Tamil Brahmins
Our website is made possible by displaying online advertisements to our visitors.
Please consider supporting us by disabling your ad blocker.
Alternatively, consider donating to keep the site up. Donations are accepted via PayPal & via NEFT. Details on how to donate can be found at here
Page 2 of 4 FirstFirst 1234 LastLast
Results 11 to 20 of 31
 1. #11
  Join Date
  Oct 2012
  Location
  I live in Chennai
  Posts
  7,105
  Downloads
  2
  Uploads
  0

  0 Not allowed!
  மார்கழி வழிபாடு : திருப்பாவை - திருவெம்பாவை -11


  மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.


  திருப்பாவை
  பாடல் 11

  கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
  செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
  குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
  புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
  சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
  முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
  சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
  எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.


  பொருள்: கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனைத் தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே! நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ண னாகிய கண்ணனைப் புகழ்ந்த பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக் கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?

  திருவெம்பாவை
  பாடல் 11

  மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
  கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
  ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
  ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!
  சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
  ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
  உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
  எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.


  பொருள்: சிவபெருமானே! உன் அடியவர்களான நாங்கள் வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட குளத்தில் 'முகேர்' என சப்தம் எழுப்பி குதித்து, தண்ணீரைக் குடைந்து நீந்தியபடியே உன் திருவடிகளை எண்ணிப் பாடினோம். வழிவழியாக இந்த பாவை நோன்பை நிறைவேற்றி வருவதை நீ அறிவாய். சிவந்த நெருப்பைப் போன்றவனே! உடலெங்கும் திருநீறு அணிந்தவனே! செல்வத்தின் அதிபதியே! சிறிய இடையையும், மையிட்ட அழகிய கண்களையும் உடைய பார்வதிதேவியின் மணாளனே! ஐயனே! நீ இந்த உயிர்களை ஆட்கொண்டதும் அவை என்னவெல்லாம் நன்மையடையுமோ, அவை அனைத்தையும் அடைந்து விட்ட உணர்வு உன்னைப் பாடினாலே எங்களுக்கு கிடைத்து விடுகிறது! இந்த பேரின்பநிலை மறைந்து விடாமல் என்றும் நிலைத்திருக்க அருள்செய்வாயாக!


  நன்றி: தினமலர் /http://www.dinamalar.com/news_detail.asp?id=1926284
 2. #12
  Join Date
  Oct 2012
  Location
  I live in Chennai
  Posts
  7,105
  Downloads
  2
  Uploads
  0

  0 Not allowed!
  மார்கழி வழிபாடு : திருப்பாவை - திருவெம்பாவை -12

  மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.

  திருப்பாவை
  பாடல் 12

  கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
  நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
  நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
  பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
  சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
  மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
  இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
  அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.


  பொருள்: பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றன. இந்தளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக் காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன் பேருறக்கம்?
  திருவெம்பாவை
  பாடல் 12

  ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
  தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
  கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
  காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
  வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
  ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
  பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
  எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்


  பொருள்: தோழியரே! இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் கங்கையைத் தலையில் கொண்டவனும், சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில், கையில் அக்னியுடன் நடனமாடும் கலைஞனும், வானத்தையும், பூலோகத்தையும், பிற உலகங்களையும் காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடு பவனுமான தன்மை களைக் கொண்டவர் நம் சிவபெருமான். அவரை, நம் கரங்களிலுள்ள வளையல்கள் ஒலியெழுப்பவும், இடுப்பிலுள்ள ஆபரணங்கள் பெருஒலி எழுப்பவும், பூக்களையுடைய பொய்கையில் நீந்தி மகிழ்ந்து, 'சிவாயநம' என்னும் மந்திரம் சொல்லி, அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.

  நன்றி: தினமலர் /http://www.dinamalar.com/news_detail.asp?id=1927257
 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #13
  Join Date
  Oct 2012
  Location
  I live in Chennai
  Posts
  7,105
  Downloads
  2
  Uploads
  0

  0 Not allowed!
  மார்கழி வழிபாடு : திருப்பாவை - திருவெம்பாவை-13  மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.

  திருப்பாவை
  பாடல் 13

  புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
  கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
  பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
  வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
  புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
  குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
  பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
  கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.


  பொருள்: பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன்மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே, நம் தோழியர் எல்ேலாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது. கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே! குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே! மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? துாக்கம் என்கிற திருட்டை தவிர்த்து நீராட வா.


  திருவெம்பாவை

  பாடல் 13

  பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
  அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
  தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
  எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
  பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
  நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
  கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
  பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.


  விளக்கம்: கரிய நிற குவளை மலர்கள் குளத்தின் நடுவிலே உள்ளன. அருகில் சிவந்த நிறத்தில் தாமரை மலர்கள் முளைத்துக் கிடக்கின்றன. நீர் காக்கைகள் நீரில் மிதக்கின்றன. இந்தக் குளத்தில் தங்கள் அழுக்கை களைய மக்கள் வருகிறார்கள். அவர்கள் 'நமசிவாய' என சொல்லி சப்தம் எழுப்புகிறார்கள். இந்தக் காரணங்களால், இந்தக் குளம் எங்கள் சிவனையும், பார்வதியையும் போல் தோற்றமளிக்கிறது. தாமரை மலர்கள் நிறைந்த இந்த தெய்வீக குளத்தில், நம் சங்கு வளையல்கள் சலசலக்க, கால் சிலம்புகள் கலகலவென ஒலியெழுப்ப, மார்புகள் விம்ம, பாய்ந்து நடுப்பகுதிக்கு சென்று நீராடுவோம்.

  நன்றி: தினமலர் /http://www.dinamalar.com/news_detail.asp?id=1927782
 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #14
  Join Date
  Oct 2012
  Location
  I live in Chennai
  Posts
  7,105
  Downloads
  2
  Uploads
  0

  0 Not allowed!
  மார்கழி வழிபாடு : திருப்பாவை-திருவெம்பாவை-14


  மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.


  திருப்பாவை
  பாடல் 14

  உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
  செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
  செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
  தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
  எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
  நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
  சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
  பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.


  பொருள்: எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின் வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!

  திருவெம்பாவை
  பாடல் 14

  காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
  கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
  சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
  வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
  சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
  ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
  பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
  பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.


  பொருள்: ஆண்கள் அணிந்துள்ள காதணிகள் தண்ணீரில் ஆட, அவர்களின் தங்கநகைகள் ஆட, பெண்களின் கூந்தல் ஆட, அக்கூந்தலில் மலர்கள் அணிந்திருந்ததால் ஏற்பட்ட வாசனை கருதி அதை முகர வண்டுகள் ஆட, குளிர்ந்த நீரில் ஆடுங்கள். அவ்வாறு நீராடும் போது சிற்றம்பலத்தில் நடனமிடும் சிவபெருமானின் புகழ் பாடுங்கள்.
  வேதத்தின் பொருளையும், வேதத்தின் பொருளாக விளங்குகின்ற சிவனின் பெயரையும் சொல்லி நீராடுங்கள். ஜோதி வடிவாய் திருவண்ணா மலையிலே காட்சி தரும் அந்த சிவனின் மாபெரும் விருத்தாத்தங்களையெல்லாம் சொல்லுங்கள். அவனது மார்பில் தவழும் கொன்றை மாலையின் மகிமை பற்றி பேசுங்கள். முதலும் முடிவும் இல்லாத அந்த இறைவனின் புகழைப் பாடுங்கள். பந்த பாசங்களில் இருந்து நம்மைப் பிரிக்கும் வளையல்கள் அணிந்த தாயுமானவனாய் விளங்கும் அந்த சிவனின் பாதமலர்களைப் பாடி நீராடுங்கள்.

  நன்றி: தினமலர் /http://www.dinamalar.com/news_detail.asp?id=1928550
 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 8. #15
  Join Date
  Oct 2012
  Location
  I live in Chennai
  Posts
  7,105
  Downloads
  2
  Uploads
  0

  0 Not allowed!
  மார்கழி வழிபாடு - திருப்பாவை- திருவெம்பாவை-15  மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.

  திருப்பாவை
  - பாடல் 15

  எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
  சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
  வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
  வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
  ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
  எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக்கொள்
  வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
  வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.

  பொருள்: ''ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! ''நாங்கள் அழைத்தும் உறங்குகிறாயே?'' என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, ''இதோ வந்து விடுகிறேன்,'' என்கிறாள்.

  தோழிகள், ''உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது.'' என்று சிடுசிடுத்தனர்.
  அப்போது அவள், ''சரி..சரி... நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன்,'' என்கிறாள்.
  ''அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது?'' என்று கடிந்து கொள்கிறார்கள்.

  அவளும் ''என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்து விட்டார்களா?'' என்கிறாள். தோழிகள், ''நீயே வெளியே வந்து எண்ணிப்பார். குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்க வருவாய்,'' என்கிறார்கள்.

  திருவெம்பாவை - பாடல் 15

  ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
  நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
  சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
  நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
  அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
  பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
  ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
  வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
  ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

  பொருள்: அழகிய மார்பு கச்சையும், ஆபரணங்களும் அணிந்த பெண்களே! நம் தோழி 'எம்பெருமானே' என்று சிவனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள். அவரது சிறப்புகளை நிறுத்தாமல் பேசுவாள். கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகும். அந்த பக்திப் பரவச உலகில் இருந்து அவளால் இந்த பூமிக்கு மீண்டும் வரவே இயலாத நிலை ஏற்படும். சிவன் மட்டுமே தனது தெய்வம் என்ற நிலையில் பித்துப் பிடித்து நிற்பாள். அவளைப் போலவே நாமும் சிவனின் தாள் பணிவோம். பூக்கள் நிறைந்த கலப்பை வடிவிலான குளத்தில் பாய்ந்து
  நீராடுவோம்.

  நன்றி: தினமலர் http://www.dinamalar.com/news_detail.asp?id=1929260
 9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 10. #16
  Join Date
  Oct 2012
  Location
  I live in Chennai
  Posts
  7,105
  Downloads
  2
  Uploads
  0

  0 Not allowed!
  மார்கழி வழிபாடு : திருப்பாவைதிருவெம்பாவை -16
  மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் உங்கள் இனிய குரலில் பாடி மகிழுங்கள்

  திருப்பாவை


  பாடல்
  16

  நாயகனாய் நின்ற நந்தகோபனுடையகோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரணவாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறைமாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்துாயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீநேய நிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய்.


  பொருள்: எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடிகள் கட்டிய வாசல் காவலனே! ஆயர்குல கன்னியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திற. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலி எழுப்பும் பறை (சிறுமுரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். 'அதெல்லாம் முடியாது' என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறந்து விடு.
  திருவெம்பாவை

  பாடல்
  16
  முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்குமுன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளேஎன்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

  பொருள்
  : மேகமே ! இந்தக் கடலிலுள்ள நீர் முழுவதையும் குடித்து, ஆவியாக்கி வாவனம் நோக்கிச் சென்று அங்கே தங்கியிருக்கிறாய். உன் தோற்றம் எங்கள் சிவனின் துணைவியான உமாதேவியாரின் கரிய நிறத்தை ஒத்திருக்கிறது. உன்னில் இருந்து கிளம்பிய மின்னல் ஒளி அம்பிகையின் சிறிய இடையை ஒத்துள்ளது. நீ இடியாக இடித்தது தேவியின் திருவடியில் உள்ள பொன் சிலம்பு ஒலித்தது போல் உள்ளது. நீ வீசும் வானவில் அம்பிகையின் எழில்மிகு புருவத்தை ஒத்துள்ளது. எங்களை ஆட்கொண்ட அம்பிகை பாகனான சிவபெருமானுடைய பக்தர்களுக்காக முதலில் நீ மழையைப் பொழிய வேண்டும். அதன் பிறகு எங்களுக்காகவும் பொழிவாயாக.

  நன்றி: தினமலர் /http://www.dinamalar.com/news_detail.asp?id=1680330
 11. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 12. #17
  Join Date
  Oct 2012
  Location
  I live in Chennai
  Posts
  7,105
  Downloads
  2
  Uploads
  0

  0 Not allowed!
  மார்கழி வழிபாடு : திருப்பாவை- திருவெம்பாவை-17  மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.

  திருப்பாவை

  பாடல் 17

  அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
  எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
  கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
  எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
  அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
  உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
  செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
  உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.


  பொருள்: ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவையும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே! தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளை உடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே! மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ எழ வேண்டும். விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே! நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும்.

  திருவெம்பாவை
  பாடல் 17

  செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
  எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
  கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
  இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
  செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
  அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
  நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழந்
  பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.


  பொருள்: தேன்சிந்தும் மலர்களைச் சூடிய கருங்கூந்தலை உடைய பெண்களே! செந்தாமரைக் கண்ணனான நாராயணன், பிரம்மா, பிற தேவர்கள் யாரும் தராத இன்பத்தை அள்ளி வழங்க நம் தலைவனாடிய சிவபெருமான், இதோ! வீடுகள் தோறும் எழுந்தருளுகிறான். அவனது தாமரை போன்ற திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சேவகன் போல் இறங்கி வருகிறான். அழகிய கண்களை உடையவனும், அடியவர்களுக்கு அமுதமானவனும், நமது தலைவனுமான அந்தச் சிவனை வணங்கி நலம் பல பெறும் பொருட்டு, தாமரை மலர்கள் மிதக்கும் இந்த பொய்கையில் பாய்ந்து நீராடி அவன் தரிசனம் காண தயாராவோம்.


  Read more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=1930429
 13. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 14. #18
  Join Date
  Oct 2012
  Location
  I live in Chennai
  Posts
  7,105
  Downloads
  2
  Uploads
  0

  0 Not allowed!
  மார்கழி வழிபாடு - திருப்பாவை-திருவெம்பாவை-18
  மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.

  திருப்பாவை
  பாடல் 18

  உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
  நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
  கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
  வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
  பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
  பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
  செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
  வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

  பொருள்: மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின் வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்த கோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்தி கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கதவைத்
  திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.


  திருவெம்பாவை


  பாடல்
  18

  அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
  விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
  கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
  தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
  பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
  விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
  கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
  பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

  பொருள்: சூரியனின் ஒளிக்கீற்று வெளிப்பட்டதும் விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி மறைந்தனவோ, அப்படி அண்ணாமலையாரின் திருவடியைப் பணிந்ததும், தேவர்களின் மணிமுடியில் உள்ள நவரத்தினங்கள் ஒளி இழந்தன. பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் என முப்பிரிவாகவும் திகழும் அவர்வானமாகவும், பூமியாகவும், இவையல்லாத பிற உலகங்களாகவும் திகழ்கிறார். கண்ணுக்கு இனிய அமுதம் போல் தோன்றும் அவரது சிலம்பணிந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடி, பூக்கள் மிதக்கும் இந்தக் குளத்தில் பாய்ந்து நீராடுங்கள்.

  Read more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=1930893
 15. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 16. #19
  Join Date
  Oct 2012
  Location
  I live in Chennai
  Posts
  7,105
  Downloads
  2
  Uploads
  0

  0 Not allowed!
  மார்கழி வழிபாடு - திருப்பாவை-திருவெம்பாவை-19
  மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.

  திருப்பாவை
  .............
  பாடல் 19
  .............

  குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
  மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
  கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
  வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
  மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
  எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
  எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
  தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.


  பொருள்: ""குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப்பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் துக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படி செய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?
  ........
  திருவெம்பாவை
  .........
  பாடல் 19
  ..........

  உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
  அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
  எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
  எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
  எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
  கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
  இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
  எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.


  பொருள்: "உன்னிடம் கொடுக்கப்படும் என் மகள் உனக்கு மட்டுமே சொந்தமானவள்' என்று ஒரு தந்தை தன் மகளை ஒருவனிடம் திருமணம் செய்து கொடுக்கும்போது செய்யும் பழமொழி இருக்கிறது. அதன் காரணமாக, எங்களைத் திருமணம் செய்வோர் எப்படி இருக்க வேண்டும் என்று உன்னிடம் கேட்கும் <உரிமையுடன் விண்ணப்பிக்கிறோம். எங்களைத் தழுவுவோர் உன் பக்தர்களாக மட்டுமே இருக்க வேண்டும். எங்கள் கைகள் உனக்கு மட்டுமே பணி செய்வதற்கு அவர்கள் அனுமதிப்பவர்களாய் இருக்க வேண்டும். எங்கள் பார்வையில் <உனக்கு பணி செய்பவர்கள் மட்டுமே தெரிய வேண்டும். பிற தீமைகள் எதுவும் பார்வையில் படவே கூடாது. இப்படி ஒரு பரிசை எம்பெருமானான நீ எங்களுக்கு தருவாயானால், சூரியன் எங்கே உதித்தால் எங்களுக்கென்ன?


  நன்றி: தினமலர் http://www.dinamalar.com/news_detail.asp?id=1931625
 17. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 18. #20
  Join Date
  Oct 2012
  Location
  I live in Chennai
  Posts
  7,105
  Downloads
  2
  Uploads
  0

  0 Not allowed!
  மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.

  திருப்பாவை

  பாடல் 20

  முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
  கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
  செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
  வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
  செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
  நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
  உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
  இப்போதே எம்மை நீராட்ேடலோர் எம்பாவாய்.

  பொருள்: முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல்மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் துாயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.


  திருவெம்பாவை

  பாடல் 20

  போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
  போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
  போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
  போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
  போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
  போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
  போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
  போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

  பொருள்: சிவபெருமானே! எல்லாவற்றுக்கும் முதலாவதான உன் பாத மலர்களை வணங்குகிறோம். எல்லாவற்றுக்கும் முடிவாயுள்ள உன் மென்மையான திருவடிகளை பணிகின்றோம். எல்லா உயிர்களையும் படைக்கின்ற உன் பொற்பாதங்களை சரணடைகின்றோம். எல்லா உயிர்களுக்கும் வாழும் காலத்தில் இன்பமான வாழ்வு தரும் மலரடிகளை பிரார்த்திக்கிறோம். உயிர்களை அழித்து இறுதிக்காலத்தை தருகின்ற இணையற்ற காலடிகளைப் போற்றுகின்றோம். திருமாலாலும், பிரம்மாவாலும் காண முடியாத தாமரை பாதங்களைக் காண்பதில் பெருமிதமடைகின்றோம். எங்களுக்கு பிறப்பற்ற நிலை தரும் பொன் போன்ற திருவடிகளை பற்றுகின்றோம். இவ்வாறு உன்னோடு ஐக்கியமாகி, உன் நினைவுகளுடன் நீர்நிலைகளில் நீராடி மகிழ்கிறோம்.

  நன்றி: தினமலர் http://www.dinamalar.com/special_detail.asp?id=1932211
 19. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
Page 2 of 4 FirstFirst 1234 LastLast

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •