• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான்

Status
Not open for further replies.
R

Rudhran

Guest
தீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான்

[h=1]தீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு[/h]‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்பது பழமொழி. தாலிகட்டி, கரம் பிடித்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, இல்லற வாழ்க்கையில் இணைந்த கணவன், எப்போதும் பிரியாமல் இருக்கவும், அவன் நீண்ட ஆயுளுடன் வாழவும் மனைவி நோற்கின்ற விரதம் இது. மாங்கல்யம் நிலைக்க வேண்டும் என்பதே, இந்த நோன்பின் குறிக்கோள் ஆகும்.

ல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்பது பழமொழி. தாலிகட்டி, கரம் பிடித்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, இல்லற வாழ்க்கையில் இணைந்த கணவன், எப்போதும் பிரியாமல் இருக்கவும், அவன் நீண்ட ஆயுளுடன் வாழவும் மனைவி நோற்கின்ற விரதம் இது. மாங்கல்யம் நிலைக்க வேண்டும் என்பதே, இந்த நோன்பின் குறிக்கோள் ஆகும்.

கன்னிப்பெண்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், நல்ல கணவன் அமைய வேண்டியும் இந்த விரதத்தை மேற்கொள்கின்றனர்.

மாசி மாத முடிவில், பங்குனி மாத தொடக்கத்தில், இந்த விரதம் கடைப் பிடிக்கப்படுகிறது. ‘மாசிக்கயிறு பாசி படியும்’ (விருத்தியாகும்) என்ற பழமொழிக்கேற்ப, இந்த பண்டிகையின் போது பெண்கள் திருமாங்கல்ய கயிற்றை மாற்றிக் கொள்வர். மற்ற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக் கொள்வார்கள். இந்த நோன்பின் போது தாலிக்கயிற்றுக்கு பதிலாக புதிய கயிற்றைக் கட்டிக் கொள்வார்கள். சிலர் சரட்டில் மஞ்சள் சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்வர்.

இதனால் காரடையான் நோன்பு மாங்கல்ய பலன் தரும் விரதம் எனவும், தீர்க்க சுமங்கலி வரம் அருளும் நோன்பு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நோன்பை சாவித்திரி விரதம் என்றும், காமாட்சி விரதம் எனவும் அழைப்பர்.

பதிவிரதையான சாவித்திரியின் கணவன் சத்தியவானின் உயிரை எமன் பறித்து சென்றான். சாவித்திரி அவனை தடுத்து, வாதாடி தன் கணவனின் உயிரை மீட்டு வந்தாள். இதற்காக இவள் நோற்ற நோன்பு தான் சாவித்திரி நோன்பு ஆகும். காரடையான் நோன்பின் போது, சாவித்திரியின் வரலாற்றினை அறிந்து கொள்வது அவசியம்.

அஸ்வபதி என்ற மன்னனின் மகள் சாவித்திரி. இவள் ஒரு சமயம் காட்டுக்கு சென்ற போது, எதிரி களால் நாடு இழந்து அங்கு வசித்து வந்த, த்யுமற்சேனன் என்ற பார்வையற்ற மன்னரின் மகனான சத்தியவானை சந்தித்தாள். பெற்றோருக்கு அவர் செய்த பணிவிடை சாவித்திரியை கவர்ந்தது. அவள் சத்தியவானை மணமுடிக்க விரும்பினாள்.

தனது விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தாள். அவரும் மகிழ்ச்சி அடைந்து சத்தியவானின் ஜாதகத்தை பார்த்த போது, அவனுக்கு இன்னும் 1 வருடமே ஆயுள் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாவித்திரியின் தந்தை, ‘வேறு மாப்பிள்ளை பார்க்கலாம்’ என்றார். அதற்கு மறுப்பு தெரிவித்த சாவித்திரி, தனது முடிவில் பிடிவாதமாக இருந்து சத்தியவானையே திருமணம் செய்தாள்.

கணவரின் ஆயுள் முடிவதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக சாவித்திரி ஒரு விரதத்தை தொடங்கினாள். இரவும், பகலும் கண் விழித்து, அன்ன ஆகாரமின்றி கடும் விரதம் இருந்தாள். அன்று சத்தியவான் பெற்றோருக்கு பழம் பறித்து வருவதற்காக காட்டிற்கு செல்ல புறப்பட்டான்.

அவனுடன் தானும் வருவதாக கூறி சாவித்திரியும் உடன் சென்றாள். சத்தியவானின் ஆயுள் முடியும் நேரம் வந்தது. திடீரென அவன் தலை வலிக்கிறது என்று கூறி கீழே விழுந்தான். அவனை சாவித்திரி தாங்கி பிடித்து, தனது மடியில் சாய்த்துக் கொண்டாள்.

அப்போது அங்கே பாசக்கயிற்றுடன் எமன் தோன்றினான். ‘நீங்கள் யார்?’ என்று சாவித்திரி கேட்டாள்.

அதற்கு எமதர்மன், ‘பெண்ணே! உன் கணவரின் ஆயுள் முடிந்து விட்டது. பதிவிரதையானதால் உனது கண்களுக்கு தெரிந்தேன். நான் எமதர்மன்’ என கூறிவிட்டு, சத்தியவானின் உயிரை பறித்துக் கொண்டு புறப்பட்டான்.

சாவித்திரியும் எமனை பின் தொடர்ந்து சென்று, ‘நண்பரே! சற்று நில்லுங்கள்’ என்றாள்.

இதைக்கேட்டு திடுக்கிட்ட எமன், ‘நான் உனது நண்பனா?’ என வியப்புடன் கேட்டார்.

Read more at: http://www.dailythanthi.com/Others/Devotional/2015/03/09183121/BlessingGrantKarataiyanFasting.vpf
 
I have missed reading about the "parasa Ilai or புரச இலை used in Karadayaan Nonbu. What is the significance of this
What is the tree's name and it's products in தமிழ். Does it grow all over in TN. Why some people use plantain leaf?
 
I have missed reading about the "parasa Ilai or புரச இலை used in Karadayaan Nonbu. What is the significance of this
What is the tree's name and it's products in தமிழ். Does it grow all over in TN. Why some people use plantain leaf?
h
hi


we used in some rare ilai adai on nombu day....i like this adai very much in my younger days...
 
காரடையான் நோன்பு இன்று மாலை 4.30க்கு மேல் 4.50க்குள் செய்து முடித்து விட வேண்டும். ஏனென்றால் 4.51க்கு பங்குனி மாதம் பிறந்து விடுகிறது.

நோன்பு நூற்கும் அனைத்து சகோதரிகளுக்கும் அடியேனுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

17264870_386284951754828_2810494954270522232_n.jpg


Source: Natesan Subramani/ இன்று ஒரு தகவல் / Information today/ Face Book
 
காரடையான் நோன்பு இன்று மாலை 4.30க்கு மேல் 4.50க்குள் செய்து முடித்து விட வேண்டும். ஏனென்றால் 4.51க்கு பங்குனி மாதம் பிறந்து விடுகிறது.

நோன்பு நூற்கும் அனைத்து சகோதரிகளுக்கும் அடியேனுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

17264870_386284951754828_2810494954270522232_n.jpg


Source: Natesan Subramani/ இன்று ஒரு தகவல் / Information today/ Face Book
hi

here in USA....tuesday morning 8.06am according to EST.....we have 12 to 20 inches of SNOW on KARADAYAN NOMBU DAY...

so many can stay on in homes for NOMBU and schools are closed here...
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top