• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இன்று மகா சிவராத்திரி

Status
Not open for further replies.
R

Rudhran

Guest
இன்று மகா சிவராத்திரி

சிவ பூஜை மகிமை: மகா சிவராத்திரி பிப்ரவரி 24

shiva_3136492f.jpg


மகா சிவராத்திரி என்பது மாசி மாதம் அமாவாசை முதல் நாள் சதுர்தசியில் சம்பவிக்கிறது.

சிவபுராணத்திலும், பவிஷ்ய புராணத்திலும் மகா சிவராத்திரியின் மகிமைகள் வெகு விமரிசையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. சிவ பூஜை செய்தால் உலகத்திற்கு நலமளிக்கும் என்பது நம்பிக்கை.
சிவபெருமானுக்கு ஒரே ஒரு நாள் மகா சிவராத்திரியென்று அழைக்கப்படுகிறது. நமஹம், சமஹம் என்ற மந்திரத்தினால் அன்றைய தினம் மஹண்யாசம், லருண்யாசம், ருத்ரம் ஆகிய வேத கோஷங்களினால் சிவபெருமானுக்கு மகா அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகப்ரியோ சிவஹ, அலங்கார ப்ரியோ விஷ்ணுஹோ என்று புராணங்கள் கூறுகின்றன. மகா சிவராத்திரியன்று உப்பில்லாத ஆகாரம் சாப்பிட்டு, சிவ பூஜை செய்ய வேண்டும்.

மகா சிவராத்திரியன்று தூங்காமல் ஐந்தெழுத்து மந்திரத்தை (ஓம் நமச்சிவாய) உச்சரிக்க வேண்டும். ஆபத்தைப் போக்குவது ஐந்தெழுத்து மந்திரம். பாவத்தைப் போக்குவது பஞ்சாட்சர மந்திரம் என்று சொல்லப்படுகிறது.

சிவராத்திரி மகிமை


ஒரு வில்வ மரத்தடியில் சிவராத்திரியன்று சிவனும், பார்வதியும், அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மரத்தின் மேலிருந்து குரங்கு ஒன்று வில்வ மரத்தின் இலைகளை பறித்து மேலேயிருந்து கீழே ஒவ்வொன்றாகப் போட்டுக்கொண்டிருந்தது. இரவு முழுவதும் தூங்காமல் வில்வ இலையைப் போட்டதால், சிவபெருமான் அருள் செய்தார். தெரியாமல் செய்த குரங்கிற்கே ஈசன் அருள் புரிந்தார் என்றால் பக்தர்கள் சிவராத்திரியன்று பூஜை செய்தால் எல்லா செல்வ வளங்களையும் சிவபெருமான் வழங்குவார்.

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் சத்ரியாயுதம்

த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்.

மூன்று தளம் (இலைகள்) உடைய வில்வத்தால் அர்ச்சனை செய்தால் ரஜோ, தமோ, சாத்விக குணங்களையும் மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண்ணும் மூன்று ஜென்மங்களின் ஆயுளும் கிடைக்கும். மூன்று ஜன்மங்களின் பாவங்களையும் போக்கும். வில்வத்தால் பூஜை செய்தால் சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது.

தர்சனம் பில்வவ்ருஷாய ஸ்பர்சனம் பாதஸேவனம்

அகோர பாபஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்.

ஒரு வில்வ மரத்தைப் பார்த்தாலோ, தொட்டாலோ, பாவம் அழிந்துவிடும். செய்யத்தகாத பாவங்கள் செய்திருந்தாலும் உடனடியாக நிவர்த்தியாகும். இதனால் அவர் ஒருவருக்கே வேதங்கள் நமஸ்காரம் செய்கின்றன. ருத்ர மந்திரம் முழுவதும் நமஸ்கார ரூபமாகவே உள்ளன. ஆதலால் இவ்வளவு மகிமையுள்ள பார்வதி, பரமேஸ்வரரை மகா சிவராத்திரியன்று கண்விழித்துப் பூஜித்தால், சிவனின் அருள் பெறலாம்.

கயிலையே மயிலை, மயிலையே கயிலை என்று போற்றப்படும். மயிலாப்பூரில் ஏழு சிவாலயங்கள் உள்ளன. ஏழு கிழமைக்கும் ஏழு சிவாலயங்கள் என்று கொண்டால் அருள்மிகு கபாலீஸ்வரர், வள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், வாலீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாதீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் என்று மகா புண்ணிய தலங்கள் உள்ளன. இந்த ஏழு சிவாலயங்களுக்கும் மகா சிவராத்திரி அன்று ஒரே இரவில் சென்று வழிபாடு செய்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.
மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி வைபவம் மிகச் சிறப்பாக நான்கு காலமும் ருத்ரம், சமகம் என வேத பாராயணத்துடன் நடைபெறும். முதல் ஜாமம் இரவு சுமார் 11.30 மணிக்குத் தொடங்கும். இக்கால பூஜை சிவப்பு சாத்துதல் என அழைக்கப்படுகிறது. மூலவர் அபிஷேகத்திற்குப் பிறகு, சிவனுக்கு சிகப்பு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு, சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்படும். சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் நான்கு கால பூஜைகளில், தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது கால பூஜை மஞ்சள் சாத்துதல் எனப்படும். இதில் அபிஷேகத்திற்குப் பிறகு லிங்க ரூபமான கபாலீஸ்வரர் மஞ்சள் வஸ்திரத்தாலும், மஞ்சள் நிற மலர்களாலும் அலங்கரிக்கப்படுவார். மூன்றாம் ஜாமம் பச்சை சாத்துதல். பச்சை நிற வஸ்திரம், வில்வம், தாழம்பூ ஆகியவை சாற்றப்படும். நான்காம் காலம் மீண்டும் சிவப்பு சாத்துதல். சிவப்பு வஸ்திரம் சாற்றி, சிவப்பு மலர்களால் அலங்கரிப்பர். நான்காம் கால பூஜை, மறுநாள் விடியற்காலை நான்கரை மணியளவில் நிறைவுறும். அனைத்துக் கால பூஜைகளிலும் வில்வம் சாற்றுவது விசேஷம்.

Read more at : http://tamil.thehindu.com/society/s...கா-சிவராத்திரி-பிப்ரவரி-24/article9555305.ece


நன்றி : தி இந்து






 
Last edited by a moderator:
சிவராத்திரி - சிவதத்துவத்திற்கு உயிரூட்டுகிறது

சிவ தத்துவத்திற்கு உயிரூட்டும் சிவராத்திரி என்ற சுப ராத்திரி, மெய்யுணர்வின் மிக அழகிய அம்சத்தை பிரதிபலிக்கிறது.

சிவன், ஒரு நபரோ அல்லது ஒரு உருவமோ அல்ல; அனைத்தின் சாரத்தையும் உள்ளடக்கிய நித்திய தத்துவம். இது, அனைத்தும் பிறந்து, அனைத்தும் கரைந்து, அனைத்தும் மறையும் ஒரு கொள்கை. இவ்வளவு நுட்பமான, ஆயினும் உணரக்கூடியதாக உள்ள, இந்த தத்துவத்தை எப்படி வெளிப்படுத்துவது?

மொத்தத்தில் இருப்பின் மிகவும் நேர்த்தியான மற்றும் புரிந்து கொள்ள முடியாத உள்ளடுக்கு வெளிப்பாடுகளில் ஒன்று, நடராஜர் அல்லது பிரபஞ்ச நடனக் கலைஞர் என, சித்தரிக்கப்பட்டுள்ள சிவன்.

நடராஜர் என்பது, படைப்பில் பொருள் மற்றும் ஆன்மீக பகுதிகளுக்கு இடையேயான ஒரு கண்கவர் சின்னமாக உள்ளது. நடராஜரின், 108 நடன தோற்றங்களில் மிகவும் போற்றப்படும் தோற்றம் ஆனந்த தாண்டவம்.

பேரின்பம் நடனம். அழகு, நேர்த்தி, கருணை ஆகியவற்றுடன் காணப்படும் ஆனந்த தாண்டவம், ஈடு இணையற்றதாகவே உள்ளது.

ஆழமான ஆன்மீகப் பயிற்சிகள் மற்றும் பொருளுலகின் பற்றின்மை போன்றவற்றின் மூலம், ஒருவர் இம்மாயப் பகுதிகளை அணுகும் போது, ஆனந்த தாண்டவத்தை அனுபவிக்க முடியும்.

இருப்பில், பல பரிமாணங்கள் உள்ளன. படைப்பின் நுட்பமான பகுதிகளுக்குள் நுழைய முடிந்த ஒருவர், சிவ நடனம் ஒரு முடிவில்லாத தொடராக நடப்பதைக் கண்டறிகிறார். பிரபஞ்ச தாள லயத்தில் இப்பேரின்ப நடனத்தை மட்டுமே, உடல், மனம், புத்தி மற்றும், 'தான்' என்ற, அகந்தைச் சிக்கல் போன்றவற்றை கடந்த பின்னரே, அனுபவித்து மகிழ முடியும்.

சிவன் மனித உருவமெடுத்து, இப்பூமியில் நடமாடியதாக தவறாக நம்பப்பட்ட போதிலும்- சிவன் அநாதி: பிறப்பற்றவர், அனந்தா: இறப்பற்றவர்.

சிவனை காலம் மற்றும் இடத்திற்குள் ஒரு உருவமாகக் கட்டுப்படுத்துவது எங்கும் வியாபித்திருக்கும் மற்றும் எல்லையற்ற பேரறிவாகிய நித்திய தத்துவத்தைக் குறைவாக மதிப்பிடுவதாகும்.

நடராஜரின் வலதுபுற மேற்புறக் கையிலுள்ள தமரு, எல்லையற்றமையைக் குறிக்கும் வடிவில் (∞) அமைந்துள்ளது. இது, ஒலி மற்றும் வெற்றிடம் ஆகியவற்றையும், பிரபஞ்சத்தின் விரிந்து சுருங்கும் நிலையைக் குறிக்கும் சின்னமாகவும் அமைந்துள்ளது.

வரையறுக்கப்பட்டதாக இருந்த போதிலும், ஒலி மூலம் எல்லையற்றதைக் காண முடியும். நடராஜரின் இடது கையின் மேற்புறத்திலுள்ள, நெருப்பு பிரபஞ்சத்தின் ஆதி மூலமான ஆற்றலைக் குறிக்கிறது. ஆனந்தம் ஆற்றலை மேம்படுத்தும், இன்பங்கள் ஆற்றலைக் குறைக்கும்.

அபய முத்திரையில் உள்ள வலது கையின் கீழ்ப்பகுதி பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு முறையாக்கத்தின் உத்திரவாதத்தை குறித்துக் காட்டுகிறது. அடுத்த கை கீழ் நோக்கியிருப்பது, எல்லையற்ற சாத்தியங்களைக் காட்டும் அறிகுறியாகத் திகழ்கிறது.

பாதங்களுக்கு கீழுள்ள அபஸ்மாரம் என்ற, அசுரன் அறியாமையைக் குறிப்பிட்டு, முயலகப் பீடிப்பு நிலை, அதாவது உயிர்நிலை மற்றும் உடல் மீது முற்றிலும் கட்டுப்பாடு இல்லாத நிலையைக் குறிக்கிறது.

அறியாமையின் தளைகளிலிருந்து மனித மெய்யறிவு விடுபட்டு, உடல் மன சிக்கலை ஆளும் தேர்ச்சி பெறும்போது மெய்யின்பம் வாழ்வில் மலரத் துவங்குகிறது.

நடராஜரின் ஆனந்த தாண்டவம் படைப்பு அழிப்பு என்ற, பிரபஞ்ச சுழற்சியை குறிக்கிறது. இவ்வுலகம் முழுமையும், மீண்டும் மீண்டும் எழுந்து சுருங்கும் ஆற்றலின் தாளலயமின்றி வேறில்லை.

மேலும் படிக்க : http://www.dinamalar.com/news_detail.asp?id=1717475
 
These days MahaSivaRathri is celebrated world over.


One of my earliest memories was of my grand father trying to teach me when I was 4 or 5 how to properly chant Siva Thandava Strotram.

The verses were supposedly composed by Ravananan who is described to be a Siva Bhaktha.
Only someone well versed in pronunciation can chant this stotram properly and the sounds produced is supposed to be in synchronization with the Damaru beats of Lord Siva's form as he is engaged in His cosmic dance.

Few decades later I tried to learn the meaning of the stotram and found many profound verses between poetic and Puranic description of Lord Siva


Major temples in USA do hold chanting sessions of Rudram and Chamakam all night , there are others that choose to do special Pooja etc on a weekend day (Saturday usually) that occurs closest to the event. Unlike India, many major temples in USA feature large number of deities that include forms of both Siva and Vishnu. It is also common to see people of all faiths of Hinduism come together in these chanting sessions at these temples.
 
These days MahaSivaRathri is celebrated world over.


One of my earliest memories was of my grand father trying to teach me when I was 4 or 5 how to properly chant Siva Thandava Strotram.

The verses were supposedly composed by Ravananan who is described to be a Siva Bhaktha.
Only someone well versed in pronunciation can chant this stotram properly and the sounds produced is supposed to be in synchronization with the Damaru beats of Lord Siva's form as he is engaged in His cosmic dance.

Few decades later I tried to learn the meaning of the stotram and found many profound verses between poetic and Puranic description of Lord Siva


Major temples in USA do hold chanting sessions of Rudram and Chamakam all night , there are others that choose to do special Pooja etc on a weekend day (Saturday usually) that occurs closest to the event. Unlike India, many major temples in USA feature large number of deities that include forms of both Siva and Vishnu. It is also common to see people of all faiths of Hinduism come together in these chanting sessions at these temples.
hi

i did whole night rudram/chamakam in our local temple in USA....MANY ARE NIRJALA FASTING WHOLE DAY...we have more than 500

community members for FIRST TWO PRAHARA KALAM.....whole night more than 50 mainly ladies ....many ladies started

learning rudram/chamakam by heart...without seeing books...thanks to youtube learning...
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top