• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பலன் தரும் ஸ்லோகங்கள் (Palan tharum slogangal)

Status
Not open for further replies.
பலன் தரும் ஸ்லோகங்கள் (Palan tharum slogangal)

Courtesy: Sumathi sreeni.




நல்லனவற்றையே பார்க்க, கேட்க, அனைவருக்கும் நல்லதே நடக்க


ஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா: பத்ரம் பச்யேமாக்ஷபிர்: யஜத்ரா:
ஸ்திரைரங்கைஸ் துஷ்ட்டுவாக்ம்ஸஸ்தனூபி: வ்யசேம தேவஹிதம் யதாயு:
லோகா ஸமஸ்தா ஸுகினோபவந்து: ஸர்வே ஜனா ஸுகினோபவந்து:
- முண்டக உபநிஷத்
பொருள்:
இறைவனே, தேவர்களே! நாங்கள் காதுகளால் நல்ல விஷயங்களையே கேட்க அருள் புரிய வேண்டும்; க ண்களால் நல்லனவற்றையே பார்க்க வேண்டும். எங்கள் சிந்தனையில், செயலில் எல்லாம் நல்லன மட்டுமே நிறைந்தி ருக்க வேண்டும்.
இந்த உலகத்தோர் அனைவருமே இன்புற்றிருக்க வேண்டும். அனைத்து உயிரினங்களும் ஆனந்தமாக வாழ வேண்டும். அருள் புரியுங்கள் இறைவனே, தேவர்களே.
(எல்லோரும் நலமாய் இருக்க விரும்பும்போது, அந்தப் பொதுநல வேண்டுதலில் நம் நலனும் உட்படுவதால், இந்த ஸ்லோகத்தை எப்போது நேரம் கிடைத்தாலும் சொல்லி வரலாம்.)




மழலை வரம் கிட்ட, குடும்பம் மேன்மையுற...


கதம்பஸூனகுண்டலம் ஸுசாருகண்டமண்டலம்
வ்ரஜாங்கனைகவல்லபம் நமாமி க்ருஷ்ண துர்லபம்
யசோதயா ஸமோதயா ஸகோபயா ஸநந்தயா
யுதம் ஸுகைகதாயகம் நமாமி கோபநாயகம்
& ஆதிசங்கரர் அருளிய கிருஷ்ணாஷ்டகம்




பொதுப் பொருள்: கதம்பப் பூக்களை காதில் குண்டலமாக தரித்தவனே... செழுமிய கன்னங்கள் ஒளிர காட்சி தரும் பேரழகனே... கோபியர்களுக்கு என்றென்றும் நாயகனாக விளங்குபவனே... கிடைத்தற்கரிய பெறும் பேறான இனிய கண்ணனே, நமஸ்காரம். நந்தகோபன், யசோதை, கோபியர் என்று அனைவருக்கும் பேரானந்தத்தை அருளிய கண்ணா, உன் பிஞ்சுத் திருவடிகளுக்கு என் நமஸ்காரம்.
(இத்துதியை கண்ணனின் திருவுருமுன் பக்தியுடன் படித்தால் மழலை வரம் வேண்டி ஏங்குவோருக்கு அந்த வரம் கிட்டும்; குடும்பத்தில் நன்மைகள் பெருகும்.)




வேண்டுவன எல்லாம் தரும் மகாலட்சுமி துதி)

கல்யாணனாமவிகலநிதி: காபி காருண்யஸீமா
நித்யாமோதா நிகமவசஸாம் மௌலிமந்தாரமாலா
ஸம்பத்திவ்யா மதுவிஜயின: ஸந்நிதத்தாம் ஸதாமே
ஸைஷா தேவீ ஸகலபுவனப்ரார்த்தனா காமதேனு:
- தேசிகர் அருளிய ஸ்ரீஸ்துதி


பொருள்:
எல்லாவகை மங்களங்களையும் அருள்பவளே, மகாலட்சுமியே நமஸ்காரம். வெறும் வார்த்தைகளால் அளந்துவிட முடியாத எல்லையற்ற கருணை கொண்டவளே, நமஸ்காரம். என்றென்றும் ஆனந்தம் அளிப்பவளே, நமஸ்காரம்.


வேதங்களை அழகு செய்யும் மந்தாரப் பூமாலை போன்றவளே, நமஸ்காரம். ஸ்ரீமந் நாராயணனின் ஐஸ்வர்யமாக துலங்குபவளே, நமஸ்காரம். உலக மக்களுக்கு காமதேனுவைப் போல் வேண்டிய வரங்களை எல்லாம் தந்தருள்பவளே, மகாலட்சுமியே உனக்கு நமஸ்காரம்.


(இந்த ஸ்லோகத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சொல்லி வரலாம். குறிப்பாக வரலட்சுமி விரத நாளன்று மகாலட்சுமியின் திருவுருவப் படத்தின் முன் நெய் விளக்கேற்றி தாமரைப்பூ சூட்டி இந்தத் துதியைப் பாராயணம் செய்தால், வேண்டும் வரத்தை வேண்டியவாறே அருள்வாள்)




மன தைரியம் பெருக
திருமகள் திருவருள் கிட்ட...


நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
ஸங்க சக்ரகதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸர்வக்ஞே ஸர்வவரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ
ஸர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே




- இந்திரன் துதித்த லக்ஷ்மி ஸ்தோத்திரம்


பொதுப் பொருள்: மகாலட்சுமி தேவியே நமஸ்காரம். நீயே மகாமாயையாகத் திகழ்கிறாய்; ஸ்ரீபீடம் எனும் உலகின் உயர் பீடத்தில் வாசம் செய்பவள்; தேவர்களால் பூஜிக்கப்பட்டவள். உனக்கு நமஸ்காரம். சங்கு, சக்கரம், கதை இவற்றை கரங்களில் தாங்கி பக்தர்களின் இன்னல் போக்கும் மகாலட்சுமி தேவியே, நமஸ்காரம். எங்கும் வியாபித்திருப்பவள் நீ. எல்லோருக்கும் வரமளித்துக் காப்பவள் நீ. தீயவர்களுக்கெல்லாம் பெரும் பயத்தைக் கொடுப்பவள் நீ. எல்லாவகையான துக்கங்களையும் துடைத்து ஆறுதல் அளிப்பவள் நீ. மகாலட்சுமி தாயே, நமஸ்காரம். எங்களைக் காத்தருள்வாயாக.

இந்தத் துதியைப் பாராயணம் செய்தால், திருமகள் திருவருளால்
துக்கங்கள் விலகி, லட்சுமி கடாட்சம் கிட்டும்.


பறிகொடுத்த சொத்துகளை மீண்டும் பெற


ஆர்த்தா விஷண்ணா சிதிலாச்ச பீதா
கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா:
ஸங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம்
விமுக்தது கா ஸுகினோ பவந்து
கூரேசர் அருளிய நாராயணாஷ்டகம்.


பொருள்:


மனக்கவலை கொண்டவர்கள், துக்கத்தால் வருந்துபவர்கள், சொத்துகளை இழந்தவர்கள், பயம் கொண்டவர்கள், தீராத நோயினால் வேதனையுறுபவர்கள் என அனைவரும் ‘நாராயண’ எனும் திருநாமத்தை உச்சரித்தபோதே அந்த துன்பங்களிலிருந்து விடுபட்டு சுகமடைவார்கள். அப்படியொரு அமைதியை எங்களுக்கு அளிப்பாய் நாராயணா!


(தினமும் சொல்லக் கூடிய இந்த ஸ்லோகத்தை, குறிப்பாக வைகுண்ட ஏகாதசி நாளன்று, பாராயணம் செய்தால் ஸ்ரீமன் நாராயணன் எல்லா நலன் களையும் தருவார்.)






contd: 2
 
பலன் தரும் ஸ்லோகங்கள் ...2

பலன் தரும் ஸ்லோகங்கள் --2

வறுமை நீங்க, வளம் பெருக


முக்தேஸ்வராய பலதாய கணேஸ்வராய
கீதப்ரியாய வ்ருஷபேஸ்வரவாஹனாய
மாதங்க சர்மவஸனாய மஹேஸ்வராய
தாரித்ரிய துக்கதஹனாய நமசிவா
வசிஷ்ட மஹரிஷி அருளியது.




பொருள்:


அனைத்து ஜீவன்களும் முக்தியடைய கைதூக்கி விடும் ஈஸ்வரனே உமக்கு நமஸ்காரம். கர்ம பலன்களைச் சரியானபடி கொடுப்பவரே, பூதகணங்களுக்கெல்லாம் அதிபதியே, உமக்கு நமஸ்காரம்.


இசையில் இச்சை கொள்பவரே, சிறந்த காளைமாட்டை வாகனமாகக் கொண்டவரே, உமக்கு நமஸ்காரம். யானைத் தோலைப் போர்த்தியவரே, யானை போன்ற பெரிதளவு வறுமை கொண்டோரையும், அந்த ஆழ்கடலிலிருந்து மீட்டு, சந்தோஷமான வாழ்வை அருள்பவரே, மஹேஸ்வரா, உமக்கு நமஸ்காரம்.


இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் சொல்லி வந்தால், வறுமை நீங்கி, வளமான வாழ்வு அமையப் பெறலாம்.




திருமணம் ஆகாதவர்களுக்கு - பொருத்தமான வரன் விரைவில் அமைய சிறந்த மந்திரம்


உங்களது மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டுமா?


கீழ்க்கண்ட கவுரி மந்திரத்தை அம்பாள் சன்னிதியில் வெள்ளிக்கிழமைதோறும் 18 முறை கிழக்கு நோக்கி அமர்ந்து மனதுக்குள் ஜபித்துவரவும்.மிகச் சிறந்த வரன் அமையும்.


ஓம் காத்யாயனி மஹாமாயே ஸர்வயோகினி


யதீஸ்வரி நந்தகோப ஸீதம் தேவி


பதிம் மே குருதே நமஹ.




எண்ணியதெல்லாம் ஈடேற்றும் சுப்ரமண்ய தியானம்




11144d1321078702t-slokas-tamil-tamil-dailynews_paper_66832697392.jpg


ஸிந்தூராருணமிந்துகாந்தி வதனம் கேயூரஹாராதிபி:
திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்காதி ஸௌக்யப்ரதம் அம்போஜாபய சக்திகுக்குடதரம் ரக்தாங்கராகோஜ்வலம் ஸுப்ரமண்யமுபாஸ்மஹே ப்ரணமதாம் பீதிப்ரணாசோத்யதம்


-பிரம்மன் பாடிய சுப்ரமண்ய கவசம்.


பொதுப் பொருள்: சிந்தூரம் போல் செம்மையான தோற்றம் கொண்ட சுப்ரமண்யரே நமஸ்காரம். சந்திரன் போல் பேரெழிலுடன் விளங்கும் சுப்ரமண்யரே நமஸ்காரம். தோள்வளை, முக்தாரம் போன்ற அழகுமிகு ஆபரணங்களை அணிந்தவரே நமஸ்காரம். சுவர்க்க லோகம் போன்ற சுகமான வாழ்வை, இம்மையிலேயே அருளும் சுப்ரமண்யரே நமஸ்காரம். தாமரை, அபயஹஸ்தம், சக்திவேல், கோழி ஆகியன தாங்கியவரே, வாசனைப் பொடிகளால் நறுமணம் வீசும் நாயகனே நமஸ்காரம். உன் பாதம் பிடித்தோரின் பயத்தைப் போக்கி, அவர்கள் எண்ணியதை எல்லாம் ஈடேற்றித் தரும் சுப்ரமண்யரே நமஸ்காரம்.




பறிகொடுத்த சொத்துகளை மீண்டும் பெற


31vishnu_py30_l.jpg


ர்த்தா விஷண்ணா சிதிலாச்ச பீதா
கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா:
ஸங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம்
விமுக்தது கா ஸுகினோ பவந்து
கூரேசர் அருளிய நாராயணாஷ்டகம்.


பொருள்:


மனக்கவலை கொண்டவர்கள், துக்கத்தால் வருந்துபவர்கள், சொத்துகளை இழந்தவர்கள், பயம் கொண்டவர்கள், தீராத நோயினால் வேதனையுறுபவர்கள் என அனைவரும் ‘நாராயண’ எனும் திருநாமத்தை உச்சரித்தபோதே அந்த துன்பங்களிலிருந்து விடுபட்டு சுகமடைவார்கள். அப்படியொரு அமைதியை எங்களுக்கு அளிப்பாய் நாராயணா!


(தினமும் சொல்லக் கூடிய இந்த ஸ்லோகத்தை, குறிப்பாக வைகுண்ட ஏகாதசி நாளன்று, பாராயணம் செய்தால் ஸ்ரீமன் நாராயணன் எல்லா நலன் களையும் தருவார்.)
 
[h=1][/h]

ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்ரீ மந்திரம்,


ஓம் லேகிநி ஹஸ்தாய வித்மஹே
பத்ரதராய தீமஹி
தந்நோ சித்ரப்ரசோதயாத்

To be chanted on the Chithra Pournami Day

 

varahi.jpg
VAARAHI AMBIKA MANTRAS

Ōm Hreem Namō Vaarahi Gōrāy Hoom Phut Namahaa

VAARAHI PRATISHTA MANTRA
Om Ahm Hreem Krom ”Yah” Yahee Varahi Namahaa




BENEFITS OF VAARAHI POOJA


Mother Vaarahi protects all devotees who turn to Her for Her grace and blessings. She is an extremely powerful Goddess and bestows the following on those who worship Her with sincerity and devotion.

• Eliminates the “evil eye” (also known as Drushti in Tamil )
• Wards off troubles from evil spirits
• Wards off any kind of evil deeds or rituals (black magic) aimed at Her devotee
• Protects the person from accidents
• Makes the person blessed with word power, fame, good will etc.
• She dispels fear and bestows courage and confidence
• Bestows wealth and an exalted status in society
• Supreme victory over enemies and all those who stand in the way of one’s progress
• Dispels disease and ill health
• Grants happiness and prosperity

 
Last edited:
இந்த ஸ்லோகத்தை காலையும், மாலையும் கூறி வந்தால் பேராபத்திலிருந்தும், பெரும் நஷ்டத்திலிருந்தும், கொடும் நோயிலிருந்தும் விடுபடலாம்.

இவரை வழிபடுவதால் பேராபத்து, பூகம்பம், தீ விபத்து, இடி, புயல், மின்னல், பரிகாரம் காணமுடியாத துன்பம், தீராத வியாதிகள், மனநலம் இல்லாமை, விஷபயம், ஆகியவைகளின் பயம் நீங்கும் என வியாசர் லிங்கபுராணம் 96வது அத்தியாயத்தில் கூறியுள்ளார்.

தியான மந்திரம்

ஹூம்காரீ சரபேஸ்வர அஷ்ட சரண
பக்ஷீ சதுர் பாஹுக
பாதா கிருஷ்ட நிருஸிம்ஹ விக்ர ஹதர
காலாக்னி கோடித்யுதி
விச்வ க்ஷப நிருஸிம்ஹ தர்ப்ப சமன
பிரும்மேந்திர முக்யைஸ்துத
கங்கா சந்தரதர புரஸ்த சாப
ஸத் யோரிபுக் னோஸ்து ந





 
மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும்.

ஷண்முகம் பார்வதீ புத்ரம்
க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்
தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்
வந்தே ஸிவாத் மஜம்.
 
நீங்கள்ஒரு நல்ல முயற்சி எடுக்கிறீர்கள்! என்னவெல்லாமோ செய்து பார்க்கிறீர்கள். ஆனால்,ஏதோ தடங்கல், இடைஞ்சல் என்று தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல்போய்விட்டாலும் கீழே உள்ள நரசிம்ம மந்திரம் உங்களுக்கு பலன் கொடுக்கும்.

நீங்கள் மனவருத்தத்துடன் இருந்தாலும் உங்கள் கவலைகளை மாற்ற நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான்.இந்த மந்திரம் நடக்காததையும்நடத்திக்காட்டும் தன்மையுடையது.

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

இந்த ஸ்லோகத்தைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொன்னாலும் பலன் கிடைக்கும்.""பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே! தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால்தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே! நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின்துன்பத்தைப் போக்குபவனே! லட்சுமி நரசிம்மனே! உனது திருவடியைச் சரணடைகிறேன்.

 
இந்த காளி ஸ்லோகத்தை தினமும் 10 முறையாவது சொல்லி வந்தால் நினைத்த காரியத்தில் நல்ல வெற்றியை அடையலாம்.அனைத்தும் ஜெயமாகும்.

ஜயா சவிஜயா சைவ ஜயந்தீ சாபராஜிதாகுப்ஜிகா காளிகா ஸாஸ்த்ரீவீணா புஸ்தக தாரிணீ.
 
மனபயம் அதிகம் உள்ளவர்கள் எந்த ஒரு சிறு விஷயத்துக்கும் பயந்து கொண்டே இருப்பர் அப்படிப்பட்டவர்கள் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை நேரம் உள்ளபோது தினமும் 10 முறை சொல்லி வரவும்.

ப்ரூக்ஷபதத்த லக்ஷமீக: பர்கோ பத்ரோ பயாபஹ:
பகவாந் பக்தி ஸுலபோ பூதிதோ பீதி பூஷண:

இதை தினமும் 10 முறை கூற மனதில் பயம் விலகும்.
 
சக்தே பஜே த்வாம் ஜகதோ ஜநித்ரீம்
ஸுகஸ்ய தாத்ரீம் பிரணதார்தி விந்த்ரீம்
நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
பூயோ நமஸ்தே ஹ்திஸ்ந்நிதத்ஸ்வ.

- இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் கவலை தொலைந்து வாழ்வில் வசந்தம் வீசும்.
 
சிலருக்கு தான் சார்ந்த தொழில்களிலோ,அல்லது வேறு துறைகளிலோ அலுவலகத்திலோ தகுந்த திறமைகள் இருந்தாலும் புகழ் பெறுவதற்க்கு வாய்ப்பே இருக்காது. அப்படிப்பட்டவர்கள் சிவபெருமானின் கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் 108 முறையோ அல்லது 1008 முறையோ பூஜையறையில் உட்கார்ந்து சொல்லி வாருங்கள். உங்களின் திறமைகள் வெளிப்பட்டு வாழ்க்கை முன்னேற்றம் அடையும். சிறப்பான புகழ் சிவனருளால் உங்களை தேடி வரும்.

புண்ய கீர்த்தி : பராமார்ஷீ ந்ருஸிம் ஹோ நாபி மத்யக
யஜ்ஞாத்மா யஜ்ஞ ஸங்கல்போ பஜ்ஞ கேதுர் மஹேஸ்வர.
 
குடும்பத்தில் மன அமைதியை இழந்து தவிப்பவர்கள் மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் பெறவும், குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் தீரவும் கீழ்க்கண்ட ப்ருதிவிஸ்வராய தியான ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யலாம். அதிகாலையிலும் மாலையிலும் இரவிலும் இச்சுலோகங்களைச் சொல்லி சிவனை வழிபட வேண்டும்.

நமோ நமஸ்தே ஜகதீச் வராயசிவாய
லோகாஸ்ய ஹிதாய ஸம்பவே
அபார ஸம்ஸார ஸமுத்தராய
நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்ராய
விஸ்வாதி காய அதிவிமானகாய ஸோமாய
ஸோமார்த்த விபூஷணாய
ஸ்ரீகாள கண்டாய க்ருபாகராய
நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
ஆஸாம் பராய அம்பர வர்ஜிதாய
திகம்பராய அம்பிகாய யுதாய
குணத்ரயாத்யை: அபவர்ஜிதாய
நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
மாயா விகாராதி விவர்ஜிதாய
மாயாதி ரூடாய தபஸ்திதிய
கலாதி ரூடாய கபர்தினே ச
நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
கபாலினே காமவிவர் ஜிதாய
கதம்பமாலா கவிதாய பூம்னே
நிரஞ்சனாயாமித தேஜஸே ச
 
இதைப் பாராயணம் செய்வதால் ஸர்வ கார்ய சித்தி ஏற்படும். எல்லாவிதமான இடையூறுகளும் விலகி, காரிய சித்தி, தனலாபம், புத்ரலாபம் முதலியவைகள்ஏற்படும். குடும்பம் சுபிட்சமாக விளங்கும்.

ஸ்ரீ கணேஸாய நம: நாரத உவாச
ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீ புத்ரம் விநாயகம்
பக்தா வாஸம் ஸ்மரேந் நித்யாமயு: காமாத்த ஸித்தயே
ப்ரதமம் வக்ர துண்டம் ச ஏகதந்தம் த்விதீயகம்த்ருதீயம்
க்ருஷ்ண பிங்காக்ஷம் கஜவக்த்ரம் சதுர்த்தகம்
ஸம்போ தரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகடமே வச
ஸப்தமம் விக்னராஜம் ச தூம்ரவர்ணம் ததாஷ்டகம்
நவமம் பால சந்த்ரம் ச தஸமம் து விநாயகம்
ஏகாதஸம் கணபதிம் த்வாதஸம் து கஜானனம்
த்வாதஸைதானி நாமானித்ரி ஸந்த்யம்ய: படேந்நர:
நச விக்னபயம் தஸ்ய ஸர்வஸித்திகரம் ப்ரபோ:
வித்யார்த்தீ லபதே வித்யாம் தனார்த்தி லபதே தனம்
புத்ராத்தீ லபதே புத்ரான் மோக்ஷõர்த்தீ லபதே கதிம்
ஜபேத் கணபதி ஸ்தோத்ரம் ஷட்பிர்மாஸை:
பலம்லபேத்ஸம்வத்ஸரேண ஸித்திம் ச லபதே நாத்ர ஸம்ஸய:
அஷ்டப்யோ ப்ராஹ்மணேப்யஸ்ச லிகித்வாய: ஸமர்ப்யேத்
தஸ்ய வித்யா பவேத் ஸர்வா கணேஸஸ்ய ப்ரஸாதத:
ஸம்பூர்ணம்
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top