• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சொந்த வீடு.. கார்.. பைக் இருக்கா?- அப்போ மத்தி

  • Thread starter V.Balasubramani
  • Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
சொந்த வீடு.. கார்.. பைக் இருக்கா?- அப்போ மத்தி

சொந்த வீடு.. கார்.. பைக் இருக்கா?- அப்போ மத்திய அரசே உங்க கேஸ் மானியத்தை “கட்” செய்யப் போகுதாம்!

டெல்லி: சொந்த வீடு, கார், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு மானியத்தை தாமாகவே நிறுத்திவிடலாம் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு மானியம் இப்போது நுகர்வோரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆண்டு ஒன்றுக்கு 12 சிலிண்டர்கள் மட்டும் மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், வசதிப்படைத்தவர்கள் மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

இதனை ஏற்று இதுவரை சுமார் 42 லட்சம் பேர் மானியம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சொந்த வீடு, கார் வைத்திருப்பவர்களுக்கு தாங்களே நிறுத்திவிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாம். டெல்லியில் நிதி அமைச்சகம் ஏற்பாடு செய்த பொருளாளதார கருத்தரங்கம் ஒன்றில் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதனை சூசகமாக வெளியிட்டுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/indi...at-stripping-the-rich-lpg-subsidy-239428.html
 
A person having 10' x 10' house in a village / small town. a taxi driver owning a car,a person having a moped to attend a distant office................... are all could not be construed as affluent.

Stopping subsidy to affluent category is a welcome move; but an integral index should be formulated for making the category ineligible.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top