Tamil Brahmins
Page 2 of 2 FirstFirst 12
Results 11 to 11 of 11
  1. #11
    Join Date
    Feb 2009
    Location
    Presently now at Bharuch, Gujarat
    Posts
    76
    Downloads
    15
    Uploads
    0

    0 Not allowed!
    மக்கள் நீதி மையம் என்று, கமல் ஏன் குறிப்பிடவில்லை என விளங்கவில்லை. மையம் என்பதற்கு பதிலாக மய்யம் என்று குறிப்பிடுவதால் தமிழில் உள்ள ஐயா என்பது அய்யா என சமன் செய்து எழுதியது போல். ஐ எனும் எழுத்து இல்லாத மற்ற மொழிகளில் இது போல் அய்யா என எழுதிடலாம். கையறுநிலை என்பதை கய்யறுநிலய் எனவும், ஐந்து என்பதை அய்ந்து, வைக்கோல் என்பதை வய்க்கோல் எனவும் தமிழில் எழுதுவது தவறுதானே.
    இதுபோல் ஔவையார் என்பதை அவ்வையார் என்று எழுதுவதும் சரியல்ல. தமிழில் ஈடாகுமா என்பது கேள்விக்குறியே?
    தமிழ் இலக்கணத்தில் ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம் இருப்பதே இதற்கு விளக்கமாகும் எனக்கருதுகிறேன்.
    தமிழ் வாழ நாமதனை சரியாக நாளும் பழகவேண்டும் என்று கருதுகிறேன்.
    பள்ளிகளில் மையம் என்பதிற்கு மய்யம் என மாணவர்கள் நாளை வழக்கில் பயன்படுத்திடக்கூடும். இதுவே என் ஐயம்.
    இதனையொட்டிய மேல்விளக்கங்கள், மாற்றுக்கருத்துகள், வரவேற்கப்படுகின்றன. நன்றி வணக்கம்
Page 2 of 2 FirstFirst 12

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •