• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஆண்டிராய்டு வடிவில் இலவசமாக மன்மத வருட ப

Status
Not open for further replies.
ஆண்டிராய்டு வடிவில் இலவசமாக மன்மத வருட ப

ஆண்டிராய்டு வடிவில் இலவசமாக மன்மத வருட பஞ்சாங்கம்

SRI THANIGAI PANCHANGAM, ???? ????? ?????????? ??????????, www.thanigaipanchangam.com


பஞ்சாங்கம் என்பது சூரிய சந்திர நிலைகளை நிலையான துவக்கப்புள்ளி (சித்திரை அல்லது அஸ்வினி நட்சத்திர) பின்னணியில் பகுத்து திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என மிகமுக்கியமான ஐந்து விஷயங்களையும், இதர பஞ்சாதி(புத, சுக்கிர, மங்கள, குரு, சனி) கிரகங்கள் மற்றும் ராகு, கேது (சந்திர புவிவட்ட பாதையில் ஏற்படும் வெட்டுப்புள்ளி) ஆகிய தகவல்கள் வானசாஸ்திர அடிப்படையில் கணிப்பதாகும்.


சித்தாந்தம்



பஞ்சாங்கங்கள் தற்பொழுது பாரதத்தில் மூன்று முறைகளில் கணிக்கப்படுகிறது அவை முறையே சூரிய சித்தாந்தம், ஆரிய சித்தாந்தம், திருக்கணித சித்தாந்தம் என்பதாகும்.

மேற்படி உட்டபட முன்னர் கிட்டத்தட்டட 18க்கும் மேற்பட்ட சித்தாந்தங்கள் அதை பயன்படுத்தும் கணிதமுறைகள் இருந்துள்ளன.


திருக்கணித சித்தாந்தம்

நவீன தொலைநோக்கி துணையுடன் கண்களால் பார்த்து மற்றும் தொலையுணர் விஞ்ஞான கருவிகள் கொண்டு சந்திர கிரகநிலையை மிக துல்லியமாக கணித்தும், அதன் அடிப்படையில் உயரிய சிக்கலான கணித சூத்திரங்கள்(Lunar theory - modern numerical theories) உருவாக்கியும், திருத்தங்கள் (Ephemeride Lunaire Parisienne) செய்தும் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் பெறப்படும் வானியல் துறையினரின் புள்ளிவிபரங்கள் கொண்டு திருக்கணித பஞ்சாங்கம் உருவாக்கப்படுகிறது


இஸ்ரோ , நாஸா அமைப்புகள் தங்களின் வான்வெளி திட்டங்களுக்கு பயன்படுத்தும் மிகதுல்லியமான வானியல் தகவல்களை வணிகஅடிப்படையில் வெளியிடுகிறது. இப்படி வெளியிடப்படும் துல்லியமான தகவல்கள் அடிப்படையில்தான் திருக்கணிதமுறை பஞ்சாங்கம் உருவாக்கப்படுகிறது. இப்படி உருவாகும் பஞ்சாங்கம் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது.


இந்திய அரசின் வான்நிலையியல் துறையின்கீழ் இயங்கும் வானியல் கிரக நிலை கண்காணிப்பு பிரிவு கொல்கத்தா அருகில் உள்ளது இங்கிருந்து பெறப்படும் தகவல்கள் முறைப்படி அரசு அனுமதிப்பெற்று திருக்கணித பஞ்சாங்கம் கணிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த துறையினரும் லஹரி அயனாம்ஸ நிலைக்கொண்டு ராஷ்டீரிய பஞ்சாங்கம் என்கிற மிகதுல்லியமான திருக்கணித பஞ்சாங்கத்தை வெளியிடுகின்றனர்.


மங்களாயன் மற்றும் சந்திராயன் வின்வெளிக்கலத்தை மிகதுல்லியமாக சந்திரனுக்கு அனுப்ப பயன்பட்ட புள்ளிவிபரங்களும் திருக்கணிதபஞ்சாங்கத்திற்கு வழங்கப்படும் புள்ளிவிபரங்களும் ஒன்றேயாகும்!
திருக்கணித முறையில் அயனம் வேறுபடலாம் ஆனால் திதி, நக்ஷ்திரம், யோகம் எக்காரணம் கொண்டும் மாறாது


இந்திய வின்வெளித்துறை மற்றும் நாஸாவின் அமாவாசை முடிவு நேரமும் திருக்கணித அமாவாசை முடிவு நேரமும் ஒன்றாக இருக்கும்(அப்படி இல்லையெனில் அது திருக்கணிதமல்ல!) ஏனெனில் இது கிரகணத்தின் பொழுது கண்ணுக்கு நன்றாக தெரியும் வானியல் நிகழ்வு.
அண்டை மாநிலங்களான ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகியவற்றில் நூறாண்டுகளாக திருக்கணிதமுறையே பின்பற்றப்படுகிறது. பிறந்த ஜாதகம் கணிப்பதிலும் இவர்கள் திருக்கணிதமுறைய மட்டுமே கடைபிடிக்கிறார்கள்.


திருக்கணித முறையில் சந்திரன் கிரகநிலை மட்டும் கணக்கிட 100க்கும் மேற்பட்ட சூத்திரங்கள், திருத்தங்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் 10ஆண்டுக்கு ஒருமுறை வானியல் விஞ்ஞானிகள் கூடி கூடுதல் திருத்தங்களை விவாதித்து ஏற்றுக்கொள்கிறார்கள். (இது போன்ற எந்த வித ஏற்பாடும் வாக்கிய முறை பஞ்சாங்கத்தில் இல்லை 400 வருடங்களாக வாக்கியத்தில் திருத்தமே செய்யவில்ல!)


அயனாம்ஸம்



அயனாம்ஸம் குறித்து பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் இந்திய அரசின் நாட்காட்டி சீர்திருத்தக்குழு (1952) மற்றும் சர்வதேச வானியல் சம்மேளனத்தின் வானியல் விஞ்ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்டதுலஹரி அயனாம்ஸமே. எனவே இதன் அடிப்படையில் அமையும் திருக்கணித பஞ்சாங்கம் தான்சரியானது என்பது எனது கருத்தாகும். ஏனெனில் லஹரி அயனாம்ஸம் மட்டுமே உயரிய வல்லுநர் குழுவால் உருவாக்கப்பட்டு வானியல் அறிவியலாளர்களால் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ப்பட்டது. மேலும் அந்த லஹரி அயனாம்ஸம் சர்வதேச விஞ்ஞானிகளால் விவாதிக்கப்பட்டது, அறிவியல் சஞ்சிகைகள் இது தொடர்பான விவாதங்களை நடத்தியுள்ளது். மற்றப்படி அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள் சபையில் விவாதிக்காத அயனாம்ஸத்தை சரிஎன்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஏனெனில் அயனாம்ஸம் குறித்த இருவேறு கருத்துக்கள் உள்ளனது அது புவி மைய சுழற்ச்சி தொடர்புடையது, மற்றொன்று சமநாள் தொடர்புடையது இதில் இன்னும் (சூரிய சித்தாந்த அயனாம்ஸ கொள்கை வேறு, நவீன சித்தாந்த அயனாம்ஸ கொள்கை வேறு) ஒருமித்த முடிவு ஏற்படாத நிலையில் அறிவியல் முறைப்படி கூறப்படுவதை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அயனம் குறிப்பிட்ட அளவிற்கு பின்னர் குறையும் மற்றும் அயனம் ஏற்றம் மட்டுமே இருக்கும் என்பது போன்ற இருவேறான கருத்துக்கள் இருக்கத்தான் செய்கிறது. எனவே வானியல் அறிவியலாளர்களின் முடிவை ஏற்பதுதான் அறிவுடமையாகும்.


குறிப்பிட்ட கிரகத்தை நிராயண முறையில் இருந்து அயனம் வேறுபாடு கழித்து சாயனமுறையில் வானை தொலைநோக்கி கொண்டு பார்த்தால் அங்கு குறிப்பிட்ட கிரகம் இருக்கவேண்டும் அதுதான் உண்மையான அயனாம்ஸ வேறுபாடு.


அயனவேறுபாடுக்அப்பாற்பட்டு அமாவாசை, பௌர்னமி முடிவு நேரத்தில் எந்த வேறுபாடும் இருக்கக்கூடாது அப்படி இருப்பின் அதுகணித பிழையாகும்.


ஸ்ரீ தணிகை திருக்கணித பஞ்சாங்கம்



மேலே குறிப்பிட்ட வானியல் துறைகளிடம் இருந்து பெறப்படும் மிகதுல்லியமான தகவல்களை கொண்டு உருவாக்கப்படும் நம்பகமான ஸ்ரீ தணிகை திருக்கணித பஞ்சாங்கத்தினை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.


இந்த பஞ்சாங்கத்தின் துல்லியம் அதிக பட்சம் 1 நிமிட வேறுபாடு, சூரிய உதயகால பிம்ப மத்திம கணிப்பில் கடைபிடிக்கும் முறைகள், திரிகோணவியல் முறையை சமதளமுறையாக பாவித்து கணிப்பதில் ஏற்படும் குறைபாட்டில் 1 நிமிட வேறுபாடு இருக்கும் (இது குறை அல்ல பிழை அல்ல)

ஸ்ரீ மன்மத வருட ஸ்ரீ தணிகை திருக்கணித பஞ்சாங்கம்
Manmatha Varusha (2015 - 2016) Thirukanitha Panchangam​
திதி,நட்சத்திரம்,யோகம்,கரணம்,தியாஜ்யம்,அகஸ் (சென்னை பகல் பொழுது),லக்ன இருப்பு,யோகினி,அமிர்தாதி யோகம்,நேத்திரம், ஜீவன்,வாரசூலை, சிரார்த திதி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு தேதிகள், சாந்திரமானம், சௌரமானம், கரிநாள், தனிய நாள், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி, பண்டிகை நாட்கள், விரத தினங்கள், கிரக பெயர்ச்சிகள்
அபராண்ண காலம்(அகஸ் அடிப்படையில்), ராகு, எமகண்ட, குளிகன் (அகஸ் அடிப்படையில்), நிராயண, சாயன ரவி பிரவேசம், லஹரி அயனாம்ஸம், வாக்கியப்படி தமிழ் தேதி, வாக்கிய மாஸ பிறப்பு
வாஸ்து நாள்(சென்னை நேர அடிப்படை), ஹோரை, தாராபலன், சந்திர பலன்

நவக்கிரக தகவல், கிரக உச்சம், நீசம் (மறைவு) , மித்துரு(நட்பு), சத்துரு(பகை)

அறிய வானவியல் தகவல்கள், சூரிய உதயம், அஸ்தமனம், வருஷ தான்யாதிகள், கிரக மூடம், உதய, அஸ்தமனம், சூரிய, சந்திர கிரஹணங்கள், மகர சங்கராந்தி, வருஷ பிறப்பு, மாத பிறப்பு, நவநாயகர் பலன்கள், சுப முகூர்த்த நாட்கள், கிரஹப்பிரவேச நாட்கள், ஆழ்வார், நாயன்மார் தினம், மன்வாதி புண்ணிய காலம், இந்து, பௌத்த, ஜைன முக்கிய பண்டிகைகள், கல்பாதி புண்ணிய காலம்
நடராஜர் அபிஷேக தினம், கிரக சஞ்சாரம், கிரக பாத சாரம், பொதுவான ஜோதிட விஷயங்கள், தமிழ் வருஷங்கள், அமிர்தாதி யோகங்கள், யோகினி திசை விபரம், வார சூலை இன்னும் பல தகவல்களுடன்....... கும்ப கோணம் மகாமகம் வானியல் விளக்கம்....!

SRI THANIGAI PANCHANGAM, ???? ????? ?????????? ??????????, www.thanigaipanchangam.com
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top