• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சோளிங்கர் யோக நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேய

Status
Not open for further replies.

praveen

Life is a dream
Staff member
சோளிங்கர் யோக நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேய

ராம அவதாரம் முடிந்ததும் ராமபிரான் வைகுண்டம் எழுந்தருளும் வேளையில், தாமும் உடன் வருவதாக கூறினார் ஆஞ்சநேயர். ஆனால் ராமபிரான், ‘கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும் சப்த ரிஷிகளுக்கும், காலன் மற்றும் கேயன் எனும் இரு அரக்கர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்.


அவர்களை என்னுடைய சங்கு, சக்கரத்தால் அழித்து கலியுகம் முடியும் வரை நீயும் கடிகாசலத்தில் சங்கு, சக்கரத்துடன் இருந்து யோக ஆஞ்சநேயராக மக்களுக்கு அருள்பாலித்து கலியுகம் முடியும் வேளையில் எம்மை வந்தடைவாய்’ என்று கூறிவிட்டார்.


இதனால்தான் யோக நிலையில் சங்கு, சக்கரத்துடன் அமர்ந்த நிலையில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னிதி கோவிலில் இருக்கிறது.கலியுகம் முடியும் வரை அனுமனும் கலியுகத்திலேயே வாழ்வதாக ஐதீகம். எனவேதான் இன்றும் பக்தியோடு, ராமாயணம் படிக்கும் இடம் தோறும் ஆஞ்சநேயர் அருவமாகவோ, உருவமாகவோ வந்து கலந்துகொள்வதாக ஐதீகம்
.
பக்த பிரகலாதனுக்காக தூணில் இருந்து அவதரித்தவர் நரசிம்மர்அத்திரி, காஷ்யபர், வசிஷ்டர், ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜா, விஸ்வாமித்ரர் என சப்த ரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி நரசிம்மப் பெருமாள் சோளிங்கபுரம் தலத்தில் சாய்ந்த நிலையில், யோக முத்திரையோடு தியானக் கோலத்தில் காட்சியளிக்கிறார்
இங்குள்ள பெரிய மலையின் உச்சியில் வடக்கு நோக்கியபடி ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. அதனைக் கடந்தால் சாளக்கிராம மாலை அணிந்து மூலவராய் யோக நரசிம்மர் கிழக்கு பார்த்த வண்ணம் அருள்பாலித்து வருகிறார்.


அம்ருதவல்லித் தாயார் தனிச்சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் உற்சவர் பக்தவச்சலப் பெருமாள் என்பதாகும். தாயார் திருநாமம் சுதாவல்லி.


தலவரலாறு-
வடமதுரையை ஆட்சி செய்து கொண்டு இருந்த இந்திரத்துய்மன் என்ற அரசர், கடுமையான கோபம் கொண்டவர். எதற்கு எடுத்தாலும் இவருடைய வாய் பேசாது, அவர் கையில் இருக்கும் போர்வாள் தான் பேசும். இப்படி சினம் கொண்ட அரசர் ஸ்ரீநரசிம்மரின் தீவிர பக்தர்.


“அரசர் இந்திரத்துய்மன், நரசிம்மரை மட்டும் வணங்குவதால்தான் நரசிம்மரை போல் கோபம் அதிகம் ஏற்படுகிறது. அதனால் அரசரை ஸ்ரீயோக நரசிம்மரை வணங்க சொல்லலாம்.” என்று அமைச்சர்களுக்குள் பேசி அதை பக்குவமாக அரசருக்கு எடுத்து சொல்ல ஒரு அமைச்சர் மன்னரிடம் சென்றார். “அரசே.. நரசிம்மரை வணங்கினால் வீரம் கிடைக்கும். அதுவே ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கினால் செல்வம், செல்வாக்கு கிடைக்கும். வாழ்க்கைக்கு தேவையானது முக்கியமானது சந்தோஷம். அந்த சந்தோஷத்தை தரக் கூடியவர் ஸ்ரீயோக நரசிம்மர்” என்றார்
அமைச்சர்.


எறும்பு ஊற ஊற கல்லும் தேயும் என்பதை போல் அமைச்சரின் பேச்சு அரசருக்கு ஸ்ரீயோக நரசிம்மரை வணங்க வேண்டும் என்ற மன மாற்றத்தை தந்தது. ஸ்ரீயோகநரசிம்மரை வணங்க தொடங்கினார் இந்திரத்துய்மன். ஒருநாள், அரசர் காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றார். மான் ஒன்று, பொன்னை போன்று ஜொலித்தது.


அதை கண்ட அரசர், அந்த மானை தன் அரண்மனைக்கு அழைத்து செல்ல விரும்பி, மானை பிடிக்க நினைத்தார். ஆனால் அந்த மானை பிடிக்க முடியவில்லை. பொன்மான், மன்னருக்கு விளையாட்டு காட்டியது. இதனால் சோர்வடைந்த மன்னர், ஒர் இடத்தில் களைப்பாக அமர்ந்தார். அப்போது அங்கே ஒரு அதிசயம் நடந்தது. அந்த பொன்மான், மன்னர் கண் முன்னே ஒரு ஜோதியாக மாறியது.


இதை கண்ட அரசர் இந்திரத்துய்மன் ஆச்சரியப்பட்டார். அந்த ஜோதி ஸ்ரீஆஞ்சநேயனாக காட்சிகொடுத்து. “நான் என்றும் உனக்கு பாதுகாப்பாக இருப்பேன்.” என்று கூறி மறைந்தார் ஸ்ரீஅனுமன். தமக்கு ஸ்ரீஅஞ்சனேயர் ஆசி கிடைத்திருக்கிறது என்றால் எல்லாம் ஸ்ரீயோக நரசிம்மரின் அருளால்தான் என்று ஆனந்தம் கொண்டார் அரசர்.


சில நாட்கள் சென்றது. அப்போது கும்போதரன் என்ற அசுரன், வடமதுரையை ஆட்டிபடைத்தான். அந்த அசுரனிடம் இருந்து தன்னையும் தன் நாட்டையும் காப்பாற்றமாறு ஸ்ரீயோக நரசிம்மரிடமும், ஸ்ரீஆஞ்சனேயரிடமும் வேண்டினார் அரசர் இந்திரத்துய்மன். ஸ்ரீஅனுமன், அரசரின் வேண்டுதலை நிறைவேற்ற, அசுரன் கும்போதரனிடம் போர் செய்து அவனை வீழ்த்தி கொன்றார். இதனால் அரசர் மகிழ்ந்து, ஸ்ரீஅனுமனுக்கு அதே இடத்தில் கோயில் கட்டினார்.


இந்த மலைக்கு சக்தி வாய்ந்த இருவர் வருவார்கள் என்றாரே பைரவேஸ்வரர், அதன்படி ஸ்ரீயோக நரசிம்மரும், ஸ்ரீஆஞ்சனேயரும் அந்த மலை கோயிலில் இருக்கிறார்கள். ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கிய பிறகு ஸ்ரீஆஞ்சனேயரை வணங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.


இந்த சோழங்கிபுரம் அன்று கடிகாசலம் என்ற பெயரோடு விளங்கியிருக்கிறது. விஸ்வாமித்திரர் இம்மலையில் ஒரு கடிகை அதாவது ஒருநாழிகை (24 நிமிடம்) நேரத்தில் ஸ்ரீநரசிம்மரை நோக்கி துதித்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார் கடிகை என்றால் வடமொழியில் ஒருநாழிகை என்ற பொருள். இந்த ஆலயத்தில் ஒருநாழிகை நேரம் இருந்தாலே எல்லா கஷ்டகாலமும் விலகும் என்கிறார்கள்.


நம்மாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் பெற்றத் தலம் இது. ஸ்ரீமந் நாத முனிகளும்,b மணவாள மாமுணியும், ராமானுஜரும், திருக்கச்சி நம்பிகளும் இங்கு மங்களாசாசனம் செய்துள்ளனர்.
நன்றி-இணையம்
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top