• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எனது கிறுக்கல்கள்--Version 2.

Status
Not open for further replies.
எனது கிறுக்கல்கள்--Version 2.

வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ அனுபவங்கள். எத்தனையோ மனிதர்கள் வந்து போகிறார்கள். இந்தப்பயணத்தில் பயணிக்கும் பயணியையும் (என்னையும்) அவன் சந்திக்கும் அனுபவங்களையும், மனிதர்களையும் எல்லாவற்றையும் பற்றி ஒரு சாக்ஷியின் நிலையில் நின்று எழுதினால் எப்படி இருக்கும். அது தான் இந்தக்கிறுக்கல்கள். இது உரைநடை தான் கவிதையல்ல. கருத்துக்கள் மட்டுமே ஒருவேளை கனக்கலாம். வடிவம் கனக்காது.

இது சிலவருடங்கள் முன்பு நான் வேறொரு புனைப்பெயரில் இந்த வலைத்தளத்திலேயே எழுதிய "எனது கிறுக்கல்களி"ன் தொடர்ச்சி தான். நான் முன்னர் எழுதியதை படிக்க விரும்பினால் இங்கு க்ளிக் செய்யவும்

http://www.tamilbrahmins.com/showth...21;கல்கள்

இனி என் கிறுக்கல்களைத் தொடர்வேன்.
 
உங்க பழைய அவதாரம் மத்த கஜம்-ன்னு இப்படியா அப்பட்டமா எழுதறது?! :typing:

RRji, I do not have to hide anything.

I was banned (perhaps some people thought I was indeed a maththa gajam - not just a gajam-LOL) and when I came back I was permitted and I am here for all these days. That proves a point.

Another point noted from your post is that you are saying I am on a monkey avatar now. Noted. LOL.
 
கிறுக்கல் 1

இது சற்று சறுக்கலான விஷயம். இது யாரையும் குறித்து எழுதப்பட்டதல்ல. யாருடைய மனதையும் புண்படுத்தவோ அவர்களுடைய படைப்புக்களை எள்ளிநகையாடவோ எழுதப்படுவதல்ல இந்தக்கிறுக்கல்.
ஈன்று புறந்தருதலான ஒரு வேதனையின் வெளிப்பாடு. அவ்வளவே

நான் சென்னையில் நடந்துகொண்டிருக்கும் புத்தகக்கண்காட்சிக்கு சென்றிருந்தேன். வழக்கமாக தமிழ்க் கவிதைப்படைப்புக்களுக்காக, அவற்றை வாங்குவதற்காக நிறைய நேரம் அந்த ஸ்டால்களில் செலவிடுவது வழக்கம். இந்த முறையும் அவ்வாறே செய்தேன். முடித்துவிட்டு வெளியே வந்தபோது சிந்தனை வயப்பட்டேன். ஏதோ மிகவும் களைத்துப்போனது போல ஒரு சலிப்பு உணர்வு.

மேலும் அங்குவந்த கூட்டத்தில் நிறைய கவிஞர்களையும் கவிதாயினிகளையும் சந்தித்தேன். இலக்கிய சர்க்யுட்டில் அடிக்கடி பார்க்கும் முகங்கள். சொல்லப்போனால் நான் போயிருந்த அன்று தடுக்கிவிழுந்திருந்தால் ஒரு கவிஞன் அல்லது கவிதாயினி தடுக்கித்தான் விழுந்திருப்பேன். சரி விஷயத்துக்கு வருகிறேன்.

என்னைப்பொறுத்தவரை கவிதை என்பது வெறும் வடிவத்தில் மட்டுமல்லாது அதன் பொருள் திணிவிலும் உரைநடையிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கவேண்டும். வார்த்தைகளில் சிக்கனம், உவமை முதலான உத்திகளை திறம்பட உபயோகித்தல், சற்றே உயர்வுநவிற்சி, மையக்கருத்துக்கு ஏற்றவாறு ஒலிநயம் அமைந்திடப்பார்த்துப்பார்த்து எழுத்துக்களைத்தேர்ந்தெடுத்தல்(வார்த்தைகளுக்கு), யாப்பிலக்கணத்துக்குக் கட்டுப்பட்டு விதிகளை மீறாமை, எதுகை மோனைகளை தேவைக்கு ஏற்றவாறு அமைத்தல் (TRR சினிமா வசனம் மாதிரி அல்லாமல்) என்று நிறைய அடுக்கிக்கொண்டேபோகலாம். ஆனால் இன்று காண்பது என்ன?

உரைநடையை வெட்டிப்போட்டால் அது கவிதை என்று ஆகிவிட்டது.

கடைக்குப்போனேன் உடை வாங்க
வடையும் டீயுமாய் உபசரிக்க
வடை பிடித்தது ஆனால்
உடைபிடிக்காமல் திரும்பினேன்.

என்றெல்லாம் உரைநடையை வெட்டிப்போட்டு கவிதைகள் எழுதிவிடுகிறார்கள். உரைநடையிலேயே எழுதிவிட்டால் என்ன? கவிதை அதன் வடிவத்தாலும் அதன் பொருள்திணிவுக்கான சாத்தியக்கூறுகளாலும்(potential for content) படிப்பவர்களை கவர்ந்து இழுக்கிறது. இதுபோன்ற ‘கவிதை’ களின் வடிவத்தைக்கண்டு கவரப்பட்டு அதைப்படிப்பவர்களுக்கு எஞ்சுவது ஏமாற்றமே.

கவிதை என்பது கவினுற மொழிவது. மிகச்சில வர்த்தைகளால் மிக அழகான விஷயத்தைக் கோடிகாட்டி படிப்பவரின் மனம் சிந்தித்து அந்த அழகை அனுபவிக்கச்செய்வதே கவிதை.

நல்ல கவிதையை ஒரு குழந்தைக்கும் அதன் தாய்க்கும் இடையே நடக்கும் உரையாடலாக எடுத்துக்கொள்ளலாம். தாய் குழந்தைக்கு கதை சொல்கிறாள். எப்படி ஒரு குள்ளநரி ஒரு சிங்கத்தை ஏமாற்றி உயிர் தப்பியது என்பது கதை. சிங்கம் எப்படி ராஜாவாக காட்டு தர்பார் நடத்தியது, எப்படி ஒரு நாள் ஒன்றுக்கு ஒருவர் என்று காட்டு மிருகங்கள் தனக்கு உணவாகவேண்டும் என்று உத்தரவிட்டது, எப்படி தாமதமாகச்சென்ற நரியை சிங்கம் மிரட்டியது, எப்படி நரி தந்திரமாக கிணற்றடிக்கு சிங்கத்தைக்கூட்டிச்சென்றது அங்கு சிங்கத்தின் நிழல் நீரில் பிரதிபலிக்க எப்படி சிங்கம் தனது ‘எதிரியை’க்கொல்ல தண்ணீரில் பாய்ந்தது என்பதையெல்லாம் சொல்லும் போது வெறும் வார்த்தைகளும் அர்த்தங்களும் மட்டும் குழந்தையின் மனதை சென்று அடைவதில்லை. அவற்றின் பின்னால் நடக்கும் சம்பவங்களெல்லாம் அதன் கண்முன் விரிகின்றன. அகன்ற கண்களுடன் அந்தக்குழந்தை அவற்றை கேட்பதுமட்டுமில்லை காணவும் செய்கிறது. கவிதை அதைத் தான் செய்ய வேண்டும்.

இரண்டு உதாரணங்களை பார்ப்போம்:

1.”நும் முன் பிறந்தது நுவ்வை ஆகும் என்று அன்னை கூறினள் புன்னையின் சிறப்பே”

இது ஒரு பழந்தமிழ்ப்பாடலின் வரிகள். இதன் பின் ஒரு சிறுகதையே இருக்கிறது. தலைவன் தலைவியைக்காண ஒரு புன்னை மரத்தைத்தேர்ந்து அதனடியில் வந்து காத்திருந்தான். ஆங்கு வந்த தலைவி அவனிடம் நாணத்துடன் கூறியதாக வருவன இந்த வரிகள். இந்தப்புன்னை மரம் என் தாயால் விதைக்கப்பட்டு, பாலூற்றி வளர்க்கப்பட்ட மரம். எனவே என் அன்னை கூறினாள் இந்த மரம் உனக்குமுன் பிறந்து என்னால் வளர்க்கப்பட்டதால் இது உன் அக்கா முறையாகும் என்று. எனவே காதலரே! என் தமக்கையின் அருகில் வந்து உம்மைச்சந்திப்பதும் உம்மிடம் பேசுவதும், தழுவுவதும் எனக்கு நாணத்தைக்கொடுப்பதாக இருக்கிறது. நாம் வேறெங்காவது சந்திக்கலாம் என்கிறாள் தலைவி.

2. “தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, நின்னைத்தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா”

கவி பாரதியின் வரிகள் இவை. இதைப்படித்தவுடனேயே நம் மனதில் எழும் சிந்தனை அலைகள் இவ்வரிகளின் தரத்தை விளக்குவனவாக அமைகின்றன. இதைப்பற்றி அதிகம் விவரிக்கத்தேவையில்லை. நந்தலாலாவைப்பற்றி இதைவிட அழகாகவும் தெளிவாகவும் சொல்லமுடியாது.

இவ்விரண்டு உதாரணங்களிலும் கவிதைநயம் மிகுந்து மனதைக்கவர்கிறது. ஈங்கு உவமை, அணி போன்ற எந்த உத்தியும் பயன்படுத்தப்படவில்லை. என்றாலும் சுருக்கமாகச்சொல்லி நம்மைச்சிதிக்கவைத்து அனுபவிக்கவும் வைக்கின்றன இவ்வரிகள். ஏனவே இவை கவிதை வரிகள். உரைநடையை வெட்டிப்போட்டு வடிவத்தில் மட்டும் கவிதையாக்கப்பட்டவை அல்ல. யாப்பிலக்கண வரம்பு மீறாமல் கருத்துச்செறிவுடன் சிக்கனமாக வார்த்தைகளைச்செலவிட்டு நமக்கு கொடுக்கப்பட்ட வார்த்தைச்சித்திரங்கள். வண்ணமயமான கவிதை ஒவியங்கள்.

என்னுடைய எதிர்பார்ப்பு மிக அதிகமா? உங்கள் கருத்து என்ன?
 
தங்கள் பொறுப்புத் துறப்பு அறிவிப்பு சிறப்பு! :thumb:

'டங்க மாறி ஊதாரி புட்டுகின நீ நாறி' என்பது போன்ற கவிதை நயம் மிக்க (!!) பாடல் வரிகள் புகழ் பெறும் காலமய்யா இது!

இப்போது சங்க இலக்கியத்தையும்,
பாரதியாரையும் தேடுவது அரிது! ஆனாலும், என்னை மிகக் கவர்ந்த சமீபத்திய பாடல்

'ஆனந்த யாழை மீட்டுகிறாய்'.
Aanadha Yaazhai

என் இரண்டாம் பேத்தியின் பிறந்தநாள் விழாவில் எடுத்த இனிய விடியோ தொகுப்புகளுக்கு இந்தப் பாடலைப் பின்னணி

அமைத்த
வல்லுனரை என் சுற்றமும் நட்பும் போற்றி மகிழ்வது ஒரு இனிய சம்பவம். :)
 
சொல்தரும் பொருளுணர்வை ஒலியுடன் படைப்பது கவிதை.

கவிதையில் இலக்கணம் விரும்பாதவர்கள் கணினிச் செயலியில், சமையலில் உள்ள இலக்கணத்தைப் போற்றி ஒழுகுவதில் உள்ள பாசாங்கும் அவசரமும் அலட்சியமும் புரிந்துகொள்ளத் தக்கதே.

நீங்கள் தந்த உரைவீச்சில் எதுகையும் மோனையும் ஆங்காங்கே இருந்தும் அது ஏன் கவிதையில்லை என்றால், அதில் வாசகருக்கு யோசிக்க ஒன்றும் இல்லை என்பதால்!

அந்த வரிகளைச் சற்றே செப்பனிட்டு மரபுக் கவிதையாக்கலாம்.

கடைக்குப் போனேன் உடைகள் வாங்க
வடையுடன் தேநீர்
வடைபிடித் ததுவெனில்
உடைபிடிக் காது-விரல் உரசித் திரும்பினேன்.

மோனை வரும் இடத்தில் எதுகை வரலாம், முதலடியில் உள்ளதுபோல். அடிகளும் சீரெண் ஒன்றாக அமையும் அளவடியாக இல்லாமல் இடையில் இரண்டோ, மூன்றோ சீர்கள் அமையக் குறையலாம், உரைவீச்சில் உள்ளதுபோல். இப்படி சொற்பொருளுணர்வொலி நயமொன்றி எழுதும் போது அது கவிதையாக--இங்கு இணைக்குறள் ஆசிரியப்பாவாக--மாறும் சாத்தியம் உண்டு.

இது என் சொந்தக் கருத்து, யாரையும் குறித்துச் சொன்னது அல்ல.
 
Last edited:
சொல்தரும் பொருளுணர்வை ஒலியுடன் படைப்பது கவிதை.

கவிதையில் இலக்கணம் விரும்பாதவர்கள் கணினிச் செயலியில், சமையலில் உள்ள இலக்கணத்தைப் போற்றி ஒழுகுவதில் உள்ள பாசாங்கும் அவசரமும் அலட்சியமும் புரிந்துகொள்ளத் தக்கதே.

நீங்கள் தந்த உரைவீச்சில் எதுகையும் மோனையும் ஆங்காங்கே இருந்தும் அது ஏன் கவிதையில்லை என்றால், அதில் வாசகருக்கு யோசிக்க ஒன்றும் இல்லை என்பதால்!

அந்த வரிகளைச் சற்றே செப்பனிட்டு மரபுக் கவிதையாக்கலாம்.

கடைக்குப் போனேன் உடைகள் வாங்க
வடையுடன் தேநீர்
வடைபிடித் ததுவெனில்
உடைபிடிக் காது-விரல் உரசித் திரும்பினேன்.

மோனை வரும் இடத்தில் எதுகை வரலாம், முதலடியில் உள்ளதுபோல். அடிகளும் சீரெண் ஒன்றாக அமையும் அளவடியாக இல்லாமல் இடையில் இரண்டோ, மூன்றோ சீர்கள் அமையக் குறையலாம், உரைவீச்சில் உள்ளதுபோல். இப்படி சொற்பொருளுணர்வொலி நயமொன்றி எழுதும் போது அது கவிதையாக--இங்கு இணைக்குறள் ஆசிரியப்பாவாக--மாறும் சாத்தியம் உண்டு.

இது என் சொந்தக் கருத்து, யாரையும் குறித்துச் சொன்னது அல்ல.

Saidevoji,

Thanx.
 
கிறுக்கல் 2.

இன்று நான் எழுதப்போவது ஒரு மாமியைப் பற்றி. உங்களில் பலரும் இப்படி ஒரு மாமியை வாழ்க்கையில் சந்தித்திருப்பீர்கள். பெயர் தான் வேறொன்றாக இருந்திருக்கும்.

அலமேலு மாமி சாதாரணமான ஆள் இல்லை.

சிறு வயதிலேயே தனி ஆளாக ஆகிவிட்ட ஒரு போராளி/ஒரு மனுஷி.

உறவுகள் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை. கணவன் விட்டுச்சென்ற ஒரு வீடு(1bhk ப்ளாட்) மட்டுமே சொந்தம். நான் வசிக்கும் சென்னை புறநகரில் அவரும் வசிக்கிறார். இந்தப்பகுதியில் பிராமணர்கள் பெரிதும் வசிப்பதால் நிறையவே கோயில்கள் உள்ளன. கோயில்களிலெல்லாம் காலையும் மாலையும் பிரசாத விநியோகம் உண்டு. பெரும்பசி இல்லாதவர் ஒருவர் இங்கு ப்ரசாதம் சாப்பிட்டே உயிரையும் உடலையும் ஒட்டவைத்துக்கொண்டு ஜீவித்து காலத்தைத் தள்ளிவிடலாம். நமது அலமேலு மாமியும் அப்படித்தான் வாழ்கிறார்.

மாமி வாழ்க்கையில் பட்ட அடிகள் அவரை ஒரு street fighter ஆக்கி விட்டிருக்கின்றன. கோவிலில் உற்சவம் வந்தால் அவர் Q வில் நின்று பெருமாளை சேவிக்க மாட்டார். அனைவருக்கும் முன்னால் முண்டியடித்துக்கொண்டு சென்று சேவிப்பார். யாராவது தட்டிக்கேட்டால் அப்படிக்கேட்டவர் ஒடிப்போகுமளவுக்கு அவருக்கு acidic ஆக பதில் சொல்லி சண்டை போடுவார். காவலர்கள் தடுத்து நிறுத்தினால் அங்கேயே மயக்கம் வந்ததுபோல் கீழே விழுந்து குடிக்க தண்ணீர் கேட்டு சீன் போடுவார். Q வில் நிற்பவர்கள் தாமாகவே அவருக்கு வழி விட்டுவிடுவார்கள். மாமிக்கு தெரியாத விஷயமே இல்லை என்னலாம். ஆன்மீகம், அரசியல், லோகாயத வாழ்க்கையின் நடைமுறைகள்,ஒரு இந்தியக்குடிமகனின்/குடிமகளின் உரிமைகள் எல்லாம் மாமிக்கு நன்றாகவே தெரியும். ப்ரவசனங்கள்/காலக்ஷேபங்கள் எங்கெங்கே நடந்தாலும் மாமி அங்கே இருப்பார்.

வருடத்துக்கு ஒரு நாள் காஞ்சி வரதன் பாலாற்றங்கரையில் எழுந்தருளுவது எப்போது என்று மாமிக்கு தெரியும். டயரியில் குறித்து வைத்தது போல் அன்று மாமி பழைய சீவரத்துக்கு போய் விடுவார். சிடி பஸ்ஸுக்குக் காத்திருந்து அரசாங்கம் கொடுத்திருக்கின்ற 'மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பயண டோக்க' னை கொடுத்து பழைய சீவரத்தில் முதல் ஆளாக அவர் தான் வந்து காத்திருப்பார். காலக்ஷேபம் நிறைய கேட்டிருப்பதால், வரதன் அந்தப்படிகளில் ஸ்ரீபாதம் தாங்கிகளின் தோளில் வாகனத்தில் அமர்ந்து இறங்கி வரும்போது எதிரிலிருந்து விழும் மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் ப்ரதிபலிக்கும் அந்த அழகை எப்படி ஸ்வாமி தேசிகன் தனது சுலோகம் ஒன்றில் வர்ணிக்கிறார் என்று மாமி தன் பக்கத்தில் நிற்கும் இன்னொரு மாமியிடம் விவரிப்பதை நான் கேட்டு வியந்திருக்கிறேன். மைலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவள்ளுர் என்று எங்கேயும் மாமியை உற்சவ சமயங்களில் நீங்கள் காணலாம்.

எங்கள் பிரதேசத்து கோவிலில் உற்சவம் நடக்கும் போது ஒரு நாள் பெருமாளை வாகனத்தில் வைத்து ஆட்டி ஆட்டி வாகனம் தூக்குவோர் எழுந்தருளப்பண்ணியதைக்கண்டு கூட்டத்தில் நின்று சேவித்துக்கொண்டிருந்த மாமி கிருஷ்ணா கிருஷ்ணா இப்படி ஆட்டறாளேப்பா உடம்பு வலிக்காதா? என்று வருத்தப்பட்டுக்கண்ணீர் விட்டார். வாகனம் தூக்கிகளிடம் தனியாக சண்டை வேறு போட்டார்.

தினமும் தான் வாங்கும் பிரசாதத்தில் ஒரு பங்கை கோவில் வாசலில் உட்கார்ந்து தனக்குத்தானே கொடுத்துக்கொண்ட உத்தியோகமாக செருப்புக்களை ஒழுங்குபடுத்திப்பார்த்துக்கொள்ளும் அந்த நொண்டிப்பையனுக்கு கொடுத்து விடுவார் மாமி.

தினமும் சுத்தமாகக் குளித்து, துவைத்து மடியான cotton மடிசார் புடவை உடுத்து கோவிலுக்கு வரும் இந்த மாமியை பார்த்தவுடன் பயத்துடனும் மரியாதையுடனும் கோவிலுக்கு வழக்கமாக வரும் மற்றவர்கள் ஒதுங்கி வழிவிடுவதைக்காணலாம். இந்த மாமியுடன் வம்பு வேண்டாம் என்று ஒதுங்கிப்போவோர் தான் அதிகம்.

வாழ்க்கையில் நிறையவே அடிபட்டாலும் துளியும் கசப்பில்லாமல் போராடி சின்னச்சின்னதாக ஜெயிக்க விரும்பும், இன்றைய வாழ்க்கையின் யதார்த்தத்தைப்பற்றியும் சூழலைப்பற்றியும் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும், நாமார்க்கும் குடியல்லோம் என்று துளியும் பயமின்றி யாருக்கும் தலை வணங்காமல் வாழ்க்கையை நடத்தும், நிறைய விஷயங்களை அவற்றின் அர்த்தத்துக்காகவும் அழகுக்காகவும் மட்டுமே தெரிந்து வைத்து அநுபவித்து மகிழும், அநன்யப்ரயோஜனமாகவும் முரட்டுத்தனமாகவும் பக்தி செய்யும், சிருஷ்டி என்னும் அழகிய வாக்கியத்தில் எப்போதாவது வந்து விழுந்துவிடுகின்ற எழுத்துப்பிழையாக இருக்கும் உடல் ஊனமுற்றவனுக்கும் உள்ளுக்குள், உள்ளுக்குள் ஒரு நிமிடம் கசிந்து உருகிவிடும் இந்த அலமேலு மாமி என்னை நிறையவே சிந்திக்க வைக்கிறார்.
 
Last edited:
கிறுக்கல் - 3.

நேற்று காலை செய்தி பேப்பரில் படித்தது சிட்டுக்குருவிகளைப்பற்றி. அவை அழிந்து வருவதை தடுத்திட ஏதாவது செய்ய வேண்டும். நான் பல நாட்கள் முன்பு இந்த தளத்தில் ஒரு இழையில் பதிவு செய்தது நினைவுக்கு வந்தது. அது இப்போதும் relevant ஆக இருப்பதால் அதை அப்படியே பதிகின்றேன். கவிதை அல்ல. விஷயம் சற்றே கனமானது தான். உரைநடையில் தான் பதிந்திருக்கிறேன். இதோ படியுங்கள்:....

எதுவுமே வேண்டாமென்று இருந்த என்னை நண்பர்கள் தூக்கி நிறுத்தி என் தாச்சீலையையும் கட்டிவிட்டு சென்று வா வென்று வா என்று கட்டளையும் இட்டு விட்டார்கள். பெரிதாக ஒன்றும் சாதிக்காவிட்டாலும் சிறிதாக எதாவது செய்ய முடிகிறதா என்று பார்க்கிறேன். சரி எங்கே தொடங்குவது? சிட்டுக்குருவியிலேயே தொடங்குவோமே.

இது ஒரு குறு நாடகம். கவிதை(என்னுடையதல்ல – கடன் வாங்கியது)யும் உரைநடையும் கலந்து வருவது.


நாடகத்தின் பெயர்: சிட்டுக்குருவியெல்லாம் எங்கே போச்சு

நிகழும் காலம்:சிட்டுக்குருவிகள் இருந்து, வாழ்ந்து, இறந்த காலம்
பாத்திரங்கள்: ஒரு பெண், அவள் கணவன், அவளுடைய குழந்தை, சிட்டுக்குருவி.

காட்சி 1.
யுகங்களாய்த்தொடர்ந்து வரும் ஆக்க உந்துதலில் அந்தப்பெண் பாடினாள்:

சிட்டுக்குருவீ சிட்டுக்குருவீ சேதிதெரியுமா என்ன
விட்டுப்பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல
பட்டு மெத்தையை விரிச்சுவச்சேன் சும்மாக்கிடக்குது
பசும்பாலக்காய்ச்சி மூடி வச்சேன் ஆறிக்கிடக்குது.

கணவன் திரும்பி வந்து கூடிட ஒரு சுந்தரக்குட்டன் பிறந்தான்.குழந்தை வளர்ந்து சிறுவனானான்.

காட்சி 2.

பொன்மணிக்குட்டன் அன்னையைக் கேட்டான்
அப்பாவோட பேசணுமென்னு
அலைபேசியை அவன் கைக்கொடுத்தாள்
ஆசை தீரப்பேசித்தீர்த்தான்
பேசியஅந்தப் பத்து நிமிடத்தில்
அலைவாங்கிகளும் ஆண்டென்னாக்களும்
சிம்கார்டுகளும் சீராக்கிகளும்
செய்தகோலம் சொல்லிமாளாது

அசுவத்தாமனின் அத்திரம்போல
அலைக்கற்றைகள் யாங்கணும் பரவி
குருவிக்கூட்டத்தின் கருவறுத்திட
குருவிகள் எல்லாம் காணாமற் போயின.


காட்சி 3.

அன்னை மீண்டும் பாடினாள் குட்டனுக்குச் சோறூட்ட

குருவீ குருவீ வா வா சிட்டுக்குருவீ வா வா
குருவீ குருவீ வா வா சிட்டுக்குருவீ வா வா

குருவிகள் எதுவும் வரவில்லை
குட்டனும் சோறு உண்ணவில்லை
அசுவத்தாமன் இழந்தது குடுமியை
மனிதஇனம் இழந்தது குருவியை

குருவிகள் புண்ணியாத்துமாக்கள்.
மகாப்பிரளயம் வந்திடவும் அவை
பரமாத்துமாவில் லயமாகிவிட்டன.
நாம் தான் காத்திருக்கிறோம்,....................
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top