• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மழை மாலை - மழை வேண்டி பிரார்த்தனை

Status
Not open for further replies.
மழை மாலை - மழை வேண்டி பிரார்த்தனை

தற்போது மழைக்காலம். நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. சில இடங்களில் "அதி வ்ருஷ்டி" காரணமாக வெள்ளம், உயிரிழப்பு, பயிர் சேதம் ஆகியன நிகழ்ந்துள்ளது. நம் முன்னோர்கள் ஆண்டு முழுதும் மிதமான மழை பொழிய வேள்விகள், வழிபாடுகள் செய்து சுபிக்ஷத்துக்கு வழி வகுத்தனர். நீதி தவறா மன்னனுக்கு ஒரு மழை, கற்புடைய பெண்டிற்கு ஒருமழை, வேதம் ஓதும் அந்தணர்க்கு ஒருமழை என்று மாதம் மும்மாரி பொழிந்ததாக நூல்களில் படிக்கிறோம். தற்காலத்தில் இம்மூன்றும் அரிதாகிவிட்டது. எனவே, மழை இல்லாத காலங்களில், மழை பொழிய வேண்டி பிரார்த்தனை செய்வதே சுபிக்ஷத்துக்கு வழி. அந்த வகையில், ச்ருங்கேரி ஸ்ரீ சங்கராசார்யார் அருளிய "வ்ருஷ்டி ஷட்கம்" என்ற சமஸ்க்ருத சுலோகங்களை தமிழில் மழை மாலை என்று குன்றக்குடி வீர சுப்பைய்ய சுவாமிகள் மொழிபெயர்த்ததை, அடியார்கள் உபயோகத்திற்காக இங்கு வழங்குவதில் மகிழ்ச்சி. ஆறு பாடல்கள் ஸ்ரீ சுப்பிரமணியர் மீது மழை வேண்டி பாடப்பட்டது.


(ச்ருங்ககிரி சங்கரமடத்தில் குருவாக எழுந்தருளியிருந்த ஸ்ரீ சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் ஒருமுறை காரைக்குடி அருகிலுள்ள குன்றக்குடி கோவிலுக்கு தரிசனம் செய்ய எழுந்தருளினார். அந்த ஆண்டு மழையின்மையால் வறட்சி ஏற்பட்டிருந்தது. ஊர் மக்கள் வேண்டிக் கொண்டபடி அவர் முருகப்பெருமான் மீது ஆறுபாடல்கள் அடங்கிய “வ்ருஷ்டி ஷட்கம்” என்ற வடமொழி நூலை இயற்ற, அவ்வூரில் வாழ்ந்த திரு வீரசுப்பையஸ்வாமிகள் அதனை தமிழில் மொழிபெயர்த்து “மழைமாலை” என்ற பெயரில் வழங்கினார். மெய்யன்பர்கள் நம்பிக்கையுடன் இம் மழைமாலையைப் பாடி, முருகக்கடவுளைத் துதித்தால் மழை பொழிவது உறுதி.)

மகிசலமுதல எட்டையும் வடிவாய்
மகிழ்ந்தருள் குரவனே! புரத்தைத்
தகியரன்குமர! நினைச்சரண் புகுந்த
தவத்தினர் பவத்தின்வேர் அறுப்போய்!
சகிதரற்கரிய அடைந்துள தாபம்
தணந்திட மழைகடி தருள்வாய்
குகவிருமூன்று முகமுடைப் பரம!
குறமகட் கினியநா யகனே! 1

அகஞ்சபத்தோடு மந்திரம் சேவை
அரியநற் பூசையே முதலா
உகந்துனக்கியற்றும் வலியிலன் எனினும்
உயருன தியல்பளி யாலே
புகழ்மழைபொழிய எழுமென்வாஞ் சையினைப்
பூரணங் கணம்புரிந் தருள்வாய்
குகவிருமூன்று முகமுடைப் பரம
குறமகட் கினியநா யகனே! 2

மிகவணங்ககில விபுதர்கள் மவுலி
மிளிர்தரும் பாததா மரையாய்
மகிழ்தருதெரியல் நன்குலா விடும்பொன்
மணியணி கம்புதிண் களனே
தொகுமினல்கோடி நிபவுப ஒளியோய்
துரிதமன் மழையுற அருள்வாய்
குகவிருமூன்று முகமுடைப் பரம
குறமகட் கினியநா யகனே! 3

அகம்மிகநிறைந்த அவர்தமிற் கொடியன்
அடியன்மற் றுலகிலென் றனக்குத்
தகுதியிங்கெவரும் இலைமழை பொழியத்
தனியுனை வேண்டுமா தரிலோ
சகமிதுதனக்கிங் கற்புதம் மிகவும்
சமைந்திடுங் கடிதுநீ அருள்வாய்
குகவிரு மூன்று முகமுடைப் பரம
குறமகட் கினியநா யகனே! 4

துகளுறுபாபி எனதிடத் தினினும்
துரிதம தாய்த்தயை புரிந்தே
புகுபுகுஎனநன் மழைமிகப் பொழிய
புரியருள் புண்ணிய ரிடத்தில்
தகுதிருக்கருணை புரிதரில் யாது
தரும்புகழ் நினக்குநீ புகலாய்
குகவிருமூன்று முகமுடைப் பரம
குறமகட் கினியநா யகனே! 5

சுகமுடன்எனது வேட்கையை நிரப்பச்
சுடர் வலி இலையெனச் சொலிலோ
நகமகள்தனய நினதுயர் மொழியும்
நனியநி ருதமதே யாகும்
சிகிவலகவின்கொள் கரத்திலசத் தியினைத்
திடமுடன் தரித்திடும் அதனால்
குகவிருமூன்று முகமுடைப் பரம
குறமகட் கினியநா யகனே! 6

கானகம்அதனில் வேடுவச் சிறுமி
கண்டுகண் களிதரக் கலந்தே
போனகமாகத் தேனையும் தினையும்
புசித்தருள் குமரவேள் பதத்தை
வானகங்குளிர்ந்து மழைதர விரைவில்
வரமுறு சங்கரக் குரவன்
தானகங்குழைந்து வழுத்திய இதனைச்
சபஞ்செயின் மழைதவா துறுமே. 7
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top