|
-
சூரியனுக்கு வரவேற்பு, இந்திரனுக்கு நன்ற&
0
'சுத்தத்வாத் சிவம் உச்யதே' என்கிறது வேதம். அதாவது சுத்தமே சிவம். எனவே, தூய்மையான மனதும், இடமுமே சிவபெருமானுக்கு உகந்தது என்பதை உணர்ந்து, வீட்டையும் தெருவையும் ஊரையும் சுத்தமாக வைத்திருந்து, தூய்மையானப் போகியாக, இந்தப் பண்டிகையைக் இயற்கையோடு இனைந்து மாசுபடாமல் கொண்டாடுவோம்
சூரியனுக்கு வரவேற்பு, இந்திரனுக்கு நன்றி... போகிப் பண்டிகையின் சிறப்பம்சங்கள்! #Pongal
நீண்ட நெடிய கலாசாரப் பெருமையைக்கொண்ட நம் நாட்டில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகையும் மனிதனின் வாழ்வை மேம்படுத்தவும், உறவுகளைக் கொண்டாடவும் உருவாக்கப்பட்டதே. அந்த வகையில் மண்ணையும் அது தரும் வளத்தினையும் கொண்டாடவே உருவானது பொங்கல் திருவிழா. பொங்கல் திருவிழாவின் முதல் நாள் விழாவாக மார்கழி மாதத்தின் கடைசி நாளில் வரும் போகிப் பண்டிகை அமைந்திருக்கிறது.
பண்டைய தமிழர்களின் வழக்கப்படி ஆண்டின் கடைசி நாளான இந்த நாளில், அந்த ஆண்டு முழுவதும் நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் நல்லவற்றைத் தொடர்ந்து செய்யவும் உறுதி ஏற்பார்கள். இதுவே ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற கருத்துருவமாகத் தோன்றியது. ‘போக்கி’ எனும் இந்தப் பண்டிகையே குப்பை கூளங்களை நீக்கி வாழ்விடங்களைச் சுத்தமாக்கும் நாளாக மலர்ந்தது. நாளடைவில் ‘போக்கி’ என்பது மருவி “போகி” என்றானது.

‘போகிப் பண்டிகை, தை மாதத்தில் தனது பயணத்தை மாற்றிக்கொள்ள இருக்கும் சூரியனை வரவேற்கும்விதமாகக் கொண்டாடப்பட்ட விழா’ என்று ஆன்மிக நூல்கள் தெரிவிக்கின்றன. பண்டைய காலத்தில் மழையை வரவழைக்கும் தேவர்களின் தலைவன் இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக இந்த விழா இந்திரா விழாவாகக் கொண்டாடப்பட்டது. போகம் எனும் மகிழ்ச்சிக்கு அடையாளமாக இருந்தவன் இந்திரன். எனவே, இந்த நாள் இந்திரனைப் போற்றும் விழாவாக ‘போகி’ என்றானது. இப்படிப் போகிப்பண்டிகை ஆன்மிக, கலாசார விழாவாக இன்றும் தொடர்ந்துவருகிறது.
போகி என்றால் ‘மகிழ்ச்சியானவன்’, ‘போகங்களை அனுபவிப்பவன்’ என்று பொருள். நல்ல விளைச்சலைக் கண்டு மகிழும் வேளாண்மை மக்கள் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடத் தயாராகும் தலைவாசல் விழாவே ‘போகிப் பண்டிகை’ எனப்படுகிறது.

Read more at: https://www.vikatan.com/news/spiritu...-festival.html
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
|