• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருக்கொள்ளிகாடு பொங்குசனீஸ்வரர் ஆலயம&#3

Status
Not open for further replies.
திருக்கொள்ளிகாடு பொங்குசனீஸ்வரர் ஆலயம&#3

திருக்கொள்ளிகாடு பொங்குசனீஸ்வரர் ஆலயம்.

spt_p_kollikkadu.jpg





தல வரலாறு:


தல வரலாறு


  • மக்கள் வழக்கில் 'கள்ளிக்காடு' என்று வழங்குகிறது.
  • கொள்ளி - நெருப்பு. அக்கினி வழிபட்ட தலமாதலின் 'கொள்ளிக்காடு' என்று பெயர் பெற்றது.
  • இத்தலத் தேவாரத்தில் இறைவன் யானையை உரித்த செயல் குறிப்பிடப்படுவதால் மக்கள் ஒரு காலத்தில் இக்கோயிலை "கரியுரித்த நாயனார் கோயில்" என்றும் அழைத்து வந்ததாக தெரிகிறது.



சனி பகவான் பாரபட்சம் பார்க்காதவர். நாம் செய்யும் தவறுகளுக்கு தகுந்தபடி தண்டனை கொடுப்பவர். அதே போல் ஒருவர் பிறந்த நேரத்தின்படி சனிபகவான் நன்மை செய்வதாக அமைந்திருந்தால் அவர்களுக்கு அளவற்ற நன்மைகளையும், சிறந்த முன்னேற்றத்தையும் அளிப்பார். ஆனால் தேவர் முதல் மனிதர் வரை சனிபகவான் செய்யும் நன்மைகளை கண்டு சந்தோஷப்படாமல், அவர் செய்யும் தீய பலன்களைப்பற்றி மட்டுமே நினைத்து பயப்படுவர். இதனால் மனம் வருந்திய சனி, வசிஷ்டரின் யோசனைப்படி அக்னி வனம் எனப்படும் இத்தலத்தில் வந்து கடும் தவம் செய்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த ஈசன், அக்னி உருவில் தரிசனம் தந்து, சனியை பொங்கு சனியாக மாற்றினார். அத்துடன் இத்தலம் வந்து தன்னையும் பொங்கு சனியையும் வழிபடுவோருக்கு சனி சம்பந்தப்பட்ட தோஷங்கள் விலகும் என அருள்புரிந்தார்.

சிவன் அருளின்படி சனிபகவான் இத்தலத்தில் குபேர மூலையில் இருந்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு செல்வங்களை வழங்கி, மகிழ்ச்சியான வாழ்வை தருகிறார். நளச்சக்கரவர்த்தி தனக்கு சனிதோஷம் ஏற்பட்ட காரணத்தினால் நாடு, நகரம், மனைவி, மக்களை பிரிந்து மிகவும் துன்பத்திற்கு ஆளாகிறான்.

சனி தோஷம் விலகிய பின் இத்தலம் வந்து பொங்கு சனியை வணங்கி நலமடைந்ததாக வரலாறு கூறுகிறது.

தலபெருமை:

அக்னி பகவான் தன் சாபம் நீங்க இத்தலத்து ஈசனை வணங்கியதால் இறைவன் "அக்னீஸ்வரர்' எனப்படுகிறார். இங்கு மகாலட்சுமியின் சன்னதிக்கு அருகில் சனிபகவான் சன்னதி அமைந்திருப்பது தலத்தின் சிறப்பாகும். இத்தலத்திற்கு வன்னி, ஊமத்தை, கொன்றை என 3 தலவிருட்சங்கள் உள்ளன. இதில் வன்னிமரம் குபேர செல்வத்தையும், ஊமத்தை மனக்கவலையையும், கொன்றை குடும்ப ஒற்றுமையையும் தருகிறது. பொதுவாக அனைத்து கோயில்களிலும் நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் "ப' வடிவில் அமைந்திருப்பது சிறப்பு.

நாம் செய்யக்கூடிய பாவங்கள் அனைத்தையும் இத்தல இறைவன் அழித்து விடுவதால், பாவங்களுக்கு தண்டனை அழிக்கும் வேலை, இத்தலத்து நவகிரகங்களுக்கு கிடையாது. எனவே மாறுபட்ட கோணத்தை விட்டு அனைத்து நவகிரகங்களும் "ப' வடிவில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கலப்பை ஏந்திய சனி இங்குள்ள சனிபகவான் உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் கலப்பை ஏந்திய நிலையில் அருள்பாலிக்கிறார். இவரை சனிக்கிழமைகளில் மட்டுமின்றி அனைத்து கிழமைகளிலும் வன்னி இலைகளால் அர்ச்சனை செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்.


நவகிரக மண்டலத்தில் சனியின் திசை மேற்கு. அதே போல் இத்தலமும் மேற்கு பார்த்து அமைந்துள்ளது. சனி சம்பந்தப்பட்ட தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபாடு செய்து, சனிபகவானை வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

சனி சம்பந்தப்பட்ட தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபாடு செய்து, சனிபகவானை வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

சிறப்புகள்


  • சோழ மன்னன் ஒருவனுக்கு சனி தோஷம் விலகிய தலமாகும்.
  • மூலவர் சிவலிங்கத் திருமேனி; சற்று சிவந்த நிறமாகவுள்ளது. (அக்கினி வழிபட்டது.)
  • இத்தலத்து இறைவனருளால் சனிதோஷம் நீங்கப் பெற்ற திரிபுவனசக்கரவர்த்தி, தானமாகத் தந்த 120 ஏக்கர் நன்செய் (கோயிலை சுற்றி) இன்று கோயில் நிர்வாகத்தில் உள்ளது.
இருப்பிடம் :

திருவாரூரிலிருந்து (20 கி.மீ) திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் கச்சனம் அமைந்துள்ளது. அங்கிருந்து மேற்கே 8 கி.மீ. தூரம் சென்றால் திருக்கொள்ளிக்காடு திருத்தலத்தை அடையலாம். கச்சனத்திலிருந்து ஆட்டோ வசதி உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருநெல்லிக்கா

அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி, சென்னை

தங்கும் வசதி :

திருவாரூர்
















திருக்கொள்ளிக்காடு (கள்ளிக்காடு) திருக்கோயில் தலவரலாறு - sthala puranam of Thirukkollikkadu temple
Agneeswarar Temple : Agneeswarar Agneeswarar Temple Details | Agneeswarar- Tirukollikadu | Tamilnadu Temple | ???????????
?????????????????? ????? ????????????? ???????? ??????? ????????????? - Dinamani - Tamil Daily News
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top