Jagatguru Sri Maha Periyava Messages - Page 15
Tamil Brahmins
Page 15 of 15 FirstFirst ... 51112131415
Results 141 to 145 of 145
 1. #141
  Join Date
  May 2017
  Location
  Chennai
  Posts
  543
  Downloads
  0
  Uploads
  0
  Thumbs Up/Down
  Received: 2/3
  Given: 7/17

  0 Not allowed! Not allowed!


  ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
  நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


  பெரியவா சரணம் !!


  யார் உன் குலதெய்வம்! குலதெய்வம் எதுன்னே தெரியாதா?

  பெரியவா விளக்கம்

  பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது.

  இருந்தும் அந்த விவசாயி, சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.

  பெரியவர் அவரிடம், குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார்.

  குலதெய்வமா… அப்படின்னா?” – திருப்பிக் கேட்டார் அவர்.

  சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”

  ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.

  உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?”

  ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.”

  அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.”

  ஏன் சாமி… அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா?”

  அப்படித்தான் வெச்சுக்கோயேன்…”

  என்ன சாமி நீங்க… ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”

  நான் அப்படிச் சொல்லவே இல்லையே!”

  அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!”


  காரணமாத்தான் சொல்றேன். ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். எனக்கு, பாத்திரமே கூட தேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?”

  அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா…

  அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?”

  நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.

  அவரும் ஒரு பத்து நாள் கழித்து, சாமி! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால, கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு வரேன்” என்றார்.

  சபாஷ்… அந்தக் கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்!

  Contd..../2
  Last edited by Falcon; 24-07-2017 at 08:16 PM.
  BE JUST AND FEAR NOT
 2. #142
  Join Date
  May 2017
  Location
  Chennai
  Posts
  543
  Downloads
  0
  Uploads
  0
  Thumbs Up/Down
  Received: 2/3
  Given: 7/17

  0 Not allowed! Not allowed!
  Contd...../2

  சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே… எதுவுமே சொல்லலியே?”

  அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன்.

  நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியை விட்டுடாதே!”

  அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.

  சாமி… நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது?” – என்று திரும்ப அவர் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். அது…?

  ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.

  அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

  பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

  அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.

  இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?” – பெரியவர் சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்!
  அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?

  ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.

  இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம்.

  இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”

  – பெரியவர் விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது.


  Source: https://swasthiktv.com/who-is-your-f...not-know-what/

  ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
  ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
  Last edited by Falcon; 24-07-2017 at 08:18 PM.
  BE JUST AND FEAR NOT
 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #143
  Join Date
  May 2017
  Location
  Chennai
  Posts
  543
  Downloads
  0
  Uploads
  0
  Thumbs Up/Down
  Received: 2/3
  Given: 7/17

  0 Not allowed! Not allowed!


  ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
  நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


  பெரியவா சரணம் !!

  பூந்தமல்லியில் இருந்த கண்பார்வையற்றோரின் பள்ளியிலிருந்து வந்த ஒரு ஆசிரியர் பெரியவாளிடம்,


  "அடுத்த ஞாயித்துகிழமை பள்ளி குழந்தைகளை பெரியவா தரிசனத்துக்கு அழைச்சிண்டு வரேன். அதுகளால பெரியவாளை தரிசனம் பண்ண முடியாது. அதுனால, பெரியவா அந்த குழந்தைகள்
  கிட்டே நாலு வார்த்தை பேசி ஆசீர்வாதம் பண்ணனும்"


  பெரியவா திருச்செவியால் கேட்டுகொண்டார்.


  அடுத்த ஞாயிறு அவர் அந்த குழந்தைகளோடு தனி பஸ்ஸில் வந்துவிட்டு, குழந்தைகளை வரிசையாக நிறுத்தினார்.


  உடனிருந்தவர்கள், "பெரியவா நேத்திலேர்ந்து காஷ்ட்ட மௌனம்" அவ்வளவுதான்!


  "ஐயோ இந்த குழந்தைகளுக்கு பெரியவாளை பாக்கத்தான் முடியாதே! நாலு வார்த்தை பேசினா சந்தோஷப்படுமேன்னு வந்தேனே! இவாளை ஏமாத்தின மகாப்பாவி ஆய்ட்டேனே!" என்று புலம்பினார்.


  பெரியவா வெளியே வந்தார். கிணத்துக்கு பக்கத்திலேயே மணை போடச்சொல்லி, குழந்தைகளை அழைத்து, ஒவ்வொருவராக ஊர், பேர், எப்படி பார்வை போச்சு, மாதிரி பொறுமையாக கேட்டு, ஒரு மணிநேரத்துக்கு மேல் அவர்களோடு இருந்து, பிரசாதமும் கொடுத்து அனுப்பி வைத்தார்.


  ஜனாதிபதி ஸ்ரீ கிரி, பிரதமர் திருமதி இந்திரா காந்தி இவர்கள் வந்தபோது கூட கலைக்காத மௌனத்தை, பார்வையற்ற குழந்தைகளுக்காக கலைத்த கருணை பெரியவாளுக்கே உரிய வாத்சல்யம்!  Source: MAHA PERIYAVA Public Group/Face Book

  ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
  ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
  BE JUST AND FEAR NOT
 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #144
  Join Date
  May 2017
  Location
  Chennai
  Posts
  543
  Downloads
  0
  Uploads
  0
  Thumbs Up/Down
  Received: 2/3
  Given: 7/17

  0 Not allowed! Not allowed!


  ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
  நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


  பெரியவா சரணம் !!

  சங்கடத்துக்கு பரிபூரணமா நிவர்த்தி அடைஞ்ச
  சம்பவம்.

  தம்பதிக்கு பரமாசார்யாகிட்டே ஏதோ சொல்லி தீர்வு
  கேட்கணும்னு கோரிக்கை இருந்தது. ஆனா, அவா
  ஆசார்யா முன்னால வந்து நின்னதும் எதுவும்
  சொல்றதுக்கு முன்னாலேயே குங்கும பிரசாதத்தைக்
  குடுத்து அவாளை அனுப்பிவிட்டார் ஆசார்யா. அதனால
  ரொம்பவே கவலையோட நகர்ந்த அவாகிட்டே மடத்து
  சிப்பந்தி ஒருத்தர் பெரியவாளோட காஷ்ட மௌனத்தைப்
  பத்தி சொல்லி,இன்னொரு நாள் மடத்துல இருக்கறச்சே
  வந்து பாருங்கோன்னு ஆறுதலா சொல்லி அனுப்பினார்.

  மறுபடியும் அதே தம்பதிகள் வேறொரு நாள் மடத்துக்கு
  வந்து,வரிசைல நின்ற அவாளோட முறை வந்தது.
  தன் முன்னால நின்ன அவாளை ஒருதரம் ஏற இறங்கப்
  பார்த்தார் ஆசார்யா. கைகளைக் குவிச்சு நமஸ்காரம்
  செஞ்ச அவா, தங்களோட குறையை சொல்ல நினைச்சு
  "பெரியவா எங்க.." அப்படின்னு ஆரம்பிச்சதுதான் தாமதம்
  சட்டுனு நிறுத்துங்கோங்கறமாதிரி கையைக் காட்டினார்
  பரமாசார்யா.


  என்னடா இது நம்ப பிரச்னைக்கு தீர்வே இல்லையோ?..
  சொல்றதுக்கு முன்னாலயே வேண்டாம்னு தடுக்கறாரே
  பெரியவா. காரணம் என்னவா இருக்கும்னு அவா திகைச்சு
  நின்னா.சுத்தி இருந்தவா, ஆசார்யா அவாளைத் தடுத்ததுக்குக்
  காரணம் என்னன்னு தெரிஞ்சுக்க ஆர்வப்பட்டா. ஆனா,
  இதெல்லாம் எதையும் கவனிக்காதவர் மாதிரி,
  "நீங்க ரெண்டுபேரும் இப்போ திரும்பிப் போங்கோ..
  தங்கத்தால சின்னதா ஒரு வேல் பண்ணி எடுத்துண்டு
  அப்புறம் இங்கே வாங்கோ!" அப்படின்னார், மகாபெரியவா.

  வந்தவாளுக்கு ஒரே குழப்பம்.'நாம சொல்லவந்ததை ஏன்
  பாதியிலேயே தடுத்தார்? ஒருவேளை அதுக்குத் தீர்வே
  இல்லையோ! போனதரம் மௌன்விரதம்னு பேசாமே
  இருந்துட்டார். இந்த தரம் இப்படி ஆயிடுத்து. ஏதாவது தெய்வ
  குத்தமா இருக்குமோ! எதுக்காக வேல் பண்ணி எடுத்துண்டு
  வரச் சொல்றார்னு புரியலை. சரி, தங்களோட கோரிக்கை
  என்னன்னு கேட்டுட்டு இதைச் சொல்லி இருந்தாலாவது
  அதுக்கான பரிகாரம்னு நினைச்சுக்கலாம். ஆனா, அதைக்
  கேட்டுக்காமலே சொல்றாரே..இது எதனால இருக்கும்?
  என்றெல்லாம் குழம்பினவா, சரி எல்லாம் தெய்வ சித்தம்.
  நாம போய் வேல் செஞ்சு எடுத்துண்டு வந்து பார்ப்போம்.

  அப்பவாவது கோரிக்கையை கேட்டுண்டு தீர்வு சொன்னார்னா
  போதும்'னு நினைச்சுண்டு புறப்பட்டா.

  பத்துப் பதினைஞ்சு நாள் கழிச்சு, பெரியவா சொன்ன மாதிரியே
  தங்கத்தால சின்னதா வேல் செஞ்சு எடுத்துண்டு வந்தா அந்தத்
  தம்பதி. வரிசையில் நின்ற அவாளைப் பார்த்த பெரியவா, கிட்டே
  கூட்டிண்டு வரும்படி ஒரு சீடனை அனுப்பினார்.

  "பெரியவா நீங்க சொன்னமாதிரியே வேல் செஞ்சு எடுத்துண்டு
  வந்துட்டோம். எங்களுக்கு ஒரு...!" தம்பதிகள் முடிக்குமுன்
  இந்தமுறையும் அவாளை எதுவும் சொல்ல வேண்டாம்கறமாதிரி
  கையைக் காட்டினார், பரமாசார்யா.

  "இந்த வேலை உங்க அகத்துல பூஜை அறையில் வைச்சு தினமும்
  பசும்பாலால் அபிஷேகம் பண்ணு. அதோட வாரம் ஒரு தரம்
  செம்பருத்திப் பூவால முருகன் நாமாவளியைச் சொல்லி அர்ச்சனை
  செஞ்சுண்டே வா!" சொல்லிட்டு கொஞ்சம் நிறுத்தினார் ஆசார்யா.

  'நம்ப கோரிக்கை என்னன்னே கேட்டுக்காம இவரா ஏதோ சொல்றார்.

  ஒருவேளை நாம சொல்ல வந்த விஷயத்துக்குத் தீர்வே கிடையாதோ
  இல்லை இப்போ இவர் சொல்றது ஏதாவது பரிகாரமா இருக்குமோ?
  ஒண்ணும் புரியாம பிரசாதத்தை வாங்கிண்டு புறப்படலாம்னு
  நினைச்சுண்டு பவ்யமா கையை நீட்டினா ரெண்டுபேரும்.

  "என்ன,முக்கியமான விஷயத்தை சொல்லி முடிக்கறதுக்குள்ளே
  அவசரமா? இன்னும் நான் சொல்லி முடிக்கலை. அதையும்
  கேட்டுட்டுப் புறப்படுங்கோ. வேலுக்கு தினமும் பால் அபிஷேகம்
  பண்ணச் சொன்னேன் இல்லையா? அந்தப் பாலையும் அர்ச்சனை
  பண்ணின அப்புறம் செம்பருத்திப் பூவையும் உன்னோட மாமியாருக்கு
  குடுத்துடு. அவாளை தெனமும் ரெண்டு மூணு செம்பருத்திப் பூவை
  சாப்டுட்டு அந்தப் பாலையும் குடிக்கச் சொல்லு. அவாளோட
  சிரமத்துக்கு அதுதான் தீர்வு" பரமாசார்யா சொல்லச் சொல்ல,
  அப்படியே திகைச்சுப் போய் நின்னா, அந்தத் தம்பதி. அவா

  ரெண்டுபேரோட உடம்பும் சிலிர்த்துண்டு அந்த ஆச்சரியத்துல லேசா
  நடுங்கினதுகூட அங்கே இருந்தவா எல்லாருக்கும் தெரிஞ்சுது.
  கொஞ்சநாழி கழிச்சு,சுயபிரக்ஞைக்கு வந்தவா, ஆசார்யாளை
  நமஸ்காரம் பண்ணினா. சாத்துக்குடி பழம் ஒண்ணைத் தந்து
  அவாளை ஆசிர்வாதம் பண்ணினார் ஆசார்யா.

  வரிசையில் நின்ற பலரும் அவளுடைய திகைப்புக்கு காரணம் கேட்க;
  "என்னோட மாமியாருக்கு ரெண்டு மூணு வருஷமாவே அடிக்கடி
  வயத்துவலி வந்து பாடாப் படுத்திண்டு இருந்தது. சமீபகாலமா
  அந்த வலி அவாளுக்கு நிரந்தரமாவே ஆயிடுத்து. பார்க்காத
  வைத்தியம் இல்லை. வேண்டாத சுவாமி இல்லை. ஆனாலும்
  தினமும் அவா துடிக்கறதைப் பார்க்கறச்சே எனக்கே தாள முடியலை.

  தாயாரோட கஷ்டத்தைப் பார்க்க சகிக்காம இவரும் வேதனைப்
  பட்டுண்டு இருக்கார்.பெரியவாகிட்டே சொன்னா, தீர்வு கிடைக்கும்னு
  தெரிஞ்சவா சொன்னா. அதான் வந்தோம். பரமாசார்யா எங்களைப்
  பேசவிடாம தடுத்தப்போ,மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது!. ஆனா
  இப்போ.." பேசமுடியாம நாக்கு தழுதழுக்க கொஞ்சம் நிறுத்தினா.

  "இப்போ நாங்க எதையும் சொல்லாம அவராவே என் மாமியாரோட
  பிரச்னைக்கு தீர்வு சொல்லியிருக்கார். இப்படிக் கண்ணுக்கு முன்னால
  நடமாடற தெய்வத்தை, நாம சொன்னதைக் கேட்கலையேன்னு தப்பா
  நினைச்சுட்டோமேங்கறதை நினைச்சா அழுகை அழுகையா வருது!"
  சொல்லி முடிச்சா. அப்புறம் பெரியவா இருந்த திசைப்பக்கமா திரும்பி
  நமஸ்காரம் செஞ்சுட்டு புறப்பட்டா.

  கொஞ்ச நாள் கழிச்சு அந்தத் தம்பதி திரும்ப வந்தா, "பெரியவா உங்க
  அனுகிரகத்தால என் மாமியாரோட வயத்து வலி பரிபூரணமா
  குணமாயிடுத்து"ன்னு பெரியவாகிட்டே சொன்னா அந்தப் பெண்மணி.
  "இதெல்லாம் என்னோட வேலை இல்லை. எல்லாம் பரமேஸ்வரனோட
  கிருபை. முருகனை நினைச்சுண்டு நீ பண்ணின பூஜையோட பலன்!"
  அப்படின்னு சொன்ன பரமாசார்யா,அவாளை பரிபூரண சௌக்யமா
  இருங்கோன்னு ஆசிர்வாதம் செஞ்சு அனுப்பினார்

  Source: MAHA PERIYAVA Public Group/Face Book

  ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
  ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
  BE JUST AND FEAR NOT
 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 8. #145
  Join Date
  May 2017
  Location
  Chennai
  Posts
  543
  Downloads
  0
  Uploads
  0
  Thumbs Up/Down
  Received: 2/3
  Given: 7/17

  0 Not allowed! Not allowed!
  ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
  நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


  பெரியவா சரணம் !!


  Experiences with Maha Periyava: No hot water for Me today!


  It was a cold morning in the month of Karthigai (Nov-Dec). One of the shishya's was about to light the 'Kottai aduppu' (traditional stove).

  Periyava called him and said “I do not need hot water today. So, don't light the kottai aduppu”. The shishya thought ‘Ok, but how can we make 'neivedhyam (food offering for Gods)?’


  Maha Swami said, “Use the 'irumbu aduppu' (iron stove)”. It was about 7 am in the morning. There was a sound ' meaow'. The shishya was scared that the cat might lick the 'neivedhyam'. He rushed searching for the cat. He found it inside the 'kottai aduppu' with 4 kittens!!


  He shuddered at the thought of what would have happened had he lit the kottai aduppu. Now, he could understand Periyava's order, “No hot water for me today”. The kittens were unable to bear the cold and so the cat had put the kittens inside the 'aduppu'.


  Ekam Sath. Not mere words. Uyir thathuvam.


  Source: MAHA PERIYAVA Public Group/Face Book

  ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
  ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
  BE JUST AND FEAR NOT
 9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
Page 15 of 15 FirstFirst ... 51112131415

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •