• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அழுதால் கொஞ்சம் நிம்மதி!

Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
அழுதால் கொஞ்சம் நிம்மதி!

அழுதால் கொஞ்சம் நிம்மதி!

அழுகை என்பது மனிதர்களின் கூடப்பிறந்த குணங்களில் ஒன்று. அழுது கொண்டே பிறக்கிறோம். அழுதுகொண்டே வாழ்கிறோம். அழுதது போதுமென்று அடங்குகிற போது அழுதே நம்மை அனுப்பி வைக்கிறது நமது உறவும் நட்பும். அழுவதென்னவோ கோழைத்தனமென்று தவறான கருத்து நம்மிடத்தில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆண்கள் அழலாமா? என்றுகூட நம்மவர்கள் கேட்பதுண்டு. அழுவது கோழைத்தனம் அல்ல. அழுகை என்பது உணர்வுகளின் வெளிப்பாடு. அதை வார்த்தைகளற்ற உணர்வின் மொழி என்றும் கூறுவதுண்டு.

மகிழ்ச்சியாக இருந்தாலும், மனவருத்தமாக இருந்தாலும், வலியாக இருந்தாலும் அது அழுகையால் வெளிப்பட்டுவிடும். வெளிப்படாமல் மனதில் அழுத்தி வைக்கப்பட்டால் அது மன இறுக்கத்தையும் மனநலக்குறைவையும் ஏற்படுத்திவிடும். பெரும்பாலும் மனநோயாளிகள் அழுவதில்லை. அதிகமாக சிரிப்பார்கள் அல்லது அமைதியாக இருப்பார்கள். நலமாக இருப்பவர்களுக்குத்தான் அழுகை வரும். அழுதுகொண்டே பிறக்கிற குழந்தைகள்தான் ஆரோக்கியமான குழந்தைகள்.

முதல் மொழி : குழந்தை பிறக்கிற போது அதற்கு மொழி கிடையாது. ஆனாலும் அது தாயிடமும் பிறரிடமும் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். பசிக்கிறபோது பால் கேட்க வேண்டும்; வலிக்கிறபோது வெளியே சொல்ல வேண்டும். அதற்காக இறைவன் குழந்தைகளுக்கு கொடுத்திருக்கிற முதல் மொழியே அழுகைதான். துன்பத்தை அழுகை வெளிப்படுத்துவதுபோல ஆனந்த மேலீட்டையும் வெளிக்காட்ட உதவுகிறது. ஆனந்தக்கண்ணீர் என்று அதை அழைக்கிறோம். போட்டிகளில் பரிசுகள் பெறுகிற போதும், கலைஞர்கள் விருது பெறுகிற போதும் உணர்ச்சி வசப்படும் வெற்றியாளர்கள் ஆனந்தக் கண்ணீர் வார்ப்பதையும், பேசமுடியாமல் தவிப்பதையும் நாம் பார்த்திருப்போம்.

ஆனந்த கண்ணீர் : பிரிவுத்துயரம் அழவைப்பதைப் போலவே சேரும்போதும் அழத்தோன்றுவது மரபு. இந்த மெல்லிய உணர்வையும், மகத்தான மகிழ்வையும் கண்ணதாசன் அழகாக ஒரு திரைப்படப்பாடலில் நமக்கு தருவார். “பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி” என்று. இப்போதும்நாம் நீண்ட நாட்களாக வெளியூரில் தங்கியிருந்து வீடு திரும்பும் பிள்ளைகளை ஆரத்தழுவி வரவேற்கிற பெற்றோர்கள் ஆனந்தக் கண்ணீர் வார்ப்பதைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். அவர்களெல்லாம் கோழைகள் என்றா அர்த்தம்?

Read more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=1561985
 
My dear friend Sri Bala, this is your friend A.Srinivasan of Ordnance Factories. I always read all topics being written almost continuously, that too on varied/ useful Topics. Also, you are projecting the much needed spiritual aspects in the form of narration & the Shlokas of Gods/ Godesses.
Your service, esp. to Sr,. citizen Brahmins will surely be Blessed by the Almighty.
Sincerely,
A.Srinivasan ( Rishikesan )
 
Dear Rishikesan Ji,

Thanks for the compliments.

I am just trying to provide variety to the members. And such postings of yours really serves as a tonic.

Thank you so much.

I pray the Almighty to bless you and members of your family with all rich gifts of good health, happiness, prosperity and long life in abundant measure.

Regards
 
Last edited by a moderator:
அழுதால் கொஞ்சம் நிம்மதி!

இந்த மெல்லிய உணர்வையும், மகத்தான மகிழ்வையும் கண்ணதாசன் அழகாக ஒரு திரைப்படப்பாடலில் நமக்கு தருவார். “பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி” என்று. இப்போதும்நாம் நீண்ட நாட்களாக வெளியூரில் தங்கியிருந்து வீடு திரும்பும் பிள்ளைகளை ஆரத்தழுவி வரவேற்கிற பெற்றோர்கள் ஆனந்தக் கண்ணீர் வார்ப்பதைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். அவர்களெல்லாம் கோழைகள் என்றா அர்த்தம்?

Read more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=1561985

That song is from Bhimsing's super hit film PALUM PAZHAMUM and probably P Susheel's best solo song - KADAL SIRAGAI KATRINIL VIRITHU.
 
அழுதால் கொஞ்சம் நிம்மதி !

Moreover, ................ அழுகை ..........gives a healing effect to mind and body.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top