• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

The Story of Kaisika Ekadashi

Status
Not open for further replies.

praveen

Life is a dream
Staff member
Kaisika Ekadashi – The Story (கைசிக ஏகாதசி)

30/11/17 கைசிக ஏகாதசி.

திருக்குறுங்குடியின் அருகே உள்ள மகேந்திரகிரி மலையடிவாரத்தில் வசித்து வந்த ஹரிஜன வகுப்பை சேர்ந்தவர் நம்பாடுவான் என்னும் பாணன். வடிவழகிய நம்பியின் மேல் மிகவும் பக்தி கொண்டவர். அக்காலத்தில் அவருக்கு கோயிலுக்கு செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. கோயிலின் வாசலிலிருந்து பகவானை பார்க்க முடியாது. ஆயினும், வருத்தப்படாமல் தினமும் அதிகாலையில் நீராடிவிட்டு, கைசிகம் என்ற பண்ணில் (பைரவி ராகம்) திருக்குறுங்குடி நம்பியின் புகழை இசைத்து, திருப்பள்ளியெழுப்பும் சேவையை செய்து வந்தார். அவ்விதம் ஒரு நாள், கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசியன்று கோவிலுக்கு சென்றபொழுது, ஒரு பிரம்ம ராக்ஷஸன் அவரைத் தடுத்து, “ நீ எனக்கு உணவாக வேண்டும்” என்றது. நம்பாடுவானோ,"விரதம் முடித்துவிட்டு பெருமாளை வழிபட்டபின் உனக்கு உணவாகிறேன்" என்று சொல்ல, பிரம்ம ராக்ஷஸன் அதை நம்பவில்லை. அதற்கு நம்பாடுவான்,"பெருமாளின் உண்மையான பக்தன் பொய் சொல்லமாட்டான்'' என்று கூறி பதினெட்டு விதமான சத்தியங்களைச் செய்கிறான். 16 சத்தியங்களைச் செய்தும் ராக்ஷஸன் நம்பாடுவானை விடவில்லை. 17-வதாக நம்பாடுவான்," எவன் ஸர்வவ்யாபியான வாசுதேவனை ஆராதனை பண்ணாமல் இதர தேவதைகளை உபாஸிக்கிறானோ அவனது பாவத்தை அடைவேன்" என்று சொன்னதும் தனது பிடியை விட்டது. பிறகு நம்பாடுவான், 18--வதாக ,"எல்லா உயிரினங்களையும், ஜனங்களையும் காப்பவனும், இயக்குபவனும் , தேவர்கள், முனிவர்கள் முதலியோரால் ஆராதிக்கப்படுபவனுமான அந்த ஸ்ரீமன் நாராயணனையும் மற்ற தெய்வங்களையும் சமமாக பாவிப்பதால் வரும் பாவத்தை நான் அடையாக கடவேன்" என்று சொன்னான். இந்த வார்த்தையைக் கேட்டதும், பிரம்ம ராக்ஷஸ்," சரி சரி சீக்கிரம் உனது விரதத்தை முடித்துவிட்டு வா" என்று அவனை அனுப்பியது.


நம்பாடுவான் கோவிலுக்கு ஓடிச் சென்று, " பெருமானே! இனி உம்மைப் பாடவே முடியாதோ? நான் உம்மைப் பார்க்கவே முடியாதோ ?" என்று எண்ணிக் கொண்டு, கைசிகப் பண்ணை உருக்கமாகப் பாடினார். அப்போது பெருமாள், த்வஜஸ்தம்பத்தை விலகி இருக்கச் சொல்லி நம்பாடுவானுக்கு தரிசனம் தந்தார். திருக்குறுங்குடியில் மற்ற ஸ்தலங்களைப் போலல்லாமல் த்வஜஸ்தம்பம் சற்று விலகி இருப்பதை இப்போதும் காணலாம்.


பிறகு, தான் சத்தியம் செய்தபடி பிரம்ம ராக்ஷஸை நோக்கிச் சென்றபோது, திருக்குறுங்குடி எம்பெருமான் , ஒரு கிழப்பிராம்மணன் வேடத்தில் நம்பாடுவானுக்கு எதிரே தோன்றி, "இங்கே ஒரு பிரம்ம ராக்ஷஸ் இருக்கிறது. அதன் பசிக்கு இரையாகாமல் வேறு வழி செல்" என்று கூறினார். ஆனால், நம்பாடுவான் அதை மறுத்து, அந்த ராக்ஷஸனுக்கு உணவாவதற்காகவே செல்கிறேன் என்று கூறினான். இதைக்கேட்ட பிராம்மணன்,"ஆபத்துக் காலத்திலும், பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டிய சந்தர்ப்பத்திலும், பெண்களுடன் ஏகாந்தமாய் இருக்கும்போதும் பொய் சொல்வதும், சத்தியம் செய்வதும், பாபமாகாது" என்று கூற, நம்பாடுவான்,"நான் செய்து கொடுத்த சத்தியத்தை ஒரு போதும் மீறமாட்டேன்" என்று கூறி, வாக்களித்தபடி பிரம்ம ராக்ஷஸனிடம் சென்று என்னை உண்டு உன் பசியைப் போக்கிக் கொள் என்று கூறினான். நம்பாடுவானைப் பார்த்த பிரம்ம ராக்ஷஸ், "இப்போது எனக்குப் பசியே இல்லை. நான் என் மனதை மாற்றிக்கொண்டுவிட்டேன். நீ விரதத்தால் பெற்ற பலனை எனக்குக் கொடு என்று கேட்க, நம்பாடுவான் மறுத்தான். இன்றைய தினம் உனக்குக் கிடைத்த விரதப் பலனில் பாதியையாவது எனக்குக் கொடுத்தால் நான் சாபவிமோசனம் பெற்று சுய உருவைப் பெறுவேன்'' என்றது. நம்பாடுவான், "உனக்கு ஏன் இந்த பிரம்ம ராட்சச உருவம் வந்தது? என்று கேட்க, பிரம்ம ராக்ஷஸன் தனது கதையைக் கூறினான். "நான் முற்பிறவியில் யோகசர்மா என்ற அந்தணன். யாகத்தை இழிவாகக் கருதிய நான், ஒரு யக்ஞத்தைத் தவறாகச் செய்து கொடுத்தேன். யாகத்தின் நடுவில் இறந்தேன். அதனால் , இவ்வாறு அலைகிறேன்” என்றது. மேலும், உனது தரிசனத்தால் எனக்கு முன் ஜன்ம ஞாபகம் உண்டானது என்றும் கூறியது.


நம்பாடுவான், கைசிகப் பண்ணினால் பகவானைப் பாடிய தன் புண்ணிய பலனில் பாதியை கைசிக துவாதசியன்று பிரம்மராட்சஸனுக்கு தத்தம் செய்துகொடுக்க, அந்த பிரம்ம ராட்சதனின் சாபம் நீங்கியது. நம்பாடுவானும் பலகாலம் பெருமாளை போற்றிப் பாடி மோக்ஷத்தை அடைந்தான்.


இந்த வரலாற்றை வராகமூர்த்தியே தன் மடியிலிருந்த பிராட்டிக்கு உரைத்ததாக புராணம் கூறுகிறது. இன்றும், இந்தப் புராணம் திருக்குறுங்குடியில் நாடக ரூபமாக கைசிக ஏகாதசியன்று இரவு நடக்கின்றது. இதில் நம்பாடுவான், பிரம்ம ராட்சசன், நம்பிக் கிழவன் ஆகிய மூன்று பாத்திரங்களில் நடிப்பவர்கள் 10 நாட்கள் விரதம் அனுஷ்டிக்கிறார்கள். ஒவ்வொரு கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் கைசிக புராணம் இன்றும் வாசிக்கப்படும்.
 
இன்று குருவாயூர் ஏகாதசி என்று கேரளத்தில் உள்ள குருவாயூர் க்ஷேத்திரத்தில் ஶ்ரீகிருஷ்ணர் கோயிலில் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

பிரஹ்மண்யன்
பங்களூரு
 
கைசிக ஏகாதசி (Kaisika Ekadasi)

திருக்குறுங்குடி – வைஷ்ண திவ்ய தேசங்களில் மிகவும் சிறந்த தலமாக கருதபடுகிறது. ஸ்ரீமன் நாராயணனை துதிப்பவர்கள் எல்லோருமே வைஷ்ணவர்கள்தான் இதில் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை நம் திருக்குறுங்குடி நம்பி பெருமாள். ஆம் இந்த ஸ்தலத்தில் நடந்த ஒரு மனதை நெகிழ செய்யும் ஒரு சம்பவம் இன்றும் திருவரங்கத்தில் அரங்கனின் சன்னதியில் கைசிக ஏகாதசி அன்று படிக்கப் படுகிறது என்றால் அது எப்பேர்பட்ட நிகழ்ச்சி. வாருங்கள் என் அருமை சகோதர சகோதரிகள் நிகழ்ச்சிக்கு போவோம். நம் பாடுவான் என்பவன் நல்ல கவி திறன் கொண்டவன். திருகுறுங்குடி நம்பி பெருமாளை பற்றியே பாடுவான். நம்பி பெருமாளை பாடுவதையே மூச்சாக கொண்டவன். அவன் தாழ்த்த பட்ட குலத்தில் பிறந்ததால் அன்றைய காலக்கட்டத்தில் அவனுக்கு கோயிலுக்கு செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. ஆனால் அவனுக்கு அதைப் பற்றி துளியும் வருத்தமில்லை. கோயிலின் வாசலில் நின்று அன்றாடம் பெருமாளை போற்றி பாடுவான். கோயிலின் வாசலிலிருந்து பகவானை பார்க்க முடிய வில்லை. கொடிமரமும் தடுக்கிறது. என்னால் பெருமாளை பார்க்கமுடியவில்லை என்றாலும் பெருமாள் என்னை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். என் பண்களை (பாடல்களை) எல்லாம் அவன் காதாரக் கேட்டுகொண்டிருக்கிறான் அது போதும் என்ற திருப்தியுடன் வாழ்க்கையை நடத்திவந்தான். கைசிகம் என்ற பண்ணில் நம்பியின் புகழை பாடி மகிழ்வான்.
நம் பாடுவான் தினமும் விடி காலையில் ஸ்நானம் செய்து பிரம்ம முஹுர்த்தத்தில் கோயிலின் வாயிலுக்கு சென்று பெருமாள் பேரில் பண் இசைத்து அவரது பெருமைகளை பாடுவான். இவனது பெருமையையும் பிரதிபலன் கருதா பக்தியையும் ஸ்ரீ வராஹ பெருமான் பூமிபிராட்டியாரிடம் ஸ்லாகித்து சொல்கிறார் என்றால் அந்த நம் பாடுவான் எப்பேர்பட்ட பக்தனாக இருந்திருப்பான். இந்த மகாத்மியம் கைசிக புராணம் என்ற நாமம் தாங்கி வாராஹ புராணத்தில் உள்ளது.


ஒரு கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி இரவு அன்று நம்பாடுவான் திருக்குறுங்குடி நம்பி பெருமாள் கோவிலை நோக்கி செல்கிறான். அந்த இரவு நேரத்தில் அவன் செல்லும் வழியில் ஒரு ப்ரம்மரக்ஷஸ்(பிசாசு) அவனை வழி மறித்து அவனை பிடித்துக் கொள்கிறான். ப்ரம்மரக்ஷஸின் தேகமோ கொழுத்து பெருத்த தேகம். நம் பாடுவானோ மிகவும் இளைத்து மெலிந்த தேகம் உடையவன். அதனால் ப்ரம்மரக்ஷஸின் பிடியிலிருந்து தப்ப இயலாதவனாக இருந்தான். ஆனால் பயப்படவில்லை. ப்ரம்மரக்ஷஸை பார்த்து, “நான் ஏகாதசி விரதமிருந்து நம்பெருமாளை துதிக்க சென்று கொண்டிருக்கிறேன் என்னை விட்டு விடு என் விரதத்திற்கு பங்கம் செய்து விடாதே என்று கெஞ்சினான்.


ஆனால் ப்ரம்மரக்ஷஸ் நம்பாடுவானை நோக்கி நான் பத்து நாட்களாக கொலை பட்டினியாக இருக்கிறேன். ஆகவே எனக்கு இப்போது தெய்வாதீனமாக கிடைத்த உன்னை நான் விடுவதாக இல்லை. உன்னை கண்டிப்பாக புசிக்கப் போகிறேன் என்று கூறியது. தனது நிலையை உணர்ந்தான். ஆம் தன்னை மரணம் சூழ இருப்பதை புரிந்துக் கொண்டான் நம்பாடுவான். உடனே ப்ரம்மரக்ஷஸை பார்த்து நடக்க இருப்பதை தவிர்க்க முடியாது. நான் உனக்கு உணவாகப் போவதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் எனது இந்த அற்புதமான விரதத்தை அதாவது கோயிலின் வாசலில் வீணையை மீட்டி எனது நம்பி பெருமாளை பண்ணிசைத்து திருப்பள்ளி எழுச்சி பாடி எனது விரதத்தை முடித்து விட்டு வருகிறேன் பிறகு நீ உன் இஷ்டம் போல் என்னை புசித்துக் கொள் என்று வேண்டினான். அதற்கு ப்ரம்மரக்ஷஸ் பலமாக சிரித்து, “நீயோ தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன், உன்னால் கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியாது. நீ என்னிடமிருந்து தப்ப பொய் சொல்கிறாய்; மேலும் நீ திரும்பி இந்த வழியே வராமல் வேறு வழியில் சென்று தப்பிவிடுவாய்.


அதற்கு நம் பாடுவான் பதினெட்டு விதமான ப்ரதிக்ஞைகளை செய்கிறான்.


நான் திரும்ப வரவில்லை என்றால் :


1. சத்தியம் தவறியவர்களுக்கு என்ன தண்டனையோ அந்த தண்டனை எனக்கு கிடைக்கட்டும்.
2. பிறன் மனைவியை அடைவதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும்
3. எவன் ஒருவன் சாப்பிடும் போது தன்னுடன் சாப்பிடுகிறவனுக்கு பந்தி வஞ்சனம் செய்கின்றானோ அந்த மாதிரியான பாவம் என்னை அடையட்டும்
4. எவன் ஒருவன் பிராமணனுக்கு பூமி தானம் செய்துவிட்டு அதை திரும்பவும் அபஹரிக்கிறானோ அவன் அடையும் பாவத்தை நான் அடைவேன்.
5. எவன் ஒரு பெண்ணை யவன காலத்தில் அவளை அனுபவித்து விட்டு பின்பு ஏதாவது ஒரு தோஷத்தை சொல்லிவிட்டு அவளை கைவிடுவானாகில் அவன் அடையும் பாவத்தை நான் அடைய கடவேன்.
6. எவன் அமாவாசை பௌர்ணமி நாட்களில் தன் பத்தினியுடன் சேருகிரானோ அதனால் என்ன பாவம் வருமோ அந்த மாதிரியான பாவம் என்னை வந்தடையட்டும்.
7. எவன் ஒருவன் பிறருடைய அன்னத்தை நன்றாக புசித்துவிட்டு அவனையே தூஷிக்கின்றானோ அவனது பாவம் என்னை அடையட்டும்.
8. எவன் ஒருவன் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதாக வாக்களித்துவிட்டு பிறகு எதோ சாக்கு போக்கு சொல்லிவிட்டு கொடாமல் இருக்கிறானோ அவனது பாவத்தை நான் அடைவேன்.
9. எவன் சஷ்டி, அஷ்டமி, சதுர்த்தசி அமாவாசை திதிகளில் ஸ்நானம் பண்ணாமல் புசிக்கிரானோ அவனது பாவத்தை அடைவேன்.
10. ஒரு பொருளை தானாமாக கொடுப்பதாக கூறி பின் மறுக்கிறானோ அந்த பாவத்தை நான் அடையகடவேன்.
11. எவன் ஒருவன் நண்பனின் மனைவியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையகடவேன்.
12. எவன் ஒருவன் குருவின் பத்தினி அல்லது அரசனின் பத்தினியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையகடவேன்.
13. எவன் ஒருவன் இரண்டு பெண்களை மணம் செய்து பின் ஒருத்தியை மட்டும் அலட்சியம் செய்வதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும்.
14. எவன் ஒருவன் கதியற்ற தனது பதிவிரதையான பத்தினியை யௌவன வயதில் விட்டுவிடுகிறானோ அவன் அடையும் பாவம் என்னை சூழட்டும்.
15. தாகத்துடன் தண்ணீர் குடிக்க வரும் பசுவை குடிக்கவிடாமல் செய்வதால் வரும் மகா பாவம் என்னை வந்தடையட்டும்.
16. எவன் பிரம்மகத்தி செய்கிறானோ, கள்ளை குடிக்கிறானோ, வ்ரத பங்கம் பண்ணுகிறானோ இப்படிபாட்ட மஹாபாவிகளின் பாவத்தை அடைய கடவேன்.
17. எவன் ஸர்வவ்யாபியாய் (எங்கும் நிறைந்திருக்கும்) எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வாசுதேவனை ஆராதனை பண்ணாமல் இதர தேவதைகளை உபாசிக்கிரானோ அவனது பாவத்தை அடைவேன்.
18. சர்வ ஜனங்களையும் காப்பவனும், எல்லோர் இதயத்திலும் அந்தர்யாமியாய் இருப்பவனும், எல்லா உயிரினங்களையும் இயக்குபவனும் , முக்கோடி தேவர்களாலும் முனிவர்களாலும் ஆராதிக்கப்படுபவனுமான சர்வேச்வரனான அந்த ஸ்ரீமன் நாராயணனையும் மற்றவர்களையும் சமமாக பாவிப்பதால் வரும் பாவம் என்னை அடையட்டும்.


நம்பாடுவான் மேலே சொன்ன பதினாறு ப்ரதிக்ஞைகளை சொல்லும் வரை ப்ரம்மரக்ஷஸ் தனது பிடியை தளர்த்தவில்லை. ஆனால் 17வது ப்ரதிக்ஞையை சொல்லியதுதான் தாமதம் உடனே பிடியை விட்டு விட்டது. அதுவும் 18 ஆவது ப்ரதிக்ஞையை கேட்டதும் நம்பாடுவானது அபார ஞானத்தை புரிந்து கொண்டது. இவன் சாதாரணமான ஆள் இல்லை. இவனை விடாவிட்டால் இன்னும் துயரமே வரும் என்று நம்பாடுவானை விடுவித்து சீக்கிரமே விரதத்தை முடித்துவிட்டு வா என்று சந்தேகத்துடன் அனுப்பியது.


ப்ரம்மரக்ஷஸ்ஸினால் விடப்பட்ட நம்பாடுவான் திருக்குறுங்குடி கோவிலை நோக்கி ஓடினான்! நம்பியின் கோயிலுக்கு முன் வந்த நம் பாடுவானின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது. பெருமாளே! எங்கே என் ஆயுள் உன்னை பாடாமலேயே முடிந்து விடுமோ என்று அச்சப்பட்டேன். நல்ல வேளை உன்னை பாட வந்து விட்டேன். இதுவே எனது இறுதி பாடலாக இருக்கும் என்று மனம் நெகிழ்ந்து பண்ணிசைத்து உருக்கமாக பாடினான். உள்ளிருந்த நம்பி பெருமாள் நம்பாடுவானின் குரலிலிருந்த சோகத்தை உணர்ந்தார். எதிரே நோக்கினார். ஆம் தான் ஆட் கொள்ளவேண்டிய தனது பக்தனின் முகத்தை தானே பார்க்காவிட்டால், பிறகு அவனுடைய பக்திக்குத் தான் அளிக்குகும் மதிப்புதான் என்ன என்று யோசித்தார். அவன் காண இயலாதிருந்தும் அவனை நாம் பார்த்து ரக்ஷிப்போம் என்று எதிரே பார்த்தார். கொடி மரம் தடுத்தது. “விலகி நில் கொடிமரமே என் பக்தன் என்னைக் காணவேண்டும், அதை விட நான் அவனை காண வேண்டும்! விலகு” என்று தனது பார்வையாலேயே சற்று விலக்கினார்.
“பளிச்சென்று ஓர் ஒளி உள்ளிருந்து வெளியே வந்து நம்பாடுவானை ஆரத் தழுவியது. கொடிமரம் விலகிய கோணத்தில் நேர் எதிரே தான் பார்ப்பது நம்பிதானா என்று உள்ளம் குதூகலித்தான். ஆஹா பெருமாளை நேரில் தரிசிக்கும் பேறு பெற்ற பின் வேறு என்ன வேண்டும். அர்ச்சாவதார மூர்த்தியை நேரில் தரிசனம் கண்டாயிற்று. இந்த ஜன்மம் சாபல்யம் அடைந்துவிட்டது. இனி பிரம்ம ராட்சசனுக்கு மகிழ்வுடன் உணவாகலாம். நம்பாடுவான் என்ற அந்த அற்புத பக்தன் தொடர்ந்து இறைவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த சில கண நேர தரிசனத்திலே முழு நிறைவடைந்தான். பேராசையற்ற பக்தி. இறைவனை காண முடியாமல் தன் ஆயுள் முடிந்து விடுமோ என்ற ஏக்கத்தில் இருந்தவனுக்கு இந்த தரிசனமே போதுமானதாக இருந்தது. அதைவிட தான் வாக்கு கொடுத்ததால் பெரும் பசியுடன் இருந்த பிரம்ம ராட்சசனை நோக்கி விரைந்தான்.


இப்படியாக தனது விரதத்தை முடித்துவிட்டு ப்ரம்மரக்ஷஸ்ஸிநிடம் செல்ல முற்பட்டான். வந்த வேகத்தை விட செல்லும் வேகம் ஜாஸ்தியாக காணப்பட்டது. அப்போது ஒரு சுந்தர புருஷன் அவன் முன் தோன்றி, “யாரப்பா நீ! எங்கு செல்கிறாய்? நீ செல்லும் திசையில் ஒரு பிரம்ம ராக்ஷசன் இருக்கிறான்! அங்கே போகாதே: என்று கூறினான். நம்பாடுவானும், “சுவாமி அடியேனுக்கு அந்த ராக்ஷசனை பற்றி தெரியும்; நான் அவனுக்கு என் விரதத்தை முடித்துவிட்டு வருவதாக வாக்களித்துள்ளேன். ஆகவே அங்கு செல்கிறேன் என்று கூறினான். அதற்கு அந்த சுந்தரபுருஷன், நீ நினைப்பது போல் அந்த ராக்ஷசன் நல்லவனில்லை. அவன் உன்னை தின்று விடுவான் வேறு வழியில் சென்று விடு என கூற, நம்பாடுவான் “சுவாமி சத்தியத்தை துறந்து உயிர் வாழ விரும்பவில்லை, ஆகவே என்னை செல்ல அனுமதியுங்கள் என்று வேண்டினான். பிராணனை விட்டாவது சத்தியத்தை காப்பாற்றுவேன் என்று சொன்ன நம்பாடுவானின் வார்த்தைகளை கேட்டு சந்தோசம் அடைந்த சுந்தரபுருஷன் உனக்கு மங்களம் உண்டாகட்டும் என்று ஆசிர்வதித்துவிட்டு சென்றான். அந்த சுந்தர புருஷன் வேறு யாருமில்லை சாக்ஷாத் வராஹ மூர்த்தியே! நம்பாடுவானையும் நம்பாடுவனால் அந்த பிரம்ம ராக்ஷசையும் ஒருங்கே கடாக்ஷிக்க எண்ணினார்.


நம்பாடுவானும் ப்ரம்மரக்ஷஸ்ஸின் இருப்பிடம் வந்து சேர்ந்தான். இதோ உன் அனுமதியுடன் நம்பி பெருமாளை வாயாரப் பாடி நான் புனிதனாகி வந்துள்ளேன். எனது சரீரத்திலுள்ள ரத்த மாமிசங்களை புசித்து உன் பசியை போக்கிக் கொள் என்று கூறி நின்றான்.


பசியுடன் மிக பயங்கரமாய் இருந்த ப்ரம்மரக்ஷஸ், “ஏ நரனே! நீ நேற்றிரவு சர்வேஸ்வரனை போற்றி பாடிய பாட்டின் பலனை எனக்கு கொடுத்தால் உன்னை விட்டு விடுகிறேன் என்றது. அதற்கு நம்பாடுவான் நான் கொடுத்த சத்தியத்தை காக்கவேண்டும் ஆகவே என்னை புசித்துக்கொள் நான் பாட்டின் பலனை கொடுக்க மாட்டேன் என்றான். அதற்கு ப்ரம்மரக்ஷஸ் பாட்டின் பாதி பலனையாவது கொடு உன்னை விட்டுவிடுகிறேன் என்று மன்றாடியது. அதற்கும் மசியாத நம்பாடுவான் நான் உனக்கு கொடுத்த வாக்கின் படி வந்து விட்டேன் நீ செய்த ப்ரதிக்ஞை படி என்னை புசித்து விடு என்று கூறினான்.


ப்ரம்மரக்ஷஸ்ஸும், “அப்பா! ஒரு யாமத்தின் பலனையாவது கொடுத்து என்னை ப்ரம்மரக்ஷஸ் ஜன்மத்திலிருந்து காப்பாற்று” என்று மன்றாடியது.


“நீ ப்ரம்மரக்ஷஸ்ஸாகப் பிறக்க காரணம் என்ன?”என்று கேட்டான் நம்பாடுவான்.
அப்பொழுது ப்ரம்மரக்ஷஸ்ஸுக்கு பூர்வஜன்ம ஞாபகம் வந்தது, பூர்வ ஜன்மத்தில் நான் பிராமண குலத்தில் பிறந்து எந்த அனுஷ்டானங்களும் இன்றி திரிந்தேன். பண ஆசையால் யாகம் பண்ண எண்ணினேன். அப்பொழுது எனது பாவத்தின் காரணமாய் யாகத்தின் இடையில் மரணமடைந்தேன். இப்பொழுது ப்ரம்மரக்ஷஸ்ஸாக அலைந்துக் கொண்டிருக்கிறேன். தயை கூர்ந்து என்னை காப்பாற்று என்று நம்பாடுவானை சரண் அடைந்தது. தன்னை அண்டிய அந்த ப்ரம்மரக்ஷஸ்ஸிற்க்கு உதவ முடிவு செய்தான் நம்பாடுவான். அதன்படியே, “நேற்றிரவு “கைசிகம் என்ற பண் பாடினேன். அதனால் வரும் பலனை அப்படியே உனக்கு கொடுக்கின்றேன் அதன் காரணமாய் நீ ராக்ஷச ஜன்மத்திலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடைவாய் என்று கூறினான். நம்பாடுவானின் வரத்தை பெற்ற ப்ரம்மரக்ஷஸ் ராக்ஷச ஜன்மத்திலிருந்து விடுபட்டு நல்ல குலத்தில் பிறந்து பகவத் பக்தனாக இருந்து மோக்ஷத்தை அடைந்தது.


நம்பாடுவானும் நெடுங்காலம் நம்பிபெருமாளை போற்றி பாடி மோக்ஷத்தை அடைந்தான். ஸ்ரீ ரங்கத்தில் ரங்கனை அன்றாடம் ஆராதித்து வந்த பராசர பட்டர் என்ற ஆச்சாரியர் இந்த புராணத்தை தெளிவாக விளக்கியதை கேட்டு சந்தோசமடைந்த அரங்கன் பராசர பட்டருக்கும் பரமபதத்தை தந்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.


ஒவ்வொரு கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் இந்த மகாத்மியம் இன்றும் வாசிக்கபடுகிறது. அப்பேற்பட்ட கைசிக மகாத்மியத்தை கோயிலுக்கு சென்று பெருமாள் முன்னோ அல்லது வீட்டில் பூஜை அறையில் பெருமாள் முன் சொல்கின்றவனும் அதை கேட்கின்றவர்கள் யாவரும் இந்த லோகத்து ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் அனுபவித்து பின் வைகுந்தத்தையும் அடைவர் என்று பூமி பிராட்டிக்கு வராஹ பெருமாளே சொன்ன சத்தியம் இது.


ஆகவே அன்பர்கள் அனைவரும் இந்த மஹாத்மியத்தை படிக்க கொடுத்துவைத்தவர்கள். உங்களுக்கு எம்பெருமானின் பரிபூர்ண அனுக்ரஹம் உண்டாகட்டும்


Kaisika Ekadashi – The Story


The message behind the day reinforces the fact that caste is not a hindrance in attaining Him and true Bhakthi alone is enough. This story happened in the beautiful Divyadesam of Thirukurungudi.


Nambaduvaan was born in low – chandala – kulam, but was a greatbhAgavatha, devotee of Sri Kurungudi Nambi. It was his usual that on every eka:dasi, he used to observe “jAkratha vratham” – without sleeping full night, singing the glory of Lord and thinking about him. On one karthigai eka:dasi, Nambaduvaan left to Kurungudi nambi temple to observe his fast and render some pAsuram using various paN’s on Sri Kurungudi Nambi.
I am not letting you go"


But unfortunately, he was caught by a Brahmara:kshasu on the way to Nambi temple, and it threatened him that it is going to consume him as food. Nambaduvaan argued with Brahmarakshasu that, he would return back soon after his vratham and darshan of Kurungudi Nambi, then it can took him as food. But Brahmara:kshasu was not in a position to believe Nambaduvaan. Brahmara:kshasu argued that, no one in this world would come back as food. – Is there any possibility that a deer could escape after it was caught up by a lion?


Then Nampa:duva:n started promising Brahmarakshasu that, if he is not going to return back, he would get sin of those who treat their guests with difference in hospitality, etc.,.,etc.But for none of Nampa:duva:n’s promises, Brahmara:kshasu was not satisfied, and simply replied —The promise is like When a cow was caught up by a lion, the Cow promised Lion that it would return back after feeding it’s calf (offspring)! So I am not going to leave you!
"I promise that, if am not return to you, I may get the sin of those who say that Sriman Narayanan is equivalent to OR on par with OR inferior with other devatha"


At last Nambaduvaan promised that “Who ever thinks/say that Supreme Lord Sriman Narayanan is equivalent/on par with or inferior with other de:vatha:s, that pa:pam would catch me!” After hearing this Brahmara:kshasu was annoyed by saying that, “Oh Bhagavathare!, What a promise you made!, None would dare to say like that. Now I believe on you, and soon return back. I will wait for you till our return”


Nambaduvaan happily went to Sri Kurungudi temple, observed his jAkratha vratham, rendered pAsurams on Sri Vadivazhagiya Nambi using various pan’s. The last pAsuram that he rendered on Nambi was based on KAISIKA PAN.


After Nambaduvaan completed his eka:dasi vratham, while on the way to Brahmara:kshasu was interrupted by Sri Kurungudi Nambi Himself as an old man. He advised Nambaduvaan to take another path to escape from Brahmara:kshasu. But Nambaduvaan was not in a position to defer from his promise to Brahmara:kshasu. Hence Nambi said, “It’s usual in this lo:kam that, to save one’s own life from an enemy, you can promise on various things, but it’s not necessary to fulfill that vows”.


But Nambaduvaan argued that he would stand on Dharma and is going to fulfill the vow that he had made to Brahmara:kshasu. On hearing that, Nambi was happy and blessed Nambaduvaan! Nambaduvaan returned to Brahmarakshasu and requested to consume him as food. The Brahmarakshasu was stunned with Nambaduvaan’s truthfulness and requested Nambaduvaan to grant palan of the pAsurams that he rendered on Nambi using various pan’s.
"Please give me the Palans of the Paasurams you have sung"


Nambaduvaan – “As per the promise, I returned back to you. Now you should not defer from our deal ”
Brahmarakshasu – “Oh Bhagavathare!, Please grant the palan of at least half of the pAsurams that you rendered on Sri Nambi”
Nambaduvaan – “ I didn’t praised Kurungudi Nambi based on any palan. Now you have to consume me and Don’t defer from your promise”
Brahmarakshasu – “Oh Bhagavathare!, Please grant the palan of the last pAsuram based on Kaisika Pan that you rendered on Sri Nambi”
Nambaduvaan – “Initially you seemed to be aggressive and threatened me that you are going to consume my flesh as food, but now you are requesting for the palan to rescue from your curse. Can you tell who are you? What is your Poorvikam? ”
Brahmarakshasu – “Oh Bhagavathare! My name is Soma Sarma. I was a great vidwan in conducting Yagnams. Due to ahankaram, I made mistake while reciting the mantrams and was cursed by dEvars to became Brahmarakshasu. They also told that, I would be relieved from this curse after I met a devotee – from chandala kulam – of Sri Nambi at Thiru Kurungudi. Hence I request you to kindly grant me the phalan of the last pa:suram on Kaisika pan and relieve me“


Hearing the pleas of the Brahmarakshasu, Nambaduvan again says that he never sang for any palan. But still he will request Thirukurungudi Nambhi to releive the Brahmarakshasu of his sins. Nambhi gives the palan of the last paasuram and relieves Brahma Rakshasu of its sins. This story strongly reiterates that true Bhakthi is enough to attain Him and caste of a person is totally insignificant.
 
கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசியை 'கைசிக ஏகாதசி" என்றும் 'பிரபோதினி ஏகாதசி" என்றும் போற்றுவர்.

இது, வைகுண்ட ஏகாதசி போல, வைணவர்களுக்கு மிக முக்கியமான ஏகாதசி ஆகும். இந்த ஏகாதசியன்றுதான் யோக நித்திரையிலிருந்து பகவான் கண் விழிக்கிறார். அதனால் இதற்கு உத்தான ஏகாதசி அல்லது ப்ரபோத ஏகாதசி என்ற பெயர்களும் வழக்கத்தில் உள்ளன.

கைசிக ஏகாதசி விரதமிருந்தால் புண்ணிய நதிகளில் குளித்த பலனைக் காட்டிலும் பலன் வாய்ந்தது. கைசிக ஏகாதசி விரதமிருந்தால் எதிர்காலத்தில் பிறப்பின்றி வைகுண்டம் சேரலாம். முந்தைய ஜென்மங்களின் பாவ சுமையிலிருந்து விடுபடலாம்.

இன்றைய தினம் நெய் விளக்கு ஏற்றி ஸ்ரீஹரியை வணங்கினால் அவரின் மூதாதையர்கள் செர்க்கத்திற்கு முன்னேறுவார்கள். கைசிக ஏகாதசி அன்று துளசி தாயை வணங்குபவர்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுபடுவார்கள்.

இன்றைய நாளில் விரதம் கடைப்பிடிப்பவர்கள் ஆயிரம் வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்த பலனைப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

இந்த கார்த்திகை மாத சுக்லபட்ச கைசிக ஏகாதசிக்கு மறுநாள் வரும் துவாதசிக்கு 'பிருந்தாவன துவாதசி" என்று பெயர். அன்று, மகாவிஷ்ணு துளசியைத் திருமணம் செய்து கொண்டதாக விஷ்ணு புராணம் கூறுகிறது.

கைசிக ஏகாதசி பற்றிய ஒரு புராண கதை :

தமிழகத்தில் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நம்பிபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் மகேந்திரகிரிமலை உள்ளது.

மலையடிவாரத்தில் தாழ்ந்த சமூகத்தைச் சேர்ந்த நம்பாடுவான் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர், தீவிர விஷ்ணு பக்தர். ஏகாதசி விரதம் மேற்கொண்டு நம்பிபெருமாளை வழிபடுவது வழக்கம்.

ஒருநாள் ஏகாதசி விரதம் மேற்கொண்டு நம்பிபெருமாளை வழிபட காட்டு வழியாக வந்தார். அவரை, ஒரு பிரம்மராட்சன் தடுத்து நிறுத்தி, நீ எனக்கு உணவாக வேண்டும் எனக் கூறினான். அதற்கு நம்பாடுவான், இன்று நான் விரதம் மேற்கொள்கிறேன். நம்பிபெருமாளை தரிசித்து விட்டு திரும்பி வருகிறேன், அதன் பிறகு என்னை உணவாக்கி கொள், எனக்கூறி விட்டு நம்பிபெருமாளை தரிசிக்கச் சென்று விட்டார்.

அப்போது கோவிலில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. தாழ்ந்த சமூகத்தைச் சேர்ந்த நம்பாடுவான் கோவிலின் உள்ளே செல்ல முடியாததால் வெளியே நின்று தன்னிடம் இருந்த யாழ் இசைக்கருவியால் 'கைசிக பண்" இசைத்து நம்பிபெருமாளை வழிபட்டார்.

தான் ஆட்கொள்ளப் போகும் பக்தனுக்கு திருமுகத்தைக் காண்பிக்க, நேர் எதிரே நின்றிருந்த கொடிமரத்தை விலகி நில், எனக்கூறி நம்பாடுவானுக்கு அருட்பேரொளி வீசி தரிசனம் தந்தார் நம்பிபெருமாள்.

பிரம்ம ராட்சசனுக்கு தான் உணவாகப் போவதாக வாக்குக் கொடுத்திருந்த நம்பாடுவான் கோவிலில் இருந்து திரும்பி காட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். வழியில் பின்தொடர்ந்து முதியவர் ரூபத்தில் வந்த நம்பிபெருமாள், நம்பாடுவானை தடுத்து நிறுத்தி, போகும் வழியில் ஒரு ராட்சசன் உள்ளான், அவன் அந்த வழியாக வருவோர், போவோரை பிடித்துச் சாப்பிட்டு விடுவான். ஆதலால் நீ அந்த வழியாக போக வேண்டாம் எனக் கூறினார்.

எனினும் அதை மீறி, காட்டுக்குப்போய் பிரம்ம ராட்சசனிடம் என்னை சாப்பிட்டுக் கொள் என்றார் நம்பாடுவான். ஆனால் ராட்சசனோ எனக்கு பசியே இல்லை, உன் உடல் வேண்டாம் எனக் கூறி மறுத்து விட்டான். ஆனால் கைசிக பண் இசைத்த பலனை மட்டும் எனக்கு தாருங்கள் என்றான். அங்கு, திடீரென ஒரு பேரொளி வீசியது. முதியவர் ரூபத்தில் பின் தொடர்ந்து வந்த நம்பிபெருமாள் இருவருக்கும் காட்சி கொடுத்து மறைந்தார்.

எனவே கைசிக ஏகாதசியான இன்று விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து அந்த பரந்தாமனின் அருளை பெற்று உன்னதமான வாழ்வை பெறுவோமாக!

1606301660393.png
 
கைசிக ஏகாதசி.....!!!
(26.11.2020)

திருக்குறுங்குடி - வைஷ்ண திவ்ய தேசங்களில் மிகவும் சிறந்த தலமாக கருதபடுகிறது. ஸ்ரீமன் நாராயணனை துதிப்பவர்கள் எல்லோருமே வைஷ்ணவர்கள்தான் இதில் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை நம் திருக்குறுங்குடி நம்பி பெருமாள். ஆம் இந்த ஸ்தலத்தில் நடந்த ஒரு மனதை நெகிழ செய்யும் ஒரு சம்பவம் இன்றும் திருவரங்கத்தில் அரங்கனின் சன்னதியில் கைசிக ஏகாதசி அன்று படிக்கப் படுகிறது என்றால் அது எப்பேர்பட்ட நிகழ்ச்சி.

நம் பாடுவான் என்பவன் நல்ல கவி திறன் கொண்டவன். திருகுறுங்குடி நம்பி பெருமாளை பற்றியே பாடுவான். நம்பி பெருமாளை பாடுவதையே மூச்சாக கொண்டவன். அவன் தாழ்த்த பட்ட குலத்தில் பிறந்ததால் அன்றைய காலக்கட்டத்தில் அவனுக்கு கோயிலுக்கு செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. ஆனால் அவனுக்கு அதைப் பற்றி துளியும் வருத்தமில்லை. கோயிலின் வாசலில் நின்று அன்றாடம் பெருமாளை போற்றி பாடுவான். கோயிலின் வாசலிலிருந்து பகவானை பார்க்க முடிய வில்லை. கொடிமரமும் தடுக்கிறது. என்னால் பெருமாளை பார்க்கமுடியவில்லை என்றாலும் பெருமாள் என்னை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். என் பண்களை (பாடல்களை) எல்லாம் அவன் காதாரக் கேட்டுகொண்டிருக்கிறான் அது போதும் என்ற திருப்தியுடன் வாழ்க்கையை நடத்திவந்தான். கைசிகம் என்ற பண்ணில் நம்பியின் புகழை பாடி மகிழ்வான்.

நம் பாடுவான் தினமும் விடி காலையில் ஸ்நானம் செய்து பிரம்ம முஹுர்த்தத்தில் கோயிலின் வாயிலுக்கு சென்று பெருமாள் பேரில் பண் இசைத்து அவரது பெருமைகளை பாடுவான். இவனது பெருமையையும் பிரதிபலன் கருதா பக்தியையும் ஸ்ரீ வராஹ பெருமான் பூமிபிராட்டியாரிடம் ஸ்லாகித்து சொல்கிறார் என்றால் அந்த நம் பாடுவான் எப்பேர்பட்ட பக்தனாக இருந்திருப்பான். இந்த மகாத்மியம் கைசிக புராணம் என்ற நாமம் தாங்கி வாராஹ புராணத்தில் உள்ளது.

ஒரு கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி இரவு அன்று நம்பாடுவான் திருக்குறுங்குடி நம்பி பெருமாள் கோவிலை நோக்கி செல்கிறான். அந்த இரவு நேரத்தில் அவன் செல்லும் வழியில் ஒரு ப்ரம்மரக்ஷஸ்(பிசாசு) அவனை வழி மறித்து அவனை பிடித்துக் கொள்கிறான். ப்ரம்மரக்ஷஸின் தேகமோ கொழுத்து பெருத்த தேகம். நம் பாடுவானோ மிகவும் இளைத்து மெலிந்த தேகம் உடையவன். அதனால் ப்ரம்மரக்ஷஸின் பிடியிலிருந்து தப்ப இயலாதவனாக இருந்தான். ஆனால் பயப்படவில்லை. ப்ரம்மரக்ஷஸை பார்த்து, "நான் ஏகாதசி விரதமிருந்து நம்பெருமாளை துதிக்க சென்று கொண்டிருக்கிறேன் என்னை விட்டு விடு என் விரதத்திற்கு பங்கம் செய்து விடாதே என்று கெஞ்சினான்.

ஆனால் ப்ரம்மரக்ஷஸ் நம்பாடுவானை நோக்கி நான் பத்து நாட்களாக கொலை பட்டினியாக இருக்கிறேன். ஆகவே எனக்கு இப்போது தெய்வாதீனமாக கிடைத்த உன்னை நான் விடுவதாக இல்லை. உன்னை கண்டிப்பாக புசிக்கப் போகிறேன் என்று கூறியது. தனது நிலையை உணர்ந்தான். ஆம் தன்னை மரணம் சூழ இருப்பதை புரிந்துக் கொண்டான் நம்பாடுவான். உடனே ப்ரம்மரக்ஷஸை பார்த்து நடக்க இருப்பதை தவிர்க்க முடியாது. நான் உனக்கு உணவாகப் போவதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் எனது இந்த அற்புதமான விரதத்தை அதாவது கோயிலின் வாசலில் வீணையை மீட்டி எனது நம்பி பெருமாளை பண்ணிசைத்து திருப்பள்ளி எழுச்சி பாடி எனது விரதத்தை முடித்து விட்டு வருகிறேன் பிறகு நீ உன் இஷ்டம் போல் என்னை புசித்துக் கொள் என்று வேண்டினான். அதற்கு ப்ரம்மரக்ஷஸ் பலமாக சிரித்து, "நீயோ தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன், உன்னால் கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியாது. நீ என்னிடமிருந்து தப்ப பொய் சொல்கிறாய்; மேலும் நீ திரும்பி இந்த வழியே வராமல் வேறு வழியில் சென்று தப்பிவிடுவாய்.

அதற்கு நம் பாடுவான் பதினெட்டு விதமான ப்ரதிக்ஞைகளை செய்கிறான்.

நான் திரும்ப வரவில்லை என்றால் :

1.சத்தியம் தவறியவர்களுக்கு என்ன தண்டனையோ அந்த தண்டனை எனக்கு கிடைக்கட்டும்.

2.பிறன் மனைவியை அடைவதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும்

3.எவன் ஒருவன் சாப்பிடும் போது தன்னுடன் சாப்பிடுகிறவனுக்கு பந்தி வஞ்சனம் செய்கின்றானோ அந்த மாதிரியான பாவம் என்னை அடையட்டும்

4.எவன் ஒருவன் பிராமணனுக்கு பூமி தானம் செய்துவிட்டு அதை திரும்பவும் அபஹரிக்கிறானோ அவன் அடையும் பாவத்தை நான் அடைவேன்.

5. எவன் ஒரு பெண்ணை யவன காலத்தில் அவளை அனுபவித்து விட்டு பின்பு ஏதாவது ஒரு தோஷத்தை சொல்லிவிட்டு அவளை கைவிடுவானாகில் அவன் அடையும் பாவத்தை நான் அடைய கடவேன்.

6.எவன் அமாவாசை பௌர்ணமி நாட்களில் தன் பத்தினியுடன் சேருகிரானோ அதனால் என்ன பாவம் வருமோ அந்த மாதிரியான பாவம் என்னை வந்தடையட்டும்.

7. எவன் ஒருவன் பிறருடைய அன்னத்தை நன்றாக புசித்துவிட்டு அவனையே தூஷிக்கின்றானோ அவனது பாவம் என்னை அடையட்டும்.

8. எவன் ஒருவன் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதாக வாக்களித்துவிட்டு பிறகு எதோ சாக்கு போக்கு சொல்லிவிட்டு கொடாமல் இருக்கிறானோ அவனது பாவத்தை நான் அடைவேன்.

9. எவன் சஷ்டி, அஷ்டமி, சதுர்த்தசி அமாவாசை திதிகளில் ஸ்நானம் பண்ணாமல் புசிக்கிரானோ அவனது பாவத்தை அடைவேன்.

10.ஒரு பொருளை தானாமாக கொடுப்பதாக கூறி பின் மறுக்கிறானோ அந்த பாவத்தை நான் அடையகடவேன்.

11. எவன் ஒருவன் நண்பனின் மனைவியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையகடவேன்.

12.எவன் ஒருவன் குருவின் பத்தினி அல்லது அரசனின் பத்தினியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையகடவேன்.

13. எவன் ஒருவன் இரண்டு பெண்களை மணம் செய்து பின் ஒருத்தியை மட்டும் அலட்சியம் செய்வதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும்.

14. எவன் ஒருவன் கதியற்ற தனது பதிவிரதையான பத்தினியை யௌவன வயதில் விட்டுவிடுகிறானோ அவன் அடையும் பாவம் என்னை சூழட்டும்.

15. தாகத்துடன் தண்ணீர் குடிக்க வரும் பசுவை குடிக்கவிடாமல் செய்வதால் வரும் மகா பாவம் என்னை வந்தடையட்டும்.

16. எவன் பிரம்மகத்தி செய்கிறானோ, கள்ளை குடிக்கிறானோ, வ்ரத பங்கம் பண்ணுகிறானோ இப்படிபாட்ட மஹாபாவிகளின் பாவத்தை அடைய கடவேன்.

17. எவன் ஸர்வவ்யாபியாய் (எங்கும் நிறைந்திருக்கும்) எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வாசுதேவனை ஆராதனை பண்ணாமல் இதர தேவதைகளை உபாசிக்கிரானோ அவனது பாவத்தை அடைவேன்.

18. சர்வ ஜனங்களையும் காப்பவனும், எல்லோர் இதயத்திலும் அந்தர்யாமியாய் இருப்பவனும், எல்லா உயிரினங்களையும் இயக்குபவனும் , முக்கோடி தேவர்களாலும் முனிவர்களாலும் ஆராதிக்கப்படுபவனுமான சர்வேச்வரனான அந்த ஸ்ரீமன் நாராயணனையும் மற்றவர்களையும் சமமாக பாவிப்பதால் வரும் பாவம் என்னை அடையட்டும்.

நம்பாடுவான் மேலே சொன்ன பதினாறு ப்ரதிக்ஞைகளை சொல்லும் வரை ப்ரம்மரக்ஷஸ் தனது பிடியை தளர்த்தவில்லை. ஆனால் 17வது ப்ரதிக்ஞையை சொல்லியதுதான் தாமதம் உடனே பிடியை விட்டு விட்டது. அதுவும் 18 ஆவது ப்ரதிக்ஞையை கேட்டதும் நம்பாடுவானது அபார ஞானத்தை புரிந்து கொண்டது. இவன் சாதாரணமான ஆள் இல்லை. இவனை விடாவிட்டால் இன்னும் துயரமே வரும் என்று நம்பாடுவானை விடுவித்து சீக்கிரமே விரதத்தை முடித்துவிட்டு வா என்று சந்தேகத்துடன் அனுப்பியது.

ப்ரம்மரக்ஷஸ்ஸினால் விடப்பட்ட நம்பாடுவான் திருக்குறுங்குடி கோவிலை நோக்கி ஓடினான் ! நம்பியின் கோயிலுக்கு முன் வந்த நம் பாடுவானின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது. பெருமாளே ! எங்கே என் ஆயுள் உன்னை பாடாமலேயே முடிந்து விடுமோ என்று அச்சப்பட்டேன். நல்ல வேளை உன்னை பாட வந்து விட்டேன். இதுவே எனது இறுதி பாடலாக இருக்கும் என்று மனம் நெகிழ்ந்து பண்ணிசைத்து உருக்கமாக பாடினான். உள்ளிருந்த நம்பி பெருமாள் நம்பாடுவானின் குரலிலிருந்த சோகத்தை உணர்ந்தார். எதிரே நோக்கினார். ஆம் தான் ஆட் கொள்ளவேண்டிய தனது பக்தனின் முகத்தை தானே பார்க்காவிட்டால், பிறகு அவனுடைய பக்திக்குத் தான் அளிக்கும் மதிப்புதான் என்ன என்று யோசித்தார். அவன் காண இயலாதிருந்தும் அவனை நாம் பார்த்து ரக்ஷிப்போம் என்று எதிரே பார்த்தார். கொடி மரம் தடுத்தது. " விலகி நில் கொடிமரமே என் பக்தன் என்னைக் காணவேண்டும், அதை விட நான் அவனை காண வேண்டும்! விலகு" என்று தனது பார்வையாலேயே சற்று விலக்கினார்.
"பளிச்சென்று ஓர் ஒளி உள்ளிருந்து வெளியே வந்து நம்பாடுவானை ஆரத் தழுவியது. கொடிமரம் விலகிய கோணத்தில் நேர் எதிரே தான் பார்ப்பது நம்பிதானா என்று உள்ளம் குதூகலித்தான். ஆஹா பெருமாளை நேரில் தரிசிக்கும் பேறு பெற்ற பின் வேறு என்ன வேண்டும். அர்ச்சாவதார மூர்த்தியை நேரில் தரிசனம் கண்டாயிற்று. இந்த ஜன்மம் சாபல்யம் அடைந்துவிட்டது. இனி பிரம்ம ராட்சசனுக்கு மகிழ்வுடன் உணவாகலாம். நம்பாடுவான் என்ற அந்த அற்புத பக்தன் தொடர்ந்து இறைவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த சில கண நேர தரிசனத்திலே முழு நிறைவடைந்தான். பேராசையற்ற பக்தி. இறைவனை காண முடியாமல் தன் ஆயுள் முடிந்து விடுமோ என்ற ஏக்கத்தில் இருந்தவனுக்கு இந்த தரிசனமே போதுமானதாக இருந்தது. அதைவிட தான் வாக்கு கொடுத்ததால் பெரும் பசியுடன் இருந்த பிரம்ம ராட்சசனை நோக்கி விரைந்தான்.

இப்படியாக தனது விரதத்தை முடித்துவிட்டு ப்ரம்மரக்ஷஸ்ஸிடம் செல்ல முற்பட்டான். வந்த வேகத்தை விட செல்லும் வேகம் ஜாஸ்தியாக காணப்பட்டது. அப்போது ஒரு சுந்தர புருஷன் அவன் முன் தோன்றி, "யாரப்பா நீ! எங்கு செல்கிறாய்.? நீ செல்லும் திசையில் ஒரு பிரம்ம ராக்ஷசன் இருக்கிறான்! அங்கே போகாதே : என்று கூறினான். நம்பாடுவானும், "சுவாமி அடியேனுக்கு அந்த ராக்ஷசனை பற்றி தெரியும்; நான் அவனுக்கு என் விரதத்தை முடித்துவிட்டு வருவதாக வாக்களித்துள்ளேன். ஆகவே அங்கு செல்கிறேன் என்று கூறினான். அதற்கு அந்த சுந்தரபுருஷன், நீ நினைப்பது போல் அந்த ராக்ஷசன் நல்லவனில்லை. அவன் உன்னை தின்று விடுவான் வேறு வழியில் சென்று விடு என கூற, நம்பாடுவான் "சுவாமி சத்தியத்தை துறந்து உயிர் வாழ் விரும்பவில்லை, ஆகவே என்னை செல்ல அனுமதியுங்கள் என்று வேண்டினான். பிராணனை விட்டாவது சத்தியத்தை காப்பாற்றுவேன் என்று சொன்ன நம்பாடுவானின் வார்த்தைகளை கேட்டு சந்தோசம் அடைந்த சுந்தரபுருஷன் உனக்கு மங்களம் உண்டாகட்டும் என்று ஆசிர்வதித்துவிட்டு சென்றான். அந்த சுந்தர புருஷன் வேறு யாருமில்லை சாக்ஷாத் வராஹ மூர்த்தியே! நம்பாடுவானையும் நம்பாடுவனால் அந்த பிரம்ம ராக்ஷசையும் ஒருங்கே கடாக்ஷிக்க எண்ணினார்.

நம்பாடுவானும் ப்ரம்மரக்ஷஸ்ஸின் இருப்பிடம் வந்து சேர்ந்தான். இதோ உன் அனுமதியுடன் நம்பி பெருமாளை வாயாரப் பாடி நான் புனிதனாகி வந்துள்ளேன். எனது சரீரத்திலுள்ள ரத்த மாமிசங்களை புசித்து உன் பசியை போக்கிக் கொள் என்று கூறி நின்றான்.

பசியுடன் மிக பயங்கரமாய் இருந்த ப்ரம்மரக்ஷஸ், " ஏ நரனே! நீ நேற்றிரவு சர்வேஸ்வரனை போற்றி பாடிய பாட்டின் பலனை எனக்கு கொடுத்தால் உன்னை விட்டு விடுகிறேன் என்றது. அதற்கு நம்பாடுவான் நான் கொடுத்த சத்தியத்தை காக்கவேண்டும் ஆகவே என்னை புசித்துக்கொள் நான் பாட்டின் பலனை கொடுக்க மாட்டேன் என்றான். அதற்கு ப்ரம்மரக்ஷஸ் பாட்டின் பாதி பலனையாவது கொடு உன்னை விட்டுவிடுகிறேன் என்று மன்றாடியது. அதற்கும் மசியாத நம்பாடுவான் நான் உனக்கு கொடுத்த வாக்கின் படி வந்து விட்டேன் நீ செய்த ப்ரதிக்ஞை படி என்னை புசித்து விடு என்று கூறினான்.

ப்ரம்மரக்ஷஸ்ஸும், "அப்பா ! ஒரு யாமத்தின் பலனையாவது கொடுத்து என்னை ப்ரம்மரக்ஷஸ் ஜன்மத்திலிருந்து காப்பாற்று" என்று மன்றாடியது.

"நீ ப்ரம்மரக்ஷஸ்ஸாகப் பிறக்க காரணம் என்ன?"என்று கேட்டான் நம்பாடுவான்.
அப்பொழுது ப்ரம்மரக்ஷஸ்ஸுக்கு பூர்வஜன்ம ஞாபகம் வந்தது, பூர்வ ஜன்மத்தில் நான் பிராமண குலத்தில் பிறந்து எந்த அனுஷ்டானங்களும் இன்றி திரிந்தேன். பண ஆசையால் யாகம் பண்ண எண்ணினேன். அப்பொழுது எனது பாவத்தின் காரணமாய் யாகத்தின் இடையில் மரணமடைந்தேன். இப்பொழுது ப்ரம்மரக்ஷஸ்ஸாக அலைந்துக் கொண்டிருக்கிறேன். தயை கூர்ந்து என்னை காப்பாற்று என்று நம்பாடுவானை சரண் அடைந்தது. தன்னை அண்டிய அந்த ப்ரம்மரக்ஷஸ்ஸிற்க்கு உதவ முடிவு செய்தான் நம்பாடுவான். அதன்படியே, "நேற்றிரவு "கைசிகம் என்ற பண் பாடினேன். அதனால் வரும் பலனை அப்படியே உனக்கு கொடுக்கின்றேன் அதன் காரணமாய் நீ ராக்ஷச ஜன்மத்திலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடைவாய் என்று கூறினான். நம்பாடுவானின் வரத்தை பெற்ற ப்ரம்மரக்ஷஸ் ராக்ஷச ஜன்மத்திலிருந்து விடுபட்டு நல்ல குலத்தில் பிறந்து பகவத் பக்தனாக இருந்து மோக்ஷத்தை அடைந்தது.

நம்பாடுவானும் நெடுங்காலம் நம்பிபெருமாளை போற்றி பாடி மோக்ஷத்தை அடைந்தான். ஸ்ரீ ரங்கத்தில் ரங்கனை அன்றாடம் ஆராதித்து வந்த பராசர பட்டர் என்பவர் இந்த புராணத்தை தெளிவாக விளக்கியதை கேட்டு சந்தோசமடைந்த அரங்கன் பராசர பட்டருக்கும் பரமபதத்தை தந்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.

ஒவ்வொரு கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் இந்த மகாத்மியம் இன்றும் வாசிக்கபடுகிறது. அப்பேற்பட்ட கைசிக மகாத்மியத்தை கோயிலுக்கு சென்று பெருமாள் முன்னோ அல்லது வீட்டில் பூஜை அறையில் பெருமாள் முன் சொல்கின்றவனும் அதை கேட்கின்றவர்கள் யாவரும் இந்த லோகத்து ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் அனுபவித்து பின் வைகுந்தத்தையும் அடைவர் என்று பூமி பிராட்டிக்கு வராஹ பெருமாளே சொன்ன சத்தியம் இது.

ஆகவே அன்பர்கள் அனைவரும் இந்த மஹாத்மியத்தை படிக்க கொடுத்துவைத்தவர்கள். உங்களுக்கு எம்பெருமானின் பரிபூர்ண அனுக்ரஹம் உண்டாகட்டும்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top