• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அட்சய திரிதியை

Status
Not open for further replies.
அட்சய திரிதியை

அட்சய திரிதியை

UP_152821000000.jpg


பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாள் திருதியை. சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது. எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர். அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர். மகாகவி காளிதாசர் அருளிய உத்திர காலாமிருதம் என்னும் ஜோதிட நூல், திதி நாட்களில் மிகவும் விசேஷமானது திருதியை என்று கூறுகிறது. பௌர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதி, அஷ்டமி திதி போன்ற திதிகளைப் போன்றே அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதியும் சிறப்பு திதியாகத் திகழ்கிறது. அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாளான திருதியைத் திருநாள் திருமகளுக்குரிய நாளாகத் திகழ்கிறது. அதிலும் தமிழ் மாதத்தில், சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 3-வது பிறையான அட்சயத் திருநாள் மிகவும் மகிமைமிக்கது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அட்சய திருதியையால் அமைந்த நிகழ்வுகள்: முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட உணவுக்கே வழியில்லை. ஆயினும், அவன் மிகவும் பக்தியுடன் வாழ்ந்து வந்தான். அவன் பக்தியைக் கண்ட பெரியோர், அவனிடம் அட்சய திருதியை வழிபாடு பற்றிக் கூறினார்கள். அவன் ஓர் அட்சய திருதியை நன்னாளில் அதிகாலை எழுந்து நீராடி, பாத்திரத்தில் அன்னம் வைத்து தண்ணீர், கோதுமை, சத்துமாவு, கரும்புச்சாறு, பால், தட்சிணை முதலானவற்றை ஏழை அந்தணர்களுக்குத் தானம் கொடுத்தான். அன்றைய வழிபாடுகளையும் முறைப்படி அனுசரித்தான். வறுமையின் காரணமாக அவனது மனைவி அவனைத் தடுத்தும்கூட, குறைவில்லாது அட்சய திருதியை நன்னாளை அனுசரித்தான் வைசியன். இதன் பயனாக அவன் தனது மறுபிறவியில் குஷபதி சக்ரவர்த்தியாகப் பிறந்து புகழ் பெற்றான் என புராணங்கள் பேசுகின்றன.யுகங்களுள் இரண்டாவது யுகமான திரேதாயுகம், ஓர் அட்சய திருதியை திருநாளில்தான் ஆரம்பாமாயிற்றாம். தன் குருகுல நண்பனான ஏழைக் குசேலன் தன்னைப் பார்க்க வந்தபோது அவன் கொடுத்த மூன்று பிடி அவலைத் தின்று, பதிலாக கோடி கோடி செல்வங்களைக் கொட்டிக் கொடுத்து குசேலனை கிருஷ்ண பரமாத்மா குபேரனாக்கிய திருநாளும் இந்த அட்சய திருதியை நன்னாளில்தான்! பரசுராமர் அவதரித்த நன்னாள், பலராமர் தோன்றிய பொன்னாள் அட்சய திருதியையே!


துரியோதனனின் சூழ்ச்சியினால், பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தை மேற்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்ட போது, ஆகாரத்துக்கு அவர்கள் கஷ்டப்படாமல் இருக்க அவர்களின் முக்கிய ஆலோசகரான கண்ணன், திரௌபதியிடம் இருந்து அந்த அட்சய பாத்திரத்தை வாங்கி அவர்களிடம் கொடுத்தார். அவர்களுக்குத் தேவையானபோது அந்த அட்சய பாத்திரத்தின் மூலம் அள்ள அள்ளக் குறையாத அன்னங்களை, அவர்கள் விருப்பப்பட்ட உணவுப்பொருட்களைப் பெற்று சந்தோஷமாகப் புசித்து வந்தார்கள். இதை நினைவுபடுத்தும் வகையிலும் இந்த அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.

இந்த அட்சய திரிதியை நாளில்தான் பிட்சாடனரான சிவபெருமான் தன் கபால (பிரம்ம கபாலம்) பிட்சை பாத்திரத்தில் நிரம்பும் அளவு உணவை காசியில் அன்னபூரணியிடமிருந்து பெற்றுக் கொண்டார். கௌரவர்கள் சபையில் துச்சாதனன் பாஞ்சாலியின் உடையை உருவி மானபங்கப்படுத்தினான். அப்போது கண்ணபிரான் அட்சய என்று கூறி கைகாட்டி அருள, துச்சாதனன் உருவ உருவ புடவை வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திரிதியை நாளில்தான். இதனால் தான் பாஞ்சாலி மானம் காப்பாற்றப்பட்டது. அட்சய திருதியையில், எதைச் செய்தாலும் வளர்ந்து கொண்டே இருக்கும். அன்று கொடுக்கும் தானம், அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும். அன்று பித்ருக்களுக்கு பிதுர்பூஜை என்று சொல்லக்கூடிய தர்ப்பணங்களைச் செய்து அவர்களின் ஆசியைப் பெற்றால், குடும்பமும் வாரிசுகளும் வளர்ச்சியடைவார்கள்.



அட்சயதிருதியால் ஏற்படும் பலன்கள்: இந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது, நல்ல காரியங்களுக்கு உதவுவது, எந்த வகையிலாவது பிறருக்கு உறுதுணையாக இருப்பது இவற்றினாலும் தர்மதேவதையின் அருளைப் பெற்று, இந்த அட்சய திருதியையில் புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். திருமகள் அம்சமாக நல்ல மனைவி அமைய விரும்புவோர், தங்களுக்கு நல்ல மருமகள் வர விரும்பும் பெற்றோர், அட்சய திருதியையில், திருக்கோயிலில் வைத்து பெண் பார்க்கும் வைபவத்தையோ நிச்சயதார்த்தத்தையோ நடத்தினால் விரும்பியபடி மணமகள் அமைவாள்.


அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்: இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே. அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம். எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சயதிரிதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே. வட இந்தியாவில் இந்நாளை அகஜித் என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான். ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும்.


நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தான-தர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும். தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது. தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும். அட்சய திருதியை அன்று ஆலிலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து, அதை நோயாளிகளின் தலையணையின் அடியில் வைத்தால் நோய் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

அட்சய திருதியும் அதன் வழிபாட்டு அமைப்பும்:

அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ - இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் இத்துடன் அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.


அளவற்ற வளம் தரும் அட்சய திருதியை!

* கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கௌரி தேவியை எழுந்தருளச் செய்து சொர்ண கௌரி விரதம் கடைபிடிப்பர். இதன்மூலம் பார்வதிதேவி, தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகின்றனர். குழந்தைப்பேறு, சுமங்கலிப் பாக்கியம், உடல்நலம் ஆகியவற்றுக்காக கர்நாடக பெண்கள் விரதம் இருப்பர். விரத முடிவில் அட்சய திருதியை தானமும் வழங்குவர்.

* அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.

* நவ திருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகில் உள்ளது. பெருமாள், குபேரனுக்கு மரக்கால் என்ற அளவை பாத்திரம் கொண்டு செல்வத்தை அளந்து கொடுத்தார். அந்த மரக்காலை தன் தலைக்கு அடியில் வைத்தபடி படுத்திருப்பார். இவரை வைத்தமாநிதி என்றும், செல்வம் அளித்த பெருமாள் என்றும் அழைப்பர். அட்சய திருதியை நாளில் இவரை தரிசித்தால் வாழ்வில் வளம்சேரும்.

* காசியில் ஒருமுறை கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்களின் பசி போக்குவதற்காக பார்வதிதேவி, அன்னபூரணியாக அவதாரம் எடுத்தார். அன்னம் என்றால் உணவு என்று பொருள். பூரணி என்றால் முழுமையாக உடையவள் என்று பொருள். உணவை முழுமையாக கொண்ட அன்னபூரணி அட்சய பாத்திரம் பெற்று அதிலிருந்து வற்றாத உணவை எடுத்துக் கொடுத்து பக்தர்களின் பசியைப் போக்கினார். அந்த சமயத்தில் மக்களோடு மக்களாக சிவபெருமானும் அன்னபூரணியிடம் உணவு வாங்கிச் சாப்பிட்டார். அந்த நாள்தான் அட்சய திருதியை. எனவே, அட்சய திருதியை தினத்தன்று ஓம் நமச்சிவாய சொல்லி பரமேஸ்வரனின் அருளைப் பெறுவோம்.

* அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோயில்களிலிருந்தும் 16 பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்குத் தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

* மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அட்சய திருதியை என்றால் திருமணம் தான் என்கிறார்கள். அந்த நாளில் திருமணம் செய்தால் எல்லா வளமும் பெறலாம் என்பது அவர்களது நம்பிக்கை. அதனால் அன்று நிறைய திருமணங்கள் நடைபெறுகின்றன.

அட்சயதிரிதியை தினத்தில் மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆனால் மகாலட்சுமியே பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவன்கோயிலுக்கு சென்றால் பலன் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. திருச்சி அருகே அமைந்துள்ள வெள்ளூரில் தான் மகாலட்சுமி பிரதிஷ்டை செய்த திருக்காமீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மன் சிவகாம சுந்தரி தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.


Festival
 
Akshaya Tritiya - Specialities & Ritualsby Bharadwaj Sastrigal

Akshaya Tritiya - Specialities & Ritualsby Bharadwaj Sastrigal


akshayatritiya.jpg



Akshaya Tritiya, also known as Akha Teej, is a holy day for Hindus and Jains. It falls on the third Tithi (lunar day) of Bright Half (Shukla Paksha) of the pan-Indian month of Vaishakha and one of the four most important days for Hindus.

It is an auspicious day of the birthday of Lord Parasurama who is the 6th incarnation of Lord Vishnu.

On this day the grate Veda Vyas and Lord Ganesha began to write Mahabharata. Jains celebrate this day to commemorate Tirthankara Rishabha's ending of one-year fast by consuming sugarcane juice poured into his cupped hands.

In Jain and Hindu calendars, some days of the month are absent in counting and some days (tithi in lunar calendars) come extra, but Akshay tritiya is one day which is never "absent" from the lunar calendar.

The word "Akshaya" means the never diminishing in Sanskrit and the day is believed to bring good luck and success. It is believed that if you do charity on this day you will be blessed.

The day is considered auspicious for starting new ventures. The legend is that any venture initiated on the auspicious day of Akshaya Tritiya continues to grow and bring prosperity. Hence, new ventures, like starting a business, construction, etc. is performed on Akshaya Tritiya.


Hinduism

In Hinduism, Akshay Tritiya was the day when Sage Vyasa started writing the history of the great epic Mahabharata. This day is symbolized by god Vishnu, the preserver-god in the Hindu Trinity.

According to Hindu mythology, on this day the Treta Yuga began and the river Ganges, the most sacred river of India, descended to the earth from the heaven.

It was on this day that Goddess Annapoorna devi was born.

Kubera received his wealth and position as custodian of wealth and property with Goddess Lakshmi on this day.

It is traditionally observed as the birthday of Parashurama, the sixth incarnation of god Vishnu. The Puranic scriptures speak about how he reclaimed the land from the sea.

It is on this day that poor Sudama, the best friend of Krishna visits Him to greet Him after He became the King. With nothing to offer, Sudama takes with him Poha (puffed rice) and offers it to his friend and never discusses his poverty though he intends to. On his return he finds his hut changed to a palace.

In more recent history, the great saint Sri Adi Shankara recited the Kanaka Dhara Stotr on this day for the sake of the poor lady at whose house he stopped for Bhiksha and was offered their only available gooseberry.

In Odisha, on Akshay Tritiya day, farmers start ploughing their land and construction of chariots for Rath Yatra begins at Puri.

In Jainism

Jains celebrate Tirthankara Rishabha's first 'ahara'

Followers of Jainism consider Akshaya Tritiiya to be a holy and supremely auspicious day. It is associated with Lord Adinatha, also known as Rishabhadeva, first of the twenty-four Tirthankaras. On this day people who observe the year-long alternative day fasting known as Varshi-tap finish their Tapasya by doing parana by drinking sugarcane juice.

The day of Akshaya Tritiya is worshiped and said to be auspicious in Jainism because it is said to have established the very first "ahara charya": a methodology to prepare and serve food to Jain monks. Lord Rishabhadeva denounced the worldly pleasures after dividing his vast kingdom amongst his 101 sons, prominent of whom are Gommateshvara Bahubali (whose world's tallest monolithic statue stands at Shravanbelgola and Chakravarti Bharata; it is known today as "Bharat").

Lord Rishabhadeva meditated without any food and water for six months and after that set out to accept food (ahara). He was the first monk of this era. Jain monks do not own anything. They do not even cook food for themselves. When hungry or thirsty, (maximum once in a day), they set out to accept ahara. They do not ask for it and accept where it is offered. Tīrthankara Rishabhadeva went to people to accept food. However, the people of that time did not know anything about the lives and disciplines of monks, as he was the first monk of Avsarpinī. The people of Ayodhya offered him gold, jewellery, gemstones, elephants, horses, expensive garments and even their daughters to honour their beloved king.

But Rishabhadeva was not in search of these things. He sought only a morsel of food, but nobody offered it to him. Nobody understood that their king was looking for food to ensure that the monks who would come after him get food and water in the purest form needed to lead an ascetic life. As there was no choice, he had to fast for one year until King Shreyansa understood his need due to his "purva-bhava-smarana" (previous life). Shreyansa Kumar offered him sugarcane juice and thus Rishabhadeva ended his fast. This was on the day of Akshaya Tritiya. Hence, sugarcane juice is considered by Jains to be one of the best offerings. On this day, Jains observe a fast to commemorate their first Tirthankara Rishabhadeva and end their fast with sugarcane juice.

In Hastinapur, there is a fair held on Akshaya Tritiya. Jains arrive from all over India in large numbers to end their fasts. The ritual ending of a fast by Jains is called parana.


Specialities and Rituals to be followed on Akshaya Tritiya

1. After taking bath early morning on the Akshaya Tritiya Day, chant the holy names of Sri Vishnu then start all your daily rituals.

2. Atcharabhyasam (first Teaching to kid) will be done on this holy day.

3. The boon to stay in the holy chest of Sri Vishnu by Goddess Sri Lakshmi was sought on this day, so this is special day for
Goddess Lakshmi.

4. The last rites done on this holy Akshaya Trityiya day will reach our ancestors. So it is conisdered as special to do last rites (yearly rites) on this day.

5. Annadhanam (providing free food) on this day will bring good boon to the provider.

6. Taking bath on River Ganges on this day is considered as special.

7. Doing Kubera Lakshmi pooja on Akshaya tritiya is belived to bring more wealth as this holy day he got all his wealth praying Goddess Sri Lakshmi.

8. Doing Vishnu Pooja, Chanting Vishnu Sahasranama on this holy day will bring good wealth to you.

9. Chanting the holy names of Goddess Sri Lakshmi will also bring wealth.

10. In West Bengal, on this holy day, they start writing the new accounts praying Goddess Lakshmi and God Vinayaga.

அட்சய திருதியை அன்று பின்பற்ற வேண்டியவைகள் ...


1. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.

2. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப்பியாசம் செய்யும் சடங்கு 'அட்சய திருதியை' நாளில் செய்யப்படு கிறது.

3. மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.

4. அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

5.. அன்னதானம் செய்வதும்,

6. கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.

7. பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.

8. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.

9. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.

10. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.



Akshaya Tritiya - Specialities & Rituals
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top