Sri Chathurvedha Vidhya Ganapathi Vedhashram, Aathur Village
0
ஆத்தூர் பாடசாலை - ஒரு சிறிய முன்னுரை செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் இருக்கிறது ஆத்தூர் என்னும் அழகிய கிராமம். இந்த கிராமத்தில் ஒரு பாடசாலை வைத்து நடத்துகிறார் திரு.காமகோடி அவர்கள். வேத்தின் மீது வைத்திருக்கும் மரியாதையும் வேதத்தை வளர்க்க வேண்டும் என்ற பெரியவாளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும் பாடசாலையை தன்னுடைய பணிகளுக்கு மத்தியிலும் நடத்தி வருகிறார். இந்த பாடசாலையில் மொத்தம் 64 வித்யார்த்திகள் பயின்று வருகிறாரக்ள். இங்கு சுக்ல யஜூர்வேதமும், கிருஷ்ண யஜூர்வேதமும் பயிற்றுவிக்கப்படுகிறது. பீஹார், ஒரிசா, மஹாராஷட்ரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 6 மாநிலத்தை சேர்ந்த குழந்தைகள் வேதம் கற்றுக் கொள்கின்றனர். வேதம் மட்டும் அல்லாது தனியாக ஆசிரியர்களை வைத்து ஆங்கிலம், சமஸ்கிருதம், கணக்கு ஆகிய பாடங்களும் கற்பிக்கிறார்கள். அஹோபில மடம் பள்ளி ஆதரவுடன் பப்ளிக் எக்ஸாம் எழுதுகிறார்கள். மாலை வேளையில் விளையாட்டுடன் சேர்த்து யோகாவும் கற்பிக்கப்படுகிறது. 26 பசு மாடுகளுடன் ஒரு கோ சாலையும் இயங்கி வருகிறது. அவர்களது வங்கி கணக்கு விபரங்கள் இணைத்துள்ளோம். உதவ விருப்பமுள்ளவர்கள் அந்த வங்கி கணக்குக்கு மாதாமாதம் தங்களால் இயன்ற தொகை அனுப்பி வேதம் தழைக்க உதவ இருகரம் கூப்பி வணங்கி கேட்டுக் கொள்கிறோம்.
Donations can be made in to the below account:
SCVG TRUST, SB account no. 6134392479, INDIAN BANK, Saidapet branch, Chennai.
IFS Code IDIB000S004.
Contact person : Sri R. Kamakoti
Phone : 98844 02624