• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருமங்கையாழ்வார்

Status
Not open for further replies.
திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார்

TN_175915000000.jpg



பிறந்த இடம் : திருக்குறையலூர் ( நாகப்பட்டினம் மாவட்டமசீர்காழி அருகில்)
தந்தை : ஆலிநாடுடையார்
தாய் : வல்லித்திரு அம்மையார்
பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு நளஆண்டு கார்த்திகை மாதம்
நட்சத்திரம் : கார்த்திகை (பவுர்ணமி திதி)
கிழமை : வியாழன்
எழுதிய நூல் : பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை, பெரிய திருமடல்,சிறிய திருமடல்.
பாடிய பாடல் : 1253
சிறப்பு : திருமாலின் சார்ங்கம் என்ற வில் லின் அம்சமாக பிறந்தவர், மன்னனாகப் பிறந்து பக்தி மார்க்கத்தில்திளைத்தவர்.

பெற்றோர்கள் இவருக்கு நீலன் என்று பெயரிட்டனர். இவரது வீரத்தில் மகிழ்ந்த மன்னன், நீலனை தன் படைத்தளபதி ஆக்கியதுடன், திருவாலி நாட்டின் மன்னனாகவும் ஆக்கினான். அமங்கலை என்ற தேலோக கன்னி, கபில முனிவரின் சாபத்தால் பூமியில் குமுதவல்லி நாச்சியார் என்ற பெயரில் வளர்ந்து வந்தாள்.

இவளது புகழையும், அறிவையும் கேள்விப்பட்ட திருமங்கைஆழ்வார் இவளைத்திருமணம் செய்ய விரும்பினார். விஷ்ணுவின் பக்தையான குமுதவல்லியோ தன்னை திருமணம் செய்ய வேண்டுமானால் தினமும் ஆயிரத்தெட்டு வைணவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தாள்.

நிபந்தனையின் பேரில் அமுது படைத்து, படைத்து அரண்மனையின் நிதி நிலை சரிந்தது. வழக்கமாக சோழமன்னனுக்கு கப்பம் கேட்டு வந்த ஏவலர்களிடம் தன் நிலையை கூறி அனுப்பி விட்டார். கோபமடைந்த மன்னன் அமைச்சர்களுடன் தன் படையை அனுப்பி ஆழ்வாரை பிடித்து வரும்படி கூறினான். ஆனால் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டனர். எனவே மன்னனே பெரும் படையுடன் சென்றான். ஆனாலும் ஆழ்வார் அவர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்தார். ஆழ்வாரின் வீரத்தில் மகிழ்ந்த மன்னன் அவரிடம் நேரில் சென்று பேச்சுப்படி கப்பம் கட்டுவதே சிறந்தது. அதுவரை என் கைதியாக கோயிலில் தங்கியிரு என்றார். மன்னன் கூறியபடி ஆழ்வாரும் மூன்றுநாட்கள் எதுவும் சாப்பிடாமல் கோயிலில் தங்கியிருந்தார்.


பசி மயக்கத்தில் தூங்கிய ஆழ்வாரின் கனவில் தோன்றிய காஞ்சிபுரத்து பெருமாள். தன் சேவைக்கு வந்தால் அவரது கடன் தீர்க்கும் வகையில் பொருளுதவி செய்வதாக கூறினார். மன்னனின் அனுமதிபெற்று படையினருடன் காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார், பெருமாள் கூறிய இடத்தில் தோண்டவும், பெரும் புதையல் இருந்தது. அதை எடுத்து மன்னனுக்குரிய கடனை அடைத்து விட்டு மீதியை அமுது படைக்க வைத்துக்கொண்டார். இதையறிந்த மன்னன் ஆழ்வாரைப் பணிந்து, பணத்தை திருப்பிக்கொடுத்து அமுது படைக்கவைத்துக் கொள்ள கூறினார். இந்தப்பணமும் தீர்ந்து போகவே, ஆழ்வார் தன் அமைச்சர்களுடன் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து அமுதுபடைத்து வந்தார். ஒரு முறை நாராயணன் லட்சுமி தேவியுடன் மணக்கோலத்தில் வந்தார். ஆழ்வார் தன் படையினருடன் அவர்களை மிரட்டி அவர்களது நகைகளை பெற்றுக்கொண்டார். ஆனால் தன் கால் விரல் மோதிரத்தை மட்டும் நாராயணன் கழட்டவில்லை. ஆழ்வாரும் மோதிரத்தை கழட்டும்படி கூறியதற்கு, என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழட்டிக்கொள் என்றார் நாராயணன். அதேபோல் ஆழ்வாரும் குனிந்து தன் பற்களால் விரலைக்கடித்து மோதிரத்தை இழுத்தார். அப்போது நாராயணன் ஆழ்வாரின் காதுகளில் நாராயண மந்திரத்தை உபதேசித்தார்.

வந்திருப்பது நாராயணன் என்பதை அறிந்த ஆழ்வார் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். ஆழ்வார் திருடனாக இருந்தாலும் தன் உணவுக்கு கூட அதை எடுக்காமல் யாசித்து சாப்பிட்டார்.

பெருமாளின் 108 திருப்பதிகளில் இவர் தனியாக சென்று 46 கோயில்களையும், மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து 36 கோயில்களையும் என மொத்தம் 82 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார். 12 ஆழ்வார்களில் இவர்தான் அதிக பெருமாள் திருத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வரலாற்றில் ஒரு சிறப்பு என்னவென்றால் இவர் மொத்தம் 82 பெருமாள் கோயில்களை மங்களாசாசனம் செய்திருந்தாலும், தான் பிறந்த சொந்த ஊரான திருக்குறையலூரில் உள்ள பெருமாள் கோயிலை மங்களாசாசனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-46



1. திருப்புல்லாணி (அருள்மிகு கல்யாண ஜகன்னாதர் திருக்கோயில், திருப்புல்லாணி, ராமநாதபுரம்)
2. திருமயம் (அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை)
3. திருக்கரம்பனூர் (அருள்மிகு புரு÷ஷாத்தமன் திருக்கோயில், உத்தமர் கோயில், திருச்சி)
4. கண்டியூர் (அருள்மிகு ஹரசாப விமோசனர் திருக்கோயில், கண்டியூர், தஞ்சாவூர்)
5. நைமிசாரண்யம் (அருள்மிகு தேவராஜர் திருக்கோயில், நைமிசாரண்யம், உ.பி.)

6. ஜோதிஷ்மட், திருப்பிரிதி(அருள்மிகு பரமபுருஷர் திருக்கோயில், நந்தப்பிரயாக், உ.பி.)
7. சிங்கவேள்குன்றம் (அருள்மிகு பிரகலாத வரதன்,நரசிம்மர் திருக்கோயில், அகோபிலம், கர்நூல், ஆந்திரா)
8. திருஎவ்வுள் (அருள்மிகு வீரராகவ பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர்)
9. தின்னனூர் (அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம்)
10. திருத்தண்கா (அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)

11. திருப்பரமேஸ்வர விண்ணகரம் (அருள்மிகு பரமபதநாதன் திருக்கோயில், திருப்பரமேஸ்வர விண்ணகரம், காஞ்சிபுரம்)
12. திருப்பவள வண்ணம் (அருள்மிகு பவள வண்ணர் திருக்கோயில், திருப்பவள வண்ணம், காஞ்சிபுரம்)
13. திரு நீரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்
14. திரு காரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்
15. திருக்கார் வானம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்

16. திருக்கள்வனூர் (அருள்மிகு ஆதிவராக பெருமாள், கள்வப்பெருமாள் திருக்கோயில்கள், திருக்கள்வனூர், காமாட்சி அம்மன் கோயிலுக்குள் உள்ள சன்னதி, காஞ்சிபுரம்)
17. நிலாத்திங்கள் துண்டான் (அருள்மிகு சந்திர சூடப் பெருமாள் திருக்கோயில், நிலாத்திங்கள் துண்டான், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் உள்ள சன்னதி, காஞ்சிபுரம்)
18. திருப்புட்குழி (அருள்மிகு விஜய ராகவப் பெருமாள் திருக்கோயில், திருப்புட்குழி, காஞ்சிபுரம்)
19. திருவஹீந்தபுரம் (அருள்மிகு தெய்வநாயகன் திருக்கோயில், திருவகிந்திபுரம், கடலூர்)
20. காழிச்சீராம விண்ணகரம் (அருள்மிகு திரிவிக்ரமன் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம்)


21. திருக்காவளம்பாடி (அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், திருக்காவளம்பாடி, திருநாங்கூர், நாகப்பட்டினம்)
22. திருவெள்ளக்குளம் (அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில், திருவெள்ளக்குளம், திருநாங்கூர், நாகப்பட்டினம்)
23. கீழைச்சாலை (அருள்மிகு தெய்வநாயகன் திருக்கோயில், திருத்தேவனார் தோகை, திருநாங்கூர், நாகப்பட்டினம்)
24. திருப்பார்த்தன் பள்ளி (அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், திருப்பார்த்தன் பள்ளி, திருநாங்கூர், நாகப்பட்டினம்)

25. திருமணிக்கூடம் (அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில், திருமணிக்கூடம், திருநாங்கூர், நாகப்பட்டினம்)

26. மணிமாடக் கோயில் (அருள்மிகு நாராயணன் திருக்கோயில், மணிமாடக் கோயில், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
27. அரியமேய விண்ணகரம் (அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில், அரியமேய விண்ணகரம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
28. வன் புருத்÷ஷாத்தமம் (அருள்மிகு புருத்÷ஷாத்தமன் திருக்கோயில், வன் புருத்÷ஷாத்தமம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்
29. திருத்தேற்றி அம்பலம் (அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில், திருத்தேற்றி அம்பலம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
30. வைகுந்த விண்ணகரம் (அருள்மிகு வைகுண்டநாதன் திருக்கோயில், வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்
31. செம்பொன் சேய் கோயில், (அருள்மிகு பேரருளாளன் திருக்கோயில், செம்பொன்சேய் கோயில், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
32. தலைசிங்க நான்மதியம் (அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோயில், தலைச்சங்காடு, நாகப்பட்டினம்)
33. இந்தளூர் (அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில், திருஇந்தளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்)
34. தேரழுந்தூர் (அருள்மிகு தேவதிராஜன் திருக்கோயில், தேரழுந்தூர், நாகப்பட்டினம்)
35. திருச்சிறுபுலியூர் (அருள்மிகு அருள் மாகடல் திருக்கோயில், திருச்சிறுபுலியூர், திருவாரூர்)

36. நாகை (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், நாகபட்டினம்)
37. திருக்கண்ணங்குடி (அருள்மிகு லேகநாதப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி, திருவாரூர்)
38. திருக்கண்ண மங்கை (அருள்மிகு பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ண மங்கை, திருவாரூர்)
39. திருச்சேறை (அருள்மிகு சாரநாதன் திருக்கோயில், திருச்சேறை, தஞ்சாவூர்)

40. திருநறையூர் (அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில், திருநறையூர், தஞ்சாவூர்)
41. திருவெள்ளியங்குடி (அருள்மிகு கோலவல்வில்லி ராமன் திருக்கோயில், திருவெள்ளியங்குடி, தஞ்சாவூர்)
42. நந்திபுர விண்ணகரம் (அருள்மிகு ஜகந்நாதன் திருக்கோயில், நந்திபுர விண்ணகரம், நாதன் கோயில், தஞ்சாவூர்)
43. ஆதனூர் (அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், ஆதனூர், தஞ்சாவூர்)
44. திருப்புள்ளபூதங்குடி (அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில், திருப்புள்ளபூதங்குடி, தஞ்சாவூர்)
45. திருக்கூடலூர் (அருள்மிகு வையம் காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர், தஞ்சாவூர்)

46. திருக்கோழி (அருள்மிகு அளகிய மணவாளர் திருக்கோயில், உறையூர், திருச்சி)

திருமங்கை ஆழ்வார் மற்ற ஆழ்வார்களுடன் சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-36


திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் (4)
1. திருநீர்மலை (அருள்மிகு நீர்வண்ணன் திருக்கோயில், திருநீர்மலை, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம்)
2. திருவிடந்தை (அருள்மிகு லட்சுமி வராகர் திருக்கோயில், திருவிடந்தை, காஞ்சிபுரம் மாவட்டம்)
3. திருக்கடல் மல்லை (அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்)
4. அத்திகிரி (அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)


திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார் (1)
1. காஞ்சிபுரம் (அருள்மிகு ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில், அஷ்டபுஜம், காஞ்சிபுரம்)
திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)
1. திரு ஊரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)
திருமங்கையாழ்வார், பேயாழ்வார் (1)
1. திருக்கடிகை (அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில், சோளிங்கபுரம், வேலூர் மாவட்டம்)


திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் (5)
1. திருமோகூர் (அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருமோகூர், மதுரை)
2. திருப்புலியூர் (அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில்,திருப்புலியூர்,ஆழப்புழா, கேரளா மாநிலம்)
3. திருவல்லவாழ் (அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், வல்லப ÷க்ஷத்திரம், பந்தனம் திட்டா, கேரளா மாநிலம்
4. திருமூழிக்களம் (அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம்,எர்ணாகுளம், கேரளா மாநிலம்)
5. திருநாவாய் (அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்,மலப்புரம், கேரளா மாநிலம்)


திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார் (3)
1. பத்ரிநாத் (அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், பத்ரிநாத், உ.பி,)
2. சாளக்கிராமம், முக்திநாத் (அருள்மிகு மூர்த்தி திருக்கோயில், சாளக்கிராமம், நேபாளம்)
3. திருக்கூடல் (அருள்மிகு கூடல் அழகர் பெருமாள் திருக்கோயில், திருக்கூடல், மதுரை)
திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார் (2)
1. திருச்சித்ர கூடம் (அருள்மிகு கோவிந்த ராஜ பெருமாள் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்)
2. திருவாழித் திருநகரி, (அருள்மிகு லட்சுமி நரசிம்மர், தேவராஜன் திருக்கோயில், திருவாழித் திருநகரி, நாகப்பட்டினம்)


திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் (1)
1. திருத்தங்கல் (அருள்மிகு குண்றின்மேல் நின்ற நாராயணன் திருக்கோயில், திருத்தங்கல், விருதுநகர்)
திருமங்கை ஆழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார் (1)
1. திருஆய்பாடி (அருள்மிகு நவமோகனகிருஷ்ணன் திருக்கோயில், கோகுலம், உ.பி.)
திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)
1. திருவல்லிக்கேணி (அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை)
திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் (1)
1. திருக்கோயிலூர் (அருள்மிகு திரிவிக்கிரமர் திருக்கோயில், திருக்கோயிலூர், விழுப்புரம்)
திருமங்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் (1)
1. திரு விண்ணகர் (அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், ஒப்பிலியப்பன்கோவில், தஞ்சாவூர்)



திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார்(1)
1. வெண்ணாற்றங்கரை (அருள்மிகு நீலமேகப் பெருமாள், மணிக்குன்ற பெருமாள் திருக்கோயில்கள், தஞ்சைமாமணி கோயில், தஞ்சாவூர்)
திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார் (2)
1. துவாரகை (அருள்மிகு கல்யாண நாராயணன் திருக்கோயில், துவாரகை, குஜராத்)
2. திருவடமதுரை (அருள்மிகு கோவர்த்தனன் திருக்கோயில், மதுரா, உ.பி.)
திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)
1. திருவெக்கா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்)
திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார் (2)
1. திருப்பேர் நகர் (அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி, தஞ்சாவூர்)
2. திருக்குறுங்குடி (அருள்மிகு நின்ற நம்பி திருக்கோயில், திருக்குறுங்குடி, திருநெல்வேலி)
திருமங்கை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)



1. திருப்பாடகம் (அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம், காஞ்சிபுரம்)
திருமங்கை ஆழ்வார் ,பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார் (1)
1. திருக்கண்ணபுரம் (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர்)
திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், நம்மாழ்வார் (1)
1. அயோத்தி (அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி,பைசாபாத், உ.பி)
திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், பேயாழ்வார் (1)
1. திருக்கோஷ்டியூர் (அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர், சிவகங்கை)


திருமங்கை ஆழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் (1)
1. திருமாலிருஞ்சோலை (அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில், மதுரை
திருமங்கை ஆழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார் (1)
1. கும்பகோணம் (அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்)
திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)
1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல்
திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார்,திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)
1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)


Thirumangai Alwar | Alwargal | ?????????????????
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top