Tamil Brahmins
Results 1 to 1 of 1
  1. #1
    Join Date
    Jul 2010
    Posts
    559
    Downloads
    0
    Uploads
    0

    திங்களை கண்ட ஞாயிறு


    0 Not allowed!
    There is a photo of my dad seeing mom
    I wrote this for them..

    திங்களை கண்ட ஞாயிறு


    மற்றவர்க்கு ஒளி கொடுக்கும் நான்
    மதியின் ஒளியில் மயங்கினேன் அன்று
    என்னை விட ஒளியுடையாள்
    என்னருகில் அவதரித்தாள் என்று...

    அசர வைக்கும் சொல் ஒளியும்
    அயர வைக்கும் செயல் ஒளியும்
    அனைத்தும் எனக்கிருந்தும்
    அவள் ஒளியில் அவை அடங்கியதே..

    அணுக்களை உடைத்து ஒளியை பரப்பியும்
    அண்டங்கள் எல்லாம் ஈர்ப்பினால் ஆண்டும்
    அனைத்து சக்தியும் அகத்தே இருந்தும்
    அந்த மதியிடம் நான் மயங்கினனே..

    இங்கு அனைத்துயிர்க்கும் ஆதி பகவன்
    இந்த பகலவனே என்றாலும்
    இவன் நினைக்க முடியா எதிர் காலம்
    இந்த நிலவின் ராசியில் தேடுவனே..

    தான் பெற்ற ஒளியை தன்னலமின்றி
    தரணிக்கு தந்து தருமம் ஆண்டதால்
    தர்மம் தலை காக்க ஈசன் மதியை பிட்டு
    தலையில் மகுடமாய் சூடியது போலே

    தனக்கின்றி எனக்காக எல்லாம் செய்து
    தர்மத்தை என் மீது நிலைக்க வைத்து
    என் மகுடமான மதியே; உருவின் கருவே
    நீ இந்த மாலில் வசிக்கும் திரு வே..


    -TBT

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •