• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருஷ்டிகளும் பரிகாரங்களும்!

Status
Not open for further replies.
திருஷ்டிகளும் பரிகாரங்களும்!

திருஷ்டிகளும் பரிகாரங்களும்!
t2.jpg




சின்ன வயதில் பாட்டியோ அம்மாவோ நமக்கு கடுகு மிளகா உப்பு போன்றவற்றை நம்மை உட்காரவைத்து சுற்றி அடுப்பில் போடுவார்கள். ஊர்கண்ணே உலை வச்சிடுச்சு! இந்த மிளகா போல எரிஞ்சி போகட்டும் என்றோ அல்லது உப்பு போல கரைந்து போகட்டும் என்றோ சொல்வார்கள்.
உண்மையில் திருஷ்டி என்பது என்ன?


த்ருஷ்டி என்பது சம்ஸ்கிருத சொல். தமிழில் கண். திருஷ்டி கழித்தலை தமிழர்கள் கண்ணேறு கழித்தல் என்று கூறுவார்கள். எல்லாருடைய பார்வையும் நல்லவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அவர்கள் எண்ணம் தீயதாக கூட இருக்கலாம் அல்லவா? அந்த தீயதை போக்கும் விதமாக பல்வேறு திருஷ்டி கழிக்கும் பழக்கங்கள் உள்ளது.

அதில் சிலவற்றினை இப்போது பார்ப்போம். இதனை எழுத எனக்கு பழைய குமுதம் பக்தி இதழ் உதவியது. அதிலிருந்து என்பாணியில் சில திருஷ்டி கழித்தலை தொகுத்து தந்துள்ளேன்.

குழந்தைகளும் திருஷ்டியும்.


தாய் பத்து மாதம் சுமந்து பல்வேறு தியாகங்களை செய்து பிள்ளை பெறுகிறாள். அந்த பிள்ளை அழகாய் இருந்து விட்டாலோ எல்லோரும் அதை தூக்கி வைத்து கொண்டாடுவர். அத்தகைய பிள்ளைக்கு திருஷ்டி ஏற்படாமலா போகும். அதற்கு ஏற்படும் திருஷ்டிகளை போக்கும் முறைகளை பார்ப்போம்.

திருஷ்டி பொட்டு.

பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். அழகோ அழகுன்னு எல்லாரும் கொஞ்சறப்போ ஏற்படுற திருஷ்டிக்கு பரிகாரம் தான் கருப்பு திருஷ்டி பொட்டு. எளிமையான இது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்று.நெற்றியிலும் கன்னத்திலும் இடப்படும் மைப்பொட்டு குழந்தையின் திருஷ்டியை போக்கும். கோயில்கள்ல தருகின்ற ஹோம ரட்சையை வைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை!.


குழந்தை பிறந்த பிறகு தலைக்கு ஊற்றும் நாட்களில் அல்லது மாலை வெளைகளில் சிறிதளவு ஆரத்தி கரைத்து அதில் குழந்தை கையில் உள்ள கறுப்புவளையலை கழற்றி போட்டு சுற்றிப்போடுதல் மரபு. இப்படி சுத்திப்போடுவதால் வளைய வரும் திருஷ்டிகள் வளையலோடு போய்விடுமாம்.


சரியாக சாப்பிடாம அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு திருஷ்டி சுத்திப்போடறது எப்படி?

இப்படிசாப்பிடாம அடம் பிடிக்கிறதுக்கு கண்திருஷ்டி கூட காரணமா இருக்கும்னு சொல்லுவாங்க! ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நல்லா மூடிகிட்டு தாய் மடியில குழந்தையை இருத்தி இடமிருந்து வலமா மூணுதடவையும் வலமிருந்து இடமா மூணு தடவையும்சுத்தி அப்படியே குழந்தையின் அம்மாவுக்கும் சுத்தி அந்த உப்பை தண்ணியில போட்டுடுங்க. தண்ணியில உப்பு கரையரா மாதிரி திருஷ்டி எல்லாம் கரைஞ்சி குழந்தை சாப்பிட ஆரம்பிக்கும்.


கொஞ்சம் பெரிதான குழந்தைங்களா இருந்தா கொஞ்சமா சாதம் வடிச்சி சிகப்பு மஞ்சள் வெள்ளை கலர்கள்ல அஞ்சு உருண்டைகள்செஞ்சி ஞாயிற்று கிழமைகள்ல மதியம் 12 மணிக்கு இதே மாதிரி சுத்தி வெவ்வேறு திசைகளில் எறிந்து விடலாம். அப்புறம் குழந்தையோட கை கால்களை கழுவிட்டு நாமும் கழுவிகிட்டு உள்ள வரலாம். இந்த பரிகாரம் திருஷ்டி எந்த திசையில் இருந்தாலும் விலகிப் போகசெய்யும்.


குழந்தைங்களுக்கு சோறூஊட்டிய பின் தட்டில் மிச்சமிருக்கும் சாப்பாட்டில் குழந்தையை கைகழுவ வைத்து அதை சுற்றி போடலாம். சாப்பிட போகும் முன் ஒரு உருண்டை சாதம் தட்டில் ஓரமாக எடுத்து வைத்து அந்த உணவை காகத்திற்கு போட செய்யுங்கள். இதுவும் ஒரு பரிகாரமே.

குழந்தை எதையாவது பார்த்து பயந்து திருஷ்டி பட்டு அதனால் சாப்பிடாமல் மெலிந்து போகும் அப்போது சிறிய குழந்தையாக இருந்தால் பூந்துடைப்ப குச்சியை கொளுத்தி திருஷ்டி சுத்தி போடுதல் பழக்கம். குழந்தையை தாயின்மடியில் அமரவைத்து பூந்துடைப்ப குச்சிகள் எட்டினைஎடுத்து பெருக்கும் பகுதி உள்ள முனைகளை பிடித்துக்கொண்டு மறுமுனையால் குழந்தையின் தலையை இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மூன்று முறை சுற்றி பிறகு தலையில் இருந்து பாதம் வரை தொடுவது போல் தடவி வீட்டின் தென்கிழக்கு மூலையில் சாய்த்து வைத்து கொளுத்துங்கள் பட்பட்டென்று சத்தத்துடன் குச்சிகள் எரிந்து சாம்பலாக திருஷ்டியும் சாம்பலாகும்.
இதே ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளாக இருந்தால் சில பொருட்களை சேகரம் செய்து கொண்டு பரிகாரம் செய்யலாம்.

புதிய சட்டி ஒன்று, ஊமத்தங்காய், படிகாரம் தெருமண் , இவைகளை சேகரித்துக் கொண்டு பயந்த பிள்ளையை தெருவாசலில்கிழக்கு முகமாக நிறுத்தி மண்சட்டிக்குள் ஊமத்தங்காய், படிகாரம், தெருமண் இவை மூன்றையும் போட்டு மண்சட்டியை பயந்த பிள்ளையின் தலைக்கு இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மூன்று முறை சுற்றி தலை முதல் பாதம் வரை இறக்கி அப்படியே எடுத்துச் சென்று முச்சந்திகள் கூடும் இடத்தில் போட்டு உடையுங்கள். கையோடு ஒரு துடைப்பம் எடுத்துச் சென்று ஓரமாக பெருக்கித் தள்ளுங்கள். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் போகும். பின்னர் வீடு திரும்பி கைகால் கழுவி தலையில் சிறிது தண்ணீர் தெளித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையவும் . பிள்ளையையும் அவ்வாறே செய்ய செய்து உள்ளே அழைத்துச் செல்லவும்.

கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டால் குழந்தை கீழே விழும் சமயம் நீங்கள் அங்கிருந்தால் கீழேகிடக்கும் செங்கள் துண்டு அல்லது மண்ணாங்கட்டியால் குழந்தையின் தலையை மும்முறை சுற்றி தூக்கி போட்டு உடைத்து திருஷ்டி கழிக்கலாம்.


திடீரென வரும் காய்ச்சல் திருஷ்டியால இருக்குமோ என்றால் குழந்தையை கரித்துண்டுகள் மீது நிற்க சொல்லி குழந்தையின் பாட்டி அம்மா சித்தி போன்ற பெண்மணிகள் மிளகாய் 7 சிறியதுண்டு படிகாரம் கொஞ்சம் உப்பு இவற்றை ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு திருஷ்டி சுற்றவும். பின்னர் குழந்தையை நகரச் சொல்லி அந்தகரித்துண்டுகளையும் எடுத்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்வீட்டின் பின்புறம் கொட்டான்குச்சி அல்லது கரித்துண்டுகளை பற்ற வைத்து அதில் இந்த பொருட்களை போட்டு விடவும். பின்னர் பாத்திரத்தை கழுவி நீங்களும் கை கால் கழுவிக் கொண்டு உள்ளே வரவும்.

மாதம் ஒருமுறை மூன்று கண் கொட்டாங்கச்சி எடுத்து அதை அடுப்பில் பற்றவைத்து ஒரு தட்டில் வைத்து சுற்றி தெருவில் ஓரமாக போடலாம்.


படிகார கட்டியை கையில் எடுத்து சுற்றி அடுப்பு நெருப்பில் போட அது உப்பி வரும். அதை தெருவில் போட திருஷ்டி கழியும்.

இதைவிட எளிதான ஒரு முறை கற்பூரத்தை ஒரு தட்டில் ஏற்றி குழந்தைக்கு சுற்றி வாசலில் ஓரமாக போடுதல் இதனால் கற்பூரம் கரைவது போல திருஷ்டி கழியும் என்பது நம்பிக்கை.


இன்னும் சில வீடுகளில் கடுகுமிளகாய், உப்பு சிறிது தெருமண், தலைமுடி இவற்றி னை கையில் எடுத்துக் கொண்டு குழந்தையை உட்காரவைத்து ஊருகண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, நொள்ள கண்ணு கண்டக்கண்ணு, கள்ளக் கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு எல்லாம் கண்ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமிருந்துவலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி அடுப்பில்போடுவார்கள்.
இதுவும் ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரமே!


** பொதுவான திருஷ்டிகளும் அதற்கான பரிகாரங்களையும் கூறப்போகிறேன். நம்பிக்கை உள்ளோர் தொடருங்கள்!


கல்லடி பட்டாலும் படலாம்! கண்ணடி படக்கூடாது! என்பர். அந்த கண்ணடிதான் திருஷ்டி எனப்படுகிறது. மற்றவர் நம்மை பார்க்கும் பார்வையில் ஒரு தீய தாக்கம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் திருஷ்டி பட்டுடிச்சி என்பர். கண்ணேறு என்பது திருஷ்டியின் தூய தமிழ் பெயர்.பிறரோட பார்வை மட்டும் அல்ல நம்மோட பார்வையே கூட சில சமயம் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.


நல்ல வளப்பமாக ஆரோக்கியமாக வாழும் ஒருவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இளைத்துப் போகலாம். எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரே என்று பேசிக்கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் குன்றிய அவருக்கு எப்படி திருஷ்டி சுற்றுவது? மூன்று தெருக்கள் கூடுமிடத்திலிருந்து சிறிது மண் எடுத்துக் கொள்ளுங்கள் ஒன்பது காய்ந்தமிளகாய் ஒருபிடி உப்பு, கொஞ்சம் கடுகு ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு ஒரு கொட்டாங்குச்சி அல்லது இரும்பு பாத்திரத்தில் போட்டுக்கொண்டு முச்சந்தி மண்ணையும் அதனோடு போட்டு உடல் நலம் குன்றியவரை கிழக்குப்பார்த்து அமரச் செய்து இடமிருந்து வலமாக மூன்றுமுறையும் வலமிருந்து இடமாக மூன்றுமுறையும் சுற்றி கண்பட்ட திருஷ்டிகள் கடுகுபோல வெடிக்கட்டும் என்று சொல்லியவாறு சுற்றி கடவுளை வேண்டி கரி அடுப்பு பற்றவைத்து அந்த தணலில் போடுங்கள். பிறகு கால்களை கழுவிக் கொண்டு விபூதி பூசிக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டவருக்கும் பூசி விடுங்கள். விரைவில் குணமடைவார்.


பொறாமையினால் வரும் திருஷ்டி!

உங்களுடைய உழைப்புக்கும் திறமைக்கும் கிடைத்த புகழினால் கூட திருஷ்டி உண்டாகும். பரபரப்பாக செயல்பட்ட நீங்கள் சட்டென மந்தமாக செயல்பட நேரிடும் திடீர் மந்தம் இந்த திருஷ்டியினால்தான் ஏற்படும். இதற்கு பரிகாரம் படிகாரம் சுற்றிப்போடுவதுதான். கடையில் பெரிய படிகாரக் கட்டி ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். திருஷ்டிக்கு ஆளானவரை கிழக்கு நோக்கி உட்காரவைத்து படிகார கட்டி ஒன்றினால் இடமிருந்து வலம், வலமிருந்து இடம் மூம்மூன்று முறை சுற்றி தலையில் இருந்து பாதம் வரை மேலிருந்து கீழாக இறக்கி வீட்டின் பின்புறம் தணல் பற்றவைத்து அதில் படிகாரத்தை போட்டுவிடுங்கள். மறுநாள் அந்த படிகாரக் கட்டி பூத்திருக்கும் அதை முச்சந்தியில் போட்டுவிட்டு திரும்பி பாராமல் வீட்டுக்கு வந்து கைகால் கழுவி கடவுளை வேண்டி விபூதி பூசிக் கொள்ளுங்கள்.
படிகாரத்தை நீரிலும் போடலாம். அப்படி செய்தால் அதனை பிறர் கால் படாத இடத்தில் ஊற்றவும்.

உங்கள் வியாபாரத்தலம் அல்லது அலுவலகத்தில்!

முறையாக திட்டம் தீட்டியும் அலுவலகம் அல்லது தொழிலிடத்தில் இறங்குமுகமா? அந்த திருஷ்டிக்கு பரிகாரம் இதுதான். வளர்பிறை சனிக்கிழமை அல்லதுஞாயிற்றுகிழமையில் கடற்கரைக்கு சென்று பெரிய கேன் அல்லது பாட்டிலில் கடல் நீரை எடுத்துக் கொள்ளுங்கள் அதை துணியில் வடிகட்டி வடிகட்டிய நீரை எடுத்துச் சென்று உங்கள் அலுவலகம், தொழிலிடத்தில் குறிப்பாக உங்கள் அறையில் தெளியுங்கள் முடிந்தால் கழுவியும் விடலாம். இதில் முக்கியமான விசயம் இதை பிறரைக் கொண்டு செய்யக் கூடாது. பாதிக்கப்பட்டவரே செய்ய வேண்டும். இவ்வாறு மாதம் ஒரு முறை செய்து பாருங்கள் திருஷ்டி விலகி தொழில் சிறப்பாக வளரும்.


வந்த திருஷ்டிக்கு பரிகாரம் பார்த்தோம்! இனி திருஷ்டி வராம இருக்க பரிகாரம்.

சிறப்பாக வியாபாரம் நடக்க பரிகாரம்! உங்களுடைய வியாபாரத் தலம் அல்லது அலுவலகத்தில் கறுப்பு கம்பளிக் கயிற்றில் படிகாரத்துடன் ஊமத்தங்காய், அல்லது தும்மட்டிக்காய் சேர்த்துக் கட்டி அத்துடன் ஏழு மிளகாய்களை கோர்த்து கடைசியாக சிறிய படிகாரத்தையும் சேர்த்துக் கட்டி வாசலில் தொங்கவிடுங்கள். இந்த படிகாரம் கொஞ்சம் கரைந்ததும் அல்லது நாளானதும் மீண்டும் புதியதாய் கட்டுங்கள். இதில் முக்கிய விசயம் கடையை திறந்ததும் இரண்டு ஊதுபத்தி ஏற்றி கடவுளை வணங்கவும். மூடும் போது வாசலில் கற்பூரம் ஏற்றவும். அப்புறம் உங்க வியாபாரம் செழிக்கும்.
மாதா மாதம் கழிக்கும் திருஷ்டி!

அமாவாசையன்னிக்கு திருஷ்டி கழிக்கறேன் பேர்வழின்னு தேங்காயையும் பூசணிக்காயையும் உடைச்சு நடு ரோட்டுல போடறீங்க! அதுமுறையா செய்யக்கூடிய ஒன்று! எப்படின்னு கேட்டுக்கங்க!

அமாவாசையன்னிக்கு தேங்காய் உடைக்கிறவங்க அன்னைக்கு காலையிலேயே தேங்காயை எடுத்து சாமி படத்துகிட்டே வைச்சிடனும் மஞ்சள் தூளை தண்ணியிலே கரைச்சி அதை தேங்காய் பக்கத்துல வைச்சிடுங்க தேங்காயை உடைக்கிறதுக்கு முன்னாடி அதை கையில் எடுத்துகிட்டு மனசார கடவுளை வேண்டி திருஷ்டி போகணும்னு வேண்டிகிட்டு அதை உடைக்கிறவர் கிட்ட தேங்காயையும் மஞ்சள் தண்ணீரையும் கொடுத்திடுங்க தேங்காயில் கற்பூரம் ஏற்றி சுற்றி வாசல்ல ஒரு ஓரமா உடையுங்க. உடைபடற தேங்காய் மத்தவங்க எடுத்து உபயோகப்படுத்தனும். குறைந்தபட்சம் ஈ எறும்பாவது சாப்பிடனும். அதுதான் நல்லது. தேங்காயை உடைச்சதும் மஞ்சள் தண்ணீரை கொஞ்சம் தலையிலயும் உடம்புலயும் தெளிச்சிகிட்டு சுத்தி போட்டவறை உள்ளே வரச் சொல்லுங்க. உள்ளே வந்ததும் தண்ணீர் ஒரு டம்ளர் குடிக்க கொடுங்க! இப்படி ஒவ்வொரு அமாவாசையும் செய்யுங்க வாணிபம் வளர்பிறையா வளரும்.


பூசணிக்காய் உடைப்பது என்றாலும் முதலில் சாமி படத்தில் வைத்து வேண்டிக் கொள்ளவும். மஞ்சள் கரைத்த தண்ணீரையும் உடன் வைக்கவும். உடைப்பதற்கு அரை மணி நேரம் முன்னதாக பூசணிக்காயை ஒரு இடத்தில் துளையிட்டு அந்த இடத்தில் மஞ்சள் குங்குமம் போட்டு சில சில்லறைகளையும் போடுங்கள். பூசணிக்காயை உடைக்க போகும் நபர் வலதுகையில் கறுப்பு கயிறு ஒன்றை கட்டிவரச் சொல்லி பூசணிக்காயை நீங்கள் கையில் எடுத்து கடவுளை நினைத்து மனசார திருஷ்டி கழிய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் சுற்றுபவரிடம் கொடுத்து சுற்றி கடை வாசலில் ஓரமாக உடைக்கச் சொல்லுங்கள். பின்னர் மஞ்சள் தண்ணீரை தெளித்துக் கொண்டு அவரை உள்ளே வரச்சொல்லுங்கள்.கை கால் கழுவிகொண்டு வந்ததும் குடிக்க தண்ணீர் கொடுத்து அமரச் செய்யுங்கள்.

உடைத்த பூசணிக்காய் சிதறலாமே தவிர நசுங்க கூடாது! அதனால்தான் அதற்குள் காசுகளை போடும் பழக்கம் வந்தது. காசுகளை எடுப்பவர்கள் அதை எடுத்துக் கொண்டு குப்பையில் போட்டுவிடுவார்கள். மேலும் அவர்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதற்காக மஞ்சள் குங்குமம் அதில் போடப்பட்டது. ஓரமாக உடைத்த பூசணிக்காய்களை குப்பையில் அள்ளி போடச்சொல்லுங்கள். பூசணிக்காய்க்கு திருஷ்டிகள் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல் உண்டு அதனை சுற்றுபவர் திருஷ்டிகளை அதனுள் ஈர்த்து போய் சிதறச் செய்கிறார். எனவே அவருக்கு தட்சணை கொடுங்கள். சுற்றும் நபர் வெளி நபராக இருப்பின் முதலிலேயே தட்சணை கொடுத்துவிட வேண்டும். அவர் மஞ்சள் நீரை தெளித்து கொண்டு அப்படியே சென்று விட வேண்டும் உங்கள் ஊழியராய் இருந்தால் மஞ்சள் நீர் தெளித்துக் கொண்டு கால் கழுவிக் கொண்டு உள்ளே வரலாம்.



எளிமையான எலுமிச்சம் பழ திருஷ்டி கழித்தல்!

கடையை திறந்ததும் கடவுளை கும்பிட்டு ஒரு எலுமிச்சம் பழத்தினை இரண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி வருவோர் கண்பார்வை படும் படி வைக்கவும் கடை மூடும் சமயம் அதை எடுத்து தலையைச் சுற்றி அதைஇடம் வலமாக மாற்றி எறியுங்கள். அல்லது கடையை மூடும் போது ஒரு எலுமிச்சம் பழத்தில் கற்பூரம் வைத்து உங்களுக்கும் கடைக்கும் சேர்த்து சுற்றி அதை நசுக்கி இட வலமாக மாற்றி எறியுங்கள். எலுமிச்சம் பழம் தீய சக்திகளை திருஷ்டியின் பாதிப்புக்களை நெருங்கவிடாமல் செய்யும். எளிமையானதும் கூட.

Baskar Jayaraman
Smnksree
 
There are some people who claim that 'drishti', etc are 'mooda nambikkaigal'. However, in a popular show as seen on American TV ("America's Got Talent"), an artist/magician made a doll of 'voodoo' and poked it here and there with a sharp needle and amazingly one of the lady judges who volunteered to be his 'victim' screamed of pain... then the magician lit up a match stick and slightly burnt and made a mark in one of the palms of the voodoo doll and the lady judge again screamed of pain... it was amazing to watch this. Shows all our customs and traditions and their sayings are true.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top