• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தெய்வத்தால் ஆகாது எனினும்...

Status
Not open for further replies.

JR

Hare Krishna
தெய்வத்தால் ஆகாது எனினும்...

அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். தாகம் எடுக்க தண்ணீர் வேண்டும் என்று மக்களிடம் முனிவர் கேட்டார் யாருமே ஊரில் அவரைக் கண்டு கொள்ளவில்லை.
கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு ..” இன்னும்
50வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது
வானம் பொய்த்துவிடும் ” … இந்த சாபம் பற்றி கேள்விப்...
பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல்
கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து
மன்னிப்பு கேட்டனர் ..
சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர் .வேறு வழியின்றி
அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர். மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான்
( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது
நம்பிக்கை ).
இன்னும் 50 வருடங்கள்மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான் …)
அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது …ஒரே ஒரு உழவன்
மட்டும் கலப்பையைக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான் .அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர்.
மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு … அவனிடம் கேட்டே விட்டனர் . நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா என்று ..
அதற்கு அவனின் பதில்தான் நம்பிக்கையின் உச்சம் ”’ 50
வருடங்கள் மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும். உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து உழுவது எப்பிடி என்றே எனக்கு
மறந்து போயிருக்கும்.. அதனால்தான் தினமும் ஒருமுறை உழுது கொண்டு இருக்கிறேன் ” என்றான்.
இது வானத்தில் இருந்த பரந்தாமனுக்கு கேட்டது. அவரும் யோசிக்க ஆரம்பித்தார் ..”50 வருசம் சங்கு ஊதமால் இருந்தால் எப்பிடி ஊதுவது என்று மறந்து போயிருமே ”. என்றே நினைத்து சங்கை எடுத்து
ஊதிப் பார்க்க ஆரம்பித்தார் …. இடி இடித்தது …மழை பெய்ய ஆரம்பித்தது …நம்பிக்கை ஜெயித்து விட்டது .
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்
நன்றி யாரோ ஒருவர்










Source: FB | dinakaran daily newspaper
 
First, the saint could have drawn water from the well. It shows his arrogance.

Secondly, the God has to learn from a poor farmer, showing his lack of knowledge. Can God forget his daily routine?
 
I challenge anyone to write a better OP to explain this kural:

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்

:bolt:
 
Last edited:
Here is a nice explanation at குறள் தோட்டம்.

தெளிவுரை

நாம் ஒன்றை அடைய முயலும்போது அந்த தெய்வமே நமக்கு ஊழ்வினை காரணமாக அதன் பலனைக் கொடுக்க மறுத்தாலும், நம்

விடாமுயற்சியினால் உடலை வருத்திச் செயல்பட்டால் அதன் பலன் கிடைக்கும் என்று இறைவனைக்கூட இரண்டாம் பட்சமாக

வைத்து நம் விடா முயற்சிக்கு உத்திரவாதம் தருகிறார் வள்ளுவர்.

விளக்கவுரை

'திருவள்ளுவர் தெய்வப் பற்றற்றவரா?' என்ற ஒரு கேள்வி எழ இங்கு வாய்ப்புள்ளது. வள்ளுவர் தெய்வப் பற்றற்றவர் என்றால் தனது

திருக்குறளின் முதல் அத்
தியாயத்தைக் கடவுள் வாழ்த்துடன் ஆரம்பித்திருக்க மாட்டாரல்லவா? மாறாக நம் விடாமுயற்சிக்குக் கூலி

கண்டிப்பாக உண்டு என்று ஆணித்தரமாகப் பறை சாற்றுகிறார்.

தெளிவுரை

இதற்கு உதாரணம் காண்போம் வாருங்கள். விண்வெளியில் சுழன்றுகொண்டிருக்கும் கோள்களுள் ஒன்றுதான் இந்த பூமி என்பதை

நாம் நன்றாக அறிவோம். இப்புவியை புவி ஈர்ப்பு சக்தி ஒன்றால் இறைவன் கட்டுப்படுத்தி ஒரு எல்லையை விண்ணில்

வகுத்துள்ளான். ஒரு பொருளை பூமியிலிருந்து வீசினால் திரும்ப அது புவி ஈர்ப்புச் சக்தியால் இழுக்கப்பட்டு மீண்டும் பூமிக்கே வந்து

சேருகிறதென்பதை நாமறிவோம். இருந்தும் ரைட் சகோதர்கள் எனும் இருவர் தன் மெய்வருத்தி முயன்று, இறைவனால்/

இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட அந்த ஈர்ப்பு சக்தியை வலிமையிழக்கச் செய்து, ஆகாய விமானம் என்று ஒன்றைக் கண்டுபிடித்து

அதை வானில் நெடுநேரம் பறக்கும்படி செய்தார்கள். ஆனால் நம் முயற்சி அதோடு நின்றுவிடாமல் மேலும் முயன்று விண்கலம்

ஒன்றை உருவாக்கி, இந்தப் புவியீர்ப்பு சக்திகளையெல்லாம் தாண்டி வேறு கிரஹத்திற்கே செல்ல முயன்றுகொண்டிருக்கிறோம்.

நீதியுரை

ஆக, இறைவனின் சக்தியை மீறி இப்போது மனித சக்தி செயல்படுகிறது என்றாலும் எப்படியும் இறைச்சக்தியைக் குறைத்து

எடைபோட்டு விடாதீர்கள். அறிவியல் எவ்வளவுதான் முன்னேறினாலும், 'க்லோனிங்' முறையில் ஒரு உருவுக்கு அதுபோலவே

மாற்றுரு காண முடிந்தாலும், 'ரோபோ' என்கிற தானியங்கியைக் கண்டுபிடித்தாலும், அவையாவும் இன்னும் மனித சக்திக்கு

ட்பட்டுதான் இயங்கி வருகின்றன. என்றைக்கு மனிதன் அவரை விதையைப் போட்டு சுரைக்காயை விளைவிக்கிறானோ

அன்றுதான் இறைவனின் சக்தி முறியடிக்கப்பட்ட்தாகக் கொள்ளவியலும்.
ஆகவே முக்காலும் உணர்ந்த அம்முனி வள்ளுவர்

கூறியது இன்று உண்மையாக்கப்பட்டது இப்போது தெளிவாகிறது.
 
There is a dispute about Thiruvalluvar's religious background. One version is he was a Saivite and another he was a Samanar.
 
Thank you for the great explanation from Kural Thottam, Raji Madam! As usual, you come up with interesting replies!

Chandru ji, I have a book called 'Sri Maha Bhakta Vijayam'. It narrates the story of many, many devotees and saints. In that, it is stated that Thiruvalluvar is a Shaivite. It is said that once Lord Shiva is dancing in one of the 5 sabhas. The dance is quite prolonged with many swift steps. All the Shivaganas like Nandi are in full attendance. At the end of the dance, Lord Shiva asked, who of his devotees "Saw the unusual thing while in the middle of the dance?". For this nobody replied, for nobody saw anything unusual. Then Lord Shiva says, "All of you go to the poor Shaivite by the name of Valluvan and ask him this question". Then they all go to Valluvar, he says, "When Lord Shiva was dancing, his left earring fell down, he, without breaking any of dance rules, cleverly and elegantly took out the thaadangam with his left foot and put it on back in his ear!". Thus was the divine vision and insight of Thiruvalluvar, the greatest devotee of Lord Shiva!
 
Some time back, I have read an article about a village in South Arcot District exclusively devoted to Thiruvalluvar by Samanars living there.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top