• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sri Vinayaka Chaturthi

Status
Not open for further replies.
Sri Vinayaka Chathurthi


ganesha_chaturthi_greeting.png


This year Sri Vinayaka Chathurthi Puja falls on 29 th August 2014

Madhyahana Puja Time = 10:56 to 13:23

Duration = 2 Hours 27 Mins

How to perform Sri Ganesh Chathurthi Puja at home?

How to perform Ganesh Chaturthi Puja at Home? ~ Hindu Blog

Sri Ganesh Chathurthi Recipes


Ganesh Chaturthi Recipes

Sri Vinayaka Puja in Tamil


Sri Vinayaka Chaturthi Vrata Pooja - Tamil (2012) - SS. Raghavan Shastri - Listen to Sri Vinayaka Chaturthi Vrata Pooja - Tamil songs/music online - MusicIndiaOnline


Sri Vinayaka Puja in Kannada

Sri Vinayaka Chaturthi Vrata Pooja - Kannada (2012) - Listen to Sri Vinayaka Chaturthi Vrata Pooja - Kannada songs/music online - MusicIndiaOnline


Sri Vinayaka Puja in Telugu

https://www.youtube.com/watch?v=J7fK2uhtEoU




விநாயகர் சதுர்த்தியால் கிடைக்கும் 21 பேறு

அங்கிங்கெணாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர். மிகவும் எளிமையான கடவுள் கணபதி.

வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடியவர். வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். விநாயகரே முழு முதற்கடவுள் என்று வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும்.

எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மை.பாரத தேசத்தின் இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப் பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார்.

ஆகையினாலேயே எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும், தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் இணைந்து "உ'' எனும் பிள்ளையார் சுழி உருவானது. பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடிந்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு.

எந்த ஒரு வேலையைச் செய்யத் தொடங்கும் பொழுதும் முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது, யோக சாஸ்திரங்களின்படி, நம் தலையின் இரு பக்கமிருக்கும் அமிர்தமானது சுண்டிவிடப்பட்டு, சுரந்து சுழுமுனாநாடி வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிஷேகமாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது.

அன்னை தந்தையான சிவ பார்வதியை வலம் (சுற்றி) வந்ததாலேயே உலகம் முழுமையும் சுற்றிய பெருமை கிடைத்ததால் ஞானப் பழத்தினை மிக சுலபமாகப் பெற்றவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். அந்த விநாயகரையே வலம் வந்தால், ஞானம் எனும் கல்வியறிவு, பழம் எனும் முயற்சியில் வெற்றி பெறலாம்.

விநாயகப் பெருமானுடைய சிறப்பினை உணர்த்த, விநாயகர் புராணம் உள்ளது. சிவபெருமான் வாயிலாகத் தாம் உணர்ந்த விநாயக புராணத்தை பிரம்மன் வியாசருக்கு உபதேசிக்க, அவர் பிருகு முனிவருக்கு உபதேசிக்க அவர் இப்புராணத்தை 250 பிரிவுகளையுடைய உபாசனா காண்டம், லீலா காண்டம் என இரு காண்டங்களாக அமைத்துப் பன்னிரெண்டாயிரம் சுலோகங்களாக "ஸ்ரீ விநாயகர் புராணம்" பாடினார்.

விநாயகர் புராணத்தில் இரண்டாம் காண்டமாகிய லீலா காண்டத்தில் விநாயகப் பெருமான் எடுத்த பன்னிரண்டு அவதாரங்களும் கூறப்பட்டுள்ளன.

அந்த அவதாரங்களில் அவர், வக்கிரதுண்டர், சிந்தாமணி விநாயகர், கஜநாதர், விக்கினராஜர், மïரேசர், பாலசந்திரர், தூமகேது, கணேசர், கணபதி, மகோத்சுதர், முண்டி விநாயகர் மற்றும் வல்லபை கணேசர் என்ற பெயர்களோடு விளங்கியதாக அப்புராணம் கூறுகிறது.

பார்வதி தேவி மண்ணால் ஒரு உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்து ஸ்ரீ விநாயகராக அவதாரம் செய்வித்தது ஆவணி மாதத்து சதுர்த்தி தினத்தில் தான். அந்த நாளையே ஸ்ரீ விநாயகர் ஜெயந்தியாக, விநாயகர் சதுர்த்தி விழாவாகக் கொண்டாடுகின்றோம். மண்ணில் அமைந்த விநாயகருக்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து, விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி முதலான அனைத்தும் அமைத்து வழிபாடு செய்தல் வேண்டும்.

விநாயக சதுர்த்தி வழிபாட்டினால் 1. தர்மம், 2. பொருள், 3. இன்பம், 4. சௌபாக்கியம், 5. கல்வி, 6. பெருந்தன்மை, 7. நல்வாழ்வுடன் கூடிய மோட்சம்,8. முக லக்ஷணம், 9. வீரம், 10. வெற்றி, 11. .எல்லோரிடமும் அன்பு பெறுதல், 12. நல்ல சந்ததி, 13. நல்ல குடும்பம், 14. நுண்ணறிவு, 15. நற்புகழ், 16.

சோகம் இல்லாமை, 17. அசுபங்கள் அகலும், 18. வாக்கு சித்தி, 19. சாந்தம், 20. பில்லி சூனியம் நீங்குதல், 21. அடக்கம் ஆகிய 21 விதமான பேறுகள் கிடைக்கும். விநாயகப்பெருமானையே தங்கள் வழிபடு கடவுளாகக் கொண்டு வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுகியவர்களின் வாழ்க்கையில் அவர் நடத்திக் காட்டிய அற்புதங்கள் எண்ணிலடங்காது.

அகத்திய முனி மூலம் காவிரி தந்தமையும், நம்பியாண்டார் நம்பி மூலம் அப்பர், சம்பந்தர், திருநாவுக்கரசர் மூவர் தேவாரங்களை உலகுக்கு கொடுத்து சைவ சமயத்தையே காப்பாற்றிய பெருமையும், யாவரும் அறிந்ததே.

இன்னும் எண்ணிலடங்காத அற்புதங்களையும் நிகழ்த்திவரும் விநாயகப்பெருமான் தனது பக்தர்களுக்கு அருள் பாலித்துவரும் கருணைத் திறன் அளவிடற்கரியது. விநாயகப்பெருமான் திருத்தாள் பணிந்து அவர் அருளாலே அவன் தாள் வணங்கி உய்வோமாக.

2014 Ganesh Chaturthi, Ganesh Chauth Vrat, Puja Date and Time for Lansing, Michigan, United States



Dont See moon on Sri Vinayaka Chathurthi Day

There are many stories on this. Few of them are listed below:


1) It is said that Lord Ganesha was invited to a feast and he, being fond of sweets, had lots of food. When he was returning back home his stomach, due to overload, burst open. Since it was night no one saw and immedietly he tied snake around his stomach. But unfortunately Moon saw it and burst out with laughter. Seeing this Ganesha was furious and couldn’t control his anger. He cursed the moon to be invisible from that day. Later Moon begged for forgiveness. Ganesha, thought he was little rude , but couldn’t take back the curse. He later lightened the intensity of his curse by saying that the moon would go invisible on only one day of the month, and that’s on amavasya.


2) On Ganesha’s birthday, he was going around house to house accepting the offerings of sweets. He had a lot of them and later left the place with his vahan mouse. As the mouse saw the snake on its way it suddenly stumbled because of which Ganesha fell down and his stomach burst open and the food which he had, came out. But he stuffed them back into his stomach and tied the snake around his belly. Moon saw this and couldn’t control its laugh. Furious with such mindless behavior, Ganesha pulled out his tusks, hurled it against moon and cursed it, saying no one would look at the moon on that day, if any does they would get a bad name.


3) One more story is that, on his birthday, mother Parvati had prepared 21 varieties of food for her beloved son. He ate so much that even his stomach could not hold it. Mounting on his little mouse, he went for his nightly rounds. On the way, the mouse saw snake and stumbled. In order to adjust his belly, he tied the snake around his stomach. Seeing this the moon started laughing, which did not go well with Ganesha and he cursed.
If any does this mistake of looking at the moon on that day he would have to listen to the story of lord Krishna and Syamantaka Jewel, to get free from the curse.


Prohibited time for Moon sight: From 9 a.m. to 8:49 p.m.

Ganesh Chaturthi 2014 Date - Vinayaka Chaturthi 2014

Reason: Don?t See The Moon On Ganesh Chaturthi | SPLASHBITSNR
 
One more story is that God Ganesha, after accepting the sweets, he was walking through a muddy place. The sky clouded and drissled. The mud grew slushy and Ganesha slipped and fell. The moon which was hiding behind the clouds laughed and he was cursed that who ever sees the moon on that day would be blamed unnecessarily.
Anyway, we should not see the moon on that day. If someone happens to see or had a sight of the moon, then the pariharam(praschitham ) is that they should read the story of syamanthakamani for which Krishna Bhagawan was blamed unnecessarily .
 
The Moon on the chathurthi day evening, after the new moon, will be at a comfortable position in the sky for us to view;

no need to strain the eyes to search for the crescent shape in the sky! I invariably see the moon on chathurthi days and

no harm has been done so far. 'nAlAm piRai kaNdAl nAy padum pAdu!' is just said for rhyme and for no reason! :)
 


Personification of Lord Ganesha !!


Bala Ganapthi – Child form of Lord carrying Mango, Sugarcane,Banana, Jackfruit and Modhak on the trunk







Tharuna Gapanathi –Youthful form of Lord Ganesha, he has 8 arms with fierce weapons like Noose, Goad, Modhak, Lotus, Wood Apple, broken piece of his Tusk, Sugar cane etc.





Bhakthi Ganapathi – Lord in meditation, carrying Mango, Banana, Coconut and Vessel full of Kheer












Veera Ganapathi – Valorous form of Lord with 16 arms holding malicious weapons like Goad, Disc, Bow & Arrow, Sword, Shield, Spear, Mace, Axe, Trident etc..



Shakthi Ganapathi – Provider of mental as well as physical strength /courage. Lord has his Shakthi on his right thigh, the three arms holding noose, goad, and garland and fourth hand in Abhaya Hastha posture.



Dwija Ganapathi – The twice born Lord (Shivapuranam describes the myth of elephant faced Lord) holding Palm leaves, noose, goad, water pot and prayer beads,













Siddhi Ganapathi – Provider of Ashtma Siddhis (Anima, Garima, Mahima, Lagima, Prapathi, Prakasyam, Eesitham and Vasithwam) holding flower bouquet, axe, mango, sugar cane and sweetened sesame balls on the trunk





Ucchishta Ganapathi – 6 armed Lord holding Lakshmi on his right thigh, carrying the divine musical instrument Veena, Pomegrante, blue lotus and strings of prayer beads





Vigna Ganapathi – Remover of obstacles, Lord with eight hands carrying Axe, Disc, Noose, Conch, Bouquet of flowers, Sugar Cane, Flower Arrow and Modhak








Kshipra Ganapathi – Quickly pleased and giver of boons – Lord carrying trunk, noose, goad, Kalpavruksha and holding pot full of gems on his trunk.





Heramba Ganapathi – Protector of weak - Five faced Lord carrying Noose, Prayer Beads, Axe, Hammer, Tusk, Garland, Fruit Modhak, and riding on a lion,





Lakshmi Ganapathi – Provider of wisdom and achievement along with wealth – Lord holding Shakthi on his right thigh carrying parrot, pomegranate, sword, goad, noose, Kalpavruksha and Abhaya Hastha posture









Maha Ganapathi – Lord of initial worship. Any worship or rituals without the initial worship of Lord Maha Ganapathi remains unfruitful. Lord beautifully carrying Shakthi on his right thigh, his hands holding tusk, pomegranate, blue lilly, Sugar cane, disc, noose, string of unprocessed crop, mace and pot of gems on his trunk.



Vijaya Ganapathi – Provider of Victory on his celestial vehicle mouse. Lord carrying tusk, goad, noose, mango,



Nrithya Ganapathi – The dancing form of Lord carrying tusk, goad, noose and Modhak, settled under the Kalpavruksha












Urdhwa Ganapathi – Lord beautifully carrying Shakthi on his right thigh, his six hands holding string of unprocessed crop, lotus, sugarcane, bow and arrow with a lotus on his tusk





Ekakshara Ganapathi – Gam Ganapathi carrying crescent moon as his crown, seated on the mouse, holding noose, pomegranate, tusk and goad, another hand in Abhaya Hastha posture.





Varada Ganapathi – Giver of Boon – carrying crescent moon as crown and Shakthi on his thigh, holding pot of nectar, noose, goad and a pot of jewels on his trunk







Thryakshara Ganapathi – Lord represents the Pranava Manthra ‘AUM’ - Lord carrying tusk, goad, noose, Mango and Modhak on his trunk



Kshipra Prasada Ganapathi – Provider of boon promptly – holding noose, goad, tusk, Pomegranate, lotus and Kalpavruksha



Haridra Ganapathi – Lord with a broken tusk, noose, Goad and Modhak on his trunk








Eka Dhantha Ganapathi – Elephant faced Lord with one tusk, his hands carrying prayer beads, Axe, broken tusk and a vessel full of Laddu on his trunk



Srishti Ganapathi – Lord mounted on his celestial vehicle mouse and carrying noose, Goad, broken tusk and a Mango



Uddhanda Ganapathi – Preserver of righteousness carrying Pot of Gems, blue Lilly, Sugar cane, Mace, Lotus , string of unprocessed crop, Pomegranate, noose, garland and broken tusk








Runamochana Ganapathi – Remover of Runas (Every human beings are born with the three Runa(sins) such as Pitru Runa, Rishi Runa and Deva Runa ) holding noose, broken tusk, goad, Mango,




Dhundhi Ganapathi – Lord carrying prayer beads of Rudraksha, tusk, goad, axe and the trunk holding a pot of gems




Dwimukha Ganapathi – Two faced Lord holding noose, goad, tusk and a pot full of gems









Thrimukha Ganapathi – Three faced Lord - Lord seated on a Lotus holding weapons like noose, goad, prayer beads and Vessel of nectar on his trunk with Abhaya Hastha posture




Simha Ganapathi – Lord mounted on a Lion –Yoga Ganapathi – Lord on meditating posture holding noose, prayer beads and sugarcane



Durga Ganapathi – Remover of Ignorance, holding bow and arrow, noose, goad, prayer beads, tusk and rose apple on his trunk





Sankatahara Ganapathi – Remover of sorrows – seated on a lotus flower carrying vessel of Modhak, Goad, and Noose with one hand in Abhyahastha posture



Jai Ganesha !!



http://indiatempletour.blogspot.ae/2013/06/personification-of-lord-ganesha.html
 
வீட்டில் சுலபமாக செய்ய விக்னேஸ்வர பூஜை29-08-20

வீட்டில் சுலபமாக செய்ய விக்னேஸ்வர பூஜை29-08-2014

உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு, ஓம் அச்சுதாய நம: / ஓம் அனந்தாய நம: / ஓம் கோவிந்தாய நம: என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும். இது ஆசமனம்.

கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்|
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே||

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ
விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே||

- என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை முன்னால் சேர்க்கவும். விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும். மணி அடிக்கவும். பின், பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும்.

அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி / ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி & என்று சொல்லி, புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும்.

இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும்.

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி|
பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்)
ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
உபவீதம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்)
அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்)
புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்)
புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும்.

ஓம் சுமுகாய நம: |
ஓம் ஏகதந்தாய நம: |
ஓம் கபிலாய நம: |
ஓம் கஜகர்ணாய நம: |
ஓம் லம்போதராய நம: |
ஓம் விகடாய நம: |
ஓம் விக்னராஜாய நம: |
ஓம் விநாயகாய நம: |
ஓம் தூமகேதவே நம: |
ஓம் கணாத்யக்ஷாய நம: |
ஓம் பாலசந்த்ராய நம: |
ஓம் கஜானனாய நம: |
ஓம் வக்ரதுண்டாய நம: |
ஓம் சூர்ப்பகர்ணாய நம: |
ஓம் ஹேரம்பாய நம: |
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: |
ஓம் ஸித்திவிநாயகாய நம: |
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:

அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும்.

அம்ருதோபஸ்தரணமஸி |
ஓம் ப்ராணாய ஸ்வாஹா |
ஓம் அபாநாய ஸ்வாஹா |
ஓம் வ்யாநாய ஸ்வாஹா |
ஓம் உதாநாய ஸ்வாஹா |
ஓம் ஸமாநாய ஸ்வாஹா |
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா |
மஹாகணபதயே நம:

அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி |
அம்ருத பிதாநமஸி என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்...
பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.

வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப|
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா
Posted by Sri. Varagooran Narayanan i
 
பிள்ளையார் எறும்பு பிறந்த கதை!

பிள்ளையார் எறும்பு பிறந்த கதை!

முப்பத்து முக்கோடி தேவர்கள் முதல் ஓரறிவு கொண்ட உயிரினங்கள் வரை எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவர் பரமேஸ்வரன். இதை அறியாதவளா பார்வதிதேவி?! ஆனாலும் அவளுக்கு, 'இந்தத் தொழிலை ஈசன் சரிவர கவனிக்கிறாரா?' என்றொரு சந்தேகம். அதற்குத் தீர்வு காண முனைந்தாள். சிறு பாத்திரம் ஒன்றை எடுத்து வந்து அதற்குள் கறுப்பு எறும்புகள் சிலவற்றைப் பிடித்துப் போட்டு மூடி விட்டாள். 'இந்த எறும்புகளுக்கு ஈசன் எப்படி உணவு அளிக்கிறார், பார்க்கலாம்!' என்பது அவளது எண்ணம். மறு நாள், ''ஸ்வாமி, நேற்று எல்லா ஜீவராசிகளுக்கும் படியளந்தீர்களா?'' என்று ஈசனிடம் கேட்டாள்.


'உலகநாயகி தன்னோடு விளையாடுகிறாள்!' என்பது ஈசனுக்குப் புரிந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ''இதிலென்ன சந்தேகம்... பாத்திரத்தில் நீ சிறை வைத்த எறும்புகளைப் பார்த்திருந்தால், இந்தக் கேள்விக்கே இடம் இருந்திருக்காது!'' என்றார்.

பார்வதிதேவி, ஓடோடிச் சென்று பாத்திரத்தைத் திறந்து பார்த்தாள்! சுறுசுறுப்புடன் சுற்றிக் கொண்டிருந்தன எறும்புகள். அத்துடன் சில அன்னப் பருக்கைகளும் கிடந்தன. 'ச்சே... வீணாக ஸ்வாமியை சந்தேகப்பட்டு விட்டோமே!' என வருந்தினாள் தேவி.
''மகேஸ்வரி... உனது ஐயம் விலகியதா?''- குறும்பா கக் கேட்ட பரமேஸ்வரன், ''சரி, சரி... விநாயகன் உன்னைத் தேடிக் கொண்டிருந்தான்... போய்ப் பார்!'' என்றார். விநாயகரைச் சந்தித்த பார்வதிதேவி அதிர்ந்து போனாள். ஒட்டிய வயிறும் வாடிய முகத்துடனும் இருந்தார் கணபதி!

''ஏனம்மா அப்படிப் பார்க்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் தாங்கள்தான் காரணம்!'' என்றார் விநாயகர்.
''என்னச் சொல்கிறாய் நீ?'' படபடப்புடன் கேட்டாள் பார்வதிதேவி.

''அன்னையே... அகிலம் ஆளும் நாயகனின் நித்திய தர்ம பரிபாலனத்தில் சந்தேகம் கொண்டது தாங்கள் செய்த முதல் தவறு. அடுத்தது, அப்பாவி எறும்புகளை பட்டினி போடும் விதம் சிறையிட்டது! தாயின் பழி தனயனைத் தானே சாரும். எனவே, எறும்புகளின் பசியை நான் ஏற்றுக் கொண்டு தாங்கள் எனக்களித்த அன்னத்தை, எறும்புகளுக்கு இட்டேன். பட்டினி கிடந்ததால், எனது வயிறு சிறுத்துப் போனது!'' விளக்கி முடித்தார் விநாயகர்.

பார்வதிதேவி கண் கலங்கினாள். விநாயகரை அழைத் துக் கொண்டு சிவனாரிடம் சென்றவள், ''ஸ்வாமி, என்னை மன்னியுங்கள். நான் செய்த தவறுக்கு நம் மகனை வதைக்க வேண்டாம்!'' என்று வேண்டினாள்.

''வருந்தாதே தேவி! பக்தர்கள் என்பால் வைக்கும் நம்பிக்கை, சற்றும் குறைவில்லாததாக இருக்க வேண்டும். அந்த 'நம்பிக்கை'க்கு இணையான பூஜையோ வழிபாடோ கிடையாது. இதை, உலக மக்களுக்கு உணர்த்த நடந்த திருவிளையாடலே இது.

அன்னபூரணியான நீ, உன் பிள்ளைக்கு அன்னம் அளித்தாய். அவன், அதை எறும்பு களுக்கு வழங்கினான். விநாயகனின் பெருமையைப் போற்றும் வகையில், அவை இனி பிள்ளையார் எறும்புகள் என்றே அழைக்கப்படட்டும்!'' என்று அருளினார்.

பிறகு பார்வதியிடம், ''எறும்பு உண்டது போக, மீதம் உள்ள அன்னப் பருக்கைகளை விநாயகனுக்குக் கொடு!'' என்றார். அப்படியே செய்தாள் பார்வதி. அந்த பருக்கை களை உண்ட விநாயகரின் வயிறு பழைய நிலைக்குத் திரும்பியது; அவரது பசியும் தீர்ந்தது.
இந்த அருளாடல் சம்பவம், தேய்பிறை சதுர்த்தி திதி நாளில் நிகழ்ந்தது. இதையே சங்கடஹர சதுர்த்தி நாளாக அனுஷ்டித்து விநாயகரை வழிபடுகிறோம் என்று கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு


Hindu Spiritual Articles: ?????????? ??????? ?????? ???!
 
விநாயகர் சதுர்த்தி வரலாறு!

விநாயகர் சதுர்த்தி வரலாறு!

Tamil-Daily-News-Paper_69977533818.jpg




விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள்' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.

இந்து மக்கள் அனுஷ்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித்திதியன்று விநாயக சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயகரை வழிபாடி, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம்.


இவ்விழா மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. பிறகு அது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதன் பிறகு சுதந்திர போராட்டக்காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார். அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் எல்லாம் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர். ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் இதன் போது வழங்கினர். வெகுகாலத்தின் பின்னரே தமிழகத்தில் இவ்விழா அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.


http://www.tm.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=3394&Cat=3
 
விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்&#2965

விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்கொண்டு ஜபத்திரகள்ஸ அர்ச்சிப்பது சிறந்தது



விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்கொண்டு ஜபத்திரகள்ஸ அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்துகொள்வது நலம்பல பயக்கும் என்பர். அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக்கொண்டு அர்ச்சிப்பதனால்

அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:

1. முல்லை இலை பலன்: அறம் வளரும்

2. கரிசலாங்கண்ணி இலை பலன்: இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள்
சேரும்.

3. வில்வம் இலை பலன்: இன்பம். ஜவிரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.ஸ
4. அறுகம்புல் பலன்: அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
[ஜ21 அறுகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானதுஸ]
5. இலந்தை இலை பலன்: கல்வியில் மேன்மையை அடையலாம்.


6. ஊமத்தை இலை பலன்: பெருந்தன்மை கைவரப்பெறும்.
7. வன்னி இலை பலன்: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள்
கிடைக்கப்பெறும்.8. நாயுருவி பலன்: முகப் பொலிவும், அழகும் கூடும்.
9. கண்டங்கத்தரி பலன்: வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
10. அரளி இலை பலன்: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.


11. எருக்கம் இலை பலன்: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும்.
12. மருதம் இலை பலன்: மகப்பேறு கிட்டும்.
13. விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணிவு கைவரப்பெறும்.
14. மாதுளை இலை பலன்: பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
15. தேவதாரு இலை பலன்: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.


16. மருக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
17. அரசம் இலை பலன்: உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.
18.ஜாதிமல்லி இலை பலன்: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம
கிடைக்கப்பெறும்.
19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.
20. அகத்தி இலை பலன்: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்: நல்ல கணவன் மனைவி
அமையப்பெறும்


. சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்பூச்சியா, மியன்மார் மொங்கோலியா, தீபெத்து ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக்கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழைமை வாய்ந்தவையென ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


நாமம் பல தத்துவம் ஒன்று!
வரசித்தி விநாயகர், இஷ்டசித்தி விநாயகர், விக்ன நிவாரண கணபதி, வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர் என்றெல்லாம் பல பெயர்கள் விளங்கினாலும் விநாயகரின் தத்துவம் ஒன்றே. ஈசன் மகனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம். கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் அந்த கணேசன்.


இவ்விழா கொண்டாடப் படுவதற்குப் பின்னணியாக ஸ்காந்த புராணத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது.

இல்லந்தோறும் நடக்கம் இனிய பூஜை!

வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.


பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!
என்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம். மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும், சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம்.


இவ்வாறு ஆண்டுதோறும் நாடெங்கும், உலகெங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.




Source:Sage of Kanchi

Hinddukkalin Prasad
 
விநாயகருக்கு எலி வாகனம் உருவான கதை!

விநாயகருக்கு எலி வாகனம் உருவான கதை!


10556218_504472596353915_1347583591754609243_n.jpg



சவுபரி என்ற முனிவர் இருந்தார். இவருடைய மனைவி மனோரமை. இவர்கள் சிறந்த சிவபக்தர்கள். ஒருநாள் வான்வழியாக வந்துக்கொண்டிருந்த “கிரவுஞ்சன்” என்கிற கந்தர்வராஜன், மனோரமையை முனிபத்தினி என்று கூட பாராமல், அவள் கையை பிடித்து இழுத்துவிடுகிறார்.இதை சற்றும் எதிர்பாராத மனோரமை அதிர்ச்சி அடைகிறாள். கந்தர்வராஜனின் செயலை கண்ட முனிவர் சவுபரி கோபம் கொண்டு, “முனிவனாகிய என் பத்தினியை அடைய திருட்டுதனமாக எங்கள் பகுதிக்குள் நுழைந்த நீ, காலம் முழுவதும் அனுமதியின்றி திருட்டுதனமாக நுழையும் மூஷிக (பெருச்சாளி)பிறவியை அடைவாயாக.” என்று கிரவுஞ்சனனை சபித்துவிடுகிறார்.

இதை கேட்ட கிரவுஞ்சன் மனம் வருந்தி தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். “நீ தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டவனாகயால் உன்னை மன்னிக்கிறேன். ஆனால் நான் கொடுத்த சாபத்தை திரும்ப பெற முடியாது. பராசுவ முனிவர் இல்லத்திற்கு விநாயகப் பெருமான், ஒரு குழந்தையாக வருவார். விநாயகருக்கு நீ வாகனமாக மாறுவாய்.” என்றார் சவுபரி முனிவர். முனிவர் கூறியதுபோல் சம்பவங்கள் நிகழும் சூழ்நிலை உருவானது. அதன்படி, வரேணியன் என்ற அரசர் இருந்தார். அவருடைய மனைவி பெயர் புஷ்பகம் என்கிற புட்பகை. அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தும்பிக்கையுடனும் பெரிய வயிற்றுடனும் பிறந்ததால், அரசதம்பதி மனம் வருந்தினர். “நாம் இந்த குழந்தையை வளர்ப்பது கடினம்.

உலகம் நம்மை பார்த்து நகைக்கும். அதனால் நீ மனதை சமாதானப்படுத்திக்கொள்.” என்று அரசியிடம் சொன்ன அரசர், “இக்குழந்தையை ஏதோ கண்காணாத இடத்தில் பத்திரமாக வைத்துவிடுங்கள்.” என்று கூறி காவலர்களிடம் குழந்தையை கொடுத்தனுப்பினார். அந்த காவலர்களும் அந்த குழந்தையை பராசுவ முனிவர் ஆசிரமத்தின் அருகில் வைத்துவிட்டு சென்று விடுகிறார்கள்.ஆசிரமத்தின் வெளியே குழந்தை அழும் குரல் கேட்ட முனிவர், வெளியே வந்து பார்த்தார். குழந்தையின் உருவத்தை கண்டு மகிழ்ந்து, “அட கஜேந்திரன்.” என்று கூறி, அந்த குழந்தையை அன்பாக வளர்த்து வந்தார்.

குழந்தை வளர்ந்து விளையாட ஆரம்பித்தது. அப்போது முன்னோரு சமயம் சவுபரி முனிவரிடம் கந்தர்வராஜனான கிரவுஞ்சன் சாபம் பெற்று பெருச்சாளி பிறவியை அடைந்தான் அல்லவா.அவன் இப்போது, பராசுவ முனிவரின் ஆசிரமத்திற்குள் பெருச்சாளியாக புகுந்து சேட்டை செய்தான். அந்த எலியை ஒடஒட விரட்டி துரத்தினார் கணபதி. ஒருகட்டத்தில் எலியை கொன்றுவிட நினைத்த விநாயகரிடம், தன்னை மன்னிக்குமாறு வேண்டியது எலி. விநாயகரும் அதனை மன்னித்து தன்னுடைய மூஷிக வாகனமாக பதவி தந்தார்.



Source:Narayanan Dharmaraj
 
Mudakaratha modakam (with lyrics) - Kavita Krishnamurti Subramaniam

Mudakaratha modakam (with lyrics) - Kavita Krishnamurti Subramaniam

https://www.youtube.com/watch?v=UYJz8PrZHic


GANESHA PANCHARATNAM


Mudakaraatha Modakam Sada Vimukti Saadhakam
Kalaadharaavatamsakam Vilasiloka Rakshakam
Anaaya Kaika Naayakam Vinasitebha Daityakam
Nataasubhasu Naashakam Namaami Tham Vinaayakam.


Meaning:

I prostrate before Lord Vinaayaka who joyously holds modaka in His hand, who bestows salvation, who wears the moon as a crown in His head, who is the sole leader of those who lose themselves in the world. The leader of the leaderless who destroyed the elephant demon called Gajaasura and who quickly destroys the sins of those who bow down to Him, I worship such a Lord Ganesh.


Natetaraati Bheekaram Navoditaarka Bhaasvaram
Namat Suraari Nirjanam Nataadhi Kaapa Duddharam
Suresvaram Nidheesvaram Gajesvaram Ganeshvaram
Mahesvaram Samaasraye Paraatparam Nirantaram.


Meaning:

I meditate eternally on Him, the Lord of the Ganas, who is frightening to those not devoted, who shines like the morning sun, to whom all the Gods and demons bow, who removes the great distress of His devotees and who is the best among the best.


Samasta Loka Samkaram Nirasta Daitya Kunjaram
Daredarodaram Varam Vare Bhavaktra Maksharam
Krupaakaram Kshamaakaram Mudaakaram Yasaskaram
Manaskaram Namaskrutaam Namaskaromi Bhaasvaram.


Meaning:

I bow down with my whole mind to the shining Ganapati who brings happiness to all the worlds, who destroyed the demon Gajasura, who has a big belly, beautiful elephant face, who is immortal, who gives mercy, forgiveness and happiness to those who bow to Him and who bestows fame and a well disposed mind.


Akimchanaarti Marjanam Chirantanokti Bhaajanam
Puraari Poorva Nandanam Suraari Garva Charvanam
Prapancha Naasha Bheeshanam Dhananjayaadi Bhushanam
Kapola Daana Vaaranam Bhajaey Puraana Vaaranam.


Meaning:

I worship the ancient elephant God who destroys the pains of the poor, who is the abode of Aum, who is the first son of Lord Shiva (Shiva who is the destroyer of triple cities), who destroys the pride of the enemies of the Gods, who is frightening to look at during the time of world's destruction, who is fierce like an elephant in rut and who wears Dhananjaya and other serpents as his ornaments.


Nitaantikaanta Dantakaanti Mantakaanta Kaatmajam
Achintya Rupa Mantaheena Mantaraaya Krintanam
Hrudantarey Nirantaram Vasantameva Yoginam
Tameka Danta Meva Tam Vichintayaami Santatam.


Meaning:

I constantly reflect upon that single tusked God only, whose lustrous tusk is very beautiful, who is the son of Lord Shiva, (Shiva, and the God of destruction), whose form is immortal and unknowable, who tears asunder all obstacles, and who dwells forever in the hearts of the Yogis.


Mahaaganesa Pancharatnam Aadarena Yonvaham
Prajapati Prabhaatake Hrudi Smaran Ganesvaram
Arogatham Adoshataam Susaahitim Suputrataam
Samaahitaayu Rastabhootim Abhyupaiti Sochiraat.


Meaning:

He who recites this every morning with devotion, these five gems about Lord Ganapati and who remembers in his heart the great Ganesha, will soon be endowed with a healthy life free of all blemishes, will attain learning, noble sons, a long life that is calm and pleasant and will be endowed with spiritual and material prosperity



Lyrics and Meaning


Jambunatha Iyer
 
விநாயகருக்கு அர்ச்சித்த அருகம்புல்லுக&#3

விநாயகருக்கு அர்ச்சித்த அருகம்புல்லுக்கு ஈடு இணை இந்த உலகில் உண்டா? -


Pillaiyapatti-Karpaga-Vinayagar.jpg




ரிஷிகளில் கௌண்டின்ய மகரிஷி விநாயகப் பெருமானின் தீவிர உபாசகர். தினசரி விநாயகருக்கு பூஜை செய்யாமல் தனது நாளை தொடங்க மாட்டார். கௌண்டின்யரின் பத்தினியின் பெயர் ஆசிரியை.


மற்ற ரிஷிகள் எல்லாம் அரசர்களையும் சக்கரவர்த்திகளையும் நாடிச் சென்று பொருளீட்டி வர, தன் கணவர் இப்படி விநாயகருக்கு அருகினால் அர்ச்சனை செய்வதே போதும் என்று கருதுகிறாரே என்று வாட்டம் ஏற்பட்டது ஆசிரியைக்கு. போதாக்குறைக்கு அக்கம்பக்கத்திலுள்ள பெண்கள் எல்லாம் தங்கள் கணவன்மார்கள் அரசர்களை நாடிச் சென்று பெற்று வந்த பொருட்களை இவளிடம் காட்டி இவளது இயலாமை குறித்து பரிகசித்து வந்தனர்.


இதனால் மிகவும் மனவாட்டத்துடன் இருந்தாள் ஆசிரியை. மனைவியின் மனவாட்டத்தை கண்ட கௌண்டின்யர் யாதென வினவ, ஆசிரியை “ஒன்றும் இல்லை!” என்று கூறி மழுப்பிவிடுகிறாள்.


பெண்கள் ஒன்றுமில்லை என்றால் அதில் ஓராயிரம் விஷயம் இருப்பது ரிஷிகளுக்கு தெரியாதா என்ன? கௌண்டின்யர் தனது பத்தினியின் மன வாட்டத்தின் காரணத்தை புரிந்துகொள்கிறார்.


உள்ளே சென்று விநாயகருக்கு தாம் அர்ச்சித்த ஒரு அருகம்புல்லை கையில் எடுத்துக்கொண்டு அவளை அழைத்து, “தேவி, எனக்கொரு உதவி செய்யவேண்டும். செய்வாயா?” கேட்க….. “சொல்லுங்கள் சுவாமி” என்கிறாள்.


“இந்த அருகை கொண்டு சென்று தேவேந்திரனிடம் தந்து இதற்கு ஈடான பொன்னை பெற்று வா” என்கிறார்.


கணவரின் கட்டளையை நிறைவேற்ற திருவுளம் கொள்ளும் ஆசிரியை, கொடுப்பது தான் கொடுக்கிறார்…. ஒரு அருகம்புல் கட்டை கொடுத்தாலாவாது அதன் எடைக்கு ஒரு பொன் கிடைக்கும்…. இந்த ஒரு அருகிற்கு என்ன கிடைத்துவிடப் போகிறது என்று பலவாறாக எண்ணி இந்திரலோகம் சென்றாள்.


அழகாபுரி பட்டணத்தில் அஷ்டதிக் பாலகர்களும் சபையில் அமர்ந்திருக்க, அவர்கள் மத்தியில் தனது சிம்மாசனத்தில் மனைவி இந்திராணியுடன் வீற்றிருக்கிறான் தேவேந்திரன்.


தேவலோகத்தின் காவலர்கள் ஓடிவந்து ரிஷி பத்தினி ஒருவர் வந்திருப்பதாக கூற, அவரை உள்ள அழைக்கிறான் தேவேந்திரன்.
தேவேந்திரனை வணங்கும் ஆசிரியை, “தேவேந்திரா… கௌண்டின்ய மகரிஷியின் தர்மபத்தினி நான். இந்த அருகை உன்னிடம் தந்து இதற்கு ஈடான பொருளை பெற்று வருமாறு என் கணவர் கட்டளையிட்டிருக்கிறார்” என்று கூறுகிறார்.
அதே கேட்டு பலமாக சிரித்தான் தேவேந்திரன்.


“கற்பக விருட்சமும், காமதேனுவும், நவ நிதியமும், இதர பலவகை செல்வங்களும் மலை போல பெற்று செல்வச் செழிப்போடு இருக்கும் என்னிடத்தில் ஒரு அருகம்புல்லுக்கு ஈடான பொருளை பெற்று வரும்படி அனுப்பி உன் கணவன் எங்களை ஏளனம் செய்கிறானா?”


தனக்கும் தனது கணவருக்கும் இப்படி ஒரு அவமதிப்பு நடப்பதை கண்டு கலங்கும் ஆசிரியை, “தேவேந்திரா அவர் நோக்கம் நான் அறியேன். என் கணவர் இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டியே இங்கு வந்துள்ளேன். முடிந்தால் இந்த அருகிற்கு ஈடான பொன்னை கொடு அல்லது இல்லை என்று சொல்லிவிடு” என்கிறாள்.


“என்ன… இந்திரலோகத்திற்கு யாசகம் பெற வந்த ஒருவர் பொருளை வாங்காது திரும்ப செல்வதா? அது எனக்கு பெரும் இழுக்கல்லவா? இதோ ஒரு நொடியில் நீ கேட்டதை தருகிறேன்!” என்று கூறி இந்திரலோகத்தின் கருவூலத்திற்கு அதிபதியான குபேரனை அழைக்கிறான்.


“இவர்கள் கேட்டதை போல இந்த அருகம்புல்லிற்கு ஈடான பொன்னை உடனே கொடு” என்று கட்டளையிடுகிறான்.

கையில் ஒரு சிறிய தராசை வைத்து அருகம்புல்லை அதன் ஒரு தட்டிலும் மறுபக்கம் ஒரு தங்கக் காசையும் வைக்கிறான் குபேரன். அனைவரும் வியக்கும் வண்ணம் அருகம்புல் இருந்த தட்டு கீழே தாழ்ந்து சென்றது. பொற்காசு வைக்கப்பட்ட தட்டு மேலே எழுந்து நின்றது.

இந்த பக்கம் மேலும் ஒரு தங்கக் காசை வைத்தான் குபேரன். அப்போதும் அருகம்புல் இருந்த தட்டு அசைந்துகொடுக்கவில்லை.
காசுகளை அப்படியே கூட்டிக்கொண்டே போனான். ஒரு கட்டத்தில் வேறு ஒரு பெரிய துலாபாரத்தை கொண்டு வரச் செய்து ஒரு பொற்காசுகள் அடங்கிய மூட்டையையே வைத்தான். அப்போதும் அப்படியே தான் இருந்தது அருகு வைக்கப்பட்டிருந்த பக்கம்.

நடப்பதையெல்லாம் வியர்க்க விறுவிறுக்க பார்த்துக்கொண்டிருந்த தேவேந்திரனுக்கு கலக்கம் ஏற்பட்டது. அழகாபுரியில் உள்ள அனைத்து செல்வங்களையும் வைத்தால் கூட அருகம்புல் இருக்கும் தட்டு மேலே எழாது போலிருக்கிறதே… என்று கருதியவன் காமதேனு, கற்பக விருட்சம் என தேவலோகத்துக்கு செல்வங்களை எல்லாம் அதில் அடுக்கினான். அப்போதும், அருகு இருந்த தட்டு அசைந்துகூட கொடுக்கவில்லை.


கடைசியில் ஞானதிருஷ்டியை கொண்டு, நடந்த அனைத்தையும் அறிந்துகொள்கிறான் இந்திரன். (ஞான திருஷ்டியை தேவையின்றி பயன்படுத்தினால் தவவலிமை குறையும். எனவே அவசியமான சூழலில் மட்டுமே அதை பயன்படுத்துவர்!) விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு அந்த அருகு மேன்மை பெற்றிருக்கிறது என்றும், அதற்கு ஈடாக இந்த உலகில் ஒன்றும் இல்லை என்றும் புரிந்துகொள்கிறான்.

உடனே மும்மூர்த்திகள் புடைசூழ இந்திராதி தேவர்களும் பூலோகத்தில் உள்ள கௌண்டின்யரின் ஆஸ்ரமத்தை அடைகின்றனர். முப்பத்துமுக்கோடி தேவர்களும் அருந்தவம் செய்தாலும் காண முடியாத மும்மூர்த்திகள் புடைசூழ தமது ஆஸ்ரமத்தில் எழுந்தருளியிருப்ப்பதை கண்டு கண்கலங்கினார் கௌண்டின்யர்.

அவர்கள் முன்பாக அப்படியே நிலத்தில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கி…. விநாயகரை நோக்கி இவ்விதம் கூறலானார்…. “முழுமுதற் கடவுளே… உன்னை அனுதினமும் அருகைக்கொண்டு அர்ச்சித்து வரும் அடியேனின் அருமை பெருமைகளை இவ்வுலகிற்கு உணர்த்தவே இவர்களை என் வீட்டிற்கு அனுப்பினாயோ?” உன் திருவிளையாடல் தான் என்ன….” என்று பலவாறாக உருகினார்.

சிவபெருமான் அவரை நோக்கி : “கௌண்டின்ய மகரிஷியே… அருகம் புல்லிற்கு இருக்கும் மகத்துவத்தை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும் என்று தான் நீங்கள் உங்கள் பத்தினியிடம் ஒரு அருகை கொடுத்து அதற்கு ஈடான பொன்னை பெற்றும் வரும்படி கூறினீர்கள். அண்டசராசரத்தில் உள்ள உள்ள அனைத்து செல்வங்களையும் சேர்த்து கொடுத்தாலும் கூட முழுமுதற்கடவுள் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சித்த ஒரு அருகம்புல்லிற்கு அவை ஈடாகாது. அப்படியிருக்க தினமும் அவரை எண்ணற்ற அருகம்புற்களால் அர்ச்சித்து வரும் நீங்கள் செய்த பேற்றை நாம் விளக்கவும் வேண்டுமா?” என்று கூறிவிட்டு அவருக்கு வேண்டிய வரங்களை தந்து மகிழ்ந்தார். தொடர்ந்து பிரம்மா, விஷ்ணு ஆகியோரும் அவருக்கு வரங்களை தந்து மகிழ்ந்தனர்.

அன்று முதல் காமதேனு, கற்பக விருட்சம் முதலியன கௌண்டின்யரின் ஆஸ்ரமத்திற்கு வந்து தங்கியிருந்து அவருக்கு பணிவிடைகள் செய்துவந்தன. கௌண்டின்யரின் பத்தினியான ஆசிரியையும் விநாயகருக்கு அர்ச்சித்த அருகம்புல்லிற்கு உள்ள மகத்துவத்தை தெரிந்துகொண்டு தனது கணவருக்கு அவரது பூஜைகளில் பணிவிடை செய்து வாழ்ந்து வந்தார்.


இனி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தும்பிக்கையானுக்கு அருகம்புல்லை கொண்டு அர்ச்சனை செய்துவாருங்கள். பிள்ளையார் கோவிலுக்கு செல்லும்போது அருகை கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். பசுவிற்கு அருகம்புல்லை வாங்கி கொடுங்கள். உங்கள் எண்ணங்கள் யாவும் ஈடேறி உங்கள் துன்பத்தில் இருந்து நீங்கள் விடுதலை பெறுவீர்கள் என்பது திண்ணம். உங்கள் பக்தி எளிமையோடும் உள்ளன்போடும் இருந்தால் போதுமானது.

???????????? ?????????? ???????????????? ??? ??? ???? ?????? ?????? ???????? ????????? SPL | RightMantra.com



- See more at: ???????????? ?????????? ???????????????? ??? ??? ???? ?????? ?????? ???????? ????????? SPL | RightMantra.com
 
"Know Little about Ganesha "

"Know Little about Ganesha "



10646866_729282253807416_6136437121580566055_n.jpg





1. உணவில் விருப்பம் கொண்டதால் விநாயகரை........என்பர்
போஜன பிரியர்


2. விநாயகரை "விகடர்' என்று சொல்வதன் பொருள்......
வேடிக்கை குணம் கொண்டவர்


3. ஐந்துமுக விநாயகரின் பெயர்......
ஹேரம்ப கணபதி


4. சந்தோஷிமாதா என்று போற்றப்படுபவள்......
விநாயகரின் மகள் (வடமாநிலங்களில் கோயில் உண்டு)


5. விநாயகருக்கு எருக்க இலையால் அர்ச்சித்தால் கிடைக்கும் பலன்......
சகல சவுபாக்கியம்


6. பாரதியார் வணங்கிய விநாயகர் எங்கிருக்கிறார்?
புதுச்சேரி (மணக்குள விநாயகர்)


7. விநாயகர் புராணத்தை எழுதியவர்......
கச்சியப்ப முனிவர்


8. வடநாட்டில் விநாயகரின் சின்னமாகத் திகழ்வது........
ஸ்வஸ்திக்


9. கல்விவளம் பெற அருள்புரியும் விநாயகர்.......
வித்யா கணபதி


10. விநாயகரும் அனுமனும் இணைந்த கோலம்....
ஆத்யந்த பிரபு




anantha narayanan
 
May The Lord Vighna Vinayaka remove all obstacles and shower you and your family with bounties. Hope Lord Ganesha visits you with lots of Luck and prosperity.
Have a great Vinayakar Chaturthi.
 
May The Lord Vighna Vinayaka remove all obstacles and shower you and your family with bounties. Hope Lord Ganesha visits you with lots of Luck and prosperity.
Have a great Vinayakar Chaturthi.

Thanks Sri Praveen Sir

God Sri Vinayaka Bless you and your family

Regards

P J
 
பிள்ளையார் வசிக்கும் ஐந்து மரங்கள்


10639724_730033603732281_1626743074758966334_n.jpg



பிள்ளையார் அமர்ந்துள்ளதாகக் கருதப்படும் ஐந்து மரங்கள் மிகவும் உயர்ந்ததாகப் போற்றப்படுகின்றன.
அவை பஞ்சபூதங்களின் அம்சங்களாக உள்ளன.
ஆகாயம்-அரசமரம்
வாயு-வாதநாராயணமரம்
அக்னி-வன்னிமரம்
நீர்-நெல்லிமரம்
மண்-ஆலமரம்

இந்த ஐந்து மரங்களின் கீழ் அமர்ந்துள்ள விநாயகரை வணங்கினால் நாம் நினைத்த காரியங்கள் கைகூடும்


Source; Anantha Narayanan
 
Vaathapi Ganapathy.jpg பல்லவ சேனாபதி பரன்சோதியார் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியை வென்று அவனது தலை நகர் வாதாபியிலிருந்து கொண்டுவந்து தனது ஊராகிய திருச்சாங்காட்டாங்குடியில் ஸ்தாபித்த கணபதி விக்ரஹம் .

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு. (ஒளவையார் )

முழுமுதல் கடவுளின் அருள் வேண்டி வணங்கும் அன்பன்
ப்ரஹ்மண்யன் ,
பெங்களூரு.
 
PJ Sir,

Wish you all a very happy Ganesh Chaturthi.


happy%2Bganesh%2Butsav.gif
 
Last edited by a moderator:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top