• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Tharpanam on 14.1.14

Status
Not open for further replies.
திதி நிர்ணயம்.
வேதை என்பது ஒரு திதிக்கு மற்றொரு திதியினுடைய ஸம்பந்தம் எனப்படும்.. ப்ரதமைக்கு முன்புள்ள அமாவாஸ்யை சம்பந்தம் ஒன்று. பிறகு வருகிற த்விதீயா ஸம்பந்தம் மற்றொன்று.

திதியானது மற்ற திதியினால் ஸம்பந்தபடாமல் இருந்தால் அது சுத்த திதி .வேறு திதியினுடன் ஸம்பந்தம் பெற்றால் அது வித்தா திதி எனப்படும்.

வித்தா திதி இரண்டு விதம்: ஒன்று உதய காலத்தில் ஆரம்பித்து ஆறு நாழிகை (2 ம்ணி 24 நிமிடம்)உள்ள திதியானது மற்ற திதிகளுடன் சம்பந்தபட்டால் அது பூர்வ வித்தை திதி எனப்படும்.

பின் திதியானது மறுநாள் அஸ்தமனத்திற்கு முன்பு ஆறு நாழிகை இருந்து முன் திதியோடு சம்பந்தபடும்போது அந்த திதியானது உத்தர வித்தை திதி எனப்படுகிறது.

உதயா ஸ்தமன காலத்தில் ஆறு நாழிகைக்கு குறைவாக இருக்கும் திதி ஸம்பந்தம் வேதையாக கருத படவில்லை.அதிகமாக இருக்கலாம் எனக் கருத்து.

பகல் வேளையை ஐந்து பாகமாக பிறிக்கிறோம்.. ஒவ்வொன்றும் ஆறு நாழிகைகள்.==2மணி 24 நிமிடங்கள்..; ப்ராதஹ் காலம்,;சங்கவ காலம்; மாத்யானிக காலம்; அபராணஹ் காலம். ஸாயங்காலம் எனப்படுகிறது.

இவைகள் சாஸ்திரங்களில் முக்கியமாக கருதப்படுகிறது. சுக்ல பக்ஷத்தில் அமாவாஸை வித்தமான ப்ரதமையும் க்ருஷ்ண பக்ஷத்தில் த்விதியை வித்தமான ப்ரதமையும் உபவாஸத்திற்கு உகந்த காலம்.

சுக்ல ப்ரதமை பூர்வ வித்தம் சிலாக்யம். ஆனால் அபராஹ்னத்தில் ப்ரதமை சம்பந்தம் இருக்க வேன்டும். அது அகப்படாவிடில் ஸாயங்கா லத்திலாவது ப்ரதமை சம்பந்தம் இருக்க வேன்டும். அந்த சுக்ல ப்ரதமை உபவாசம் இருக்க தகுந்தது.

எந்த திதியில் ஸூர்யாஸ்தமனம் ஏற்படுகிறதோ , அந்த திதி உபவாஸம், தானம், பாராயணம் முதலிய கர்மாகளுக்கு சிலாக்கியமானது. அந்த திதியும் ஆறு நாழிகைக்கு குறையக்கூடாது. அதிகமாக இருக்கலாம். அந்த மாதிரி உள்ள திதி தான் கர்மாவுக்கு யோக்கியமானது,.தர்ம கார்யங்களுக்கு ஸம்பூர்ணமான திதி யாக பெரியோர்கள் சொல்கிறார்கள்.

திதி நக்ஷத்திரம் , இவைகளை அநுசரித்து உபவாசம் அநுஷ்டித்தால் , திதி நக்ஷத்திரங்கள் இவைகளுடைய முடிவில் பாரணம் செய்ய வேண்டும்.

அப்படி செய்யாவிட்டால் விரத பங்கம் ஏற்படும். இது வேதை உள்ள திதி நக்ஷத்திரங்களை அநுசரித்தது. சுத்த திதி நக்ஷத்திரங்களில் இவை ஸம்பவிக்காது.

சிவராத்திரி விரதம்;-திதி முடிவில் பாரணம். சிரவண விரதம்:- நக்ஷத்திர முடிவில் பாரணம் கிடையாது.

திதி நக்ஷத்திரம் இவைகளுடைய முடிவில் பாரணம் எங்கே விதிக்கபட் டிருக்கிறதோ அந்த இடத்தில் திதி நக்ஷத்திரம் மூன்று யாமத்திற்கு மேலிருந்தால் ப்ராதஹ் காலத்திலேயே பாரணம் செய்யலாம்.

பூர்வ வேதை உள்ள முக்ய திதி அநுஷ்டிக்க முடிய வில்லை ஆனால் உத்தர வேதை உள்ள திதிகளை அநுசரித்து உபவாஸ திதிகளை அநுஷ்டிக்கலாம்.

எந்த விரதத்திற்கு எந்த காலம் குறிப்பிட்டிருக்கிறதோ , அந்த காலத்தில் வ்யாபித்த திதியை பார்த்து விரதம் அநுஷ்டிக்க வேண்டும்.

சுத்தமான உபவாசம் இருக்க முடியாமல் போனால் ( ஏகபக்தம்). ஒரு வேளை சாப்பிடுவது அநுஷ்டிக்கலாம். அதற்கு 15 நாழிகைக்கு மேல் 18 நாழிகைக்குள் முக்கிய காலம். அதாவது (12 மணிக்கு மேல் 1-12 மணிக்குள்.)

ஏகபக்தம், தேவ பூஜை, விரதங்கள் எல்லாவற்றிர்க்கும் மாத்யானீக வ்யாபியான திதி காரணம் . இது பொதுவான சாஸனம்.

இந்த மத்யான்ஹ வ்யாப்தியான திதி விஷயத்தில் ஆறு ப்ரகாரமாக நிர்ணயம் செய்கிறோம்.

1. முன் நாள் மட்டும் மத்தியான்ஹ ஸம்பந்தம் உள்ளது.
2. பின் நாள் மட்டும் மத்யான்ஹ சம்பந்தம் உள்ளது.
3. இரண்டு நாளும் மத்யானிஹ ஸம்பந்தம் உள்ளது.

4.இரண்டு நாளும் மத்யான்ஹ சம்பந்தம் இல்லாதது.
5.இரண்டு நாளும் மத்யானிஹ காலத்தில் ஸமமாக கொஞ்ச ஸம்பந்தமுள்ளது.
6.இரண்டு நாளூம் மர்த்யானிஹ காலத்தில் ஜாஸ்தி குறைவாக ஸம்பந்தமுள்ளது. என்ற ரீதியில் திதிகள் காணப்படுகிறது.

இவைகளில் முதல் இரண்டாவது விஷயங்களில் மத்யானிஹ வ்யாப்தி உள்ளதை கிரஹிக்க வேண்டும்.
மூன்றாவது விஷயத்தில் பூர்வ வித்தை திதியை சிலாக்கியமாக சொல்வதாலும் , கெளண கால வ்யாப்தி அதிகமாக இருப்பதாலும் , முதல் நாள் மத்யான்ஹ திதிதான் கிராஹ்யமாகும்.

நான்காவது விஷயத்தில் இரண்டு நாளும் மத்யானிஹ வ்யாப்தி இல்லை என்றாலும் பூர்வ வித்தை திதி தான் உயர்ந்தது என்பதால் முதல் நாள் தான் கர்மா அர்ஹமானது.

ஐந்தாவது விஷயத்தில் ஸமமாக இரண்டு நாள் கொஞ்சம் மத்யானிஹ வ்யாப்தி இருந்தாலும் பூர்வ வித்தை சிலாக்கியம் என்ற ரீதியில் முதல் நாள்
திதிதான் கிராஹ்யமாகும்.

ஆறாவது விஷயத்தில் ஜாஸ்தி குறைவாக இரண்டு நாள் மத்யானிஹ வ்யாப்தி இருந்தால் என்றைக்கு அதிகமான மத்யானிக வ்யாப்தி உள்ளதோ
அந்த திதி கிராஹ்யமாகும்.

இந்த மாதிரி ஒரு வேளை சாப்பிடும் விஷ்யம் ( ஏகபக்த விஷயம், ) பூஜை, விரதம் பார்த்து அநுஷ்டிக்கவும்.

நக்த விரத நிர்ணயம்==பகலில் சாப்பிடாமல் விரதம் இருந்து இரவில் சாப்பிடுவது.

இதற்கு அஸ்தமனத்திற்கு முன்பும், பின்பும் ஆறு நாழிகைகள் ( 2 மணி 24 நிமிடம்).திதி இருக்க வேன்டும். . இது நக்த விரதத்திற்கு சிலாக்கியமானது.


“அமாவாஸ்யா திநே ப்ராப்தே க்ருஹ த்வாரம் ஸமாச்ரிதா: ச்ராத்தா பாவே ஸ்வபனம் சாபம் தத்வா வ்ரஜந்தி தே “ (நிர்ணய ஸிந்து—327)).
அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் , அந்தந்த வீட்டு

பித்ருக்கள் காற்று வடிவில் வந்து நின்றுகொன்டு , தங்களுக்கு தரப்படும் ஹவிர் பாகத்தை (எள்ளு கலந்த ஜலத்தை) பெற்றுக் கொள்வதற்காக காத்துகொன்டிருக்கிறார்கள் என்றும், அன்றைய (அமாவாசை) நாளன்று அந்த

வீட்டில் சிராத்தமோ தர்பணமோ செய்து அவர்களுக்கு ஹவிர்பாகத்தை (எள்ளு கலந்த ஜலத்தை)
தரபடவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு

கோபத்தோடு செல்கிறார்கள் என்றும் சிலர் உன் புத்திரனும் உனக்கு ஒன்றும் செய்ய மாட்டான் என்று சொல்லி விட்டு போவார்கள்.என்கிறது இந்த ஸ்லோகம்.

ஆதலால் தவறாது நமது குடும்பத்தாறின் நன்மைக்காக செய்ய படவேண்டும்..
இந்த 96 தர்பணங்களில் மிக முக்கியமானது அஷ்டகா சிராத்தம்.


(வைத்தியனாத தீக்ஷிதீயம் பக்கம் -221) அஷ்டமிக்கு முன்னும் பின்னும் இது வருவதால் அஷ்டகா என்று பெயர்.

“”மார்கசீர்ஷே ச பெளஷே ச மாஸே ப்ரெளஷ்டே ச பால்குணே க்ருஷ்ண
பக்ஷேஷு பூர்வேத்யு ரன்வஷ்டக்யம் தா அஷ்டமீ இதி திஸ்ரோஷ்டகாஸ்
தாஸூ ச்ராத்தம் குர்வீத பார்வணம்””

மார்கழி ,தை, மாசி, பங்குனீ ஆகிய இந் நான்கு மாத க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி திதியன்று அஷ்டகை எனப்படும் சிராத்தம் (தர்பணம்) செய்ய

வேண்டும். மேலும் அஷ்டகைக்கு முதல் நால் பூர்வேத்யு: என்றும் மறு நாள் அன்வஷ்டகா என்றும் ச்ராத்தம்(தர்பணம்) செய்ய வேண்டும்.

ஆக ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் வீதம் நான்கு மாதங்களிலும் மொத்தம்12 நாட்கள் அஷ்டகை சிராத்தம் (தர்பணம்) செய்ய வேண்டும்.

ஏகஸ்யாம் ஹி த்வ சக்தேன கார்யா க்ருஹ்யஸ்ய வர்த்மனா என்ற ஆச்வலாயன மஹரிஷியின் வாக்கியப்படி நான்கு மாதங்களிலும் செய்ய

முடியாவிட்டாலும் ஒரு ( மாசி மாத க்ருஷ்ன பக்ஷ) அஷ்டகைகளை யாவது தனது க்ருஹ்ய சூத்ரப்படி செய்ய முயற்சிக்கவும்.

இவ்வாறு அஷ்டகைகளை சிராத்தமாக செய்ய இயலாவிட்டாலும் கூட
:திலோதகம் ப்ரதாதவ்யம் நிர்தநேநா(தி) பக்தித: என்கிறப்படி மேற்கூறிய நாட்களில் பித்ருக்களுக்கு தர்பண மாகவாவது அஷ்டகைகளை செய்ய முயற்சிக்கலாம்.

தர்பணமும் செய்ய முடியாதவர்கள் அபி வா அநூசாநேப்யுத்கும்ப மாஹரேத்
என்பதாக யாராவது ஒருவருக்கு தீர்த்தம் நிறைந்த குடத்தை அஷ்டகைகள் தினத்தன்று தானம் செய்யலாம். அல்லது

அபிவா ச்ராத்த மந்த்ரா நதீயீத என்பதாக சிராத்தத்தில் கூறப்படும் மந்திரங்களை ஜபம் மட்டுமாவது செய்யலாம். அல்லது

அப்ய நடுஹோ யவச மாஹரேத் என்பதாக பசு மாட்டிற்கும் காளை மாட்டிற்கும் வைக்கோலையும் பசுமையான புல்லையும் தந்து சாப்பிட செய்யலாம்.

அதற்கும் சக்தியற்றவர்கள் அக்னி நா வா க்க்ஷ முபோஷேத்- ஏஷா மே அஷ்டகேதி என்று புற்கள் நிறைந்துள்ள இடத்தில் புல்புதர்களை தீயிட்டுக்கொளுத்தி “

அஷ்டகை செய்ய சக்தியும் வசதியும் இல்லாததால் நான் செய்யும் இந்த அக்னி தாஹத்தால் நீங்கள் த்ருப்தி அடையுங்கள். என்று பித்ருக்களை நோக்கி ப்ரார்த்திக்க வேண்டும்.

நத்வேவ அநஷ்டகா ச்யாத் என்பதாக பூர்வேத்யு: அஷ்டகா, அந்வஷ்டகா ஆகிய நாட்களில் நாம் பித்ருக்களுக்காக எதுவுமே செய்யாமல் இருக்கக்கூடாது. சக்திக்கு தகுந்தவாறு சிராத்தம்- தர்பணம் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்கிறது சாஸ்த்ரம்.

இவ்வாறு பித்ருக்களின் ப்ரீத்திக்காக மேற் கூறிய நட்களில் சிரத்தையுடன் பித்ருக்களுக்கு ச்ராத்தம்-தர்பணம் செய்பவர்களின் வம்சத்தில் குழந்தைகள் அறிவாளிகளாகவும்

அழகுள்ளவர்களாகவும் பிறப்பார்கள். அவர்களுக்கு தரித்ர தன்மை ஒருபோதும் வராது. அனைத்து நன்மைகளும் கிட்டும் என்கின்றன தர்ம சாஸ்திரங்கள்.

யுகாதி எனும் நான்கு நாட்கள்.கீழ் கண்ட வாறு நிர்ணயிக்கபடுகின்றன.
“”வைசாகஸ்ய த்ருதீய்யா து நவமீ கார்திகஸ்ய து மாகே பஞ்சதசீ சைவ
நபஸ்யஸ்ய த்ரயோதசீ யுகாதய: ஸ்ம்ருதா ஹ்யேதே தத்தஸ்யா (அ)க்ஷய காரகா:””.

ஒரு கல்பத்தில் யுகங்கள் ஆரம்பிக்கபட்ட நாட்கள்.
1. க்ருத யுகம். :-வைசாக மாதம் சுக்ல பக்ஷ த்ருதியை திதி
2. த்ரேதா யுகம்:--கார்த்திக மாதம் சுக்ல பக்ஷ நவமீ திதி.
3. த்வாபர யுகம்:-பாத்ரபத மாதம் க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசி திதி

4. கலி யுகம்:- மாக மாதம் சுக்ல பக்ஷ பூர்ணிமை திதி.யுகாதி நாட்களும் ,மன்வாதி நாட்களும் பித்ருக்களுக்கு தர்பணம் செய்ய வேன்டிய நாட்கள்.

மன்வாதி பதிநான்கு நாட்கள்:__--
1. ஆச்வயுஜ மாதம் சுக்ல நவமீ-----------ஸ்வாயம்புவ மனு.
2. கார்த்திக மாதம் சுக்ல பக்ஷ த்வாதசி—ஸ்வாரோசிஷ மனு.
3. சைத்ர மாதம் சுக்ல பக்ஷ த்ருதீயா------------- -உத்தம மனு

4. பாத்ரபத மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசீ--------------தாமஸ மனு
பால்குண மாதம் க்ருஷ்ண பக்ஷ
 
1. பாத்ரபத மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசீ--------------தாமஸ மனு
2. பால்குண மாதம் க்ருஷ்ண பக்ஷம் அமாவாசை:--ருத்ர ஸாவர்ணிக மனு.
3. புஷ்ய மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி-----------------ரைவத மனு.

4. ஆஷாட மாதம் சுக்ல பக்ஷ தசமி---------------சாஷுஷ மனு
5. மாக சுக்ல பக்ஷ ஸப்தமி---------------------வைவஸ்வத மனு
6. ச்ராவண மாதம் க்ருஷ்ணாஷ்டமி-------ஸூர்ய ஸாவர்ணிக மனு.

7. ஆஷாட மாதம் பூர்ணிமா------------------அக்னி ஸாவர்ணி மனு.
8. கார்திக மாதம் பூர்ணிமா-------------------தக்ஷ ஸாவர்ணி மனு
9. பால்குண மாதம் பூர்ணிமா---------ப்ருஹ்ம ஸாவர்னிக மனு

10. சைத்ர மாதம் பூர்ணிமா-------------------------------ரெளசிஷ மனு
11. . ஜ்யேஷ்ட மாதம் பூர்ணிமா----------------------பெளஷ்ய மனு.

இந்த நாட்களை பஞ்சாங்கங்களில் யுகாதி, மன்வாதி என்று குறிப்பிட்டிருப்பார்கள். இந்த 14 நாட்களும் பித்ருக்களுக்கு தர்பணமாவது செய்ய வேண்டும்.

மந்வாத் யாஸு யுகாத்யாஸு ப்ரதத்த: ஸலிலாஞ்சலி:
ஸஹஸ்ர வார்ஷிகீம் த்ருப்தீம் பித்ரூணாமவஹேத் பராம்.

மன்வாதி 14 நாட்களும் யுகாதி நான்கு திதிகளும் ச்ரத்தையுடன் பித்ருக்களுக்கு கொடுக்கப்பட்ட தர்பண ஜலமானது ஆயிரம் வருஷம் வரையில் பித்ருக்களுக்கு சந்தோஷத்தை செய்யும்.என்கிறது இந்த வாக்கியம்.

த்வி ஸஹஸ்ராப்திகீம் த்ருப்திம் க்ருதம் ச்ராத்தம் யதா விதி: ஸ்நானம் தாநம், ஜபோ ஹோம: புண்யாநந்த்யாய கல்பதே.

மன்வாதி யுகாதி நாட்களில் ச்ரத்தையாக ச்ராத்தம் செய்தால் அது பித்ருக்களுக்கு இரண்டாயிரம் வருஷங்களுக்கு த்ருப்தியை தரும். மேலும் இந்த நாட்களில் செய்யப்படும் புண்ய நதி ஸ்நானம் , ஜபம், ஹோமம், ஆகியவைகளூம் அக்ஷய்யமான பலனை தரும்.

சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் நேரமே மாத பிறப்பு (ஸங்கிரமணம்(). எனப்படும்.இன்று சூரியனுக்கு செய்யப்படும் பூஜை


ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஸ்தோத்ரங்கள் படிப்பதும் மற்றும் ஏழைகளுக்கு செய்யப்படும் அன்னதாநம் ஆகியவை அளவற்ற பலனை தரும்.

“”சங்க்ராந்தி சமய: ஸூக்ஷ்ம: துர்க்ஞேய பிசிதேக்ஷணை:”” என்பதாக மாதம் பிறக்கும் துல்லியமான நேரத்தை ஸூரியனின் போக்கை கணித்து கூறும்
பஞ்சாங்கங்களின் மூலமாகத்தான் நாம் அறிய முடியும்..

அமாவாசை தர்பணம் அபராஹ்னம் என்னும் காலத்தில் பித்ரு தர்பணம் செய்ய வேண்டும்.ஸங்கிரமணத்தன்று செய்யும் பித்ரு தர்பணம் மாதம் பிறக்கும் நேரத்திற்கு முன்போ பின்போ புண்ய கால நேரத்தில் பித்ரு தர்பணம் செய்ய வேன்டும்.

இவைகள் எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதை சாஸ்திரம் தீர்மானித்துள்ளது. இந்த புண்ய கால நேரம் ஒவ்வொரு மாத பிறப்பிற்கும் மாறுபடும்.

தேவலர் மஹ ரிஷியின் வாக்கியத்தை பார்ப்போம்.

’அயநேத் வே விஷுவே த்வே சதஸ்ர: ஷடசீதய: சதஸ்ரோ விஷ்ணுபத்யஸ்ச ஸங்க்ராந்த்யோ த்வாதச ஸம்ருதா:””

அயனம் என்னும் புண்ணிய காலம் ஒரு வருடத்தில் இரண்டு நாட்கள்.
விஷுவம் என்னும் புண்ணிய காலங்கள் இரண்டு நாட்கள்.
ஷடசீதி என்னும் புண்ணிய காலங்கள் நான்கு நாட்கள்.


விஷ்ணுபதி என்னும் புண்ணிய காலங்கள் நான்கு நாட்கள்.

சர ராசிகளான தை மாத, ஆடி மாத பிறப்பிற்கு உத்திராயணம், தக்ஷிணாயணம் என்று பெயர்.

சர ராசிகளான சித்திரை, ஐப்பசி மாத பிறப்புகளுக்கு விஷுவம் என்று பெயர்.
உபய ராசிகளான ஆனி புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களுக்கு ஷடசீதி என்று பெயர்.

ஸ்திர ராசிகளான வைகாசி, ஆவணி கார்த்திகை, மாசி மாத பிறப்புகள் விஷ்ணுபதி எனப்படும்

.மாத பிறப்பிற்கு முன்பும் பின்பும் புண்ணிய கால நேரம்
மாதம்.
ராசி
பெயர்.
புண்னிய காலநேரம் முன்பு.
புண்ணிய காலநேரம் பின்பு.


சித்திரை
மேஷம்
விஷு
4 மணி
4 மணி


வைகாசி
ரிஷபம்
விஷ்ணுபதி
6மணி-24 நிமிடம்.
6மணி-24 நிமிடம்


ஆனி.
மிதுன.
சடஷீதி
-------------
24 மணி


ஆடி
கடகம்
தக்ஷிணாயனம்
8 மணி
------------


ஆவணி
சிம்மம்
விஷ்ணுபதி
6மணி24 நிமிடம்
6மணி-24 நிமிடம்


புரட்டாசி
கன்னி
ஷடசீதி
-----------
24 மணி


ஐப்பசி
துலாம்
விஷு
4 மணி
4மணி


கார்திகை
வ்ருச்சிகம்
விஷ்ணுபதி
6மணி24 நிமிடம்
6மணி24 நிமிடம்


மார்கழி
தனுசு
ஷடசீதி
----------
24மணி


தை
மகரம்
உத்ராயணம்
-----------
8மணி


மாசி
கும்பம்
விஷ்ணுபதி
6மணி24 நிமிடம்
6மணி24 நிமிடம்


பங்குனி
மீனம்
ஷடசீதி
------------
24மணி









நள்ளிரவில் 1-36 மணிக்கு முன் மாதப்பிறப்பு வந்தால் முதல் நாள் மதியத்திற்கு பிறகு மாலைக்குள் தர்பணம் செய்ய வேன்டும், நள்ளிரவு 12,24

மணிக்கு பிறகு மாதம் பிறந்தால் மறு நாள் காலையில் பித்ரு தர்பணம் செய்ய வேண்டும்.

இவைகளை விட அதிக புண்ணியம் தரக்கூடியது தாய் தந்தையர் சிராத்தமே
.
ஸங்க்ராந்தி ஸமய: ஸூக்ஷ்மோ துர்க்ஞேய: பிசிதேக்ஷணை: தத் யோகா தப்யத ஸ்சோர்த்வம் த்ரிம்சந் நாட்ய: பவித்ரதா

இவ்வாறு பொதுவாக முப்பது நாழிகை புண்ய காலம் என்று குறிப்பிட பட்டிருந்தாலும் கூட ஒவ்வொரு மாதமும் ஸங்க்ரமண புண்ய காலத்தின் நேரங்கள் மாறுபடுகின்றன.

ஆடி மாதம் பிறப்பதற்கு 8 மணி முன்பும், தை மாதம் பிறப்பதற்கு 8 ம்ணி நேரம் பின்பும் புண்ணிய கால நேரம் என தெரிகிறது. ஆதலால் உத்ராயண

புண்யகால தர்பணமும், தக்ஷிணாயன புண்ய கால தர்பணமும் உத்திராயணத்தில் செய்யவும் என பெரியோர்கள் கூறுகிறார்கள்.

காலையில் ஸூர்யன் குழந்தை. நடு ப்பகலில் குமரன் மாலையில் கிழவன்
என்றும் பெரியோர்கள் கூறுகிறார்கள். ஆதலால் காலையிலும் மாலையிலும்


சந்தியாவந்தனத்தின் போது மூன்று அர்கியமும் நடு பகலில் 2 அர்கியமும் கொடுக்க சொல்லி யிருக்கிறார்கள்.

காலை முதல் நண்பகல் ஒரு மணி மட்டும் சூரியன் ஏறு முகம். பிறகு மாலை வரை இறங்கு முகம்… ஸுரியன் ஏறு முகத்தில் இருக்கும் போது

தான் வ்ரதம். ஹோமம், பூஜை, தர்பணாதிகள் செய்ய வேன்டும்.என்றும் பெரியோர்கள் கூறுகிறார்கள்.

ஆதலால் 12 மணிக்கு மேல் பொங்கல் பானை வைக்கவும், உடன் தர்பணம், பிறகு சூரிய பூஜை செய்யலாம் என பலரின் அபிப்ராயம்.. முடியாதவர்கள் பொது விதிப்படி தை மாத பிறப்பிற்கு ஆறு மணிநேரம் முன்பாகவும் தர்பணம் செய்யலாம்.

அதாவது பத்தரை மணிக்கு பொது விதிபடியும் ஒரு மணிக்கு ஸூரியனின் ஏறுமுகமாக இருக்கும் போதும் தர்பணம் செய்யலாம். தவரில்லை..சில வருடங்களில் இம்மாதிரி ஆகும்..

சூரியன் இறங்கு முகத்தில் இருக்கும் போது பூஜை, தர்பணம் செய்வதால் ப்ரயோஜனமில்லை என்று பெரியோர்கள் கூறுவதையும் இங்கு பார்த்து தான்
ஆக வேண்டி இருக்கிறது.

காலை ஆறு மணி முதல் எட்டு மணி 24 நிமிடம் வரை ப்ராத:காலம்.
காலை 8-24 மணி முதல் 10.48 மணி வரை ஸங்கவ காலம்.
காலை 10-48 மணி முதல் 1-12 மணி வரை மாத்தியானிக காலம்.

மதியம் 1-12 மணி முதல் 3-36 மணி வரை அபராஹ்ண காலம்.
மாலை 3-36 மணி முதல் 6-00 மணி வரை ஸாயங்காலம் என்று பெயர்.

ஆகவே நாம் எந்த திதியில் சிராத்தம் செய்ய வேன்டுமோ அந்த சிராத்த திதி
இந்த அபராஹ்ன காலத்தில் இருக்க வேன்டும்.அதாவது 3-36 மணி வரை இருக்க வேன்டும். இதை பாஎத்து சிராத்தம் செய்யும் நாளை நிர்ணயிக்க வேண்டும்.

குதப காலம் என்பது ஸுமார் பகல் 11-30 மணிக்கு மேல் 12-30 மணி வரை உள்ள காலமே. கூடிய வரை இந்த நேரத்தில் சிராத்தம் செய்தல்- முடித்தல்
அதிகமான பலனை தரும்..

தர்ம ஸிந்து -327. தஸ்ய தே பிதர: க்ருத்வா ச்ராத்த கால முபஸ்திதம் அந்யோந்யம் மநஸா த்யாத்வா ……மநோஜவா: தே ப்ராஹ்மணைஸ் ஸஹாச்நந்தி பிதரோ வாயு ரூபிண:

என்ற படி நமது முன்னோர்கள் ச்ராத்தம் நடக்குமிடம் வந்து காற்று வடிவில் ப்ராஹ்மணர்கள் உடலில் புகுந்துகொண்டு ச்ராதத்த்தில் தரப்படும் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள்..










.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top