• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Pradosham at Sri Thendayuthapani Temple, 15 Tank Road, Singapore - 238065

Status
Not open for further replies.
சனி பிரதோஷ விரத முறை


af2a2d21-7fa7-45b3-8bfc-3a09e5af3540_S_secvpf.gif



சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் இன்று சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.

ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால்...

சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். பள்ளிகொண்ட சிவனை, சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷத்தன்று வழிபடல் நல்லது.

நஞ்சை உண்டு எல்லா உயிர்களையும் காப்பாற்றிய பின்னர், மயக்கமுற்ற நிலையில் அன்னை மடி மீது சாய்ந்திருக்கின்ற தோற்றம்... வேறெங்கும் காண இயலாது. திருவள்ளூர் அருகில் ஊத்துக்கோட்டையிலிருந்து 8 கி.மீ தூரத்தில், தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள இத்தலத்தில் திருச்சடாரி சூட்டப் பெறுவதும் மற்றொரு சிறப்பு.

http://www.maalaimalar.com/2013/11/30121421/shani-prathosam-viratham-metho.html


Pradosham at Sri Thendayuthapani Temple, 15 Tank Road, Singapore - 238065


https://www.youtube.com/watch?v=W8_2ZMw5Qts#t=13


Sani Pradhoh Virat Katha

https://www.youtube.com/watch?v=RF_FcV8FPC0
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top