• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில&#3

Status
Not open for further replies.
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில&#3

திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். காவிரி வடகரைத் தலங்களில் இது 50வது தலம் ஆகும்.

T_500_959.jpg


இச்சிவாலயத்தின் மூலவர் ஆபத்சகாயர். தாயார் பெரிய நாயகி. இச்சிவாலயம் இந்தியா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பழனம் எனும் ஊரில் அமைந்துள்ளது. திருவையாறுக்குக் கிழக்காக 3 km தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இங்கு சிவன் தாந்தோன்றியாய் சுயம்பு மூர்த்தியாக தோன்றுகிறார் என்று நம்பப்படுகின்றது.

பொது தகவல்:

பழமையான ராஜகோபுரம் - மூன்று நிலைகளையுடையது. கொடிமரமில்லை. பலிபீடம் நந்தி உள்ளன. வெளிச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளது.


முன்மண்டபத்தில் வலப்பகுதி வாகன மண்டபமாகவுள்ளது. விநாயகரைத் தொழுது வாயிலைக் கடந்து உட்சென்றால் இடப்பக்கம் பிரகாரத்தில் சப்த மாதர்கள், விநாயகர், வேணுகோபாலர் சந்நிதிகளும், பல்வகைப் பெயர்களில் அமைந்த சிவலிங்கங்களும், நடராச சபையும், பைரவர், நவக்கிரகமும் உள்ளன.



காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.


தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி, புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்குமுன்பின் இரண்டு நாட்களிலும் நிலா சுவாமியின் மேல்படுகிறது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 50 வது தேவாரத்தலம் ஆகும்.

தலபெருமை:

கதலிவனம் என்ற பெயரும் இத்தலத்திற்குண்டு. சந்திரன் வழிபட்ட தலம். குபேரன், திருமால், திருமகள், தர்மசர்மா என்னும் அந்தணன் முதலியோர் பூசித்து பேறுபெற்ற தலம். இத்தலம் சப்தஸ்தான தலங்களில் இரண்டாவதாகும்.

திருமண வரம், குழந்தை வரம் வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.


தல வரலாறு:

அழகிய வயலும் வயல் சார்ந்த இடமும் சூழ்ந்த இடமாதலால் திருப்பழனம் என்று பெயர்.

ஒரு சமயம் அந்தணச் சிறுவன் ஒருவனை எமதருமன் துரத்திக் கொண்டு வரும்போது அச்சிறுவன் இத்தலத்து இறைவனைச் சரணடைந்தபோது இறைவன் அச்சிறுவனுக்கு காட்சியளித்து ஆபத்தில் உதவி செய்ததால் இறைவனுக்கு ஆபத்சகாயேசுரர் என்று பெயர்.


இருப்பிடம் :
கும்பகோணம் - திருவையாறு சாலையில், திருவையாற்றுக்கு அண்மையில் உள்ள தலம். சாலையோரத்தில் கோயில் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி

தங்கும் வசதி :
தஞ்சாவூர்

ஓரியண்டல் டவர்ஸ் போன்: +91-4362 -230 724, 231 467

ஹோட்டல் பரிசுத்தம் போன்: +91-4362 - 231 801, 231 844

பிஎல்.ஏ., ரெசிடண்சி போன்: +91-4362 - 278 391, 274 713

ஹோட்டல் ஞானம் போன்: +91-4362 -278 501 -08

ஹோட்டல் லயன் சிட்டி போன்: +91-4362 - 275 650, 275 926-7


Abathsahayeswarar Temple : Abathsahayeswarar Abathsahayeswarar Temple Details | Abathsahayeswarar - Tirupazhanam | Tamilnadu Temple | ???????????????

??????????? ??????????????? ?????? - ????? ??????????????
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top