• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நாக பஞ்சமி (Naga Panchami)

praveen

Life is a dream
Staff member
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள்.


பரமபதம் விளையாட்டில் தாயம் போட்டு ஆட்டத்தை ஆரம்பித்தவுடன் எப்படியோ போராடி ஏணியில் ஏறி பாதி கிணற்றை தாண்டுவதை போல விளையாடும்போது, சிறு பாம்பின் கடிபட்டு மறுபடியும் கீழே இறங்குவோம்.


இன்னும் தொடர்ந்து விளையாடி மேலே முன்னேறி வந்தபோது பெரிய பாம்பிடம் கடிபட்டு மீண்டும் ஆட்டம் தொடங்கிய இடத்திற்கே வந்து விடுவாம்.


பரமபதம் விளையாட்டிலேயே பாம்பு இப்படி விளையாடுகிறது என்றால், நிஜவாழ்க்கையில் கேட்கவா வேண்டும்?


ஒருவரின் வாழ்வில் எப்படி நாகத்தால் தொந்தரவு ஏற்படும்? என்று பலர் கேட்கலாம்.


அவை நாகதோஷம் –


காலசர்ப்பதோஷம் என்கிற தோஷங்களாக ஒருவரின் வாழ்வில் விளையாடி பார்க்கிறது.


ஒருவருக்கு நாகதோஷமோ காலசர்ப்ப ஜாதகமாகவோ இருந்தால் இந்த தோஷத்தால் சில தடைகள் ஏற்படுகிறது.


அதில் ஒன்று முயற்சிகளில் தடை, திருமண தடை, எந்த ஒரு சின்ன விஷயத்திம் பெரும் போராட்டம் சந்திக்க வேண்டிய நிலை போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு தெய்வ வழிபாடு ஒன்றுதான்.


பொதுவாக நாகதோஷத்திற்கும், காளசர்ப்பதேஷத்திற்கும் பரிகார தலம் திருக்காளஹஸ்தி என்பது அனைவருக்கும் தெரியும்.


அத்துடன் திருக்காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் செய்யும் முன்னோ பின்னோ திருநாகேஸ்வரம் சென்று அங்கு தோஷ பரிகாரத்தையும் செய்ய வேண்டும்.


எப்படி திருப்பதியில் இருக்கும் பெருமாளை பார்ப்பதற்கு முன்பே அலமேலுமங்கை தாயாரையும் பார்க்க வேண்டும் என்கிற விதி இருக்கிறதோ


அதுபோல்தான் திருக்காளஹஸ்திக்கு சென்று காலசர்ப்ப தோஷம் தீர பரிகாரம் செய்தாலும் திருநாகேஸ்வரம் சென்று அங்கும் பரிகாரம் செய்தால்தான் பலன் கிடைக்கும் என்கிறது பரிகார சாஸ்திரம்.


வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ வேலையில் இருப்பவர்கள், உடனே இத்தகைய பரிகார ஸ்தலத்திற்கு உடனே புறப்பட்டு வரமுடியுமா என்றால் சற்று சிரமம்தான்.


அதனால் இந்த பரிகார தலங்களுக்கு வரும்வரை, இருக்கும் இடத்திலேயே என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.


இருந்த இடத்திலேயே இறைவனின் ஆசியால் தோல்வியாதி நீங்கிய அதிசயம்


கேரளவில் பாம்பு மேக்காடு என்ற ஒரு ஊர் வசிக்கிற நம்பூதிரி என்பவர் வாசுகி, நாகயட்சி ஆகியோரின் நாகஉருவத்தை சிலையாக செய்து தனது வீட்டில் வைத்து பூஜை செய்து வந்தார்.


நம்பூதிரிக்கு சருமவியாதி ஏற்பட்டு உடலில் பல இடங்களில் அரிப்பு உண்டானது. அதற்கு நிறைய மருத்துவர்களை பார்த்தும் பல மருந்துகளை சாப்பிட்டும் சருமவியாதி குணமாகவில்லை.


இனி இறைவன்விட்ட வழி என்று அமைதியாக இருந்தார். இறைவனுக்கு செய்யும் சேவையில் எந்த பங்கமும் வராத அளவு பயபக்தியுடன் நடந்து கொண்டார்.


நம்பூதிரி வணங்கும் நாகர் சிலைகளின் அருகில் இருந்த தீபத்தின் ஒளியில் இருந்து வரும் கரும்புகை, சிலைகள் மேல் பதிந்ததால் சிலைகள் கருமையாக காட்சி கொடுத்தது. அதை சுத்தம் செய்வதற்காக நம்பூதிரி, தன் கைகளால் அந்த சிலைகளின் மீது படிந்திருந்த கருப்பு நிறத்தை துடைத்தார். அந்த கருப்பு மை நம்பூதிரியின் கைகளில் பட்டு அவரே அறியாத வண்ணம் உடல் முழுவதும் வேகமாக பரவியது. தன் உடலில் ஒட்டி இருந்த கருப்பு மையை கவனித்த நம்பூதிரி, அந்த மையை துடைத்தார். அப்போது ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது.


ஒவ்வாமையால் ஏற்பட்டு இருந்த தோல் நோய் நல்லவிதமாக குணம் அடைந்து, இதற்கு முன் சரும வியாதி இருந்ததற்கான அறிகுறியே இல்லாமல் மறைந்துவிட்டிருந்தது.


தன் உடலில் இருந்த சருமவியாதி நீங்கியது என்பதை உணர்ந்தார்.


நாகபடத்தை பூஜை செய்யவேண்டும்


பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள்.


நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட.


மற்ற தெய்வங்களை பக்தர்கள் வணங்கும்போது, அவர்களே அறியாமல் நாகத்தையும் வணங்கி நாகதோஷ நிவர்த்தி பெறட்டும் என்கிற எண்ணத்தில்தான் தெய்வங்களே தங்களின் ஆபரணமாக – சேவகனாக – காவலனாக நாகத்தை அமைத்துக்கொண்டார்கள்


’நாககோலம்’ நாகதோஷத்திற்கு நிவர்த்தி தரும் என சொல்கிறது சாஸ்திரம்.


அத்துடன் நாக பஞ்சமி
அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும்.


நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது.


அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது.


அதனால் நாக பஞ்சமி, நாகசதுர்த்தி அன்றோ அல்லது வெள்ளிகிழமை அன்றோ உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுங்கள்.


அத்துடன் பச்சரிசி-தேங்காய் துருவல் – வாழைப்பழம் இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து புற்றுபோல செய்து,


கோவிலில் நாகத்தம்மன் சிலை முன்போ அல்லது புற்றின் முன்பாகவோ வைத்து பச்சரிசி, தேங்காய் துருவல் மற்றும் வாழைப்பழத்தால் செய்த புற்றுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமத்தால் பொட்டுவைத்து வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்.


நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் தனது ”போகர்12000” நூலில் கூறியிருக்கிறார். இந்த பரிகாரத்தை வருடத்தின் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமே செய்திட வேண்டும் என கூறுகிறார். அவர் குறிப்பிடும் அந்த தினம் ”நாகபஞ்சமி திதி"


ஆடி/ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறைப் பஞ்சமி நாள்தான் ”நாகபஞ்சமி” என்று அழைக்கப்படுகிறது. இந்த நாக பஞ்சமி திதியில் தான் போகர் அருளிய நாக தோஷத்திற்கு பரிகாரத்தினை செய்திட வேண்டும்,அதுவே சிறப்பானது.


போகர் அருளிய பரிகார விவரங்களை பார்ப்போம்.


நாகத்தின் சிலையானது இரண்டரை அடி (பீடத்துடன் சேர்த்து) உயரத்திற்க்கு குறைவாகவும், பாம்பின் உடல் மூன்று அல்லது ஐந்து சுற்றுக்களைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


பிரதிஷ்டை செய்யும் தினத்தன்று, பாலும், பழமும் மட்டுமே
உணவாக எடுத்துக் கொண்டு விரதமிருந்து, பயபக்தியுடன் இந்த கடமையை செய்திடல்
வேண்டும் என்கிறார்.


நாகதோஷம் உள்ளவர்கள்,


ஆடி வளர்பிறைப் பஞ்சமி திதியன்று, நாகர் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி, நாகதோஷத்தில் இருந்து நிரந்தரமாய் விடுபட்டு சீரும் சிறப்புடனும் வாழ்ந்திடுங்கள்


#அபூர்வஷக்திவாய்ந்த #நாகம்மன்_மந்திரம்.


ஓம் ரூபப் பிரபவம் நமஹ;
ஓம் சாரும் கேவும் நமஹ;
ஓம் சரவும் பரவும் நமஹ;
ஓம் நய்யும் மெய்யும் நமஹ;
ஓம் ஜெகமும் புரமும் நமஹ;
ஓம் காளத்தி மேளத்தி நமஹ;
ஓம் ஜாலும் மேலும் நமஹ;
ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ;
ஓம் சரகத்தி பாபத்தி நமஹ;
ஓம் சரசாலி பிரசாலி நமஹ;
ஓம் ஓம் ஓம்!!


நாகதோஷம் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை108 முறை ஜபித்து வர நாகதோஷம் நீங்கும்.


ஆடி மாதத்தில் நாகபஞ்சமி விரதம் பெண்களால் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது. நாகப்பாம்பு கடித்து இறந்து போன 5 சகோதரர்களுக்காக, சகோதரிகள் நாகராஜன் பூஜை செய்து சகோதரர்களை உயிர் பெறுமாறு செய்தனர்.


ஆடி மாத வளர்பிறையில் பஞ்சமியன்று இந்த விரதத்தை கடைபிடிப்பர். இந்த விரதம் மேற்கொள்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.


குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் குறையின்றி வாழ்வார்கள்,திருமணம் தடை , புத்திர தடை, கோர்ட் வழக்குகள் உள்ளிட்ட அனைத்துவிதமான பிரச்னையும் நீங்க எளிய பரிகாரம்


அன்றைய தினம் வீட்டுக்கு அருகில் இருக்கும் நாகர், புற்று உள்ள கோவிலில் நாகர் வழிபாடு செய்து நாகருக்கு பால், பழம் நாகருக்கு சாத்தும் பூமாலை உள்ளிட்ட அபிஷேக சாமான்கள் வாங்கி தரும்போது நாக தோஷம் அனைத்தும் விலகும்.


ஆடி வளர்பிறைப் பஞ்சமி திதியன்று வரும் நாக பஞ்சமி அன்று நாகர் வழிபடு செய்வோம், நல் வாழ்வு பெறுவோம்
தீய பலன்களைத் தரும் கிரகத்தின் தசை,புத்தி நடைபெறும் சமயங்களிலும் இதைச் செய்யலாம்
ராகு பகவான் - பாம்பாட்டிகளிடம் இருந்து ஒரு பாம்பை விலைக்கு வாங்கிக் அவற்றைக் காட்டில் கொண்டுபோய் விட ராகு பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.
 

Latest ads

Back
Top