ஜெகத்குரு ஆதிசங்கரர் கோவிலில் இன்று கும&
Tamil Brahmins
Results 1 to 1 of 1
 1. #1
  Join Date
  Feb 2017
  Location
  Presenty living at Chennai
  Posts
  599
  Downloads
  0
  Uploads
  0
  Thumbs Up/Down
  Received: 11/6
  Given: 5/12

  Pray ஜெகத்குரு ஆதிசங்கரர் கோவிலில் இன்று கும&


  0 Not allowed! Not allowed!

  ஜெகத்குரு ஆதிசங்கரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்: சிருங்கேரி பாரதி தீர்த்த சுவாமிகள் பங்கேற்பு

  அன்னுார்: சத்தியமங்கலத்தில், ஜெகத்குரு ஆதிசங்கரர் கோவில் கும்பாபிஷேகம், சிருங்கேரி பாரதி தீர்த்த சுவாமிகள் தலைமையில் இன்று நடக்கிறது.  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், வேணுகோபாலசுவாமி கோவில் வீதியில், சிருங்கேரி சங்கர மடம் உள்ளது. இங்கு, 1992ல் ஜெகத்குரு ஆதிசங்கரருக்கு கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் மீண்டும் திருப்பணி செய்யப்பட்டு, இன்று காலை, 9:00 முதல் 11:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.கர்நாடக மாநிலம், சிருங்கேரி சாரதா பீட மடாதிபதியான ஜெகத்குரு பாரதி தீர்த்த சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேக விழா நடக்கிறது. ஜெகத்குரு சங்கராச்சார்ய விதுசேகர பாரதி சுவாமியும் பங்கேற்கிறார். பின்னர் சத்தியமங்கலம், பழைய மார்க்கெட் வீதியிலுள்ள, ஏ.வி.எஸ்., மஹாலில், காலை, 11:00 மணிக்கு, பாரதி தீர்த்த சுவாமிகள் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தல், தீர்த்தப் பிரசாதம் வழங்குதல், பாதபூஜை நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு குருவந்தனம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சுவாமிகள் அருளுரை வழங்குகிறார்.

  Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=1730367&
  Last edited by Rudhran; 15-03-2017 at 12:08 PM.
  Sarvastaratu durgaani sarve bhadraani pashyatu
  Sarvah kaamaanavaapnotu sarvah sarvatra nandatu

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •