• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அன்னதானம் செய்வதால் என்ன பலன்?

Status
Not open for further replies.
அன்னதானம் செய்வதால் என்ன பலன்?

அன்னதானம் செய்வதால் என்ன பலன்?



காசியிலே அம்பாள் அன்னபூரணியாக வீற்றிருந்து காசி மயானத்தைக் காத்துவரும் சிவபெருமானுக்கு அன்னத்தை வழங்குகின்றாள். இவ்வரிய காட்சி உலகில் உள்ள சகருக்கும் அன்னபூரணி அம்மையின் அன்னம் அமுதாக என்றும் உள்ளது என்பதை விளக்குகிறது. இலங்கையில் தொண்டைமானாற்றில் முருகப் பெருமான் அன்னதானக் கந்தனாக வீற்றிருக்கின்றான். நாம் வழமையாக என்ன கூறுவோம்? இறைவன் இட்ட பிச்சையே எமது உணவான அன்னம். அதாவது சாதமேயாகும்.

கோயிலில் அபிஷேகத்திலே அன்னாபிஷேகம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. அதேபோன்று பிரசாத வகைகளோ அந்தம். சாதம், சர்க்கரைச் சாதம், புளிச்சாதம், எள்ளுச்சாதம் மிளகுச் சாதம் ஆகியன சிவசிங்கத் திருமேனியின் ஐந்து முகங்களுக்கும் நைவேதனம் ஆகின்றன. நமது குல தெய்வ வழிபாட்டில் குல தெய்வத்துக்கான பொங்கல் சமைத்து படைத்து முழு ஊருமே சேர்ந்து வழிபடும் பாங்கு அற்புதமானது. ஊர் ஒற்றுமை உள்ளது. எல்லோருக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படுகின்றது.

இந் நோக்கில் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் நேர்த்திக்கடனை நிறைவு செய்ய உற்றார் உறவினரையும் அழைத்துச் சென்று அன்னம் சமைக்கும் ஒற்றுமை அத்தேவஸ்தான துக்கே உரியது ஆகும். அதேபோல அன்னதானக் கந்தனுக்குத் தினமும் சாதத்தின் மேலே கறி வைத்துப் பூசை செய்யும் வழமையும் உள்ளது. தைப்பொங்கல், வருடப் பிறப்புப் பொங்கல் என்பன சூரிய வழிபாட்டுக்குரியன. பசு மாட்டில் சகல தேவர்களும் வாசஞ் செய்வதால் மாட்டுப் பொங்கல் விசேடமாகின்றது. சித்திரைக் கஞ்சியில் அன்னத்தின் பங்கு பாற் கஞ்சியாக நைவேதனமாகின்றது.

ஐப்பசி மாதத்தில் பௌர்ணமி சிறப்பான வழிபாட்டு நாள். அன்று பௌர்ணமியும் அஸ்வினி நட்சத்திரமும் கூடிவரின் மிக்க விசேடம். அதேபோல ஐப்பசி அஸ்வினி நட்சத்திரமும் விசேடமானதே. இந் நன்னாளில் “சால்யன்னம்” எனப்படும் உயர்ந்த ரக அரிசியில் சாதம் சமைத்து விசேஷ அபிஷேகத்தின் போது அன்னாபி ஷேகஞ் செய்து பின்னர் அன்னக்காப்பு சிவலிங்கத்துக்கும் அம்பாளுக்கும் சாத்த வேண்டும். பூசையின் போது சாதகம் கறிவகைகள் பச்சடி குழம்பு என்பனவற்றைத் தலைவாழை இலையில் இட்டு நைவேதிக்கப்படுவது அதி விசேஷ பூஜை ஆகும்.

அன்னம் சிவஸ்வரூபம் எனக் கூறப்பட்டுள்ளது. “அன்ன ரூபம் விசேஷேன மம ரூபம் இதிஸ்ப்ருதம்” என்பது சிவ வடிவான அன்னம் மிகச் சிறப்பானது என்பதாம். அன்னக் காப்புச் சாத்தப்பட்ட சிவலிங்கத்தின் அருகில் அன்னத்தினாலான சிவலிங்கத்தையும் வைத்துப் பூஜிப்பதே முறை.

ஐப்பசி மாதப் பூரணையில் இவ்வாறு அன்னக் காப்பிட்டுப் பூசை செய்த பின்னர் சிவாலயம் வழமைக்கு மாறாக இத்தினத்தில் மாலை 3 மணி வரை சிவனடியார் தரிசனத்திற்குத் திறந்திருப்பதும் ஓர் அன்ன விசேஷமே. ஏனைய நாட்களில் உச்சிக் காலத்துடன் சிவாலயம் மூடப்படுவது வழமை.

இவ்வாறான சிவனருட் காட்சியினை நாம் கொழும்பு ஸ்ரீ பொன்னம்பல வானேஸ்வரத்திலும் ஏனைய சிவாலயங்களிலும் தரிசிக்கலாம். சிவ தரிசனம் கோடி புண்ணியம். அதிலும் ஐப்பசிப் பௌர்ணமி அன் னக்காப்புச் சிவதரிசனம் அதிமேலானது. எனவே ஐப்பசிப் பௌர்ணமியில் சிவாலயஞ் சென்று சிவ தரிசனஞ் செய்து சிவன், அம்பாள் அருளைப் பெறுவோம்​

SN_131015172016000000.jpg



http://temple.dinamalar.com/news_detail.php?id=23189
 
Last edited:
சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் செய்வது ஏன்?

சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் செய்வது ஏன்?

TN_131015172016000000.jpg




தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது.

உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உண்ணும் உணவே நம் உணர்வாக வெளிப்படுகிறது. சிலர் சாப்பிடும் போது, இது எங்க அம்மா சமைத்த மாதிரியே இருக்கு என்று சொல்லி பெருமைப்படுவதுண்டு.

அன்னையோடு அறுசுவை உண்டிபோம் என்று அறுசுவை உணவுக்கும் அம்மாவுக்கும் உள்ள தொடர்பை பட்டினத்தார் குறிப்பிட்டுள்ளார். எனவேதான், அம்மையப்பராக இருந்து உலகைக் காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். ஐப்பசி பவுர்ணமியன்று, உச்சிக்கால பூஜையின் போது இந்த அபிஷேகத்தை நடத்துவது மரபாக உள்ளது. அன்னத்தை தெய்வம் என்பார்கள்.

சிதம்பரம் தில்லைச் சிற்றம்பலத்தில் ஸ்படிகலிங்கத்துக்குத் தினமும் அன்ன அபிஷேகம் நடை பெறுகிறது. இதனாலேயே சிதம்பரத்திற்கு அன்ன ÷க்ஷத்திரம் என்ற பெயரும் உண்டு. இதே போல் அனைத்து சிவ ஆலயங்களிலும் தினமும் அன்ன அபிஷேகம் செய்து நம் ஊர்களை எல்லாம் வளமுள்ளதாக்குவோம்.

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. தீயில் நீரும், நீரில் நிலமும் பிறக்கின்றன. நிலத்தில் விளைந்த அரிசி, நீரில் மூழ்கி, தீயால் வெந்து அன்னமாகிறது. எனவே, அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை.

அன்னம், அபிஷேகத்தின் போது ஆண்டவனை முழுவதும் அனைத்துத் தழுவிக்கொள்கிறது. அவனிடமே அடைக்கலமாகிறது. இதன் மூலம் ஐம்பெரும் பூதங்களும் ஆண்டவனிடம் அடைக்கலம் என்பதும், அவற்றின் உள்ளிருந்து இயங்கும் ஆண்டவனே பரம்பொருள் என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றன.


சோத்துக்குள்ளே சொக்கநாதர்:

வழிபாட்டு முறைகள் எத்தனையோ இருந்தாலும், இறையருளைப் பெற எளியவழியாக இருப்பது அன்னதானம் மட்டும் தான். தானத்தில் சிறந்தது அன்னதானம் சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாத சுவாமி உப்பிட்டவரை உள்ளளவும் நினை அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப் போகாது போன்ற சுலவடைகள் இதன் பெருமையை எடுத்துக்காட்டுவதாகும். பொன்,பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை. இன்னும் கொடுக்கக் கூடாதா என்று எதிர்பார்ப்புடனே இருக்கும். ஆனால்,ஒருவன் வேண்டும் என்று கேட்ட அதே வாயால் போதும் என்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும் போது மட்டுமே.


அன்னபூரணி:

நமக்கு அன்னமூட்டும் தாயாக விளங்குபவள் அன்னபூரணி. காசியில் இருக்கும் இவளது கையில் பால் அன்னம் நிறைந்த பாத்திரமும், கரண்டியும் இருக்கும். தம்மை நாடிவருவோருக்கு வயிற்றுப்பசியை மட்டுமல்லாமல் ஆன்மபசியையும் போக்கி அருள்கிறாள். திருமூலர் திருமந்திரத்தில் அன்பே சிவம் என்று குறிப்பிடுகிறார். அறிவான தெய்வமே என்று இறைவனை தாயுமானவர் அழைக்கிறார். இந்த அன்பையும், அறிவையும் நமக்குத் தருபவள் அன்னபூரணி என்று ஆதிசங்கரர் காசி அன்னபூரணி மீது பாடிய ஸ்தோத்திரத்தில் கூறியுள்ளார்.

அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே! ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷõம் தேஹி ச பார்வதி!! என்று அன்னத்தை மட்டுமல்லாமல், தேவியிடம் ஞானத்தையும் பிச்சையிடும்படி வேண்டுகிறார். எனக்குப் பார்வதியே அம்மா! பரமேஸ்வரனே அப்பா! பக்தர்கள் அனைவரும் சொந்த பந்தங்கள்! மூவுலகமும் என் வீடு! அன்னபூரணியாகிய அம்பிகை அருளும் யாசகத்தை மூவுலகமும் (உயிர்கள் அனைத்தும்) பெறவேண்டும், என்று உயிர்கள் மீது கொண்ட கருணையால் வேண்டுகிறார்.

வள்ளலார் சொல்வதைக் கேளுங்க:

அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டில் அன்னதானத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ஜீவ காருண்யத்துடன் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் உள்ளம் வாடிய அருளாளர் வள்ளலார். இவர் தொடங்கிய சத்திய தருமசாலை ஆல்போல் தழைத்து அருகு போல எங்கும் வியாபித்திருக்கிறது. இவர் ஏற்றிய அணையா அடுப்பு இன்றும் பலருடைய பசியை போக்கி வருகிறது. அன்னதானத்தின் பெருமைகளை குறிப்பிடும்போது,சக மனிதனின் பசியைப் போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதி பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின் மீது பாய்ந்து கொல்லும் தருணத்தில், உணவிட்டுக் காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெயில் வருத்தாது. வறுமை தீண்டாது. இறையருள் எப்போதும் துணை நிற்கும். மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும். என்று குறிப்பிட்டுள்ளார்.

சோறு கண்ட இடம் சொர்க்கம்:

ஒரு வீட்டிற்கு விருந்துக்குப் போய், அங்கேயே டேரா போட்டு விடுபவர்களைப் பார்த்து உனக்கு சோறு கண்ட இடம் சொர்க்கமாயிற்றே என்று வேடிக்கையாக சொல்வது வழக்கம். உண்மையில் இந்த பழமொழி ஏன் வந்தது தெரியுமா? சிவலிங்கத்துக்கு ஐப்பசி பவுர்ணமியன்று வெள்ளை அன்னத்தால் அபிஷேகம் செய்வர். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றார்கள். பிற்காலத்தில், இந்த சுலவடையை, நீண்டநாள் தங்கும் விருந்தாளிகளைக் கேலி செய்வதற்கு பயன்படுத்தி விட்டார்கள்.

தர்மம் தலைகாக்கும்:

பாடுபட்டு தேடிய செல்வத்தை சேமிக்க ஆயிரமாயிரம் வழி முறைகளை இன்று நாம் பின்பற்றுகிறோம். ஆனால், தெய்வப்புலவர் திருவள்ளுவர் செல்வத்தை சேமிக்க காட்டும் வழியைத் தெரிந்து கொள்ளுங்கள். திருக்குறள் ஈகை அதிகாரத்தில், அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றார் பொருள் வைப்புழி என்கிறார். ஏழைகள் பசியால் வாடும்போது, அன்னமிட்டு அப்பசியைப் போக்குபவன் இறையருளைப்பெறுவது உறுதி. இந்த புண்ணியபலன், சரியான சந்தர்ப்பத்தில் நம் உயிரையும் காக்கும், என்பது அவரது கருத்து. இதையே செய்த தர்மம் தலைகாக்கும் என்று குறிப்பிட்டனர். இறையருள் என்னும் வட்டியைப் பெற, இதை விட பாதுகாப்பான முதலீடு வேறொன்றும் கிடையாது.

அபிஷேகப்பிரியனுக்கு அன்னாபிஷேகம்!

அபிஷேகப் பிரியரான சிவபெருமான், அபிஷேக நேரங்களில் பல்வேறு திரவியங்களால் திருமுழுக்காட்டு செய்விக்கப் பெறுகிறார். பின்னரும் லிங்கத் திருமேனியின் மேலே தாரா பாத்திரம் எனப்படும் செம்புப் பாத்திரத்தில் நீர் நிறைத்து, சொட்டு சொட்டாக லிங்கத் திருமேனியின்மீது அபிஷேகிக்கப்படும் தாரை அமைப்பை பல ஆலயங்களிலும்- குறிப்பாக வடமாநிலங்களில் நாம் காணமுடியும்.

இந்த அபிஷேக வரிசையில், ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்த அன்னத்தைக் கொண்டு முழுக்காட்டுவது இந்த நாளின் சிறப்பாகும். இனிப்பு, காய்கறி மற்றும் பழங்களுடன் செய்யப்படும் சுத்த அன்னாபிஷேகக் காட்சி, ஆலயத்துக்கு வழிபட வரும் பக்தர்களை பரவசத்துக்குள்ளாக்குகிறது. இந்த அன்னாபிஷேக நாளன்று சிவாலயங்களில் கருவறையிலுள்ள சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனை முடிந்த பின்னர், சமைத்த சுத்த அன்னத்தைக் கொண்டு திருமுழுக்காட்டப்படுகிறது.

லிங்கத் திருமேனி மறையுமளவுக்கு அன்னம் குவிக்கப்பட்டு, இனிப்புகள், பழங்கள் நிவேதனதுக்கு வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறுகின்றன.


தஞ்சை பெரிய கோவிலை முதலாம் ராஜராஜன் மிக பிரம்மாண்டமாக கட்டினான். இந்த ஆலய சிவபெருமானுக்கு உயிர்களுக்கெல்லாம் ஈசன், மிகவும் பெரிய லிங்க வடிவுள்ள பெருமான் (பிருஹத்- மிகப்பெரிய) என்றெல்லாம் பொருள்படும் பிரகதீஸ்வரர் என்ற பெயரிட்டு மகிழ்ந்தான். அவன் மகனான ராஜேந்திர சோழனும் தன் தந்தையைப் போன்றே கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரம்மாண்டமான சிவாலயத்தை எழுப்பினான். இங்குள்ள இறைவனுக்கும் பிரகதீஸ்வரர் என்ற திருநாமத்தையே சூட்டினான். இந்த கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தில் நடைபெறும் அன்னாபிஷேகப் பெருவிழா தமிழகத்தில் நடைபெறும் ஒரு முக்கிய திருவிழா ஆகும்.

இங்கு சோழர் காலத்தில் சிறப்பாக நடைபெற்ற அன்னாபிஷேகம், காலப்போக்கில் மறைந்து போனது. தற்போது, காஞ்சிப்பெரியவர் வழிகாட்டுதலின்படி மீண்டும் அன்னாபிஷேகம் நடந்து வருகிறது.

சுமார் பதின்மூன்றரை அடி உயரமும் அறுபது அடி சுற்றளவும் கொண்ட இந்த சிவலிங்கத் திருமேனிக்கு, 108 மூட்டை அரிசி அன்னமாக சமைக்கப்பட்டு அன்னா பிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் இறைவனுக்குப் படைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கங்கை கொண்ட சோழபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் கூடி அன்னாபிஷேகத்தை தரிசித்து மகிழ்கின்றனர்.

இந்த அன்னாபிஷேக நாளன்று இறைவனைத் தரிசித்து பிரசாதத்தை உட்கொள்வதை பெரும்பேறாக பக்தர்கள் கருதுவதுடன், வரும்காலங்களில் வாழ்வில் பஞ்சமே இராது என்றும் நம்புகின்றனர். அத்துடன் அபிஷேக அன்னத்தை எறும்பு, கால்நடை, பறவை உள்ளிட்ட எல்லா உயிர்களுக்கும் அளிப்பர். இத்தலம், திருச்சியிலிருந்து 110 கி.மீ., தொலைவில் உள்ளது.





http://temple.dinamalar.com/news_detail.php?id=23187
 
அன்னதானம் செய்வதால் என்ன பலன்?

இந் நோக்கில் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் நேர்த்திக்கடனை நிறைவு செய்ய உற்றார் உறவினரையும் அழைத்துச் சென்று அன்னம் சமைக்கும் ஒற்றுமை அத்தேவஸ்தான துக்கே உரியது ஆகும். அதேபோல அன்னதானக் கந்தனுக்குத் தினமும் சாதத்தின் மேலே கறி வைத்துப் பூசை செய்யும் வழமையும் உள்ளது.

http://temple.dinamalar.com/news_detail.php?id=23189

சாதத்தின் மேலே
கறி
வைத்துப் பூசை செய்யும் வழமையும் உள்ளது.

சாதத்தின் மேலேசாதத்தின் மேலே காய்கறி வைத்துப் பூசை செய்யும் வழமையும் உள்ளது.

Which one is correct?
 
Last edited:
"Annadhaanam" is one of the best. In those days when only Dharma was ruling, there were many dharmics who were hungry and it was considered great to feed the hungry. Today there are a very few people who are really hungry who cannot reach the sources of free food nor the donors go out to feed the hungry. Life styles have affected all including the purohits and vaadhyars or shastrigal. All small temples give annadhanam to those who have contributed in that name. Idea behind that is they cannot cook at home for themselves or others. This also goes under the name "annadhaanam" with better varieties including paayasam/sweet. No wonder we have more diabetics. Unfortunately responsible people and religious community are witness to these. Only it is not poor alone who are hungry, but people who are stranded to look for food in their routine business can also be fed. Only everybody should not consider themselves to have been stranded.
 
"Annadhaanam" is one of the best. In those days when only Dharma was ruling, there were many dharmics who were hungry and it was considered great to feed the hungry. Today there are a very few people who are really hungry who cannot reach the sources of free food nor the donors go out to feed the hungry. Life styles have affected all including the purohits and vaadhyars or shastrigal. All small temples give annadhanam to those who have contributed in that name. Idea behind that is they cannot cook at home for themselves or others. This also goes under the name "annadhaanam" with better varieties including paayasam/sweet. No wonder we have more diabetics. Unfortunately responsible people and religious community are witness to these. Only it is not poor alone who are hungry, but people who are stranded to look for food in their routine business can also be fed. Only everybody should not consider themselves to have been stranded.
For you,
கற்றது உலகளவு , கல்லாதது கை மண் அளவு.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top