Tamil Brahmins
Our website is made possible by displaying online advertisements to our visitors.
Please consider supporting us by disabling your ad blocker.
Alternatively, consider donating to keep the site up. Donations are accepted via PayPal & via NEFT. Details on how to donate can be found at here
Page 1 of 3 123 LastLast
Results 1 to 10 of 27
 1. #1
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,564
  Downloads
  36
  Uploads
  38

  திருப்பாவை (Thiruppavai Paasurams and Explanations)


  0 Not allowed!
  பாடல் 1


  மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
  நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!


  சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
  கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்


  ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
  கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்


  நாராயணனே நமக்கே பறை தருவான்
  பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்


  பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.


  விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 2. #2
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,564
  Downloads
  36
  Uploads
  38

  0 Not allowed!
  திருப்பாவை பாடல் -2

  வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
  செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
  பையத் துயின்ற பரமன் அடிபாடி,
  நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடிமையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.


  பொருள்: அன்புத்தோழியரே! அந்த பரந்தா மனையே நம் துணைவனாக அடைய வழி செய்யும் பாவைநோன்பு விரத முறையைக் கேளுங்கள். உணவில் நெய் சேர்க்கவோ, பால் அருந்தவோ கூடாது. சூரிய உதயத்துக்கு முன்பே நீராட வேண்டும். கண்ணில் மை இடக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது தீய செயல்களை மனதால் நினைப்பதையும், தீய சொற்களை பேசுவதையும் தவிர்க்க வேண்டும். பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. ஏழைகளுக்கும், பக்தர்களுக்கும் போதுமான அளவு தர்மம் செய்ய வேண்டும். இந்தப் பாடல் 107 வது திருப்பதியான திருப்பாற்கடல் குறித்து பாடப்படுகிறது.

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #3
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,564
  Downloads
  36
  Uploads
  38

  0 Not allowed!
  ஹேவிளம்பி ஆண்டு மார்கழி மாதம் 3 தேதி
  ஆண்டாள் நாச்சியார் அருளிய
  திருப்பாவை பாடல் 3


  ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
  நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
  தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
  ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
  பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
  தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
  வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
  நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.


  பொருள்: சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.


  மாணிக்கவாசகர் அருளிய
  திருவெம்பாவை பாடல் 3


  முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்


  அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
  தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
  பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
  புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
  எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
  சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
  இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்


  பொருள்: முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற, என்கிறார்கள்.தூங்கிக் கொண்டிருந்த தோழி, ""ஏதோ தெரியாத்தனமாக தூங்கி விட்டேன். அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச வேண்டுமா? இறைவனின் மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களைப் போல் எனக்கு இந்த விரதமிருந்ததில் அனுபவமில்லை. மேலும், பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே! என வருந்திச் சொல்கிறாள்.வந்த தோழியர் அவளிடம், ""அப்படியில்லையடி! இறைவன் மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானை பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம், என்றனர்.

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #4
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,564
  Downloads
  36
  Uploads
  38

  0 Not allowed!
  ஆழி மழைக் கண்ணா ஓன்று நீ கை கரவேல்
  ஆழியில் புக்கு, முகந்து, கொடு, ஆர்த்து ஏறி
  ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
  பாழி அம் தோளுடை பத்ம நாபன் கையில்
  ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
  தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
  வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
  மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


  (எளிமையாய் படிப்பதற்காக, பிரித்து எழுதப் பட்டது)


  மழையுடைய சிறப்பை, மாலனுடைய சிறப்பாய் விளக்கும் உன்னதப் பதிகம்.


  'ஆழி மழைக் கண்ணா': மழைக்குக் கடல் (ஆழி) தான் தாய். கடலில்லையேல் மேகமோ, மழையோ இல்லை. நிலத்துக்கு ஆதாரமே கடல் தான். உலகம் முழுதுமே கடல் சூழ்ந்திருப்பது தான் பிரளயம். ஆதியும் அந்தமும் ஆனது பிரளயம்.


  நிலம், கடலில் ஒரு சிறு திரட்டு தான். மழையில்லையேல் வளம் இல்லை. வளம் இல்லையேல் வாழ்வே இல்லை. ' ஆழி சூழ் உலகமெல்லாம் பாரதனே ஆள நீ போய்' என்று கைகேயி ராமனிடம் பேசிய வாசகமாய் கம்பன் சொல்லுவான்.


  நோன்பிருக்கும் கோபியர் சிறுமிகள் வேண்டுவது 'பர்ஜன்யன்' என்னும் மழைத் தேவனைக் குறித்து. ஆனாலும் கண்ணன் என்ற பெயரை அல்லாது வேறு எந்த தேவதையையும் வரிக்கத் தெரியாததால், பர்ஜன்யனின் மழை கொடுக்கும் செயலைக் கூட கண்ணனின் பெயரோடு சேர்த்து விளிக்கிறார்கள்.


  கண்ணனும் கடல் போன்று கருத்தவன். நம் எல்லோர் மேலும் கருணை மழை பெய்ய ஓங்கி உலகளந்த கார் மேகம் போன்றவன். க்ரியை என்பதை ப்ரம்மனிடமும், சம்ஹரிப்பதை ருத்ரனிடமும், பிரித்துக் கொடுத்து, பரப்ரஹ்மமான விஷ்ணு,


  ஜீவாத்மாக்கள் மற்றும் அசேதனங்களின் ரக்ஷணை என்னும் செயலை மட்டும் தன்னிடம் வைத்துக்கொண்டு 'சமுத்திர இவ கம்பீர்யை' என்னும் வகையில் 'ஜகத்தை ஈரக்கையால் தடவி நோக்கவல்லானாக' , கம்பீரனாய் இருக்கிறான்.


  'ஓன்று நீ கைகரவேல்': நல்லவர் தீமைகள் எனப் பகுத்துப் பார்க்காமல் எல்லோருக்கும் தேவையான மழையைக் குறையாமல் பெய்திடுவாய்.


  'பாபா நாம்வா சுபாம் நாம்வா' என்று நல்ல குணவதிகளையோ, ராக்ஷசிகளையோ, வேறு படுத்தாமல், எங்கள் கோஷ்டியில் நாங்கள் இணைத்துக் கொல்வதைப்போல, எல்லோரையும் சமமாகப் பாவித்து மழை கொடுப்பாய் என்று வேண்டல்.


  'கை' என்பது, தானம், கொடுப்பது என்பதற்குக் குறியீடாக சொல்லப் படுவது, எப்படி 'அவனுக்கு ரொம்ப பெரிய தாராளமான கை' என்று கொடை வள்ளல்களைச் சொல்லுமாப்போலே.


  'ஆழியில் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி ' - உபயோகங்கள் இல்லாத, பள்ளங்களிலோ, சாக்கடையிலோ ஒதுங்காமல், திரும்பத் திரும்ப சுழற்சிக்கு ஏதுவாக, பெய்யும் மழை நீர், நிலத்தினுள் உபயோகமான பின் கடலில் மட்டும் தான் புக வேணும்.கடல் மணலில், நீர் கூடத் தெரியாத வண்ணம் எல்லா நீரையும் மேகமானது க்ரஹித்துக் கொண்டு, அடிமண் அடியோடே தட்டப் பருகி, ஆர்த்து - ஆரவார மின்னலும் முழங்க லுமான மழையோடு வர வேண்டும்.


  'ஓம் மேகேஸ்வன க்ருஷ்ண:' - எப்படி கிருஷ்ணன் கர்ஜனையோடு சொன்ன போதனைகளை நாங்கள் கிரஹிக்கிறோமோ, அவ்வண்ணம் மறைந்து கொண்டே நம் கார்யங்களை நடத்தி அருளும் ஈஸ்வரனைப் போல அல்லாமல், சப்தத்தோடும் முழக்கத்தோடும் ஊரார் அறியும் வண்ணம் மழை பெய்ய வேண்டும்.


  மழையால் ஏற்படும் உயரிய பலன்களையும் மீறி, மழைத் தூறல் ஆரம்பித்தவுடனேயே மனத்தில் மகிழ்ச்சி வருவதால், பெரும் சத்தத்தோடும் ஆரவாரத்தோடும் வந்து பெய்து எல்லோர் மனங்களையும் இன்பத்தால் நிரப்பிட, நோன்பிருக்கும் ஆயர் சிறுமிகள் வேண்டுகிறார்கள்.


  'ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து ' - சகல பதார்த்தங்களையும் உண்டாக்க வேணும் என்று நினைக்கையில் சர்வேஸ்வரனின் உடல் உருவம் கருத்திருக்கும். உன்னுடைய திருமேனியும் அப்படியே இருக்க வேணும் என்று நோன்பிருக்கும் சிறுமிகள் வரிக்கிறார்கள்.


  குடும்பத்துக்காக இராப்பகல், வெய்யிலிலும் மழையிலும் அலைந்து உழைக்கும் குடும்பத் தலைவனின் மேனி கருத்திருக்கும். அடுப்படியில் பல சுவை உணவாக்கும் அன்னையின், பரிஸாராகரின் உடலும் கருத்துத் தானிருக்கும்.


  'பாழி அம் தோள் உடைய ' - அழகிய வலிமையான, (இடப் புறத்துத்) தோள்கள் கொண்ட


  'பற்பநாபன் கையில்' - பிள்ளைகளை தொட்டிலிலே வளர்த்திப், புற்பாயிட்டுப் பூரித்து ஆயுதம் கொண்டு நோக்கியிருக்கும் தந்தையை/ காவலர்களை போலே, சிருஷ்டிக்குக் காரணமான ப்ரஹ்மனை கமலத்திலே ஆசனம் கொடுத்து அமர்த்தி, கையால் தாங்கிக் கிடக்கும் பத்மநாபன். 'அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான்' என்ற பெருமை மாலனுக்கு உண்டு.


  'ஆழி போல் மின்னி' - ப்ரம்மன் பத்மநாபனின் திரு மகன். திரு வாழி ஆழ்வான் - பிரதம தளபதி. எந்தத் தந்தையும் (பத்மநாபன் போல) தன் பிள்ளைக்குச் செய்யும் கடமைகளை வெளியில் பிரகடனப் படுத்திக் கொள்வதில்லை. திருவாழியாழ்வன், உண்மையான ஊழியனுக்கு ஒப்பானவன். எப்படி ஊழியன் தன் சேவைகளை வெளியில் பிரகடனப்படுத்தி மகிழ்வானோ , அவ்வண்ணம் ஜகத்தைக் காப்பதை மின்னி ஒளிர் ந்துத் தெரிவிக்கிறான்.


  'வலம்புரி போல் நின்றதிர்ந்து' - மகா பாரதப் போரிலே எப்படி பாஞ்சஜன்ய த்வனி அதிர்ந்து ஒலித்ததோ அது போல பெரும் சத்தத்துடன் மழையின் சப்தம் ஒலிக்கட்டும்.


  'சுடராழியும் பல்லாண்டு', 'அப்பாஞ்சஜன்யமும் பல்லாண்டு' என்னும் வகையில் இரண்டும் தொடர்ந்து தம் திருச் செயலாற்றுமாப் போல. சங்கின் ஒலியானது, பிரணவத்தின் அர்த்தத்தை இடை விடாமல் திருவாய் மொழி முகத்தாலே அருளிச் செய்வது என்ற ஈடும் உண்டு.


  'தாழாதே சார்ங்கமுறைத்த சர மழைபோல்' - பிரணவ மந்திரத்தில், பரமாத்மா ஜீவாத்மாக்களின், பகவானின் அருளால் ஏற்பட்ட சம்பந்த்தததை லௌகீகர்களும் அறியும் வண்ணம் தொடர்ந்து உரைத்தலைக் குறிக்கும்.


  'வாழ உலகினில் பெய்திடாய்' - உலகம் உய்த்திட பெய்வாய் மழையே


  'நாங்களும் மகிழ்ந்து நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்' ஆரோக்கியமாக நனைந்து, நோன்பிற்காகக் குளித்து, பராமனோடு எங் கள் உறவினை பெருக்கிக் கொள்ள அருள்வாய் மழையே

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 8. #5
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,564
  Downloads
  36
  Uploads
  38

  0 Not allowed!
  மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
  தூய பெருநீர் யமுனைத் துறைவனை
  ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
  தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
  தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
  வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
  போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
  தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்


  பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 10. #6
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,564
  Downloads
  36
  Uploads
  38

  0 Not allowed!
  திருப்பாவை பாடல் - 6


  புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
  வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
  பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
  கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
  வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
  உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
  மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
  உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


  பொருள்: அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் "ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 11. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 12. #7
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,564
  Downloads
  36
  Uploads
  38

  0 Not allowed!
  திருப்பாவை பாடல் - 7


  கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
  பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
  காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
  வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
  ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
  நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
  கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
  தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.


  பொருள்: அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற.

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 13. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 14. #8
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,564
  Downloads
  36
  Uploads
  38

  0 Not allowed!
  திருப்பாவை பாசுரம் -9-
  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்


  தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
  தூபங்கமழத்துயிலணைமேல் கண்வளரும்
  மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;
  மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
  ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
  ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
  மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று
  நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.


  பொருள்:


  பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமணதிரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.


  விளக்கம்:
  உலக மக்கள் மாடமாளிகை, பஞ்சு மெத்தை என சொகுசு வாழ்க்கையில் சிக்கி சோம்பலில் கட்டுண்டு கிடக்கின்றனர். இதில் இருந்து அவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான வைகுண்டமே நிலையானது என்பதை அறிவுறுத்த வேண்டும். அந்த வைகுண்டத்தை அடைய பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும்.


  Andal Nachiyar Thiruvadigale Saranam


  Tiruppavai Pasuram 9


  Thoomani maadathu sutrum vilakkeriya
  Dhoopam kamazha thuyil anai mel kann valarum
  Maamaan magale! mani-k-kadavam thaalthiravaai!
  Maameer! Avalai ezhuppeero! Un magal thaan
  Oomayo? anri-ch-chevido? ananthalo?
  Ema-p-perum thuyil manthira-p-pattalo?
  Maa maayan, Maadhavan, Vaikuntan, enrenru
  Naamam palavum navinru-el or empaavaai


  Oh my uncle’s daughter, who sleeps,
  In the soft cotton bed,
  In the pearl filled Villa,
  Well lit from all sides,
  And full of the smoke of incense,
  Please open the ornamental door.
  Oh aunt, why don’t you wake her up,
  Is your daughter dumb or deaf, Or down right lazy,
  Or she is in trance of deep pleasurable sleep,
  Let us all call him the great enchanter,
  Madhavan and he who lives in Vaikunta,
  By several of His names,
  And get benefited,

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 15. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 16. #9
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,564
  Downloads
  36
  Uploads
  38

  0 Not allowed!
  திருப்பாவை பாசுரம் -10-
  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்


  நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
  மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
  நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
  போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
  கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
  தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
  ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
  தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய்.


  பொருள்:


  முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக் கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.


  விளக்கம்:
  யாராவது நன்றாகத் தூங்கினால் “சரியான கும்பகர்ணன் என்று சொல்வோம். இது ஆண்டாள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன “ஜோக் என்பதை இந்தப் பாடல் தெளிவுபடுத்துகிறது. நகைச்சுவை உணர்வு ஆயுளை அதிகரிக்கும். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். ஆண்டாள் நமக்கு திருப்பாவையின் மூலம் ஆயுள்விருத்தியைத் தந்திருக்கிறாள்.


  Andal Nachiyar Thiruvadigale Saranam
  Tiruppavai Pasuram -10


  10. Notru suvargam
  Notru Suvargam puguginra ammanai!
  Maatramum thaaraaro vaasal thiravaadaar
  Naatrathuzhaai mudi Naraayana: nammaal
  Potra-p-parai tharum punniyanal pandorunaal
  Kootrathin Vaai veezhnda Kumbakarananum
  Thotrum unakke perum thuyilthan thandhaano
  Aatra ananthal udayaai! arumkalame
  Thetramaai vandhu thira-el or empaavaai

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 17. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 18. #10
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,564
  Downloads
  36
  Uploads
  38

  0 Not allowed!
  திருப்பாவை பாசுரம் -11-
  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்


  கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
  செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
  குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
  சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
  சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்


  பொருள்:


  கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே! நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?
  விளக்கம்:
  நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. தோழியோ எழுந்து வந்தபாடில்லை! நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? அவளை விட்டுவிட்டு, நீராடச் சென்றிருப்போம். ஆனால், பக்திநெறிக்கு இது அழகல்ல. பிறரை விட்டுவிட்டு, தான் மட்டும் இறைவனை அடைய முயன்றால் அது நடக்காத ஒன்று. எல்லோருமாய் இறைவனை நாட வேண்டும், அவன் புகழ் பேச வேண்டும். அப்போது தான் அவனருள் கிடைக்கும். இதனால் தான் கூட்டுப்பிரார்த்தனைக்கு மகத்துவம் அதிகமாக இருக்கிறது.


  Andal Nachiyar Thiruvadigale Saranam
  Tiruppavai Pasuram -11


  kaRRuk kaRavaik kaNangkaL pala kaRandhu
  seRRAr thiRal azhiyach senRu seruch seyyum
  kuRRam onRillAdha kOvalar tham poRkodiyE!
  puRRaravalgul punamayilE pOdharAy! suRRaththuth
  thOzhimAr ellArum vandhu nin
  muRRam pugundhu mugil vaNNan pEr pAda
  siRRAdhE pEsAdhE selvap peNdAtti! nI
  eRRukku uRangkum poruLElOr empAvAy


  Oh daughter of the cattle baron,
  Who milks herds of cows,
  And wages war on enemies
  And makes his enemies loose their strength,
  Oh Golden tendril, Oh lass who has the mount of venus,
  Like the hood of the snake, Wake up and come,
  When your flock of friends,
  Have come to your courtyard, And sing of Krishna,
  Who has the colour of the cloud, Oh rich, rich lady,
  How can you neither move nor talk, And lie in deep trance,

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.
 19. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
Page 1 of 3 123 LastLast

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •