• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கருட புராணம் கூறும்-"செய்யும் பாவங்களுக&#

Status
Not open for further replies.
கருட புராணம் கூறும்-"செய்யும் பாவங்களுக&#

அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்ம
நெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும்
அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால்
துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத
ஒரு பயம் உண்டாகும்.

பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது
கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத்
துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில்,
பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு
வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு,
கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு
பாவிகள் அவதிப்படுவார்கள்.


 
கருட புராணம் கூறும்-"செய்யும் பாவங்களுக&#

பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது
கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத்
துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில்,
பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு
வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு,
கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு
பாவிகள் அவதிப்படுவார்கள்.

அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல்,
கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள்
புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய
மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும்.
விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத்
துன்புறுத்தும்.
 
கருட புராணம் கூறும்-"செய்யும் பாவங்களுக&#

அக்னிகுண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை,
தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து
வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை
நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள்.
இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல்
கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில்
வாட்டி எடுக்கப்படுவார்கள்.

வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ
கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம்
வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக்
கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.
 
கருட புராணம் கூறும்-"செய்யும் பாவங்களுக&#

கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச்
சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும்.
பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள்.
இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத்
துளையிட்டு துன்புறுத்தும்.

சான்மலி: நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல்,
உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது
கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய
பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும்
எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.
 
கருட புராணம் கூறும்-"செய்யும் பாவங்களுக&#

வைதரணி: நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக
நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நதியல்ல.
இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும்.
கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து
துன்பப்படுவார்கள்.

பூபோதம்: சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி,
ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன்
அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள்,
பிராணிகள் கடிக்கும்.
 
கருட புராணம் கூறும்-"செய்யும் பாவங்களுக&#

பிராணி ரோதம்: பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால்
அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை
ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.

விசஸனம்: பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும்
நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி
கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.
 
கருட புராணம் கூறும்-"செய்யும் பாவங்களுக&#

லாலா பக்ஷம்: மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற
மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும்
நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.
சாரமேயாதனம்: வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது,
உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல்,
மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச்
செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான
கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.

அவீசி: பொய்சாட்சி சொன்னால் நீர்நிலைகளில் ஜீவன்களைத்
தூக்கிவீசி அழுத்துவார்கள்.
 
கருட புராணம் கூறும்-"செய்யும் பாவங்களுக&a

மார்க்கண்டேய புராணம் கூறும் பாவத்திற்கேற்ற
தண்டனைகள்:
1. பிறர் மனைவியை காமக்கண் கொண்டு நோக்கியவர்களின்
கண்கள் இரும்புமுகம், நீண்ட அலகுள்ள கொடிய
பறவைகளால் கொத்திப் பிடுங்கப்படும்.
2. குருவை அவமதித்தல், சாஸ்திரத்தைச் சாதுக்களைக்
கேலி செய்தல், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால்
பிடுங்கப்படும்.
3. விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன்
மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக்
கொள்ளச் செய்யப்படுவர்.
4. அக்கினி, குரு, பசு ஆகியவற்றை காலால் தீண்டியவன்
கால்கள் வெட்டப்படும்.
5. தெய்வநிந்தனை, குருவை இகழ்தல் செய்வதைக்
கேட்டவர் காதில் இரும்பு ஆணி அடிக்கப்படும்.
6. தீர்த்தத்தில் மலம், சிறுநீர் கழிப்பவன் கல்லுக்குள்
தேரையாய்ப் பிறப்பான்.
7. நீசனிடம் தானம் கேட்டோர், யாசகர், குருவிடம்
பொய் கூறியோர் நாயாகப் பிறப்பர்.
8. தானியத்தை திருடியவன் எலியாகவும், சகோதரர்
மனைவியைக் கெடுத்தவன் குயிலாகவும், குரு
பத்தினியைக் கூடியவன் பன்றியாகவும், உணவு பால்
திருடியவன் கொக்காகவும், கொழுந்து விட்டு எரியாத
தீயில் ஓமம் செய்தவன் செரிமானம் இன்றி
அவதிப்படுபவனாகவும் பிறப்பர்.

இப்படி வேறு, வேறு பாவங்களுக்கு ஏற்ப ஏராளமான
தண்டனைகள் நரகத்தில் அளிக்கப்படும். எனவே
மனிதன் பாவத்திற்கு ஏற்ற தண்டனை நரகத்தில்
நிச்சயம் என்று அறிந்து புண்ணியத்தையே சம்பாதிக்க வேண்டும்
 
இதனால் அறியப்படுவது என்னவென்றால், அந்தக் காலத்திலேயே இத்தனை பாவச் செயல்களும் செய்யப்பட்டுள்ளன!! :dizzy:
 
இதனால் அறியப்படுவது என்னவென்றால், அந்தக் காலத்திலேயே இத்தனை பாவச் செயல்களும் செய்யப்பட்டுள்ளன!! :dizzy:

ஆமாம் சந்தேகமே இல்லை. இதனால் மேலும் அறியப்படுவது என்னவென்றால் மனிதர்கள் பிறந்த உடனே இந்தமாதிரியான பாபங்களை செய்ய தொடங்கிவிடுகிறான்.பெண்களு ம் கூட.
 
.......... இதனால் மேலும் அறியப்படுவது என்னவென்றால் மனிதர்கள் பிறந்த உடனே இந்தமாதிரியான பாபங்களை செய்ய தொடங்கிவிடுகிறான்......
பிறந்த உடனேயா? :nono:

குழந்தையும் தெய்வமும் ஒன்று நண்பரே! :baby: = :angel:
 
பிராணி ரோதம்: பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால்
அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை
ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.
விசஸனம்: பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும்
நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி
கொடுத்துத் துன்புறுத்துவார்கள்

Let us hope the people who tortured an elephant due to personality clash, would have enjoyed the above treatment.
 
If one punished in Naragam, then what is Karma Theory. You cannot punish a person twice for same mistake/misdeed.

Dear Sir,

I have thought along the same lines as you wrote above. To me it seems like god does not always wish to allocate the same amount of resources it takes to bless a soul with a human birth - for a human birth to manifest, there have to be appropriate 'parents', siblings, friends, probably a spouse, an educational environment, a profession, and so forth. I tend to think that for personalities such as hitler, god does not always wish to provide as many resources it takes for a human birth, but instead confines such a soul to a transitory plane as 'hell' and punishes the soul after which the soul is made to start all over again with a plant birth and upwards.
 
If one punished in Naragam, then what is Karma Theory. You cannot punish a person twice for same mistake/misdeed.

There is/was no narakam or swargam as per the oldest veda, the rigveda. The swargam-narakam idea has most probably come as a result of the influx of Chritianity, around 2000 years or so ago. But thereafter the upanishads and the thoughts gained importance, when Buddhism and Jainism were being wiped out completely. The bhakti cult gained popularity and the image of a compassionate god also became popular. It was impossible to have a compassionate god who maintained both a hell and heaven and punished the souls so very cruelly. Plus, Buddhism laid emphasis on rebirth and since Buddhism had spread considerably among the vaishyas and Sudras also, the people-in-charge must have felt that they would not be able to erase this idea as easily as they could buddhsim and jainism, the larger belief systems. So they invented the new idea of transmigration of souls. But the obstacle of inequality in this world was a great stumbling block, vis-a-vis a very compassionate god. Hence came the new marketing strategy "Karma Theory". That is all there is to it.

None of us knows whether Hitler started as a bacteria, or fungus, virus, plant, animal, etc. So we can go on imagining whatever we want, till the end of the world!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top