• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Vinayaka Chaturthi Vrata Puja Vidhanam

Status
Not open for further replies.
Vinayaka Chaturthi Vrata Puja Vidhanam – 2015


Sri Vinayaka Chathurthi is on 17 th September 2015

129818b0ede99ff83efae51341255f911-277x300.jpg


Sri Ganesha or Sri Ganapati is an extremely popular and powerful God. He is called Vighneshvara or Vighnaharta, the Lord of and destroyer of obstacles. People mostly worship Him asking for siddhi, success in undertakings, and buddhi, intelligence. He is worshipped before any venture is started. He is also the God of education, knowledge and wisdom, literature, and the fine arts.

Sri Ganesha Chaturthi is the Hindu festival celebrated in honour of the god Ganesha, the elephant-headed remover of obstacles and the god of beginnings and wisdom.

The festival, also known as Vinayaka Chaturthi, is observed in the Hindu calendar month of Bhaadrapada, shukla chaturthi.


Audio Recording by : Sri V. Sriram Ghanapatigal

In case of difficulty or break ups in audio streaming, please download the entire mp3 to your local drive and play.

Audio Files :

  1. Introduction:

    | Download MP3
  2. I -Vigneswara Puja:

    | Download MP3
  3. II- Siddhi Vinayaka Puja :

    | Download MP3
  4. III- Ekavimshati Patra, Pushpa, Ashtotra Puja :

    | Download MP3
  5. IV- Uttaranga Puja:

    | Download MP3
 
நாளை சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி?

நாளை சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி?

புதன்கிழமை, செப்டம்பர் 16,

807c6a9c-d116-44d7-a15c-3233d5fc6329_S_secvpf.gif



மும்மூர்த்திகளும், வேதங்களும் புராண நூல்களும் போற்றி புகழும் தனி பெருந்தெய்வம் விநாயகர். அவரை வழிபட்டால் பேரும், புகழும், செல்வ செழிப்பும் உண்டாகும். தீராத நோய்கள் தீரும், கிரக தோஷங்கள் நீங்கும், நல்ல கல்வி கிடைக்கும் என்பது ஐதீகம். விநாயகர்அவதரித்த விநாயகர் சதுர்த்தி நாளை (வியாழக்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


“கணபதி பூஜை கைமேற் பலன்” என்பது பழமொழி. “ஓம்” என்பது பிரணவம். இந்த பிரணவமே வேதத்தின் மூலம். ஓம் என்ற ஒலியின் வடிவமே விநாயகர். எனவே பிரணவப் பொருள் என்று விநாயகரை அழைக்கிறோம். விநாயகர் என்றால் அவரை விட வேறு தலைவர் இல்லை என்பது பொருள். ஈஸ்வரனின் மகனான விநாயகர் பூதகணங்களின் தலைவரும் ஆவார். அதனால் அவருக்கு கணபதி என்ற பெயரும் உண்டு. மஞ்சள் பொடியிலும், களிமண்ணிலும், சாணத்திலும் விநாயகரை பிடித்து வழிபடலாம்.


அவரை வழிபட சாஸ்திரங்கள் தேவையில்லை. கூப்பிட்ட குரலுக்கு வந்து விடுவார். பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய் இவ்வாறு எல்லாமாக விளங்குபவர் விநாயகர். அவர் ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், ஆணை முகத்தினை உடையவர். கும்பம் ஏந்திய திருக்கரம் ஆக்கும் தொழிலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய திருக்கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன.


எனவே விநாயகர் ஐம்பெரும் தொழில்களை ஐந்து திருக்கரங்களில் புரிந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். மாதத்தில் வளர் பிறையிலும், தேய்பிறையிலும் வருகிற 4-வது நாள் சதுர்த்தி ஆகும். தேய்பிறையில் வரும் சதுர்த்தி சங்கடஹரசதுர்த்தி ஆகும். ஆவணி மாதம் அமாவாசை கழிந்த நான்காம் நாள் வரும் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. இது விநாயகரின் பிறந்ததினமாகும். தேவர்களுக்கு துன்பம் கொடுத்த கஜமுகன் என்ற அரக்கனை அழிப்பதற்காக சிவபெருமான் அருளால் விநாயகப் பெருமான் அவதரித்தார்.


விநாயகர் கஜமுகனுடன் போர் புரிந்தார். அவன் ஆயுதங்களால் அழியாத வரம் பெற்றவன். விநாயகர் தனது வலக் கொம்பை ஒடித்து சிவமந்திரத்தை உச்சரித்து ஏவ, அது கஜமுகனை சாய்த்தது. அவன் பெருச்சாளி வடிவில் எதிர்த்து வந்தான். விநாயகர் அவன் மீது கருணை புரிந்தார். அவன் அறியாமை அகன்றது. விநாயகரை வணங்கி நின்றான். விநாயகர் அவனை தன் வாகனமாக்கி அருள்புரிந்தார்.


சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி?



ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி வரை இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இயலாதவர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் விரதம் இருக்கலாம். விநாயகர் சதுர்த்தி அன்று சதுர்த்தி திதி நேரத்தில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று முறைப்படி விநாயகரை தரிசித்து விட்டு பிறகு தான் பூஜைக்குரிய களிமண்பிள்ளையாரை வாங்க வேண்டும். வீட்டின் பூஜை அறையில் மரப்பலகையில் ஆசனம் போட்டு, அதில் பச்சரிசி மாக்கோலம் போட வேண்டும்.


ஒரு தலை வாழை இலையை அதன் நுனிப்பகுதி கிழக்கு திசையை பார்த்து இருக்குமாறு அப்பலகையில் மேல் போடப்பட்டுள்ள கோலத்தின் மீது வைக்க வேண்டும். அந்த இலையில் மூன்று கைப்பிடி அளவு நல்ல பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மேல் வலது கை மோதிர விரலால் பிள்ளையார் சுழி “உ” போட வேண்டும். அதன்கீழ் ஓம் என்று அதே விரலால் எழுத வேண்டும். வாங்கி வந்த மண் பிள்ளையாரை அந்த அரிசியின் மேல் அமர்த்தி வைக்க வேண்டும்.


அதனை அருகம்புல், பூ, எருக்கம்பூ, விபூதி, குங்குமம், சந்தனம் போன்றவற்றால் அலங்கரிக்க வேண்டும். தொப்புளில் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். விநாயகர் அகவல், விநாயகர் மூல மந்திரம் மற்றும் விநாயகர் தொடர்பான மந்திரங்களை கூறி தூபமிட்டு, சூடமேற்றி விநாயகரை வழிபட வேண்டும். பிள்ளையாருக்கு மோதகம் எனப்படும் கொழுக்கட்டை பிரசாதம் மிகவும் பிடிக்கும். அவல், பொரி, வெல்லம், கடலை, பழம், தேங்காய், எள் உருண்டை முதலியன விநாயகருக்கு விருப்பமான பிரசாதமாகும்.


விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு பிறகு களிமண் விநாயகரை குளம், கிணறு, ஆறு, சமுத்திரம் ஆகிய ஏதாவது ஒன்றில் தண்ணீரில் விட வேண்டும். உடைக்கவோ அல்லது கரைக்கவோ கூடாது. அப்படியே தண்ணீரில் இறக்கி விட வேண்டும். இதற்கு விசர்ஜனம் என்று பெயர். ஆண்கள் தான் இதை செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி பூஜைநாளையும் சேர்த்து 1,3,5,7 என்று ஒற்றைப்படை நாளில் தான் இப்படி இறக்கி விட வேண்டும். அந்த நாளும் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமையாக மட்டுமே இருக்க வேண்டும்.


http://www.maalaimalar.com/2015/09/16074856/tomorrow-16th-september-2015-v.html
 
Sri Vinayaka chathurthi special

SRI VINAYAKA CHATHURTHI SPECIAL

விநாயகர் அவதாரம்!

செப்டம்பர் 15,2015

விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து, யாரையும் உள்ளே விடாதே என்று கூறிச்சென்றாள். அப்போது சிவன் வர, காப்பாளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண்டித்து உள்ளே சென்றார் சிவன். தேவி வெகுண்டாள். நிலையை உணர்ந்த சிவன் முதலில் தென்பட்ட உயிரினமான யானையின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, உன்னை வணங்காமல் எவரும் எது செய்தாலும் அது விக்னம் அடையும். நீயே யாவருக்கும் தலைவன். எனவே விநாயகன் என்றார். விக்னத்தை ஏற்படுத்துபவனும் அவன்; நிவாரணம் செய்பவனும் அவன்; காரிய ஜயம் தருபவனும் அவன்.

ஸர்வ விக்னஹரம் தேவம்
ஸர்வ விக்ன விவர்ஜிதம்
ஸர்வ ஸத்தி ப்ரதாதாரம்
வந்தே அஹம் கணநாயகம்.

என்று போற்றுகிறது. அவரது தந்தை, தாயான சிவபராசக்தி வணங்குவதால் அவரது பெயர் ஜ்யேஷ்டராஜன் ஆயிற்று.

பிள்ளையார் என்பது ஏன்?

தாய், தந்தை, மாமன், மாமி என்று அனைத்து உறவுப்பெயருக்கும் ஆர் என்னும் விகுதியைச் சேர்த்து தாயார், தந்தையார், மாமனார், மாமியார் என்று சொல்வது வழக்கம். ஆனால், வீட்டில் உள்ள சிறுகுழந்தைகளை பிள்ளையார் என்று யாரும் சொல்வதில்லை. விதிவிலக்காக, விநாயகரை மட்டும் பிள்ளையார் என்று சிறப்பித்துக் கூறுகிறோம். சிவபார்வதியின் பிள்ளைகளில் மூத்தவர், சிறந்தவர் என்ற காரணத்தால் விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வழங்கப்படுகிறது

வழிபாட்டுக்கு பின் விநாயகரை கரைப்பது ஏன்?


கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.


கணபதிக்கு பிரியமானவை!

கணபதிக்கு பிரியமான 21: கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர். அதிலென்ன சிறப்பு?

ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங்கள்-5+5=10; மனம்=1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை. இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.

மலர்கள் 21: புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை. சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.

அபிஷேகப் பொருட்கள் 21: தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.

இலைகள் 21: மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.

நிவேதனப் பொருட்கள் 21: மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்.

வினை நீக்கும் மந்திரம்!

ஓங்காரமே உலகின் பிரதான ஒலி. அதனை ப்ரணவ மந்திரம் என்பர். ப்ரணவம் என்பதில் ப்ர என்பதற்கு விசேஷ என்பது பொருள்; நவம் என்பதற்கு புதுமை என்று பொருள். புதுப்புது விசேஷங்களை உள்ளடக்கிய மந்திரமே ப்ரணவ மந்திரம், ஓம் என்பதைப் போன்றே பிள்ளையார் சுழியும் விசேஷமானது. பிள்ளையார் சுழியில் அகரம், உகரம், மகாரம் மூன்றும் அடங்கியுள்ளன. ஒலி வடிவமும் வரி வடிவமும் சேர்ந்துதான் எழுத்தாகிறது. ஒலி வடிவம் நாதம்; வரி வடிவம் பிந்து. உயிரும் உலகமும் உண்டாக இவையிரண்டும் வேண்டும். நாத பிந்து சேர்க்கையின் குறியீடாகத் திகழும் பிள்ளையார் சுழியை நாம் எழுதத் தொடங்கும்முன் பயன்படுத்தினால், அந்தப் பணி இடையூறின்றி முடியும். அதே போல் எந்த ஒரு செயல் ஆரம்பிக்கும் போதும் விநாயகர் மந்திரமான ஸ்ரீ கணாதிபதயே நம: என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்தால் விநாயகர் அருளால் எந்த வினைகளும் தடைகளும் வராமல் நாம் தொடங்கும் செயல் வெற்றிகரமாக அமையும் என்பது நம்பிக்கை.

பழங்காலத்தில் சுவடிகள் எழுதத் துவங்கும்போது பிள்ளையார்சுழிக்குப் பதிலாக விநாயகர் மந்திரமான ஸ்ரீ கணாதிபதயே நம: என்று எழுதினர். இவ்வாறு சொல்லியோ அல்லது எழுதியோ தொடங்கும் பணிகள் தடங்கலின்றி விரைவில் நிறைவேறும் என்பர்.

சதுர்த்தியன்று சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம்!

விநாயகர் சதுர்த்தியன்று மோதகம், பொரி, கடலை, பழம் படைத்து சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம் இதோ!

கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவாவரம் வர காத்திருக்கும் குணநிதியே!

பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே!

ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணம் கொண்டவனே! கஜமுகாசுரனை கொன்றவனே! அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பவனே!

என்னைக் காக்கும் விநாயகனே!
உனக்கு என் வணக்கம்.

இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளிகொண்டவனே! பாவங்களைக் களைந்து புண்ணியத்தை அருள்பவனே!

தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்க வனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் செல்வவளத்தை அருள்பவனே!

எல்லையில்லாத பரம் பொருளே! விநாயகப் பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம்.

உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட
மன்னித்து அருள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாமூர்த்தியே! சகிப்புத் தன்மை, பொறுமை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களைத்
தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.

திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து, தூய்மையான உள்ளத்தைத் தருவாயாக.

உலகம் அழியும் காலத்திலும் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றிபெற என்றும் துணை நிற்பவனே! மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன். எம்பெருமானே! மங்கலத்தை தந்தருள்வாயாக.

பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை கொண்டவனே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் பிள்ளையே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! துன்பங்களைப் போக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப் பொருளே! யானை முக கணேசனே! காலமெல்லாம் உன்னை நினைத்து,வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். எங்களுக்கு இம்மையில் சகல செல்வத்தையும், மறுமையில் முக்தியையும் தந்தருள்வாயாக.
விநாயகரின் 32 வடிவங்கள்:

1. பால கணபதி,
2. தருண கணபதி,
3. பக்தி கணபதி,
4. வீர கணபதி,
5. சக்தி கணபதி,
6. துவிஜ கணபதி,
7. சித்தி கணபதி,
8. உச்சிஷ்ட கணபதி,


9. விக்ன கணபதி,
10. க்ஷிப்ர கணபதி,
11. ஹேரம்ப கணபதி,
12. லட்சுமி கணபதி,
13. மகா கணபதி,
14. விஜய கணபதி,
15. நிருத்த கணபதி,
16. ஊர்த்துவ கணபதி,


17. ஏகாட்சர கணபதி,
18. வர கணபதி,
19. த்ரயக்ஷர கணபதி,
20. சிப்ரப்ரசாத கணபதி,
21. ஹரித்ரா கணபதி,
22. ஏகதந்த கணபதி,
23. சிருஷ்டி கணபதி,
24. உத்தண்ட கணபதி,


25. ருணமோசன கணபதி,
26. துண்டி கணபதி,
27. துவிமுக கணபதி,
28. மும்முக கணபதி,
29. சிங்க கணபதி,
30. யோக கணபதி,
31. துர்க்கா கணபதி,
32. சங்கடஹர கணபதி.

கோபுர கணபதி: கோயில்களின் கோபுர வாயிலில் கணபதிக்குத் தனிச்சன்னதி அமைக்கப்படும். அவரைக் கோபுரக் கணபதி என்று கூறுவர். அவ்வாறு இல்லாதபோது கோபுர கோஷ்டத்தில் இவரை அமைப்பர். இவரை வணங்கிய பிறகே, பக்தர்கள் ஆலய தரிசனத்தைத் தொடங்குவர். சில ஆலயங்களில் கோபுரக் குடைவரை எனப்படும் கோபுரத்தின் உட்புறம் அமைந்த மேடைகளிலும் விநாயகரைக் காணலாம். இவரைக் குடைவரைப் பிள்ளையார் என்பர். ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் கோபுரக் குடைவரையில் கலங்காமல் காத்த விநாயகர் என்ற பெயரில் குடைவரைப் பிள்ளையார் வீற்றிருக்கிறார்.

எதிர்நோக்கும் கணபதி: சில ஆலயங்களில் இறைவன் கிழக்கு நோக்கியிருக்க ராஜ கோபுரம் அல்லது தலைவாசல் தெற்கு நோக்கி இருக்கும். இத்தகைய கோயில்களில் கோயிலுக்குள் நுழைந்ததும் வழிபடத்தக்க வகையில் உள்மதில் ஓரமாக வாயிலை நோக்கியவாறு ஒரு கணபதியைச் சிறிய சன்னதியில் எழுந்தருள வைத்துள்ளனர். இவரை எதிர்கொள் கணபதி என்பர். மேற்கு நோக்கிய திருமயிலை கபாலீசுவரர் ஆலயத்தில் கிழக்கு வாயிலுக்கு நேராகவுள்ள நர்த்தன கணபதி, திருமழிசை ஒத்தாண்டேசுவரர் ஆலயத்தின் தேவராஜகணபதி, திருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் ஆலயத்தின் முல்லைவன கணபதி முதலான கணபதியர் எதிர்கொள் கணபதியராக விளங்குகின்றனர்.

கொடிமர கணபதி : கோயிலில் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. கொடிமரத்திற்கு முன்பாகவோ, அவற்றின் பீடத்தின் அடியிலோ சிறிய மாடத்துள் இருப்பவரைக் கொடிமரக் கணபதி என்றும், கம்பத்தடி கணபதி என்றும் கூறுவர். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் கொடிமரக் கணபதியாகப் படித்துறை விநாயகர் அமைந்துள்ளார். இந்த ஆலயம் செப்பு ஓடு வேய்ந்து மூன்று கலசங்களுடன் அழகிய சபையாக உள்ளது. தனிச் சன்னதியாக அமைக்க முடியாதபோது பலிபீடத்தின் கிழக்கு அடிப்பட்டைப் பகுதியில் சிறிய மாடம் அமைத்து அங்கு விநாயகரை அமைப்பர். இப்படிச் சிறிய மாடத்துள் இருந்தாலும் பெரும் புகழ் பெற்ற விநாயகரைப் பல இடங்களில் காணலாம். திருவலஞ்சுழியில் மூலஸ்தானத்தில் கடல் நுரையால் ஆன வடிவில் விநாயகர் ஸ்வேத (வெள்ளை) விநாயகர் என்ற பெயரில் விளங்குகிறார். பலிபீடத்தில் அமைக்கப்பட்டுள்ள கணபதிக்குச் சிறப்பளித்து முகமண்டபம், மகாமண்டபம் முதலியவற்றை அமைத்துத் தனி ஆலயமாக ஆக்கியுள்ளனர். இவருக்குக் கொடியேற்றி விழா நடத்துகின்றனர். பலிபீடத்திற்கு முன்பாக அமையும் கணபதிக்குச் சங்கல்ப கணபதி என்று பெயர். முன்னாளில் இவருக்கு முன்பாகச் சங்கல்பம் செய்து கொண்டு, அன்றைய பஞ்சாங்கத்தைப் படித்த பின்னரே ஆலயத்தில் பூசைகளை மேற்கொள்வர்.

கன்னிமூலை கணபதி: பிராகாரங்களில் கன்னிமூலை எனப்படும் தென்மேற்குமுனையில் விநாயகர் சன்னதி அமைப்பது வழக்கம். அனைத்துப் பிரகாரங்களிலும் கன்னிமூலையில் கணபதி ஆலயம் அமைகிறது என்றாலும் முதல் பிரகாரத்தில் அமையும் கன்னிமூலை கணபதியே பிரதான கணபதியாகப் போற்றப்படுகிறார். இவரைத் தல விநாயகர் என்று கொண்டாடுகின்றனர். சபரிமலையில் கன்னிமூலை கணபதி மிகவும் விசேஷமானவர்.

துவார கணபதி: ஆலயத்தின் ஒவ்வொரு வாயிலிலும் வலப்புறம் விநாயகரும் இடப்புறம் முருகனும் அமைக்கப்படுகின்றனர். இவர்களை முறையே துவார கணபதி, துவார சுப்பிரமணியர் என்று அழைப்பர். தத்துவவாதிகள் இவர்களை உலக உற்பத்திக்கு ஆதாரமான பிந்து நாதங்களின் வடிவம் என்கின்றனர். மேலும், விநாயகர் கல்யாண கணபதி, பந்தக்கால் கணபதி, நந்தவனப் பிள்ளையார், வசந்த மண்டப கணபதி, தேரடிமண்டப கணபதி என்று பல்வேறு பெயர்களில் ஆலயத்தில் பல இடங்களில் வீற்றிருந்து அருள்புரிகிறார்.

விமான கணபதி: ஸ்ரீவிமானத்தில் அமையும் பஞ்ச கோட்டங்களில் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள கோட்டத்தில் நர்த்தன விநாயகரைக் காணலாம். இவர் கோஷ்ட கணபதி. சில விமானங்களில் மேற்பகுதியில் விநாயகரை அமைத்துள்ளனர். மயிலாடுதுறை மயூரநாத சுவாமி ஆலயத்தில் ஸ்ரீவிமானத்தின் அருகில் சிறிய சன்னிதியில் ஸ்ரீவிமான கணபதி எழுந்தருளியுள்ளார். அகத்தியர் மணலைத் திரட்டி இவரது திருமேனியை அமைத்து வழிபட்டார் என்று தலபுராணம் கூறுகிறது.



http://temple.dinamalar.com/news_detail.php?id=47466
 
Pillaiyar – symbolic meanings

PILLAIYAR – SYMBOLIC MEANINGS


  • September 16, 2015




    - H.H.Sri Paramacharyal of Kanchi Kamakoti Peetam


    When you look at Pillaiyar or Vinayagar, every aspect of his, has some deep meaning.. Why do we break a co-co nut in front of Pillaiyar? He asked his father to sacrifice his head, as a punishment for not knowing the answer to the question he had posed. When you sacrifice some thing, it should be valuable. ( You should not present or give to others, what you do not value yourself.) So the highest sacrifice is – Self Sacrifice. To show that you are prepared for such noble deed, you sacrifice a co-co nut, ( which has three eyes as Shiva has.).



  • While sacrificing a co-co nut, it is thrown powerfully against a hard surface, so that it breaks in to small pieces, scattering in all directions. Only children have a right over the scattered pieces. I came to know of this from a child in 1941. ( Unless otherwise specified, the first person I, stands for, Periyaval and not KTSVSarma.) At that time, I was in Nagappattinam conducting Chaturmasya Vratam, ( four months period of abstinence). There in the temple, a lot of co-co nuts used to be offered, ( as ‘chidaru-kai’ shattered to pieces on the hard rock floor of the temple).





  • Children used to crowd there in such density, that one could hardly find place to break the co-co nut fruits. People accompanying me were afraid that, some of the children may fall over me, (requiring me to have another bath), and so told them, not to crowd around there, shouting, “give way..go away”. Then on hearing this, one boy promptly replied – “Having put ‘chidaru-thengai’, to Pillaiyar, what right do you have to tell the children to go away? It is our right to collect ‘chidaru-thengai’ and you have no right to tell us to go away.!”. Looking at his authoritative tone and clarity of natural right, I was convinced that what he said was perfectly correct. The offerings to a child-god must go to children first.

  • When you break the ‘Ahamkara’, or ‘ego’, that is the head thickened by pride, in side you will taste the sweet milk of the fruit – that is the idea. There is no God more obese than Ganapathi. His head is the Elephant head. He has a big tummy. Big ears. Big body. One of his name is ‘sthula kaayar’ or gross bodied. He is like a mountain. Still he is only a child. OK. What is attractive about a baby? It should eat well and look chubby. It should not look puny and under nourished. A Sanyasi or hermit should not eat too much and should not look fat. As you get older, it is preferable to fast at night. But a baby should be well fed and look rolly-polly. So this baby God is well rounded and has ‘modakam’, in his hand.

  • Every animal has some special body part. Savariman’s ( a variety of deer) tail is special.

    Peacock’s feather are special. It deters it’s opponents by spreading it’s feathers, thereby showing itself to be bigger than it’s size and attracts females with a colourful display. It will take care to protect it’s own feathers. Similerly the Elephant keeps its two front (molars) ivory tusks, sharpened finely and clean white, by rubbing them against tree trunks. This Pillaiyar elephant broke one of it’s tusks and wrote the whole of Maha Bharatha, the Epic, by using it as a pen. Its tusk is symbolic of it’s beauty pride. Elephants are even known as ‘tuskers’. But Pillaiyar, breaks one of his prized tusks, to show that, ‘to write the story which tells Dharma is more important than, beauty, pride and self respect. By sacrificing a tusk, the Tusker shows that Justice and Dharma are more valuable.A capable man does not need special weapons or instruments. At one time He killed a rakshasa or asura with a tusk. Then it was a mighty weapon. Then he used it to write the Epic Maha Bharatha. So it was used as a mighty Pen.

    You can never get tired of looking at the moon, oceon and elephant.As you keep on looking at them, for however long, an endless happiness over whelms you. So this Child God, to make you happy whenever you look at him, has assumed the form of a Pachyderm. That is bliss personified. It depicts the ever lasting Love principle. He was born of Love. When the Mother Goddess was fighting Bhandasura, he had defended himself by interposing the Vigna Yantra. At that time Parameswara looked at the Mother with a smile. She smiled back and Pillaiyar was born, who shattered the Vigna Yantras or obstacles. So the son of Parvathy Parameswara, that is Pillaiyar is also called Vigneswara or the destroyer of impediments or obstacles. Before you pray to any God, you are required to get his approval. Doing obeisance to Him as the only God is known as, ‘Ganapatyam’.

    In front of Ganapathy, the devotees catch hold of their ears crosswise, and do sit-ups, three times. This is known as Thoppukkaranam. There is a story that this tradition started from Maha Vishnu. He is supposed to be Parvathy’s brother. Pillaiyar as only a child can do, cought hold of the Sudarshna Chakra of Maha Vishnu and put it in his mouth. Maha Vishnu realised that it is impossible to get it back from Pillaiyar, by force or by requesting. He thought, may be by doing something funny, you could make the baby laugh and the Sudarshan Chakra may fall out and he could grab it. So using his four hands he got hold of his ears and did some sit-ups, while dancing and pirouting. The baby-God burst out laughing. The Chakra fell out and Maha Vishnu grabbed it. Dhorbih karnam, in Sanskrit means, ‘ears by hands’. So this over time became Thoppukkaranam. Any job if it is to go smoothly, without hiccups, you need Ganapathy’s grace. This beautiful Baby God, removes impediments and hurdles. By praying to Him, let us look forward to a life of happiness and fulfilment.




    http://vedabhavan.org/pillaiyar-symbolic-meanings/
 
Pillayar

Pillayar


  • September 16, 2015

    pillayar-300x200.jpg







    H.H.Sri Paramacharyal of Kanchi Kamakoti Peetam


    It is a special trait of Tamil Nadu, that it has Temples for Pillaiyar or Ganapathi everywhere. Even without a formal name of a Temple, without any roof or walls or building, Pillaiyar can be under a tree, or a road corner, or on the banks of a pond or river, virtually anywhere, you can see him, seated on a pedestal, with the sky as the roof. He has thus occupied more places in Tamil Nadu, than any other God, in any other State. He is lovingly called, ‘Pillaiyar’, in typical endearing Tamil word, ‘Pilly’ means Son, and ‘yar’ is an additive of respect.



  • Siva and Parvathy as the parents of the Universe, have him as the first son.

    ‘Kumara’, also means Son. All over India, Kumara/Kumaran/Kumaraswamy, means the second son of Parvathy Parameswara. In Tamil however the ‘yar’ suffix is not added to the second son’s name, but only to ‘Pillaiyar.
    He is the first son, child God. But he is the fore most. First there was ‘pranva’ or ‘ohm’.

    Everything came out of that ‘pranava’ – the entire Universe and all living things. If you look at the elephant face and the rounded trunk of his, it will look like a pictorial symbol of Pranava or Ohm.

    Despite being a child, he is also the origin. Being a baby God, he is foremost in lifting the devotees by their hands.
    Avvaiyar’s experience is truely representative of his extreme beneficience. She was a great devotee of Pillaiyar. She has sung the ‘Vinayagar Agawal’, concentrating on Pillaiyar at the centre of her eyebrows. The poem in itself contains the essence of ‘Yoga Sastra. By chanting that ‘Vinayagar Agawal’, one can attain Nirvana.

    There are many stories of Pillaiyar and Avvaiyar. The one referred to here is something like this. Sundaramurthy Swamigal, ( one of the great Siva Bhaktas and poets collectively known as Nayanmars), and Seraman, the Chera King, good friends both, started on a trip to Kailasa, the abode of Siva Parvathy, in the Himalayas. They met Avvaiyar enroute. They wished that she should accompany them. She declined, on grounds that, she was busy paying obeisance to Pillaiyar. She told them to proceed, saying, that for her doing prayers to Pillaiyar itself was as good as a visit to Kailash. They continued on their way. Avaiyar completed her Pooja. At the end Pillaiyar appeared before her and in one go, lifted her by his trunks and reached her to Kailasa. On their arrival, Sundaramurthy Swamigal and Seraman, were surprised to see her already there, before them. Seraman sang, ‘Thiru Kailaya Ula’, a travalogue song of visit to Kailash. This incident is also referred in, Arunagirinather’s Thiruppugazh, addressed to Pillaiyar’s younger brother, Muruga or Subrahmanya. In one second, the old woman Avvaiyar was fetched to Kailasa. Pillaiyar bestows big boons so easily and freely.


    http://vedabhavan.org/pillayar/


 
Ganesha Pancharatnam

Ganesha Pancharatnam

September 16, 2015

Ganesha Pancharatna Sotram:
Audio Mp3: Rendered by Brahma Sri R.Venkatrama Ghanapatigal


| Download MP3




॥ श्रीगणेशपञ्चरत्नस्तोत्रम् ॥

मुदाकरात्तमोदकं सदाविमुक्तिसाधकं
कलाधरावतंसकं विलासिलोकरञ्जकम् ।
अनायकैकनायकं विनाशितेभदैत्यकं
नताशुभाशुनाशकं नमामि तं विनायकम् ॥ १॥

नतेतरातिभीकरं नवोदितार्कभास्वरं
नमत्सुरारिनिर्जरं नताधिकापदुद्धरम् ।
सुरेश्वरं निधीश्वरं गजेश्वरं गणेश्वरं
महेश्वरं तमाश्रये परात्परं निरन्तरम् ॥ २॥

समस्तलोकशङ्करं निरस्तदैत्यकुञ्जरं
दरेतरोदरं वरं वरेभवक्त्रमक्षरम् ।
कृपाकरं क्षमाकरं मुदाकरं यशस्करं
मनस्करं नमस्कृतां नमस्करोमि भास्वरम् ॥ ३॥

अकिञ्चनार्तिमार्जनं चिरन्तनोक्तिभाजनं
पुरारिपूर्वनन्दनं सुरारिगर्वचर्वणम् ।
प्रपञ्चनाशभीषणं धनञ्जयादिभूषणं
कपोलदानवारणं भजे पुराणवारणम् ॥ ४॥

नितान्तकान्तदन्तकान्तिमन्तकान्तकात्मजं
अचिन्त्यरूपमन्तहीनमन्तरायकृन्तनम् ।
हृदन्तरे निरन्तरं वसन्तमेव योगिनां
तमेकदन्तमेव तं विचिन्तयामि सन्ततम् ॥ ५॥

महागणेश्पञ्चरत्नमादरेण योऽन्वहं
प्रगायति प्रभातके हृदि स्मरन् गणेश्वरम् ।
अरोगतामदोषतां सुसाहितीं सुपुत्रतां
समाहितायुरष्टभूतिमभ्युपैति सोऽचिरात् ॥ ६॥

।। इति श्रीमच्छङ्करभगवद्पाद कृतं श्रीगणेशपञ्चरत्नस्तोत्रं सम्पूर्णम् ॥


http://vedabhavan.org/ganesha-pancharatnam/



 
Ganapathyam

Ganapathyam



  • September 16, 2015

    243bc97ce216e6ed57b15a76bfe580661-211x300.jpg






    The worship of Ganapati (Ganapatyam) as a remover of all impediments, is one of the six forms of worships(Shanmatha) established by Adi Sankara. Ganapati is the primordial deity in Ganapatyam. Temples dedicated to Ganpati according to Vastu texts, should find a separate place in the village layout, be it a Saivaite settlement or a Vaishnavite one. Ganesa also appears as a Parivara Devata in the temples of Siva or Vishnu. In the latter, he goes by the name Tumbikkai Alwar. Ganapati is also the primordial scribe, dedicated to writing the entire Mahabharata-at the dictate of sage Vyasa. Ganapati images are portrayed either standing, seated, or dancing. (Nrittya Ganapati).

  • Vatapi ‘Ganapati is a popular deity in Tamil Nadu. Most of the carnatic musical conerts begin with the song Vatapi Ganaptim Bhaje. Ganapati is essentially conceived mostly as a Brahmachari, but also with his consorts Siddhi-Buddhi, or Vallabh. There are various forms of Ganapati. Among the Upanishads, the one named Ganapati Upanishads extols the greatness of the Ganapati Cult. The worship of Ganapati is not only popular among the Hindus, but also among Buddhists. Ganapati worship is popular in far eastern countries like Indochina, Cambodia, Japan and other adjacent countries.

  • Ganapati Pooja is a precondition for the performance of any religious function or rite, individualistic or congregational. Pooja for Vinayak is called Vishvaksena Aradhanam, among Vaishnavites.

  • Volumes can be written about Ganesh’s birth, how he came to have the elephant hand, why he holds a broken tusk in his hand, his powers of blessings. He is the personification of OM, the Pranavamanthra. Whatever may be the origin of the elephant head, the elephant is ever attractive and pleasing to children and elders. The pot bellied, elephant headed Ganesha has a rat for his vehicle and is the benevolent deity of the Hindu Pantheon.
    In the South Indian villages there are many temples exclusively for the worship for Vinayaka but there is no village where he does not exist. You can see him on the river banks, under a banyan tree, without a temple, without a canopy-people worship the riverside Ganapathis-the first thing after their bath.

  • Several forms of Maha Ganapathi

  • Sri Maha Ganapathi, being the first and foremost of these forms of worship, has manifested himself in several forms like Heramba Ganapathi, Lakshmi Ganapathi, Uchchista Ganapathi, Sankatahara Ganapathi and so on.
  • There are around 32 most popular forms of Ganapathi and nearly 72 forms of Ganapathi and their “Mantras” are said to be in vogue.

http://vedabhavan.org/ganapathyam/
 
List of Famous Ganesha Temples in India


List of Famous Ganesha Temples in India



16th September 2015

The Lord of Good Fortune, Lord of Beginnings and the Remover of Obstacles, Ganesha is one such deity who is worshiped by most people regardless of any other spiritual affiliations.

Be it a prayer for a safe journey or at the beginning of a wedding or a birth of a child, Ganesha is more often than not, the go-to Lord for blessings.

On the eve of Ganesha Chaturthi, here we bring you a list of temples in India that add more stories and miracles about the Elephant-faced God.

Ashtavinayaka, Maharashtra

Ashtavinayaka or eight Ganeshas is located in Maharashtra and the Ashtavinayaka yatra covers the eight holy temples of Ganesha . All the Eight Ashtavinayak Templs are Swayambhu (self-originated) and Jagrut. The various names of Lord Ganesh are Moreshwar, Mahaganpati, Chintamani, Girijatmak, Vighneshwar, Siddhivinayak, Ballaleshwar and Varad Vinayak .

A pilgrimage to the Ashtavinayaka is considered to be a milestone in the devotee’s life. The eight temples/idols of the Ashtavinayaka in their religious sequence are: 1. The Moreshwar Temple at Moregaon 2. The Siddhivinayak Temple at Siddhatek 3. The Ballaleshwar Temple at Pali 4. The Varadavinayak Temple at Mahad 5. The Chintamani Temple at Theur 6. The Girijatamak Temple at Lenyandri 7. The Vighnahar Temple at Ozar 8. The Mahaganapati Temple at Ranjangaon.

Siddhivinayak Temple, Mumbai

It is one of the most famous Ganesh temples in the country. The temple, with one of the richest temple trust of India, is considered as one of the must visit temple for during Ganesh Chaturthi. It is believed that the devotees who bow their heads to the idols will get their wishes. The temple has also received the ‘Best Trust Award’ for its contribution to welfare and social activities.

Dagdusheth Ganpati, Pune

The temple is one of the major attraction in Pune for its golden idol. The Dagdusheth Ganpati trust also comes in one of the richest trusts in Maharashtra. Every year millions of worshipers offer their prayers here.

Kanipakam Vinayaka, Chittoor

Located 75 kms off Tirupathi, the temple was built by Chola king Kulothinga Chola I. The idol of Ganesha is black in colour and has white, yellow and red as colours adoring his forehead.

Brahmotsavam is a festival which is celebrated with great enthusiasm from the day of Vinayaka Chavithi and is continued for 20 days.

Dodda Ganesh, Karnataka

The temple is situated on the Bull Temple Road in Basavanagudi, Bangalore. The temple has an idol that is carved out of a single stone and stands at 18 ft in height and 16 ft in width. Apart from being known for its huge structure, devotees are known to gather to see the gigantic idol being smeared in butter.

Karpaka Vinayakar, Tamil Nadu

The temple is known as the Pillaiyar patti Pillaiyar temple which is a rock- cut cave turned into a shrine dedicated to Lord Ganesha.

Manakula Vinayaka Temple, Pondicherry

The temple dates back before 1666, and houses the Manakula Vinayaka. History says that the uniqueness about this temple is that during the French rule, this Ganesha has been thrown several times into the sea but used to reappear the same place the next day.

Shree Vinayaka Devaru Temple, Idagunji

Located in town in Uttara Kannada of Karnataka, the temple has about 1 million devotees visiting it annually. The 1500 years old temple is known for its architecture and for the Ganesha idol that has only two hands.

Ucchi Pillayarkoil, Tamil Nadu

The temple is situated on top of a rock in Trichy, Tamil Nadu. Being situated on a rock it is famous for its amazing rock architecture and is also known as the Rockfort Temple. The temple was built in the 7th century. The Archaeological Department of India looks after the maintenance of this place.

Parvathi Ganesha, Hampi, Karnataka

Hampi is a famous heritage site in Karnataka which contains the ruins of Vijayanagara kingdom built in the 14th Century. It draws attention of tourists who come here to admire the architectural creativity of the Vijayanagara period. Out of all the monuments present here the most popular one is the Parvati Ganesha temple. The best part of this place is the 16 ft high Ganesha idol. The idol looks quite main stream unless you go around the back where you will find that Lord Ganesha is actually sitting on the lap of his mother Parvati.

Gokarna MahaGanapathy Temple, Gokarna, Karnataka

The temple dates back to centuries, in an era long before the events of the Ramayana took place. It is said that this temple stands as a mark of respect to Lord Ganapathi, who had tricked the demon Ravana into giving up his special lingam - The Atmalingam. The temple has a rare standing Ganesha, 5 feet (1.5 m) tall and two-handed; on his head is a small depression, which is said to be a mark of Ravana’s fury. The temple has its own identity and is also known as Sidda Ganapati

Pillaiyarpatti Karpaga Vinayagar Kovil Temple, Chettinad, Tamil Nadu

Believed to be 1600 years old, Karpaga Vinayagar temple in Chettinad, Tamil Nadu has this image of Karpaga (black) Vinayagar (Lord Ganesha), carved out of a single black stone by a sculptor called Ekkattur Koon Peruparanan. An unique element about the temple is that the idol faces north.

Gulur Ganesha Temple, Tumkur District, Bangalore

The temple situated in a small village in Tumkur district is known for its unique story behind the origin of the temple. Story goes that Lord Ganesha appeared in his dreams and asked him to worship Him. Unaware of the formalities involved in performing a puja, the devotee took guidance from a sage and built an idol of Lord Ganesha, about 8 to 9 feet tall, and performed rigorous puja continuously for 30 days. This age-old tradition is followed to this day, where an idol of Lord Ganesha is hand sculpted with locally available materials.


http://www.newindianexpress.com/nat...emples-in-India/2015/09/16/article3031808.ece
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top