத்ய ரேகாயா:பூர்வ திக் பாகே விந்த்யாசலஸ்ய தக்ஷிண திக் பாகே தண்ட காரண்யே கோதாவர்யா: தக்‌ஷிணே தீரே ஸகல ஜகத் ஸ்ரஷ்டு::பரார்தத்வய ஜீவின: ப்ருஹ்மண: ப்ரதமே பரார்தே பஞ்சாஸத்




அப்தாத்மிகே அதீதே த்வீதீயே பரார்தே பஞ்சாசத் அப்தாதெள ப்ரதமே வர்ஷே ப்ரதமே மாஸே ப்ரதமே பக்‌ஷே ப்ரதமே திவஸே அஹனி த்விதீயே யாமே த்ருதீயே முஹுர்த்தே ஸ்வாயம்புவ ஸ்வாரோசிஷ உத்தம தாமஸ




ரைவத சாக்‌ஷூஷாக்யேஷு ஷட்ஸு மநுஸு அதீதேஷூ ஸப்தமே வைவஸ்வத மந்வந்த்ரே அஷ்டாவிம்ஷதீதமே வர்த்தமானே கலி யுகே ப்ரதமே பாதே ஷாலி வாஹந
சகாப்தே சாந்த்ர ஸெளராதிமான ப்ரமிதே




ப்ரபவாதீநாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்‌ஷிணாயணே வர்ஷ ருதெள ஸிம்ம
மாஸே ஷுக்ல பக்‌ஷே த்விதீயாயாம் ஸுப திதெள பெளம வாஸர ஹஸ்த நக்‌ஷத்ர




சுப்ர நாம யோக தைதுல கரண ஏவங்குண விஷேஷேண விஷிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்த மானாயாம் த்விதீயாயாம் ஸுப திதெள மமோ பாத்த ஸமஸ்த
துரிதயக்‌ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அநாதி அவித்யா வாஸனயா ப்ரவர்த்தமானே அஸ்மின் மஹதி ஸம்ஸார சக்ரே விசித்ராபிஹி




கர்மகதி பிஹி விசித்ராஸு யோநிஷு புந:புந: அனேகதா ஜநித்வா கேநாபி புண்ய கர்ம விசேஷேண இதாநீந்தன மாநுஷ்யே த்வி ஜன்ம விஷேஷம் ப்ராப்தவத: மம இஹ ஜந்மநி பூர்வ ஜந்மஸு ஜந்ம ஜந்மாந்தரேஷு பால்யே




வயஸி கெளமாரே யெளவனே வார்தகேச ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷூப்தி அவஸ்தாஸு மநோ வாக்காய கர்மேந்திரிய ஞானேந்திரிய வ்யாபாரை: ஸம்பாவிதானாம் அதிபாதகானாம் உப பாதகானாம் ரஹஸ்ய க்ருதாநாம்




ப்ரகாச க்ருதாநாம் சங்கலீகரணாநாம், மலிநீ கரணாநாம்,அபாத்ரீ கரணாநாம் ஜாதி ப்ரம்சகராநாம், ப்ரகீர்ணகாநாம் ஏவம் நவானாம், நவவிதானாம் பஹூநாம் பஹூவிதாநாம் ஸர்வேஷாம் பாபானாம் ஸத்ய: அபனோதன




த்வாரா ஸமஸ்த பாப க்ஷயார்த்தம் ஸமஸ்த ஹரி ஹர தேவதா ஸந்நிதெள தேவ ப்ராஹ்மண சந்நிதெள ஷ்ராவண்யாம் பெளர்ண மாஸ்யாம் அத்யாய
உபாகர்ம, கர்ம கரிஷ்யே. ததங்கம் பாப க்ஷயார்த்தம் மாத்யானிக/ மஹாநதி ஸ்நானம் அஹம் கரிஷ்யே.. (ப்ரோக்ஷண ஸ்நானம் அஹம் கரிஷ்யே).




அதி க்ரூர மஹா காய கல்பாந்த தஹநோபம. பைரவாய நமஸ்துப்யம் அநுஞ்யாம் தாதுமர்ஹஸி.. முறையாக ஸ்நானம் செய்யவும், அல்லது ஆபோஹிஷ்டா மந்திரம் சொல்லி தீர்த்தம் ப்ரோக்‌ஷித்து கொள்ளவும்.




துர் போஜன துராலாப துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம். பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஸஹ்ய கன்யே நமோஸ்துதே. த்ரி ராத்ரம் ஜாஹ்னவி தோயம் பாஞ்ச ராத்ரம் துயாமுனம். ஸத்ய:புனாது காவேரி பாபமா மரணாந்திகம்.
கங்கே கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம் ஷதைரபி முச்யதே




ஸர்வ பாபேப்யோ சிவலோகம் ஸ கச்சதி.
நந்திநி நளினி ஸீதா மாலதீ ச மலாபஹா ,விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதா கங்கா த்ரிபத காமினி. புஷ்கராத்யானி தீர்தாநி கங்காத்யா: ஸரிதஸ்ததா ஆகச்சந்து பவித்ராணி ஸ்நான காலே ஸதா மம.




பிறகு பவித்திரத்தை கழற்றி வைத்துவிட்டு ஸ்னானம் செய்து மடி வஸ்த்ரம் தரித்து விபூதி/ சந்தனம் –தரித்து பவித்ரம் போட்டுக்கொண்டு புது பூணல் போட்டு கொண்டு காண்ட ரிஷி தர்ப்பணம் செய்ய வேண்டும்.
 
யக்ஞோப வீத தாரண மந்திரம்.;




ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.






கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,
விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன
என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,
ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.




கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு




சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்




.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.




மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம் ஸ்ரெளத ஸ்மார்த விஹித நித்ய கர்மானுஷ்டான ஸதாசார யோக்யதா ஸித்தியர்த்தம் ப்ரஹ்ம தேஜ: அபிவ்ருத்யர்த்தம் யக்ஞோப வீத தாரணம் கரிஷ்யே
தீர்தத்தை தொடவும்.




அஸ்ய ஶ்ரீ யக்யோப வீத தாரண மஹ மந்த்ரஸ்ய பரப்ருஹ்ம ரிஷி : என்று சொல்லி வது கை விரலால்
(ஸிரஸ்) தலையை தொடவும்
.த்ருஷ்டுப் சந்த:என்று சொல்லி மூக்கை தொடவும்.
பரமாத்மா தேவதா என்று சொல்லி மார்பை தொடவும்.




யஞ்யோப தாரணே வினியோக: என்று சொல்லவும்.




பூணூல் ஒன்றை பிரித்து எடுத்து ப்ரும்ஹ முடிச்சை மோதிர விரலில் படும் படியாக மேலாக வைத்து வலது உள்ளங்கையினால் தாங்கியும் , இடது உள்ளங்கையினால்
பூணூலின் கீழ் புறத்தை அழுத்தியும் பிடித்து கொண்டு




யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத் ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோப வீதம் பலமஸ்து தேஜ:
என்று சொல்லி பூணூலை தரித்து கொள்ளவும்.. இதே வீதம் விவாஹம் ஆனவர்கள் இரண்டாவது, மூண்றாவது பூணூலையும் மந்த்ரத்தை சொல்லி தரித்து கொள்ளவும். ஆசமனம் செய்யவும்.




இந்த மந்த்ரத்தை சொல்லி பழைய பூணலை கழற்றி வடக்கில் போடவும்.




உபவீதம் பின்னதந்தும் ஜீரணம் கஷ்மல தூஷிதம் விஸ்ருஜாமி ஜலே ப்ரஹ்ம வர்ச்சோ தீர்க்காயுரஸ்துமே. மறுபடியும் ஆசமனம் செய்யவும்.
 
2. அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.


கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,
விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,


ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.


கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு


சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்


.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்..


மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் *ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரோஷ்டபத்யாம் ஹஸ்தர்ஷே அத்யாயோத்ஸர்ஜன கர்மணி தேவ, ரிஷி, பித்ரு தர்பணம் கைஷ்யே. தேவான் யதா பூர்வம் தர்ப்பயிஷ்யாம:


தேவ தர்ப்பணம் பூணல் வலம். உபவீதி தேவ தீர்த்தம் நான்கு விரல் நுனி வழியாக ஜலம் விடவும்.


அக்னி: த்ருப்யது; ப்ரஹ்மா த்ருப்யது; ஸோம:த்ருப்யது; ஷிவ: த்ருப்யது; ப்ரஜாபதி த்ருப்யது; சவிதா த்ருப்யது; இந்திர த்ருப்யது; ப்ருஹஸ்பதி த்ருப்யது; த்வஷ்டா த்ருப்யது; விஷ்ணு த்ருப்யது; யம: த்ருப்யது; வாயு த்ருப்யது ; ஆதித்ய: த்ருப்யது; சந்த்ரமா த்ருப்யது; நக்ஷத்ராணி த்ருப்யது;


ஸஹ தேவதாபி:வஸவ: த்ருப்யந்து; ருத்ரா: த்ருப்யந்து;ஆதித்யா: த்ருப்யந்து; ப்ருகவ: த்ருப்யந்து; அங்கீரஸ: த்ருப்யந்து; ஸாத்யா: த்ருப்யந்து; மருத: த்ருப்யந்து; விச்வேதேவா: த்ருப்யந்து; ஸர்வேதேவா: த்ருப்யந்து; வாக்ச த்ருப்யது; மனஸ்ச த்ருப்யது; ஆபஷ்ச த்ருப்யந்து; ஓஷதய: த்ருப்யந்து;


இந்த்ராக்னீ த்ருப்யதாம்; தாதா த்ருப்யது; அர்யமா த்ருப்யது; ஸார்தமாஸருதவ: த்ருப்யந்து; திதி: த்ருப்யது; அதிதி: த்ருப்யது; இந்த்ராணீ த்ருப்யது; உமா த்ருப்யது; ஶ்ரீஸ்ச த்ருப்யது; ஸர்வாஸ்ச தேவ பத்ன்ய:த்ருப்யந்து; ருத்ர: த்ருப்யது; ஸ்கந்த விஷாகெள த்ருப்யதாம்


விஷ்வ கர்மா த்ருப்யது; தர்ஷ்ச த்ருப்யது; பெளர்ணமாஸஸ்ச த்ருப்யது .சாதுர்வேத்யம் த்ருப்யது.; சாதுர்ஹெளத்ரம் த்ருப்யது; வைஹாரிகா: த்ருப்யது; பாகயக்ஞா:த்ருப்யந்து ; ஸ்தாவராஜங்கமே


த்ருப்யதாம்; பர்வதாசிஷ: த்ருப்யது; பவ்ய: த்ருப்யது; நத்ய: த்ருப்யந்து; ஸமுத்ர: த்ருப்யந்து.;
அபாம்பதி: த்ருப்யந்து; யஜமானா யே தேவாஸ் த்வேகாதச கா: த்ரயஸ்ச த்ரிம்ஸஸ்ச த்ரயஸ்ச த்ரீணிசஸதா: த்ரயஸ்ச த்ரீணி ச ஸஹஸ்ரா: த்ருப்யந்து; த்விபவித்ர்யா தேவா த்ருப்யந்து; ஏக


பவித்ர்யா தேவ: த்ருப்யந்து; மனுஷ்ய ப்ரப்ருதய:த்ருப்யந்து; ஸங்கர்ஷண வாஸூதேவெள த்ருப்யதாம்;
தன்வந்திரி :த்ருப்யது; ஸாது கார: த்ருப்யது; உதர வைஷ்ரவண பூர்ண பத்ர மாணி பத்ரா: த்ருப்யந்து;


யாது தானா: த்ருப்யந்து; யக்ஷா: த்ருப்யந்து; ரக்ஷாம்ஸீ த்ருப்யந்து; இதர கணா: த்ருப்யந்து.; த்ரைகுண்யம் த்ருப்யது; நாம ஆக்யாத உபஸர்க நிபாதா ;த்ருப்யந்து; தேவர்ஷய: த்ருப்யந்து;


மஹாவ்யாஹ்ருதய: த்ருப்யந்து; ஸாவித்ரீ த்ருப்யது; ருச: த்ருப்யந்து; யஜூஷி த்ருப்யந்து; ஸாமானி த்ருப்யந்து; காண்டானி த்ருப்யந்து; ஏஷாம்தைவதானி த்ருப்யந்து; ப்ராயஸ்சித்தனி:


த்ருப்யந்து;சுக்ரியோபனிஷத: த்ருப்யந்து; ஷோகி த்ருப்யது; ஸுக: த்ருப்யது; ஷாகல்ய: த்ருப்யது
பாஞ்சால: த்ருப்யது; ருசாபி: த்ருப்யது; ரிஷி தர்பணம் பூணல் மாலை; வ்யாஸ: த்ருப்யது; தேவ


தர்பணம் பூணல் வலம்.; பாராசர்ய: த்ருப்யது; தண்டி த்ருப்யது; குகீ த்ருப்யது; கெளசிகி த்ருப்யது; படபா த்ருப்யது; ப்ராதிதேயீ த்ருப்யது; மைத்ராயணீ த்ருப்யது; தாக்ஷாயணீ த்ருப்யது


ஸர்வாசார்யா: த்ருப்யந்து; குலாசார்யா: த்ருப்யந்து; குருகுல வாஸின: த்ருப்யந்து; கன்யா த்ருப்யது; ப்ரம்ஹசாரீ த்ருப்யது; ஆத்மார்தீ த்ருப்யது; யாக்யவல்க்ய: த்ருப்யது; ராணாயணி த்ருப்யது;


ஸத்யமுக்ரீ த்ருப்யது; துர்வாஸா: த்ருப்யது; பாகுரீ த்ருப்யது; கெளருண்டீ த்ருப்யது.
கெளல்குளவீ த்ருப்யது; பகவான் த்ருப்யது; ஒளபமன்யவ: த்ருப்யது; தாரால: த்ருப்யது;


கார்கிஸாவர்ணீ த்ருப்யது; வர்ஷகண்யஸ்ச த்ருப்யது; குதுமிஸ்ச த்ருப்யது; சாலிஹோத்ரஸ்ச த்ருப்யது; ஜைமினிச்ச த்ருப்யது; த்ரயோதச இத்யேதே ஸாமகார்சார்யா; ஸ்வஸ்தி குர்வந்து தர்பிதா :ஸ்வஸ்தி குர்வந்து தர்பிதா:


சடி த்ருப்யது; பால்லபவி த்ருப்யது; காலபவி த்ருப்யது; தாண்ட்ய: த்ருப்யது; வ்ருஷ்ச த்ருப்யது; வ்ருஷாணக: ச் த்ருப்யது; ருருகி ச த்ருப்யது; அகஸ்திய: த்ருப்யது; பட்க சிரா: த்ருப்யந்து; குஹூஸ்ச


த்ருப்யது; அக்னி: த்ருப்யது; ப்ரஹ்மா த்ருப்யது; தேவா: த்ருப்யந்து;வேத: த்ருப்யந்து; ஒம்கார: த்ருப்யது;


சாவித்ரி த்ருப்யது; யக்ஞா: த்ருப்யந்து; த்யாவாப்ருத்வீ த்ருப்யந்தாம்; அஹோராத்ராணி த்ருப்யந்தாம்; ஸாங்க்யா : த்ருப்யந்து; ஸ்முத்ரா: த்ருப்யந்து; க்ஷேத்ரெளஷதி வனஸ்பதய: த்ருப்யந்து;


கந்தர்வாஹா: த்ருப்யந்து; அப்ஸரஸ: த்ருப்யந்து; நாகா :த்ருப்யந்து; யக்ஷா: த்ருப்யந்து; ரக்ஷாம்ஸி த்ருப்யந்து;


ரிஷி தர்பணம். பூணல் மாலை.


ஸுமந்து த்ருப்யது; ஜைமினி த்ருப்யது; விஸ்வாமித்ர: த்ருப்யது; பராசர: த்ருப்யது;ஜானந்து:
த்ருப்யது; பாஹவ: த்ருப்யந்து; கெளடம: த்ருப்யது; சாகல்ய: த்ருப்யது; பாப்ரவ்ய த்ருப்யது;மாண்டவ்ய: த்ருப்யது; படபா த்ருப்யது; ப்ராதிதேயீ த்ருப்யது;


தேவ தர்பணம்; பூணல் வலம்.


நமோ ப்ரும்ஹணே த்ருப்திரஸ்து;; நமோ ப்ராஹ்மணேப்ய :த்ருப்திரஸ்து; நம: ஆசார்யேப்ய: த்ருப்ரஸ்து; நம ரிஷிப்ய: த்ருப்ரஸ்து; நமோ தேவேப்ய; த்ருப்திரஸ்து; நமோ வேதேப்ய:


த்ருப்திரஸ்து; நமோ வாயவேச த்ருப்திரஸ்து; ம்ருத்யவேஸ்ச த்ருப்திரஸ்து; விஷ்ணவேச த்ருப்திரஸ்து; நமோ வைஷ்ரவணாயச த்ருப்திரஸ்து;




ரிஷி தர்ப்பணம். பூணல் மாலை.


சர்வதத்தாத் கார்க்யாத் (சர்வதத்தோ கார்க்ய) உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து; சர்வதத்தோ கார்க்ய: ருத்ரபூதே: த்ராஹ்யாயணே : த்ருப்திரஸ்து; ருத்ரபூதி: த்ராஹ்யாயணி: த்ராதாத் ஐஷுமதாத் த்ருப்திரஸ்து.


த்ராத ஐஷுமத; நிகடாத் பார்ணவல்கே : த்ருப்திரஸ்து. நிகட்: பார்ணவல்கி:கிரிசர்மண: காண்டே வித்தே: ச்ந்தோக மாஹகே: த்ருப்ரஸ்து. ப்ரும்ஹ வ்ருத்தி:சந்தோக மாஹகி: மித்ரவர்ச்சஸ: ஸ்தைரகாயநாத் த்ருப்திரஸ்து;


மித்ரவர்சா: ஸ்தைரகாயன: ஸுப்ரதீதாத் ஒளலுந்த்யாத் த்ருப்திரஸ்து; ஸுப்ரதீத ஒளலுந்திய : ப்ருஹஸ்பதி குப்தாத் சாயஸ்தே: த்ருப்திரஸ்து; ப்ருஹஸ்பதிகுப்த: சாயஸ்தி: பவ த்ராதாத் சாயஸ்தே; த்ருப்திரஸ்து.


பவத்ராத: சாயஸ்தி: குஸ்துகாத் சார்கராக்ஷாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து; குஸ்துக: சார்கராக்ஷ: ஷ்ரவண தத்தாத் கெளஹலாத் த்ருப்திரஸ்து. ஷ்ரவண தத்த: கெளஹல :ஸுசாரதாத் சாலங்காயநாத் த்ருப்திரஸ்து;


ஸுசாரத: சாலங்காயன: ஊர்ஜயத: ஒளபமன்யவாத் த்ருப்திரஸ்து; ஊர்ஜயன் ஒளபமன்யவ: பானுமத: ஒளபமன்யவாத் த்ருப்திரஸ்து; பானுமான் ஒளபமன்யவ: ஆன்ந்தஜாத் சாந்தநாயநாத் த்ருப்திரஸ்து;


ஆனந்தஜ: சாந்தநாயன: சாம்பாத் சார்கராக்ஷாத் காம்போஜாச்ச ஒளபமன்யவாத் த்ருப்திரஸ்து. சாம்ப: சார்க்கராக்ஷ; காம்போஜாச்ச ஒளபமன்யவ: மத்ரகாராத் செளங்காயனே: த்ருப்திரஸ்து;


மத்ரகார: செளங்காயனி: ஸாதே ரெளஷ்ட்ராக்ஷே: த்ருப்திரஸ்து; ஸாதிரெளஷ்ட்ராக்ஷி:ஸுச்ரவஸ: வார்ஷகண்யாத் த்ருப்திரஸ்து; சுஸ்ரவா: வார்ஷகண்ய: ப்ராதரந்ஹாத் கெளஹலாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து;


ப்ராதரன்ஹ்: கெளஹல: கேதோர்வாஜ்யாத் த்ருப்திரஸ்து. கேதுர்வாஜ்ய: மித்ரவிந்தாத் கெளஹலாத் த்ருப்திரஸ்து. மித்ரவிந்த: கெளஹல: ஸுநீதாத் காபடவாத் த்ருப்திரஸ்து; ஸுநீத: காபடவ: ஸுதேமனஸ:: சாண்டில்யாயநாத் த்ருப்திரஸ்து;


ஸுதேமனா: சாண்டில்யாயன: அம்சோர்தான்ஞ்ஜய்யாத் த்ருப்திரஸ்து; ராதோ கெளதம: காதுர் கெளதமாத் பிது: த்ருப்திரஸ்து; காதா கெளதம: ஸம்வர்கஜித: லாமகாயநாத் பிது: த்ருப்துரஸ்து; ஸம்வர்கஜித: லாமகாயன: சாகதாஸாத் பாடிதாயநாத் த்ருப்திரஸ்து.


சாகதாஸ: பாடிதாயன: விசக்ஷணாத் தாண்ட்யாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து; விசக்ஷண: தாண்ட்ய: கர்தபீமுகாத் சாண்டில்யாயநாத் த்ருப்திரஸ்து; கர்தபீமுக: சாண்டில்யாயன: உதரசாண்டில்யாத் த்ருப்திரஸ்து;


உதர சாண்டில்ய: அதிதன்வனஸ்ச செளநகாத் மச்காச்ச கார்க்கியாத் த்ருப்திரஸ்து. மசகோ கார்க்ய: ஸ்திரகாத் கார்க்யாத் பிது: த்ருப்திரஸ்து. ஸ்திரகோ கார்க்ய: வாஸிஷ்டாத் சைகிதாநேயாத் த்ருப்திரஸ்து. வாஸிஷ்ட: சைகிதாநேய: வாஸிஷ்டாத் ஆரைஹண்யாத் ராஜன்யாத் த்ருப்திரஸ்து.


வாஸிஷ்ட: ஆரைஹண்ய: ராஜன்ய: ஸுமந்த்ராத் பாப்ரவாத் கெளதமாத் த்ருப்திரஸ்து. ஸுமந்த்ரோ: பாப்ரவோகெளதம: சுஷாத் வான்ஹேயாத் பாரத்வாஜாத் த்ருப்திரஸ்து; சுஷோ வான்ஹேயே:


பாரத்வாஜ: அராலாத் தார்தேயாத் செளன காத் த்ருப்திரஸ்து. அராலோ தார்தேய: செளனக: த்ருதே: ஐந்த்ரோதாத் செளன காத் பிது: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்துத்ருத்


த்ருதி: ஐந்த்ரோத:செளனக: இந்த்ரோதாத் செளனகாத் பிதுரேவ த்ருப்திரஸ்து. .இந்த்ரோத: செளனக: வ்ருஷசுஷ்ணாத் வாதாவதாத் த்ருப்திரஸ்து. வ்ருஷசுஷ்ண:: வாதாவத:நிகோதகாத் பாயஜாத்யாத் த்ருப்திரஸ்து.


நிகோதக:பாயஜாத்ய: ப்ரதிதே: தேவதாதாத்.த்ருப்திரஸ்து. ப்ரதிதி: தேவதரத: தேவரதஸ:சாவஸாயனாத் பிது: த்ருப்திரஸ்து. ப்ரதிதி: தேவதரத: தேவதரஸ: சாவஸாயனாத் பிது: த்ருப்திரஸ்து. தேவதரா: சாவஸாயன: சவஸ: பிதுரேவ த்ருப்திரஸ்து.


சவா: அக்னிபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து. அக்னிபூ: காஷ்யப: இந்த்ரபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து. இந்த்ரபூ: காஷ்யப: மித்ரபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து.


மித்ரபூ: காஷ்யப: விபண்டகாத் காஷ்யபாத் பிது: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து. விபண்டக: காஷ்யப: ரிஷ்யஷ்ருங்காத் காஷ்யபாத் பிது ரேவ த்ருப்திரஸ்து; ரிஷ்யஷ்ருங்க: காஷ்யப: கஷ்யபாத் பிதுரேவ த்ருப்திரஸ்து


கஷ்யப: அக்னே: த்ருப்திரஸ்து. தேவ தர்பணம் பூணல் வலம். விரல் நுனி வழியாக ஜலம் விடவும். அக்னி: இந்த்ராத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து. இந்த்ர: வாயோ: த்ருப்திரஸ்து. வாயு: ம்ருத்யோ: த்ருப்திரஸ்து.


ம்ருத்யு: ப்ரஜாபதே: த்ருப்திரஸ்து. ப்ரஜாபதி: ப்ரம்ஹண: த்ருப்திரஸ்து. ப்ரம்ஹா ஸ்வயம்பூ:தஸ்மை நம:தேப்யோ நம: ஆசார்யான் நமஸ்க்ருத்வா அத வம்ஸசஸ்ய கீர்த்தயேத்.


ஸ்வதா பூர்வேஷாம் பவதி நேதா யுர்தீரக மஷ்னுதே இத்யுக்த்வா அனுக்ராமேத் வம்சம் ஆப்ரம்ஹண:


ரிஷி தர்ப்பணம். பூணல் மாலை.


நயன் அர்யம பூதே:காலபவாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து அர்யமபூதி: காலபவ: பத்ரச்ர்ண:கெளசிகாத் த்ருப்திரஸ்து. பத்ரசர்மா கெளசிக: புஷ்ய யசஸ: ஒளதவ்ரஜே:த்ருப்திரஸ்து. புஷ்ய யஷா: ஒளதவ்ரஜி: சங்கராத் கெளமாத் த்ருப்திரஸ்து.


ஷங்கரோ கெளதம: அர்யம ராதாச்ச கோபிலாத் பூஷ மித்ராச்ச கோபிலாத் த்ருப்திரஸ்து. பூஷ மித்ரோ கோபில: அச்வமித்ராத் கோபிலாத் த்ருப்திரஸ்து. அச்வமித்ரோ கோபில: வருணமித்ராத் கோபிலாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து.


வருண மித்ரோ கோபில: மூல மித்ராத் கோபிலாத் த்ருப்திரஸ்து. மூலமித்ரோ கோபில: வத்ஸமித்ராத் கோபிலாத் த்ருப்திரஸ்து. வத்ஸமித்ரோ கோபில: கெளல்குலவீபுத்ராத் கோபிலாத் த்ருப்திரஸ்து.


கெளல்குலவீ புத்ர: கோபில: ப்ருஹ்த்வஸோ: கோபிலாத் பிது: த்ருப்திரஸ்து. ப்ருஹத்வஸு: கோபில: கோபிலாதேவ த்ருப்திரஸ்து. கோபில: ராதாச்ச கெளதமாத் த்ருப்திரஸ்து. ராதோ கெளதம:காதுர்கெளதமாத் பிது: த்ருப்திரஸ்து.


காதா கெளதம:ஸம்வர்கஜித:லாமகாயனாத் த்ருப்திரஸ்து. ஸம்வர்கஜித் லாமகாயன: சாகதாஸாத் பாடிதாயனாத் த்ருப்திரஸ்து.. சாகதாஸ: பாடிதாயன: விசக்ஷணாத் தாண்ட்யாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து.


விசக்ஷண: தாண்ட்ய: கர்தபீமுகாத் சாண்டில்யாயனாத் த்ருப்திரஸ்து. கர்தபீமுக: சாண்டில்யாயன: உதரசான்டில்யாத் பிது: த்ருப்திரஸ்து


உதரசான்டில்ய :அதிதன்வன: ச செளனகாத் மசகாச்ச கார்க்யாத் த்ருப்திரஸ்து மசகோ. கார்க்கிய: ஸ்திரகாத் கார்க்யாத் பிது:த்ருப்திரஸ்து. ஸ்திரகோ கார்க்ய: வாஸிஷ்டாத் சைகிதானேயாத் த்ருப்திரஸ்து. வாஸிஷ்ட: சைகிதானேய: வாஸிஷ்டாத் ஆரைஹண்யாத் ராஜன்யாத் த்ருப்திரஸ்து.


வாஸிஷ்ட: ஆரைஹண்ய: ராஜன்ய: சுமந்த்ராத் பாப்ரவாத் கெளதமாத் த்ருப்திரஸ்து. ஸுமந்த்ர: பாப்ரவ: கெளதம: சுஷாத் வான்ஹேயாத் பாரத்வாஜாத் த்ருப்திரஸ்து. சுஷ: வான்ஹேய: பாரத்வாஜ: அராலாத் தார்த்தேயாத் செளனகாத் த்ருப்திரஸ்து.


அரால: தார்தேய: செளனக: த்ருதே: ஐந்த்ரோதாத் செளனகாத் பிது: உபஜாயத: தஸ்மை நம: த்ருப்திரஸ்து. த்ருதி: ஐந்த்ரோத: செளனக: இந்த்ரோதாத் செளனகாத் பிதுரேவ த்ருப்திரஸ்து.


இந்த்ரோத: செளனக: வ்ருஷ்சூஷ்ணாத் வாதாவதாத் த்ருப்திரஸ்து. வ்ருஷ சூஷ்ண: வாதாவத: நிகோதகாத் பாயஜாத்யாத் த்ருப்திரஸ்து. நிகோதக: பாயஜாத்ய: ப்ரதிதே: தேவதரதாத் த்ருப்திரஸ்து. ப்ரதிதி: தேவதர்த: தேவதரஸ:


சாவஸாயனாத் பிது: த்ருப்திரஸ்து தேவதரா: சாவஸாயன: சவஸ: பிதுரேவ த்ருப்திரஸ்து .சவா: அக்னிபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து. அக்னிபூ: காஷ்யப: இந்த்ரபுவ:காஷ்யபாத் த்ருப்திரஸ்து.
இந்த்ரபூ: காஷ்யப: மித்ரபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து;


மித்ரபூ: காஷ்யப: விபண்டகாத் காஷ்யபாத் பிது; உபஜாயத தஸ்மை நமத்ருப்திரஸ்து விபண்டக: காஷ்யப: ரிஷ்யஷ்ருங்காத் காஷ்யபாத் பிது: த்ருப்திரஸ்து.


ரிஷ்யச்ருங்க: காஷ்யப: கஷ்யபாத் பிது: த்ருப்திரஸ்து. காஷ்யப: அக்னே த்ருப்திரஸ்து.


தேவ தர்பணம் பூணல் வலம்.


அக்னி: இந்த்ராத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து. இந்த்ர: வாயோ: த்ருப்திரஸ்து. வாயு: மிருத்யோ த்ருப்திரஸ்து. ம்ருத்யு: ப்ரஜாபதே; த்ருப்திரஸ்து. ப்ரஜாபதி: ப்ரம்ஹண: த்ருப்திரஸ்து. ப்ரம்ஹா ஸ்வயம்பூ: தஸ்மை நம: தேப்யோ நம:


பித்ரு தர்பணம்; பூணல் இடம். பித்ரு தீர்த்தம்


மூன்று பில் பவித்ரம். மூன்று எருக்க இலை ,அதன் மீது மூன்று நுனி தர்ப்பம் தெற்கு நுனியாக வைத்து கொண்டு கட்டை விரல் இடுக்கு வழியாக தர்ப்பணம் செய்யவும். எள்ளை உபயோகிக்கவும்


.ஒவ்வொன்றயும் மூன்று முறை சொல்லி மூன்று முறை தர்ப்பணம் செய்யவும்.
:
பித்ரூணாம் த்ருப்திரஸ்து. மாத்ரூணாம் த்ருப்திரஸ்து.; பிதாமஹானாம் த்ருப்திரஸ்து. ப்ரபிதா மஹானாம் த்ருப்திரஸ்து. மாதாமஹானாம் த்ருப்திரஸ்து; ப்ரமாதாமஹானாம் த்ருப்திரஸ்து.


ஆசார்யானாம் த்ருப்திரஸ்து. ப்ராசார்யாணாம் த்ருப்திரஸ்து; ஸம்ஹிதாகார பதகார ஸூத்ர கார ப்ராஹ்மண காராணாம் த்ருப்திரஸ்து. ப்ராம்ஹணானாம் அனபத்யானாம் த்ருப்திரஸ்து.


ப்ராம்ஹணீனாம் ஏகபத்னீனாம் அனபத்யானாம் த்ருப்திரஸ்து.


ஸர்வேஷாம் ச ப்ரம்ஹசாரிணாம் த்ருப்திரஸ்து.


சுபம். . :
 
ப்ரம்மசாரிகள் முஞ்ச கயிறு கட்டிக்கொள்ளவும். அல்லது தர்ப்ப கயிறு கட்டி க்கொள்ளவும். இதற்கு மந்திரம்.


இயம் துருக்தாத் பரிபாதமானா வர்ணம் பவித்ரம் புனதீ ந ஆகாத் ப்ராணாபாநாப்யாம் பலம் ஆஹரந்தி ஸ்வ்ஃஅஸா ய் தேவி ஸுபகா மேகலேயம் ருதஸ்ய கோப்த்ரீ தபஸ: பரஸ்வீக்நதி ரக்ஷ: ஸஹமானா அராதீ: ஸாமா ஸமந்தம் அபிபர்யேஹி பத்ரே தர்தாரஸ்தே மேகலே மாரிஷாம.


ப்ரம்மசாரிகள் ஓம் என்று சொல்லி மாந்தோல் கட்டிக்கொள்ளவேன்டும்.




நீளமான சமித்தே தண்டம் இதை வைத்து கொள்ள வேண்டும். இதற்கு மந்திரம். ஸுச்ரவஸ: ஸுச்ரவஸம் மாகுரு யதா த்வம் ஸுச்ரவ: ஸுச்ரவாஹா: தேவேஷு ஏவமஹம் ஸுச்ரவ: ஸுச்ரவா: ப்ராம்ஹணேஷு பூயாஸம்.வேதாரம்பம்.


வேதாரம்பம்: அத்யபூர்வோக்த ஏவங்குண விசேசேன விசிஷ்டாயாம் அஸ்யாம் -------------சுபதிதெள ப்ரோஷ்டபத்யாம் ஹஸ்தர்க்ஷே அத்யாயோபா கர்மணி வேதாரம்பம் கரிஷ்யே. வித்யுதஸி வித்யமே பாப்மானம் ருதாத் ஸத்யமுபைமி.


ருக் ஸாமம் தெரியாதவர்கள் ஸாமம் சொல்லும் போது ஓம் என்பதை மட்டும் சொல்லவும்.


1. ஒம். தத்சவிதுவரேண்யம், ஓம் பர்கோ தேவஸ்ய தீமஹி; ஓம். தியோயோனஹ ப்ரசோதயாத்.
2.
ஓம். தத்ஸவிதுர்வரேண்யம் ஓம். பர்கோ தேவஸ்ய தீமஹி ஒம் தியோயோனஹ ப்ரசோதயாத்.
3.
ஓம். தத்ஸவிதுர்வரேண்யம் ஒம் பர்கோ தேவஸ்ய தீ மஹி ஒம். தியோயோனஹ: ப்ரசோதயாத்.
4.
ஓம்.பூ: ஓம். புவ: ஓம். ஸ்வ: ஓம்.


த்த்சவிதுர்வரேணியோம் பார்கோதேவஸ்ய தீமாஹீ தியோயோன: ப்ரசோ ஹிம் ஆ தாயோ ஆ .


ஓம். பூ: பூ: ஹோய் பூ; ஹோய் பூ: ஹா உவா ஏ ஸுவர்ஜ்யோதீ


ஓம். புவா: புவ: ஹோய் புவ: ஹோய் புவ: ஹா உவா ஏ ஸுவர்ஜ்யோதீ.


ஓம். ஸூவா:ஸுவ: ஹோய் ஸுவ: ஹோய் ஸுவ: ஹா உவா ஏ ஸுவர்ஜ்யோதீ ஓம்.


இந்த வ்யாஹ்ருதி ஸாமங்கள் எல்லோரும் அவச்யம் யாரிடமாவது தெரிந்து கொள்ள வேன்டும்.


பிறகு ஸாமங்கள் அத்யயனம் செய்தவர் மட்டுமே சொல்ல முடியும்.:


சோமம் ராஜானாம் வருணம் =++++உஹஸ்தோத்ரி ஸப்தமம்; ++++ரஹஸ்ய ஸ்தோத்ரி ஸப்தமம்.


இதை எல்லோரும் சொல்லலாம்..


மஹன்மே வோசோ பர்கோமே வோச: ஸ்தோமோயுஜ்யதே ஸத்ரியேப் யோஹவிர்ப்ய: ஓம். ப்ரஜாபதிர்வா இதமேக ஆஸித். ஓம். த்ரிவ்ருத் பஹிஷ்பவமானம் பஞ்ச தசான் யாஜ்யானி.


ஓம்.அதிராத்ரா: ப்ருஷ்டஷ்ஷடஹ: ஓம். ப்ருமஹ ச வா இதமக்ரே ஸுப்ரும்ஹ: சாஸ்தாம்.
ஓம். ப்ரும்ஹ ஹ வா இதமக்ர ஆஸீத். ஓம். அதகல்வயம் ஆர்ஷப்ரதே சோபவதி ஓம். அக்னிரிந்த்ர: ப்ரஜாபதி:


ஓம். தேவஸவித: ப்ரஸுவ யஜ்ஞம். ஓம்.ஓமித்யேததக்ஷரமுத்கீத முபாஸீத ஓம். அஸெள வா ஆதித்யோதேவமது ஓம். யோஹ வைஜ்யேஷ்டஞ்சச்ரேஷ்டஞ்ச வேத


ஒம். அதாத: ஸம்ஹிதோபநிஷதோ வ்யாக்யாஸ்யாம: ஒம். நமோ ப்ருஹ்மணே நமோ ப்ராஹ்மணேப்யஹ ஓம். அதாதோ வித்யவ்யபதேசே ஓம். அதாத: சந்தஸாம் விசயம் வ்யாக்யாஸ்யாம:


ஓம் அதாத: ஸ்தோமான் வ்யாக்யாஸ்யாம: ஓம். க்லுப்தோஜ்யோதிஷ்டோமோ திராத் ரோஷோடசிக: ஓம். அத ஸம்பத்ஸித்தி ரநாதேசே; ஒம் அதாத: ப்ரதிஹாரஸ்ய


ஓம். க்ராமகாமஸ்ய க்லுப்தோ ஜ்யோதிஷ் டோம; ஒம். க்லுப்தோ ஜ்யோதிஷ்டோமே அதிராத்ர ப்ரதிராஷ்ட்ரம்ச ஓம். அக்ன ஆயானுதாத்தம்
ஓம். அக்னெஜோதூதூ;


ஓம். ஆமனபெளடீ. ஓம். அததாலவ்யமா இ யத்வ்ருத்தம். ஓம் அக்னிமீளே புரோஹிதம்; ஓம். இஷேர்த்வோர்ஜே த்வா ஓம். சன்னோதேவிரபீஷ்டய ஓம். அ உண் ஓம். கீர்ணச்ரேய:


ஓம். ஆத்யம் புருஷமீசானம். ஓம். மனுமேகாக்ர மாஸீனம் ஓம். தபஸ்வாத்யாய நிரதம் ஓம். வேதோ தர்ம மூலம். ஓம். வேதோ கிலோ தர்ம மூலம். ஒம்.




அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா; ஓம்.அதாதோ ப்ரம்ஹ ஜிஜ்ஞாஸா. ஓம். வ்ருஷ்டிரஸி வ்ரு:சமே பாப்மானம் ருதாத் ஸத்யமுபாகாம்.: .


வேதாரம்பம் முற்றிற்று.
 
Can anyone share the places where Sama Veda Upakarma for 2018 is conducted in Bangalore. I have recently moved there.
hi

may be in malleswara,/seshadripuram....try some nearest tamil temple....they can help/guide u...i think in indira nagar too..

may be in sankara madam too...
 

Latest ads

Back
Top