• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோயில், &

Status
Not open for further replies.
அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோயில், &

அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோயில், திருநீலக்குடி- 612 108


திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் - மாவட்டம்

1825869636SriNeelakandeswararTemple,Tiruneelakudi.jpg


நீலகண்டேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் நீலகண்டேசுவரர், தாயார் ஒப்பிலாமுலையாள். இத்தலத்தின் தலவிருட்சமாக ஐந்து இலை வில்வ மரமும், பலாமரம் உள்ளன. தீர்த்தமாக தேவிதீர்த்தம் அமைந்துள்ளது.

யோக மார்க்கத்தில் செல்பவர்களுக்கு இது மூலாதாரமான தலம். மொத்தம் ஆறு ஆதாரங்கள் உள்ளன.அவை மூலாதாரம்,சுவாதிட்டானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்னை முதலியன.இந்த ஆறு ஆதாரங்களில் இது மூலாதாரமான தலம்.குண்டலினி சக்தியை தட்டி எழுப்புவர்களுக்கு உடனடியாக பலம் தரும் விசேச சக்தி படைத்த சிவதலம் இது.மார்க்கண்டேயர் தன் ஆயுள் பலம் அதிகரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.அப்போது நாரதர் மார்க்கண்டேயரிடம் திருநீலக்குடியில் உள்ள இறைவனை பூஜிக்குமாறு கூறுகிறார்.மார்க்கண்டேயரும் இங்கு வந்து நாளும் பொழுதும் சிவபெருமானை எண்ணி தியானிக்கிறார். முடிவில் இறைவன் அவர் முன் தோன்றினார்.உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார்.

மார்க்கண்டேயர் தமது விருப்பத்தை சொன்னவுடன் அதுபடியே மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவி பதம் தரப்பட்டது.அதற்கு நன்றிகடனாக மார்க்கண்டேயர் இறைவனை பல்லக்கில் வைத்து இளந்துளை, ஏனாதிமங்கலம், திருநாகேசுவரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவகுடி என்று ஊர் ஊராக அழைத்துச் சென்றார். இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் முகமாகவே இத்தலத்து சித்திரைத்திருவிழா நடத்தப்படுகிறது.





தலச் சிறப்பு


இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் இங்கு இரண்டு அம்பாள்கள் உள்ளனர்.ஒப்பில்லா முலை அம்மன்(அனுபமஸ்தினி) திருமணக்கோலத்தில் உள்ளார்.மற்றொருவர் பக்தனது விருப்பத்தை நிறைவேற்றுபவள்(பக்தாபிஷ்டபிரதாயினி) தபசு கோலத்தில் உள்ளார். பிரிந்திருக்கும் தம்பதியர் இங்குள்ள திருநீலகண்டரை மனமுருக வழிபட்டால் மீண்டும் ஒன்று சேர்ந்து இல்லறம் நடத்துவர்.இந்த பிரார்த்தனைக்காக பக்தர்கள் இத்தலத்துக்கு பெருமளவு வருகின்றனர்.இத்தலத்தில் வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகம். எம பரிகாரம், ராகு தோஷ பரிகாரங்கள் இத்தலத்தில் பக்தர்களால் செய்யப்படுகிறது. திருநீலகண்டரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.

கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும்.

மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

தலபெருமை:

திருநீலக்குடி நீலகண்டேசுவர் என்றாலே இந்த எண்ணெய் அபிஷேகம்தான் என்கின்ற அளவுக்கு இந்த அபிசேகம் சிறப்பும் புகழும் கீர்த்தியம் வாய்ந்தது. இங்குள்ள மூலவருக்கு எண்ணெய்யால் அபிசேகம் செய்யும்போது பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெய்யை சுவாமியின் மீது ஊற்றி அபிசேகம் செய்வார்கள். எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிசேகம் செய்தாலும் அத்தனை எண்ணெயும் சுவாமி மேலேயே உவரி விடும். அதாவது எண்ணெய் முழுவதும் சிவலிங்கத்திற்குள்ளேயே(உறிஞ்சி) இறங்கி விடுவது அதிசயமாக உள்ளது. நாள் பூராவும் எணணெய் அபிசேகம் செய்தாலும். குடம் குடமாக கொட்டி அபிசேகம் செய்தாலும் கூட அத்தனையும் உறிஞ்சி விடுகிறது.

இதில் ஆச்சர்யம் என்னவெனில் அபிசேகம் செய்த அடுத்தநாள் சுவாமியை பார்த்தால் அவரது சிவலிங்கத் திருமேனி கிட்டதட்ட 1 வருடமாக எண்ணெயே தடவாவது போல் அவ்வளவு உலர்ந்து காய்ந்து காணப்படும்.அபிசேகம் செய்யப்படும் எண்ணெயெல்லாம் எங்கு மாயமாகிறது என்பது இத்தனை காலமும் யாருக்கும் புலப்படவில்லை. எண்ணெய் அபிசேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதால் சிவலிங்கத்திருமேனி வழுவழுப்பாகத்தானே இருக்கவேண்டும் ? ஆனால் இங்குள்ள ஈசனின் மேனி சொர சொரப்பாகவே இருக்கிறது.ஈசன் ஆலகால விஷம் உண்டு தொண்டையில் விஷம் இருப்பதால் அந்த விஷத்தன்மை குறைக்க வேண்டியே இங்கு எண்ணெய் அபிசேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம்

இத்தலத்தின் தலவிருட்சம் வில்வம் என்றாலும் கூட கோயிலின் உட்பிரகாரத்தில் இருக்கும் பலா மரம் சிறப்பு வாய்ந்தது. இது தெய்வீகமான பலா மரம் என்று அழைக்கப்படுகின்றது.அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தை அறுத்து அதன் சுளைகளை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பின்னர்தான் எடுத்துக் கொண்டு செல்லவேண்டும்.அம்மரத்தில் காய்க்கும் பலாபழத்தை முழுப்பழமாக எடுத்துக் கொண்டு செல்லக்கூடாது.அதை மீறி எடுத்துச் செல்பவர்கள் இறைவனால் தண்டனை அடையப்பெறுவார்களாம். பரீட்சித்து பார்ப்பதற்காக மீறி எடுத்துச்சென்று தண்டனை பெற்றவர்களும் உண்டாம்.

சிவலிங்கத்திருமேனி வழுவழுப்பாக இல்லாமால் சொர சொரப்பாக உள்ளது. இறைவனுக்கு சிகை முடி வளர்ந்திருப்பது போல் உள்ளது.


தரிசன நேரம்


காலை 6.00 முதல் 11.00 காலை
மாலை 5.00 முதல் 8.00 இரவு
4:57am Nov 14

????????? ?????????????? ????????????, ????????????? - Trichy | justknow.in

????????????? ?????????????? ?????? - ????? ??????????????

Neelakandeswarar Temple : Neelakandeswarar Neelakandeswarar Temple Details | Neelakandeswarar - Tiruneelakudi | Tamilnadu Temple | ??????????????
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top