• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கிரிஜாவின் கவிதை துளிகள்

  • Thread starter ramachandran girija
  • Start date
Status
Not open for further replies.
R

ramachandran girija

Guest
கிரிஜாவின் கவிதை துளிகள்

கல்வி :-
========
கற்பதற்கு பிறந்தேனா ? இல்லை
கற்பிப்பதற்கு பிறந்தேனா?
கற்பனைகளை புதுப்பிக்க தானா?
கற்றுளியாய் இங்கே நானும்?

கற்க மறந்த நேரங்கள் இல்லவே இல்லை
கற்க பிறந்த நேரத்தில் துன்பங்கள் கொள்ளை
கற்க துணிந்த நேரத்தில் கண்களும் பளபளக்க
கற்க முடியாது என்றால் பிறவியும் ஏனோ?

கற்கலாம் இயற்கையிடம் இருந்து
கற்கலாம் சுற்றுப் புறத்தில் இருந்து
கற்கலாம் மானிட பாடங்களை
கற்கலாம் நேசத்தின் பாதையினை !!

கற்று முடிந்ததற்கு எண்ணுவரும் உளரோ?
கற்று முடிய நாட்களும் குறைவே !!
கற்று சிறக்கும் பொழுதுகள் நல்லவை
கற்று பிறக்கும் ஞானமே சிறந்தது !!!

கற்று நிற்கவே ஜென்மங்கள் உடையது
கற்று பெற்றிட பலவும் உள்ளது
கற்று போற்றிட ஆன்மிகம் உள்ளது
கற்று பாருங்கள் !! கலியும் நல்லது !!!

*** ஆக்கம் ரா. கிரிஜா


 
நூல் நயம்
==========

நூல் பல கற்று தான் பாரேன் !
நூதனமான விஷயங்கள் தெரியுமே !!
நோக்குகள் விரிவு அடையுமே !!!
நல்லவை கிடைக்கப் பெறுமே !!!!

நாள்கள் பல வெறுமையாய் போவது
நல்லது தானோ நமக்கு?
தாள்கள் பலவற்றைப் புரட்டினால்
தானாக மிளிரும் அறிவு !!!!

நற்பதிப்புகள் எண்ணங்கள் ஆக வேண்டாமா ?
நன்கு சிந்திக்க கருத்துகள் தான் வேண்டாமா?
நாளாய் உலகினை நடத்திச் சென்றிட
நாமும் இன்றே தயாராக வேண்டாமா?

நல்லொரு அன்னப்பறவையாய் இனியாவது
நாமும் தீயவை மறக்கத் தான்
நல்லவை விளையத் தான்
நம்மால் இயன்றது படிக்க வேண்டாமா?

நாட்டு நடப்பும் தான் அறியணுமே !
நாகரிகம் சிறப்பதும் தெரியணுமே !
நாட்பட்ட குப்பைகளாய் மனம் இல்லாமல்
நன்கு பதித்த வைரமாய் மனம் வேண்டாமா ?

நல்ல குழந்தைகளை வழி நடத்த வேண்டாமா?
நாடு சிறக்க வீடு சிறக்க வேண்டாமா?
நன்மைகள் உதிக்க நமக்கு நன்மைகள் வேண்டாமா ?
நன்மைகளை அள்ளித் தருவனவே நூல்கள் !!!

*** ஆக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு)

 
மழலை
========

மழலையாய் மனம் இருந்தால்
மனதிலே சிவம் தங்கும் !!
மந்தியாய் மனம் அலைந்தால்
மனதின் உள்ளே சிவம் ஆகுமா?

மழலையாய் சிரித்து இருந்தால்
மனித இயல்பின் வேகம் தெரியும் !!
மந்தகாச புன்னகையால் மேகமாய்
மறையுமே துன்பங்கள் எல்லாம் !!!

மழலையாய் ஒரு விஷயம் அணுகினால்
மனதிற்கு அனுபவங்கள் நிறைய நிறைய !!
மனித வளர்ந்த மனதில் சிக்கல்கள் நூல்கண்டாய்
மாறி மாறி மேலும் பின்னுகையில் அனுபவம்??

மழலையாய் சிந்தும் கண்ணீருக்கு கூட விலை அதிகம் !
மட்டற்ற மகிழ்ச்சியில் இயற்கையை கண்டு பார் !!
மகிழ்வே நதியாய், மனமே ஊஞ்சலாய், உந்தலாம் வானிலே !!!
மாறுக்கண்கள் வேண்டாமே பார்க்கும் கோணத்திற்கு !!!!

மாசறு பொன்னாய், வலம்புரி சங்காய், மீட்டறும் வீணையாய்,
மதித்திடும் கற்பகமாய், மதிப்புறு மாணிக்கமாய்,தேனமுதாய்,
மழலையரை மதித்திடும் போதினிலே வானவர் நாடு
மதி மயங்கி வாழ்த்திடுமே நம்மை என்றென்றும் !!!

**** அக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு)

 
சில பல கேள்விகள்...!!!
கல்வியென்பது என்ன?
கற்பது என்பது என்ன?

கற்பிப்பது என்பது என்ன?
கே.பி. சுந்தராம்பாள் அல்ல நான்!

கல்வி கற்பது பள்ளியில் மட்டும் அல்ல!
கல்வி கற்பது கல்லூரியில் மட்டும் அல்ல !

கல்வி கற்பது ஒரு தொடர வேண்டிய நிகழ்வு.
கற்க வேண்டும் கடைசி மூச்சு இருக்கும் வரை!!

கற்கலாம் படங்களை எதனிடமிருந்தும், எவரிடமிருந்தும்.

தேவை ஆர்வம், ஆராய்ச்சி, முயற்சி, கவனம் இவை மட்டுமே.

ழுது வயதுப் பெண்மணி ஏழு வயதுப் பெண்ணிடம் இருந்து கற்க முடியும்.
எண்பது வயது தாத்தா எட்டு வயதுச் சிறுவனிடம் இருந்து கற்க முடியும்.

கற்பதற்குத் தேவை இரட்டைத் தாளிடப்படாத திறந்த மனம் மட்டுமே.
அன்புத் சகோதரி உங்கள் வரவு நல்வரவு ஆகுக :welcome:
 
Last edited:
சில பல கேள்விகள்...!!!
கல்வியென்பது என்ன?
கற்பது என்பது என்ன?

கற்பிப்பது என்பது என்ன?
கே.பி. சுந்தராம்பாள் அல்ல நான்!

கல்வி கற்பது பள்ளியில் மட்டும் அல்ல!
கல்வி கற்பது கல்லூரியில் மட்டும் அல்ல !

கல்வி கற்பது ஒரு தொடர வேண்டிய நிகழ்வு.
கற்க வேண்டும் கடைசி மூச்சு இருக்கும் வரை!!

கற்கலாம் படங்களை எதனிடமிருந்தும், எவரிடமிருந்தும்.

தேவை ஆர்வம், ஆராய்ச்சி, முயற்சி, கவனம் இவை மட்டுமே.

ழுது வயதுப் பெண்மணி ஏழு வயதுப் பெண்ணிடம் இருந்து கற்க முடியும்.
எண்பது வயது தாத்தா எட்டு வயதுச் சிறுவனிடம் இருந்து கற்க முடியும்.

கற்பதற்குத் தேவை இரட்டைத் தாளிடப்படாத திறந்த மனம் மட்டுமே.
அன்புத் சகோதரி உங்கள் வரவு நல்வரவு ஆகுக :welcome:

அன்பு சகோதரி விசாலாக்ஷிக்கு,

வரவேற்றமைக்கு மகிழ்ச்சி...
கல்வி என்பது தொடரும் பணி
கற்பிப்பது என்பதும் தொடரும் பணியே !!

கற்பிப்பது எல்லோராலும் இயலாது
கற்பதும் எல்லோராலும் இயலாது...

திறந்த கோப்பையாக மனம் இருந்தால் மட்டுமே
திறவு கோலாக கல்வி கைவசப் படும்
திறக்க முடியுமே அறிவு விசால பெட்டகத்தை !!

நீங்கள் சொல்வது மிக, மிக சரி !!!
"கற்கலாம் பாடங்களை எதனிடமிருந்தும், எவரிடமிருந்தும்.
தேவை ஆர்வம், ஆராய்ச்சி, முயற்சி, கவனம் இவை மட்டுமே."

நீங்கள் கொல்வது மிக, மிக நேர்த்தி !!
"எழுவது வயதுப் பெண்மணி
ஏழு வயதுப் பெண்ணிடம் இருந்து கற்க முடியும்.
எண்பது வயது தாத்தா
எட்டு வயதுச் சிறுவனிடம் இருந்து கற்க முடியும். "

வயது ஒன்றும் தடை அல்ல கற்பதற்கு
சூழல் ஒன்றும் தடை அல்ல கற்பதற்கு
வாளிப்பாய் உடல் தேடி ஓடாமல்
சுட்டியாய் கவனம் செய்க கல்வி கைவசமே !!!

(ஹா ஹா ஹா.... கே.பி. சுந்தராம்பாளை போல கேள்விகள் நிறைய கேட்க,கேட்க மட்டும் தானே , விடைகள் தேடும் நம் சிறு மனம்? அப்போது தானே நாம மனமும் உய்ய , நிறைய அறிய வழி வகை கிடைக்கும்???)
 
இறை சிந்தனை :-
=================
இயன்றவர்கள் மட்டும் தொழுவது அல்ல
இறை சிந்தனை ; அனைவரும் அறிவோமே ...
இயற்கையின் வலிமையாம் சக்தியினை
இறை நிந்தனை வேண்டாமே யாருக்கும் !!

இயற்கையை காற்றாய்,நெருப்பாய், நீராய்
இயலும் அளவு உருளும் பூமியாய்,ஆகாயமாய்
இறைமையை கண்டனர் முன்னோர் அந்தநாட்களில்
இறைமையை கண்முன்னே கண்டவர் அவர்கள் !!

இயற்கையை உயிரினமாய், உயிரற்றவையாய்
இயற்கையை மனிதமாய், இனிமையாய்
இறைமையாய் கண்டனரே முன்னோர் !!
இறைமையை மரமாயும், நதியாயும்

இறைமையை பெண்மையாய், உண்மையாய்,
இறைமையை அழகாய், நித்தியமாய்,
இறைமையை அகண்டமாய், ஆழமாய்,
இறைமையை எல்லாமாய் கண்டவர் அவர்கள் !!

இறைமையை உறுதியாய் அறிகின்றோம்
இறப்பிலும் பிறப்பிலும் அநித்ய வாழ்விலும்
இசைவான இசையாது போதலிலும்
இசையாது போவது இசைதலிலும்

இறைமையை உறுதியாய் அறிகின்றோம்
இறைமையை மறுக்க நாம் யார் ?
இறைமையை மதித்து வாழ்ந்தாலே
இறைமையே இயற்கையாய் நம்மோடு !!!

**** ஆக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு)

 
கோவை மாவட்டத்திலிருந்து இன்னொரு பெண் கவிஞர்!

வருக; கவிதைகள் பொழிக! :)
 
hi

சில நேரங்களில் .......

சில எண்ணங்கள் ......
வாழ்க்கையில் பூக்களை தோன்றும்
சில வண்ணங்கள்....
என்றும் வண்ணம் மாறாமல் தோன்றும்
சில கனவுகள்....
எனக்கு தெரிந்த
சில வார்த்தை சிதறர்கள் ,,,,,,
என் கவிதைகளில்
சில இலக்கண பிழைகள் இருக்க கூடும்
ஆனால் எண்ணத்தில் எப்பொழுதும்
பிழைகள் இருந்ததில்லை.....
 
திறந்த மனம் ஒரு புறம்போக்கு நிலம் அல்ல!

புறம் போக்கு நிலமாக நம் மனம் இருந்து விட்டால்
போக வர வீசுவார்கள் அதில் குப்பைக் கழிவுகளை!


இரட்டைத் தாழிட்ட மனமாக இருந்து விட்டால்
இனிய காற்றுக் கூட உள்ளே நுழைய முடியாது.

திறந்து வையுங்கள் உம் மனத்தை - அதை
மறந்திடாமல் நித்தம் காத்தும் வாருங்கள்.

வந்து சேரும் விஷயங்களை பார்த்து இருங்கள்.
நொந்து போவீர்கள் விஷங்கள் வந்து சேர்ந்தால்!
 
கோவை மாவட்டத்திலிருந்து இன்னொரு பெண் கவிஞர்!

வருக; கவிதைகள் பொழிக! :)

ராஜி ஜி, உங்களின் அன்பான வரவேற்பிற்கு நன்றி..... கோவையில் வாழும் நான், தமிழை ஆர்வமுடன் கற்ற, கற்கும் நான்
திருவ நந்தபுரத்தை சேர்ந்த (ஜோதிடம், ஆன்மிகம் இவற்றில் ஈடுபாடு உள்ள) மலையாளம் பேசும் குடும்பம் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
 
திறந்த மனம் ஒரு புறம்போக்கு நிலம் அல்ல!

புறம் போக்கு நிலமாக நம் மனம் இருந்து விட்டால்
போக வர வீசுவார்கள் அதில் குப்பைக் கழிவுகளை!


இரட்டைத் தாழிட்ட மனமாக இருந்து விட்டால்
இனிய காற்றுக் கூட உள்ளே நுழைய முடியாது.

திறந்து வையுங்கள் உம் மனத்தை - அதை
மறந்திடாமல் நித்தம் காத்தும் வாருங்கள்.

வந்து சேரும் விஷயங்களை பார்த்து இருங்கள்.
நொந்து போவீர்கள் விஷங்கள் வந்து சேர்ந்தால்!


"வந்து சேரும் விஷயங்களை பார்த்து இருங்கள்.
நொந்து போவீர்கள் விஷங்கள் வந்து சேர்ந்தால்
"
உண்மை தான் நற்றோழியே !!!


நேற்று நடந்தவை என்னுடைய
நெஞ்சில் காயங்கள் மாறாதது !
இன்று நடப்பவை என்னுடைய
நெஞ்சில் ஆழங்கள் அழியாதது !

நாளைய பொழுது வேண்டாமே
நன்கு வேண்டுகிறேன் சிவனே
நல்ல விஷயங்கள் என் அருகில்
நயமாய் வந்திடச் செய் !!!

நாளைய பொழுதே நிரந்தரம் இல்லையே
நானும் எ (இ)ங்கேயும் புலம்புவதால் என்ன பயன்?
நன்கு யோசித்து விஷயங்கள் தீர்மானிக்க
நானும் ஒன்றும் விவேகி அல்லவே !!!

நான் செய்வன அல்லாதவற்றிற்கு
நான் பே(ஏ) ச்சு வாங்கும்போது
நான் உள்ளுக்குள் உடைந்து போகிறேன்
நான் தூள்களாக சிதறிப் போகிறேன்

"நான் தொழும் சிவனே !!! இது ஏன்?
நடிக்கத தெரியாத இயல்பாலா ?
நன்கு காக்கா பிடிக்க தெரியாத இயல்பாலா ?
நன்மைக்கும் உணமைக்கும் விலை இல்லையா ?"

நான் குமுறும் குமுறல்கள்
நான் அழும் கதறல்கள்
நான் என்னும் மனசாட்சிக்கும்
நடராஜனுக்கு மட்டுமே தெரியும் !!!

*** ஆக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு)



 
hi

சில நேரங்களில் .......

சில எண்ணங்கள் ......
வாழ்க்கையில் பூக்களை தோன்றும்
சில வண்ணங்கள்....
என்றும் வண்ணம் மாறாமல் தோன்றும்
சில கனவுகள்....
எனக்கு தெரிந்த
சில வார்த்தை சிதறர்கள் ,,,,,,
என் கவிதைகளில்
சில இலக்கண பிழைகள் இருக்க கூடும்
ஆனால் எண்ணத்தில் எப்பொழுதும்
பிழைகள் இருந்ததில்லை.....

I like this thought, tbs......
என் கவிதைகளில்
சில இலக்கண பிழைகள் இருக்க கூடும்
ஆனால் எண்ணத்தில் எப்பொழுதும்
பிழைகள் இருந்ததில்லை.....

உண்மை தான்....
"எண்ணம் அழகானால்,
எல்லாம் அழகாகும் !!"
 
The troubles oyster produces a priceless pearl ...:Cry:
not the one living in perfect joy and pleasure!:couch2:

We must thank for the pains inflicted on us (whether we deserve them or not) :hail:
since that pain certainly produces a gain - which can not be disproved by anyone! :thumb:

No pain... No gain!!!

The pain annuls and cancels our paapam and the happiness reduces our puNyam.
Do we want our paapams to get reduced or puNyams (if we have gathered any?) :decision:

One small clarification sought from you!

Where were you all these days dear Girija
and why were you so silent in the forum???
 
The troubles oyster produces a priceless pearl ...:Cry:
not the one living in perfect joy and pleasure!:couch2:

We must thank for the pains inflicted on us (whether we deserve them or not) :hail:
since that pain certainly produces a gain - which can not be disproved by anyone! :thumb:

No pain... No gain!!!

The pain annuls and cancels our paapam and the happiness reduces our puNyam.
Do we want our paapams to get reduced or puNyams (if we have gathered any?) :decision:

One small clarification sought from you!

Where were you all these days dear Girija
and why were you so silent in the forum???

dear visalakshi ji,

namaskars. thank you very much for all your encouraging words... especially oyster and pearl... i love it...

clarification sought from me :-
Where were you all these days dear Girija
and why were you so silent in the forum???


I was engulfed in the facebook; I am also very active in writing essays,stories,kavidhaigal in real world !!! ha ha ha.... As a Principal, my workload weighs me down... hence couldn't contribute much so long....(i lso teach english for clases IX to XII, chemistry,computer); in he nearby visalakshi amman koil, i perform dances, i choreograph dances; i also perform bhajans; i am planning to go for thirupugazh classes from next week.... (so little girija is busy, busy, busy...) I also write in penmai.com and ladys wings.com....
i write spiritual posts, kavidhaigal, music and dance areas... cooking too...

i joined with all enthusiasm in oct 2013, when i wanted to know about saligram of siva....

Now, I adore our forum.... I had downloaded lots of spiritual books. I read a lot.... I find this forum inspires me a lot...
hereafter, I will do my might in our forum with the grace of lord siva.....
 
The troubles oyster produces a priceless pearl ...:Cry:
not the one living in perfect joy and pleasure!:couch2:

We must thank for the pains inflicted on us (whether we deserve them or not) :hail:
since that pain certainly produces a gain - which can not be disproved by anyone! :thumb:

No pain... No gain!!!

The pain annuls and cancels our paapam and the happiness reduces our puNyam.
Do we want our paapams to get reduced or puNyams (if we have gathered any?) :decision:

One small clarification sought from you!

Where were you all these days dear Girija
and why were you so silent in the forum???

dear visalakshi ji,

my namaskars.

"The pain annuls and cancels our paapam and the happiness reduces our puNyam.
Do we want our paapams to get reduced or puNyams (if we have gathered any?)
"

ha ha ha... i should only ask arththanaareeswara, whether i had gathered punyam...... Yes. I also very staunchly believe that
the pain annuls and cancels our papam. (pona jenmaththil perum paavi pola naan; indha jenmathile pains pattu mudiyalai.......

"eththanaiyo piravi petru izhaithidum theemai
ellaam ippiravi ondru petru
aththanaiyum mudiththu vitten...."
 
கண்ணனும் நானும் :-
===============

ஆடிக் குடத்தடைய நான் ஒன்றும்
ஆதி சேஷன் இல்லையே !!!
ஆடும்போதே அசைய நான் ஒன்றும்
அழகு காளியன் இல்லையே !!!

அந்த பிஞ்சுப் பாத கண்ணன் என்
அகந்தை அழிக்க தலை மீது பாதம்
ஆடி வந்து வைத்திடுவானோ?
அற்புதமாய் குழல் ஊதிடுவானோ?

ஆர்ப்பரிக்கும் கடலலையாய் என்
ஆர்வம் அறியாதவனா கண்ணன் ?
ஆகமங்கள் புகழும் சின்ன சித்தனே !!
அறிவில் உறையும் அழகே ! அமுதே !!!

அன்றொரு நாள் யமுனா நதியினில்
ஆடினாயே கண்ணா கோபியருடன்
அந்த காட்சி என் மனதினில் விரிந்திட
அடியேனும் உன் பிருந்தாவனத்தில் வரவா?

ஆண்டாளை உன் அருகில் சேர்த்தாய்
அந்த மீராவின் பாடல் நுகர்ந்தாய்
அந்த பக்தர்கள் போலன்றி இழையும்
அற்ப புழுவாய் எங்கிலும் என்னையும் ???

**** ஆக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு)



 
அரங்கனும் நானும் :-
=====================
அரங்கன் என்னும் மாயவன்
அழகில் சிறந்த நல்லவன்
அழிவை அழிக்கும் வல்லவன்
ஆதரிக்கும் குணமே உள்ளவன்

அரங்கனை நேசித்த துலுக்க நாச்சியார்
அனுபொழுதும் அவனையே சிந்தித்தவள்
அரண்மனைக்குள் அவனைப் பொதிந்தவள்
அன்பால் அவனுள் பொதிந்தவள்

அவன் புறப்பட்ட உடன் தானும் அவனுடன்
அவன் அருளுக்காக அவன் அன்பிற்காக
அவனே சரண் என்று ஊர் விட்டு உறவு விட்டு
அவனையே அரவணைக்க அவனுக்காக !!!

ஆண்டாள், மீராவை போல அழகாக
அந்த துலுக்க நாச்சியாரும் தான்
அரங்கனை அன்புத் தூணில் நயமாக
ஆசையில் கட்டி வைத்தாளே !அருமை !!!


ஆற்ற வல்லான் அனைத்தும் காக்க வல்லான்
அருள் துணை ஆக உள்ளான் -நெஞ்சே
அமுது இருக்கையிலே வேறு விடம் எதற்கு?
அரங்கன் இருக்கையிலே வேறு யார் உனக்கு?

"அரங்கா !உன் மகிமை கண்டவர் யார் ??"

**** ஆக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு)



 
SO YOU ARE IMMERSED IN MUSIC, DANCE, CHOREOGRAPHY, BHAJANS, TEACHING ENGLISH/CHEMISTRY/COMPUTER/, WRITING ARTICLES AND ATTENDING CLASSES. :faint:

YOU SOUND AND SEEM TO BE TOO MUCH LIKE SOMEONE I KNOW

VERY WELL LIKE THE BACK OF MY OWN PALM!!!

WHERE IS THE VISALAKSHI AMMAN KOIL SITUATED - IF IT REALLY EXISTS IN COIMBATORE?

I AM WARNED BY MY INTUITION THAT THESE MANY COINCIDENCES CAN NEVER BE REAL.

THAT MEANS THINGS ARE NOT WHAT THEY ARE PROJECTED TO BE AND APPEAR TO BE!

I WILL LISTEN TO MY INNER VOICE AND MOVE ON WITH CAUTION.

ALSO ONE WHO IS PAINED IN REAL LIFE CAN NOT 'HA HA HA HA' SO MANY TIMES!!! :suspicious:
 
People give out useful clues unintentionally.

I got two clues...from ardhanaareeswara
and the reversed order in the user names.

I am Visalakshi Ramani not Ramani Visalakshi.
My sister is Raji Ram not Ram Raji!

Take care AND PLAY SAFE whoever you may be!!!
SUCH THO Bhgavaan jaane... Ham naheen jaane!!
 
.......... WHERE IS THE VISALAKSHI AMMAN KOIL SITUATED - IF IT REALLY EXISTS IN COIMBATORE? ...
Visalakshi Amman Kovil

Visalakshi Amman Kovil is in Madukkarai Coimbatore District. Tamil Nadu State in India. Visalakshi Amman Kovil

Pincode is
641042 ( Kovaipudur ) . Near by railway Stations are Madukarai Podanur Jn . It is in Coimbatore City.

Visalakshi Amman Kovil is geographically located at latitude 10 ° 56′0'' and longitude 10 ° 56′0''

Source:
Visalakshi Amman Kovil
 
SO YOU ARE IMMERSED IN MUSIC, DANCE, CHOREOGRAPHY, BHAJANS, TEACHING ENGLISH/CHEMISTRY/COMPUTER/, WRITING ARTICLES AND ATTENDING CLASSES. :faint:

YOU SOUND AND SEEM TO BE TOO MUCH LIKE SOMEONE I KNOW

VERY WELL LIKE THE BACK OF MY OWN PALM!!!

WHERE IS THE VISALAKSHI AMMAN KOIL SITUATED - IF IT REALLY EXISTS IN COIMBATORE?

I AM WARNED BY MY INTUITION THAT THESE MANY COINCIDENCES CAN NEVER BE REAL.

THAT MEANS THINGS ARE NOT WHAT THEY ARE PROJECTED TO BE AND APPEAR TO BE!

I WILL LISTEN TO MY INNER VOICE AND MOVE ON WITH CAUTION.

ALSO ONE WHO IS PAINED IN REAL LIFE CAN NOT 'HA HA HA HA' SO MANY TIMES!!! :suspicious:

RESPECTED visalakshi ji,

MY NAMASKARS. KINDLY CORRECT ME IF I AM WRONG....

today I stand Pained by your words.....WHY THIS SUDDEN ANGRINESS? WHAT ERROR DID I DO? DO YOU CONSIDER ME A FAKE OR WHAT?

YES JI... i too believe...."everything god knows and not humans".

yOUR WORDS :-
"ALSO ONE WHO IS PAINED IN REAL LIFE CAN NOT 'HA HA HA HA' SO MANY TIMES!!!"

i never tell lies.... yES. I AM PAINED IN MY REAL LIFE.....SORRY... THIS IS RAMACHANDRAN GIRIJA, (R.GIRIJA, PRINCIPAL, T.V.SEKHARAN MEMORIAL MATRICULATION HIGHER SECONDARY SCHOOL, KOVIAPUDUR....) I BELIEVE IN POSITIVE THINKING.... "VEEZHVADHU VETKAM ALLA, VEEZHNDHU KIDAPPADHU THAAN VETKAM." ENDUR NINAITHTHU, NAAN ORORU SIRU PADIYAAGA ENNAI NAANE UNDHI MUNNRUGIREN. I LAUGH AT MY OWN SILLY THINGS.... WHY NOT?? IS IT CRIME? WHY ONE SOULD NOT "HA HA HA" SO MANY TIMES??? IS THERE ANY RESTRICITON...? I LOVE NATURE.... I ,LIVE IN PRESENT.... SO I LAUGH..

THE VISALAKSHI AMMAN KOIL IS CLOSE TO MY SCHOOL AND RESIDENCE....

YOUR WORDS :-
I AM WARNED BY MY INTUITION THAT THESE MANY COINCIDENCES CAN NEVER BE REAL.

MY WORDS.....
WHAT COINCIDENCES DO YOU MEAN? DO YOU TRY TO IMPLY THAT I CAN'T BE DOIING ALL THESE?I DONT INSIST IN TELLING ANYONE ABOUT MY CREDENTIALS.... I AM A POOR BRAHMIN LADY (A WIDOW WITH A SINGLE SON STUDYIING IN XII STD. (SAME SCHOOL)... WITH FAITH ONLY IN GOD.... WHETHER YOU BELIEVE IT OR NOT...YOU CAN COME AND CHECK WHETHER THESE ARE TRUE.... NO OBJECTIONS....

I AM DOING MY pH.d IN ENGLISH. MY QUALIFICATION IS :- M.PHIL CSC, M.CA., M.SC., PSYCHOLOGY, M.A HISTORY, M.A. ENGLISH, B.SC CHEMISTRY AND B.ED., WITH SIX DIPLOMAS IN COMPUTER SCIENCE.


NAMBIKKAI VENDUM ELLORUKKUM.....

THANK YOU JI. I AM A LEARNER ALWAYS... PLEASE CORRECT ME IF I AM WRONG. I APOLOGISE, IF I HAVE WOUNDED YOU....

I GET HURT ALWAYS.... AND I WILL REBOUNCE FORM ALL MY HURTS.... SOMEHOW WITH THE GRACE OF LORD SIVA...
 
People give out useful clues unintentionally.

I got two clues...from ardhanaareeswara
and the reversed order in the user names.

I am Visalakshi Ramani not Ramani Visalakshi.
My sister is Raji Ram not Ram Raji!

Take care AND PLAY SAFE whoever you may be!!!
SUCH THO Bhgavaan jaane... Ham naheen jaane!!

i AM RAMACHANDRAN GIRIJA..... RAMACHANDRAN IS MY DAD'S NAME..... MY LATE HUSBAND'S NAME IS K.SANKARANAARAYANAN. I DIDNT ATTACH MY HUSBAND'S ANME WITH ME....

YOUR WORDS :-
Take care AND PLAY SAFE whoever you may be!!!
SUCH THO Bhgavaan jaane... Ham naheen jaane!!

THANK YOU VERY MUCH JI... FOR YOUR CAUTIONING WORDS.... (I EXIST AS RAAMCHANDRAN GIRIJA IN FACEBOOK. YOU CAN CHECK.... ) I LOST MY DAD ON JUNE 16TH, 2016... I LOVE MY DAD. HENCE I USE HIS NAME.... ANY OBJECTIONS?

WHAT TWO CLUES ARE YOU TLAKING BAOUT?

ARTHANAREESWARA? YES... HE IS MY FAVOURITE LORD SHIVA... I ADORE LORD SHIVA... THE PHILOSOPHY WHERE HE INSISTS SAKTHI IS MY BETTER HALF.... WHAT IS WRONG?

REVERSED ORDER OF NAME? I AM R.GIRIJA.... MY EXPANDED INITIAL IS RAMACHANDRAN GIRIJA MADAM....

THANK YOU JI..... SORRY I AM TOO DUMB TO GET YOUR TWO CLUES....

I AM GENUINE.... I AM A LADY..... I RESIDE IN COIMBATORE.... MY FEELINGS ARE GENUINE....
 
சிரிப்பு
=======
சிரிக்கக் கூடாது என்று
சிறு வயது முதலே
சின்னாபின்னமாக என்னை
சித்தி முதல் பலரும்

சிந்தித்து உரைத்து எடுத்து
சிதறியும் நான் அடங்கினேனா?
சில வேளைகளில் என்னை
சிந்தித்தால் எனக்கே சிரிப்பு.....

சிரித்தல் ஒரு பாவமா என்ன?
சிரிக்க வைக்கிறேன் என் மாணவர்களை
சிந்திக்க வைக்கிறேன் என் மாணவர்களை
சிரிக்க எனக்கு தெரிந்ததால் தானே?

சூறாவளியாய் வாழ்க்கை ஆகி விட்டால்
சூறைத் தேங்காயாய் நானும் உடைந்து
சிதிலங்களை பற்றியே சிந்தித்து
சீர்கெட்டு புலம்பத் தான் வேண்டுமா?

சில்லறைத் துன்பங்கள் இவை என்று
சிரிக்க மட்டுமே செய்தேன் செய்கிறேன்
சிந்திக்க மட்டுமே செய்யப் படித்தேன்
சிவனை மட்டுமே துதிக்க படித்தேன்


**** ஆக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு)




 
பெயர்
=======

பிறந்தது திருவனந்தபுரம் ஆகும்;
பெற்றோர் இட்ட முதற்பெயர்
பாட்டியின் நற்பெயர் "கோமதி" ஆகும்
பெயர் காரணம் திருநெல்வேலி மண்ணே !!

பெற்றோர் ஆசையாய் அழைத்த நற்பெயர்
பிறநத அன்றுமுதல் எனக்கு "அம்மு"
பெற்றோர் பதிவு செய்ய இட்ட பெயர்
பிறந்த தொட்டில் பெயர் "கிரிஜா"

பெற்றோர் பார்த்த வைத்த திருமணத்தில்
பெற்றோரின் மாப்பிள்ளையின் பெயர் 'சங்கர நாராயணன்"
பெற்றோர் குதூகலித்தனர் "கோமதி சங்கரநாராயணன்" என
பத்திரிக்கை பெயர் பார்த்து மகிழ்ந்தனரே !!

பக்திக்கு உரிய கோமதி அன்னை தீர்க்க சுமங்கலி !!!
பாவியான நான்?? மற்றவரின் பார்வையில் கேள்விக்குறி?
பாம்புகளை அணியும் சிவனே ஏ! என் சிவனே !!
பார்த்தாயா உன்பெயரை சொன்னதற்கும் எனக்கு கேலி??

பர்த்தாவின் பெயர் சேர்த்தல் பழக்கம் இல்லை எங்களுக்கு
பார்த்தால் அம்மாவின் பெயரோடு "லீலாவதி கிரிஜா" !!
பாவி எனக்கு தந்தையின் மீது உள்ள விசுவாசம்
பாசம் காரணம் என்றென்றும் நான் "ராமசந்திரன் கிரிஜா " !!

*** ஆக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு)

அழுதுக் கொண்டே இந்த கவிதை அரங்கேறுகிறது !!!!



 
ஈர்ப்பு :-
=======

ஈர்ப்பது இசை ; ஈர்க்கப்பட்டேன்
ஈர்ப்பது நடனம்; ஈர்க்கப்பட்டேன்
ஈர்ப்பது மொழி; ஈர்க்கப் பட்டேன்
ஈர்ப்பது இயற்கை; ஈர்க்கப் பட்டேன்

ஈர்த்தது தந்தையின் மொழி ஆர்வங்கள் !!
ஈந்தார் தமிழ், ஆங்கிலம்,மலையாளம்
ஈந்தார் ஹிந்தி, சமஸ்க்ரிதம்
ஈந்தார் வாழணும் என்னும் உத்வேகம்

"நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்"
நன்றாக பாடுவார் என் தந்தை ...!!!
"நம்மை தகர்க்க யார் முடிவு செய்தாலும்
நாம் தகரக் கூடாது" - தந்தையின் உபதேசம் !!

"சிரித்து பார்.... சோதனைகள் ஓடும்
சிரிக்காமல் அழுது பார் - உன்னை எப்போதும்
சிக்கல்களே நூல்கண்டுகளாய் துரத்தும்
சிக்கி விடுவாய் உன்னுடைய கழிவிரக்கத்தில்"
- தந்தையின் உபதேசம்

மலையாய் இருந்து என்னை ஒருசிறு
மடுவின் உயரத்தில் இருந்து உயர்த்தியவர்
மண்ணில் இன்று மறைந்து ஏழு மாதங்கள்
மானிடரே !!! ஜனவரி 21 அவர் பிறந்த நாள் !!!

வாழவும் மறந்தேன் ; என் நிலையில் இ ருந்து
தாழ்ந்து அழுதேன் ; சிரித்திடவும் மறந்தேன் தான்
வாழ சொல்லிக் கொடுத்தவருக்கு பிடிக்காதே என்றே
வாழும் வரை சிரிக்க முயற்சிக்கிறேன் !!!


**** ஆக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு)

(சந்துரு என்பது என் தந்தையின் வீட்டுப் பெயர்....)
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top