Tamil Brahmins
Results 1 to 1 of 1
 1. #1
  Join Date
  Jan 2011
  Posts
  76
  Downloads
  0
  Uploads
  0

  ஐயப்பன் நித்திய பூஜை [எளிய தமிழில்]


  2 Not allowed!
  ஐயப்பன் நித்தியபூஜை [எளிய தமிழில்]  விநாயகர் காப்பு:
  முழுமைக்கும் முதலான வெண்களிற்று விநாயகனே!
  பழுதின்றி பூஜை நடக்க முன்னின்று அருள் செய்வாய்!

  குரு வணக்கம்:
  குருவுக்கும் குருவான, திருவான குருவுருவே!
  உறுமனத்தில் அன்பிருக்க, உருவாக அனுக்கிரஹிப்பாய்!

  தீப வணக்கம்:
  வெளியிருட்டை விலகச் செய்யும் சுடரான நெய்விளக்கே!
  அறியாமை இருளகற்றி அடியேனைக் காத்திடுவாய்!


  ஐயப்பன் அழைப்பு:
  அந்தமும் ஆதியில்லா, அருட்பெரும் ஜோதிதேவா!
  வந்திடாய் வந்திடாய் நீ! வந்தெங்கள் பூஜை ஏற்பாய்!


  ஐயப்பன் வரவேற்பு:
  வந்தனை வந்தனை நீ! வரதே வான்முகிலே ஐயா!
  சிந்தனை களித்து இங்கே, சிறப்புடன் வீற்றிருப்பாய்!


  சந்தனம் அளிப்பு:
  பந்தனை அறுத்து எம்மை, பவக்கடல் தாண்டச் செய்ய,
  சந்தனம் ஏற்பாய் ஐயா! சபரிமலை வாசனே!


  குங்குமம் அளிப்பு:
  ஆரியங்காவு ஐயனே! அடியரைக் காக்க நீயே,
  குங்குமம் ஏற்பாய் ஐயா! குளத்துப்புழை பாலகனே!


  மலர் சாற்றல்:
  அலர்ந்திடக் கொண்டுவந்தோம்! அல்லல்கள் தீரவென்று,
  மலர்களை ஏற்று எங்கள், மயக்கமும் தவிர்ப்பாய் ஐயா!


  அக்ஷதை தூவல்:
  பக்ஷமும் கொண்டு எங்கள், பவவினை பறந்து ஓட,
  அக்ஷதை ஏற்றுக்கொண்டு, அருள்புரி ஐயப்ப தேவா!


  தாம்பூலம் அளிப்பு:
  வேம்பாகும் உலகவாழ்வு, வேதனை தீரவென்று
  தாம்பூலம் ஏற்று எம்மை, தயாபரா ஆதரிப்பாய்!


  கனி படைத்தல்:
  பனிரவி பட்டதைப் போல், பறந்திடத் துயரமெல்லாம்,
  கனியிதை ஏற்றுக்கொண்டு, கடைக்கண்ணால் பார்த்திடாயோ!


  [ஐயப்பன் ஸஹஸ்ரநாமம்/அஷ்டோத்திரம்/ஸ்தோத்திரங்கள்/ பஜனைப் பாடல்கள் இப்போது செய்யலாம்.]

  தூபம்:
  பாபங்கள் விலகிச் சித்தம், பரிசுத்தமாகவென்று,
  தூபமும் ஏற்றுக்கொண்டு, துயர்கெட அருள்வாய் ஐயா!


  தீபம்:
  தாபமாம் பிறப்பிறப்பு, தணித்துயர் முக்திமேவ,
  தீபமும் ஒளிர ஏற்று, திகம்பரா அருள்வாய் ஐயா!


  நைவேத்தியம்:
  ஐவேதனைப் புலன்கள், அடங்கிட ஐயா இந்த,
  நைவேத்யம் ஏற்றுக் கொள்வாய்! நாயகா லோகவீரா!


  கற்பூரம்:
  அற்பமாம் ஜகத்துமாயை, அழிந்தருள் ஞானம் மேவ,
  கற்பூரஜோதி ஏற்று, கனிவுடன் அருள்வாய் ஐயா![x3]


  பிரார்த்தனை:
  ஐயனே! அருளே! போற்றி! ஐயப்பதேவா போற்றி!
  எம்மையே ஆதரித்து, இருள்கெட அருள்வாய் போற்றி!


  மும்மலம் அழிந்து ஞானம், முற்றிட விதிப்பாய் போற்றி!
  இம்மையில் இன்பமெல்லாம் இருந்திடச் செய்வாய் போற்றி!


  துதி:
  அருளோடு செல்வம் ஞானம், ஆற்றலும் அன்பும் பண்பும்,
  பொருள்நலம் பொறுமை ஈகை, பொருந்திடச் செய்வாய் ஐயா!


  ஆயுள் ஆரோக்யம் வீரம், அசைந்திடா பக்தி அன்பு,
  தேயுறாச் செல்வம் கீர்த்தி, தேவனே அருள்வாய் ஐயா!


  பிழை பொறுக்க வேண்டல்:
  அறியாமை இருளில் சிக்கி, ஆடிடும் பேதையோம் யாம்!
  தெரியாமல் செய்யும் குற்றம் தேவனே பொறுப்பாய் ஐயா!


  மந்திரம் சடங்கு வேள்வி, மதிப்புறு உபசாரங்கள்,
  வந்தனை துதிகள் ந்யாஸம், வழுத்தின ஜபமும் தியானம்

  இந்தவாறு செய்தபூஜை, இருந்திடும் பிழைகள் எல்லாம்,
  சிந்தையில் கொள்ளாதேற்று, சீர் பெற அருள்வாய் ஐயா!

  கனிமலர் தூப தீபம், கற்பூர நைவேத்யங்கள்,
  நனியிலாச் சிறிதானாலும், ஐயப்பா நிறைவாய்க் கொள்வாய்!

  [தெரிந்த அளவில் சரணங்கள் சொல்லவும்!]

  ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

  நமஸ்காரத் துதி:
  [ஒவ்வொரு துதியும் சொல்லி விழுந்து வணங்க வேண்டும்!]


  லோக வீரம் மஹா பூஜ்யம்,
  ஸர்வரக்ஷாகரம் விபும் !
  பார்வதி ஹ்ருதயானந்தம்,
  ஸாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் !!
  ஸ்வாமியே ஸரணம் ஐயப்பா !! 1 !!


  விப்ரபூஜ்யம் விச்வவந்த்யம்,
  விஷ்ணு சம்போ ப்ரியம் ஸுதம் !
  க்ஷிப்ரப்ரசாத நிரதம்,
  ஸாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் !!
  ஸ்வாமியே ஸரணம் ஐயப்பா !!2 !!


  மத்த மாதங்க கமனம்,
  காருண்யாம்ருத பூரிதம் !
  ஸர்வ விக்னஹரம் தேவம்,
  ஸாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் !!
  ஸ்வாமியே ஸரணம் ஐயப்பா !! 3 !!


  அஸ்மத் குலேச்வரம் தேவம்,
  அஸ்மத் சத்ரு வினாசனம் !
  அஸ்மதிஷ்ட ப்ரதாதாரம்,
  ஸாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்!!
  ஸ்வாமியே ஸரணம் ஐயப்பா !! !! 4 !!


  பாண்ட்யேச வம்ச திலகம்,
  கேரளே கேளி விக்ரகம் !
  ஆர்த த்ராண பரம் தேவம்,
  ஸாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் !!
  ஸ்வாமியே ஸரணம் ஐயப்பா !! !! 5 !!


  பஞ்ச ரத்னாக்ய மேதத்யோ
  நித்யம் சுத்த படேன் நர: !
  தஸ்ய ப்ரசன்னோ பகவான்
  ஸாஸ்தா வஸதி மானசே !!
  ஸ்வாமியே சரணம் ஐயப்பா !! 6 !!


  ஸ்வாமியே சரணம் ஐயப்ப
  சத்குருநாதனே சரணம் ஐயப்பா
  வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
  சித்தி விநாயக சிவசக்தி வடிவேலன் தம்பியே சரணம் ஐயப்பா!

  ஓம் நாங்கள் தெரிந்தும் தெரியாமலும், அறிந்தும் அறியாமலும் செய்கின்ற சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரக்ஷிக்க வேண்டும்! சத்யமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளிவீரன், வீரமணிகண்டன், காசி ராமேஸ்வரம், பாண்டி மலையாளம் அடக்கி ஆளும், ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா!சரணம் ஐயப்பா!சரணம் ஐயப்பா!


  ஸ்வாமியே சரணம் ஐயப்பா!


Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •