Tamil Brahmins
Results 1 to 2 of 2
 1. #1
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,312
  Downloads
  35
  Uploads
  38

  தைப்பூசத் திருநாள் (Thai Poosam)


  0 Not allowed!
  அன்னையிடம் வேல்வாங்கிய முதன் நாளாக திருக்கையில் வேல் ஏந்திய நாளே தைப்பூசமாகும்.


  வேல் என்றால் என்ன? வேல் என்றால் தமிழ்த்தொன் மதத்தின் தனித்த அடையாளம் ஆகும்.
  சங்ககாலத் தமிழ் மண்ணில் வேல் வழிபாடே மிகுந்து இருந்தது. பின்னாளில் தான் ஆறு முகங்களும் பன்னிரு கரங்களும் ஆகமம் சிலப்பதிகாரத்தில் வேலுக்கு எனத் தனிக்கோட்டமே இருக்கும். வேலின் முகம் சுடர் இலை போல இருக்கும் வேலை சக்திவேல், நெடுவேல், சுடர்வேல், வீரவேல், வெற்றிவேல், தாரைவேல், தீரவேல், செவ்வேல், திருக்கைவேல் என்றெல்லாம் அழைப்பார்கள்.


  சங்க காலத்தில் வேல் வழிபாடு எப்படி இருந்தது என்றால் வெண்மணல் பரப்பி செந்நெல்தூவி பூ பல பெயது பசுந்தழை காந்தள் இட்டு பூக்குலை கட்டி அலங்கரித்து வேலை மையமாக வைத்து வழிபடுதல் வழக்கம். இன்றும் தமிழ்க் குடியினர் கிராமத்தவர்கள் இந்த வேல் வழிபாட்டையே அதிகம் போற்றுகின்றார்கள்.
  முருகன் அன்னையிடம் வேல் வாங்கும் காட்சியை சிக்கல் சிங்கார வேலன் சந்நிதியில் ஒவ்வொரு ஆண்டும் நடித்துக் காட்டுவது வழக்கம். அப்போது சிங்கார வேலன் திருமேனியை வேலின் கொதியால் வியர்கிறது என்று சொல்வாரும் உள்ளர்.


  முருகன் வேறு வேல் வேறு அல்ல வேலானது உயரமும், நெடிதும், அழகும் அறிவுமானது வேல்+முருகன் வேல் முருகன் ஆனார். தைபூசம் என்ற விழாவினை இரண்டு முக்கிய காரணங்களிற்காக இந்துக்கள் கொண்டாடுகின்றார்கள். முதலாவதாக முருகப் பெருமான் தனது தாயிடம் வேலினைப் பெற்ற தினம் அடுத்த இரண்டாவதாக சிதம்பரம் ஆலயத்தில் முனிவர்கள், ரிஷிகள் மற்றும் பண்டிதர்கள் குழுமி இருந்த வேளை ஆலயத்தில் தனது உருத்திர தாண்டவத்தின் போது சிவபெருமான் நடராஜர் என்ற தனது தத்துவத்தை வெளிப்படுத்தினார்.


  தைபூசம் என்பது முக்கியமாக முருகப்பெருமானை சார்ந்த விழா என்றாலும் அந்த விழாவினை சிவன் மற்றும் முருகன் ஆலயங்களில் பெருமளவில் கொண்டாடுகின்றார்கள். சாதாரணமாக தை பூசத் தினம் என்பது தை மாதக் கடைசி அல்லது மாசி முதல் வாரத் தொடக்கத்தில் வரக்கூடிய ஒரு திருநாளாகும்.


  தாயிடம் இருந்து ஒரு வேலை முருகப் பெருமான் பெற்ற நிகழ்வு ஒரு தூய்மையான நாளாக கருதுகின்றார்கள். வரலாற்றின்படி தேவலோகம் மற்றும் பூமியில் இருந்தவர்களை துன்புறுத்தி வந்த சூரபத்மன், சிம்ம முகன் மற்றும் தாரகாசுரன் என்ற மூன்று அசுரர்களை அழிப்பதற்காகவே அவருக்கு அந்த வேல் என்னும் ஆயுதம் தரப்பட்டது. அந்த மூன்று அசுரர்களும் பயம், வெறுப்பு, பொறாமை மற்றும் தலைக்கனத்தை குறிப்பவையாகும். ஒளி மற்றும் ஞானம் என்பதை குறிக்கும் அந்த வேலினைக் கையில் ஏந்திக்கொண்டு முருகன் உலகில் அஞ்ஞானத்தில் உழன்று கொண்டுள்ளவர்களது அறியாமையை விலக்கி அவர்களிற்கு அமைதியைக் தந்தார். இப்படியான மனத்தூய்மையைத் தரும் முருகனின் வேலின் சிறப்பைக் கூறும் தினமாகவே ஆண்டுதோறும் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.


  ஆகவே நாம் நமது கர் மாக்களின் தீயவிளைவுகளை அழித்து அமைதியான வாழ்வைப் பெற்றிடதைப்பூசத் தினத்தில் முருகனை வழிபடும் தினமாகக் கருதி விரதம் இருந்து கொண்டாடுவோம் சில பக்தர்கள் அந்நன்நாளில் முருகனுக்கு காவடி எடுத்தும் வழிபட்டு வருகிறார்கள். காவடி எடுப்பவர்களில் அனேகமானவர்கள் மஞ்சள் நிற உடையே அணிந்திருப்பார்கள். மஞ்சள் நிறமானது தூய்மையைக் குறிக்கும். தனி நபர் தன்னைத் தூய்மைப்ப்டுத்திக் கொள்ளச் செய்யும் சடங்காகும். இந்த தைப்பூச நாளிலே அனுபவம் வாய்ந்த பண்டிதர்களையும் ஆலயத்தில் உள்ள குருமார்களின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வது அவசியமாகும். காவடி என்பது முருகப் பெருமானுடைய நெருக்கத்தை அதிகரித்துக் கொள்ள முயலும் பக்தர்களின் ஒரு செயல்பட்டு முறையாகும். அதை மிகவும் எளிமையாகவும் தூய்மையாகவும் செய்வது நன்மையுடையதாகும்.


  இத் தைப் பூச நாளிலே சிறுவர்களிற்கு காது குத்தி மொட்டை போடுவார்கள்.
  இதுவே தைப்பூசத் தினமாகும்.
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 2. #2
  Join Date
  Oct 2012
  Location
  I live in Chennai
  Posts
  7,105
  Downloads
  2
  Uploads
  0

  0 Not allowed!
  தை வெள்ளி, தை கிருத்திகை... ராஜயோகம் தரும் வழிபாடு!  தை மாதத்தின் வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு விசேஷம். கிருத்திகை முருகப்பெருமானுக்கு உரிய அற்புதநாள். நாளைய தை வெள்ளிக்கிழமையும் கிருத்திகையும் ஒருசேர அமைந்திருப்பதால், இன்னும் இன்னும் பல யோகங்களைத் தந்தருளும் அற்புதமான நாள். ஆகவே அம்பாள் தரிசனமும் முருகக் கடவுளின் தரிசனமும் தவறாமல் செய்யுங்கள். ராஜயோகம் பெறுவீர்கள் என்கிறார் சென்னை அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

  தை மாத வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உரிய நன்னாள். இந்த நாளில், அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், அம்மன் கோலோச்சுகிற கோயில்களில், சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் நடைபெறும்.

  நாளைய தினம் (26.1.18) தை மாத இரண்டாவது வெள்ளிக்கிழமை. வழக்கம் போல், அம்மன் கோயிலுக்குச் சென்று உங்கள் வேண்டுதலை அவளிடம் தெரிவியுங்கள். உங்களின் கோரிக்கைகளை அவள் முன்னே சமர்ப்பியுங்கள். முடிந்தால், ராகு கால வேளையான காலை 10.30 முதல் 12 மணிக்குள், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுங்கள். பிரபஞ்ச சக்தியான அம்பிகை, உங்கள் வாழ்க்கைக்குப் பக்கபலமாக இருப்பாள். பக்கத்துணையாக இருப்பாள். வழிகாட்டுவாள். வழிகாட்டியாகவே இருந்து, வழிக்குத் துணையாக வாழ்நாளெல்லாம் வந்தருள்வாள் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.
  Read more at: http://tamil.thehindu.com/society/sp...le22518875.ece

 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •