Tamil Brahmins
Page 2 of 3 FirstFirst 123 LastLast
Results 11 to 20 of 27
 1. #11
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,312
  Downloads
  35
  Uploads
  38

  0 Not allowed!
  கனைத்து இளம் கற்று எருமை கன்றுக்கு, இரங்கி
  நினைத்து முலை வழியே நின்று பால் சோர
  நனைத்து இல்லம் சேறாக்கும், நற் செல்வன் தங்காய்
  பனித் தலை வீழ உன் வாசல் கடை பற்றிச்
  சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
  மனத்துக்கு இனியானைப் பாடேலோர் எம்பாவாய்
  இனித் தான் எழுந்திராய், ஈதென்னப் பேருறக்கம்
  அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்


  12 - ம் பாட்டில், இளையாழ்வானைப் போலவே, விடாது கண்ணனோடே இருக்கும் ஒருவனுடைய தங்கை, பெரிய பக்தி குறிக்கோள் இல்லாதவளை, தோழிமார்கள் துயில் எழுப்புவதாய் குறிப்பு. அண்ணன் எந்த ஒரு காரணத்தையோ, பலனுக்காகவும் பரமனைப் பற்றியவன் அல்லன்.


  கண்ணனை அடையும் வழி முறைகள் 'உபாயங்கள்' எனப்படும். அவனுடைய திருவடி சரணம் அடைதல் 'உபே யம்' ஆகும். எந்த ஒரு உபாயத்தையும் கொள்ளாமல் அவனோடே மனத்தினால் கலந்திருப்பதே உபேயம்.


  'கனைத்திளம் கற்றெருமைக் கன்றுக்கு இரங்கி ' - இளமையினால் மடிகளில் பால் கனத்து, கன்றுகளைப் பற்றிய எண்ணம் வந்தவுடனேயே, எருமை இனங்கள். எங்கே திரிந்து கிடக்கிறதோ, எப்போது அவை வந்து பால் குடித்திடுமோ என்ற ஏக்கத்தினால் கனைத்திருக்குமாம்.


  'சொரணை இல்லையா! நீ என்ன எருமை மாடா' என்று பிறரை நாம் ஏசுகிறோம். எந்த ஜீவனிலுமே தாய்மைக்கு உள்ள அன்பிலும் கரிசனத்திலும் என்றும் பாகுபாடு கிடையாது.


  துக்கம் தொண்டையை அடைக்கும் போது நம்மையும் அறியாமல் நமக்கும் கனைப்பு ஏற்படும். யாருமே வந்து கறக்காமல் போனாலும் கூட, கன்று குடிப்பதாக எண்ணிக் கொண்டு தனக்குத்தானே திருக் காம்புகளின் வழியாக பாலினை வெளியில் பெய்து கிடக்குமாம்.


  'நனைத்தில்லம் சேறாக்கும்'


  கறக்கும் கோபர்கள் வாராததனாலும், தானே வெளி வரும் பால், பாத்திரங்களில் பிடிக்கப் பெறாமையாலும், கொட்டில்களில், தரையில் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து வீட்டிற்குள்ளும் புகுந்து, முழு வீட்டின் தரையையே, வெள்ளைச் சேறாக்கி விடுமாம்.


  இந்த அமுத வரிகளின் உட்பொருள். கண்ணனை எண்ணி நமக்குள் பெருகிடும் பக்தி பிரவாகம், கண்ணனால் அறியப் பெறாமையால், பெருக்கெடுத்து ஓடி, நம் இல்லம் முழுவதுமே நனைத்துக் கிடக்குமாம்.


  மேகங்கள் ஆழியுள் (கடலில்) புகுந்து நீரையெல்லாம் அருந்தி மேற்சென்று மழை கொடுக்குமாம். ஆனால் திருமலையில் பரவி கிடக்கும் நீரூற்றுக்களிலோ தானே ஊற்றெடுத்துப் பெருகி நிறைந்திருக்கும்.


  நல்ல பக்தர்கள் மற்றும் ஞானிகள் தங்களுடைய ஆற்றாமையாலே, அவர்களே கேட்காமல் போனாலும் எல்லோருக்கும் ஞான உபதேசங்களை வழங்கிக் கிடப்பார்கள். அர்ஜுனன், வேண்டிக் கேட்காத போதிலும், போர்க்களத்தினில் 'பூய ஏவ மகா பாஹோச் ச்ருணுமே பரம் வச:', தானே வலிந்து, அவனுக்கு நற்போ தனைகளை, கண்ணன் அருளியதைப் போலே


  'நற்செல்வன் தங்காய்' இளையாழ்வான் போன்று கண்ணனை விடாதுத் தொடர்ந்து கிடக்கும் தமையனைக் கொண்டவளே!. எழுந்திராய் என்று எழுப்பப் படுகிறாள். அவன் உறவால் மட்டும் அல்லாது குணத்தாலும் அண்ணனானாவன் என்ற குறிப்பு.


  'லக்ஷ்மணோ லக்ஷ்மி சம்பன்ன' - லக்ஷ்மணனுடைய சுயப் பலனற்ற ராம கைங்கர்யம் தான் உயரிய செல்வம். அந்தச் செல்வத்தை அளவிலதாய், கிருஷ்ண கைங்கர்யத்தினால் நிரந்தரமாகக் கொண்டவன், உறங்கி இருப்பவளின் அண்ணன்


  தோழிகள் உறங்கியவளிடம் சொல்கிறார்கள். உன் அண்ணனை விடக் கூட, எம் போன்ற பக்தர்களிடம் இன்னும் கரிசனையோடு இருக்க வேண்டாமோ நீ. விபீஷண ஆழ்வானை விடவும், அவனுடைய தங்கை 'திரிஜடை' ஸீதா பிராட்டிக்கு நெருக்கமானவளாய் இருந்தது போலே.


  'பனித் தலை வீழ நின் வாசல் கடை பற்றி' - மேலிருந்து பனி மழை பொழிந்து கிடக்கிறது, காலடியில் பால் வெள்ளம் சேறாகிப் பெருகிக் கிடக்கிறது. இடைப்பட்ட தோழியர்கள் மனத்தில் பக்தி வெள்ளம் ப்ரவாஹித்து பரவி கிடக்கிறது.


  வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்கள் எப்படி ஒரு படகைப் பிடித்துக் கொண்டிருப்பார்களோ, அது போலே உறங்குபவளின் வீட்டின் புழக்கடை உத்திரத்தைப் பற்றிக் கொண்டு நின்றிடும் தோழிகளாம்.


  'சினத்தினால்' - இரு சாராரின் சினத்தைக் குறிக்கும் சொல். முதலாவது, கிருஷ்ணனால் மனது பேதலிக்கப் பட்டு, அவன் சம்பந்தம் கிடைக்கப் பெறாமல் கோபம் கொண்ட கோபியர்கள், மற்றும், இராவணன், வருந்தித் திருந்திடுவான் என்று ராமபிரான் காத்திருந்தும் மாறிடாதவனை , வலியச் சென்று போர் ஆற்றிட வேண்டுமே, என்று எண்ணிய தயாளுவான ராமனின் 'சினம்'.


  பெண்கள் மனத்தை அலைக்கழிப்பவனான கண்ணன் பற்றிப் பேசும் போது, பெண்களின் நலனையே பெரிதாய்க் கொண்ட ராமபிரானை பிரஸ்தாபிக்கிறார்கள்.


  கூனியின் முதுகுக் கோணலைப் பந்தடித்துச் சரி செய்து, கைகேயியின் சொல்லுக்குப் பணிந்து, சபரிக்கு மோக்ஷம் கொடுத்து, அகலிகையின் சாபம் தீர்த்து, உள்ள நாள் முழுதும் சீதை ஒருவள் மட்டுமே மனைவியாக கொண்ட ஏக பத்தினி விரதனின் பெருமையைப் பேசுகிறார்கள் தோழி மார்கள்.


  'தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியானைப் பாடேலோர் எம்பாவாய்'


  கண்ணனை நினைத்த மாத்திரத்திலே கோபியர்களுக்கு அளவற்ற அன்பினாலும், மனோ நெருக்கத்தாலும் கோபம் பொங்கிடும், தங்களை விரைவில் வந்தடைய வில்லையே என்பதால். 'கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்' என்னும் வகையில் அவன் நாமத்தை யார் பாடக் கேட்டும் விரக வயப்பட்ட கோபியர்க்குக் கோபம் கொப்புளிக்குமாம்.


  ராமனுடைய பராக்கிரமங்களால், எண்ணிய மாத்திரத்திலேயே யாருக்கும் மனதினில் தேன் ஊறி இனிமை கொடுக்கும்.

  தண்ணீரைப் போன்று தயையும் கருணையும் நாலா பக்கத்திலும் பெருக்கிக் கிடப்பவன் ராமன் .


  'ததோ ராமோ மஹா தேஜோ ராவணேன க்ருதவ் ரணம் த்ருஷ்ட்வா
  ப்லவஹ சார்த்தூலம் கோபாஸ்வ வசமே யிவான்'


  - ராவணனால் அம்புத் தைத்து ரணம் திருவடிகளில் பட்ட போதும், நீரின் மேல் கிளம்பிய நெருப்பினனாய் காட்சி தந்தார். தனக்கு ஏற்பட்ட வலி கூடச் சாதாரணமானவனுக்கு, எந்த ஒழுக்கமும் அற்ற அரக்கன் ராவணனின் அம்பு மழையை எதிர்கொள்ள வேண்டிக் கிடக்கிறதே என்ற காரணத்தினாலேயே சினம் கொண்டார்.


  'பாடவும் நீ வாய் திறவாய் இனித்தாய் எழுந்திராய்' - எங்கள் மனோ வியாகூலங்களைக் கேட்ட பின்னும் உறங்குவாயோ. குறைந்தது எங்களோடு பேசவாவது செய்.


  'ஈதென்ன பேருறக்கம்' - இது என்ன பெண்ணே, அவ்வளவு ஆழமானத் தூக்கம். சூரியச் சந்திரர்கள் மாற்றங்களை அறிந்தே சம்சாரிகள் தூக்கம் களைந்து விடுவார்கள். எம்பெருமான் பள்ளி எழுச்சிப் பாடிடவும் எழுந்திடுவான், இது என்ன முடிவில்லாத தூக்கம்.


  'அனைத்தில்லத்தோரும் அறிந்தேலோரெம்பாவாய்' - நாங்கள் உன்னை உறக்கத்தில் இருந்து எழுப்புவதை ஊரார் எல்லோரும் அறிந்து கொண்டு விட்டார்கள். பகவத் விஷயங்கள் எவ்வளவு ரகசியமாகக் காப்பாற்றி வைத்தாலும், எப்படியோ எல்லாரும் அறிந்து கொள்வார்கள். நான்கு சுவர்களுக்குள் கற்றுக் கொடுக்கிற அஸ்திரப் பிரயோகங்களை, வெளியில் இருந்தே அறிந்து கொண்ட ஏகலைவனைப் போலே.


  இந்தப் பாடலின் உட்பொருள், நாம் அழுத்தமானஆணவத் திரையை மனத்துக்குள் கொண்டோமென்றால், ஆழ்ந்த தூக்கத்தினைபோலே, ஞான விழிப்பு ஏற்படவே செய்யாது.
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 2. #12
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,312
  Downloads
  35
  Uploads
  38

  0 Not allowed!
  திருப்பாவை பாசுரம் -13-
  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்

  புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
  கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
  பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
  வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
  புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
  குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
  பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
  கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.


  பொருள்:


  பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது. கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல்நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே! மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.
  விளக்கம்:
  “கள்ளம் தவிர்ந்து என்கிறாள் ஆண்டாள். தூக்கம் ஒரு திருட்டுத்தனம். பொருளைத் திருடினால் மட்டும் திருட்டல்ல! நேரத்தை வீணடிப்பதும் ஒரு வகையில் திருட்டு தான்! அதிலும், பகவானை நினைக்காத ஒவ்வொரு நிமிடமும் நமக்கு நாமே செய்யும் திருட்டு தான். வயதான பிறகு திருப்பாவையைப் படிக்கலமே என நினைக்கக் கூடாது. அப்போது, வாய் உளற ஆரம்பிக்கும். சில நேரங்களில் பாட முடியாமலே போய்விடும். இந்தப் பாடல் வெளியாகும் பத்திரிகையைப் பிடிக்க முடியாமல் கைகள் நடுங்கும். அப்போது, பகவானை நினைத்து என்ன பயன்? இளமையிலேயே, பகவானின் திருநாமங்களைச் சொல்லி, அவனது திருக்கதையைப் படித்தால் செல்வங்கள் நம்மைத் தேடி வராதோ?


  Andal Nachiyar Thiruvadigale Saranam
  Tiruppavai Pasuram -13

  Pullin vaay keendaanai pollaa arakkanai
  Killi kalaindhaanai keerththi mai paadi poy
  Pillaigal ellaarum paavai kalambukkaar
  Velli ezhundhu viyaazham urangitru
  Pullum silambina kaan podhari kanninaay
  Kulla kulira kudaindhu neeraadaadhe
  Palli kidaththiyo! Paavaay! Nee nan naalaal
  Kallam thavirndhu kalandhelor embaavaay.

  The lasses have reached,
  The place of prayer for Pavai,
  Singing the fame of our Lord.
  Who killed the ogre who came like a stork.
  And who cut off the heads of the bad ogre, One by one.
  The venushas risen in the morning,
  The Jupiter has vanished from the sky,
  The birds are making lot of sound,
  Of beautiful one with wide eyes red as a flower.
  Without taking bath by dipping
  again and again in ice cold water,
  Would you prefer to sleep.
  Oh lass, On this holy day,
  Do not stay aside, And come to bathe with us.
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #13
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,312
  Downloads
  35
  Uploads
  38

  0 Not allowed!
  திருப்பாவை பாடல் -14


  உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
  செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
  தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
  எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
  நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
  சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
  பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.


  பொருள்: எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று
  கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே.
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #14
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,312
  Downloads
  35
  Uploads
  38

  0 Not allowed!
  திருப்பாவை பாசுரம் -15-
  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்


  எல்லே. இளம் கிளியே இன்னம் உறங்குதியோ
  சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
  வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
  வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
  ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
  எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
  வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
  வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்


  பொருள்:


  “”ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, “”கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள்.
  உடனே தோழிகள், “”உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர்.அப்போது அவள், “”சரி..சரி…எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள்.””அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். “”என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள்.தோழிகள் அவளிடம், “”நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள்.
  விளக்கம்:
  ஒரு பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமைபட பாடியிருக்கிறாள் ஆண்டாள். பெண்களுக்கு பேசக்கற்றுத்தரவா வேண்டும்! இந்தப் பாடலில் ஒரு பெண்ணை மற்ற பெண்கள் கலாய்க்கும் படியான ஒரு சூழலை நகைச்சுவை ததும்ப பாடியிருக்கிறாள். படிக்கப்படிக்க சர்க்கரைத் துண்டாய் இனிக்கும் பாடல் இது. இந்தப் பாட்டுடன் தோழியை எழுப்பும் படலம் முடிந்து விடுகிறது.


  Tiruppavai Pasuram -15-
  Elle ilam kiliye innam urangudhiyo
  chil enru azhaiyen min nangaiyeer podharuginren
  vallai un katturaigal pande un vaay aridhum
  valleergal neengale naane thaan aayiduga
  ollai nee podhaay unakkenna verudaiyai
  ellaarum pondhaaro pondhaar pondhu ennikkol
  val aanai konraanai maatraarai maatrazhikka
  vallaanai maayanai paadelor embaavaay


  “Hey, little bird, Are you still sleeping? ”
  “Don’t disturb my sleep , Lasses, I will just come”.
  “You are good in your speech, We know what you mean.”
  “You be good, but leave me alone”
  “Come quickly, why is it different for you?”
  “Have every one gone?” “Gone, think they have gone”
  “Please wake up and sing,
  Of he who killed the big elephant,
  Of him who can remove enmity from enemies,
  And of him who is the holy enchanter,
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 8. #15
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,312
  Downloads
  35
  Uploads
  38

  0 Not allowed!
  திருப்பாவை பாசுரம் -16-
  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்


  நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
  கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
  வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்
  ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
  மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
  தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
  வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ
  நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்


  பொருள்:


  எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். “அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.


  விளக்கம்:


  ஒருவர் ஒரு செயலைச் செய்யப் போவதாக தெரிந்த ஒருவரிடம் சொல்கிறார். ஒருவேளை, அது அவருக்கு பிடிக்காமல் இருந்தாலும் கூட, ஆரம்பத்திலேயே, “”இதைச் செய்யாதே, நீ செய்யப் போவது உருப்படவா போகுது போன்ற அபசகுனமான வார்த்தைகளை பேசிவிடக்கூடாது. “அப்படியா? என்று ஆரம்பித்து, செய்யப்போகும் பணியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதன் பின், “இப்படி செய்தால் நன்றாக இருக்குமே என்று சாந்தமாக அறிவுரை சொல்லலாம். சொற்கள் மனித வாழ்வில் மிக முக்கியமானவை என்று ஆண்டாள் இப்பாடல் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறாள்.


  Andal Nachiyar Thiruvadigale Saranam
  Tiruppavai Pasuram -16


  Naayaganaay ninra nandhagopan udaiya
  koyil kaappaane! kodi thonrum thorana
  vaayil kaappaane! mani kadhavam thaal thiravaay
  aayar sirumiyaromukku arai parai
  maayan mani vannan nennale vaay nerndhaan
  thooyomaay vandhom thuyil ezha paaduvaan
  vaayaal munnam munnam maatraadhe ammaa! nee
  neya nilai kadhavam neekkelor embaavaay


  Hey, He who guards the palace of Nanda Gopa,
  Hey, who guards the ornamental door with flags,
  Please be kind to open the door with bells,
  For yesterday the enchanter Kannan,
  Has promised to give beating drums,
  To us the girls from the houses of cow herds.
  We have come after purification,
  To wake Him up with song,
  So do not talk of this and that, Hey dear man,
  And open the door with closed latches,
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 10. #16
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,312
  Downloads
  35
  Uploads
  38

  0 Not allowed!
  திருப்பாவை திவ்ய பிரவாகம் - 19 - பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த மூவாயிர/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிய ஆறாயிரப் படிகளை அனுசரித்தது.


  17 - ம் பாடல்


  அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
  எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்
  கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குல விளக்கே
  எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
  அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த
  உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
  செம்பொற் கழல் அடி செல்வா பலதேவா
  உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்


  ஒரே திரளாய் உள்ளே நுழைய, நந்தகோபனின் திரு மாளிகைக் காவலர்கள், கதவுகளின் கரும் தாள்களைத் திறந்து விடுகிறார்கள்.


  கண்ணனுடைய அருளைப் பெறுகைக்கு காத்திருக்கும் கோபியர் குழாம், ஏற்கனவே பெற்றனுபவித்துக் கொண்டிருக்கும் நந்தகோபனார் தொடங்கி, வரிசையாக ஒவ்வொருவராய் எழுப்புகிறார்கள். வைணவத்தில் குரு பரம்பரையை சேவித்தல் ஸ்ரேஷ்டமானது. 'முறை தப்பாமே குரு பரம்பரை வழியே பற்றுகை' என்பதாக.


  திருவாசல் காப்பாளர்களின் அனுமதி கொண்டு உள்ளே வந்த பெண்கள், உறங்கிக் கிடக்கும் கிருஷ்ணனையே நோக்கிப் பார்த்துக் கிடக்கும் நந்தகோபரை, பெருமாளாகப் பாவித்து துயிலெழுப்புகிறார்கள்.


  'ஸாஷான் மன்மத மன்மத:' என்ற மன்மதனான கண்ணனைக் கண்டால் விடார்கள் கோபியர்கள், என்பதனால் அவனையே பார்த்துக் கிடக்கும் நந்தகோபனைச் சென்று பற்றினார்கள்.


  இந்தப் பாடல் ப்ராதான்யமாக கண்ணனைப் பெற்ற நந்தகோபனைப் போற்றிடும் விசேஷம். .


  'அம்பரமே, தண்ணீரே, சோறே' - வானமே, தண்ணீரே, என்று எல்லையற்றுத் தருகிற வஸ்துக்களோடு, சோறே, வஸ்திரங்களே என்ற என்றுமே நமக்குத் தேவைப்படும் நித்ய அத்யாவசியங்கள், கொடுத்தருளும், எங்கள் பெருமானே என்று நந்தகோபனைத் துதிக்கிறார்கள்.


  கிருஷ்ணனைப் பெற்றுத் தருகிற ஸ்வாமித்வத்தால் நந்தகோபர் எம்பெருமான் ஆனார். இந்த உடம்பின் அத்யாவசியங்களான வானமும், தண்ணீரும், சோறும், வஸ்திரங்களையும் தருவதில் தயக்கம் இல்லாத தயாளனே, எங்கள் மனத்துக்கு ஆதாரமான கண்ணனை நாங்கள் கண்டருள தயை செய்யுங்கள்.


  'அறம்செய்யும்' - கொடை மற்றுமன்று, கர்த்தவ்யம் என்னும் தர்மத்தையும் விடாத மன்னனே. 'ஏகைக பல லாபாய ஸர்வ லாபாய கேசவ' - உலகத்திலே உள்ள எல்லா லாபங்களுக்குள்ளும் பிரதம லாபமான கண்ணனை எங்களுக்கு அருள வல்ல பெரும் கொடை வள்ளலே.


  'நந்த கோபாலா துயிலெழாய்' - உள்ளே நுழைந்த ஆய்ச்சிகள், கிருஷ்ணனுக்குப் பக்கத்தில் உறங்கும் யசோதா பிராட்டியை முதலில் எழுப்பிடாமல், கட்டிலின் வெளிப்புறத்தில் வேலும் கூர்வாளோடும் 'கூர் வேல் கொடுந் தொழிலனான நந்தகோபன்' தன்னை எழுப்பிடுவது எதனால்.


  ஆய்ச்சி மார்கள் அறிந்தோ அறியாமலோ 'த்வய நிஷ்டர்கள்' - அதாவது பிராட்டியையும், அவள் மூலமாக எம்பெருமானையும் ஆஸ்ரயித்து நிற்கும் பக்தைகள். யசோதை பிராட்டி வாத்சல்யத்தோடு கண்ணனை ஒரு புறத்திலும், நந்தகோபனை மற்றொரு புறத்திலும் அணைத்துக் கிடக்கிறாள், எப்படி பிராட்டி பரமத்மனை ஒரு புறத்திலும், விபூதி எனப்படும் உலகப் பிரஜைகளை இன்னொரு புறத்திலும் அணைத்துக் கிடப்பதைப் போல


  'கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே குல விளக்கே' யசோதா பிராட்டியைப் பற்றிய உரைகள் இவை. வஞ்சிக் கொம்பு போல வளர்ந்து கிடக்கும் ஆயர் குல குமரிப் பெண்களின் உயர்ந்த தலைவியே. கொழுந்தே - கொழுந்தினைப் போன்ற ஆயர் சிறுமியர்கள் வேதனை பட்டால் துயருறும், முகம் மாறிடும் பெரும் பெண்ணரசியே.


  அடியேன் சற்றே மாறுபட்டு, கொம்பனார் எனப்படும் கொம்புகள் கொண்ட ஆவினங்களுக்கு உணவு செய்வித்து அவைகளைப் ப்ரீதியோடு பராமரித்திடும் அன்னையே என்று யோசித்ததுண்டு.


  'எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்' - நாங்களாகவே மனதினால் சுவீகரித்துக் கொண்டக் கண்ணனைப் பெற்ற எம்பெருமாட்டியே!, அன்னையே!. எம்பெருமான் நந்தகோபன் ஆனதால் யசோதா எம்பெருமாட்டியானாள்.


  ஊர் முழுவதும் திரிந்து, அழிவு செய்து, மூலையில் இருப்பனான கண்ணனின் அன்பு ஒன்றையே பெரிதாகக் கொண்டு, ஊரே திரண்டு வந்து அவன் மேல் பழி சொன்னாலும், வெறும் கண்டிப்பாய், 'செய்தாயா' என்று மட்டும் கேட்டு விட்டு, ஒருவிதத்தில் கண்ணனின் குறும்புகளுக்குத் துணை போன யசோதையே, நாங்கள் வந்துக் காத்துக் கிடைப்பதையோ எங்கள் குறைகளையோ அறிய மாட்டாயோ?


  'அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உலகளந்த' தேவர்களையும் ஜகத்தையும் தீய சக்திகளிடமிருந்து காத்திட, ஆகாசத்தையே அறுத்துக் கொண்டு வளர்ந்து, உறங்கிடும் குழந்தையை அணைத்துக் கிடக்கும் தாயைப் போலவும், தலையில் எண்ணையை ஊற வைத்துக் குளிர்விப்பதான திருவடிகளை ஜகத்தின் மேல் வைத்து உலகத்தை அளந்த திரு விக்ரமனே.


  'உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்' - தேவர்களின் தலைவனே நீ உறங்கியது போதும். ரக்ஷகர்களுக்கு தூக்கம் சரியோ?, 'சதா பஸ்யந்தி', என்னும் வகையில் இமை கொட்டாமல் இறுதி நிலையில் உடல் கிடக்கும், உத்தமர்களின் கண்களுக்கு ஸ்பர்சித்து மூடச் செய்திடும், உத்தமனே. எங்களுக்கு முகம் காட்டாமல் தூங்கி இருந்து, எங்களையும் கண்கள் மூடச் செய்திடாதே. சம்ஸார தூக்கத்தில் ஆழ்த்தி விடாதே.


  'செம்பொன் கழலடி செல்வா பலதேவா உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்' - இளைய பெருமாள் கண்ணனுக்கு முன் பிறந்த பலராமனே. அவனுக்கு முன்னாலேயே 'பிள்ளை பிறக்கைக்கு பொற்கால் பொலியப் பிறந்த சீமானே', நீயும் உன் தம்பியும், ஒருவரைப் பிரியாமல் இன்னொருவர் கட்டிக் கொண்டு கிடக்கும் உறக்கத்திலிருந்து எழுந்திருக்க மாட்டீர்களோ?. அவனையும் எழுப்பி நீயும் எழுந்திடுவாய்.
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 11. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 12. #17
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,312
  Downloads
  35
  Uploads
  38

  0 Not allowed!
  திருப்பாவை பாசுரம் -18-
  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்


  உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
  நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
  கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
  வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
  பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
  பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
  செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
  வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


  பொருள்:


  மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.


  விளக்கம்:
  பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை முதலில் சேவிக்க வேண்டும். வீட்டில் கூட அப்படித்தானே! அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் “எதற்கடா அதெல்லாம் என்று மீசையை முறுக்குவார். அதையே, அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச்சொன்னால், அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும். இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால்…அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்துவிட்டால் அவனால் தப்பவே முடியாது. நரசிம்மரின் கோபத்தைக் கூட அடக்கியவள் அல்லவா அவள்! அதனால், கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.


  Andal Nachiyar Thiruvadigale Saranam
  Tiruppavai Pasuram -18-
  Undhu madha kalitran odaadha thol valiyan
  nandhagopan marumagale nappinnaay
  kandham kamazhum kuzhali kadai thiravaay
  vandhu engum kozhi azhaiththana kaan maadhavi
  pandhal mel pal kaal kuyilinangal koovina kaan
  pandhu aar virali un maiththunan per paada
  chendhaamarai kaiyaal seeraar valai olippa
  vandhu thiravaay magizhndhelor embaavaay.


  Hey, Who is the fair daughter in law,
  Of Nanda gopa, who has several elephants,
  And who is a great hero who never ran away from his enemies,
  Hey Lady Nappinnai, who has hair surrounded by holy scent,
  Please be kind to open the door.
  The cocks are everywhere waking us up,
  The koels flock on the jasmine Pandals,
  And coo so that we all wake up,
  Hey Lady who happily plays ball,
  To help us sing your Lords fame,
  With your hands with tingling bangles,
  Please open the door with happiness,
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 13. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 14. #18
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,312
  Downloads
  35
  Uploads
  38

  0 Not allowed!
  திருப்பாவை பாசுரம் -20-


  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்


  முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
  கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
  செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
  வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
  செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
  நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
  உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
  இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்


  பொருள்:


  முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.


  விளக்கம்:
  கண்ணனின் திருக்குணங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். கண்ணன் கடவுள். அவள் எல்லோருக்கும் பொதுவானவன், அவன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமானவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அவனையும் கேட்கிறார்கள். உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து! நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து. கண்ணாடி உருவத்தைக் காட்டும். ஆனால், உருவத்தில் ஒட்டியுள்ள அழகையோ, அழுக்கையோ தன்னில் ஒட்டிக்கொள்ளாது. வாழ்க்கை என்றால் பட்டும் படாமலும், இந்த உடல் ஒரு வாடகை வீடு, இதை எந்த நேரமும் காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும் இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. ஆண்டாளின் கவித்திறமையில் ஒளிந்துள்ள மறைபொருளுக்கு ஈடேது!


  Andal Nachiyar Thiruvadigale Saranam

  Tiruppavai Pasuram 20


  Muppaththu moovar amararkku mun senru
  Kappam thavirkkum kaliye thuyil ezhaay
  Seppam udaiyaay thiral udaiyaay setraarkku
  Veppam kodukkum vimalaa thuyil ezhaay
  Seppenna men mulai chevvaay chiru marungul
  Nappinnai nangaay thiruve thuyil ezhaay
  Ukkamum thattoliyum thandhu un manaalanai
  Ippodhe emmai neeraattelor embaavaay


  Please wake up Oh, Lord,
  Who removed sorrow and fear,
  From the thirty three sections of Devas,
  Even before they approached you,
  Oh Lord, Who is glittering like gold,
  Oh Lord, who has inimitable valour, Please wake up,
  Oh Lady Nappinnai, Who has desirable busts like golden pots.
  Who has little red mouth,
  And who has thin narrow hips,
  Please wake up, Oh Goddess of wealth.
  Please give mirror and fan,
  Just now to your consort,
  And allow us to take bath,
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 15. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 16. #19
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,312
  Downloads
  35
  Uploads
  38

  0 Not allowed!
  ஏற்றக் கலங்கள் எதிர் கொண்டு மீதளிப்ப
  மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
  ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
  தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
  மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
  ஆற்றாது வந்து உன் அடி பணியுமாப் போலே
  போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்


  புருஷாகார பூதை (கண்ணனையும் ஜகத்திலுள்ள வஸ்துக்களையும் இணைக்கக் கூடிய பாலமானவள்) நப்பின்னை, கோபியர்கள் மனக் கிடையை உணர்ந்து அவர்களோடு சேர்ந்து கண்ணனைத் துயிலெழுப்பி, அர்த்திக்கக் கடவோம் என்று கூறுகிறாள்.


  கிருஷ்ணனுடைய அம்புகளுக்கு இலக்கானவர்கள். எப்படி அவன் காலடிகளில் விழுகிறார்களோ, அது போன்று அவனுடைய குண ஸ்வரூபத்துக்கு அடிமையாகி நாமும் அவன் காலடிகளில் சரணம் புகுவோம் என்று நப்பின்னை உட்பட்ட கோபியர் கூட்டம் முனைகிறார்கள்.


  'ஏற்றக் கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப' - நிரப்புவதற்க்காக வைக்கப்படும் பாத்திரங்களிலே, எதிர்த்துப் பொங்கி வெளியில் ததும்பிடும் (பால்). பாத்திரம் எதுவானாலும் பால் சொரியும் பேதம் பசுக்களுக்கு இல்லை. பாத்திரம் நிரம்பி வழிவது பசுக்களின் குற்றமா?.


  கண்ணனைப் போன்றே அவன் ஸ்பரிசத்தால் நெகிழ்ந்து வளர்ந்த பசுக்கள், அர்த்திக்க வரும் பக்தனுக்குள் பேதம் கொள்ளாமல் அருளை வாரி இறைத்திடும், அவனைப் போலவே, பாத்திரங்களுக்குள் பேதமில்லாமல் பாலை நிரப்பி வழியச் செய்திடுமாம். நந்தகோபனுடைய, வீரமும், தருமமும், புஜ பலமும் அவன் நாட்டின் பசுக்களிலும் நிறைந்து கிடக்கிறதென்பதும் குறிப்பு.


  'மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்' - கலம் (பாத்திரம்) அடியில் வைக்காமல் போனாலும் மடி தணியாமல் இருப்பதனால் பால் சொரிகின்ற பசுக்கள். பெண்களுக்கும் பேதைகளுக்கும் கூட பயமில்லாது அணை த்துக் கொள்ளும் வண்ணம் அமைந்த சௌஜன்யமான வள்ளல்கள் போன்ற பெருமை மிகுந்த பசுக்கள்.


  'வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் என் வள்ளல்' - 'எத்தைத் தா என்று கேட்டாலும் தந்திடும் குற்றமற்ற எங்கள் கண்ணன்', என்னுமாப் போலே.


  'ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்' - ஆற்றல் மிகுந்த கிருஷ்ணனுடையது போன்ற தன்மைகள் கொண்ட நந்தகோபனின் மகன் என்ற கூற்று. மகனால் தந்தைக்கும், தந்தையால் மகற்கும் பெருமை.


  'ஸமஸ்த கல்யாண குணாம்ருதோ அதி', 'அகில ஹேய ப்ரத்யநீக', 'அபரிமித குண கணவ் கமகர்ணவ்' என்பவை கிருஷ்ணனின்ஆற்றல்களின் எல்லைகள்.


  சுயமாகவே பல செல்வங்களுக்குச் சொந்தமான நந்தகோபருக்கு, கண்ணன் பிறந்ததால் அவனே ஈடில்லாச் செல்வமாகி, இன்னும் பெருகியதாம்.


  நீ எத்தனைச் செல்வானானாலும், அந்தச் செருக்கினால், எங்களை மறந்திடாமல் நினைவு கொள்வாய். எல்லாம் அறிந்து, உணர்ந்தவனையே 'அறிவுறாய்' என்று சொல்லும் படியாலே, அவனுக்குப் பிடித்தவர்களை மட்டும் பற்றிக் கொண்டு, மற்றவரை அவன் விட்டு விடக் கூடாதென்பது ஆயர் சிறுமியர்கள் கோரிக்கை.


  'ஊற்றமுடையாய் பெரியாய்' -வேதங்களால் பலமுறை பல்லோர்களால் அர்ச்சிக்கப் பெற்று வன்மை பெருகியவன். 'நாராயண பரோ வேத:', 'வேத முதல்வன்', 'நான் மறைகள் தேடியோடும் செல்வன்', என்கிற வேதங்களின் உற்பத்திக்கு வித்தானவன்.


  'உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே' வேறு பாடற்று யாரும் காணும் வண்ணம் நினைப்பவர்க்கு, அர்ச்சிப்பவருக்கு, நிந்திப்பவருக்குக் கூடத் தோற்றம் அளிக்கும் எளிதான சுடர் போன்றவனே.


  விதிப் பயனால் தோன்றிடும் நாமெல்லாம், ஒவ்வொரு பிறவியிலும், அழித்தால் மாற்றுக் குறையும் தங்கமாய் மழுங்கிக் கொண்டே போகிறோம். அவனோ அனைவருக்கும் அனுக்ரஹ கார்யங்களே செய்வதனால், நெருப்பிலிட்ட மாணிக்கம் போலே சுடர்கிறான். 'பரவு தொல் சீர் கண்ணா என் பரஞ் சுடரே' என்று விளிக்கப் பெறுகிறான். உன்னுடைய கல்யாண சம்பத்துக் குணங்கள் பரிமளிக்கும் வண்ணம் விழித்திடாய்.


  'மாற்றாருனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமாப் போலே ' - பரம ஸ்வரூபனனான மாலனுக்கும் எதிரிகள் உண்டோ?. பகவத விரோதிகள் அவனுக்கு எதிரிகள். அன்பர்களின் எதிரிகள் அவனுக்கு எதிரிகள்.


  அவனால் அம்பு பட்டவர்கள் காலிலே வீழ்ந்தாவது பிழைத்துக் கொள்ளலாம், ஆனால், துர்க் குணம் கொண்டவர்களுக்கு விடிவில்லை.


  உன்னோடு போரிட்டுத் , தங்களுடைய வலிமைகளைத் தொலைத்து, ஓரிடத்திலும் புகலற்று, உன் வீட்டு வாசலின் கீழே வீழ்ந்து 'தமேவ சரணம் கத', என்று ராமனுடைய காலிலே வீழ்ந்த காகாசுரன் போல இருக்கை.


  'போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் ' பெரியாழ்வாரைப் போலப் பல்லாண்டு பாடிப், எங்களைத் தோற்கடித்த உன் விசேஷ குணங்களைப் பாடி புகழ வந்துள்ளோம், எழுந்திராய்.
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 17. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 18. #20
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,312
  Downloads
  35
  Uploads
  38

  0 Not allowed!
  திருப்பாவை பாசுரம் -22-
  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்


  அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
  பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
  சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்
  கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
  செங்கண் சிறுச் சிறிலே எம்மேல் விழியாவோ?
  திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
  அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
  எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்


  Andal Nachiyar Thiruvadigale Saranam
  Tiruppavai Pasuram -22-
  Am kan maa nyaalaththu arasar abimaana
  Pangamaay vandhu nin palli kattir keezhe
  Sangam iruppaar pol vandhu thalaippeydhom
  Kingini vaay cheydha thaamarai poo pole
  Sengan chiru chiridhe emmel vizhiyaavo
  Thingalum aadhiththanum ezhundhaar pol
  Am kan irandum kondu engal mel nokkudhiyel
  Engal mel saabam izhindhelor embaavaay
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 19. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
Page 2 of 3 FirstFirst 123 LastLast

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •