• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கிருஷ்ணாவதாரம்

praveen

Life is a dream
Staff member
கிருஷ்ணாவதாரம்

1: கண்ணன் பிறப்பு
திரு மடந்தை மண் மடந்தை இருபாலும் திகழ, சுடர் ஆழி வெண் சங்கு இருபால் பொலிந்து தோன்ற, ஏழுலகும் தனிக்கோல் செல்ல, தன்னுடைச் சோதியில் வீற்றிருந்த பரம்பொருளை விண்ணோர்கள் நல் நீராட்டி, சூட்டுநன்மாலைகள் தூயன ஏந்தி, தூபம் தரா நிற்கவே, அவன் அங்கு ஒரு மாயையினால், நிலமங்கை துயர் தீர, மண் உலகில் மனிசர் உய்ய,
"கண்ணன் அவதரித்தருளினான்."
சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து , இங்குப் பிறந்தான்.


மல்லை மூதூர் மதுரையில், ' என்ன நோன்பு நோற்றாள்கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்? , என்னும் வார்த்தை எய்துவிக்க, 'மத்தக் களிறு வசுதேவர் தம்முடைய சித்தம் பிரியாத தேவகி- தன் வயிற்றில், மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்த அத் தாயயைக் குடல் விளக்கம் செய்ய, தந்தை காலில் பெருவிலங்கு தாள் அவிழ, கண்ணன் பிறந்தான். கஞ்சனை வலை வைத்த அன்று, கார் இருளில், சிறையில், அத்தத்தின் பத்தாம் நாள் (திருவோணத்தில்) நிகழ்ந்தது இப் பிறப்பு.


2: ஆய்பாடி அடைதல் :
ஓர் இரவில் ஒருத்தி மகனாய் பிறந்தவன், அதே இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரலுற்றான். தேவகி சிங்கம் தெlய்வ-நங்கை யசோதைக்குப் பேதைக் குழவியாய், அறம் செய்யும் நந்தகோபன்- தன் இன்னுயிர்ச் சிறுவனாய், பலதேவர்க்கு ஓர் கீழ்க் கன்றாய், ஆயர்பாடிக்கு அணி விளக்காய், ஆயர்கள் நாயகனாய், கொம்பனாக்கு எல்லாம் கொழுந்தாய்த் திகழ்ந்தான்.


பெற்ற அன்னை புலம்ப, வளர்த்த அன்னை தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்.


3: மங்களம் கொண்டாடுதல் :
பாடுவாரும், ஆடுவாரும், ஓடுவாரும், விழுவாரும், 'நம்பிரான் எங்கு உற்றான்?
என்று நாடுவாரும் ஆயிற்று ஆய்ப்பாடி.
எண்ணெய், சுண்ணம், எதிர் எதிர் தூவுவார் : நறுநெய், பால், தயிர், நன்றாகத் தூவுவார் ; உறியை முற்றத்து அஉருட்டி நின்று, ஆடுவார்-- அறிவழிந்து, ஆனந்தம் ஆயிற்று ஆய்ப்பாடி.
ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை என்பார்; 'திருவோணத்தான் உலகு ஆளும்' என்பார்.


4: பூதனையின் முலையைச் சுவைத்து உயிருண்டான்.
பூதனை, பிறரும் அறியாத நள் இருளில் பெற்றதாய் போல் வந்து, கண்ணனை எடுத்து ஒக்கலில் வைத்து 'பால் உண்' என்று நச்சுமுலை உண்ணக் கொடுத்தாள். குழந்தையும் முலை உண்பான் போலே, முனிந்து, உயிர் உண்டான். பேய்மகள் அலறி, மண் சோர்நதாள்.


5: தாளை நிமிர்த்துச் சகடம் உதைத்தது
யசோதை யமுனை நீராடப் போன பொழுது, ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டிலில் உறங்குவான்போலே கிடந்த பிள்ளை, மலைபோல் உருண்டு வந்த சகடத்தைத் தாள் நிமிர்த்து உதைக்க, அச் சகடம் தளர்ந்து முறிந்தது. கஞ்சன் அனுப்பிய கள்ளச் சகடாசுரன்உடல் பிளந்து, மடிந்தான்.


6: காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்தது.
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நல்-பொய்கை
புகுந்து, கலக்கி, அடங்கா விடம் காலும் அரவத்தை, வால் பற்றி ஈர்த்து, படம் ஐந்தலை மேல் பாய்ந்து ஏறி, பல்மணி சிந்த, தூய சுந்தர நடனம் பயின்று அருளினான்.


7: தேநுகாஸுரனைத் தொலைத்தருளியது :
கழுதை வடிவங் கொண்ட தேநுகாசுரனை அவன் ஆவி போக, அங்கு ஓர் பனைங்கனி உதிர, எறிந்தான்.


7: அரிஷ்டாஸுரனை அழித்தருளியது :
எருது வடிவங்கொண்ட அரிஷ்டன் என்னும் அசுரனை ஸ்ரீ கிருஷ்ணன் அவன் கொம்புகளைப் பிடித்து அசையவொட்டாமல் செய்து தன் காலினால் அவன் வயிற்றில் ஓரடி இடித்து அவன் கழுத்தைப் பிடித்து கசக்கி, அவனுடைய கொம்புகளிளொன்றைப் பறித்து அதனாலேயே அடித்துக் கொன்றான்.


8: ஏழ்விடை செற்று பின்னைதோள் புணர்ந்தது :
நல்தோகை மயில் அனைய ஆயர்
இளங்கொடி நப்பின்னை காதலால் , ஏழு எருதுகளைக் கொம்பு ஒடிய, வலி அழித்து , மணம் புரிந்தான்.


9: கேசியின் வாயைக் கீண்டு எறிந்தது:
குதிரையின் உருவில் கேசி என்னும் அசுரன் கண்ணபிரான் மேல் பாய்ந்து வர , பெருமான் தன் திருக்கைகளால் அதன் வாய்கொடுத்துத் தாக்கி, பற்களை உதிர்த்து , உதட்டைப்பிளந்து அதனுடம்பை இருபிளவாக வகிர்ந்து தள்ளினன்.


19: கொக்கின் வாயைக் கிழித்தெறிந்தது :
புள்ளுருவாய் வந்த பகன் என்னும் அசுரனை, கண்ணன் அதன் வாயலகுகளை இருபிளவாகக் கீண்டு அழித்தனன்.


20:கன்றினால் விளவெறிந்தது:
கன்றின் வடிவங்கொண்டு மேய்ப்புலத்தே வந்த கள்ள அசுரன் கபித்தாசுரனை சென்று பிடித்து, சிறு கைககளாலே விளங்காய் எறிந்து, அந்த அசுரனையும் மாய்த்தான்.


21: குருந்த மரம் ஒசித்தது.
குருந்தமரத்தில் பிரவேசித்து வந்த அஸுரனை, பெருமான் கண்ணன் அம் மரத்தை கைகளால் பிடித்துத் தன் வலிமையைக்கொண்டு முறித்து அழித்தனன்.


22: கோவர்த்தனத்தைக் குடையாக எடுத்தது:
வானவர்கோன் இந்திரனாருக்கு என்று ஆயர் எடுத்த விழாவில், மலைபோல் அமைத்த சோற்றுப் படையலை , கறியொடும் தயிரொடும் நெய்யொடும்
கலந்து, கண்ணன், முற்ற வாரி வளைத்து உண்டான். அமரர்பதி மிக வெகுண்டு, புஷ்கலாவர்த்தம் முதலிய பல மேகங்களை ஏவி, ஏழுநாள் கல்மாரி பெய்விக்க, ஆய்ச்சியரும் ஆயரும் ஆநிரையும் அலறி, சரண்புக, மணி நெடுந்தோள் காம்பாகக் கொடுத்து, தடங்கை விரல் ஐந்தும் மமலர வைத்து, "கல் எடுத்து கல் மாரி காத்தாய் ! " என்று உலகம் போற்ற கோவத்ததனம் என்னும் கொற்றக் குடை பிடித்தான்.


23: திருக்குரவைகோத்த - ராஸக்ரீடை
ஒவ்வொரு ஆய்ச்சியின் பக்கத்தில் ஒவ்வொரு கண்ணனாகப் பலவடிவெடுத்து நின்று மண்டலித்தாடும் "ராஸக்ரீடை" பரமாநந்த எல்லையில் நிற்தைக் கண்ட கண்ணன் ' இது வெள்ளக்கேடாக வொண்ணாது : இந்த ரஸத்தை மாற்ற நினைத்து அவ்வாயர் மங்கையரை விட்டு பிரிந்து போய் ஒளிக்க, கண்ணணனைக் காணுமளவும் கோபியர்கள் கண்ணன் கோலச்செயல்களை அநுகரித்துத் தரிக்க, பீதகவாடைப் பிரானார் அவர்களுக்கு ஸேவை ஸாதித்து அவரௌகள் தாபந்தீர பலவித லீலைகள் செய்து ஆனந்தப் படுத்தினான்.


23: கோபி வஸ்த்ராபஹரணம் திருவாய்ப்பாடி கோபஸ்த்ரீகள் யமுனையில் நீராட, இடைச்சாதி ஒழுக்கத்தின் படி கரையில் வைத்துவிட்டுப் போன ஆடைகளையெல்லாம் கண்ணன் ரஹஸ்யமாய் வந்து எடுத்துக்கொண்டு அருகிலிருந்த மரத்தின் மேலிருந்து, சிறிது போது, அக்கோபியர்களை அலைக்கழிக்க , அவர்கள் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதிற்கிணங்க அவர்களுக்கு அத்துகில்களை அளித்தருளினன்.


24: வடமதுரையில் வில்விழ அழித்தது.
" மதுரையில் கம்ஸன் செய்யும் தநுர்யாகத்தில் பங்குகொள்ள கோகுலத்திலிருந்து கண்ணனும், பலராம,னும் அக்ரூரரால் அழைத்துவரப்பட, கம்ஸனுடைய தீயபுத்தியை அறிந்த கண்ணன், 'இவனுக்கு வில் விழா ஒரு கேடு' என சொல்லி ஆயுதசாலை புகுந்து வில்லையெடுத்து முறித்தெறிந்தனன். இவ்விடத்தில் விற்பெருவிழவும் கஞ்சனும் மல்லும்", "திருமதுரையில் சிலைகுனித்து" என்கிற ஆழ்வார்களின் பாசுரங்கள் காண்க.


25: சாந்து பெற்றுக் கூன் நிமிர்ந்தது
மங்கைப் பருவமுடைய கூனி ஒருத்தி, மதுரை ராஜ வீதியில், கம்ஸனுக்காக சந்தனாதி பூச்சுக்களை கிண்ணத்தில் எடுத்துச் செல்ல, கண்ணன் , தன் திருமேனிக்கு ஏற்ற வெகு நேர்த்தியானது என்று அந்தப் பூச்சைக் கேட்க, இவ்வாறு காதலுடையவன் போல் கண்ணன் அருளிச்செய்ததைக் கேட்ட அந்த நங்கை கண்ணனால் மனமிழுக்கப்பட்டு, அவள் அப்படியே திருவுள்ளம் பற்றுங்கள் என்று அன்போடு ஸமர்ப்பிக்க, அப்பூச்சை திருமேனியில் அணிந்த கண்ணன் அவளிடத்து மிகவும் ப்ரஸந்நனாய் டுவிரலும் அதன் முன் விரலும் கொண்ட நுனிக் கையினாலே அவள் மோவாக்கட்டையைப் பிடித்துத் தன் திருவடிகளினால் அவள் கால்களை அமுக்கி இழுத்துத் தூக்கி கோணல் நிமிர்து அளை மகளிற் சிறந்த உருவினள் ஆக்கியருளினான்.


26: குவலயாபீட பஜ்ஜநம், மல்லவதம், கம்ஸவதம் :
சாது சனத்தை நலியும் வஞ்சக் கஞ்சனுக்கு நஞ்சு ஆகி, நெஞ்சிலே நெருப்பு என்ன நின்ற கண்ணன், அவன்
கருத்தைப் பிழைப்பிக்கும் நோக்குடன், வடமதுரையில் , புகு வாசலில் நின்றது கஞ்சன் விட்ட வெஞ்சினக் கொலை வேழம். அது கலங்க, மருப்பினைப் பறித்து, அதை, சாடிக் கொன்று, பாகனையும் வீழ்த்தினான் கண்ணன்.
இருமலைபோல் எதிர்ந்துவந்த இரு மல்லரையும் மல்-போரில் மாய்த்து,
" மல்- அமருள் மல்லர் மாள, மல் அடர்த்த மல்லா! ' எனப் போற்ற நின்றான்.
அப்பால், நெஞ்சில் கறை கொண்ட கொடுமைக் கஞ்சனை உதைத்ததுக் கொன்று, தன் தாதை காலில் அவன் கோத்த தளைகோள் விடுத்தான்.
(கஞ்சனால் ஏவப்பட்ட சாணூரன் முஷ்டிகன் முதலிய பெருமல்லர்களை யெல்லாம் யாதவ வீரர் இருவரும் மமற்போரில் கொன்று வென்றிட்டு, மஞ்சத்தில் வீற்றிருந்த கம்ஸன்மேல்
வேகமாக எழும்பி கிரீடம் கழன்று கீழே விழும்படி அவனைத் தலைமயிர் பிடித்து தரையில் தள்ளி அவன்மேல் தான் விழுந்து அவனைக் கொன்றிட்டனன். கண்ணபிரான்.


27: ருக்மிணி பரிணயம் :
கண்ணாலம் கோடித்து, கன்னிதன்னைக் கைப்பிடிப்பான், திண்ணார்ந்திருந்த சிசுபாலன் தேசு அழித்து, ஆங்கு அவளைக் கைப்பிடித்து, உருப்பிணி நங்கையை வலியத் தேரேற்றிக் கொண்டு, விருப்புற்று வரும்போது, அவளை மீட்பான், விரைந்து செருக்குற்று எதிர்வந்தவன் வீரம் சிதைத்து, மானபங்கம் செய்து, தேவியை மணம் புரிந்தான்.


28: பாரிஜாதபஹர்ணமும் :( கற்பகம் கொணர்தல்)
கற்பகக் காவு கருதிய காதலிக்காக,
' இப்பொழுது ஈவன்' என்று, இமையவகோனைச் செற்று, காவளம் கடிது இறுத்து, கற்கம் கொண்டு, துவாரகையில் நட்டான்.


29: பாண்டவர்க்குத் தூது சென்றது :
பாண்டவர்ளையும் கௌரவர்களையும் எவ்வகையினாலும் ஒருங்கவிட்டு வாழ்வித்தற் பொருட்டு கண்ணபிரான் துரியோதனனிடம் தூது சென்றது உலகப் பிரசித்தம்.
 

Latest ads

Back
Top