• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மார்கழி வழிபாடு - திருப்பாவை- திருவெம்பா&#2997

Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
மார்கழி வழிபாடு - திருப்பாவை- திருவெம்பா&#2997


மார்கழி வழிபாடு - திருப்பாவை- திருவெம்பாவை-1


Tamil_News_large_1919753.jpg

மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.


திருப்பாவை

பாடல் 1

மார்கழித்திங்கள்மதிநிறைந்தநன்னாளால்
நீராடப்போதுவீர்போதுமினோநேரிழையீர்!
சீர்மல்கும்ஆய்ப்பாடிசெல்வச்சிறுமீர்காள்
கூர்வேல்கொடுந்தொழிலன்நந்தகோபன்குமரன்
ஏரார்ந்தகண்ணியசோதைஇளஞ்சிங்கம்
கார்மேனிச்செங்கண்கதிர்மதியம்போல்முகத்தான்
நாராயணனேநமக்கேபறைதருவான்
பாரோர்புகழப்படிந்தேலோர்எம்பாவாய்


பொருள்
: அழகியஅணிகலன்களைஅணிந்தகன்னியரே! சிறப்புமிக்கஆயர்பாடியில்வசிக்கும்செல்வவளமிக்கசிறுமிகளே! மார்கழியில்முழுநிலாஒளிவீசும்நல்லநாள்இது. இன்றுநாம்நீராடக்கிளம்புவோம். கூர்மையானவேலுடன்நம்மைப்பாதுகாத்துவரும்அரியதொழிலைச்செய்யும்நந்தகோபன், அழகியகண்களையுடையயசோதாபிராட்டிஆகியோரின்சிங்கம்போன்றமகனும், கரியநிறத்தவனும், சிவந்தகண்களைஉடையவனும், சூரியனைப்போல்பிரகாசமானமுகத்தையுடையவனும், நாராயணனின்அம்சமுமானகண்ணபிரான்நமக்குஅருள்தரகாத்திருக்கிறான். அவனைநாம்பாடிப்புகழ்ந்தால்இந்தஉலகமேநம்மைவாழ்த்தும்.


திருவெம்பாவை


பாடல் 1

ஆதியும்அந்தமும்இல்லாஅரும்பெரும்
சோதியையாம்பாடக்கேட்டேயும்வாள்தடங்கண்
மாதேவளருதியோவன்செவியோநின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள்வாழ்த்தியவாழ்த்தொலிபோய்
வீதிவாய்க்கேட்டலுமேவிம்மிவிம்மிமெய்ம்மறந்து
போதார்அமளியின்மேல்நின்றும்புரண்டுஇங்ஙன்
ஏதேனும்ஆகான்கிடந்தாள்என்னேஎன்னே
ஈதேஎந்தோழிபரிலோர்எம்பாவாய்


பொருள்
: வாள்போன்றநீண்டகண்களைஉடையதோழியே! முதலும்முடிவும்இல்லாதஒளிவெள்ளமாய்பிரகாசிக்கும்நம்சிவபெருமான்குறித்துநாங்கள்பாடுவதுஉன்காதில்கேட்கவில்லையா? செவிடாகிவிட்டாயோ? அந்தமகாதேவனின்சிலம்பணிந்தபாதங்களைச்சரணடைவதுகுறித்துநாங்கள்பாடியதுகேட்டு, வீதியில்சென்றஒருபெண்விம்மிவிம்மிஅழுதாள். பின்னர்தரையில்விழுந்துபுரண்டுமூர்ச்சையானாள். ஆனால், நீஉறங்குகிறாயே! பெண்ணே! நீயும்சிவனைப்பாடஎழுந்துவருவாயாக!

நன்றி : http://www.dinamalar.com/news_detail.asp?id=1919753
 
மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் உங்கள் இனிய குரலில் பாடி மகிழுங்கள்

Tamil_News_large_1670244.jpg



திருப்பாவை
பாடல் 2


வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்பையத்துயின்ற பரமன் அடிபாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


பொருள்: ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, பாவை நோன்பு நோற்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். இந்த நோன்பு காலத்தில் நெய் சேர்க்கக் கூடாது. பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே குளிக்க வேண்டும். கண்ணில் மை இடக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக்கூடாது. தீய சொற்களைச் சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.


திருவெம்பாவை
பாடல் 2


பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கேநேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்சீசி இவையுஞ் சிலவோ விளையாடிஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.


பொருள்: அருமையான அணிகலன்களை அணிந்த தோழியே! இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும் போது 'ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது' என்று ஆணவமாகப் பேசினாய். ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து பஞ்சணையில் படுத்திருக்கிறாய்,” என்கின்றனர் தோழிகள். உறங்குபவள் எழுந்து, “தோழியரே! சீச்சி! இது என்ன பேச்சு! ஏதோ கண்ணயர்ந்து விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது?” என்றாள்.அவளுக்கு பதிலளித்த தோழியர், “ஒளிமிக்க திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை வழிபட தேவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. நமக்கோ நம் வீட்டு முன்பே திருவடி தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான். அவன் சிவலோகத்தில் வாழ்பவன், சிதம்பரத்தில் நாட்டியம் ஆடுபவன். நம்மைத் தேடி வரும் அவன் மீது நாம் எவ்வளவு பக்தி வைக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்,” என்றனர்.

நன்றி: தினமலர் / http://www.dinamalar.com/news_detail.asp?id=1670244
 
[h=1]மார்கழி வழிபாடு : திருப்பாவை - திருவெம்பாவை -3[/h]
மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.

திருப்பாவை

Tamil_News_large_1920903.jpg


பாடல் - 3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன்.
அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.


திருவெம்பாவை

பாடல் - 3

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்ெதன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்

பொருள்: ''முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக

இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற,'' என்கிறார்கள்.துாங்கிக் கொண்டிருந்த தோழி, "தெரியாத்தனமாக துாங்கி விட்டேன். அதற்காக, கடுமையாகப் பேச வேண்டுமா? இறைவனின் மேல் பற்றுடைய பழைய அடியவர்கள் நீங்கள். பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே!'' என வருந்திச் சொல்கிறாள். வந்த தோழியர் அவளிடம், "அப்படியில்லையடி! இறைவன் மீது நீ வைத்துள்ளது துாய்மையான அன்பென்பதும், துாய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவனை பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதால் அவசரப்படுத்துகிறோம்,'' என்றனர்.


நன்றி: தினமலர் /http://www.dinamalar.com/news_detail.asp?id=1920903
 
[h=1]மார்கழி வழிபாடு - திருப்பாவை-திருவெம்பாவை -4[/h]
மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.
Tamil_News_large_1921603.jpg


திருப்பாவை

பாடல் - 4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி போல் சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.


திருவெம்பாவை

பாடல் - 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

பொருள்: “ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை?'' என்ற பெண்களிடம், உறங்கிய பெண், “அதெல்லாம் இருக்கட்டும்! பச்சைக்கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும் வந்து விட்டார்களா?'' என்றாள்.எழுப்ப வந்தவர்களோ,''அடியே! உன்னை எழுப்புவதற்காக வந்த பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் எண்ணவேண்டும். அதன்பின்பு எண்ணிக்கையைச் சொல்கிறோம். நாங்கள் தேவர்களின் மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவனைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது. இந்நேரத்தில் அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? ஆகவே, நீயே எழுந்து வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார். நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் துாங்கு,'' என்று கேலி செய்தனர்.



நன்றி: தினமலர் / http://www.dinamalar.com/news_detail.asp?id=1921603
 
[h=1]மார்கழி வழிபாடு : திருப்பாவை-திருவெம்பாவை-5[/h]
Tamil_News_large_1922325.jpg


மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.

திருப்பாவை

பாடல் - 5


மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
துாய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
துாயோமாய் வந்து நாம் துாமலர்த் துாவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் துாசாகும் செப்பேலோர் எம்பாவாய்


பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் துாய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் துாய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த துாசு போல காணாமல் போய்விடும்.


திருவெம்பாவை


பாடல் - 5


மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலுாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்


பொருள்: “நறுமணத்திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். ஆனால், அவரை நாம் அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல...இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனை புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன்”சிவசிவ' என்று ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற'' என்று தோழியை எழுப்புகிறார்கள் பெண்கள்.

நன்றி: தினமலர்/ http://www.dinamalar.com/news_detail.asp?id=1922325
 
[h=1]மார்கழி வழிபாடு : திருப்பாவை-திருவெம்பாவை-6[/h]
மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.


Tamil_News_large_1923420.jpg


திருப்பாவை

பாடல்------6

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்: அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி, இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து, தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் ''ஹரி ஹரி'' என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.


திருவெம்பாவை


பாடல்-6

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்


பொருள்: மான் போன்ற நடையை உடையவளே! நேற்று நீ எங்களிடம், ''உங்களை நானே வந்து அதிகாலையில் எழுப்புவேன்'' என்றாய். ஆனால், நாங்கள் வந்து உன்னை எழுப்பும்படியாகி விட்டது. உன் சொல் போன திசை எங்கே? மேலும், சொன்னதைச் செய்யவில்லையே என்று கொஞ்சமாவது வெட்கப்பட்டாயா? உனக்கு இன்னும் விடியவில்லையா? வானவர்களும், பூமியிலுள்ளோரும், பிற உலகில் உள்ளவர்களும் அறிய முடியாத தன்மையை உடைய சிவபெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வந்த எங்களுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாய். அவனை நினைத்து உடலும் உள்ளமும் உருகாமல் இருப்பது உனக்கு மட்டுமே பொருந்தும். எனவே உடனே எழுந்து நாங்களும் மற்றையோரும் பயன்பெறும் விதத்தில், நம் தலைவனைப் புகழ்ந்து பாடு.

நன்றி: தினமலர்/
http://www.dinamalar.com/news_detail.asp?id=1923420
 
[h=1]மார்கழி வழிபாடு : திருப்பாவை - திருவெம்பாவை-7[/h][h=1]
Tamil_News_large_1923925.jpg
[/h]மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.

திருப்பாவை

பாடல் 7

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

பொருள்: அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்க வில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத் தாலியும் இணைந்து ஒலி யெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற.

திருவெம்பாவை

பாடல் 7

அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

பொருள்: தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத்தன்மைகளில் இந்த துாக்கமும் ஒன்றோ? தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் முதலான சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே 'சிவசிவ' என்பாயே! அப்படிப்பட்ட இறைவனை, நாங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என சொல்லும்போது, தீயில் பட்ட மெழுகைப் போல் உருகி உணர்ச்சி வசப்படுவாயே! அந்தச்சிவன் எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாங்கள்புகழ்கிறோம்.இதையெல்லாம்கேட்டும், இன்று உன் உறக்கத்துக்கு காரணம்என்ன? பெண்ணே! பெண்களின் நெஞ்சம் இறுகிப் போனதாக இருக்கக்கூடாது. ஆனால், நீயோ நாங்கள் இவ்வளவு துாரம் சொல்லியும் இன்னும் எழாமல் இருக்கிறாய். அந்த துாக்கத்தை நீ என்ன ஒரு பரிசாகக் கருதுகிறாயா? அதிகாலை வேளையில் துாங்கவே கூடாது. நம் பணிகளை அதிகாலை நாலரைக்கெல்லாம் துவங்கி விடவேண்டும்.


நன்றி: தினமலர் / http://www.dinamalar.com/news_detail.asp?id=1923925
 
[h=1]மார்கழி வழிபாடு : திருப்பாவை- திருவெம்பாவை- 8[/h][h=1][/h][h=1]மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் உங்கள் இனிய குரலில் பாடி மகிழுங்கள்

Tamil_News_large_1674549.jpg
[/h][h=1]திருப்பாவை[/h][h=1]பாடல் 8[/h][h=1]கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.[/h][h=1]பொருள்: கிழக்கே வெளுத்தது. மேய்ச்சலுக்கு புல்மேடுகளுக்கு எருமைகள் வந்துவிட்டன. எல்லாப் பெண்களும் குளிக்கப் போக வேண்டும் என அவசரப் படுத்துகிறார்கள். அவர்களை உனக்காக தடுத்து நிறுத்தி வைத்து விட்டு கூவிக்கூவி அழைத்துக் கொண்டிருக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமான கண்ணனை நாம் வணங்கினால், அவன் 'ஆஆ' என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். அழகே வடிவான பெண்ணே! உடனே கிளம்பு.[/h]திருவெம்பாவை


பாடல் 8


கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும் ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ? வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்? ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ? ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.


பொருள்: உறக்கத்தின் நாயகியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. ஏழு ஸ்வரங்களுடன் வாத்தியங்கள் ஒலிக்கின்றன. சிவாலயத்தில் வெண் சங்கு முழங்குகிறது. உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகிறோம். அவனது கருணையை வியந்து பாடுகிறோம். ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல் துாங்குகிறாய். வாழ்க நீ! பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமால் கூட சிவனின் அடி தேடி பாதாளம் சென்றார். பெருமையுடைய உலகத்துக்கே தலைவன் நம் சிவன். ஏழைகளின் தோழனான அவனைப் பாடி மகிழ உடனே புறப்படு.

நன்றி: தினமலர் / http://www.dinamalar.com/news_detail.asp?id=1674549
 

மார்கழி
வழிபாடு : திருப்பாவை- திருவெம்பாவை-9

மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் உங்கள் இனிய குரலில் பாடி மகிழுங்கள்


Tamil_News_large_1675275.jpg


திருப்பாவை


பாடல் 9


துாமணி மாடத்து சுற்றும் விளக்கெரியதுாபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றுநாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.


பொருள்: துாய ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மாளிகையில், சுற்றிலும் விளக்கெரிய, திரவியம் மணம் வீச, மெத்தையில் உறங்கும் மாமன் மகளே! உன் இல்லத்து மணிக்கதவைத் திற. மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை இவ்வளவு நேரம் அழைத்தும் அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பலால் இப்படி செய்கிறாளா? எழ முடியாதபடி யாராவது மந்திரம் போட்டு மயக்கி விட்டார்களா? மாயம் செய்பவனும், மாதவனும், வைகுண்ட நாயகனுமான நாராயணனின் புகழ்பாட எழுந்திரு.


திருவெம்பாவை


பாடல் 9


முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளேபின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனேஉன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்அன்னவரே எம் கணவர் ஆவார்அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.



பொருள்: எங்கள் சிவன் பழமைக்கெல்லாம் பழமையாவன், புதுமைக்கெல்லாம் புதுமையானவன். அவனை தலைவனாகக் கொண்ட நாங்கள், அவனது பக்தர்களுக்கு மட்டுமே பணிவோம். அவர்களுக்கு மட்டுமே தொண்டு செய்வோம். அவன் மீது பக்தி கொண்டவர்களே எங்களுக்கு வாழ்க்கைத் துணையாக வேண்டும். அவர்கள் இடும் கட்டளைகளை பரிசெனக் கருதி, பணிவுடன் நிறைவேற்றுவோம். இந்த பிரார்த்தனையை மட்டும் அந்த சிவன் ஏற்றுக் கொண்டால், எங்களுக்கு எந்த குறையும் இருக்காது.

நன்றி: தினமலர் / http://www.dinamalar.com/news_detail.asp?id=1675275
 
[h=1]மார்கழி வழிபாடு : திருப்பாவை-திருவெம்பாவை-10[/h]
மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.

Tamil_News_large_1925660.jpg


திருப்பாவை
பாடல் 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.


பொருள்: முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை துாக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் துாக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல், கதவைத் திறந்து வெளியே வா.

திருவெம்பாவை
பாடல் 10

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனுார் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.


பொருள்: தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், கோயில் திருப்பணியையே சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! நம் தலைவனாகிய சிவபெருமானின் சொல்வதற்கரிய பெருமையுடைய திருப்பாதங்கள் ஏழு பாதாள லோகங்களையும் கடந்து கீழே இருக்கிறது. பல்வேறு மலர்களை அணியும் திருமுடியானது வானத்தின் எல்லை களைக் கடந்து எல்லாப் பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது. சக்தியை மேனியில் ஒரு பாகமாகக் கொண்டதால் அவன் ஒருவனல்ல என்பது நிஜமாகிறது. வேதங்களும், விண்ணவரும், பூலோகத்தினரும் ஒன்று சேர்ந்து துதித்தாலும் அவன் புகழைப் பாடி முடிக்க முடியாது. யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் அவன் நண்பன். ஏராளமான பக்தர்களைப் பெற்றவன். அவனுக்கு ஊர் எது? அவனது பெயர் என்ன? யார் அவனது உறவினர்கள்? யார் அவனது பக்கத்து வீட்டுக்காரர்கள்? எந்தப் பொருளால் அவனைப் பாடி முடிக்க முடியும்? சொல்லத் தெரியவில்லையே!

நன்றி: தினமலர் /http://www.dinamalar.com/news_detail.asp?id=1925660
 
[h=1]மார்கழி வழிபாடு : திருப்பாவை - திருவெம்பாவை -11[/h]
Tamil_News_large_1926284.jpg

மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.


திருப்பாவை
பாடல் 11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.


பொருள்: கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனைத் தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே! நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ண னாகிய கண்ணனைப் புகழ்ந்த பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக் கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?

திருவெம்பாவை
பாடல் 11

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.


பொருள்: சிவபெருமானே! உன் அடியவர்களான நாங்கள் வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட குளத்தில் 'முகேர்' என சப்தம் எழுப்பி குதித்து, தண்ணீரைக் குடைந்து நீந்தியபடியே உன் திருவடிகளை எண்ணிப் பாடினோம். வழிவழியாக இந்த பாவை நோன்பை நிறைவேற்றி வருவதை நீ அறிவாய். சிவந்த நெருப்பைப் போன்றவனே! உடலெங்கும் திருநீறு அணிந்தவனே! செல்வத்தின் அதிபதியே! சிறிய இடையையும், மையிட்ட அழகிய கண்களையும் உடைய பார்வதிதேவியின் மணாளனே! ஐயனே! நீ இந்த உயிர்களை ஆட்கொண்டதும் அவை என்னவெல்லாம் நன்மையடையுமோ, அவை அனைத்தையும் அடைந்து விட்ட உணர்வு உன்னைப் பாடினாலே எங்களுக்கு கிடைத்து விடுகிறது! இந்த பேரின்பநிலை மறைந்து விடாமல் என்றும் நிலைத்திருக்க அருள்செய்வாயாக!


நன்றி: தினமலர் /http://www.dinamalar.com/news_detail.asp?id=1926284
 
மார்கழி வழிபாடு : திருப்பாவை - திருவெம்பாவை -12
Tamil_News_large_1927257.jpg

மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.

திருப்பாவை
பாடல் 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.


பொருள்: பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றன. இந்தளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக் காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன் பேருறக்கம்?




திருவெம்பாவை
பாடல் 12

ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்


பொருள்: தோழியரே! இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் கங்கையைத் தலையில் கொண்டவனும், சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில், கையில் அக்னியுடன் நடனமாடும் கலைஞனும், வானத்தையும், பூலோகத்தையும், பிற உலகங்களையும் காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடு பவனுமான தன்மை களைக் கொண்டவர் நம் சிவபெருமான். அவரை, நம் கரங்களிலுள்ள வளையல்கள் ஒலியெழுப்பவும், இடுப்பிலுள்ள ஆபரணங்கள் பெருஒலி எழுப்பவும், பூக்களையுடைய பொய்கையில் நீந்தி மகிழ்ந்து, 'சிவாயநம' என்னும் மந்திரம் சொல்லி, அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.

நன்றி: தினமலர் /http://www.dinamalar.com/news_detail.asp?id=1927257
 
மார்கழி வழிபாடு : திருப்பாவை - திருவெம்பாவை-13

Tamil_News_large_1927782.jpg


மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.

திருப்பாவை
பாடல் 13

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.


பொருள்: பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன்மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே, நம் தோழியர் எல்ேலாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது. கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே! குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே! மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? துாக்கம் என்கிற திருட்டை தவிர்த்து நீராட வா.


திருவெம்பாவை

பாடல் 13

பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.


விளக்கம்: கரிய நிற குவளை மலர்கள் குளத்தின் நடுவிலே உள்ளன. அருகில் சிவந்த நிறத்தில் தாமரை மலர்கள் முளைத்துக் கிடக்கின்றன. நீர் காக்கைகள் நீரில் மிதக்கின்றன. இந்தக் குளத்தில் தங்கள் அழுக்கை களைய மக்கள் வருகிறார்கள். அவர்கள் 'நமசிவாய' என சொல்லி சப்தம் எழுப்புகிறார்கள். இந்தக் காரணங்களால், இந்தக் குளம் எங்கள் சிவனையும், பார்வதியையும் போல் தோற்றமளிக்கிறது. தாமரை மலர்கள் நிறைந்த இந்த தெய்வீக குளத்தில், நம் சங்கு வளையல்கள் சலசலக்க, கால் சிலம்புகள் கலகலவென ஒலியெழுப்ப, மார்புகள் விம்ம, பாய்ந்து நடுப்பகுதிக்கு சென்று நீராடுவோம்.

நன்றி: தினமலர் /http://www.dinamalar.com/news_detail.asp?id=1927782
 
மார்கழி வழிபாடு : திருப்பாவை-திருவெம்பாவை-14

Tamil_News_large_1928550.jpg

மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.


திருப்பாவை
பாடல் 14

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.


பொருள்: எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின் வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!

திருவெம்பாவை
பாடல் 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.


பொருள்: ஆண்கள் அணிந்துள்ள காதணிகள் தண்ணீரில் ஆட, அவர்களின் தங்கநகைகள் ஆட, பெண்களின் கூந்தல் ஆட, அக்கூந்தலில் மலர்கள் அணிந்திருந்ததால் ஏற்பட்ட வாசனை கருதி அதை முகர வண்டுகள் ஆட, குளிர்ந்த நீரில் ஆடுங்கள். அவ்வாறு நீராடும் போது சிற்றம்பலத்தில் நடனமிடும் சிவபெருமானின் புகழ் பாடுங்கள்.
வேதத்தின் பொருளையும், வேதத்தின் பொருளாக விளங்குகின்ற சிவனின் பெயரையும் சொல்லி நீராடுங்கள். ஜோதி வடிவாய் திருவண்ணா மலையிலே காட்சி தரும் அந்த சிவனின் மாபெரும் விருத்தாத்தங்களையெல்லாம் சொல்லுங்கள். அவனது மார்பில் தவழும் கொன்றை மாலையின் மகிமை பற்றி பேசுங்கள். முதலும் முடிவும் இல்லாத அந்த இறைவனின் புகழைப் பாடுங்கள். பந்த பாசங்களில் இருந்து நம்மைப் பிரிக்கும் வளையல்கள் அணிந்த தாயுமானவனாய் விளங்கும் அந்த சிவனின் பாதமலர்களைப் பாடி நீராடுங்கள்.

நன்றி: தினமலர் /http://www.dinamalar.com/news_detail.asp?id=1928550
 
மார்கழி வழிபாடு - திருப்பாவை- திருவெம்பாவை-15



Tamil_News_large_1929260.jpg




மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.

திருப்பாவை
- பாடல் 15

எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.

பொருள்: ''ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! ''நாங்கள் அழைத்தும் உறங்குகிறாயே?'' என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, ''இதோ வந்து விடுகிறேன்,'' என்கிறாள்.

தோழிகள், ''உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது.'' என்று சிடுசிடுத்தனர்.
அப்போது அவள், ''சரி..சரி... நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன்,'' என்கிறாள்.
''அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது?'' என்று கடிந்து கொள்கிறார்கள்.

அவளும் ''என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்து விட்டார்களா?'' என்கிறாள். தோழிகள், ''நீயே வெளியே வந்து எண்ணிப்பார். குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்க வருவாய்,'' என்கிறார்கள்.

திருவெம்பாவை - பாடல் 15

ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

பொருள்: அழகிய மார்பு கச்சையும், ஆபரணங்களும் அணிந்த பெண்களே! நம் தோழி 'எம்பெருமானே' என்று சிவனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள். அவரது சிறப்புகளை நிறுத்தாமல் பேசுவாள். கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகும். அந்த பக்திப் பரவச உலகில் இருந்து அவளால் இந்த பூமிக்கு மீண்டும் வரவே இயலாத நிலை ஏற்படும். சிவன் மட்டுமே தனது தெய்வம் என்ற நிலையில் பித்துப் பிடித்து நிற்பாள். அவளைப் போலவே நாமும் சிவனின் தாள் பணிவோம். பூக்கள் நிறைந்த கலப்பை வடிவிலான குளத்தில் பாய்ந்து
நீராடுவோம்.

நன்றி: தினமலர் http://www.dinamalar.com/news_detail.asp?id=1929260
 
மார்கழி வழிபாடு : திருப்பாவைதிருவெம்பாவை -16


Tamil_News_large_1680330.jpg


மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் உங்கள் இனிய குரலில் பாடி மகிழுங்கள்

திருப்பாவை


பாடல்
16

நாயகனாய் நின்ற நந்தகோபனுடையகோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரணவாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறைமாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்துாயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீநேய நிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய்.


பொருள்: எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடிகள் கட்டிய வாசல் காவலனே! ஆயர்குல கன்னியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திற. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலி எழுப்பும் பறை (சிறுமுரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். 'அதெல்லாம் முடியாது' என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறந்து விடு.
திருவெம்பாவை

பாடல்
16
முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்குமுன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளேஎன்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

பொருள்
: மேகமே ! இந்தக் கடலிலுள்ள நீர் முழுவதையும் குடித்து, ஆவியாக்கி வாவனம் நோக்கிச் சென்று அங்கே தங்கியிருக்கிறாய். உன் தோற்றம் எங்கள் சிவனின் துணைவியான உமாதேவியாரின் கரிய நிறத்தை ஒத்திருக்கிறது. உன்னில் இருந்து கிளம்பிய மின்னல் ஒளி அம்பிகையின் சிறிய இடையை ஒத்துள்ளது. நீ இடியாக இடித்தது தேவியின் திருவடியில் உள்ள பொன் சிலம்பு ஒலித்தது போல் உள்ளது. நீ வீசும் வானவில் அம்பிகையின் எழில்மிகு புருவத்தை ஒத்துள்ளது. எங்களை ஆட்கொண்ட அம்பிகை பாகனான சிவபெருமானுடைய பக்தர்களுக்காக முதலில் நீ மழையைப் பொழிய வேண்டும். அதன் பிறகு எங்களுக்காகவும் பொழிவாயாக.

நன்றி: தினமலர் /http://www.dinamalar.com/news_detail.asp?id=1680330
 
[h=1]மார்கழி வழிபாடு : திருப்பாவை- திருவெம்பாவை-17[/h]
Tamil_News_large_1930429.jpg


மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.

திருப்பாவை

பாடல் 17

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.


பொருள்: ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவையும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே! தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளை உடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே! மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ எழ வேண்டும். விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே! நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும்.

திருவெம்பாவை
பாடல் 17

செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.


பொருள்: தேன்சிந்தும் மலர்களைச் சூடிய கருங்கூந்தலை உடைய பெண்களே! செந்தாமரைக் கண்ணனான நாராயணன், பிரம்மா, பிற தேவர்கள் யாரும் தராத இன்பத்தை அள்ளி வழங்க நம் தலைவனாடிய சிவபெருமான், இதோ! வீடுகள் தோறும் எழுந்தருளுகிறான். அவனது தாமரை போன்ற திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சேவகன் போல் இறங்கி வருகிறான். அழகிய கண்களை உடையவனும், அடியவர்களுக்கு அமுதமானவனும், நமது தலைவனுமான அந்தச் சிவனை வணங்கி நலம் பல பெறும் பொருட்டு, தாமரை மலர்கள் மிதக்கும் இந்த பொய்கையில் பாய்ந்து நீராடி அவன் தரிசனம் காண தயாராவோம்.


Read more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=1930429
 
மார்கழி வழிபாடு - திருப்பாவை-திருவெம்பாவை-18


Tamil_News_large_1930893.jpg


மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.

திருப்பாவை
பாடல் 18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின் வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்த கோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்தி கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கதவைத்
திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.


திருவெம்பாவை


பாடல்
18

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

பொருள்: சூரியனின் ஒளிக்கீற்று வெளிப்பட்டதும் விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி மறைந்தனவோ, அப்படி அண்ணாமலையாரின் திருவடியைப் பணிந்ததும், தேவர்களின் மணிமுடியில் உள்ள நவரத்தினங்கள் ஒளி இழந்தன. பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் என முப்பிரிவாகவும் திகழும் அவர்வானமாகவும், பூமியாகவும், இவையல்லாத பிற உலகங்களாகவும் திகழ்கிறார். கண்ணுக்கு இனிய அமுதம் போல் தோன்றும் அவரது சிலம்பணிந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடி, பூக்கள் மிதக்கும் இந்தக் குளத்தில் பாய்ந்து நீராடுங்கள்.

Read more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=1930893
 
[h=1]மார்கழி வழிபாடு - திருப்பாவை-திருவெம்பாவை-19[/h]
Tamil_News_large_1931625.jpg



மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.

திருப்பாவை
.............
பாடல் 19
.............

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.


பொருள்: ""குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப்பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் துõக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படி செய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?
........
திருவெம்பாவை
.........
பாடல் 19
..........

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.


பொருள்: "உன்னிடம் கொடுக்கப்படும் என் மகள் உனக்கு மட்டுமே சொந்தமானவள்' என்று ஒரு தந்தை தன் மகளை ஒருவனிடம் திருமணம் செய்து கொடுக்கும்போது செய்யும் பழமொழி இருக்கிறது. அதன் காரணமாக, எங்களைத் திருமணம் செய்வோர் எப்படி இருக்க வேண்டும் என்று உன்னிடம் கேட்கும் <உரிமையுடன் விண்ணப்பிக்கிறோம். எங்களைத் தழுவுவோர் உன் பக்தர்களாக மட்டுமே இருக்க வேண்டும். எங்கள் கைகள் உனக்கு மட்டுமே பணி செய்வதற்கு அவர்கள் அனுமதிப்பவர்களாய் இருக்க வேண்டும். எங்கள் பார்வையில் <உனக்கு பணி செய்பவர்கள் மட்டுமே தெரிய வேண்டும். பிற தீமைகள் எதுவும் பார்வையில் படவே கூடாது. இப்படி ஒரு பரிசை எம்பெருமானான நீ எங்களுக்கு தருவாயானால், சூரியன் எங்கே உதித்தால் எங்களுக்கென்ன?


நன்றி: தினமலர் http://www.dinamalar.com/news_detail.asp?id=1931625
 
மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.


Tamil_News_large_1426209.jpg



திருப்பாவை

பாடல் 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்ேடலோர் எம்பாவாய்.

பொருள்: முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல்மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் துாயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.


திருவெம்பாவை

பாடல் 20

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

பொருள்: சிவபெருமானே! எல்லாவற்றுக்கும் முதலாவதான உன் பாத மலர்களை வணங்குகிறோம். எல்லாவற்றுக்கும் முடிவாயுள்ள உன் மென்மையான திருவடிகளை பணிகின்றோம். எல்லா உயிர்களையும் படைக்கின்ற உன் பொற்பாதங்களை சரணடைகின்றோம். எல்லா உயிர்களுக்கும் வாழும் காலத்தில் இன்பமான வாழ்வு தரும் மலரடிகளை பிரார்த்திக்கிறோம். உயிர்களை அழித்து இறுதிக்காலத்தை தருகின்ற இணையற்ற காலடிகளைப் போற்றுகின்றோம். திருமாலாலும், பிரம்மாவாலும் காண முடியாத தாமரை பாதங்களைக் காண்பதில் பெருமிதமடைகின்றோம். எங்களுக்கு பிறப்பற்ற நிலை தரும் பொன் போன்ற திருவடிகளை பற்றுகின்றோம். இவ்வாறு உன்னோடு ஐக்கியமாகி, உன் நினைவுகளுடன் நீர்நிலைகளில் நீராடி மகிழ்கிறோம்.

நன்றி: தினமலர் http://www.dinamalar.com/special_detail.asp?id=1932211
 
தினம் ஒரு திருப்பாவை
பாசுரம் - 21
கிருஷ்ணன் திருடன் - யார் சொன்னது #MargazhiSpecial

p29_21089_19361.jpg

ப்பின்னையை புகழ்ந்தும், கிருஷ்ணனைப் புகழ்ந்தும், இருவரையும் சேர்த்தே புகழ்ந்தும் கிருஷ்ணன் எழுந்தபாடில்லை. இப்போது கிருஷ்ணன் யாருடைய பிள்ளை, அவன் தந்தை எப்படிப்பட்ட வள்ளல், அவனுடைய செல்வச் செழிப்புதான் என்ன என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லி, கிருஷ்ணனை எழுந்திருக்குமாறு சொல்கிறாள்.

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப,
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்,
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்,
ஊற்ற முடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்,
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்,
ஆற்றாது வந்துன் னடிபணியு மாபோலே,
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.


குடங்களை வைத்து பசுவின் மடியில் கை வைத்தாலே, குடங்கள் எல்லாம் நிறையும்படியாக தாராளமாகப் பாலைப் பொழியும் பசுக்களை கணக்கின்றி பெற்றிருக்கும் நந்தகோபரின் பிள்ளையே, அந்தப் பசுக்களுக்கு இருக்கும் வள்ளல்தன்மைகூட உனக்கு இல்லையா? நீ என்ன சாதாரண பிறவியா? என்று ஆண்டாள் கேட்கிறாள்.
ஆண்டாளின் கேள்விக்கு கிருஷ்ணனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இந்த இடத்தில் விளக்கம் சொல்லும்போது அஹோபில மடம் 44-வது பட்டம் ஶ்ரீமத் அழகிய சிங்கர் சுவாமிகள், தம்முடைய திருப்பாவைக்கான ஸுபோதினி விளக்கவுரையில் கிருஷ்ணனுக்கும் ஆண்டாளுக்கும் இடையிலான ஓர் உரையாடலாக சுவைபடச் சொல்லி இருக்கிறார். அவருடைய அந்த ரசமான விளக்கம்...

ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் கிருஷ்ணனின் தந்தை எப்படிப்பட்ட செல்வந்தன் என்று சொல்லி, உறக்கத்தில் இருந்து எழுந்திருக்கச் சொல்லும்போது கிருஷ்ணன் படுக்கையில் இருந்தபடியே பேசத் தொடங்குகிறான். அவன் திருவாய் மலர்ந்தவுடனே ஆண்டாளும் அவளுடைய தோழிகளான கோபிகைகளும், 'ஆஹா, எங்கள் கிருஷ்ணன் பேச ஆரம்பித்துவிட்டான்' என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.


அவர்களின் மகிழ்ச்சியைப் போக்கடிப்பது போலவே கிருஷ்ணன் பேச ஆரம்பிக்கிறான்.

'அசட்டுப் பெண்களே! கேளுங்கள், நான் இந்த ஊரில் எந்த ஜாதியைச் சேர்ந்தவன்? எந்த விதத்தில் உயர்ந்தவன்? மாடு மேய்த்து ஜீவனம் பண்ணுகிறவன். அவர்கள் சோறு போடாமற் போனால் திருடித் தின்றுகொண்டிருக்கிறேன். படிப்புக் கிடையாது. இந்த ஊரில் எங்கும் எனக்குக் கெட்டபேர்தான் இருக்கிறது. என் அம்மா எத்தனையோ தடவை என்னைக் கட்டிப் போட்டு அடித்திருக்கிறாள். உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். நல்ல துணி கிடையாது. கந்தல் துணி. என் நகையைப் பார்த்தீர்களா? குன்றிமணிமாலை. தலையில் பாருங்கள்: பெரிய கிரீடம் மயில்தோகை! எனக்கு 'நொண்டி கிருஷ்ணன்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

'பகல் திருடன்' என்ற ஜாப்தாவில் என்னை சேர்த்திருக்கிறார்கள். 'அந்த இடைப்பையன் எங்கே?' என்று தேடிக்கொண்டு வருகிறார்கள். எங்கள் தகப்பனும் ஏழை. உங்கள் தாய்தந்தையர் உங்களை வீட்டிற்குள் நுழையவிடாமல், 'உங்கள் இஷ்டப்படி கிருஷ்ணனுடனேயே போய் விடுங்கள்' என்று உங்களைத் தள்ளி வைத்துவிட்டார்களேயானால், உங்களைக் கட்டிக்கொண்டு சோறுபோட எனக்கு என்ன இருக்கிறது? பெண்களே! வேண்டாம் முரட்டுத்தனம். வீடு போய்ச் சேருங்கள்" என்று ஶ்ரீகிருஷ்ணன் அந்தப் பெண்களைப் பார்த்துக் கபடமாகச் சொன்னான்.

அதற்கு அந்தப் பெண்கள், "கிருஷ்ணா! நீ சொல்லுவது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீ இந்த ஊரில் இருக்கிறவர்களின் வீட்டு மாட்டையா மேய்த்துப் பிழைக்கிறாய்? ஐயோ பாவம்! சுமார் பத்து லக்ஷம் பசுக்களை வைத்துக்கொண்டிருக்கிற மகாராஜனான நந்தகோபன் குமாரன் அல்லவா நீ? யாருக்குத் தெரியாது என்று பொய் சொல்லுகிறாய். நீ ஒரு பிள்ளைதானே நந்தகோபனுக்கு? அவ்வளவு சொத்தும் பங்கு போடாமல் உனக்கு மாத்திரம்தானே பாத்தியப்பட்டது? உங்கள் தகப்பனுக்கு உள்ள எல்லாப் பசுக்களும் எங்களுக்குத் தெரியும். அவை எவ்வளவு பால் கறக்கின்றன என்றும் எங்களுக்குத் தெரியும். சொல்லுகிறோம், கேள்; ஒவ்வொரு பசுவையும் கறக்கவேண்டும் என்று நினைத்துப் பெருங் குடங்களைப் பசுவின் மடிக்கு சமீபத்தில் கொண்டுபோனவுடனே பால் சொரிய ஆரம்பிக்கின்றன.

குடங்கள் நிறைந்து மேலே வழிய ஆரம்பிக்கிறது பால்."ஒரு பசுவின் இடத்தில் எத்தனை குடங்கள் வைத்தாலும் நிறைக்கிறது. இப்படியே பத்து லக்ஷம் பசுக்களும் கறக்கிற பெரும் பசுக்கள், நல்ல ஸ்வபாவத்தோடு கூடின பெரும் பசுக்கள். இளம் பெரும் பசுக்கள். பால் விற்கிறவர்கள் இந்தப் பாலை வாங்கிக்கொண்டு அயல் ஊர்களுக்குப் போய் விற்றுப் பெரும் பணக்காரர்களாக ஆகியிருக்கிறார்கள். அவ்வளவு பசுக் கூட்டங்களை ஜன்மாந்திர புண்ணியத்தினால் நந்தகோபன் 'படைத்தான்' அடைந்திருக்கிறான். அப்படிப்பட்ட வள்ளலின் பிள்ளையான நீ எங்களுக்கு அருள் செய்யக்கூடாதா? என்கிறார்கள்.

என்ன ஒரு ரசனையான உரையாடல் பாருங்கள்!

வேதங்கள் எல்லாம் போற்றும், வேதங்களுக்கெல்லாம் நாயகனான கிருஷ்ணனே! உன்னுடைய பகைவர்கள் உனக்கு அஞ்சி, தங்கள் வலிமையைத் தொலைத்து, உன்னுடைய வாசலில் வந்து நிற்பதுபோல் நாங்களும் வந்து நிற்கிறோம். ஆனால், உன்னுடைய பகைவர்கள் உனக்கு அஞ்சி வந்து உன் திருவடி பணிந்து நிற்கிறார்கள். ஆனால், நாங்களோ உன்னிடம் பிரேமை கொண்டவர்களாக வந்து இருக்கிறோம். எங்களுக்கு அருள் செய்ய எழுந்து வருவாயாக என்று ஆண்டாள் வேண்டுகிறாள்.

ஆனால், கிருஷ்ணனுக்கு இன்னும் ஆண்டாளின் தெள்ளுத் தமிழ்ப் பாசுரங்களைக் கேட்கவேண்டும் போல் இருக்கிறதோ என்னவோ? அவன் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.

- க.புவனேஸ்வரி

நன்றி : சக்தி விகடன்

Source: http://www.vikatan.com/news/spirituality/76886-andal-thiruppavai-twenty-oneth-devotional-hymn.art
 
[h=1]தினம் ஒரு திருப்பாவை

பாசுரம் - 22

எங்கள் மீது அன்பு செய்வாய் கிருஷ்ணா...#MargazhiSpecial­­­[/h][h=1]
310977gif_20489.jpg
[/h][h=1]கிருஷ்ணனின் அருள் வேண்டி வந்திருக்கும் எங்கள்மேல் இரக்கம் காட்டக்கூடாதா? உன் இரு மலர்க் கண்களைக் கொண்டு எங்களைப் பார்க்கமாட்டாயா? உன்னுடைய கடைக்கண் பார்வை ஒன்றே போதுமே எங்களுடைய பாவங்கள் எல்லாம் நீங்கி, அதனால் எங்களுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிவிடுமே என்று ஆண்டாள் கிருஷ்ணனிடம் வேண்டிப் பிரார்த்திக்கிறாள். கிருஷ்ணனின் தரிசனத்துக்காக வந்திருப்பவர்களின் தகுதிகளைச் சொல்லும் ஆண்டாள், அப்பேர்ப்பட்டவர்கள் உன்னுடைய தரிசனத்துக்காக வந்திருக்கிறார்கள் என்றால், நீ எப்படி உன்னை ஏழை என்று சொல்லமுடியும்? விரும்பும் எதையும் தரக்கூடிய உன்னை, நீ ஏழை என்று சொல்லிக்கொண்டால், நாங்கள் அதை நம்பிவிட முடியுமா என்று கேட்பதுபோல் பாடுகிறாள்.

அங்கண்மா ஞாலத் தரசர், அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே,
சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்,
கிண்கிணி வாய்செய்த தாமரைப் பூப்போலே,
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ,
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்,
அங்கண் இரண்டுங்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல்,
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.

அழகும், அனைத்து வளங்களும் நிரம்பப் பெற்றிருப்பதும், விசாலமான பரப்பினை உடையதுமான பெரிய பெரிய ராஜ்யங்களை ஆளும் அரசர்கள் எல்லோரும், இதுவரை தங்களுக்கு இருந்த, 'தங்களை விடவும் மேம்பட்டவர்கள் இல்லை' என்ற அகந்தையை விட்டுவிட்டனர். இந்த உலகத்தில் எப்போது உன்னை தோற்றுவித்துக் கொண்டாயோ, அப்போதே அவர்களுடைய அகந்தை நீங்கிவிட்டது. நீயே அனைவரிலும் மேம்பட்டவன் என்றும், நீயே அனைவரிலும் பெரியவன் என்றும், வல்லமை மிக்கவன் என்றும் உணர்ந்துகொண்டவர்களாக, உன்னிடம் சரண் அடைவதற்காக வந்திருக்கிறார்கள். இதுவரை சாம்ராஜ்ய சக்கரவர்த்திகள் எல்லோருமே, நமக்குமேல் இறைவன் என்று ஒருவன் இல்லை; இருந்தாலும் அவனுடைய தயவு நமக்குத் தேவையில்லை; நம்முடைய சாமர்த்தியமே போதும் என்று இறுமாப்புடன் திரிந்துகொண்டிருந்தார்கள். உன்னுடைய அவதாரம் எப்போது இந்த பூமியில் நிகழ்ந்ததோ, எப்போது உன்னுடைய லீலைகள் இந்த பூமியில் தொடங்கியதோ அப்போதே அவர்கள் தங்களுடைய இறுமாப்பை எல்லாம் தொலைத்தவர்களாக, இதோ இப்போது உன்னுடைய திருவடி தரிசனத்துக்காக இங்கே காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் எல்லோரும் உன்னிடம் கொண்ட அச்சத்தால், எங்கே உன்னால் தங்களுக்கும் தங்கள் ராஜ்யத்துக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தினால் வந்திருக்கின்றனர். பூதனை, சகடாசூரன், பகாசுரன் போன்றவர்களுடன் அவர்களை அனுப்பிய கம்சனையும் வதம் செய்த உன்னுடைய தோள்வலியும், வீரமும் அவர்களைப் பெரிதும் பயமுறுத்திவிட்டது போலும். அதனால்தான் அவர்கள் உன்னிடம் வந்திருக்கிறார்கள்.


ஆனால், நாங்கள் அப்படி இல்லை, உன்னிடம் கொண்டிருக்கும் அளவற்ற பிரேமையின் காரணமாக வந்திருக்கிறோம். உன்னால்தான் எங்களை அரவணைத்து ஆறுதல் சொல்லி,நல்ல வழிக்கு எங்களை அழைத்துச் செல்லமுடியும். அந்த நல்ல வழியின் முடிவிடம் எது தெரியுமா? தாமரை மலர்களையும் பழிக்கும்படி மென்மை வாய்ந்த உன்னுடைய திருவடிகள்தான். எங்கள்மீது வெறுப்பினாலோ அல்லது உனக்கு அருகில் இருக்கிறாளே நப்பின்னை அவளிடம் உனக்கு உள்ள அச்சத்தினாலோ கண்களை மூடிக்கொண்டு தூங்குவதுபோல் பாசாங்கு செய்யாதே. உன்னிடத்தே அளவற்ற பிரியம் வைத்திருக்கும் எங்கள்மேல் கருணை கொண்டு, சூரியோதய காலத்தில் மெள்ள மெள்ள மலரும் தாமரை மலரைப் போல், சூரியனையும் சந்திரனையும் போன்ற உன்னுடய கண்களைத் திறந்து எங்களைப் பார்ப்பாயாக. அப்படி நீ பார்த்தாலே போதும், எங்கள்பேரில் இருக்கிற பாவங்கள் எல்லாம் எங்களை விட்டுப் போய்விடும். எங்கள் மீது அன்பு செய்வாய் கிருஷ்ணா என்று ஆண்டாள் வேண்டுகிறாள்.

அடுத்த பாடலிலாவது ஆண்டாளுக்கு கிருஷ்ணனின் அருள் கிடைக்குமா..?

-க.புவனேஸ்வரி

நன்றி : சக்தி விகடன்

Source: http://www.vikatan.com/news/spirituality/77006-andal-devotional-hymn-series-22.art[/h]
 
தினம் ஒரு திருப்பாவை- பாசுரம்- 23

கிருஷ்ணனின் நடையழகை காண விருப்பமோ? #MargazhiSpecial


311010gif_17393.jpg


மார்கழி முதல் நாளில் இருந்து தன் தோழிகள் ஒவ்வொருவரையும் பாடுபட்டு எழுப்பிய ஆண்டாள், நந்தகோபனின் மாளிகைக்கு வந்து வாயிற்காவலனை ஒருவழியாகச் சமாதானப்படுத்தி உள்ளே சென்று நந்தகோபரின் அனுமதி பெற்றுவிட்டாள். தொடர்ந்து அடுத்த அறையில் இருந்த யசோதையின் அனுமதி பெற்று, கிருஷ்ணனின் அறைக்கும் வந்துவிட்டாள்.

ஆனால், கிருஷ்ணனை யமுனைக்கு அழைத்துச் செல்வதற்கு நப்பின்னையின் சம்மதம் அல்லவா முக்கியம்? அவளைப் பலவாறு புகழ்ந்தும் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. பகவானைப் பிரிய மனம் வருமா அவளுக்கு? கடைசியில் ஒருவழியாக நப்பின்னையின் மனமும் ஆண்டாளிடமும் அவளுடைய தோழிகளிடமும் இரக்கம் கொண்டது.

அவளும் கிருஷ்ணனை அழைத்துச் செல்ல சம்மதம் தெரிவித்துவிட்டாள். ஆனால், கிருஷ்ணனுக்கு உடனே எழுந்திருக்க மனம் வரவில்லை. ஒருவேளை நப்பின்னையிடம் பயமோ என்னவோ? அல்லது பயந்தது போன்ற நடிப்பாகவும் இருக்கலாம். அவனுக்குத்தான் வெளிச்சம். கடைசியில் ஒருவழியாக கிருஷ்ணனும் எழுந்திருக்கிறான். கிருஷ்ணன் எழுந்ததைக் கண்டு ஆண்டாளும் அவள் தோழியரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். கிருஷ்ணன் சீக்கிரம் வந்து அவனுக்கு உரிய ஆசனத்தில் அமர்ந்து தங்களுடைய குறைகளைக் கேட்கவேண்டும் என்று சொல்கிறாள்.
கிருஷ்ணன் எப்படி எழுந்து வரவேண்டும் என்பதை ஆண்டாள் பாடுவதைப் பாருங்கள்...

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்,
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா, உன்
கோயில்நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து, யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.


'கிருஷ்ணா, நீ எழுந்துகொண்டது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், நீ எழுந்துகொண்டால் மட்டும் போதுமா என்ன?' என்று கேட்கிறாள். அதற்கு கிருஷ்ணன், 'நீங்கள் சொன்னபடியே எழுந்துகொண்டேன்.. இன்னும் நான் என்ன செய்யவேண்டும்?' என்று கேட்கிறான்.


ஆண்டாள், 'மழைக்காலத்தில் மலைக் குகையில் நீண்ட உறக்கத்தில் இருக்கும் சிங்கம், மழைக்காலம் முடிந்ததை உணர்ந்துகொண்டதும், தீக்கங்கு போல் சிவந்த கண்களை விழித்துப் பார்த்தபடியும், எல்லா அங்கங்களையும் பிடரி முடி சிலிர்க்கும்படியாக உடம்பை உதறிக்கொண்டு, கர்ஜனை செய்துகொண்டு வெளியில் வருவதுபோல், காயாம்பூவின் நிறம் கொண்டவனே, கிருஷ்ணா! உன்னுடைய அறையில் இருந்து புறப்பட்டு, நீ ராஜாங்கம் நடத்தும் ஆஸ்தான மணிமண்டபத்துக்கு எழுந்தருளவேண்டும்' என்கிறாள்.



310499gif_17283.jpg


ஆண்டாள் கிருஷ்ணனை சிங்கமாக வர்ணித்துப் பாடியதற்குக் காரணமும் இருக்கிறது. பிரகலாதன் காணும் இடமெங்கும் நீக்கமற நிலைத்திருப்பான் என் நாராயணன் என்று சொன்ன அந்தக் கணமே, எங்குமே நீக்கமற அருவமாக நிலைத்திருக்கும் அந்தப் பரம்பொருளான நாராயணன், நரசிம்ம உருக்கொண்டுவிட்டான். அதுமட்டுமல்ல 'இரண்யன் எந்தத் தூணைப் பிளப்பானோ?' என்ற எண்ணத்தில் காணும் இடமெங்கும் நரசிங்க வடிவம் கொண்டு நிலைகொண்டுவிட்டார். அதேபோல் கிருஷ்ணனும் நாங்கள் காணும் இடமெங்கும் நிலைபெற்று இருந்து தங்களை மகிழ்விக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஆண்டாள் இப்படிப் பாடி இருக்கலாம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

'அப்படி கிருஷ்ணன் சிங்கம் போல் எழுந்து நடந்து ஆஸ்தான மண்டபத்தில் உள்ள சிங்காசனத்தில் எழுந்தருளவேண்டும். உனக்கு நாங்கள் வந்திருக்கும் காரியம் நன்றாகத் தெரிந்திருக்கலாம். ஆனாலும், நீ உன்னுடைய ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி எங்கள் விருப்பத்தைக் கேட்பதுதான் சரியாக இருக்கும்' என்கிறாள் ஆண்டாள்.


ஆண்டாள், ஏன் கிருஷ்ணன் உறக்கத்தில் இருந்து எழுந்த அறையிலேயே அவனுடைய குறைகளைச் சொல்லாமல், ஆஸ்தான மண்டபத்துக்கு எழுந்தருளச் சொல்கிறாள் தெரியுமா? அவனுடைய நடையழகை தரிசித்து மகிழத்தான். அப்படி கிருஷ்ணன் நடந்து வரும்போதுதானே அவனுடைய திருவடிகளின் திவ்விய தரிசனத்தை ஆண்டாளும் தோழியரும் பெற முடியும். எனவேதான் ஆண்டாள் கிருஷ்ணனை ஆஸ்தான மண்டபத்துக்கு நடந்து வருமாறு கேட்டுக்கொள்கிறாள்.

விபீஷணன் ராமபிரானின் நடையழகைக் காண்பதற்கு விரும்பியபோது, ராமபிரான் திருக்கண்ணபுரத்தில் நடையழகு தரிசனம் தருவதாகச் சொல்லி, அதன்படியே இன்றைக்கும் திருக்கண்ணபுரத்தில் அமாவாசைதோறும் விபீஷணனுக்கு நடையழகு சாதிக்கும் வைபவம் நடைபெறுகிறது.

ஆண்டாள் கிருஷ்ணனுடைய நடையழகைக் காண விரும்புவதாகச் சொன்னவுடனே கிருஷ்ணன் எழுந்து வந்துவிடுவானா என்ன?
ஆண்டாளின் தேன்தமிழ்ப் பாசுரங்களைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருந்ததுபோலும். எனவே அவன் உடனே எழுந்து நடந்து வரவில்லை.

ஆண்டாளும் விடுவதாக இல்லை.....

- க.புவனேஸ்வரி

நன்றி : சக்தி விகடன்

Source: http://www.vikatan.com/news/spiritua...ional-hymn.art
 
தினம் ஒரு திருப்பாவை

பாசுரம்- -24

p29_21089_19361.jpg



ஆண்டாள் கிருஷ்ணனைப் புகழ்வது எதற்காகவோ..? #MargazhiSpecial
ஆண்டாளின் விருப்பப்படி கிருஷ்ணன் சிங்கத்தைப் போலவே கம்பீரமாக நடந்து வந்து சிங்காசனத்தில் அமர்ந்துகொள்கிறான். அவன் பின்னே ஆஸ்தான மண்டபத்துக்கு வந்த ஆண்டாளையும் அவளுடைய தோழிகளையும் பார்த்து, 'நீங்கள் என்ன காரியமாக வந்தீர்கள்?' என்று கேட்கிறான். ஆண்டாள் தாங்கள் கேட்கப் போவதை அவன் தரவேண்டும் என்பதால், முதலில் கிருஷ்ணன் புரிந்த லீலைகளைப் பற்றி ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி அவனுடைய புகழ் பாடுகிறாள். அரசனிடம் பரிசு பெறச் செல்லும் புலவர்கள், அரசனுடைய புகழைப் பாடுவதில்லையா? அதேபோல் ஆண்டாளும் கிருஷ்ணனின் புகழைப் பாடுகிறாள்.
ஆண்டாள், கிருஷ்ணனுக்கு முந்திய அவதாரங்களான வாமனன், ராமபிரான் ஆகிய இருவரும்கூட கிருஷ்ணன்தான் என்று சொல்கிறாள்.

அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி!
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி!
பொன்றச் சகட முதைத்தாய் புகழ்போற்றி!
கன்று குணிலா வெறிந்தாய் கழல்போற்றி!
குன்று குடையா வெடுத்தாய் குணம்போற்றி!
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி!
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்,
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்.


மகாபலி சக்கரவர்த்தி பக்த பிரகலாதனின் பேரன். அதனால், அவன் அசுரனாக இருந்தாலும், தர்ம சிந்தனை உள்ளவனாக இருந்தான். இல்லை என்று வருபவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கேட்டதைக் கொடுக்கும் வள்ளல் தன்மை கொண்டவன். அதனால் அவனுக்கு கர்வமும் இருந்தது. அவன் ஒரு யாகம் செய்ய விரும்பினான். அந்த யாகம் நிறைவேறிவிட்டால், இந்திரனின் பதவிக்கே ஆபத்து வந்துவிடும். எனவே, தேவர்களின் வேண்டுகோளின்படி, பகவான் நாராயணன் வாமனனாக அவதாரம் செய்தார். தந்திரமாக மகாபலியிடம் மூன்றடி தானம் கேட்டான். மகாபலியும் தாரை வார்த்து, 'கொடுத்தேன்' என்று சொன்னதும், வாமனனாக வந்த பகவான், ஓங்கி உயர்ந்து ஓர் அடியால் பூமியையும், மற்றுமோர் அடியால் விண்ணையும் அளந்து முடித்து, மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்க, மகாபலி தன்னுடைய தலையில் பகவானின் மூன்றாவது அடியை வைத்துக்கொள்ளுமாறு சொன்னான். பகவானின் திருவடியை தாங்கும் பெரும்பேறு அவனுக்கு வாய்த்தது. எல்லாம் பிரகலாதனின் பேரன் என்ற காரணத்தினால்தான்.


அடுத்ததாக பகவான் ராமபிரானாக அவதரித்து, ராவணனை சம்ஹாரம் செய்ததைக் குறிப்பிடுகிறாள். ராமபிரான் ராவணனை சம்ஹாரம் செய்வதற்கு தன்னுடைய மனைவியான சீதாபிராட்டியையே பிரிந்திருக்க நேரிட்டது. அசுரனான ராவணனிடம் இருந்து உலக மக்களையும் தேவர்களையும் காப்பாற்றுவதற்காக ராவணனை வதம் செய்யவேண்டி இருந்தது. அதற்கு ஒரு காரணமே ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றது. இந்த இரண்டு அவதாரங்களும் கிருஷ்ணன்தான் என்று குறிப்பிடும் ஆண்டாள், இந்த அவதாரத்தில் கிருஷ்ணன் புரிந்த லீலைகளைப் புகழ்கிறாள்.

'பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி' என்ற வரியில், கிருஷ்ணனைக் கொல்வதற்காக கம்சன் அனுப்பிய சகடாசுரனை வதம் செய்த லீலையைக் குறிப்பிடுகிறாள் ஆண்டாள். வாமனன் தந்திரமாக யாசகம் பெற்று மகாபலியை ஒடுக்கினார்; ராமபிரானோ இளைஞராகி, சீதையை மணம் செய்துகொண்ட பிறகு ராவணனை சம்ஹாரம் செய்தார்.


ஆனால், கிருஷ்ணனோ தான் பச்சிளம் குழந்தையாக இருந்தபோதே பூதனையைக் கொன்றான்; சிறு பிள்ளையாக ஆனதுமே சகடாசுரனைக் கொன்றான். பின்னும் கம்சன் அனுப்பிய வத்சாசுரன் கன்றின் வடிவம் கொண்டு வந்தபோது அவனையும் அழித்தான் என்று கிருஷ்ணனின் லீலைகளைக் குறிப்பிட்ட ஆண்டாள், இப்படி கிருஷ்ணனின் சம்ஹார லீலைகளை மட்டுமே சொன்னால், அவனுடைய பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடுமே என்று அச்சம் கொண்டவளாக, கோவர்த்தனகிரியை குடையாகப் பிடித்து, இடிமின்னல், அடைமழையில் இருந்து கோகுலத்து வாசிகளைக் காப்பாற்றிய லீலையையும் குறிப்பிட்டுப் புகழ்கிறாள்.

இப்படியெல்லாம் லீலைகள் புரிந்தவனே, கிருஷ்ணா! உன்னைப் போற்றுகிறோம். பகைவர்களை வெர்றி கொள்ளும் உன்னுடைய ஆயுதமான சுதர்சனத்தையும் போற்றுகிறோம். நாங்கள் இப்படி உன்னைப் பாடிப் புகழ்வது எதற்கு என்பது உனக்குத் தெரியாதா என்ன? நாங்கள் எதை வேண்டி வந்திருக்கிறோமோ அதைத் தட்டாமல் எங்களுக்குத் தரவேண்டும் என்கிறாள் ஆண்டாள்.


அப்படி ஆண்டாள் கேட்டதைத் தந்துவிட்டானா கிருஷ்ணன்?

- க.புவனேஸ்வரி

நன்றி : சக்தி விகடன்
Source: http://www.vikatan.com/news/spiritua...ional-hymn.art
 
தினம் ஒரு திருப்பாவை

பாசுரம் -
25

கிருஷ்ணனுக்கு
ஏற்பட்ட ஆசை! #MargazhiSpecial


311077gif_20143_22259.jpg



ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டபடி, ஒருவழியாக சமாதானம் ஆகி, ஆஸ்தான மண்டபத்துக்கு வந்து சிங்காசனத்தில் அமர்ந்துகொண்டான் கிருஷ்ணன். தாங்கள் கேட்டுக்கொண்டபடியே சிங்காசனத்தில் அமர்ந்துகொண்ட கிருஷ்ணனிடம். ஆண்டாள் நல்லவர்களை ரட்சிப்பதற்காகவும், துஷ்டர்களை சம்ஹாரம் செய்வதற்காகவும் எடுத்த இந்த அவதாரத்தில், துஷ்டர்களை சம்ஹாரம் செய்வதற்காக கிருஷ்ணன் புரிந்த லீலைகளைக் குறிப்பிட்டுப் போற்றுகிறாள். கிருஷ்ணனுக்கு சேவை செய்வதையே பெரிதாக நினைத்து வந்திருப்பதாகவும், அவர்கள் விரும்புவது எது என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும் என்பதால், அதைத் தட்டாமல் தரும்படிக் கேட்டாள். ஆனால், கேட்டதும் கொடுப்பவன் என்று போற்றப்படும் கண்ணன், ஆண்டாள் கேட்டதை உடனே கொடுத்துவிடவில்லை. எனவே ஆண்டாள் தொடர்ந்து, கிருஷ்ணன் யார், அவன் எப்படிப்பட்டவன் என்பதெல்லாம் தங்களுக்குத் தெரியும் என்று பாடுகிறாள். அப்படிப்பட்ட கிருஷ்ணன் தாங்கள் வந்திருக்கும் நோக்கம் நிறைவேறவேண்டும் என்று பிரார்த்திக்கிறாள்.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த,
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்,
நெருப்பென்ன நின்ற நெடுமாலே, உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி,
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


சிங்காசனத்தில் கன கம்பீரமாக அமர்ந்திருக்கும் கிருஷ்ணனின் அவதார ரகசியத்தை இப்படிப் புகழ்கிறார்கள்.

கிருஷ்ணனுக்கு முந்தைய அவதாரமான ராமாவதாரத்தில் ராமபிரான் கோசலைக்கு மகனாகப் பிறந்தாலும், அவன் வளர்ந்தது என்னவோ கைகேயியின் பிள்ளையாகத்தான்.பார்ப்பவர்கள் எல்லோருமே ராமன் கோசலைக்குப் பிள்ளையா இல்லை கைகேயிக்குப் பிள்ளையா என்று குழம்பும்படி ராமன் முழுக்க முழுக்க கைகேயியின் மகளாகவே வளர்ந்து வந்தான்.

அதேபோல், கிருஷ்ணனுக்கும் ஒருத்தி மகனாய் பிறந்து மற்றொருத்திக்குப் பிள்ளையாக வளரும் ஆசை ஏற்பட்டுவிட்டது போலும். அதைத்தான் ஆண்டாள் மறைமுகமாகக் குறிப்பிடுகிறாள்.

ஆனால், ராமன் தான் பிறந்த அரண்மனையிலேயே கைகேயியின் அரவணைப்பில் வளர்ந்தான். கிருஷ்ணனோ கம்சனின் அரண்மனைச் சிறையில் பிறந்தான். பிறந்த உடனே தந்தை வசுதேவரால் கோகுலத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, நந்தகோபரின் மாளிகையில் விடப்பட்டான்.


தேவகிக்கு மகனாக இரவுப் பொழுதில் சிறைக் கொட்டடியில் பிறந்த கிருஷ்ணன், அதே இரவில் கோகுலத்துக்குச் சென்றது ஏன்?

தேவகிக்கு எட்டாவது பிள்ளை பிறக்கும் நேரத்தை தேவகியைவிடவும் கம்சன் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்தான். பிறந்த உடனே அவனைக் கொன்றுவிடவேண்டுமே என்ற எண்ணம்தான் காரணம். தேவகிக்கோ, கிருஷ்ணன்பிறக்காமல் இருந்தாலே நன்றாக இருக்குமே என்ற தவிப்பு. பிறந்து அவன் கம்சன் கையால் மாள்வதை விடவும், பிறக்காமல் இருப்பது நல்லது அல்லவா?

தேவகியின் அச்சத்தைப் போக்குவதைப் போல், கிருஷ்ணன் தான் பிறக்கும்போதே, சங்கு சக்ரதாரியாக தெய்விகத் தன்மையுடன் காட்சி தந்தான். தான் செய்த தவப்பயனாக தெய்வமே தனக்குப் பிள்ளையாகப் பிறந்தது கண்டு தேவகி அளவற்ற ஆனந்தம் கொண்டாள். அதன் பிறகு தேவகி கேட்டுக்கொள்ளவே, தெய்விகம் மறைத்து, தேவகியின் குழந்தையாகக் காட்சி தந்தான்.

பின்னர், அசரீரி வாக்குப்படி வசுதேவர் குழந்தையை எடுத்துக்கொண்டு கோகுலத்துக்குச் சென்றார். நந்தகோபரின் மாளிகையில் அப்போதுதான் பிரசவித்திருந்த யசோதையின் பெண்குழந்தையை தான் எடுத்துக்கொண்டு, கொண்டு சென்ற கிருஷ்ணனை யசோதையின் அருகில் படுக்க வைத்துவிட்டுத் திரும்பினார்.


இப்படியாக, பிறந்த உடனே தன்னைக் கொல்லவேண்டும் என்று நினைத்த கம்சனின் ஆசையை நிராசையாக்கிவிட்டான். பிறகு தன்னை அழிக்கப் பிறந்த தேவகியின் எட்டாவது மகன், கோகுலத்தில் வளர்கின்றான் என்று கேள்விப்பட்டு, அவனால் பிற்காலத்தில் தனக்கு ஏற்படப்போகும் அழிவை சகித்துக்கொள்ள முடியாமல், கிருஷ்ணனைக் கொல்வதற்காக கம்சன் அனுப்பிய அத்தனை அசுரர்களையும் கிருஷ்ணன் அழித்துவிட்டதைத் தெரிந்துகொண்டான். இதனால், கிருஷ்ணன் கம்சனின் வயிற்றில் தீயாகச் சுட்டான். ஆனால், தன்னை சரண் அடைந்தவர்களிடமோ அவன் மிகுந்த அன்பு செலுத்துபவன். இப்படியெல்லாம் கிருஷ்ணனைப் போற்றும் ஆண்டாள், தேவகி புரிந்துகொண்டதைப் போலவே தானும் தன் தோழியர்களும் கிருஷ்ணனை தெய்வ அவதாரம் என்று புரிந்துகொண்டதாகவும் ஆண்டாள் கூறுகிறாள். எனவே தாங்கள் விரும்பும் மேலான செல்வம் அனைத்தையும் அருளுமாறும் வேண்டிக் கொள்கிறாள். அந்த மேலான செல்வம் எது?

- க.புவனேஸ்வரி

நன்றி : சக்தி விகடன்
Source: http://www.vikatan.com/news/spiritua...ional-hymn.art
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top