• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வெஜிடபிள் ஆம்லெட்

Status
Not open for further replies.
வெஜிடபிள் ஆம்லெட்

வெஜிடபிள் ஆம்லெட்..
தேவையானவை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், முழு கோதுமை - தலா 50 கிராம், பச்சைமிளகாய் - 2, பெரிய வெங்காயம் - 1, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு - சிறிதளவு.

செய்முறை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், கோதுமை ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து, ரவை போல அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், தண்ணீர்விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன், நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு சோத்து, ஆம்லெட் போல தோசைக்கல்லில் போட்டு எடுக்க வேண்டும்.
பலன்கள்: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, முந்திரி அனைத்துமே புரதச்சத்து நிறைந்தவை. மக்காச்சோளம், முழு கோதுமை போன்றவற்றில் இருந்து நார்ச்சத்து கிடைக்கிறது. பச்சைமிளகாய்,பெரிய வெங்காயம், கறிவேப்பிலை போன்றவற்றில் இருந்து நுண் ஊட்டச்சத்துக்களும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் கிடைக்கின்றன.
12832323_995973993826560_8818538201653727379_n.jpg



Source. Dr.Vikatan
 
இது என்ன வினோதமான பெயர்? :confused:

ஆம்லெட் என்பது முட்டை தோசை ஆகும்.

இங்கு கொடுத்த பண்டத்தில் வெங்காயம் தவிர வேறு காய்கறிகளும் இல்லை.

அப்புறம் எப்படி வெஜிடபிள் ஆம்லெட்?

'நவரத்ன அடை' என நாமகரணம் செய்யலாமே!
icon3.png
 
தாராளமாக அப்படியே 'நவரத்ன அடை " என்று நாம் பெயரை மாற்றிவிடலாம்.நவரத்ன அடை என்கிறபோதே மிக ருசியாக இருக்கும் .
 
தாராளமாக அப்படியே 'நவரத்ன அடை " என்று நாம் பெயரை மாற்றிவிடலாம்.நவரத்ன அடை என்கிறபோதே மிக ருசியாக இருக்கும் .
:)
 
ஆமாம் அடைக்கும் ஆம்லெட்டுக்கும் என்ன வித்யாசம்.?
 
ஆமாம் அடைக்கும் ஆம்லெட்டுக்கும் என்ன வித்யாசம்.?
'Adai' is made from roughly ground batter.

And wiki defines omelette like this:


In cuisine, an omelette or omelet is a dish made from beaten eggs quickly cooked with butter or oil in a frying pan.

It is quite common for the omelette to be folded around a filling such as cheese, chives, vegetables, meat (often ham and/

or bacon), or some combination of the above. To obtain a fluffy texture, whole eggs or sometimes only egg whites are beaten

with a small amount of milk or cream, or even water, the idea being to have "bubbles" of water vapour trapped within the

rapidly cooked egg.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top