• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நெய் தீபம் எனும் பெயரில் பொய் தீபம்

  • Thread starter V.Balasubramani
  • Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
நெய் தீபம் எனும் பெயரில் பொய் தீபம்

Story of the temple Naivilakku

நெய் தீபம் எனும் பெயரில் பொய் தீபம் – ஆலயங்களில் நடக்கும் நெய்தீப ஊழல் …..

ஆலயங்களில், அறநிலையத்துறையின் அனுமதியோடு, ஏலம் மூலம் நிபந்தனையின் பேரில், வியாபார நோக்கத்தில் விற்கப்படும், போலியான

நெய் விளக்குகள், அதன் வியாபார நுணுக்கங்கள் பற்றிய ஒரு பதிவு இது …

இன்று ஆலயங்களில் விற்கப்படும் நெய் விளக்கு தயாராகும் முறை பற்றி பார்ப்போம்:

அந்த விளக்குகளில் நிரப்பப்படும் “நெய்” போன்ற நிறம், தோற்றம் கொண்ட திடமான “பசை”யானது, சைவ மற்றும் அசைவ உணவகங்களில் உபயோகப்படுத்தப்பட்ட, எண்ணைய்களை இலவசமாகவோ, மிகக் குறைந்த விலையிலோ வாங்கி, அதை வடிகட்டி, மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்து, அதில் மரவள்ளிக்கிழங்கு மாவு, டால்டா, மெழுகு மற்றும் பசைமாவு, மஞ்சள் நிறத்திற்காக வண்ணப் பொடியினை கலந்து விளக்குகளில் அடைத்து,”நெய் விளக்கு” என்று, பொய் சொல்லி, பொய்யான “பசை விளக்கினை” பொது மக்களின் பணத்தினை குறிவைத்து விற்பனை செய்து, கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கின்றார்கள் …

முதலில் இந்த கடைகளில் உள்ள நெய்விளக்குகளை ஒருநாளாவது முகர்ந்து பார்த்து இருக்கின்றீர்களா? ஒரு நெய் விளக்கு” 3 ரூபாயில்” ஏற்ற முடியுமா?

இன்றைய நாளில், ஒரு கிலோ “தூய பசு நெய்யின்” விலை 1 கிலோ, 450 முதல் 550 ரூபாய் வரை. ஒரு கிலோ பசு நெய்யில், அதிகபட்சமாக 75 விளக்குகளை ஏற்றுவதாக வைத்துக் கொண்டாலும் ,விளக்கு மற்றும் திரி உள்பட குறைந்தது 6.50 ரூபாய் செலவாகும். ஆனால் 10 ரூபாய்க்கு 3 நெய் விளக்கு எப்படி,ஆலயங்களில் இவர்களால் விற்கப்படுகிறது?

உண்மையான பசு நெய் கொண்டு ,ஏற்றப்படும் விளக்கின் ஒளி,ஒரே சீராக வெள்ளை ஒளியாக, நறுமணத்தோடு இருக்கும் .அந்த ஒளி வெள்ளத்தில், அந்த இடத்தில் உள்ள காற்று தூய்மையாகி, பிராண வாயு சுத்தமாக கிடைக்கும்.

ஆனால் இந்தமாதிரி,தரமற்ற “பசை விளக்குகள்” சரிவர எறிவதும் இல்லை, அதோடு ஒருவித நாற்றமும் அடிக்கிறது, வருடம் முழுவதும் கொளுத்தும் 100 டிகிரி வெய்யிலில் ,நமது உடம்பே உருகி விடும்போல் இருக்கின்ற நிலையில், இந்த “பசை விளக்குகள்” அக்னி வெய்யிலில் கூட உருகாமல், கல்லுமாதிரி இருப்பதை கவனியுங்கள்.

முன்பு எல்லாம் மக்கள் தங்களின் வீடுகளில், பசுவினை வளர்த்து, அதன் பாலில் இருந்து, தயிர், வெண்ணை, நெய் முதலானவற்றை ஆலயங்களில் உள்ள இறைவனுக்கு உபயோகப் படுத்தினார்கள். .பின்னர் கால ஓட்டத்தின் காரணமாக, கடைகளில் இருந்து “வெண்ணை” வாங்கி காய்ச்சி, உருக்கி ,அதில் இருந்து நெய்யை உபயோகப்படுத்தினார்கள், பின்னர் கடைகளில் “பசு நெய்” வாங்கி விளக்கு ஏற்றினார்கள்.. நாள்பட பசு நெய் என்பது மறைந்து, பல வண்ண டப்பாக்களில், பல வித பெயர்களில் கடைகளில் விற்கப்படுகின்ற

“நெய்யினைக்” கொண்டு விளக்கேற்றினார்கள். ஆனால் தற்பொழுது ,நெய் வாங்கி விளக்கு ஏற்றுவதை மறந்து, சோம்பலின் காரணமாகவும், வசதியின் பொருட்டும், தற்பொழுது ஆலயங்களில், “நெய் தீபம்” என்ற பெயரில் விற்கப்படும், “பசை விளக்குகளை ” வாங்கி, பயபக்தியுடன் இறைவனுக்கு விளக்கேற்றி வழிபடுகின்றனர்

பக்தர்களே, நீங்கள் கோயில் வழிபாட்டிற்கென்றே விளக்கு, நெய், நல்லெண்ணெய், திரி, தீப்பெட்டி, கை துடைக்க துணி, விபூதி, குங்குமம் போட்டு கொள்ள zip lock கவர்கள் முதலிவை கொண்ட ஒரு “சிறிய கோயில் பை” வைத்திருந்து எப்போது எந்த கோயிலுக்கு சென்றாலும் அதை எடுத்துச் சென்று உபயோகியுங்கள். அதுதான் சிறந்தது, மிகவும் பலனளிக்க கூடியது .

அதை விட்டுவிட்டு, இந்த மாதிரியான கோயிலின் உள்ளே கடைவிரித்து ஏமாற்றுகின்ற போலி வியாபாரிகளின், கொள்ளையடிக்கும் நோக்கத்திற்கு, பலியாகி, அவன் விற்கும் “பசை விளக்கினை” நெய் விளக்கு என்ற பெயரில், விலை கொடுத்து வாங்கி, கோயிலில் ஏற்றிவிட்டு, விளக்கு ஏற்றும்போது கைகளில் பட்டுவிட்ட, நாற்றம் பிடித்த “பசையினை” கோயில் தூண்களில் தடவி கோயிலையும் நாறடித்துவிட்டு போவது அல்ல பக்தி என்பதை நினைவில் கொள்ளுங்கள், நாம் கோயிலுக்கு செல்வதே பாவங்களை தொலைக்கத்தான். அப்படி இருக்க இந்தமாதிரி போலியான .சாஸ்திர விரோதமான ,”பொய் விளக்குகளை” வாங்கி, மேலும் மேலும் பாவ செயல்களை செய்ய வேண்டாம்.

அவன் ஏமாற்றினால் அவனுக்கு ஆண்டவன் தண்டனை கொடுப்பான் என்று ,தவறு செய்பவனின் செயலுக்கு நியாயம் கற்ப்பிக்கும் சிலரும் இருக்க கூடும் ,அவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் .நம்முடைய இயலாமை, சோம்பேறித்தனம், மற்றும் பணத்தினை கொண்டு அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம் என்ற தவறான சிந்தனை ஒன்றே இன்று ஆலயங்களில் கூட ,அநியாயங்கள் அளவின்றி நடைபெறக் காரணமாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்…

மேற்கூறிய அனைத்து விவரங்களும் நல்லெண்ணெய் விளக்கேற்றுதலுக்கும் பொருந்தும்..

Courtesy: Subramanian Ramachandran/ Face book
 
Bala Sir, Good post! Thanks for highlighting this fraud! Let us not fall prey to this & cheat God henceforth!
 
I have heard that even பூமாலை sold near the temple gates are not made out of fresh பூ - They are already used மாலை to decorate deadbodies - and are resold!
 
I have heard that even பூமாலை sold near the temple gates are not made out of fresh பூ - They are already used மாலை to decorate deadbodies - and are resold!

JJ Ji,

I have also heard about this. But my mind fails to accept that these shops which are located under the very nose of such temples for years together will involve in such questionable practices.

May be there are some blacksheeps.

And there may be few who may think that 'அவன் ஏமாற்றினால் அவனுக்கு ஆண்டவன் தண்டனை கொடுப்பான் என்று ,தவறு செய்பவனின் செயலுக்கு நியாயம் கற்ப்பிக்கும் சிலரும் இருக்க கூடும் ,அவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் .நம்முடைய இயலாமை, சோம்பேறித்தனம், மற்றும் பணத்தினை கொண்டு அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம் என்ற தவறான சிந்தனை ஒன்றே இன்று ஆலயங்களில் கூட ,அநியாயங்கள் அளவின்றி நடைபெறக் காரணமாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்…

But such cases if established with sufficient proof attracts IPC I believe.
 
Last edited by a moderator:
There are many practices done in symbolic way. It is the mind that should accept it. Is not it enough to "dhyaan" paramaatma in mind? We will all graduate slowly but surely.
 
This sort of cheating in the name of God faith exists throughout Tamilnadu. I came to know in some famous temples garlands given by devotees are re sent to garland shops through servants of the temple for sale again.What To say and what not to say
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top