• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இந்து மதத்தில் பெண்களின் நிலை

Status
Not open for further replies.
இந்து மதத்தில் பெண்களின் நிலை

இந்து மதத்தில் பெண்களின் நிலை

பெண் குழந்தை

முதல் மறையில் (Rig-Veda), பெண் குழந்தைகள் பிறப்பது நீசமான ஒன்றாகக் கருதப்படவில்லை. மாறாக, உள்ளக் களிப்போடு பெண்குழந்தைகள் போற்றப்பட்டன. அதேவேளை, இரட்டைக் குழந்தைகள் விண்ணும் மண்ணும் என்று போற்றப்பட்டன. ஆண்குழந்தைகள் போலவே, பெண்குழந்தைகள் போற்றப்பட்டன. மறைகளைப் படிக்கவும், இறைவனுக்குத் தொண்டு செய்யவும் பெண்களுக்கு எந்த தடையும் இல்லாமல் இருந்தது.

*குறிப்பிட்டக் காலக்கட்டத்தில் பெண்கள் இறைவனைத் தொழ கூடாது என்று தவறாக கருதப்படுகிறது. அதன் காரணம், முற்காலத்தில் தனி குளியறைகள் இல்லை. அதனால், ஆண்களும் பெண்களும் ஊரில் இருக்கும் குளங்களில் குளிக்க நேரிட்டது. அந்த வேளைகளில், பெண்கள் குளங்களில் குளிப்பது, குளத்து நீர்களில் ஒருவகை நுண்ணுயிர் உருவாக வழிச் செய்தது. மேலும், அந்த சமயங்களில் குளிர்ந்த நீர்களில் குளிப்பது நலமான ஒன்று அல்ல. மேலும், மனம் ஒருநிலையில் இல்லாமல் இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டே, அது போன்ற சமயங்களில் பெண்கள் இறைவனை தொழவில்லை. ஆனால், இப்பொழுது வீட்டுக்கு வீடு தனி குளியலறைகள் இருக்கின்றன. வெண்ணீர் குழாயும் இருக்கின்றன. எனவே, பெண்கள் மாதத்தில் எல்லா நாட்களும் இறை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு எந்த தடையும் இல்லை.

முதல் மறையில், ஒருவருக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே இருக்குமாயின், அக்குழந்தை எந்த தடையுமின்றி தன் பெற்றோர்களின் இறுதிச்சடங்கைச் செய்யலாம். பெற்றோர்களின் சொத்தும் அந்தக் குழந்தையையே அடைய வேண்டும். (S. R. Shastri, Women in the Vedic Age- 1960).

பெண்களுக்குக் கல்வி

கல்வி பெண்களின் வாழ்வும் வளமும் மேன்மை பெற ஒரு முக்கிய கூறாக இருந்தது. கல்வி பெண்களுக்கு மிக அவசியமான ஒன்றாகக் கருதப்பட்டது. கல்வியறிவு கொண்ட பெண்கள் சமுதாயத்தில் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். கல்வியில் தேர்ச்சியுற்ற பெண்ணை மறைகள் போற்றுகின்றன. ‘ஒரு பெண்ணுக்கு எந்த குறையும் இன்றி கல்வி வழங்கப்பட வேண்டும்’.

"A girl also should be brought up and educated with great effort and care" (Mahanirvana Tantra).

அதர்வா மறையிலும் பெண்களின் கல்வி அவசியம் பற்றி விளக்கம் உள்ளது. அதாவது:

“ஒரு பெண்ணின் வாழ்க்கை வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது, முறையான கல்வியே ஆகும்.”

"The success of woman in her married life depends upon her proper training during the BrahmaCharya (student period)"

ஆண்களைப் போலவே, பெண்களும் பூணூல் அணிந்து கொண்டு மறைகளைப் படித்தனர்.

கல்வியில் சிறந்து விளங்கிய பெண்கள் ‘பிரம்மவாதினிகள்’ என அழைக்கப்பட்டனர். ஆண்-பெண் என்ற பிரிவு இல்லாமல், இரு பாலினரும் ஒன்றாகவே கல்வி கற்றனர். இரு பாலினருக்கும் சமமான கல்வியே வழங்கபட்டது. முதல் மறையில் ஏறக்குறைய 30 பிரம்மவாதினிகள் குறிக்கப்பட்டுள்ளனர். பெண்கள், ஆண்களோடு தத்துவ ஞானம் சார்ந்த சொற்போர்களில் பங்கிட்டு, பெரும் பெருமைகளையும் மரியாதைகளையும் பெற்று உள்ளனர். முதல் மறையில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் ரிசிகள் (ரிசிகா): கோசா கக்சியவதி, லோபமுந்த்ரா, ரொமசா, சரமா தேவயுனி, யமி வைவாசுவதி, ரதீர் பரத்வாசா, அபலா, பௌலமி, மற்றும் பலர். அவர்கள் எழுதிய சமயக் கூறுகளும் மிகுதியாகக் காணப்படுகின்றனர்.

http://en.wikipedia.org/wiki/Lopamudra
http://en.wikipedia.org/wiki/Gargi_Vachaknavi
http://en.wikipedia.org/wiki/Andal

திருமணம்

முதல் மறை (v, 7, 9) பெண்கள் கல்வியை முடித்து விட்டு இல்லற வாழ்வில் ஈடுபடுவதைக் குறிக்கிறது. மறையில், கல்வி கற்ற பெண் இன்னொரு கல்வியறிவு உடைய ஆணை மணக்க வேண்டும் என்று அறிவுரிக்கிறது. திருமணம் ஆகாத, இளம் கல்வியறிவு கொண்ட பெண் அவளைப் போலவே கல்லறிவு கொண்ட ஆணுக்கு மணமுடித்தல் வேண்டும். சிறு வயதிலே பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்தல் குற்றமாகும். (RV 3.55.16)

“An unmarried young learned daughter should be married to a bridegroom who like her is learned. Never think of giving in marriage a daughter of very young age’” (RV 3.55.16).

இளம் பெண்களுக்கு வீட்டை விட்டு வெளியில் சென்று திருவிழாக்களில், கூட்டங்களில், கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சுதந்திரம் இருந்தது; பெண்மையைப் பிரித்து பார்க்கும் கலாச்சாரம் அப்போது இல்லை. மறையில், ‘சாமணா’ என்ற ஒரு நிகழ்வு ஆண்களும் பெண்களும் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வாகக் கருதப்பட்டது.

மறைகளில், திருமணம் என்பது ஒரு சமுதாய மற்றும் வாழ்க்கையின் ஒரு அங்கமாக கருதப்பட்டது. ஒரு குறிபிட்ட காலம் மட்டுமே, தற்காலிகமான ஒன்றாகக் கருதபடவில்லை. ஆணும் பெண்ணும் மணமுடிந்து இல்லற வாழ்வில் ஆளுக்கு ஒரு காலை எடுத்து வைத்து ஆரம்பித்தல் வேண்டும். இறுதி வரை நிலைத்திருக்கும் காதலும், நட்பும் இல்லற வாழ்வில் இருத்தல் வேண்டும். கணவனில் மனைவி பாதி, மனைவியில் கணவன் பாதி என்ற கொள்கை வேண்டும். (முதல் மறை [10.85.26-27])

திருமணம் பெண்களுக்குக் கட்டாயமான ஒன்று இல்லை. திருமணம் ஆகாத பெண்கள், வயதாகும் காலம் வரை கல்வி கற்று மக்களுக்குச் சேவை செய்தனர். இறை வழிபாடுகளிலும் எந்த தடையுமின்றி ஈடுபட்டனர். கிமு 3005 வாழ்ந்த ஆண்டாளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஔவையார் எனும் அம்மையாரும் திருமணம் ஆகாமல் முதுமை வரை வாழ்ந்து உள்ளார்.

கைம்பெண்ணும் மறுமணமும்

கைம்பெண்கள் வேண்டுமானால் மறுமணம் புரிய எந்த தடைகளும் இல்லை; அதேபோல, சமுதாயமும் எந்தவொரு கலங்கமும் கைம்பெண்களுக்கு விதிக்கக் கூடாது. (பொதுவாக, மறுமணம் ரிக் வேதத்தில் ஊக்குவிக்கப்பட்டது)

முதல் மறையில் கைம்பெண்கள் இறந்த கணவனோடு வைத்து எறிக்கப்பட வேண்டும் என்று எந்த ஒரு பக்கத்திலும் குறிப்பிட படவில்லை. கணவனை இழந்த பெண், இல்லம் திரும்பி தன் குழந்தைகள், பேரக் குழந்தைகளோடு வாழ்வைத் தொடர வேண்டும். இறந்த கணவனோடு சொத்து மனைவிக்கு வந்து சேர வேண்டும். முதல் மறை, கைம்பெண்களின் மறுமணத்தை முழுமையாக ஏற்கிறது. அவ்வாறு மறுமணம் புரியும் கைம்பெண் சமுதாயத்தில் எந்த அவலங்களையும் சந்திக்கவில்லை, அதே வேளை இறந்த கணவனின் செல்வங்கள் அவளை வந்தடைதலும் இருந்தது. மக்களும் அந்த மறுமணத்தை மனமாற வாழ்த்தினர். கைம்பெண்களை காத்த அசுவின் தேவர்களை முதல் மறைப் போற்றுகிறது. (X.40.8)

பெண்கள் தெய்வங்களாக

இதையெல்லாம் தாண்டி, தெய்வங்களாகப் போற்றபடும் கலைமகள், மலைமகள், அலைமகள் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டிய மூன்று குணங்களைக் குறிக்கின்றனர். கலைமகள் ஒரு பெண்ணுக்குக் கல்வியறிவு தேவை, கல்வியறிவு கொண்ட பெண்ணை போற்ற வேண்டும் எனக் குறிக்கிறார். மலைமகள் ஒரு பெண்ணுக்கு மறம் வேண்டும், எந்த சூழ்நிலையிலும் வீரம் வேண்டும். (பாரதியார் கூறியது போல). அலைமகள் ஒரு பெண்ணுக்கு கனிவு வேண்டும், பணிவும் வேண்டும் எனக் குறிக்கிறார்; மேலும், ஒரு பெண் ஒரு குடும்பத்துக்கு இன்பத்தைக் கொண்டு வரும் செல்வி என உணர்த்துகிறார்.


SSN
 
There is no doubt about the exalted status that Hindu women are bestowed compared to Abrahamic religions...May be it has to do with worship of female forms of God with equal fervour as of the male form
 
Arthanareeswara concept is a perfect example of equality.

Unfortunately, we regularly talk about some epics, which have not given high esteem to women.
 
Arthanareeswara concept is a perfect example of equality.

Unfortunately, we regularly talk about some epics, which have not given high esteem to women.

Sir, don't you think it is ironic then, that in those "unfortunately spoken of epics", the so-called 'Shiva Bhaktas' have been the menace, causing trouble to good and chaste women?
 
Sir, don't you think it is ironic then, that in those "unfortunately spoken of epics", the so-called 'Shiva Bhaktas' have been the menace, causing trouble to good and chaste women?

Madam,

The epics can be changed upside down and shown 'Vishnu Bhaktas' as demons. Already, some rational outfits in Tamil Nadu are doing this.
 
Madam,

The epics can be changed upside down and shown 'Vishnu Bhaktas' as demons. Already, some rational outfits in Tamil Nadu are doing this.

If scripture can be changed as per one's likes and dislikes, even 'Ardhanatheeswara' would stand to be an invented principle.
 
Let us not wash dirty linen in public! Without understanding context we start criticizing! Shiva Baktha or Vishnu Bakhtas both may be good or bad! Let us try to separate the good that represents learning from bad which represents unlearning and move forward
 
Sorry Vgane, I am actually broad-minded and compassionate enough to respect all gods, Shaiva or Vaishnava. But if someone wantonly throws mud on my Vaishnava devatas (see reply #3), it upsets me very much.
 
If scripture can be changed as per one's likes and dislikes, even 'Ardhanatheeswara' would stand to be an invented principle.

Invention is the result of logical thinking and not blind following in the case of religion. The concept of Ardhanareeswara doesn't have multiple stories, as in the case of one popular epic with different stories and dimensions.
 
1. Why? Even Lord Shiva stories are narrated differently... One purana says he ran away from Basmasura while other negates it!

2. Only trivial details differ across versions in Ramayana. And this has got nothing to do with false proclamation made in reply 3.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top