• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மழையே மழையே வா வா

Status
Not open for further replies.
மழையே மழையே வா வா

I am pleased to give below my composition published in Nilacharal.com under Poonchittu, for the benefit of members and readers.

ஆங்கிலத்தில் ‘மழையே மழையே போய் விடு’ (Rain Rain Go Away) என்று மழலைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கு பதில், மழையை வரவேற்கும் பாட்டு சொலிக்கொடுப்போமா?

மழையே மழையே வா வா


மழையே மழையே வா வா
இழையாய் இன்புற பொழிந்தே வா
வானம் பொழியும் புனிதமே வா
தானம் தர்மம் தழைத்திட வா
அமுதமாய் அள்ளிப் பருகிட வா
குமுதம் மலர்ந்திட குதித்தே வா
குளங்கள் ஏரி நிரம்பிட வா
வளங்கள் எங்கும் பொங்கிட வா
பயிர்கள் வளர்ந்து செழித்திட வா
உயிர்கள் வாழ்ந்து உயர்ந்திட வா
தாண்டித் தாவித் துள்ளியே வா
மண்ணின் தரத்தை உயர்த்திட வா
நன்றி சொல்லி நாள் தோறும்
என்றும் உன்னைப் போற்றிடுவோம்


நாகை வை. ராமஸ்வாமி
 
mazhaiye

Beautiful, Shri. Ramaswamy. Agree with your line of thought. Post more such poems.
SAIRAM Anand . Thank you. I am posting another song just now for children which has been sent to Nilacharal and awaiting approval. Meanwhile, I am giving below my blog link for u to go through.
Thanks and Regards
V. Ramaswamy

http:/nampakkam.blogspot.com
 
raamaswamy,

loved your postings in chennaionline. if copyright is not an issue, maybe you can copy them here too.

thanks.
 
Lyrics of Nagai Neelayadakshi Amman Songs

[FONT=TSCu_Paranar]Hello Tambrams: SAIRAM. This is one of the song-lyrics written by me on the glory of Ambal Neelayadakshi of Nagapattinam. This is the first song contained in my Album of the title Amudame Kumudame and placed for listeners in this site under 'Devotional Songs"[/FONT]
[FONT=TSCu_Paranar][/FONT]
[FONT=TSCu_Paranar][/FONT]
[FONT=TSCu_Paranar]Track 02 ( ராகம் : மாண்ட் )[/FONT]
[FONT=TSCu_Paranar] [/FONT]
[FONT=TSCu_Paranar]அமுதமே குமுதமே நீலாயதாக்ஷி[/FONT]
[FONT=TSCu_Paranar] பஜமனமே திவ்ய பாதாரவிந்தம்[/FONT]
[FONT=TSCu_Paranar]ஆடிப்பூர நாயகி நீலாயதாக்ஷி[/FONT]
[FONT=TSCu_Paranar] பஜமனமே திவ்ய பாதாரவிந்தம்[/FONT]
[FONT=TSCu_Paranar]இன்பமே பேரின்பமே நீலாயதாக்ஷி[/FONT]
[FONT=TSCu_Paranar] பஜமனமே திவ்ய பாதாரவிந்தம்[/FONT]
[FONT=TSCu_Paranar]ஈடற்ற தெய்வம் நீலாயதாக்ஷி[/FONT]
[FONT=TSCu_Paranar] பஜமனமே திவ்ய பாதாரவிந்தம்[/FONT]
[FONT=TSCu_Paranar]உத்தம குணம்பெற நீலாயதாக்ஷி[/FONT]
[FONT=TSCu_Paranar] பஜமனமே திவ்ய பாதாரவிந்தம்[/FONT]
[FONT=TSCu_Paranar]ஊணூட்டும் அம்மையே நீலாயதாக்ஷி[/FONT]
[FONT=TSCu_Paranar] பஜமனமே திவ்ய பாதாரவிந்தம்[/FONT]
[FONT=TSCu_Paranar]எத்துன்பம் நீங்கிடவே நீலாயதாக்ஷி[/FONT]
[FONT=TSCu_Paranar] பஜமனமே திவ்ய பாதாரவிந்தம்[/FONT]
[FONT=TSCu_Paranar]ஏற்றமிகு கரைசேர நீலாயதாக்ஷி[/FONT]
[FONT=TSCu_Paranar] பஜமனமே திவ்ய பாதாரவிந்தம்[/FONT]
[FONT=TSCu_Paranar]ஐம்புலன் துய்மை பெற நீலாயதாக்ஷி[/FONT]
[FONT=TSCu_Paranar] பஜமனமே திவ்ய பாதாரவிந்தம்[/FONT]
[FONT=TSCu_Paranar]ஒப்பிலா பேரழகு நீலாயதாக்ஷி[/FONT]
[FONT=TSCu_Paranar] பஜமனமே திவ்ய பாதாரவிந்தம்[/FONT]
[FONT=TSCu_Paranar]ஓங்கார ஸ்வரூபிணி நீலாயதாக்ஷி[/FONT]
[FONT=TSCu_Paranar] பஜமனமே திவ்ய பாதாரவிந்தம்[/FONT]
[FONT=TSCu_Paranar]நிலவாய் குளிரூற்றும் நீலாயதாக்ஷி[/FONT]
[FONT=TSCu_Paranar] பஜமனமே திவ்ய பாதாரவிந்தம்[/FONT]
[FONT=TSCu_Paranar]கருணாஸாகரி நீலாயதாக்ஷி[/FONT]
[FONT=TSCu_Paranar] பஜமனமே திவ்ய பாதாரவிந்தம்[/FONT]
[FONT=TSCu_Paranar]என்றென்றும் மகிழ்ந்திடும்[/FONT]
[FONT=TSCu_Paranar] அன்னை திவ்யநாமம்.[/FONT]
[FONT=TSCu_Paranar][/FONT]
[FONT=TSCu_Paranar]Regards - V. Ramaswamy[/FONT]
 
Nagapattinam sri neelayadakshi amman temple

SAIRAM Mr. Kunjuppu. Thanks for encouragement. I am placing below my composition written for 2009 Adipuram festival of Ambal Neelayadakshi and published in chennaionline site, titled

நீலாயதாக்ஷி அம்மன் திருப்பள்ளி எழுச்சி

பூ விரிந்து வாசமிடும் பூபாள நேரம்
புள்ளினம் பாட்டிசைத்து பண் பாடும் வானம்
புன்னகைத்துப் பகலவன் இருளகற்றும் வேளை
பாவையே நீலாயதாக்ஷி திருப்பள்ளி எழுவாயே!

மங்கல இசை நாதம் மாதா உனை எழுப்பிட
செங்கமலத் திருப்பாதம் பூதேவி வருடிட
தங்க மலர் கொண்டுன்னை தரிசிக்க வந்தோமே
மங்களம் பொங்கிட நீலாயதாக்ஷி பள்ளி எழுவாயே!

வண்டினம் சேர்க்கும் அமுதொக்கும் மதுவும்
ஆவினம் அருளும் புனிதமிகு பாலும்
நேசமுடன் வாசமிகு அமுத நீரும் வைத்தோம்
நீராட நீலாயதாக்ஷி பள்ளி எழுவாயே!

விண்ணவர் மண்ணவர் வியந்துநின் பார்வை பெற
பண்ணொடு பாசுரம் வேதமும் ஓதி நிற்க
வண்ணமிகு வாசமலர் சூட்ட வந்தோம்
கண்ணழகுத் தாயே நீலாயதாக்ஷி பள்ளி எழுவாயே!

காயாரோகணன் காயத்தில் கலந்தவள் நீ
மாயப் பிறப்பின் மயக்கம் அறுப்பவள் நீ
சேயெங்கள் துயரம் துடைப்பவள் நீ
தூயவளே நீலாயதாக்ஷி பள்ளி எழுவாய் நீ!

உயிரின் காற்றை உன்னகம் கொண்டவளே
உயிரினம் அனைத்தும் உள்ளம் குளிர்ந் துய்வுற
உய்ய நின் பாதம் போற்றிப் மகிழ்ந்திட
உயர்ந்தவளே நீலாயதாக்ஷி, பள்ளி எழுவாயே!

தேடித் தேடி வந்தோமே தேவி நின் தாள் பணிய
ஓடி ஓடி வந்தோமே நின்னருள் பெற்றிட
வாடி வாடி நிற்குமெங்கள் வேதனை களைந்திட
கோடிகோடி நமஸ்காரம் நீலாயதாக்ஷி பள்ளி எழுவாயே!

Other compositions, articles to follow.
Regards
V. Ramaswamy

raamaswamy,

loved your postings in chennaionline. if copyright is not an issue, maybe you can copy them here too.

thanks.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top