• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sreeman NArAyaNeeyam

Status
Not open for further replies.
Introduction

நாரயணீயத்தைத் தமிழில் அளிக்கவேண்டும் என்று நெடுநாள் அவா.
கண்ணன் அருளுடன் அதைத் தொடங்குகின்றேன்

நூல் மூலத்தை உச்சரிப்புடன் வழங்குவது என் வழக்கம்.

தமிழில் இருந்த போதிலும் உச்சரிப்பைக் காட்டும் எண்களின்
உதவியுடன் தவறுகள் இல்லாமல் படிக்க இயலும்.

தசகம் எண்ணையும், ஸ்லோகம் எண்ணையும் அளிப்பதால்
மூல நூலை உடன் வைத்துக் கொண்டு வாசிக்கவும் இயலும்.

தியான சுலோகங்களுடன் தொடரைத் தொடங்குவோம்.
உங்கள் உண்மையுள்ள,
விசாலாக்ஷி ரமணி
 
தியான ஸ்லோகங்கள்

தியான ஸ்லோகம் (1)

சூர்யஸ்பர்தி4 கிரீடம் ஊர்த்4வதிலக –
ப்ரோத்3பா4ஸி ப2லாந்தரம்
காருண்யாகுல நேத்ரமாத்ர –
ஹஸித்தோல்லாஸம் ஸுநாஸாபுடம்|
க3ண்டோ3த்3யன் மகராப4 குண்ட3லயுக3ம்
கண்டோ2ஜ்வலத் கௌஸ்துப4ம்
த்வத்3ரூபம் வனமால்ய ஹாரபடல-
ஸ்ரீவத்ஸ தீ3ப்தம் ப4ஜே||(2:1 )


சூரியனுக்கு நிகராகப் பிரகாசிக்கும் கிரீடத்தையும்; திலகத்தால் அழகூட்டபட்டநெற்றியையும்; கருணை வழியும் கண்களையும்; கனிந்த புன்னகையையும்;அழகிய நாசியையும்; கன்னங்களில் பிரகாசிக்கும் இரு மகர குண்டலங்களையும்; வனமாலை, முத்து மலை, ஸ்ரீ வத்சம் இவைகளுடன் விளங்கும் தங்கள் தோற்றத்தையும் நான் சேவிக்கின்றேன்.

தியான ஸ்லோகம் (2)


கேயூராங்க3த3 கங்கனோத்தம –
மஹாரத்னாங்கு3லி யாங்கித
ஸ்ரீமத்3பா3ஹு சதுஷ்க ஸங்க3த
க3தாச2ங்கா2ரி பங்கேருஹாம் |
காஞ்சித் காஞ்சன காஞ்சி லாஞ்சித
லஸத் பீதாம்ப3ராலம்பி3னீம்
ஆலம்பே3 விமலாம்பு3ஜ த்3யுதிபதா3ம்
மூர்த்திம் த்வார்த்திச்சி2த3ம்||( 2:2)


தோள்வளைகள், கைக்கட்டு வளையல்கள், மணிக்கட்டு வளையல்கள், சிறந்த ரத்தினங்கள் பதித்த மோதிரங்கள், இவைகளால் அலங்கரிக்கப்பட்ட காந்தி பொருந்திய நான்கு கைகளில் இருக்கின்ற கதை, சங்கு, சக்கரம், தாமரைப் பூ இவைகளையும்; தங்க அரை நாணால் அலங்கரிக்கப் பட்ட பிரகாசிக்கும் பட்டுப் பீதாம்பரத்தையும்; நிர்மலமான தாமரைப்பூ போன்ற காந்தியுடைய திருப்பாதங்களையும்; துக்கங்களைப் போக்கடிக்கும் திருமேனியையும் நான் வணங்குகிறேன்.
 
த3ச’கம்1 ( 1 to 5)

1. ஸ்ரீ ப4க3வன் மஹிமானு வர்ணனம்

ஸாந்த்ரா நந்தா3வ போ3தா4த்மகம் அனுபமிதம்

கால தே3சா’வதி4ப்4யாம்
நிர்முக்தம் நித்ய முக்தம் நிக3மச’த ஸஹஸ்ரேண
நிர்ப4ஸ்யமானம்|
அஸ்பஷ்டம் த்3ருஷ்டமாத்ரே புனருறு
புருஷார்தா2த்தமகம் ப்3ரஹ்ம தத்வம்
தாத்தாவத் பா4தி ஸாக்ஷாத் குருபவனபுரே
ஹந்த பா4க்3யம் ஜனானாம் || (1 - 4)

பரிபூர்ண ஆனந்தம், ஞானம், இவற்றைத் தன் ஸ்வரூபமாக உடையதும்; உவமை யற்றதும்; உயந்த தத்துவம் ஆனதும்; காலம், தேசம் இவற்றின் எல்லைக்குள் கட்டுபடாததும்; உபநிஷத்துக்களால் உரைக்கப்பட்டதும்; தரிசித்த மாத்திரத்திலேயே மோக்ஷத்தைத் தருவதும்; மாயையிடம் இருந்து விடுபட்டதும் ஆகிய பரபிரம்மம் என்பதே குருவாயூரில் பிரத்தியக்ஷமாக விளங்குகின்றது. (1- 4)
 
ஏவம் து3ர்லப்4ய வஸ்துன்யபி ஸுலப4தயா
ஹஸ்தலப்3தே4 யதன்யத்
தன்வா வாசா தி4யா வா ப4ஜதி ப3த ஜன:

க்ஷுத்3ரதைவ ஸ்புடேயம் |
ஏதே தாவத்3 வயம் து ஸ்தி2தர மனஸா

விச்’வபீடா3 பஹத்யை
நிச்’சே’ஷாத் மானமேயம் கு3ருபவன புராதீ4ச’

மேவாச்’ர யாம: ||(1- 2)

இந்த விதமாக எளிதில் அடைய முடியாத வஸ்து கையில் கிடைத்திருந்த போதும்; ஜனங்கள் வேறு தெய்வங்களைத் தம் உடலாலும், மனத்தாலும், வாக்கினாலும் ஆராதிக்கின்றார்கள். இது சுத்த அறிவின்மை! இதை அறிந்து கொண்ட நாங்கள், எல்லாத் துக்கங்களையும் போக்குவதற்காக, ஒருநிலைப் பட்ட மனத்துடன், அனைத்துப் பொருட்களின் அந்தராத்மாவாகிய குருவாயூரப்பனை ஆச்ரயிக்கின்றோம். (1-2)
 
த3ச’கம்1. ஸ்ரீ ப4க3வன் மஹிமானு வர்ணனம்

ஸத்வம் யத்தத் ப்ராப்4யமபரிகலனதோ
நிர்மலம் தேன தாவத்
பூ4தைர் பூ4தேந்த்3ரியயைஸ்தே வபுரதி ப3ஹுச':

ச்’ரூயதே வ்யாஸ வாக்கியம்|
தத்ஸ்வச்ச2த் வாத்3ய த3ச்சா2தி3த பரஸுக2

சித்3க3ர்ப4 நிர்பா4ஸ ரூபம்
தஸ்மின் த4ன்யா ரமந்தே ச்’ருதிமதி மது4ரே

ஸுக்3ரஹே விக்3ரஹே தே || ( 1- 3)

ராஜச தாமச குணங்கள் சேராத, பரிசுத்தமான, பிரசித்தி பெற்ற, சத்துவ குணத்தாலும்; பஞ்ச பூதங்களாலும்; ஏகாதச இந்திரியங்களாலும்; ஆன தங்கள் சரீரம் தங்கள் இஷ்டப்படி உண்டானது. இது வியாச முனிவரின் புராணங்களில் கூறப்படுகின்றது. பரிசுத்தமான, மறைக்கப்படாத, பரமானந்தத்தையும் ஞானத்தையும் தன் கர்ப்பத்தில் கொண்ட, பிரகாசமான தங்கள் லீலா விக்ரஹத்தினால் காதிற்கும் மனத்திற்கும் இன்பமும் சுகமும் அடைந்த பாக்கியசாலிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றார்கள்.(1-3)
 
நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி4
பரமானந்த3 பீயூஷ ரூபே
நிர்லீனானேக முக்தாவலி சு’ப4க3தமே

நிர்மலப்3ரஹ்ம ஸிந்தௌ4 |
கல்லோலோல்லாஸ துல்யம் க2லு விமலதரம்

ஸத்தவ மாஹுஸ் ததா3த்மா
கஸ்மான்னோ நிஷ்கலஸ்த்வம் ஸகல இதி வசஸ்

த்வத்கலாஸ்வேவ பூ4மான்|| (1- 4)

கலக்க முடியாததும், எப்போதும் நிறைந்திருப்பதும், கால தேச வரையறைகள் இல்லாததும், அமிர்த ஸ்வரூபம் ஆனதும், தன்னிடத்தில் லயித்துள்ள அனேக முக்தர்களால் அழகு பெற்றதும், நிர்மலமானதும் ஆகிய பெரிய சமுத்திரத்தில் பரிசுத்தமான சத்வ குணம் பெரிய அலைகளுக்குச் சமம் அல்லவா? இப்படிப்பட்ட உம்மை நிஷ்கல பிரம்மம் அல்ல என்று எங்கனம் கூறுவோம்? சகலன் என்ற சொல் தங்கள் அம்சாவதாரங்களுக்கு மட்டுமே பொருந்தும். (1-4)
 
[h=1]த3ச’கம்1. ஸ்ரீ ப4க3வன் மஹிமானு வர்ணனம்[/h]
நிர்வ்யாபாரோsபி நிஷ்காரணமஜ! ப4ஜஸே
யத் க்ரியாமீக்ஷணாக்2யாம்
தேனைவோதைதி லீனா ப்ரக்ருதிரஸதி

கல்பாsபி கல்பாதி3காலே|
தஸ்யா: ஸம்சு’த்3த4மம்ச’ம் கமபி தமதி

ரோதா4யகம் ஸத்வரூபம்
ஸத்வம் த்4ருத்வா த3தா4ஸி ஸ்வமஹிம

விப4வாகுண்ட2! வைகுண்ட2! ரூபம் || ( 1- 5)

ஜனனம் அற்ற விஷ்ணுவே! நீர் உண்மையில் செயலற்றவராக இருந்த போதிலும் காரணமே இல்லாமல் மாயை ஏவுவது போன்ற செயல்களைச் செய்கின்றீர்கள். தங்களிடம் லயித்திருந்ததால் இல்லாததைப் போலத் தோன்றிய மாயை, சிருஷ்டியின் போது மீண்டும் வெளிப்படுகின்றது. உங்கள் யோக மகிமையால் தடையற்ற சிற் சக்தியுடைவர் நீர். மாயையை ஏவுகின்ற நீர் சுத்தமான சத்துவ குணத்தின் வடிவத்தை, மாயையின் ஓரம்சத்தை எடுத்துக் கொண்டு லீலா விக்ரஹமாகத் தரிக்கின்றீர். (1-5)
 
தத்தே ப்ர்த்யக்3ர த4ராத4ர லலித
கலாயாவலி கேலிகாரம்
லாவண்யஸ்யைகஸாரம் ஸுக்ருதிஜன
த்3ருசா’ம் பூர்ண புண்யாவதாரம் |
லக்ஷ்மி நிச்’ச’ங்கலீலா நிலயன மம்ருத
ஸ்யந்த3 ஸந்தோ3ஹ மந்த:
ஸிஞ்ச’த் ஸஞ்சிந்தகானாம் வபுருரனுகலயே
மாருதாகா3ரநாத2! || (1- 6)

நீருண்ட மேகத்தைப் போன்றதும், காயாம்பூக் கொத்தைப் போன்றதும், அழகின் திரட்சி ஆனதும், புண்ணியம் செய்தவர்களின் கண்களுக்குப் புண்ணியங்களின் பூரண அவதாரம் ஆனதும், லக்ஷ்மி தேவி சங்கோஜம் இல்லாமல் லீலை செய்யும் இடமானதும், தியானம் செய்பவர்களின் உள்ளத்தில் பிரம்மானந்தம் என்னும் அமிர்த தாரையை வர்ஷிக்கின்றதும் ஆகிய தங்கள் திருமேனியை நான் இடைவிடாது சிந்திக்கின்றேன். (1-6)
 
Madam, Thanks for taking up this new initiative to translate the Sreeman Narayaneeyam in Tamiil! May the Divine Lord Guruvayurappa bless you ever more!
 
Thank you sir for the blessings. :)

As usual I will pass on the blessings to my sons and their family members. They need the blessings more than me! :)

Can you guess why? I have already lived my long life well and they being young have their entire life ahead of them!

I had done the translation earlier from dasakam 37 onwards - from the Birth of Krishna till the end of the Naraayaneeyam.

Now I am catching up with the first 36 dasakams which got left out - since I wanted to concentrate only on Krishna avatar.

It was then aptly named as KaNNanin Kathai Ithu. :)
 
த3ச’கம் 1 ஸ்ரீ ப4க3வன் மஹிமானு வர்ணனம்

கஷ்டா தே ஸ்ருஷ்டி சேஷ்டா ப3ஹுதர
ப4வகே2தாவஹா ஜீவபா4ஜா
மித்யேவம் பூர்வமாலோசித மஜித!

மயா நைவமத்3யாபி4ஜானே|
நோசேஜ்ஜீவா: கத2ம் வா மது4ரதரமித3ம்

த்வத்3வபுச்’ சித்3ரஸார்த்ரம்
நேத்ரை: ச்’ரோத்ரைச்’ச பீத்வா பரமரஸ

ஸுதாம்போ4தி4 பூரே ரமேரன் || (1-7)

மாயையினால் வெல்லப் படாதவரே! ஜீவர்களுக்குப் பலவகையான சம்சாரத் துன்பங்களைத் தருகின்ற தங்கள் சிருஷ்டி மிகவும் கொடியது என்று முன்பு எண்ணினேன். இப்போது அவ்வாறு எண்ணவில்லை. நீங்கள் சிருஷ்டிக்காவிடில் மிகவும் மதுரம் ஆனதும், சிதானந்த ரசத்தால் உள்ளும் புறமும் நிறைந்த தங்கள் திருமேனியைப் பக்தர்கள் தங்கள் கண்களாலும், காதுகளாலும் எங்கனம் பருகுவர்? பரமானந்தமாகிய அமிர்தக் கடலில் எங்ஙனம் விளையாடுவர்? (1-7)
 
நம்ராணாம் ஸந்நிதத்தே ஸததமபி
புரஸ்தை ரனப்4யர்தி2தான
ப்யர்த்தா2ன் காமானஜஸ்ரம் விதரதி

பரமானந்த3 ஸாந்த்3ராம் க3திம் ச |
இத்த2ம் நிச்’சே’ஷலப்4யோ நிரவதி4கபல:

பாரிஜாதோ ஹரே! த்வம்
க்ஷுத்3ரம் தம் ச’க்ரவாடீ த்3ருமமபி4லஷதி

வ்யர்த்தமர்த்தி வ்ரஜோsயம் || ( 1- 8)

ஹரே கிருஷ்ணா ! சமஸ்த ஜனங்கள் அடையக் கூடியதும், எல்லையில்லாத மோக்ஷத்தைப் பலனாகத் தருவதும் ஆகிய பாரிஜாதம் என்னும் தாங்கள், பணிபவர்கள் முன்பு எப்போதும் பிரத்தியக்ஷம் ஆகின்றீர். அவர்கள் வேண்டிக் கொள்ளாமல் இருந்த போதிலும் சிறந்த புருஷார்த்தங்களையும், உயரிய மோக்ஷத்தையும் பலனாகக் கொடுக்கின்றீர்கள். என்றாலும் இந்த யாசகர்கள் கூட்டம் உபயோகம் இல்லாத பலன்களைத் தரும் இந்திரனுடைய பாரிஜாதத்தையே விரும்புகின்றது.( 1-8)
 
த3ச’கம் 1 ஸ்ரீ ப4க3வன் மஹிமானு வர்ணனம்

காருண்யாத் காமமன்யம் த3த3தி க2லு பரே
ஸ்வாத்மதஸ்த்வம் விசேஷாத்
தை3ச்’வர்யா தீ3சதேsன்யே ஜக3தி பரஜனே

ஸ்வாத் மனோsபீச்’வரஸ்த்வம் |
த்வ்ய்யுச்சைராரமந்தி ப்ரதிபத3 மது4ரே

சேதனா: ஸ்பீத பா4க்யா
ஸ்த்வம் சாத்மராம ஏவேத் யதுலகு3ணக3ணாதா4ர!

சௌ’ரே! நமஸ்தே|| (1- 9)

பிற தெய்வங்கள் மோக்ஷத்தைத் தவிர மக்கள் விரும்பும் பிற வரங்களைத் தருகின்றார்கள். தாங்கள் ஸ்வ ஸ்வரூபமான மோக்ஷத்தையே தருகின்றீர்கள். அவர்கள் அஷ்ட ஐஸ்வர்யங்களைக் கொண்டு நிக்ரஹ அனுக்ரக சக்தி உடையவர்களாக இருக்கின்றார்கள். தாங்கள் தங்களிடத்தும் நிக்ரஹ அனுக்ரஹ சக்தி உடையவர். தங்கள் அருகில் நெருங்க நெருங்க ஜீவர்கள் அதிக ஆனந்தம் அடைகின்றார்கள். தாங்களோ எனில் தங்களிடமே ரமிக்கின்றீர்கள். ஒப்பார் இல்லாத குண நலன்களின் இருப்பிடமாகிய கிருஷ்ணா! சூர வம்சத்தில் பிறந்தவரே! நமஸ்காரம். (1-9)
 
ஐஸ்வர்யம் ச’ங்கராதீ3ச்’வர விநியமனம்
விச்’வதேஜோ ஹராணாம்
தேஜஸ்ஸம்ஹாரி வீர்யம் விமலமபி யசோ

நிஸ்ப்ருஹைச்சோ’பகீ3தம் |
அங்காஸங்கா ஸதா ஸ்ரீரகி2ல வித3ஸி ந

க்வாபி தே ஸங்க வார்தா
தத்வாதாகா3ரவாஸின்! முரஹர!

ப4க3வச்ச2ப்3த3 முக்2யாச்’ரயோsஸி || ( 1-10)

முரனைக் கொன்றவரே! குருவாயூரில் வசிக்கும் கிருஷ்ணா! சங்கரன் முதலிய தெய்வங்களையும் நியமிப்பது தங்களுடைய ஐசுவரியம் ஆகும். தங்களுடைய வீர்யம் மற்ற எல்லோருடைய வீரியத்தையும் அபகரிக்கின்றது. ஒன்றிலும் ஆசை இல்லாத முக்தர்களும் உங்கள் புகழைப் பாடுகின்றார்கள். லக்ஷ்மி தேவி தங்கள் உடலிலேயே எப்போதும் குடி கொண்டிருக்கிறாள். எல்லாவற்றையும் அறிந்தவர் நீர். தங்களுக்கு எதிலும் பற்று என்பதே இல்லை. ஐஸ்வர்யம், யசஸ், ஸ்ரீ, வீரியம், ஞானம், அசங்கம் என்ற ஆறு குணங்கள் பொருந்தி இருப்பதால் நீரே பகவான் என்ற சொல்லுக்குப் பொருத்தமானவர் ஆகின்றீர்.(1-10)
 
த3ச’கம் 2 :- ப4க3வத்3ரூப வர்ணனம்

சூர்யஸ்பர்தி4 கிரீடம் ஊர்த்4வதிலக ப்ரோத்3பா4ஸி ப2லாந்தரம்
காருண்யாகுல நேத்ரமாத்ர ஹஸித்தோல்லாஸம் ஸுநாஸாபுடம்|
க3ண்டோ3த்3யன் மகராப4 குண்ட3லயுக3ம் கண்டோ2ஜ்வலத் கௌஸ்துப4ம்
த்வத்3ரூபம் வனமால்ய ஹாரபடல ஸ்ரீவத்ஸ தீ3ப்தம் ப4ஜே || (2 – 1 )

சூரியனுக்கு நிகராகப் பிரகாசிக்கும் கிரீடத்தையும்; திலகத்தால் அழகூட்டபட்ட
நெற்றியையும்; கருணை வழியும் கண்களையும்; கனிந்த புன்னகையையும்;
அழகிய நாசியையும்; கன்னங்களில் பிரகாசிக்கும் இரு மகர குண்டலங்களையும்;
வனமாலை, முத்து மலை, ஸ்ரீ வத்சம் இவைகளுடன் விளங்கும் தங்கள் தோற்றத்தையும்
நான் சேவிக்கின்றேன். (2 – 1)
 
கேயூராங்க3த3 கங்கனோத்தம மஹாரத்னாங்கு3லி யாங்கித
ஸ்ரீமத்3பா3ஹு சதுஷ்க ஸங்க3த க3தாச2ங்கா2ரி பங்கேருஹாம் |
காஞ்சித் காஞ்சன காஞ்சி லாஞ்சித லஸத் பீதாம்ப3ராலம்பி3னீம்
ஆலம்பே3 விமலாம்பு3ஜ த்3யுதிபதா3ம் மூர்த்திம் த்வார்த்திச்சி2த3ம் || ( 2 – 2)

தோள்வளைகள், கைக்கட்டு வளையல்கள், மணிக்கட்டு வளையல்கள், சிறந்த ரத்தினங்கள் பதித்த மோதிரங்கள், இவைகளால் அலங்கரிக்கப்பட்ட காந்தி பொருந்திய நான்கு கைகளில் இருக்கின்ற கதை, சங்கு, சக்கரம், தாமரைப் பூ இவைகளையும்; தங்க அரை நாணால் அலங்கரிக்கப் பட்ட பிரகாசிக்கும் பட்டுப் பீதாம்பரத்தையும்; நிர்மலமான தாமரைப்பூ போன்ற காந்தியுடைய திருப்பாதங்களையும்; துக்கங்களைப் போக்கடிக்கும் திருமேனியையும் நான் வணங்குகிறேன். (2 -2)
 
த3ச’கம் 2 :- ப4க3வத்3ரூப வர்ணனம்

யத் த்ரைலோக்ய மஹீயஸோsபி மஹிதம்
ஸம்மோஹனம் மோஹனாத்
காந்தம் காந்தி நிதா4னதோsபி
மது4ரம் மாது4ர்ய து4ர்யா த3பி|
சௌந்த3ர்யோத்தரதோsபி ஸுந்த3ரதரம்
தத்3ரூப மாச்’சர்யதோsபி
ஆச்’சர்யம் பு4வனே ந கஸ்ய குதுகம்
புஷ்ணாதி விஷ்ணோ விபோ4 || (2 – 3)

மூன்று உலகங்களிலும் பூஜிக்கப்படும் எல்லாவற்றையும் விட மேன்மையானது எதுவோ;
மனத்தைக் கவரக் கூடிய வஸ்துக்கள் அனைத்தையும் விட அதிகமாக மனதைக் கவரக் கூடியதோ;
காந்தி பொருந்திய எல்லா வஸ்துக்களையும் விட அதிக காந்தி பொருந்தியதோ; இன்பத்தைக் கொடுக்கும் எல்லா வஸ்த்துக்களையும் விட அதிக இன்பம் தர வல்லதோ;அழகிற் சிறந்த வஸ்துக்கள் அனைத்தையும் விட அதிக அழகு வாய்ந்ததோ; ஆச்சரியம் தரும் எல்லா வஸ்துக்களையும் விட அதிக ஆச்சரியம் தருவதோ அப்படிப்பட்ட தங்களுடைய திருமேனி இந்த உலகில் யாருக்குத் தான் இன்பத்தைத் தருவதில்லை? ( 2 - 3)
 
தத்தாத்3ருங் மது4ரத்மகம் தவ வபு: ஸம்ப்ராப்ய ஸம்பன்மயீ
ஸா தே3வி பரமோத்ஸுக சிரதரம் நாஸ்தே ஸ்வப4க்தேஷ்வபி |
தேனாஸ்யா ப3த கஷ்ட மச்யுத! விபோ4! தவ்த்3ரூப மனோக்ஞக
ப்ரேமஸ்தை2ர்யமயாத்3 ஆசாபலப3லாத் சாபல்ய வார்த்தோத3பூ4த் || ( 2 – 4)

தன, தானிய ரூபிணியாகிய லக்ஷ்மி தேவி உவமையற்றதாகிய, மனோஹரமாகிய, தங்கள் திருமேனியில் கொண்ட அதீதப் பற்றுதலால், தங்களை விடுத்துத் தன் பக்தர்களிடம் கூட அதிக நாள் இருப்பதில்லை. நம்பியவர்களைக் ஒருநாளும் கைவிடாத பிரபுவே ! இந்தக் காரணத்தாலேயே – லக்ஷ்மி தேவிக்குத் தங்கள் திருமேனியில் இருக்கும் அன்பின் காரணமாகவே, – அவள் நிலையற்றவள் என்ற அபகீர்த்தி உண்டாகி இருக்கின்றது. இது மிகவும் வருந்தத் தக்கதே. ( 2 – 4 )
 
த3ச’கம் 2 :- ப4க3வத்3ரூப வர்ணனம்

லக்ஷ்மிஸ் தாவக ராமணீயக ஹ்ருதைவேயம் பரேஷ்வஸ்தி2ரே
த்யஸ்மின்னன்யத3பி ப்ரமாண மது4னா வக்ஷ்யாமி லக்ஷ்மி பதே!|
எ த்வத்3 த்4யான கு3ணானுகீர்த்தன ரஸாஸக்தா ஹி ப4க்தா ஜனா:
தேஷ்வேஷா வஸதி ஸ்தி2ரைவ த3யித ப்ரஸ்தாவ த3த்தாத3ரா || ( 2 – 5)

ஹே லக்ஷ்மி காந்தா! இந்த லக்ஷ்மி தேவி தங்கள் ரூப லாவண்யத்தால் கவரப்பட்டதால் பிறரிடம் நிலை பெறாமல் இருக்கிறாள். இந்த விஷயத்தில் இன்னொரு அனுமானப் பிரமாணமும் உள்ளது. எந்த பக்தர்கள் தங்களை தியானித்துக் கொண்டும், உங்கள் கீர்த்தியைப் பாடிக் கொண்டும் ஆனந்தப் படுகின்றார்களோ அந்த பக்தர்களிடத்தில் லக்ஷ்மி தேவி ஸ்திரமாகவே வசிக்கின்றாள் அல்லவா?
(2 – 5)
 
ஏவம் பூ4த மனோஞதான வஸுதா4 நிஷ்யந்த3 ஸந்தோ3ஹனம்
தவ்த்3ரூபம் பரசித்3ரஸாயனமயம் சேதோஹரம் ஸ்ருண்வதாம் |
ஸத்3யா:ப்ரேரயதே மதிம் மத3யதே ரோமாஞ்சயத் யங்க3கம்
வ்யாசிஞ்சத்யபி சீ’த பா3ஷ்ப விஸரை: ஆனந்த மூர்சோ2த்ப4வை:|| (2 – 6)

இந்த விதமாகப் புது அமிர்த தாரையைப் பெருக்குகின்ற; பரபிரம்ம ஸ்வரூபமான; மனோஹரமான தங்கள் உருவத்தைப் பற்றிக் கேட்டவர்கள் தன் வயமாகி, ஆனந்தப் பரவசர்ளாகி, மயிர் கூச்செரிந்து குளிர்ந்த கண்ணீர்ப் பெருக்கில் நனைகின்றார்கள். (2 – 6)
 
At first typing the Tamil poems in Thirumanthiram appeared to be difficult.

After typing the Sanskrit Naayaayaneeyam typing Tamil tirumanthiram
appears to be as easy as singing a song.

Everything in life is relative. Nothing in life is an absolute in itslef!
 
த3ச’கம் 2 :- ப4க3வத்3ரூப வர்ணனம்

ஏவம்பூ4ததயா ஹி ப4க்த்ய பி4ஹிதோ யோக3:ச யோக3த்3வயாத்
கர்மஞானமயாத்3 ப்4ருசோ’த்தமதரோ யோகீ3ஸ்வரைர் கீ3யதே |
சௌந்தர்யைக ரஸாத்மகே த்வயி கலு ப்ரேமப்ரகர்ஷாத்மிகா
ப4க்தி நிச்’ரமமேவ விஸ்வ புருஷைர் லப்யா4 ரமா வல்லபா4 ||( 2 – 7)

பக்தி எனப்படும் மோக்ஷ உபாயம் இவ்வாறு பெருமை வாய்ந்ததாக இருப்பதால் தான் அது கர்ம யோகம், ஞான யோகம் என்னும் இரண்டைக் காட்டிலும் அதிக மேன்மை பெற்றுள்ளது என்று வியாசர் முதலான யோகீஸ்வரர்கள் போற்றுகின்றனர் . சௌந்தர்ய ஸ்வரூபமாகிய தங்களிடம் அன்பின் எல்லையாகிய பக்தி செய்வது என்பது அனைவருக்கும் மிக எளிதானது அல்லவா? (2 – 7)
 
நிஷ்காமம் நியத ஸ்வத4ர்ம சரணம் யத் கர்மயோகா3பி4த4ம்
தத் தூ3ரேத்ய ப2லம் யதௌ3பநிஷத3 ஞானோ பலப்4யம் புன:|
தத்தவ்யக்த தயா ஸூது3ர்க்க3மதரம் சித்தஸ்ய தஸ்மாத்3 விபோ4
த்வத் ப்ரேமத்மாக ப4க்திரேவ ஸததம் ஸ்வாதீ3யஸீ ச்’ரேயஸீ || (2 – 8)

பலனில் விருப்பம் இல்லாமல் செய்யும் கர்ம யோகம் நாளடைவில் பலன் தரும். உடனே தராது . வேதாந்த ஞானத்தால் அடையக் கூடிய மோக்ஷம் இந்திரியங்களுக்கும் மனத்துக்கும் எட்டாமல் உள்ளது. ஆகவே தங்களிடம் வைக்கும் பிரேமையின் வடிவமான பக்தி மிகவும் ருசிகரமாக உள்ளது என்று எல்லோரும் புகழுகின்றார்கள். (2 – 8)
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top