• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மழை வெள்ள பாதிப்புகளும் குற்றம் குறைகளு&

Status
Not open for further replies.
மழை வெள்ள பாதிப்புகளும் குற்றம் குறைகளு&

சமீபத்திய பெருமழை வெள்ளச்சேதங்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் அதிகம் என்றும், முன்னெச்சரிக்கை வழங்கப்படவில்லை என்றும், மேலிட உத்தரவுக்காக காத்திருந்ததில் கால விரயம் ஏற்பட்டதாகவும், நிவாரணப்பணிகளை துவக்குவதில் தாமதம் இருந்ததாகவும் பலவேறு குற்றச்சாட்டுகள் விவாதிக்கப் படுகின்றன. அதுபற்றி விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவுக்கு வருவது நம்மைப் போன்ற நடுநிலையாளர்களின் கடமை.

1. கூகிள் உதவியுடன் செம்பரம்பாக்கம் ஏரியின் தேதி வாரியான தண்ணீர் இருப்பு, முழுக் கொள்ளளவு, நீர் வரத்து, நீர் வெளியேற்றம், அன்றைய தேதியில் பெய்த மழையளவு ஆகியவற்றை காண்க. நவம்பர் முதல் தேதி, அநேகமாக வற்றிய நிலையில் இருந்த ஏரியில், தண்ணீரை சேமிக்க வேண்டிய கட்டாயத்திலும், அதே நேரத்தில் பாதுகாப்பான அளவு மட்டுமே நீரைத் தேக்கிவைக்கவேண்டும் என்ற விதிக்கு உட்பட்டும், தினசரி நீர் வெளியேற்றம் நிகழ்ந்துள்ளது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

2. டிசம்பர் முதல் தேதி மழையினாலும், தகவல் தொடர்பு (மின்சாரம், டெலிபோன், மொபைல் சேவை) பாதிப்பாலும் முன்னெச்சரிக்கை பெரும்பாலான மக்களை சென்றடையவில்லை என்பது உண்மையே. நான் வசிக்கும் அடையாறு, அருகிலுள்ள கோட்டூர்புரம் பகுதிகளில், காவல்துறை மற்றும் ரெவின்யு துறை அதிகாரிகள் கரையோர மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த மிகுந்த அக்கறை காட்டினர். எனினும் தரைத்தள மக்கள் மட்டுமே இதற்கு இணங்கினர். இத்தகைய சோதனையான சூழ்நிலையில் அரசு அதிகாரிகள் திறமையாகவும், பொறுப்புணர்வுடனும் செயல்பட்டதை நான் நேரில் கண்டேன்.

3. மேலிட உத்தவுக்காக காத்திருந்ததில் கால விரயம் ஏற்பட்டது என்பது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. கடலூர் மழைவெள்ளத்தின் போதே, மாவட்டக் கலெக்டர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட, பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டதை எல்லாரும் அறிவர். இதன் நோக்கம் அத்யாவசியமான அவசர முடிவுகள் எடுப்பதில் எந்த காலவிரையமும் ஏற்படக்கூடாது என்பதே. திரு ககன்தீப் பேடி, ஏற்கனவே தானே புயல் சமயத்தில் பணியாற்றிய கடலூருக்கு அனுப்பப்பட்டு பணிகளை திறம்பட நடத்தியதை நாமெல்லாரும் அறிவோம். மூத்த அமைச்சர்கள் ஏராளமான பணிகளை நேரில் சென்று துரிதப் படுத்தியதையும் எல்லா ஊடகங்களும் தெரிவித்தன.

சன் டி.வி., கலைஞர் டி.வி., ஜெயா டி.வி. ஆகியவற்றில் செய்திகள் சற்று மிகைப்படுத்தி சொல்லப்பட்டது உண்மை. சில டி.வி. சானல்கள் (பாலிமர் செய்திகள், தந்தி டி.வி., நியூஸ் 7 தமிழ் முதலியவை) பாரபட்சமின்றி செய்திகளை அளித்தன.

இரவு பகல் பாராது பணியாற்றிய காவலர்கள், போக்குவரத்து காவலர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், மின்சாரத்துறை அலுவலர்கள், தகவல் தொடர்புத்துறை அலுவலர்கள், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தியாக உள்ளம் கொண்ட இளைஞர்கள், திரைப்பட கலைஞர்கள், அனைத்து அரசியல் கட்சிகள் அனைவருக்கும் பொதுமக்களாகிய நாம் கடமைப் பட்டுள்ளோம்.

டிசம்பர் நான்கு முதல் நான்கு நாட்களுக்கு இலவச பேருந்துப் பயண சலுகை, நிவாரண முகாம்களில் தங்கியிருந்த லட்சக் கணக்கான மக்களுக்கு சுடச்சுட உணவு, மருத்துவ உதவி, போர்வை ஆகியவை தரப்பட்டது நிறைவாக இருந்தன. குறுகிய காலத்தில், பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.முதல்வர் செல்வி ஜெயலலிதா, இயற்கைப் பேரிடரை சமாளிப்பதில் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். தயவு தாட்சணியமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றல், அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்படல், வடிகால்கள் செப்பனிடப்படல், தரமான சாலைகள் அமைத்தல் ஆகியவை அவசரமாக செய்யப்பட வேண்டும்.

இந்த இயற்கை பேரிடர் திறமையான அதிகாரிகளையும் (விக்ரம் கபூர், சைலேந்திரபாபு, கஜலக்ஷ்மி, சுந்தரவல்லி, அமுதா, சுரேஷ்குமார், ககன்தீப் பேடி, சாய்குமார்), தியாக மனப்பான்மை கொண்ட நல்லவர்களையும் (ஆர்.ஜே.பாலாஜி, சித்தார்த், இளைய ராஜா மற்றும் எண்ணிலடங்கா இளைஞர் பட்டாளத்தையும்) காட்டியுள்ளது. குறைகள் சில இருப்பினும், மொத்தத்தில் தமிழகத்துக்கு சபாஷ் தான். நம் பங்கிற்கு, இறையருளை வேண்டி விரைவில் அனைவரும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துவோம்.
 
It is widely appreciated that NGOs,volunteers,social organisations etc. have did a lot in the hour of distress.
 
Last edited:
It is the duty of the fourth estate to highlight the gaps..However not everyone believes what Sun & Kalaignar TV say...But when the going is tough these make it tougher as an Opposition channel!
 
Excellent objective post by R. Sampathkumaranji.

Good sabash to officials of tamil nadu. social activists and defence forces who have put chennai back on its wheels.

I am sure Tamilnadu people will remember these people for their selfless work and dedication
 
hi

there are many volunteers behind the scene...young muslims/christian organisations did wellll....many came from other states

like karnataka youngesters tooo...many nice souls worked without any expectations.....kudos to everyone...
 
கனமழை பாதிப்பு: மனிதநேயத்திற்கு நன்றி சொல்லும் தூரிகை!

'நூறாண்டுகள் இல்லாத மழை' என்ற பீதியான அறிமுகத்துடன் தமிழகத்தை தடுமாறச்செய்துவிட்டது கடந்த வாரத்தில் பெய்த கனமழை. அதைத்தொடர்ந்த வெள்ளத்தினால் இன்னமும் மக்கள் தங்கள் பழைய நிலைக்கு திரும்ப முடியாமல் திணறி வருகின்றனர்.



drawing%20600%2011.jpg




ஓய்வெடுத்துக்கொண்ட மழையால் இப்போதுதான் லேசான நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றனர் தமிழக மக்கள்.

Read more at: http://www.vikatan.com/news/tamilnadu/56374-artist-ap-shreethars-paintings-regarding-chennai.art
 
மழை வெள்ள பாதிப்புகளும் குற்றம் குறைகளு&

அன்பர் திரு ரங்காச்சாரி சம்பத்குமரன் அவர்கள் மிக நேர்த்தியான முறையில் விருப்பு வெறுப்பின்றி சென்னையின் வரலாறு காணாத மழையின் பேரிடர் பற்றிய விவரங்களையும் நிவாரண பணிகளை அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களும் எவ்வாறு இரவு பகல் பார்க்காமல் செய்து வந்தார்கள் என்று விவரமாக கூறியிருப்பது பாராட்டத்தக்கது .

ப்ரஹ்மண்யன்
பெங்களூரு.
 
Last night, in Thanthi TV, I saw one man, looking like a BPL person, describing how all these 'high' talks about நிவாரண முகாம்கள், aid given, etc., are bogus and how supplies diverted by the rich and powerful for their personal use and the poor people have been left in the lurch, not even high and dry but low and in dirty cesspools of water! No takers for this, and everyone seems happy to self congratulate as true arm-chair, geriatric intellectuals!
 
Poor people require rehabilitation more than relief.

It is said that in dalit hamlets in cuddalore could not get timely relief due to upper castes stopping relief materials to that place, It was a small pocket in two or three

villages.

Similarly some low lying areas in certain places in chennai, the poor got overlooked.

Those who lost everything of course require rehabilitation more than relief. They have lost both their homes and means for making a living.

The lowest 5-10% of population always gets a raw deal in such calamities.

They suffer more than the others
 
வீதிக்கு வாருங்கள் முதல்வரே!

வெள்ளம் ஓரளவு வடிந்துவிட்டது. ஆனால், அதன் சுவடுகள் அத்தனை எளிதில் மறைந்துவிடாது. சென்னையும் கடலூரும் வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட நீண்ட நெடுங்காலம் ஆகும். ஆயிரமாயிரம் மனிதர்கள் உதவிப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால், இவை எல்லாம் நிவாரணம்தான். இந்த வரலாறு காணாத பேரழிவில் இருந்து மக்களை மீட்டெடுக்க, நிவாரணம் மட்டுமே போதாது. மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். குடிசையில் வசித்தோருக்கு வீடே இல்லை; வீட்டில் வசித்தோருக்கு வீட்டில் எந்தப் பொருளும் இல்லை. முதல் தலைமுறையாக நகரத்துக்கு வந்து, பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து வாழ்வைத் தொடங்கிய பல்லாயிரக்கணக்கானோர் இப்போது வீதிக்கு வந்துவிட்டனர். அடுத்த நாள் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களைக்கூட, இனி மீண்டும் உழைத்துத்தான் ஒவ்வொன்றாகச் சேர்க்க வேண்டும். மக்களின் அகவாழ்வும் புறவாழ்வும் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், மக்களுடன் இணைந்து நிற்கவேண்டியது அரசின் கடமை. ஆனால் நடப்பது என்ன?

Read more at: http://www.vikatan.com/news/coverstory/56395-chennai-flood-come-on-cm-get-on-the-road.art
 
[h=1]A Dalit village in Cuddalore was left to fend for itself through 36 days of flooding[/h]The 45 houses of Ambedkar Nagar received no flood warning, no relief material and no visit from the authorities for a least a month.

“For 36 days no one has come to check on us. Forget bringing us things and giving us help – no one has even come to ask ‘how are you’ll doing?’, ‘are you’ll safe?’, ‘are you’ll alive?’” L Pavai was in tears as she spoke of the neglect her hamlet – Ambedkar Nagar in the Parangipettai block of Cuddalore district – during the rains and floods of the past month.

There are 45 houses in Ambedkar Nagar of which only 11 are made of concrete. There others are all mud and thatch structures. On the night of November 10, as the rest of the country was caught up in Diwali festivities, Ambedkar Nagar, along with large parts of Cuddalore experienced its worst flooding in a century. The district got 50% more rainfall on November 9, 10 and 11 than the normal rainfall for the entire month of November.

Read more at: http://scroll.in/article/775850/a-d...o-fend-for-itself-through-36-days-of-flooding
 
There were conflicts between Caste- Hindus (? ) and Dalits in Cuddalore District.
Even it might be a deliberate ommission.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top